புதன், 6 ஜூலை, 2016

இறுதிச் சுற்றில் அண்ணனுக்கு  ரூ 10; தம்பிக்கு ரூ 6.
ஆக மொத்தம் ரூ 16. இதை சம பங்கு வைத்தால்
ஆளுக்கு ரூ 8. அதாவது, அண்ணனின் பங்கில் இருந்து
ரூ 2 ஐக் குறைக்க வேண்டும். தம்பியின் பங்குடன்
ரூ 2 ஐக் கூட்ட வேண்டும். இந்த வேலையை
அரிவாள் செய்து விடுகிறது. அரிவாளின் விலை
ரூ 2 ஆக இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.  

அரிவாள் பொதுவானது அல்ல. அது அண்ணனின்
உடைமை. அண்ணனுக்கு கிடைத்தது ரூ 10.
தம்பிக்கு ரூ 6. எனவே அண்ணன் தன்னிடம் இருந்து
ரூ 2 ஐ தம்பியிடம் கொடுக்கிறான். இப்போது
இருவருக்கும் ரூ 8 என்று ஆகி விட்டது.
பங்கீடு சமமாகி விட்டது. இங்கு ரூ 2க்குப்
பதிலாக, ரூ 2 விலையுள்ள அரிவாளைத் தருகிறான்.

நீண்ட காலமாக இக்கணக்குடன் தொடர்பு
வைத்து இருக்கிறேன்.  நான் அலுவலகத்தில்
பணியாற்றிய காலத்தில், உடன்பணியாற்றிய
அனைவருக்கும் இக்கணக்கைக் கொடுத்தேன்.
விதிவிலக்கின்றி, எல்லோரும், பல பொறியாளர்கள்
உட்பட ரூ 4 என்ற விடையையே தந்தனர். இது
இயல்பே. திரு ஜான் ரூபர்ட் தன் இளம் வயது
காரணமாக இன்னும் மாணவ மனநிலையில்
இருக்கிறார். எனவே விதிவிலக்காக அவர்
சரியான விடையை வந்து அடைந்து விடுகிறார்.
(எங்கள் GM ஏ இந்தக் கணக்கிற்கு ரூ 4 என்ற
விடையைத் தான் தந்தார்).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக