வியாழன், 14 ஏப்ரல், 2022

போலி இடதுசாரித் தற்குறிகளே!
டிஜிட்டல் இந்தியா பற்றி ஏதாவது தெரியுமாடா? 
-------------------------------------------------------------------
இந்தப் பதிவுடன் உள்ள படத்தைப் பாருங்கள்.
சேலத்துக்கு அருகில் புத்திர கவுண்டம் பாளையம் 
என்றுஒரு ஊர். இவ்வூரில் அண்மையில் 
மிகப்பெரிய ஒரு முருகன் கோவிலைக் கட்டி 
இருக்கிறார்கள்.

இந்தக் கோவில் வாசலில் ஒருவர் பாசி ஊசி 
விற்கிறார். தள்ளுவண்டியில் வைத்து விற்கிறார்.
PayTM, PhonePe, GooglePay மூலமாக டிஜிட்டல் 
முறையில் பணம் பெறுகிறார். 
(தகவல் ஆதாரம்: திரு பெரியசாமி தங்கவேல் அவர்கள்)
  
பாசியும் ஊசியும் விற்பவர் கணிப்பொறி 
இஞ்சீனியர் அல்லர்.ப்ளஸ் டூவில் கம்பியூட்டர் 
சயன்ஸ் படித்தவரும் அல்லர். 10ஆம் வகுப்பு 
வரை படித்தவர். அவ்வளவுதான். 

டிஜிட்டல் பணப்பட்டுவாடா என்பது இன்று இந்தியாவில் 
குப்பன் சுப்பன் ராமசாமி இசக்கிமுத்து துலுக்காணம்
என்று பாமர மக்காள் அனைவராலும் 
மேற்கொள்ளப் படுகிறது. 

உலகிலேயே டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகம் 
நடைபெறும் நாடாக இந்தியா உள்ளது. டிஜிட்டல் 
பரிவர்த்தனையில் 90 சதம் என்ற இலக்கை நோக்கி 
இந்தியா சென்று கொண்டிருக்கிறது. அதாவது 
இந்தியாவின் மொத்தப் பணப் பரிவர்த்தனையில்
90 சதவீதம் டிஜிட்டல் முறையின் மூலமாகவே 
நடைபெற உள்ளது.
  
இதற்குக் காரணம் UPI (Unified Payments Interface) எனப்படும் 
டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான முறை. இது இந்தியாவில் 
2016ல் கொண்டுவரப் பட்டது.

2016ல் இந்தியாவில் UPI கொண்டுவரப்பட்டபோது 
இந்தியாவின் நிதி அமைச்சராக இருந்தவர் யார்?
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தவர் யார்?
வாசகர்கள் இவ்விரு கேள்விகளுக்கும் பதில் சொல்ல 
வேண்டும்.

பணப்பரிவர்த்தனை செயலிகள் அனைத்தும் சரிவர 
வேலை செய்ய வேண்டுமெனில் அதற்கான 
BROADBAND CONNECTIVITY சிறப்பாக வேலை 
செய்ய வேண்டும். இந்தியாவின் BROADBAND 
CONNECTIVITY சிறப்பாக வேலை செய்வதை 
BSNL உறுதி செய்கிறது.

என்ன மயிறு டிஜிட்டல் இந்தியா என்று எந்தத் தற்குறிப்
பயலாவது உளறினால், அவன் மீது சாணியைக் 
கரைத்து ஊற்றி அடிக்க வேண்டும்.      
***********************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக