செவ்வாய், 5 ஜூலை, 2016

எவர் ஒருவராலும் செய்ய முடியும்!
எட்டுக்கோடித்  தமிழர்களாலும் செய்ய முடியும்!
360 என்பது சாதாரண எண் அல்ல!
-----------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------------------
இந்தக் கணக்கை விட எளிய கணக்கு உண்டா என்று
கேட்கிறது நியூட்டன் அறிவியல் மன்றம்.
கணக்கு இதுதான்.

360 என்ற எண்ணைக் கருதுங்கள். இந்த எண்ணின்
காரணிகள் மொத்தம் எத்தனை? அவற்றின்
கூட்டுத்தொகை என்ன?

How many divisors are there in 360? Find also the sum of all its divisors.

இந்தக் கணக்கு B.Sc Maths அல்ஜீப்ரா புத்தகத்தில்
(Chapter: Theory of numbers) இருந்து எடுக்கப் பட்டது.
என்றாலும் இதை  கீழ்நிலை வகுப்பு மாணவர்களும்
(10, 11, 12) செய்யலாம்.

கணிதம் பயின்றோர் விடையை மட்டும் எழுதினால்
போதாது. விடைக்கான விளக்கமும் அவர்களிடம்
இருந்து கோரப்படுகிறது.
***************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக