திங்கள், 30 டிசம்பர், 2024

அடித்தால் வலிக்காத சாட்டையால்
அடித்துக் கொள்கிறாரா  அண்ணாமலை? 
சவுக்கடியின் இயற்பியல்!
(The physics of whipping)!  
-----------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-----------------------------------------------
தங்களின் தகுறித் தனத்தைக் கண்டு கவலையே 
கொள்ளாமல்  தங்களின் அறியாமையை 
வெளிப்படுத்தி மகிழ்வது குட்டி முதலாளித்துவத்தின் 
இயல்பு!

பாஜக தலைவர் அண்ணாமலை சவுக்கால் தன்னை 
அடித்துக் கொண்டார். அந்தச் சாட்டை சிரிப்புச் 
சாட்டை என்றும் அவர் சிரிப்பு ஐபிஎஸ் என்றும் 
முகநூலில் அவதூறு மொழிந்து தனது மனவக்கிரத்தை  
ஊரறிய வெளிப்படுத்தி உள்ளார்  ஒரு அம்மையார்.. 
அந்தச் சாட்டையால் அடித்தால்  சத்தம் கேட்குமே தவிர 
வலிக்காது என்று கூறி மேலும் முன்னேறுகிறது 
அவரின் அறியாமை.

அண்ணாமலையிடம் இருந்து அந்தச் சாட்டையை 
வாங்கி, அதனால் தன்னை இரண்டடி அடித்துக்
கொண்டு, பார் பார் வலிக்கவில்லை பார் என்று 
அம்மையார் நிரூபித்துக் காட்டலாமே!


அறிவியலுக்கு எதிரான பிற்போக்குச் செயல்கள்!
----------------------------------------------------------------------------
நாம் 2025ஐ இன்னும் சில மணி நேரத்தில் அடைந்து 
விடுவோம். இது தேவாரம், திருவாசகம், தேம்பாவணி 
சீறாப்புராண காலம் அல்ல. இன்று செயற்கை 
நுண்ணறிவு உலகை ஆளும் காலம். அறிவியலும் 
இயற்பியலும் நாலாயிரங்கால் பாய்ச்சலில் 
பிரபஞ்ச விஜயம் செய்யும் காலம் இது.

இந்தக் காலத்தில் வாழ்ந்து கொண்டு அறிவியலுக்கு 
எதிரான பிற்போக்குக் கருத்துக்களை சமூகத்தில்  
பரப்பிக் கொண்டிருப்பது சமூக விரோதச் 
செயல் ஆகும்.  

சவுக்கடியின் இயற்பியல் என்ன?
----------------------------------------------------
சவுக்கடியின் அறிவியலைத் தெரிந்து கொள்ள 
வேண்டுமெனில் ஒருவர் இயற்பியல் படித்திருக்க 
வேண்டும். அம்மையார், பாவம், Physicsக்கு எங்கே 
போவார்? அவருக்கு physics, maths எல்லாம் தெரியுமா?
புரியுமா?

ஆங்கிலமும் தெரிய வேண்டும். lashக்கும் whipக்கும் 
உள்ள வேறுபாடு தெரிய வேண்டும். Force, impulse, 
pressure, torque ஆகிய இயற்பியலின் அடிப்படைகள் 
பற்றித் தெரிந்திருக்க வேண்டும். இது எதுவுமே
தெரியாத அம்மையார் அண்ணாமலை 
வைத்திருக்கும் சாட்டையால் அடித்தால் வலிக்காது 
என்கிறார்.

நான் பள்ளிகளில் படித்த 1960-70களில் பள்ளி 
ஆசிரியர்கள் மாணவர்களை ஸ்கேலால் 
அடிப்பார்கள்  அப்போது  மரத்தால் ஆன 
ஒரு அடி ஸ்கேல் மாணவர்களிடம் இருக்கும்.

காவல் நிலையங்களில் கைதிகளை போலீசார் 
லத்தியால் அடிப்பார்கள். புருஷன் பொண்டாட்டி 
சண்டையின்போது புருஷனை பொண்டாட்டி 
விறகுக் கட்டையால் அடிப்பாள்.
       
 ஸ்கேல் அடி, போலீசின் பிரம்படி, விறகுக்கட்டை 
அடி என்னும் இம்மூன்றையும் விட சவுக்கடி (whip) 
அதிகக் காயத்தை ஏற்படுத்தும். எப்படி?

பிரம்பு போன்றவற்றை விட சவுக்கு நீளமானது 
கைப்பிடியுடன் கூடியது. மேலே கனமாகவும் கீழே 
வர வர கனம் குறைவாகவும் இருப்பது.
சவுக்கால் அடிக்கும்போது சவுக்கின் மெல்லிய 
நுனி (tip) அதிக வேகத்துடன் உடலில் படுகிறது.
இது  ஒரு கணத்தாக்கு விசையை (impulse) 
ஏற்படுத்துகிறது.  இந்த impulse முக்கியமானது.
இதனால்தான் சவுக்கடி பிற வகை 
அடிகளை விட அதிக வலி தருகிறது.   

கனமான சவுக்குதான் அதிக வலியைத் தரும் 
என்று தற்குறிகள் கூறுவது அறிவியலுக்கு 
எதிரானது. இங்கு சவுக்கின் mass தீர்மானகரமானது 
அல்ல. 

இந்தச் சவுக்கடி நிகழ்வில் momentum conserve ஆகிறது.
அதுதான் சவுக்கடியின் அதிகபட்ச  injuryக்கு 
காரணம். புரியவில்லை எனில் இப்பொருளில் 
ஒரு வீடியோ வெளியிடுகிறேன். அதுவரை 
பொறுத்திருக்கவும். 
-----------------------------------------------------------------
பின்குறிப்பு:
XI Physics bookல் உள்ள momentum conservation
பற்றிப் படிக்கவும்.
*************************************************  
 

   
        




  

     


 pala press meet Kalil ulariya annamalai, neet p.g kuritha thavaranaa pulli vivarangalodu karuthu kooriyathu, TNEB il oozhal yendru excel sheet-ai neetiyathu, kamarajar aatchi kkaana aandai thavaraga kooriyathu, ida othukeedu patri thavaraga thagaval alithu, pinbu mannippu kettathu, endru annamalaiyin ulariyathai ellam eduthaal. Oru 12-aam vaguppu maanavanin arivu kuda illamal Avan pesiyathu therium. Aanal thozhar Ilango Pichandy -yin IQ calculation padi annamalai maethai... Avan savukkal adithalum, saanipaal kudithaalum.. Aaha annamalai IQ va paarungannu pugalvaar. IQ vithaiya vechu neenga urutunathellam thaangittom iyya aana. Aana Ipadi annamalai ku muttu kuduka poi neenga sikkinathu varuthamaaga ullathu. Ipadi thalaipugalai vittuvittu nalla Ariviyal katturaikalai ungalidam yethir parkirom..

ஞாயிறு, 29 டிசம்பர், 2024

கேம் தியரியும் பிறழ்புரிதலும்!
பாஜக தலைவர் அண்ணாமலை குறித்த 
எனது RDX கட்டுரையைத் தொடர்ந்து....
ஐன்ஸ்டினும் எட்டிங்டனும்! 
----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------   
அண்ணாமலையின் சவுக்கடிப் போராட்டம் குறித்த 
எனது RDX கட்டுரைக்கு எதிர்வினைகள் வந்துள்ளன.
முகநூலிலும் தொலைபேசி மூலமும் வந்தடைந்த 
அவற்றில் காத்திரமானவை மிகவும் சொற்பமே.

அந்தக் கட்டுரை ஓர் அரசியல் கட்டுரை அல்ல.
மீண்டும் சொல்லுகிறேன்; அது ஓர் அரசியல் 
கட்டுரை அல்ல. மாறாக அது ஒரு அகாடமிக் 
(academic) கட்டுரை ஆகும். அதாவது அது ஒரு 
கல்வியியல் கட்டுரை ஆகும்.

சமகால உலகின் சமூகவியல் பிரச்சினைகளுக்கு 
கேம் தியரி (Game theory) மூலம் தீர்வு காண இயலும் 
என்பதை யாப்புறுத்தும் பொருட்டே அக்கட்டுரை 
எழுதப்பட்டது.

அறிவியல் சிக்கல்களுக்கு மட்டுமே அறிவியலால் 
தீர்வு தர முடியும் என்ப து சென்ற நூற்றாண்டின் 
பழங்கதை. அறிவியல் மட்டுமின்றி சமூகவியல் 
சிக்கல்களுக்கும் அறிவியல் தீர்வு தருகிறது.
இதற்குச் சான்றுதான் Game theoryயும் நாஷ் 
சமநிலையும் (Nash equilibrium)     

மூன்றாம் உலகப்போர் வரும் என்று போலி 
நக்சல்பாரிகளும் போலி முற்போக்குகளும் 
உளறிக் கொட்டியபோது மூன்றாம் உலகப்போர் 
வராது என்று கேம் தியரி (Game theory) மூலம்
நிரூபித்துக் காட்டியவன் நான். இப்பொருளில் 
அமைந்த எனது கட்டுரை அறிவியல் ஒளி ஏட்டில் 
பிரசுரமானது. (அறிவியல் ஒளி ஏட்டுக்குச் 
சந்தா கட்டுங்கள்; அதுவரை நூலகங்களில் 
கிடைக்கும் அறிவியல் ஒளி ஏட்டைப் படியுங்கள்).

Game theory குறித்தோ Nash equilibrium குறித்தோ  
அணு அளவேனும்  தெரிந்தவர்கள் அப்பொருள் 
குறித்த எனது அக்காடமிக் கட்டுரையின் மீது 
கருத்துக் கூறுவதே நியாயமானது. அது வரவேற்கத் 
தக்கதும் ஆகும். Game theory குறித்தும் அதனுடைய 
சமூக முக்கியத்துவம் குறித்தும் எதுவும் தெரியாத 
நிலையில், இடதுசாரி முகாமில் மாறுவேஷத்தில்  
இருக்கும் வலதுசாரிகள் தங்களின் பிறழ்புரிதலை 
வெளிப்படுத்துவதால் என்ன பயன் விளையும்?

Game theory என்பதெல்லாம் MSc, M Tech போர்ஷன்.
எனவே இது பற்றிப் படித்தவர்கள் மிகவும் 
சொற்பமே. மைனஸ் x மைனஸ் எப்படி ப்ளஸ் 
ஆகும் என்று கேட்பவர்கள் அனைவருமே 
இடதுசாரி முகாமில் மாறுவேஷத்தில் இருக்கும் 
வலதுகளே ஆவர். அவர்களால் ஒருபோதும் 
கேம் தியரியைப் புரிந்து கொள்ள இயலாது.   

பாஜக தலைவர் அண்ணாமலை மீதான 
காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்த விரும்புபவர்கள் 
தி நகரில் உள்ள கமலாலயம் சென்று 
வெளிப்படுத்தலாம், தைரியம் இருந்தால்.
நியூட்டன் அறிவியல் மன்றத்தின் அகாடமிக் 
பதிவுகள் அண்ணாமலை மீதான காழ்ப்புக்கு 
இடம் தராதவை.

நியூட்டன் அறிவியல் மன்றம் அண்ணாமலையை 
defend செய்யும் கடப்பாடு உடையது.. 
தமிழ்நாட்டின் புகழ்மிக்க கல்லூரியில்
படித்துப் பெற்ற B Tech பட்டம், வணிக  மேலாண்மைப் 
பட்டம், UPSC தேர்வு எழுதி IPS தேர்ச்சி, IPS பயிற்சி,
இவற்றுடன் அண்மையில் ஆக்ஸ்போர்டு பல்கலையில் 
பயின்ற உயர்கல்வி ஆகியவற்றுடன் ஒரு பெரும் 
அறிவாளியாகத் திகழும் அண்ணாமலையை 
நியூட்டன் அறிவியல் மன்றம் பாதுகாக்கும். 
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்.

ஒரு அறிவுஜீவி என்பவன் முழுநேர இடதுசாரி 
என்றார் பிரெஞ்சு தத்துவஞானி ஜீன் பால் சார்த்தர் 
(Jean Paul Sartre 1905-1980). இந்த இலக்கணப்படி 
அண்ணாமலை ஒரு முழுநேர இடதுசாரியே!   

அண்ணாமலையின் சவுக்கடிப் போராட்டம் 
குறித்து ஏளனம் செய்வது அறிவியலை ஏளனம் 
செய்வதாகும். கேம் தியரியின் அடிப்படையில் 
கணக்கிடப்பட்டு மேற்கொள்ளப் பட்டது அவரின் 
சவுக்கடி மற்றும் தொடர் போராட்டங்கள்.
அவை பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலை 
மாணவிக்கு நியாயம் வழங்கி உள்ளது கண்கூடு.

அண்ணாமலையின் சவுக்கடிப் போராட்டங்களை 
ஏளனம் செய்வது Game theoryயை ஏளனம் செய்வதாகும்.;
அறிவியலை ஏளனம் செய்வதாகும். அவ்வாறு ஏளனம் 
செய்பவர்களின் வலதுசாரிப் பிற்போக்கு mindset   
அம்பலம் ஆகிவிடுகிறது.
-------------------------------------------------------------
பின்குறிப்பு:
இதுவும் அகாடமிக் கட்டுரைதான். Game theory பற்றித் 
தெரிந்தவர்கள்தான் இக்கட்டுரையின் மீது எதிர்வினை 
ஆற்ற வேண்டும் என்று எந்த நிபந்தனையையும் நான் 
விதிக்கவில்லை. இந்த மொத்த விவகாரத்திலும் 
கேம் தியரி பற்றித் தெரிந்தவர்கள் இரண்டே இரண்டு 
பேர்தான் என்பது புலப்படுகிறது. யார் அந்த இரண்டு பேர்?
வேறு யார்? அண்ணாமலையும் நானும்தான்.

ரிலேட்டிவிட்டி தியரியைச் சொன்னவர் ஐன்ஸ்டின்.
அதைப் புரிந்து கொண்டு மற்றவர்களுக்கு விளக்கிச் 
சொன்னவர் எட்டிங்டன் (Arthur Eddington 1882-1944).
இந்தச் சவுக்கடி விவகாரத்தில் அண்ணாமலையும் 
நானும், ஐன்ஸ்டினும் எட்டிங்டனும் போல் 
செயல்பட்டு இருக்கிறோம். இதைப் புரிந்து 
கொள்ளத் தேவையான IQ உள்ளவர்களுக்காக 
இக்கட்டுரை எழுதப் பட்டுள்ளது.
*******************************************************


 


   

       

சனி, 28 டிசம்பர், 2024

கேம் தியரியும் அண்ணாமலையும்!
பாஜக தலைவர் அண்ணாமலையின் 
சவுக்கடிப் போராட்டம் விமர்சிக்கப் படுவது ஏன்?
94 versus  140! 
-----------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------
சிந்தனைக் குள்ளர்களால் நிரம்பி வழியும் இடம் 
தமிழக அரசியல் அரங்கம். தமிழகத்தில் இன்றுள்ள 
அரசியல் தலைவர்களில் நான்கே நான்கு பேரைத் 
தவிர மீதி அனைவரின் IQவும் 94ல் தொடங்கி 
100ல் முடிந்து விடும்.

(IQ 94 என்பது ஆட்டிச IQ (Autism spectrum disorder) என்று 
எனது நண்பரும் சைக்கியாட்ரிஸ்டுமான ஒருவர் 
கூறினார்).   

100ஐத் தாண்டிய IQ நான்கே நான்கு பேருக்குத்தான் 
உள்ளது. அந்த நான்கு பேரை ஏறு வரிசையில் 
பார்ப்போம். 
1) டி டி வி தினகரன்.இவரின் IQ 102 ஆகும்.   
2) கார்த்திக் சிதம்பரம். இவரின் IQ  118.
3) ப சிதம்பரம். இவரின் IQ 120.
4) பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. 
இவரின் IQ 140 ஆகும். 

அனைத்துக் கட்சிகளையும் சார்ந்த ஏனைய 
அரசியல் தலைவர்கள் எல்லோரும் மீடியாக்கர் 
(mediocre)  மற்றும் சப் மீடியாக்கர் ஆசாமிகளே!
Sub mediocre என்ற சொல்லை நான் புதிதாக உருவாக்கி 
புழக்கத்தில் விட்டுள்ளேன்.

இப்போது அண்ணாமலையின் சவுக்கடிப் 
போராட்டத்துக்கு வருவோம். தமிழ் வாசகத்  
தற்குறிச் சூழலில் எடுத்த எடுப்பில் ஒரு விஷயத்துக்கு 
நேரடியாக வந்து விட முடியாது. நீண்ட பீடிகைகள் 
தேவைப்படுகின்றன.

சவுக்கடிப் போராட்டம் அண்ணாமலையின் brainchild.
அதாவது IQ 140 உடைய ஒரு brain பிறப்பித்த குழந்தை.
இதை IQ குன்றிய அரசியல் சிந்தனைக் குள்ளர்களும் 
ஊடகத் தற்குறிகளும் எப்படிப் புரிந்து கொள்ள முடியும்?

தமது சவுக்கடிப் போராட்டம் மற்றும் செருப்பு 
அணியாமை  ஆகியவை தமிழ்ச் சமூகத்தில் 
குறிப்பாக பெற்றோர்களிடம் எவ்வளவு சக்தி வாய்ந்த 
தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பற்றிய துல்லியமான 
மதிப்பீடு அண்ணாமலையிடம் உள்ளது.   

Game Theory, Nash equilibrium  (விளையாட்டுக் கோட்பாடு 
மற்றும் நாஷ் சமநிலை) குறித்த ஆழமான அறிவைப்
பெற்றிருந்தால் மட்டுமே அண்ணாமலையின் 
போராட்டம் மக்களிடம் எவ்வளவு வீரியமான 
தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அறிய முடியும்.
(Game Theory, Nash equilibrium குறித்து அறிவியல் ஒளி
ஏட்டில் முன்பு நான் எழுதிய கட்டுரைகளைப் 
படிக்கலாம். குறைந்தது ப்ளஸ் டூ வரையிலான 
கணிதம் இயற்பியல் படித்திருந்தால் எனது 
கட்டுரைகள் புரியும்.

படிப்பறிவு இல்லாதவர்கள்,
மிகப்பெரிதும் IQ குன்றியவர்கள் 
அறிவியல் அறிவு அறவே இல்லாதவர்கள் 
ஆங்கிலம் தெரியாதவர்கள்
நல்ல பண்போ ஒழுக்கமோ இல்லாதவர்கள் 
Dravidian scum
போலி நக்சல்பாரிகள், போலி கம்யூனிஸ்டுகள்
இத்தியாதி ஜென்மங்கள்தான் அண்ணாமலையின் 
போராட்டத்தைப் புரிந்து கொள்ளாமல் அதை 
எதிர்க்கிறார்கள்.

முருகனுக்கு அலகு குத்துவது, சபரி மலைக்குச் செல்ல 
மாலை அணிந்து விரதம் இருப்பது, மகாத்மா காந்தியின் 
உண்ணா விரதங்கள், முகரம் பண்டிகையின்போது 
இஸ்லாமிய சகோதரர்கள் தங்களை சாட்டையால் 
அடித்துக் கொள்ளுதல் என்னும் இந்த வரிசையில் 
வருவதுதான் அண்ணாமலையின் சவுக்கடிகள்!
இவை அனைத்திலும் தன் உடலை வருந்துதல் 
என்னும் பொதுத்தன்மை இருப்பதைக் காணலாம்.
இது அஹிம்சையின் பாற்படும்.
   
ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். என்னையே 
உதாரணமாக எடுத்துக் கொள்ளுவோம்.
எனது IQ 95 என்று IQ Instituteன் இயக்குனர் 
தெரிவித்தார். எனது கல்வித் தகுதி 
SSLC Fail அந்தக் காலத்தில் 1969ல் 11 வகுப்பு 
கொண்ட SSLC இருந்தது. நெல்லை மாவட்டம் 
சங்கரன்கோவில் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் 
SSLC தேர்வு எழுதினேன். Maths, English, Science
ஆகிய மூன்று பாடங்களிலும் நான் பெயில்.
செப்டம்பர் எழுதினேன். இம்முறை நான்கு
பாடங்களில் பெயில். விருப்பப்பாடமான 
(Elective subject) Historyயிலும் பெயில்.

எனவே நான் நக்சல்பாரி இயக்கத்தில் சேர்ந்து 
விட்டேன். தலைமறைவு இயக்கமான 
நக்சல்பாரி இயக்கத்தில் தீவிரமாகப் பணி 
செய்தவன் நான்.

ஒரு பெருந்தற்குறியான என்னால் Game theory
பற்றியோ அல்லது Nash equilibrium ஆற்றியோ 
புரிந்து கொள்ள முடியுமா? அண்ணாமலையின் 
மதிப்பீடுகள் என் மர மண்டையில் ஏறுமா? 

கற்றாரைக் கற்றாரே காமுறுவர்!
---------------------------------------------------
அண்ணாமலை குறித்து தமிழ்  இலக்கியங்கள் 
என்ன கூறுகின்றன?
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்றுதான் 
ஒளவையார் கூறுகிறார் (மூதுரை).        
.        .        
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்றால் என்ன 
அர்த்தம்? படித்தவனைப் படித்தவன்தான் விரும்புவான் 
என்று அர்த்தம். அண்ணாமலை போன்ற ஒரு பெரும் 
படிப்பாளியை ஒரு படிக்காத முட்டாள் எப்படி 
விரும்புவான்? எப்படி மதிப்பான?

நற்றாமரைக் கயத்தில் நல்லன்னம் சேர்ந்தாற்போல் 
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்- கற்பிலா 
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் சுடுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம். 
(ஒளவையார் மூதுரை)

சிறு குறிப்புத் தருக: Game theory
-----------------------------------------------
உள்ளூர்ச் சிக்கல் முதல் உலகச் சிக்கல் வரை 
மனித சமூகம் எதிர்கொள்ளும் சமூகவியல் 
பிரச்சினைகளுக்கு உரிய strategyயைப் பொருத்தி 
தகுந்த கணித மாதிரிகள் (mathematical models) மூலம்    
தீர்வு வழங்குவதே Game theory.     

ஹங்கேரியில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்த 
இயற்பியல் விஞ்ஞானி ஜான் வான் நியூமேன் 
(John Von Neumann 1903-1057) Game theoryயின் 
சரித்தன்மையை நிரூபித்தார்.

சிறுகுறிப்புத் தருக: Nash equilibrium.
----------------------------------------------------
Game theory வழங்கும் தீர்வுகளில் அதிகபட்ச
நன்மை கொண்ட விளைவைத் தருவதற்கு 
நாஷ் சமநிலை பயன்படுகிறது. அமெரிக்கக் 
கணித நிபுணர் ஜான் ஃபோர்பஸ் நாஷ் ஜூனியரின்  
(John Forbes Nash Jr 1928-2015)  பெயரால் இச்சமநிலை 
அமைந்துள்ளது.

அண்ணாமலையின் சவுக்கடிகள் சரியே!
தற்குறிகள் மட்டுமே அவரைக் கேலி செய்வார்கள்.
-------------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
வாசக அன்பர்களே, 
ஒரே கட்டுரையில் Game theoryஐயும் சொல்லுகிறேன்;
மூதுரையின் வெண்பாவையும் சொல்லுகிறேன்.
ஜான் வான் நியூமேனையும் சொல்லுகிறேன்;
ஒளவையாரையும் சொல்லுகிறேன்.

என்னிடமிருந்து அல்லாமல் வேறு யார் எவரிடம் 
இருந்தும் இது போன்ற கட்டுரைகளை நீங்கள் படிக்க 
இயலாது.
******************************************************* 
    




    
        
         
  
 

வியாழன், 26 டிசம்பர், 2024

 EVM Batteries
-----------
power pack of EVM
CU rating : 7.5 volt 2 Ah

VVPAT rating: 22.5 volt 4 Ah
The indicator will show 
High, Medium, Low, Marginal etc

Get colour code resistors in Ritchie st
BB ROY Great Briton Very Good Wife






செவ்வாய், 24 டிசம்பர், 2024

 20 - Dec - 2024

2nd VRS in BSNL..

Rumours are going on for quite some time about implementation of 2nd VRS in BSNL. Top officers of the Company have stated that there is no proposal for 2nd VRS. However, it appears that, BSNL Management is taking steps for implementing 2nd VRS. We cannot officially confirm this. But the news appears to be true. MTNL could not survive even after implementation of VRS 3 times. By implementing 2nd VRS in BSNL, government wants to cut down the expenditure of the Company. But, it is a matter of serious concern that, neither the government nor the Management is taking meaningful steps for increasing the revenue of the Company. BSNL was not allowed to procure 4G equipments from foreign companies which are having proven technology. Government forced BSNL to procure 4G equipments from TCS. Reports say that, out of the one lakh 4G BTSs, 62,000 BTSs are already installed. However, BSNL customers are neither getting good quality voice call nor good data service. When this is the situation, how BSNL’s revenue can increase? One thing is clear. Government does not want BSNL to become a profit making Company. Implementation of 2nd VRS is nothing but cutting down the manpower for handing over the Company to private corporates in future. 

 
தனியாரிடம் விற்கப்படும் BSNL!
------------------------------------------------- 
பி இளங்கோ சுப்பிரமணியன் 
முன்னாள் மாவட்டச் செயலாளர், NFTE BSNL
சென்னை,
வெளியீடு: நியூட்டன் அறிவியல் மன்றம் 
*************************************************** 
2018, 2019களில் BSNL நலிவுற்று இருந்தது.BSNL க்கு 
உரிய நிவாரணம் வழங்கி BSNLஐ புத்தாக்கம் 
(revival) செய்ய மோடி அரசு முடிவெடுத்தது. அதன்படி 
2019ல் BSNLக்கு ரூ 70,000 கோடி நிவாரணம் வழங்கப் 
பட்டது. BSNL மேற்கொண்ட ஊழியர்களுக்கான 
விருப்ப ஓய்வுத் திட்டத்திற்கான நிதி இந்த நிவாரணத்தின் 
மூலம் கிடைத்தது.       

அடுத்து ஜூலை 2022ல் மோடி அரசு BSNLக்கு மற்றுமொரு 
நிவாரணமாக (revival package) ரூ 1.64 லட்சம் கோடியை 
அறிவித்தது. இவ்விரண்டு நிவாரணங்களின் மூலம் 
BSNL மோடி அரசிடம் இருந்து ரூ 2.34 லட்சம் கோடி 
பெற்றுள்ளது.

BSNLன் நிதிநிலைமையைச் சீராக்குவதையும், 
4G சேவையை வழங்குவதையும் நோக்கமாகக் 
கொண்டு இந்த இரண்டாவது நிவாரணம் 
வழங்கப் பட்டது.

நிவாரணங்களுக்கு முடிவு இல்லை போலும்! ஜூன் 2023ல் 
மூன்றாவது நிவாரணமாக ரூ 89,047  கோடியை BSNLக்கு 
மோடி அரசு வழங்கியது.

முதல் நிவாரணம் 2019 = ரூ 70,000 கோடி
2ஆம் நிவாரணம்  2022 =ரூ 1.64 லட்சம் கோடி 
3ஆம் நிவாரணம் 2023 = ரூ 89,047 கோடி 
மொத்தம் = ரூ 3.23 லட்சம் கோடி.

மனிதகுல வரலாற்றில் எந்த ஒரு பொதுத்துறை 
நிறுவனத்திற்கும் ஒரு அரசு ரூ 3.23 லட்சம் கோடி 
நிவாரண உதவியை வழங்கியதில்லை. 

BSNL நிறுவனம் 01.10.2000ல் தொடங்கப் பட்டது.
அது தொடங்கிய நாள் முதலே அது தனியாருக்கு 
விற்கப்படும் என்று ஆருடம் கூறிக் கொண்டே 
இருந்தார்கள் மார்க்சிஸ்டு சார்பு தொழிற்சங்கத்தினர்.
இன்று 25 ஆண்டுகள் கடந்து விட்டன. எந்தத்
தனியாருக்கும் BSNL விற்கப்படவில்லை எனறு 
அனைவரும் அறிவர். 

BSNLல் மீண்டும் ஒரு விருப்ப ஓய்வுத் திட்டத்தைக் 
கொண்டு வந்து ஓரளவு ஊழியர்களின் 
எண்ணிக்கையைக் குறைத்து விட்டு, அதன் பிறகு 
BSNLஐ அதானிக்கு விற்கப் போகிறது மோடி அரசு 
என்று மார்க்சிஸ்ட் சமூக விரோதிகள் வதந்திகளைப் 
பரப்பி வருகிறார்கள். இதில் துளியும் உண்மை இல்லை.

மூன்றேகால் லட்சம் கோடி ரூபாயை BSNLல் மோடி அரசு 
முதலீடு செய்திருப்பது அதை அதானியிடம் விற்பதற்கு 
அல்ல. இது உணர்ந்து கொள்ள robust common sense
எதுவும் தேவையிலில்லை. குறைந்தபட்ச காமன் 
சென்ஸ் இருந்தாலே போதும்.


மோடி 2,0 காலக்கட்டத்தில் பொதுத்துறை நிறுவங்கங்கள் 
குறித்த ஒரு கோட்பாடு (PSE Core Policy)  வகுக்கப் பட்டது.   
இதன்படி ஒரு தொழில்துறையில் குறைந்தது ஒரு 
பொதுத்துறை நிறுவனமாவது இருக்க வேண்டும் என்றும் 
இதை மத்திய அரசுஉறுதி செய்ய வேண்டும் என்றும் 
மோடி அரசு கூறியது.

டெலிகாம் துறையில் அம்பானி, சுனில் மிட்டல்,  டாட்டா,
பிர்லா ஆகியோரின் நிறுவனங்கள்  இருக்கின்றன. 
இத்துறையில் ஒரு பொதுத்துறை நிறுவனமானது இருக்க 
வேண்டும். எனவே இங்கு BSNL நிறுவனம் இருக்கும்; 
இருக்க வேண்டும். இதுதான் பொதுத்துறை 
நிறுவனங்கள் குறித்த மோடி அரசின் பிரதான 
கொள்கை (Core policy)   

பின்னாளில் மோடி அரசு இந்த core policyஜக் கைவிட்டாலும் 
BSNLக்கு எந்த ஆபத்தும் இல்லை. ராணுவ ரகசியங்களையும் 
அரசின் ரகசியங்களையும் பாதுகாக்க BSNL நிறுவனம் 
பொதுத்துறையில் நீடிக்க வேண்டிய தேவை அரசுக்கு
இருக்கிறது. எனவே BSNL ஒருபோதும் எந்தத் தனியாருக்கும் 
விற்கப் பட மாட்டாது.இந்த யுகம் முழுவதும் BSNL 
அரசுத் துறையாகவே நீடிக்கும்.

வதந்திகளைப் பரப்புவோரை இகழ்ச்சியுடன்
நிராகரிப்போம். BSNL ஜிந்தாபாத்!
******************************************************* 

  
     

ஞாயிறு, 22 டிசம்பர், 2024

வசமாக மாட்டிக்கொண்ட  தேர்தல் ஆணையம்!   
ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் 26 தொகுதிகளில்
EVMகளில் முறைகேடு நடந்ததற்கு ஆதாரம்!
------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------------------------------
அக்டோபர் 2024ல் ஹரியானா சட்டமன்றத் தேர்தல் 
முடிவுகள் வெளிவந்தன. இதில் பாஜக வெற்றி பெற்றது.
பாஜகவுக்கு இது ஹாட் டிரிக் வெற்றி ஆகும்.

90 இடங்களைக் கொண்ட ஹரியானா சட்ட மன்றத்தில் 
48 இடங்களில் வெற்றி பெற்று பாஜக அறுதிப் 
பெரும்பான்மை பெற்று ஆடசி அமைத்தது. காங்கிரஸ் 
37 இடங்களுடன் இந்த தோல்வியைத் தழுவியது.

இத்தேர்தல் முடிவுகளை ஏற்க மாட்டோம்; EVMகளில் 
முறைகேடு செய்துதான் பாஜக வெற்றி பெற்றுள்ளது
என்று காங்கிரஸ் கூறியது. தேர்தல் ஆணையத்திடம் 
புகார் கொடுத்தது.

ஹரியானாவில் உள்ள 90 தொகுதிகளில் 26 தொகுதிகளில் 
EVMகளில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் 
கூறியது. வாக்குப்பதிவு முடிவடையும் நேரமான 
மாலை 5 மணிக்குக்கூட EVMகளில் உள்ள பாட்டரிகளின் 
சார்ஜ் 99 சதவீகம் இருந்ததாக  EVMகளில் பொருத்தப்பட்ட 
LED மூலம் தெரிய வந்ததாக காங்கிரஸ் கூறியது.

காலை 7 மணியில் இருந்து வேலை செய்யும் ஒரு EVMல் 
பாட்டரி சார்ஜ் குறைந்திருக்க வேண்டாமா? 10 மணி நேரம் 
கழிந்த பின்னும் 99 சதவீதம் சார்ஜ் எப்படி இருக்க 
முடியும் என்று காங்கிரஸ் கேட்டது. இவ்வாறு பாட்டரி 
சார்ஜ் அதிகமாக இருந்த தொகுதிகளில் எல்லாம் 
பாஜக வெற்றி பெற்றுள்ளது என்றும் காங்கிரஸ் 
மேலும் கூறியது.

EVMகள் மீதும் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மீதும் 
பெரும் அவநபிக்கையை ஏற்படுத்திய இந்தப் 
புகார்களுக்கு  இந்தியத் தேர்தல் ஆணையம் 
பதில் அளித்துள்ளது. என்றாலும் அந்தப் பதில் 
பரந்துபட்ட மக்களின் புரிதல் மட்டத்துடன்
ஒத்திசையவில்லை.

எனவே சமூகத்தின் அனைத்துப் பகுதி மக்களும் 
புரிந்து கொள்ளும் விதத்தில் நியூட்டன் அறிவியல் 
மன்றத்தின் சார்பாக அதன் நிறுவனரும் தலைவரும் 
ஆகிய பி இளங்கோ சுப்பிரமணியன் என்னும் நான் 
அறிவியல் துல்லியம் நிறைந்த ஒரு பதிலை 
with authority and aplomb முன்வைக்கிறேன்.   

அறிவியலின் பதில் காணீர்!
-------------------------------------------
காங்கிரசின் புகார்கள் நகைப்புக்குரியவை; நாணத் 
தக்கவை. மனித குல வரலாறு கண்டும் கேட்டும் இராத 
தற்குறித்தனம் காங்கிரசின் புகார்களில் வெளிப்படுகிறது.
அவற்றில் அணுவளவு கூட உண்மை இல்லை.

EVMகளில் உள்ளவை பிரைமரி பேட்டரிகள்
(primary batteries) ஆகும். அவற்றை சார்ஜ் பண்ணவோ 
அல்லது ரீசார்ஜ் பண்ணவோ தேவையில்லை.
காங்கிரசார் குறிப்பிடும் LED indicatorகள் பேட்டரி சார்ஜ் 
அளவைக் காட்டும்  இண்டிகேட்டர்கள் அல்ல. எனவே 
99 சதவீதம் சார்ஜ் காட்டுகிறது என்று காங்கிரசார் 
கூறுவது  பேட்டரி சார்ஜைக் குறிக்காது. 

அப்படியானால் அந்த இண்டிகேட்டர்கள் எதைக் 
குறிக்கின்றன? அவை வோல்டேஜ் இண்டிகேட்டர்கள்
ஆகும். நன்கு கவனிக்கவும்: அந்த LEDகள் பேட்டரியில்  
வோல்டேஜ் எவ்வளவு இருக்கிறது என்று காட்டுபவை.

பேட்டரி சார்ஜ் இண்டிகேட்டர் வேறு; வோல்ட்டேஜ் 
இண்டிகேட்டர் வேறு. முன்னதற்கு ஒரு EVMல் 
வேலையே இல்லை.  

ஆரம்ப கால EVMகள் 6 வோல்ட் பேட்டரிகளில் 
இயங்கின. EVMகளுடன் VVPAT இணைக்கப்பட்ட 
பிறகு கூடுதலாக ஒரு 1.5 volt செல்லைச் சேர்த்தோம்; 
அதாவது தற்போது கண்ட்ரோல் யூனிட்  7.5 volt 
பேட்டரியில் இயங்குகிறது.

VVPAT அச்சடித்துத் தள்ள வேண்டி இருப்பதால் 
வோல்டேஜ் அதிகமுள்ள பேட்டரி தேவை. எனவே  
VVPAT 22.5 volt பேட்டரியில் இயங்குகிறது. 

எந்த அளவு வோல்ட்டேஜ் வரை ஒரு பாட்டரி வேலை 
செய்யும்? VVPATயில் உள்ள பேட்டரி 10 voltக்கு 
குறைந்தால் வேலை செய்யாது. low voltage
ஆகி விடும். நம் வீட்டில் உள்ள டியூப் லைட், டிவி 
போன்றவை low voltageல் வேலை செய்வதில்லை 
அல்லவா? அதுபோலவே control unitம் VVPATம் 
low voltageல் வேலை செய்யாது.

தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு எப்போது low voltage
ஆகும் என்று தெரிய வேண்டும். அப்படித் 
தெரிந்தால்தான் சரியான நேரத்தில் பேட்டரியை 
மாற்ற முடியும். காங்கிரசார் பிறழ உணர்ந்த 
இண்டிகேட்டர்கள் உண்மையில் threshold voltage levelஐ 
உணர்த்தும் இண்டிகேட்டர்கள். அவற்றுக்கும் 
பேட்டரி சார்ஜுக்கும் ஸ்நானப்  பிராப்தி கிடையாது.

எனவே காங்கிரஸாரின் புகார்களை நியூட்டன் 
அறிவியல் மன்றம் இகழ்ச்சியுடன் நிராகரிக்கிறது.
---------------------------------------------------------------------
பின்குறிப்பு:
வாசகர்களே,
உங்களின் மொபைல் போனில் ஒரு பேட்டரி 
இருக்கும். அது லித்தியம் அயான் பேட்டரியாக 
இருக்கக்கூடும். அவற்றை ரீசார்ஜ் செய்யலாம்.
அவை secondary பேட்டரிகள் ஆகும்.

ஆனால் EVMகலீல் உள்ளவை PRIMARY பேட்டரிகள்.
அவற்றை ரீசார்ஜ் செய்ய இயலாது.
********************************************************** 

           


     

   .       

      

    
          

வெள்ளி, 20 டிசம்பர், 2024

உலக சதுரங்க சாம்பியன்!
ஆனந்த் முதல் குகேஷ் வரை! 
-----------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-----------------------------------------------
2013ல் உங்க சதுரங்க சாம்பியன் போட்டி 
சென்னையில் நடைபெற்றது. அப்போது 
ஆனந்த் சாம்பியனாகஇருந்தார். அவரை 
மாக்னஸ் கார்ல்சன் எதிர்த்தார்.

உலக சாம்பியனை எல்லோரும் எதிர்க்க முடியாது.
ஒரு சாலஞ்சர் (challenger) மட்டுமே எதிர்க்க முடியும்.
சாலஞ்சர் யார் என்பதைத் தீர்மானிக்க 
உலக அளவிலான candidates tournament என்னும் 
போட்டி நடைபெறும். இதில் அதிகப் புள்ளிகளுடன் 
முதலிடம்  பெறுபவரே சாலஞ்சர் ஆவார்.

2013ல் ஆனந்தை தோற்கடித்து கார்ல்சன் உலக 
சாம்பியன் ஆனார். தொடர்ந்து சில ஆண்டுகள் 
கார்ல்சன் உலக சாம்பியனாக இருந்தார். 

ஒரு உலக சாம்பியன் தன்னுடைய TITLEஐ defend 
செய்ய வேண்டும். ஆனால் மாக்னஸ் கார்ல்சன்
2023ல் தன்னுடைய டைட்டிலை defend செய்யப் 
போவதில்லை என்று அறிவித்து விட்டார் எனவே 
சாலஞ்சரான சீன வீரர் டிங் லிரென் உலக 
சாம்பியன் ஆனார்

டிங் லிரெனின் சாலஞ்சர் யார் என்பதை முடிவு செய்ய 
நடந்த candidates tournamentல் பிரக்ஞானந்தா, குகேஷ் 
உள்ளிட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.
Double round robin முறையில் நடந்த இப்போட்டியில்
சாலஞ்சராக குகேஷ் வெற்றி பெற்றார். அவர் 
டிங் லெரினைத் தோற்கடித்து உலக சாம்பியன் ஆனார்.

******************************************************     
    

.

.