புதன், 6 ஜூலை, 2016

சுவாதியை வெட்டிக்  கொல்வதற்கு  ராம்குமார்
பயன்படுத்திய அரிவாளின் விலை என்ன?
ஊடக நண்பர்களே பதில் சொல்லுங்கள்!
கணித ஒலிம்பிக்கில் கேட்ட கேள்வி!
-------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------
தேசிய கணித இளையோர் ஒலிம்பிக் (NMJO)
(National Maths Junior Olimpiad ) போட்டியில் கேட்ட
எளிய கேள்வி இது. 12 வகுப்புக்குள் உள்ளோர்
விடையளிக்கலாம்.

அண்ணன் தம்பி இருவருக்கும் ஒரு சிறிய ஆட்டு
மந்தை சொந்தமாக இருந்தது. பாகம் பிரிக்க முடிவு
செய்து ஆடுகளை விற்றனர். மந்தையில் மொத்தம்
இருந்த ஆடுகளின் எண்ணிக்கை என்னவோ,
அதுதான் ஒரு ஆட்டின் விற்ற விலை. .

இருவருக்கும் சமபங்கு என்று முடிவு செய்திருந்தனர்.
விற்றுக் கிடைத்த தொகையைப் பின்வருமாறு
பங்கிட்டனர்

பங்கு வைப்பது அண்ணனிடம் இருந்து தொடங்கியது.
முதல் 10 அண்ணனுக்கு, அடுத்த 10 தம்பிக்கு என்று
இவ்வாறு பங்கு வைத்துக் கொண்டு வருகையில்,
இறுதியில், தம்பியின் முறை வந்தபோது, தொகை
10க்கும் குறைவாக இருந்தது.

சமபங்கை  உறுதி செய்யும் பொருட்டு, தன்னிடம்
இருந்த அரிவாளை அண்ணன் தம்பிக்குக் கொடுத்தான்.
இதன் மூலம் சமபங்கானது உறுதி செய்யப் பட்டது.

இப்போது கேள்வி இதுதான்! அந்த அரிவாளின்
விலை என்ன?  (Find its price).

மூலக் கணக்கு ஆங்கிலத்தில் உள்ளது. இதை
மொழிபெயர்க்காமல் என்னுடைய சொந்த
வாசகங்களைக் கொண்டு எழுதியுள்ளேன்.

இது எழிலார்ந்த ஒரு கணக்கு. கணிதத்தின்
ஆழ அகலம் மட்டுமின்றி அதன் அழகும்
புலப்பட்டு நிற்கும் ஒரு கணக்கு.

அறிவைப் பெறுவதை காம நுகர்வோடு ஏன்
வள்ளுவன் ஒப்பிட்டான் என்பதற்கு விடை
தருவது இந்தக் கணக்கு.

அறிதொறும் அறியாமை கண்டற்றால் காமம்
செறிதொறும்  சேயிழை மாட்டு.
-------------------------------------------------------------------------------------------------------- 
பின்குறிப்பு: விடை எழுதுபவர்கள் விளக்கம்
அளிக்க வேண்டும்.
*********************************************************************
கடைசிப் பின்குறிப்பு: கணக்கின் மீது அனைவரின்
கவனத்தையும் ஈர்ப்பதற்கு என்னவெல்லாம்
செய்ய வேண்டி இருக்கிறது? தலைப்பைச் சொன்னேன்.
---------------------------------------------------------------------------------------------------------   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக