செவ்வாய், 5 ஜூலை, 2016

ராம்குமாருக்குத் தெரியாமலும்
அவரின் அனுமதி இல்லாமலும்
தானே முன்வந்து ஜாமீன் மனு தாக்கல் செய்த
வக்கீல் கிருஷ்ணமூர்த்தி!
----------------------------------------------------------------------------------------
நீதிமன்றத்தில் நம் மீது ஒரு வழக்கு இருக்கிறது
என்றால், நம் சார்பாக வாதாட ஒரு வக்கீலை
நியமிப்போம். இன்னார்தான் எனக்காக
வாதாடும் வக்கீல் என்று ஒரு வக்காலத்துப் பாத்திரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆனால் ஜாமீன் மனுவில் வாதாட வக்காலத்து
தேவையில்லை என்கிறது சட்டம். இதைப்
பயன்படுத்திக் கொண்டு வக்கீல்  கிருஷ்ண மூர்த்தி
என்பவர், ராம்குமாருக்குத் தெரியாமலும், அவரின்
அனுமதி பெறாமலும் ஜாமீன் மனு தாக்கல்
செய்துள்ளார்.

ஜாமீன் மனுவில் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்து
இருப்பது யாவும் அவரின் சொந்தக் கருத்தே.
ஜாமீன் கோரி, தாக்கல் செய்யப்படும் மனுவில்,
குற்றங்களை மறுக்க வேண்டும் அல்லவா?
அப்போதுதானே ஜாமீன் கிடைக்கும். எனவே
ஜாமீன்  மனுவில் குற்றங்கள் மறுக்கப் பட்டு
இருக்கின்றன. This is nothing but a simple and formal denial
of charges.

ராம்குமார் தற்போது மருத்துவ சிகிச்சையில்
போலீஸ் கண்காணிப்பில் இருக்கிறார். போலீசாரே
இலவச சட்ட உதவி மையம் மூலமாக ராம்குமாருக்கு
ஜாமீன் மனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்வார்கள்.

வீணான பரபரப்பு உண்டாக்கவும், தனக்கு ஒரு
பேரும் பிரபல்யமும் கிடைக்கும் என்பதற்காகவும்
வக்கீல் கிருஷ்ணமூர்த்தி இந்த வேலையில்
இறங்கியுள்ளார். ராம்குமாருக்கு  ஜாமீன் பெற்றுத்
தருவது உண்மையில் அவரின் நோக்கம் அல்ல.
இதுவே உண்மை. இது மட்டுமே உண்மை.
***************************************************************** 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக