திங்கள், 30 செப்டம்பர், 2019

விடையும் விளக்கமும்
----------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்

------------------------------------------------------
விடை: கொடுக்கப்பட்ட விவரங்களை வைத்துக்கொண்டு
ஆடு மேய்ப்பவனின் வயதைக் கணக்கிட இயலாது.
இதுவே சரியான விடை.
விளக்கம்:
------------------
1) இந்தக் கணக்கை நியூட்டன் அறிவியல் மன்றம்
உருவாக்கவில்லை. இது உலகப் புகழ் பெற்ற ஒரு
கணக்கு.1990களில் இந்தக் கணக்கை உருவாக்கிய
பேராசிரியர், எட்டாம் வகுப்பில் பயிலும் பள்ளிச்
சிறுவர்களிடம் இக்கணக்கைக் கொடுத்தார்.
**
2) இந்தக் கணக்கிற்கு எண்களில் விடை கிடையாது.
அதாவது no numerical solution. என்றாலும் மாணவர்களில்
90 சதத்திற்கும் மேற்பட்டோர் எண்களில் விடை
எழுதி இருந்தனர். ஆடு மேய்ப்பவனின் வயதாக
25, 45, 60,90, 120 என்று பல்வேறு விடைகளை எழுதி
இருந்தனர்.
**
3) ஒரு கணக்கு என்றால், அதற்கு numerical answer
கண்டிப்பாக இருக்கும் என்ற சிந்தனை
மாணவர்களிடம் மேலோங்கி நிற்பதை கணக்கை
உருவாக்கிய பேராசிரியர் கண்டார். இது ஒரு
arithmetic சிந்தனை ஆகும். கால்குலஸ் போன்ற
உயர் கணிதம் பயின்ற மாணவர்களிடம் இக்கணக்கு
எடுபடாது.
**
4) மாணவர்களின் உளவியலை பரிசோதனை
செய்வதற்காக இந்தக் கணக்கு கொடுக்கப்பட்டது.
இது சமீபத்தில் செய்தியில் அடிபடக் காரணம்,
தற்போது இந்த 2017ஆம் ஆண்டிலும் இதே கணக்கு
ஒரு பள்ளிச் சிறுவர்களுக்கு கொடுக்கப்பட்டபோது,
முன்பு போலவே 90 சதத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள்
numerical answers எழுதி இருந்தனர்.
**
5) arithmetic சிந்தனை இளவயதுச் சிறுவர்களிடம்
வலுவாக வேரூன்றி இருப்பதை இம்முடிவுகள்
காட்டுகின்றன.
**
6) விடையளித்தோர் அனைவருக்கும் நன்றி.உலகப்புகழ் பெற்ற இந்தக் கணக்கை நமது
வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் நோக்கிலேயே
இக்கணக்கை இங்கு கொடுத்துள்ளோம்

ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

வருணம் சாதி ஆகியவற்றின் பிறப்பு, வளர்ச்சி,
வாழ்வு, நீடிப்பு, சரிவு, இறுதி ஆகிய எல்லாவற்றையும்
ஒரு சமூகவியல் ஆய்வின் மூலமே கண்டறிய
இயலும். இந்த ஆய்வில் கீதை என்ன சொல்கிறது
என்பதும் ஒரு கூறு; அவ்வளவே.
கீதையே அனைத்தும் அல்ல.

சமூகத்தின் உற்பத்திக் கருவிகள் கீதையின்
காலத்தில் எவ்வாறு இருந்தன? உற்பத்திமுறை
எவ்வாறு இருந்தது? உற்பத்தி உறவுகள் எப்படி
இருந்தன?  இந்தக் கேள்விகளுக்கு கீதை என்ன
விடை சொல்கிறது என்பது மட்டுமே ஆய்வு மதிப்பு
உடையது.

கீதையின் இலக்கியச் செறிவு, பாத்திரப் படைப்பு,
காவியக் கட்டமைப்பு ஆகியவற்றுக்குப் பெரிதாக
ஆய்வு மதிப்பு எதுவும் இல்லை.       
இந்த வெண்பாவை நினைவில் இருத்துக!
எட்டுத்தொகை நூற்களை எளிதில் அறியலாம்!
----------------------------------------------------------------------------
சற்று முன் நான் இயற்றிய வெண்பா!
---------------------------------------------------------
வளையணிந்த பெண்ணே தொகைஎட்டும் கேளாய்
திளைத்திடும் நற்றிணை ஐங்குறுநூ றும்அகம்
சீர்புறம் மன்னுபரி பாடல் குறுந்தொகை
சூழ்பதிற்றுப் பத்துகலி என்க.
-----------------------------------------------------------------
இந்த வெண்பாவை அலகிட்டு வாய்பாடு கூறி
தளைகளை எடுத்துக் காட்டுவோம் பாரீர்!

வளையணிந்த = நிரைநிரைநேர் =கருவிளங்காய்
பெண்ணே = நேர் நேர் = தேமா
தொகைஎட்டும் = நிரைநேர்நேர்= புளிமாங்காய்
கேளாய் = நேர் நேர் = தேமா

திளைத்திடும் = நிரைநிரை= கருவிளம்
நற்றிணை = நேர்நிரை = கூவிளம்
ஐங்குறுநூ = நேர்நிரைநேர் = கூவிளங்காய்
றும்அகம் = நேர்நிரை = கூவிளம்

சீர்புறம் =நேர்நிரை = கூவிளம்
மன்னுபரி = நேர்நிரைநேர் = கூவிளங்காய்
பாடல் = நேர்நேர் = தேமா 
குறுந்தொகை = நிரைநிரை = கருவிளம்

சூழ்பதிற்றுப் = நேர்நிரைநேர் = கூவிளங்காய்
பத்துகலி = நேர்நிரைநேர் = கூவிளங்காய்
என்க = நேர்நேர் = காசு எனும் வாய்பாடு.

வெண்பாவுக்குரிய தளைகள் பின்வருமாறு
அமைந்துள்ளன.

வளையணிந்த பெண்ணே = காய்முன்நேர் = வெண்சீர் வெண்டளை   ...
பெண்ணே தொகைஎட்டும் = மாமுன்நிரை இயற்சீர் வெண்டளை 
தொகைஎட்டும் கேளாய் = காய்முன்நேர் = வெண்சீர் வெண்டளை

கேளாய் திளைத்திடும் = மாமுன்நிரை = இயற்சீர் வெண்டளை
திளைத்திடும் நற்றிணை = விளமுன்நேர் = இயற்சீர் வெண்டளை
நற்றிணை ஐங்குறுநூ = விளமுன்நேர் = இயற்சீர் வெண்டளை
ஐங்குறுநூ றும்அகம் = காய்முன்நேர் =  வெண்சீர் வெண்டளை.

பின்னிரண்டு அடிகளிலும் உள்ள தளைகளை
வாசகர்கள் எழுதிக் காட்டுவது மாண்புறுத்தும்.

இந்த வெண்பாவை மனனம் செய்க!
***********************************************

பெற்றோர்களே,
உங்கள் பிள்ளைகள் போட்டித் தேர்வில் வெற்றி பெற்று
உயர் அதிகாரியாக வேண்டுமா?
பிள்ளைகளோடு சேர்ந்து இந்த வெண்பாவை நீங்களும்
மனனம் செய்யுங்கள்: பொருள் அறியுங்கள்.
எமது பதிவுகளைப் படித்து
உங்களின் அறிவை அதிகரித்துக் கொண்டால்
உங்கள் பிள்ளைகள் தற்கொலை செய்ய நேரிடாது!

 தேர்வில் தோல்வி! வாலிபர் தற்கொலை!
இது மாதிரி செய்திகள் இனி தினத்தந்தியில் வராது!
*************************************************** 

   

      

வர்ணத்தையும் சாதியையும் எந்தக் கடவுளும்
உண்டாக்கவில்லை. சமூகத்தின் உற்பத்திக்
கருவிகளும் உற்பத்தி முறையும் உற்பத்தி
உறவுமே சாதியைத் தோற்றுவித்தன  கேளாய் .   
தேர்வுக்குரிய பாடமாக திருக்குறள்! வரவேற்போம்!
குருவி மூளை அதிகாரிகளுக்கு ஓர் வேண்டுகோள்!
-----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------
தமிழக அரசுப்பணியாளர் தேர்வு பிரிவு-2ல்
(TNPSC Group II) தேர்வுக்குரிய பாடமாக திருக்குறள் வைக்கப்
பட்டுள்ளது. இதை முழுமனதுடன் வரவேற்போம்!

அதே நேரத்தில், தமிழரின் வரலாறு பண்பாடு
ஆகியவற்றைத் துல்லியமாகப் படம் பிடித்துக்
காட்டும் சங்க இலக்கியங்களையும் தேர்வுக்குரிய
பாடமாக வைக்க வேண்டும் என்று நியூட்டன்
அறிவியல் மன்றம் வலியுறுத்துகிறது.

பிரிவு-2 தேர்வை (Group II) பட்டப் படிப்பு படித்துத்
தேறியவர்கள் (degree holders) மட்டுமே எழுத இயலும்.
இத்தேர்வு எழுதுவதற்கான கல்வித் தகுதியே
பட்டப் படிப்பில் தேர்ச்சி ஆகும்.

திருக்குறள் தேர்வை  பள்ளிப்படிப்பு முடித்தவர்களால்
எழுதி விட முடியும். ஆனால் கல்லூரி மட்டத்தில்
தமிழ் படித்திருந்தால் மட்டுமே சங்க இலக்கியங்களில்
தேர்வை எழுத முடியும்.

எனவே பிரிவு-2க்கான தேர்வு பட்டதாரிகளுக்கான
தேர்வு என்பதை மனதில் கொண்டு, திருக்குறளுடன்
சேர்த்து சங்க இலக்கியங்களையம் தேர்வுக்குரிய
பாடமாக வைக்க வேண்டும் என்று தேர்வாணைய
அதிகாரிகளைக் கேட்டுக் கொள்கிறோம்.

சங்க இலக்கியங்கள் யாவை என்று கேட்டால் தமிழர்களில்
எத்தனை பேருக்கு விடை தெரியும்? இதற்கு விடை
தெரிந்தவர்களை மனிதர் (human) என்றும்
விடை தெரியாதவர்களை குறை மனிதர் (sub human)
என்றும் கொண்டால், தமிழ்நாட்டில் 99.999999999 சதவீதம்
பேர் குறை மனிதர்களே (sub human) என்ற உண்மை
வெளிப்படும்.
    
பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும் சங்க இலக்கியம்
ஆகும். தனியொரு புலவரால் இயற்றப்பட்ட தனிநூலாக
அமைவது பத்துப்பாட்டு. பல்வேறு காலக்கட்டத்தில்
பல்வேறு புலவர்களால் எழுதப்பட்டு பின்னர் தொகுக்கப்
பட்ட தொகை நூற்கள் எட்டுத்தொகை ஆகும்.

ஆக சங்க இலக்கியம் என்றால் மொத்தம் பதினெட்டு
நூற்கள். பத்துப்பாட்டில் உள்ள பத்து நூற்களும்
எட்டுத் தொகையில் உள்ள எட்டு நூற்களும் சேர்ந்து
சங்க இலக்கியம் என்றால் 18 நூற்களே. இவை பதினெண்
மேற்கணக்கு  எனப்படும்.

திருக்குறள் சங்க இலக்கியம் அல்ல. அது பதினெண்
கீழ்க்கணக்கு வகையைச் சேர்ந்தது.

பத்துப்பாட்டில் உள்ள பத்து நூற்கள் யாவை?
எட்டுத் தொகையில் உள்ள எட்டு நூற்கள் யாவை?
இவற்றை அறிந்திட உதவியாக நமக்கு முந்தி
வாழ்ந்த புலவர்கள் இரு வெண்பாக்களை
இயற்றி வைத்துள்ளனர். அந்த வெண்பாக்களை
அறிந்தோர் தமிழ்நாட்டில் எத்தனை பேர்?
அறியாதோர் 99.9999999999999999999999999 சதவீதம் பேர்.

