சனி, 30 ஏப்ரல், 2022

அரசியல்வாதியின் திமிரை அடக்கிய நீதிமன்றம்!
-------------------------------------------------------------------------------
நம்மூரில் MMDA உள்ளது அல்லவா! அதுபோல 
ஹரியானாவில் HUDA (Haryana Urban Development Authority).

2015ல் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த HUDA
அதிகாரிகளையும் ஊழியர்களையும் இழிந்த 
அரசியல்வாதிகள் சிலர் சேர்ந்து கொண்டு  
தாக்கினர். பெட்ரோல் குண்டுகளை வீசினர்.
எரிவாயு சிலிண்டர்களை வீசியதில் HUDA டீமுடன் 
வந்த மாஜிஸ்திரேட் உட்பட பலர் காயமுற்றனர்.

இவ்வாறு அதிகாரிகள் மீது வன்முறையை ஏவியதில்
ஒருவர் நிஷா சிங் என்னும் பெண். இவர் ஆம் ஆத்மி  
கட்சியின் கவுன்சிலர்.

மொத்தம் 17 பேர் தண்டிக்கப்பட்டனர். இதில் 10 பேர் 
பெண்கள். நிஷா சிங் உள்ளிட்ட 10 பேருக்கு 7 ஆண்டு 
கடுங்காவல் சிறை. மீதி 7 பேருக்கு 10 ஆண்டு 
கடுங்காவல் சிறை. குர்கான் மாவட்ட நீதிமன்றம் 
இவ்வாறு தீர்ப்பு அளித்தது.

திமிர் பிடித்து ஆடிய ஆம் ஆத்மி கட்சியின் கவுன்சிலர் 
இனி 7 ஆண்டு காலம் சிறையில் களி திங்க வேண்டும்.
---------------------------------------------------------
பின்குறிப்பு:
கொள்ளையடித்த காசை வைத்து இந்த நாய்கள் 
ஜாமீன் வாங்கி விடும். ஏனெனில் இது இந்தியா!
**********************************************************
   
   

வியாழன், 28 ஏப்ரல், 2022

1952 முதல் 2019 தேர்தல் வரையிலான வரலாறு!
2024 தேர்தலில் வெல்லப்போவது யார் என்ற 
கட்டுரையின் முன்னுரை (3)
------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------------------------------
1951 இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் பற்றி
நாம் பாடப்புத்தகங்களில் படித்திருப்போம்.
முதல் பொதுத்தேர்தல் 1952 அல்லவா என்று
உங்களில் சிலர் நினைக்கலாம்!

இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் ஐந்து மாத 
காலம் நடைபெற்றது. 1951 அக்டோபரில் தொடங்கி 
1962 பிப்ரவரியில் முடிவுற்றது. அப்போது இன்றுள்ளது 
போல, நாடாளுமன்ற மக்களவையில் 543 இடங்கள் 
கிடையாது; அதை விடக் குறைவு. 489 இடங்கள்தான்.

முதல் பொதுத்தேர்தலில், தேர்தல் நடைபெற்ற 
489 இடங்களில் காங்கிரஸ்  364ல் வெற்றி பெற்றது. 
இது ஏறத்தாழ 4ல் 3 பங்கு வெற்றியாகும். காங்கிரஸ் 
பெற்ற வாக்குகள் 4.76 கோடி (நாலே முக்கால் கோடி).

சதவீத அடிப்படையில் பார்த்தால் காங்கிரஸ் 45 சதவீத 
வாக்குகளையே பெற்றிருந்தது. இடங்களைப் பொறுத்த
மட்டில் 75 சதவீத இடங்களைப் பெற்ற காங்கிரஸ்,
வாக்கு சதவீதம் என்று பார்த்தால், 50 சதவீதத்தை 
எட்டவில்லை. 45 சதவீதத்திற்கு உள்ளேயே  அடங்கி 
விட்டது.    
   
இரண்டாவது பொதுத்தேர்தலில் (1957ல்) மொத்த 
இடங்கள் சிறிது அதிகரித்து 494 ஆக இருந்தன.
காங்கிரஸ்  முன்னை விட 7 இடங்களை அதிகமாகப் 
பெற்று 371 இடங்களை வென்றிருந்தது. ஆனாலும் வாக்கு 
சதவீதம் 50ஐத் தாண்டவில்லை. அப்போதைய 
வாக்கு சதவீதம் 47.78 ஆகும்.

மூன்றாவது பொதுத்தேர்தல் 1962ல் நடந்தபோது 
காங்கிரஸ் கட்சியானது மொத்த இடங்கள் 494ல் 
361 இடங்களையும் 44.72 சதவீத வாக்குகளையும் 
பெற்றிருந்தது.

1952, 57, 62 ஆகிய மூன்று தேர்தல்களிலும் ஜவகர்லால் 
நேரு காங்கிரசுக்குப் பெருவெற்றி தேடித் தந்தார்.
காங்கிரஸ் வெற்றி பெற்ற இடங்கள் ஏறத்தாழ 
நான்கில் மூன்று பங்கு ஆகும். இடங்களைப் பொறுத்து 
நான்கில் மூன்று பங்கு பெரும்பான்மையை நேரு 
ஈட்டித் தந்திருந்தாலும், வாக்கு சதவீதம் இம்மூன்று 
தேர்தல்களிலும் 50ஐ விடக் குறைவு என்பது 
குறிப்பிடத் தக்கது. நேருவாலேயே  50 சதவீத 
வாக்குகளைப் பெற முடியவில்லை  

1967 தேர்தல் இந்திரா காந்தி தலைமையில் நடைபெற்றது.
காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.
இத்தேர்தலில்  தேர்தல் மூலம் நிரப்பப்படும் மக்களவை 
இடங்கள் 520 ஆக உயர்ந்தது. காங்கிரஸ் கட்சியானது 
283 இடங்களையும் 40.78 சதவீத வாக்குகளையும் 
பெற்றது.

1971ல் 352 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது.
இது மூன்றில் இரண்டு பங்கு வெற்றியை விடச் சிறிது 
அதிகமாகும். இப்போது மொத்த இடங்கள் 518ஆகக் 
குறைந்திருந்தது. காங்கிரஸ் பெற்ற வாக்குகள் 
43.68 சதவீதம் ஆகும். இத்தேர்தலில் காங்கிரசின் 
அதாவது இந்திரா காங்கிரசின்  தேர்தல் சின்னம் 
பசுவும் கன்றும் ஆகும். 1952,57,62,67 ஆகிய நான்கு 
தேர்தல்களிலும் காங்கிரஸ் இரட்டைக்காளையை 
தேர்தல் சின்னமாகக் கொண்டிருந்தது.     
 
1977ல் நெருக்கடி நிலை காரணமாக காங்கிரஸ் அதாவது 
இந்திரா காங்கிரஸ் தேர்தலில் தோற்றது. ஜனதா கட்சி
ஆட்சியைப் பிடித்தது. 81 வயதுப்பெரியவர் மொரார்ஜி 
தேசாய் பிரதமர் ஆனார்.

ஜனதா கட்சி என்பது உண்மையில் ஒரு தனித்த கட்சி 
அல்ல. அது குறைந்தது மூன்று கட்சிகளின் கூடாரம்.
இந்திராவை எதிர்க்கும் காங்கிரசார், சோஷலிஸ்டுகள்,
ஆர் எஸ் எஸ்சின் அரசியல் கட்சியான ஜனசங்கம்
ஆகிய மூன்று கட்சிகளின் சேர்க்கையான ஒரு 
தொளதொள அமைப்பே ஜனதா கட்சி. 
ஜனதா கட்சியை தனித்த ஒரு கட்சியாகக் 
கருதுவது பிழையாகும்.    

ஜனதா கட்சி மொத்த இடங்கள் 542ல். 
தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. 
295 இடங்களையும் 41.32 சதவீத வாக்குகளையும் 
பெற்றது ஜனதா கட்சி. தோல்வி அடைந்த இந்திரா 
காங்கிரஸ் 154 இடங்களையும்  34.52 சதவீத 
வாக்குகளையும் பெற்றது.

தேசாயின் ஆட்சி இரண்டு ஆண்டுகளில் கவிழ்ந்து 
சரண்சிங் பிரதமர் ஆனார். நாடாளுமன்றத்தைச் 
சந்திக்காமலேயே பிரதமராக இருந்த சரண்சிங் 
பதவி விலகினார். 

1980ல் இழந்த ஆட்சியை மீண்டும் பிடித்து விட்டது இந்திரா 
காங்கிரஸ். இந்திரா காந்தி மீண்டும் பிரதமர் ஆனார்.    
இப்போது 1980ல் நாடாளுமன்ற மக்களவையில் 
529 இடங்கள். இந்திரா காங்கிரஸ் 353 இடங்களைப் 
பெற்றது. இது இரண்டில் மூன்று பெரும்பான்மை ஆகும்.
வாக்குகள் 42.69 சதவீதம் ஆகும்.

1980 தேர்தலில் வென்று நாட்டை ஆண்டு கொண்டிருந்த 
இந்திராவை சீக்கியக் கயவர்கள் 31 அக்டோபர் 1984ல்
சுட்டுக் கொன்று விட்டார்கள். 1984 டிசம்பர் கடைசி
வாரத்தில் தேர்தல் நடைபெற்றது. சீக்கியர்களுக்கு 
எதிராக வட இந்தியாவில் கலவரம் நடந்து கொண்டு 
இருந்தது. பஞ்சாப்பில் தேர்தல் நடத்தப்படாமல் 
தள்ளி வைக்கப் பட்டது.

பிரதமர் ராஜிவ் காந்தி 1984 தேர்தலில் காங்கிரசை 
வழி நடத்தினார். இப்போது மக்களவையில் 541 இடங்கள்.
காங்கிரஸ் 404 இடங்களில் வென்றது. பஞ்சாப், அசாம் 
ஆகிய இடங்களில் பின்னர் தேர்தல் நடந்தபோது, 
காங்கிரசுக்கு அதில் 10 இடங்கள் கிடைத்தன. 
ஆக 414 இடங்களை காங்கிரசுக்குப் பெற்றுத் 
தந்தார் ராஜிவ் காந்தி. வாக்கு சதவீதம் 46.86 ஆகும். 
414 இடங்களை, அதாவது நான்கில் மூன்று பங்கு 
இடங்களைப் பெற்றிருந்தபோதும் வாக்கு சதவீதம் 
50ஐத் தொடவில்லை.

1989 தேர்தலில் காங்கிரஸ் தோற்றது. ராஜிவ் காந்தியால் 
காங்கிரசை வெற்றி பெறச் செய்ய இயலவில்லை.
197 இடங்களையும் 39.53 சதவீத வாக்குகளையும் பெற்ற 
காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. அமெரிக்க சிஐஏயின் 
கைக்கூலியான வி பி சிங் பிரதமர் ஆனார். அவரின் 
கட்சியான ஜனதா தளம் 143 இடங்களையும் 17.79 சதவீத 
வாக்குகளையும் மட்டுமே பெற்று, ஒரு கூட்டணியை 
அமைத்து ஆட்சியைப் பிடித்தது. விபி சிங்கிற்கு பாஜக 
ஆதரவு அளித்தது. பாஜகவின் ஆதரவாலேயே வி பி சிங் 
பிரதமராக முடிந்தது.

ஆனால் வி பி சிங்கால் பிரதமராக  ஒரு முழு ஆண்டைக்கூட 
நிறைவு செய்ய இயலவில்லை. வெறும் 343 நாட்கள் மட்டுமே 
பிரதமராக அவர் இருந்தார். பின்னர் பாஜக தனது ஆதரவை 
வாபஸ் பெற்றதால், நவம்பர் 7 , 1990ல் மக்களவையில் நடந்த 
நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்று வி பி சிங் 
பதவி விலகினார். அவரைத் தொடர்ந்து காங்கிரசின் 
ஆதரவுடன் (support from outside) சந்திரசேகர் பிரதமர் 
ஆனார். 

எட்டு மாதங்களுக்குக் குறைவான காலமே 
(நவம்பர் 1990-ஜூன் 1991) ஒரு பொம்மைப் 
பிரதமராக இருந்த சந்திரசேகர் காங்கிரசின் ஆதரவை 
இழந்தவுடன் ராஜினாமா செய்தார்.

அடுத்து வந்த 1991 தேர்தலின்போது ராஜிவ் காந்தி 
தமிழ்நாட்டில் படுகொலை செய்யப் பட்டார். இத்தேர்தலின் 
இறுதியில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பெறவில்லை.
244 இடங்களையும் 36.40 சதவீதம் வாக்குகளையும் 
பெற்ற காங்கிரஸ் சில சிறிய கட்சிகளுடன் கூட்டணி 
கண்டு ஆட்சியைப் பிடித்தது. நரசிம்மராவ் பிரதமர் 
ஆனார்.  120  இடங்களுடன் பாஜக அங்கீகரிக்கப்பட்ட 
எதிர்க்கட்சியாகச் செயலாற்றியது.    

1996 தேர்தலில் எக்கட்சிக்கும் பெரும்பான்மை 
கிடைக்கவில்லை. 161 இடங்களுடன் பாஜக தனிப்பெரும் 
கட்சியாகவும் (20.29 சதவீத வாக்குகள்), 140 இடங்களுடன் 
காங்கிரஸ் இரண்டாம் பெரிய கட்சியாகவும் வந்தன.
பாஜகவால் ஆட்சி அமைக்க முடியவில்லை. காங்கிரஸ் 
ஆட்சி அமைக்க விரும்பவில்லை. அதே நேரத்தில் 
46 இடங்களைப்பெற்ற ஜனதா தளத்துக்கு வெளியில் 
இருந்து ஆதரவு தர காங்கிரஸ் இசைந்தது. இதனால் 
தேவகெளடா பிரதமர் ஆனார். 10 மாதங்கள் மட்டுமே 
(ஜூன் 1996- ஏப்ரல் 1997) பிரதமராக இருந்த தேவகெளடா 
ராஜினாமா செய்ததும் ஐ கே குஜ்ரால் பிரதமர் ஆனார். 
இவர் 11 மாதங்கள் மட்டுமே பிரதமராக இருந்தார் 
(ஏப்ரல் 1997-மார்ச் 1998).

இக்காலக்கட்டத்தில் தேவ கெளடா அமைச்சரவையிலும் 
ஐ கே குஜ்ரால் அமைச்சரவையிலும் கம்யூனிஸ்ட் 
கட்சி (CPI) பங்கேற்றது. அக்கட்சிக்கு மக்களவையில் 
12 இடங்கள் இருந்தன. இந்திரஜித் குப்தா உள்துறை 
அமைச்சராகவும் சதுரானந்த் மிஸ்ரா வேளாண்மைத்துறை 
அமைச்சராகவும் இருந்தனர். CPIயின் கூட்டாளி CPMக்கு 
32 இடங்கள் இருந்தன. CPM  அவ்விரு ஆட்சிகளையும்
வெளியில் இருந்து ஆதரித்தது. எனினும் 1998 மார்ச்சில்
குஜ்ரால் ஆட்சி முடிவுக்கு வந்து 1998ல் அடுத்த 
தேர்தலை நாடு சந்தித்தது.

1998 பெப்ரவரி 28ல் தேர்தல் முடிவடைந்தது. பாஜக 
182 இடங்களை 25.59 சதவீத வாக்குகளுடன் பெற்று 
தனிப்பெருங் கட்சியாக இருந்தது. காங்கிரஸ் 141
இடங்களை மட்டுமே பெற்று எதிர்க்கட்சியாக
அமர்ந்தது. பாஜக அமைத்த கூட்டணியான 
NDA எனப்படும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 
ஆட்சி அமைத்தது. வாஜ்பாய் பிரதமர் ஆனார்.

வாஜ்பாய் ஆட்சிக்கு ஆதரவளித்த அதிமுக தனது 
ஆதரவை விலக்கிக் கொண்டதால், ஏப்ரல் 1999ல் 
ஒரு ஓட்டில் வாஜ்பாய் அரசு தோல்வி அடைந்தது.
வாஜ்பாயின் அரசு 13 மாதங்கள் மட்டுமே நீடித்தது.

1999 தேர்தலில் பாஜக 182 இடங்களுடனும் 23.75 சதவீத 
வாக்குகளுடனும் இருந்தது. பாஜக தலைமையிலான 
NDA கூட்டணியானது ஆட்சி அமைத்தது. 2004 வரை 
நிலையான ஆட்சியை  வாஜ்பாய் வழங்கினார். 
காங்கிரஸ் 114 இடங்களுடன் எதிர்க் கட்சியாய் இருந்தது.

அடுத்து 2004 தேர்தல். இதில் பாஜக ஆட்சியை இழந்தது.
காங்கிரஸ் தலைமையிலான UPA ஆட்சியைப் பிடித்தது.
டாக்டர் மன்மோகன்சிங் பிரதமர் ஆனார்.

காங்கிரஸ் 145 இடங்களும் 26.53 சதவீதம் வாக்குகளும் 
பெற்றிருந்தது. பாஜக 138 இடங்களும் 22.16 சதவீதம் 
வாக்குகளும் பெற்றிருந்தது.

மன்மோகன்சிங் ஆட்சிக்கு CPI, CPM கட்சிகள் ஆதரவு 
அளித்தன. CPMக்கு 43 இடங்களும் CPIக்கு 10 இடங்களும் 
சேர்ந்து மொத்தமாக 53 இடங்கள் இருந்தன. CPMன் 
சோம்நாத் சட்டர்ஜி மக்களவையின் சபாநாயகராக 
இருந்தார்.

அமெரிக்காவின் 123 அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்பது 
குறித்து காங்கிரசுக்கும் CPMக்கும் கருத்து வேறுபாடு 
தோன்றி, அரசுக்கு அளித்து வந்த ஆதரவை CPI, CPM
கட்சிகள் வாபஸ் பெற்றன. எனினும் வேறு கட்சிகள்
ஆதரவளித்தமையால் ஆட்சி கவிழவில்லை.

அடுத்து நடைபெற்ற 2009 தேர்தலில், மீண்டும் 
காங்கிரஸ் தலைமையிலான UPA ஆட்சியைப் பிடித்தது. 
மன்மோகன்சிங் பிரதமராகத் தொடர்ந்தார்.

2009 தேர்தலில், காங்கிரஸ் 206 இடங்களையும் 28.55 
சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தது. பாஜக 
116 இடங்களையும் 18.80 சதவீத வாக்குகளையும் 
பெற்றிருந்தது.

அடுத்து 2014 ஏப்ரல்-மேயில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் 
ஆட்சியை இழந்தது. பாஜக ஆட்சியைப் பிடித்தது.
நரேந்திர மோடி பிரதமர் ஆனார். பாஜக கட்சியானது
282 இடங்களைப் பெற்று தனிப்பெரும்பாண்மையுடன் 
திகழ்ந்தது.

பாஜகவின் வாக்குகள் = 31 சதவீதம்.
காங்கிரசின் வாக்குகள் = 19.31 சதவீதம்.
பாஜக பெற்ற இடங்கள் = 282
காங்கிரஸ் பெற்ற இடங்கள் = 44.
அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி அந்தஸ்தை 
காங்கிரஸ் பெறவில்லை. இந்த இழிவை காங்கிரஸ் 
அடைவது இது முதல் முறை. 
அங்கீகாரம் பெற மக்களவையின் மொத்த இடங்களில் 
10 சதவீத இடங்களை (55 இடங்கள்) ஒரு கட்சி பெற்று 
இருக்க வேண்டும். காங்கிரசோ 44 இடங்களை 
மட்டுமே பெற்று அங்கீகாரத்தை இழந்துள்ளது.

அடுத்து 2019 தேர்தல். இதில் பாஜக ஆட்சியைத் தக்க
வைத்துக் கொண்டது. மோடி மீண்டும் பிரதமர் ஆனார்.
இத்தேர்தலில் பாஜக 303 இடங்களையும் 37.36 சதவீத 
வாக்குகளையும் பெற்றது.

காங்கிரஸ் இத்தேர்தலிலும் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் 
பெறவில்லை. 52 இடங்களை மட்டுமே பெற்றிருந்ததால் 
எதிர்க்கட்சி அங்கீகாரம் கிடைக்கவில்லை. மேலும் 
காங்கிரஸ் தலைவரும் காங்கிரசின் பிரதமர் 
வேட்பாளராகக் கருதப் பட்டவருமான ராகுல் காந்தி 
தம் சொந்தத் தொகுதியான அமேதியில் தோல்வி 
அடைந்தார்.

1984ல் நடந்த தேர்தலில் ராஜிவ் காந்தி 414 இடங்களைப் 
பெற்றார். இது அனுதாப அலையால் கிடைத்த வெற்றி.
அதன் பிறகு 2019ல் பாஜக பெற்ற 303 இடங்களே 
அதிகமான இடங்களாக தேர்தல் வரலாற்றில் 
பதிவாகி உள்ளது.

அதே போல 1989 தேர்தலில் காங்கிரஸ் 39.53 சதவீத 
வாக்குகளைப் பெற்றிருந்தது. அதன் பிறகு 
2019 தேர்தலில் பாஜக பெற்ற 37.36 சதவீத 
வாக்குகள்தான் அதிகமானதாக தேர்தல் வரலாற்றில் 
பதிவாகி உள்ளது.
----------------------------தொடரும்--------------------------
***********************************************

    

      
மதவாதமும் போலி இடதுசாரிகளும்!
உயர்சாதியினருக்கு மட்டுமே அரசுப் பதவிகள்!
2024 தேர்தலில் வெல்லப்போவது யார் என்ற 
கட்டுரையின் முன்னுரை (1)
-----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-----------------------------------------------------------------
ஆண்டு 2004ல் தேர்தல். வாஜ்பாய் ஐந்தாண்டு கால 
ஆட்சியை முடித்து விட்டார். இந்தியா ஒளிர்கிறது 
என்று பிரச்சாரம் செய்தார். அது எடுபடவில்லை.
2004ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் ஆட்சிக்கு 
வந்தது. டாக்டர் மன்மோகன்சிங் பிரதமரானார்.  
பாஜக எதிர்க்கட்சி ஆனது; அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி

காங்கிரசின் ஆட்சி கூட்டணி ஆட்சியாகும். அது UPA-1 
என்று (தமிழில் ஐமுகூ-1) அழைக்கப்பட்டது. அந்த 
ஆட்சியை அமைத்த காங்கிரஸ் மக்களவைத் தேர்தலில் 
எத்தனை இடங்களைப் பெற்றிருந்தது என்பது மிகவும் 
முக்கியமானது.

மக்களவையில் 543 இடங்கள் தேர்தல் மூலம் நிரப்பப்படும்.
இந்த 543ல் பெரும்பான்மை என்பது 272 ஆகும். காங்கிரஸ் 
பெற்றிருந்த இடங்கள் 145 மட்டுமே. இது பெரும்பான்மைக்கு 
127 இடங்கள் குறைவு. 

ஆட்சியை இழந்த பாஜக அப்படியொன்றும் மிகக் 
குறைவான இடங்களைப் பெற்றிருக்கவில்லை. அது 
138 இடங்களைப் பெற்று  இருந்தது. காங்கிரசுக்கும் 
அதற்கும் கட்சி ரீதியாகப் பார்த்தால் வேறுபாடு 
வெறும் 7 இடங்கள்தான். 

CPI, CPM, திமுக உள்ளிட்ட பல கட்சிகள், காலமெல்லாம் 
காங்கிரசை எதிர்த்து வந்த பல கட்சிகள்,  காங்கிரசுடன் 
கூட்டணி கண்டு, குறைந்தபட்ச வேலைத்திட்டம் 
(CMP = Common Minimum Programme) என்னும் 
பித்தலாட்டத்துடன் பதவிக் கனிகளைச் சுவைத்தன.

காங்கிரசை எதிர்ப்பதே கம்யூனிஸ்ட் கட்சிகளின்
அரசியல். அவற்றின் கட்சித் திட்டப்படியும்
அதுதான் அவர்களின் வேலை. ஆனால் இந்தியப் 
பெருமுதலாளிகளின் பிரதிநிதியான காங்கிரசை
வரிந்து கட்டிக்கொண்டு ஆதரித்தார்கள் போலிக் 
கம்யூனிஸ்டுகளான CPI, CPM கட்சிகள். 

அப்போது மக்களவையில் (2004ல்) மார்க்சிஸ்ட் கட்சிக்கு
43 இடங்கள் இருந்தன. CPI கட்சிக்கு 10 இடங்கள்
இருந்தன.CPI, CPM இவ்விரு கட்சிகளுக்கும் சேர்ந்து 
அன்று 53 இடங்கள் இருந்தன. இந்த 53 என்பது ஒரு 
சாதாரண எண்ணிக்கை அல்ல. இது உண்மையிலேயே 
மகத்தான எண்ணிக்கை ஆகும். இவ்விரு கட்சிகளும்
அப்போது காங்கிரசை வலியச் சென்று ஆதரித்ததால்,
காங்கிரசால் எளிதாக ஆட்சி அமைக்க முடிந்தது.  

பாஜகவின் மதவாதத்தை எதிர்க்கவே நாங்கள் 
காங்கிரசை ஆதரித்தோம் என்ற இழிந்த பொய்யை 
போலிக் கம்யூனிஸ்டுகள் அன்று சொல்லி மக்களை 
ஏமாற்றி வந்தனர். இவர்களின் கூட்டாளியான  
திமுகவைப் பாருங்கள். முந்திய ஆட்சியான
பாஜகவின் ஆட்சியில் (1999-2004) பங்கெடுத்து 
அமைச்சர் பதவிகளைப் பெற்றது திமுக. அதாவது 
மதவாத பாஜகவின் ஆட்சியில், அதன் பிரிக்க முடியாத 
பங்காளியாக திமுக இருந்தது. 2004 தேர்தலுக்கு நான்கு 
மாதங்கள் முன்னதாக, டிசம்பர் 2003ல் வாஜ்பாய் 
அமைச்சரவையில் இருந்து விலகியது திமுக. இஸ்லாமிய 
சிறுபான்மை வாக்குவங்கியை இழந்து விடக்கூடாது 
என்ற எச்சரிக்கை உணர்வின் காரணமாகவே 
வாஜ்பாய் அமைச்சரவையில் இருந்து விலகியது திமுக.

திமுகவின் இழிந்த சந்தர்ப்பவாதத்தைப் பாருங்கள்.
1999-2004ல் மதவாத பாஜகவின் ஆட்சிக்கு ஆதரவு.  
2004ல் மதவாதத்தை "எதிர்க்கும்" காங்கிரசுக்கு 
ஆதரவு; மன்மோகன்சிங்கின் அமைச்சரவையில் 
பங்கேற்பு! கருணாநிதி எவ்வளவு பெரிய அத்வைதி 
பாருங்கள்! மதவாத வாஜ்பாய், மதவாத எதிர்ப்பு 
மன்மோகன் இருவருக்கும் ஆதரவளித்து,இருவரிடமும் 
அமைச்சர் பதவிகளைப் பெற்று அனுபவித்து
ஆதிசங்கரரை மிஞ்சிய அத்வைதியாக மாறினார் 
கருணாநிதி!   .    

மார்க்சிஸ்டுகளைப் பாருங்கள். சோம்நாத் சட்டர்ஜி 
என்ற பிராமண சிரேஷ்டரை 2004ல் அமைக்கப்பட்ட 
மக்களவையின் சபாநாயகராக ஆக்கி காங்கிரசின் 
பல்லக்குத் தூக்கிகள் ஆனார்கள். மார்க்சிஸ்ட் கட்சிக்கு
அதிகாரம் மிக்க ஒரு உயர்ந்த பதவி கிடைக்கும்போது 
அதை ஒரு பிராமணருக்குத்தான் தந்தது அக்கட்சி.
ஒரு தலித்துக்கு, தலித் வேண்டாம், ஒரு OBCக்காவது 
அந்த சபாநாயகர் பதவியை வழங்க மனம் வந்ததா 
மார்க்சிஸ்ட் கட்சிக்கு? No never.

காங்கிரஸ் கட்சிக்கு ஒரு வாய்ப்பு வந்தது. இந்தியாவின் 
ஜனாதிபதியாக ஒரு தலித்தைக் கொண்டு வரும் வாய்ப்பு 
அது. அந்த வாய்ப்பில் காங்கிரஸானது கே ஆர் நாராயணன் 
என்ற தலித்தை, அதுவும் ஒரு தென்னிந்தியரை         
இந்திய ஜனாதிபதியாகக் கொண்டு வந்தது. 

பாஜக கட்சிக்கு இந்திய ஜனாதிபதியை உண்டாக்கும் 
வாய்ப்பு இருமுறை கிடைத்தது. அப்படிக் கிடைத்தபோது, 
முதல் முறையில் அப்துல் கலாம் என்ற முஸ்லிமையும் 
இரண்டாம் முறையில் ராம்நாத் கோவிந்த் என்ற 
தலித்தையும்  ஜனாதிபதி ஆக்கியது.

இந்திய அரசியலில் இதுவரை தலித்துகளுக்கு 
அதிகாரம்  அளித்த கட்சிகள் இரண்டே இரண்டுதான். 
ஒன்று, காங்கிரஸ்; இன்னொன்று பாஜக! மற்றக்  கட்சிகள் 
அனைத்தும் தங்களின் வாரிசுகளுக்கும் சுயசாதி 
ஆட்களுக்கும் பதவியைப் பெற்றுத் தரும் கட்சிகளே.
இவற்றில் பல வாரிசு அரசியல் கட்சிகள் ஆகும்.
அதாவது நவீன வருணாசிரமக் கட்சிகள் ஆகும். 
 
தலித்துகளுக்கு நாட்டின் அதியுயர் பதவியை வழங்கிய,
தலித்துகளுக்கு அதிகாரம் அளித்த காங்கிரஸ் மற்றும்
பாஜக கட்சிகளை நான் மனசாரப் பாராட்டுகிறேன்.
இரு கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு தலித்துகளுக்கு 
அதிகாரம் அளிப்பதில் தங்களின் ஆட்சிக்காலத்தில் 
செயல்பட்டு வந்தவை என்பதை எவராலும் மறுக்க இயலாது.

இதற்காக சோனியா காந்தியின் கால்களிலும் மோடியின் 
கால்களிலும் விழுந்து வணங்குகிறேன். இன்றைய 
நிலவரம் என்னவெனில், தலித்துகளுக்கு அதிகாரம் 
அளிப்பதில் பாஜக வேறெந்தக் கட்சியையும் விட
முன்னணியில் இருக்கிறது. தமிழ்நாட்டில் திரு எல் முருகன் 
என்னும் அருந்ததியர் எப்படி மத்தியப் பிரதேசத்திற்குக் 
கொண்டு செல்லப்பட்டு எம்பியாகவும் அமைச்சராகவும் 
ஆக்கப் பட்டார் என்பதைச் சிந்திக்க வேண்டும்..     

இதையெல்லாம் சிந்தித்ததால்தான் இளையராஜா மோடியை 
டாக்டர் அம்பேத்காருடன் ஒப்பிட்டார். தலித்துகளுக்கு 
அதிகாரம் அளித்தல் என்பதுதான் டாக்டர் அம்பேத்காரின்
தலையாய லட்ச்சியம். அதை இன்று வீரியமாகவும் 
தீவிரமாகவும் நடைமுறைப் படுத்தி வருபவர் 
மோடிதானே தவிர வேறு எவரும் அல்லர். இந்த 
உண்மையைப் பொது வெளியில் சொன்ன இளையராஜா 
மீது பெரியாரியக்  கயவர்கள் மிருக வெறித் தாக்குதலை 
நடத்தி வருகின்றனர். இளையராஜா மீதான தாக்குதல் 
என்பது தீண்டாமைக் கொடுமை! வன்கொடுமை!
மார்க்சிஸ்ட் கட்சியின் தீண்டாமை ஒழிப்பு முன்னணியானது 
தோழர் வசுமித்ர மீது வன்கொடுமைச் சட்டத்தைக்கூறி 
பொய்ப்புகார் கொடுத்தது. அது ஈ வி கே எஸ் இளங்கோவன் 
மீது  புகார் கொடுக்குமா?    

ஆனால் மார்க்சிட் கட்சி அப்படியல்ல. அது சாதிவெறி 
பிடித்த பாப்பாரத் தாயோளிகளின் கட்சி. நாம சூத்திரர்கள் 
என்னும் மேற்குவங்க தலித்துகள் முப்பதாயிரம் (30,000)
பேரைக் கொன்றவன் ஜோதிபாசு. சிங்கூரில் டாடாவுக்காக 
ஏழை எளிய மக்களை ஒடுக்கி, பெண்களைக் 
கற்பழித்தவன் புத்ததேவ் பட்டாச்சார்யா!

நக்சல்பாரிக் கட்சிகளிலும் பார்ப்பன ஆதிக்கம்தான்.
சவுண்டிப் பாப்பான் மருதையன், சவுண்டிப் பாப்பான் 
வீராச்சாமி இந்த இரண்டு பேரும் மகஇக என்று 
அறியப்படும் CPI ML SOC என்னும் கட்சியை
அழித்தவர்கள்; அழித்துக் கொண்டிருப்பவர்கள்.
    
CPI சாதியவாதிகளுக்கு மத்திய அமைச்சர்களை 
நியமிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 1996-98ல் 
முதலில் தேவ கெளடா அமைச்சரவையிலும்,
பின்னர் ஐ கே குஜ்ரால் அமைச்சரவையிலும்   
இரண்டு பேர் CPI அமைச்சர்களாக இருந்தனர். 
ஒருவர் இந்திரஜித் குப்தா என்னும் பனியா. 
இன்னொருவர் சதுரானந்த் மிஸ்ரா என்னும் 
பார்ப்பனர். தலித்துக்கோ OBCக்கோ CPI, CPM
கட்சிகளில் அரசு அதிகாரம் மிக்க உயர் பதவிகள் 
ஒருபோதும் வழங்கப்படாது.
  *************************************************  

ஞாயிறு, 24 ஏப்ரல், 2022

மீத்தேன் திட்ட எதிர்ப்புக்குழுவுக்கு ஒரு கேள்வி!
மீத்தன் திட்ட எதிர்ப்புக்கான அறிவியல் 
காரணங்கள் உள்ளனவா?
----------------------------------------------------------
ONGC நிறுவனத்தின் SC/ST ஊழியர்கள் 
நலச்சங்கத்தின் சார்பில், அண்மையில் 
பாண்டிச்சேரி மாநிலம் நிரவியில் நலத்திட்ட 
உதவி வழங்கும் விழா நடைபெற்றது.

ரூ 42 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை    
ONGC நிர்வாகம் வழங்கியது. தொல் திருமாவளவன்
அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று
நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

CSR எனப்படும் Corporate Social Responsibilityயை 
வெளிப்படுத்தும் விதமாக ONGC நிர்வாகம் 
நலத்திட்ட உதவிகளை வழங்கியது.

இவ்விழாவில் பேசிய திருமாவளவன் 
பொதுத்துறை நிறுவனமான ONGCயின் 
பாத்திரத்தைச் சிறப்பித்தார். ONGCயின் 
செயல்பாடுகளுக்கு ஒத்துழைக்கப் போவதாக 
அறிவித்தார்.

மீத்தேன் திட்ட எதிர்ப்பாளர்கள் ONGCக்கு 
எதிராக எந்தவொரு அறிவியல் காரணத்தையும் 
முன்வைக்கவில்லை என்று திருமாவளவன்
சாடினார். மீத்தேன் திட்ட எதிர்ப்பு என்பது 
அறிவியலற்றது (unscientific) என்றார் திருமாவளவன்.

திருமாவளவன் அவர்கள் கூறியது அனைத்தும் 
சரியே என்று நியூட்டன் அறிவியல் மன்றம் 
ஏற்கிறது.  
 
மீத்தேன் திட்ட எதிர்ப்புக்குழு என்ற பெயரில் 
ஒரு குழு பேராசிரியர் திரு த ஜெயராமன் அவர்கள்
தலைமையில் இயங்கி வருகிறது. திரு ஜெயராமன் 
அவர்கள் அறிவியல் பேராசிரியர் அல்லர்; அறிவியல் 
கற்றவரும்  அல்லர். எனினும் அதில் குறையொன்றும்
இல்லை. எப்போது? தமது குழுவில் ஒன்றிரண்டு 
அறிவியல் அறிஞர்களை ஆலோசகர்களாகச் 
சேர்த்திருந்தால், குறையில்லாத குழுவாக தமது 
குழுவை ஜெயராமன் அவர்கள் அமைத்திருக்க 
முடியும்.

ஆனால் பேராசிரியர் ஜெயராமன் குழுவின் அறிவியல் 
ஆலோசகர்கள் என்று எவர் ஒருவரும் இதுவரை 
பொதுவெளியில் அறிவிக்கப் படவில்லை. இதை 
நான் இரண்டு மூலர் ஆண்டுகளுக்கு முன்பே 
பொதுவெளியில் கேட்டேன். ஆனால் பதில் இல்லை.

ஆக, ஜெயராமன் அவர்கள் தலைமையில் இயங்கும் 
மீத்தேன்  திட்ட எதிர்ப்புக்குழு என்பது அறிவியலற்ற 
குழு என்ற உண்மை அனைவருக்கும் தெரிய வருகிறது.

1995ல் நரசிம்மராவ் காலந்தொட்டு இந்தியாவில் 
LPG கொள்கைகள் செயலாக்கப்பட்டு வருகின்றன.
மன்மோகன் சிங்கும் ப சிதம்பரமும் LPGயின் 
ஜாம்பவான்கள்! பொதுத்துறைக்கு ஒதுக்கப்பட்ட 
அத்தனை துறைகளிலும் எண்ணெய் எடுத்தல் 
துறப்பணப் பணிகள் உட்பட அனைத்திலும் 
ரிலையன்சை அனுமதித்தார் மன்மோகன்சிங்.

இந்தியா முழுவதிலும் உள்ள பொதுத்துறை 
நிறுவனங்களுக்கு எதிராக, குறிப்பாக BSNL,
BHEL, Coal India, ONGC போன்ற பொதுத்துறை 
நிறுவனங்களுக்கு எதிராக, அம்பானி, சுனில் மிட்டல் 
போன்ற கார்பொரேட் திமிங்கலங்கள் காசு 
கொடுத்து பொய்ப்பிரச்சாரங்களைத் திட்டமிட்டு 
நடத்தி வருகின்றன.

போலி முற்போக்கு மற்றும் போலி இடதுசாரி 
வேடம் தரித்த பலரும் அம்பானி, சுனில் மிட்டல்களின்
கைக்கூலிகளாக இருந்து கொண்டு, அவர்கள் 
தரும் எச்சில் காசில் வயிறு வளர்த்துக் கொண்டு 
பொதுத்துறை  நிறுவனங்களுக்கு எதிராக 
பொய்ப்பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இது 
உண்மையை அறிய விடாமல் மக்களைத் தடுத்து 
அவர்களை பொய்மையில் மூழ்கடிக்கிறது.

மக்களுக்கு உண்மை சென்று சேர வேண்டும் என்ற 
நோக்கில்,  மீத்தேன் திட்ட எதிர்ப்புக்குழுவின் தலைவர் 
திரு பேராசிரியர் த ஜெயராமன் அவர்களிடம் 
நமது வேண்டுகோளை முன்வைக்கிறோம்.
அருள்கூர்ந்து மீத்தேன் எதிர்ப்புக்கான
அறிவியல் காரணங்கள் இருந்தால்,
அவற்றை மதிப்புக்குரிய திருமாவளவன் எம்பி
அவர்களிடம் கூறுங்கள். அப்படியே அவற்றைப் 
பொதுவெளியில் வையுங்கள். இந்த வேண்டுகோளை 
ஏற்பீர்கள் என்று நம்ப விரும்புகிறோம்.

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே,
சொந்த நாட்டிலே!

தோழமையுள்ள 
பி இளங்கோ சுப்பிரமணியன் 
தலைவர், நியூட்டன் அறிவியல் மன்றம்,
சென்னை.
******************************************* 

             

    
            

வெள்ளி, 22 ஏப்ரல், 2022

விண்ணில் இயங்கும் நிலையம்!
--------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------
புறநகர்ப் பகுதிகளில் குடியிருப்புகள் முளைத்து 
மக்கள் அங்கு குடியேறியதுமே, எங்கள் ஊருக்கு 
காவல் நிலையம் வேண்டும், அஞ்சல் நிலையம் 
வேண்டும் என்று கோரிக்கை வைப்பார்கள்.

அது போலவே அண்ட வெளியில் ஆகாயத்தில் ஒரு 
விண்வெளி நிலையம் (space station) வேண்டும் என்று 
விண்ணியற்பியலாளர்கள் கோரினார்கள். 
அக்கோரிக்கையை ஏற்று விண்வெளியில் ஒரு 
நிலையம் ஏற்படுத்தப் பட்டு ஆண்டுகள் பலவாக அது 
வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. 

விண்ணில் இயங்கும் நிலையம்!
--------------------------------------------------
அனைத்துலக விண்வெளி நிலையம் (International Space Station)
இன்றைக்கு 23 ஆண்டுகளுக்கு முன்பு 20 நவம்பர் 1998ல்
விண்ணில் செலுத்தப்பட்டது. இது தாழ்நிலை புவிச்சுற்றுப் 
பாதையில் ((LEO = Low Earth Orbit) பூமியைச் சுற்றி 
வரும் ஒரு செயற்கைக்கோள் ஆகும்.

ஐஎஸ்எஸ் என வழங்கப்படும் இச்செயற்கைக்கோள் 
அளவில் பெரியது. நிறையும் அதிகம். இதற்கு முன்னோடிகளான 
அமெரிக்காவின் ஸ்கைலேப் (1973) பற்றியும் சோவியத் 
ஒன்றியத்தின் (இன்றைய ரஷ்யா) மீர் பற்றியும் நாம் 
அறிந்திருப்போம். இவ்விரண்டையும் விட ஐஎஸ்எஸ் பன்மடங்கு 
பெரியது. எவ்வளவு பெரியது? பார்ப்போம்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் அளவில் மிகச்சிறிய 
செயற்கைக்கோளைப் பற்றி அறிவோம். தமிழ்நாட்டில்
கரூர் பள்ளப்பட்டி என்னும் ஊரில் உள்ள மேனிலைப்பள்ளி 
மாணவன் ஒருவன் 1.26 கிலோகிராம் நிறை மட்டுமே உள்ள 
மிகச்சிறிய ஒரு செயற்கைக்கோளை உருவாக்கியதையும், 
அதை இஸ்ரோ 24 ஜனவரி 2019ல் விண்ணில் செலுத்தியதையும் 
நாம் அறிவோம்.  வெறும் ஒன்றேகால் கிலோ நிறையுள்ள 
அச்செயற்கைக்கோள் டாக்டர் அப்துல் கலாமின் பெயரில் 
கலாம்சாட் (KalamSat V-2) என்று பெயரிடப்பட்டு இருந்தது.   . 

இதற்கு மாறாக, ஐஎஸ்எஸ் மிகப் பெரியது. ஒரு முனையில் 
இருந்து மறுமுனை வரை அளந்தால் (end to end) ஐஎஸ்எஸ் 
108 மீட்டர் நீளம் இருக்கும்.  அமெரிக்காவின் கால்பந்து 
மைதானத்தின் ஒட்டு மொத்த அளவுக்கு (120 மீ x 80 மீ) 
சமமாக இது இருக்கும். அதாவது இதன் பரப்பளவு 
ஏறத்தாழ 10,000 சதுர மீட்டர் என்று கொள்ளலாம். அப்படியானால் 
எவ்வளவு பெரியது என்று சிந்தித்துப் புரிந்து கொள்ளும்போது 
பிரமிப்பு கண்ணைக் கட்டுகிறது.ஐஎஸ்எஸ் என்பது பல்வேறு 
அலகுகளைக் (modules) கொண்டது. இதன் ஒட்டு மொத்த 
நிறை அவ்வப்போது மாறக்கூடியது. விண்ணில் 
செலுத்தியபோது இதன் நிறை (launch mass) 4,44,615 கிகி ஆக 
இருந்தது.

சுற்றுப்பாதையும் வேகமும்!
------------------------------------------
மேற்கில் இருந்து கிழக்காகச் சுற்றும் ஒரு சுற்றுப்பாதையில் 
ஐஎஸ்எஸ் பூமியைச் சுற்றி வருகிறது. சுற்றுதலின் வேகம்
(orbital velocity of ISS) வினாடிக்கு 7.6 கிமீ (7.6 kmps). இந்த இடத்தில் 
சந்திரன் பூமியை என்ன வேகத்தில் சுற்றி வருகிறது என்பதை 
ஒப்பிட்டுப் பார்த்தல் நல்லது. பூமியைச் சுற்றும் 
சந்திரனின் வேகம் வினாடிக்கு 1.022 கிமீ (1.022 kmps).

கடவுள் படைத்த சந்திரனை விட ஏழரை மடங்கு அதிக 
வேகத்தில் மனிதன் படைத்த ஐஎஸ்எஸ் பூமியைச் சுற்றி 
வருகிறது. எனவே பூமியை முழுசாக ஒரு சுற்றுச் சுற்றி 
வருவதற்கு (orbital period) ஐஎஸ்எஸ்சுக்கு 90 முதல் 93 நிமிடங்கள் 
ஆகும். எவ்வளவு உயரத்தில் (altitude) ஐஎஸ்எஸ் இருக்கிறது என்பதைப் பொறுத்தே நேரம் துல்லியமாக அமையும்.
ஐஎஸ்எஸ்சின் சுற்றுப்பாதைச் சாய்வு (orbital inclination)
51.6 டிகிரி ஆகும்.

தோராயமாக ஒன்றரை மணி நேரத்தில் ஐஎஸ்எஸ் பூமியை 
ஒரு சுற்றுச் சுற்றி முடிக்கிறது என்பதால் பூமியை 
ஒரு நாளைக்கு 16 சுற்றுக்கள் சுற்றி முடித்து விடுகிறது 
ஐஎஸ்எஸ். 

சந்திரனை விட வேகமாக ஐஎஸ்எஸ் பூமியை சுற்றக் 
காரணம் என்ன? அதற்கான தேவை என்ன? தாழ்நிலை 
புவிச்சுற்றுப்பாதையில் (LEO = Low Earth Orbit) ஐஎஸ்எஸ்
பூமியைச் சுற்றி வருகிறது என்று முன்னரே பார்த்தோம்.
தாழ்நிலை புவிச் சுற்றுப்பாதை என்பது பொதுவாக 200கிமீ 
முதல் 2000 கிமீ வரையிலான உயரத்தைக் கொண்டது   

நமது ஐஎஸ்எஸ் தோராயமாக 400 கிமீ  உயரத்திற்கு மேல் 
இருந்து கொண்டு (apogee 415 km and perigee 421 km) பூமியைச்
சுற்றி வருகிறது. 400 கிமீ உயரத்தில் பூமியின் ஈர்ப்பு 
விசை அதிகமாக இருக்கும். எனவே அதைச் சமாளிக்கும் 
விதத்தில் அதிக வேகத்துடன் ஐஎஸ்எஸ் சுற்ற வேண்டும்.
இல்லையேல் பூமியின் ஈர்ப்பு விசையினால் ஐஎஸ்எஸ்
பூமியை நோக்கி ஈர்க்கப்பட்டு அழிந்து விடும்  
எனவேதான் ஐஎஸ்எஸ் வினாடிக்கு 7.6 கிமீ வேகத்தில் 
சுற்றுகிறது. 

சந்திரன் பூமியைச் சுற்றுவது போல் வினாடிக்கு 
1 கிமீ வேகத்தில் ஐஎஸ்எஸ் பூமியைச் சுற்றி வந்தால் 
என்ன ஆகும்? பூமியைச் சுற்ற ஆரம்பித்த முதல் நாளே 
அதன் முடிவு நாளாகி இருக்கும். ஆனால் அதிக வேகத்தில் 
சுற்றுவதால் ஐஎஸ்எஸ் இன்று 23 ஆண்டுகளை விண்வெளியில்
வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறது.

அப்படியானால் பூமியைச் சுற்றும் எந்த ஒரு 
செயற்கைக்கோளும் அதிக வேகத்தில்தான் சுற்றியாக 
வேண்டும் என்ற கட்டாயம் உள்ளதா? அப்படி எதுவும் 
இல்லை. தாழ்நிலை சுற்றுப்பாதை போல உயர்நிலை 
சுற்றுப்பாதையும் உள்ளது. இது 36,000 கிமீ உயரத்தில் உள்ள 
சுற்றுப்பாதை ஆகும். புவி ஒத்திசைவு செயற்கைக்கோள்கள் 
(Geosynchronous satellites) எல்லாம் 36,000 கிமீ உயரத்தில்
இருந்துதான் பூமியைச் சுற்றி வருகின்றன. 

இவ்வளவு உயரத்தில் இருந்து கொண்டு சுற்றும்போது 
மெதுவாகச் சுற்றினால் போதும். எனவே இங்கெல்லாம் 
வினாடிக்கு 3.14 கிமீ என்ற வேகத்தில் சுற்றினாலே 
போதும், பூமியின் ஈர்ப்பு விசையைச் சமாளித்து விடலாம்.
ஐஎஸ்எஸ் போல வினாடிக்கு 7.6 கிமீ வேகத்தில் சுற்ற 
வேண்டிய தேவை இல்லை. சுற்றுப்பாதையின் உயரத்திற்கும் 
அதன் வேகத்திற்கும் உள்ள தொடர்பு இதுதான்: உயரம் 
கூடக்கூட வேகம் குறையும்; அது போல உயரம்  குறையக் 
குறைய வேகம் அதிகரிக்கும். 

ஐஎஸ்எஸ்சும் அதன் நோக்கங்களும்!
----------------------------------------------------------    
பல நாடுகளின் ஒத்துழைப்பில் ஐஎஸ்எஸ் உருவாக்கப்பட்டு 
செயல்பட்டு வருகிறது. பின்வரும் ஐந்து விண்வெளி அமைப்புகள் 
ஐஎஸ்எஸ் மீது உரிமை படைத்தவை. அவையே அதை உருவாக்கின:
அ) நாசா (அமெரிக்கா) 
ஆ) ராஸ்காஸ்மாஸ் (ரஷ்யா))
இ) ஜாக்சா (ஜப்பான்)
ஈ) ESA (ஐரோப்பா)
உ) CSA (கனடா)  

நீண்ட கால அளவில் விண்வெளியை ஆராய்வதற்கும்  
அதன் மூலமாக பூமியில் வாழும் மக்களுக்கு நன்மை 
செய்வதற்கும் ஐஎஸ்எஸ் பயன்பட வேண்டும் என்ற 
நோக்கத்துடன் மேற்கூறிய ஐந்து அமைப்புகளும் 
ஐஎஸ்எஸ்சை உருவாக்கின.

தரத்தில் உயர்ந்ததும் நுட்பமானதுமான ஆறு ஆய்வுக்கூடங்கள் 
ஐஎஸ்எஸ்சில் உள்ளன. விண்ணில் இயங்கும் மகத்தான 
ஆராய்ச்சிசாலை அது. நுண்ணிய ஈர்ப்பு மற்றும் உயர் 
ஈர்ப்பு (micro gravity and hyper gravity) குறித்தும், புரதப் படிகங்களை 
விண்வெளியில் வளர்ப்பது குறித்தும் உருப்படியான 
ஆராய்ச்சிகள் ஐஎஸ்எஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு 
வருகின்றன. இவை மனித உடல் இயங்குவது பற்றிய 
முன்னிலும் கூர்மையான அறிவைப் பெற உதவும்.

மேலும் எடையின்மை (weightlessness) குறித்த புரிதலை 
விண்வெளி வீரர்கள் பெறுவதற்கும், எதிர்காலத்தில் 
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்குப் பயிற்சி 
அளிப்பதற்கும் ஐஎஸ்எஸ் ஒரு மாபெரும் பயிற்சி 
நிலையமாகச் செயல்படும்.

விண்வெளி நிலையத்தில் முட்டைக்கோஸ் முதலிய 
பயிர்கள் வளர்க்கப்பட்டன. அவை நன்கு வளர்ந்தன.
எலிகள் கருத்தரித்தன. இவ்வாறு பல்வேறு பரிசோதனைகள் 
ஐஎஸ்எஸ் நிலையத்தினுள் மேற்கொள்ளப் பட்டன.

தூய்மையான குடிநீரைத் தயாரிக்கும் குடிநீர் தொழில்நுட்பம்  
(water processing technology) உருவாக்குவது முதல் சிறந்த 
தடுப்பூசிகளைத் தயாரிக்கும் தொழில்நுட்பம் உருவாக்குவது 
வரை ஐஎஸ்எஸ் நிலையத்தில் பரிசோதனைகளும் 
ஆய்வுகளும் இடையறாது மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

இவ்வாறு மண் பயனுறவும் மானுடம் பயனுறவும் 
ஐஎஸ்எஸ் நிலையம் பயன்பட்டு வருகிறது.

சுனிதா வில்லியம்ஸ்!
---------------------------------
குஜராத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி அமெரிக்கப் 
பெண் சுனிதா வில்லியம்சை (பிறப்பு: செப்டம்பர் 1965) 
இந்திய மக்கள் நன்கறிவார்கள். இவர் இன்றும் நாசாவில் 
பணியாற்றும் ஒரு விண்வெளி வீராங்கனை. இவர் 
விண்வெளியில் இயங்கும் ஐஎஸ்எஸ் நிலையத்தில் தங்கிப்
பணியாற்றினார். பல்வேறு விண்பயணங்களில் (expeditions) 
2006, 2007, 2012 ஆண்டுகளில் பங்கு பெற்ற இவர் மொத்தத்தில்  
321 நாட்கள் (all expeditions combined)  விண்வெளியில் தங்கி உள்ளார்.   
 
சுனிதா வில்லியம்ஸ் மட்டுமல்ல அநேகப் பெண்கள் 
விண்வெளியில் ஆண்டுக் கணக்கில் தங்கிச் சாதனை 
புரிந்துள்ளனர். மேற்கொண்ட பல்வேறு விண்பயணங்களைச்  
சேர்த்துக் கணக்கிட்டால், 2002, 207, 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் 
ஒட்டு மொத்தத்தில் 665 நாட்கள் விண்வெளியில் தங்கிச் சாதனை புரிந்துள்ளார் அமெரிக்க விண்வெளி வீராங்கனை நாசாவின் 
பெக்கி விட்சன் (Peggy Whitson பிறப்பு: 1960).

சுனிதா வில்லியம்ஸ், பெக்கி விட்சன் ஆகிய இருவருடன் 
ஐஎஸ்எஸ்சில்  ஆண்டுக் கணக்கில் தங்கிய பெண்களின்
பட்டியல் முடிந்துவிடவில்லை. பட்டியல் நீண்டுகொண்டே 
போகிறது. இடமின்மையால் எழுத இயலவில்லை.

விண்வெளி வீரர்களின் உணவு!
-------------------------------------------------
விண்வெளியில் பறந்த முதல் இந்தியர் பஞ்சாப்பைச் சேர்ந்த 
ராகேஷ் சர்மா (Rakesh Sharma பிறப்பு: 1949). இவர் இந்திய 
விமானப்படை விமானி. சோவியத் ஒன்றியத்தின் (இன்றைய 
ரஷ்யா) சோயுஸ் டி-11 (Soyuz T-11) விண்கலத்தில் 1984ல் 
விண்வெளியில் பறந்தார் ராகேஷ் சர்மா. மொத்தம் 7 நாட்கள்,
21 மணி, 4 நிமிடம் விண்வெளியில் இருந்தார் ராகேஷ் சர்மா.

விண்வெளி வீரர்கள் சராசரி மனிதர்களைப்போல உணவு 
உட்கொள்ளுவது இல்லை. உண்ண வேண்டிய உணவை
மாத்திரைகளாகவும் பேஸ்ட்டாகவும் ஆக்கித்தான் 
விண்வெளி வீரர்கள் உண்பார்கள். இப்படி ஒரு நம்பிக்கை 
மக்களிடம் நிலவுகிறது. இதில் உண்மை இல்லை. விண்வெளிப் 
பயணத்தின் தொடக்க காலத்தில் இருந்த பல்வேறு கடினமான 
நடைமுறைகள் காலம் செல்லச் செல்ல எவ்வளவோ 
மிருதுவாக மாறிவிட்டன.

எப்போது ஸ்பூட்னிக் விண்கலத்தை சோவியத் ஒன்றியம் 
விண்ணில் செலுத்தியதோ அன்று முதலே விண்வெளி யுகம் 
(space era) உலகில் தொடங்கி விட்டது. ஸ்பூட்னிக்-1 
செலுத்தப்பட்ட அக்டோபர் 4, 1957ல் இருந்து தொடங்கிய 
விண்வெளி யுகத்தில் இன்று நாம் 64 ஆண்டுகளைக் 
கடந்து விட்டோம். இந்த 64 ஆண்டுகளின் அனுபவச் 
செழுமை விண்வெளி வீரர்களின் சிரமங்களை 
வெகுவாகக் குறைத்துள்ளது. 
   
ராகேஷ் சர்மாவுக்கு இந்திய உணவுதான் விண்வெளிப் 
பயணத்தின்போது வழங்கப்பட்டது. சுனிதா வில்லியம்ஸ் 
ஐஎஸ்எஸ் நிலையத்திற்குச் சென்றபோது தமக்குப் பிடித்த 
குஜராத்தி இனிப்புகளையம் சமூசாக்களையும்
கொண்டு சென்றார். பெருமளவு சராசரி மனிதர்களின்  
உணவுகளையே விண்வெளி வீரர்கள் உண்கிறார்கள்.
ஐஎஸ்எஸ்சில் தங்கியுள்ள விண்வெளி வீரர்கள் 
முதன் முதலாக மே 2001ல் பிஸ்ஸா (pizza) உண்டதாக 
நாசா செய்திக் குறிப்பொன்று தெரிவிக்கிறது.    

வெறுங்கண்ணால் பார்க்கலாம்!
--------------------------------------------------
மிகவும் தாழ்ந்த உயரத்தில் பறப்பதால், ஐஎஸ்எஸ்சை 
வெறுங்கண்ணால் பார்க்க இயலும். ஒளிமாசு (light pollution)
இல்லாத இடமாகத் தேர்ந்து கொள்ள வேண்டும். சென்னை 
போன்ற நகரங்களில் இருந்து கொண்டு எதையும் 
பார்ப்பது கடினம். காரணம் எங்கு நோக்கினும் 
வெளிச்சம்! சென்னைவாசிகள் அருகிலுள்ள  
மின்விளக்குகளும் ஒளிமாசும் குறைவாக உள்ள 
கிராமங்களுக்குச் சென்று, அங்கிருந்து கொண்டு 
 ஐஎஸ்எஸ்சைப் பார்க்கலாம். பார்ப்பதற்கு உகந்த நேரம் 
அதிகாலை விடிவதற்குச் சற்று முன் அல்லது அந்தி மாலை 
(dawn or dusk) என்கிறது நாசா. 

உங்கள் இருப்பிடத்தில் எப்போதெல்லாம் ஐஎஸ்எஸ்ஐப்
பார்க்க முடியும் என்று குறிப்பிட்டு வரைபடங்களை 
வெளியிட்டு வருகிறது நாசா. இதற்காக ஒரு 
இணையதளத்தையும் நாசா நடத்தி வருகிறது. Spot the station 
என்னும் அந்த இணையதளம் மூலம், உங்களின் 
வசிப்பிடத்தில் ஐஎஸ்எஸ் எப்போதெல்லாம் தெரியும் 
என்று செய்தி அனுப்புகிறது நாசா. நாசா மட்டுமின்றி,
இன்று பல்வேறு இணையதளங்களில் ஐஎஸ்எஸ்சைப் 
பார்ப்பதற்குரிய குறிப்புகள் வழங்கப் படுகின்றன.
வாசகர்கள் குறிப்பாக மாணவர்கள் ஐஎஸ்எஸ்சை 
வெறுங்கண்ணால் பார்த்துத் தெளிவுறுவது சிறப்பு.
*******************************************************
  
    
        
   


    

      
 

  
 

புதன், 20 ஏப்ரல், 2022

 ஆப்பிள்களும் ஆரஞ்சுகளும்!

அற்புதமான கணக்கு!
-----------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------
ஒரு கூடையில் 5 ஆப்பிள்களும் 7 ஆரஞ்சுகளும் உள்ளன.
இதில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக மொத்தத்தில் இரண்டு பழங்கள் எடுக்கப் படுகின்றன. எடுக்கப்பட்ட பழங்களில் ஒன்று ஆப்பிளாகவும் மற்றொன்று ஆரஞ்சாகவும் இருப்பதற்கான வாய்ப்பு என்ன?
A basket contains 5 apples and 7 oranges. Two fruits are taken out from the basket one after the other. Find the probability that the fruits so taken out are an apple and an orange.
நிகழ்தகவில் இதை விட எளிமையான கணக்கு இல்லை.
--------------------------------------------------------------
May be an image of fruit and text
வேல்முருகன் சுப்பிரமணியன், Pattu Raj and 11 others
1 Comment
1 Share
Share
On

 திமுகவினரின் மூடத்தனத்தின் உச்சம்!

--------------------------------------------------------------
தஞ்சாவூரில் குந்தவை நாச்சியார் அரசு
கலைக்கல்லூரி உள்ளது. இங்குதான்
வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
வாக்குப் பதிவு எந்திரங்கள் இங்கு
ஒரு அறையில் பாதுகாப்பாக வைக்கப்
பட்டுள்ளன.
பக்கத்தில் உள்ள பிளாக்கில் ஏர்டெல்
டிஷ் ஆன்டெனா உள்ளது. இதை உடனடியாக
அகற்றச்சொல்லி திமுக மூடர்கள் பெரும்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேறு வழியின்றி போலீஸ் அதிகாரிகள் இந்த
ஆன்டெனாவைக் கழற்றிச் சென்றனர்.
புழுவினும் இழிந்த ஈனத்தனம் என்பது
இதுதான்! மூடத்தனத்தின் உச்சத்தை
திமுகவினர் தொட்டு விட்டனர்.
தெற்காசியாவின் மிகப்பெரிய மூடத்தனமான
இயக்கம் திராவிட இயக்கம் என்பது
மெய்ப்பட்டது. ஆன்டெனாவை வைத்துக்
கொண்டு மயிரைகூடப் பிடுங்க முடியாது
என்ற உண்மை இந்த திமுக கழிசடைகளின்
மரமண்டையில் ஏறுமா? ஏறாது.
இத்தகைய மூடர்கள் வாழும் சமுதாயத்தில்
நாமும் வாழ வேண்டி இருக்கிறது.
*********************************************
May be a Twitter screenshot of text that says 'Thehindu.com Dish antennas at a 15 TIRUCHIRAPALLI Dish antennas at a counting centre in Thanjavur removed SPECIAL CORRESPONDENT THANJAVUR, APRIL 19, 2021 21:21 IST UPDATED: APRIL 19, 2021 21:21 IST @airtel 1 airtel'
ரகுபதி, Mayakooththan Govindarajan and 151 others
13 Comments
65 Shares
Share
On