நற்றிணை நல்ல குறுந்தொகை.... என்று தொடங்கும்
வெண்பா எட்டுத்தொகை நூற்களை அறிவிக்கும்.
பாலை கடாத்தொடும் பத்து என்ற ஈற்றடியைக் கொண்ட
வெண்பா எட்டுத்தொகை நூற்களை அறிவிக்கும்.

அருள்கூர்ந்து இவ்விரு வெண்பாக்களை வாசகர்கள்
எழுத வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம்.

திருக்குறளில் அறத்துப்பால் பொருட்பால் ஆகியவை
மட்டுமே பள்ளி மாணவர்களுக்குக் கற்பிக்கப்
படுகின்றன. வயது வந்தோருக்கு மட்டுமே இன்பத்துப்பால்
கற்பிக்கப்படும் என்ற கோட்பாட்டின்படி இவ்வாறு
இன்பத்துப்பால் புறக்கணிக்கப் படுகிறது. இக்கோட்பாட்டில்
குறைகாண்பதற்கில்லை. எனவே பிரிவு-2க்கான தேர்வில்
திருக்குறளில் இன்பத்துப்பாலுக்கு அதிக விழுக்காடு
மதிப்பெண்ணை ஒதுக்க வேண்டும்.

தேர்வாணைய அதிகாரிகளுக்கே சங்க இலக்கியம்
பற்றிய புரிதல் கிடையாது. சங்க இலக்கியத்தை
தேர்வுக்குரிய பாடமாக வைப்பதன் மூலமே
எதிர்காலத் தலைமுறை தமிழை அறிய முடியும்.
****************************************************

தனி ஒரு எலக்ட்ரானின் வேகம் அதிகம். கிட்டத்தட்ட
ஒளியின் வேகத்திற்கு நெருக்கமாகக்கூட ஒரு
எலக்ட்ரான் செல்லும்.

கோடிக்கணக்கான அணுக்களால், அதாவது கோடிக்
கணக்கான எலக்ட்ரான்களால் ஆன ஒரு மனிதன்
அவ்வளவு வேகத்தில் செல்ல இயலாது. கணக்கில்
நடைவேகம் அதாவது நடக்கும்போது உள்ள வேகம்
(மணிக்கு 2 கிமீ) தரப்பட்டு உள்ளது.

அடுத்து நிறை. தனி ஒரு எலக்ட்ரானின் நிறையும்
மனிதனின் நிறையும் வேறுபட்டவை.
ஆக, நிறை வேகம் இவ்விரண்டும் தனி ஒரு
எலக்ட்ராயனுக்கும் மனிதனுக்கும் வேறுபடுவதால்
அலைநீளமும் வேறுபடுகிறது.

கணக்கைச் செய்து பார்த்தால், வேகமும் நிறையும்
denominatorல் வரும். Numeratorல் பிளாங்கின் மாறிலியான
10^minus 34 வரும். செய்து பார்த்து உண்மை அறிக.

நெடுநல்வாடையை இயற்றியவர் யார்?  அதன்
நெடுநல்வாடையின் முதல் அடி (முதல் வரி) சொல்க.
சொல் அல்லது சாவு! இனி வன்முறையின் மூலமே
தமிழைப் பரப்ப இயலும்!


நல்லது! நன்றி! நெடுநல்வாடையின் முதலடியிலேயே
ஓர் அளபெடை உள்ளது. அது என்ன வகை அளபெடை?
விடையிறுத்தல் மாண்பை மிகுவிக்கும்.


வளையணிந்த பெண்ணே தொகைஎட்டும் கற்பாய்
திளைத்திடும் நற்றிணை ஐங்குறுநூ றும்அகம்
சீர்புறம் மன்னுபரி பாடல் குறுந்தொகை
சூழ்பதிற்றுப் பத்துகலி என்க.

நற்றிணை நல்ல குறுந்தொகை ஒத்த
பதிற்றுப் பத்து ஓங்கு பரிபாடல்
கற்ற ருந்தார் ஏத்தும் கலியோடு இதுதான் வரலாற்றுப் பொருள்முதல்வாதம்.
வரலாற்றைக் கடவுள் படைப்பதில்லை; மக்களே
படைக்கிறார்கள் என்பதுதான் மார்க்சியம்.

வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்றால்
என்னவென்றே தெரியாத அறியாமையைக்
கொண்டு சமூகச் சிக்கல்களைத் தீர்க்க இயலாது.

இது வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை
விவாதிக்கும் இடம் என்று அருள்கூர்ந்து அறிக..
 
சற்று முன் நான் இயற்றிய வெண்பா!
---------------------------------------------------------
வளையணிந்த பெண்ணே தொகைஎட்டும் கற்பாய்
திளைத்திடும் நற்றிணை ஐங்குறுநூ றும்அகம்
சீர்புறம் மன்னுபரி பாடல் குறுந்தொகை
சூழ்பதிற்றுப் பத்துகலி என்க.
------------------------------------------------------------------
எட்டுத்தொகை நூற்கள் யாவை என்ற கேள்விக்கு
விடையாக இவ்வெண்பாவை இயற்றி உள்ளேன்.

போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் இந்த
வெண்பாவை நன்கு மனதில் பதித்துக் கொள்க.
இது இறுதி வரை துணை நிற்கும்.

ஏற்கனவே எட்டுத்தொகை நூற்கள் பற்றி
ஒரு வெண்பா உள்ளது. அதைவிட இது எளிது.நெடுநல்வாடையை இயற்றியவர்
நக்கீரன் கோபால் என்கிறாராம்
கீர்த்தனார்! புழுவினும் இழிந்த ஈனத்தனம்!


TNPSC பிரிவு-2 தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களே,
தமிழ் இலக்கிய மாணவர்களே,
தமிழக அரசின் பல்வேறு போட்டித் தேர்வுகளை
எழுதவிருக்கும் மாணவர்களே, TET தேர்வு எழுதும்
ஆசிரியர்களே,

இந்தப் பாடலை மனனம் செய்து கொள்க.

பயிற்சி மையம் நடத்திடுவோர் தங்களின்
மாணவர்களுக்கு இப்பாடலைக் கற்றுக்
கொடுப்பது நல்லது.
*******************************************
சிலம்பரசன்
மருதுபாண்டியன்


வளை என்பது ஓரசையாக (குறில்நெடில் - நிரையசை)
நிற்பின், யாப்புக்குப் பொருந்தாமையால் ஈரசையாய்
ஆக்கும் பொருட்டு அளபெடுத்தால் அது செய்யுளிசைநிறை
அளபெடையே.

முதல்  அடியிலேயே தளை குன்றும் அளவுக்கு
பெரும்புலவர் நக்கீரனார் பாடியிருப்பார் என்று
ஏற்பதற்கில்லை. வளைஇ என்று சொல்லை விரும்பிய
பொருளுக்கு வளைக்கிறார் புலவர்.
எனவே சொல்லிசை அளபெடையே. நண்பரே,
இலக்கண நூற்களைப் பட்டியல் இடும்போது
தொல்காப்பியத்தை விட்டு விட்டீர்களே!

அடுத்து, தேவாரம் திருவாசகத்துடன் பக்தி
இலக்கியம் 9சைவம் அடங்கி விடுவதில்லை. எனவே
அவற்றை பன்னிரு திருமுறை என்று குறிப்பிட
வேண்டும்.
நீங்கள் துண்டு துண்டாக எழுதும்போது
திருமூலரின் திருமந்திரத்தையும் இன்ன பிறவற்றையும்
விட்டு விடுகிறீர்கள்.

அடுத்து வைணவ இலக்கியங்கள் அனைத்தும்
நாலாயிரம் திவ்வியப் பிரபந்தமாகத்
தொகுக்கப் பட்டு விட்டன.  அதை நீங்கள்
குறிப்பிட வேண்டும்.

ஐங்குறு காப்பியங்களையம் குறிப்பிட மறந்து
விட்டீர்கள்.

பிரபந்தம் என்னும் சிற்றிலக்கியங்கள் 96 வகைப்படும்.
அவற்றையும் கணக்கில் கொண்டு தமிழ் இலக்கியங்களின்
பட்டியலை முழுவதுமாகச் சொல்ல வேண்டும்.

--------------------------------------------------------------
இந்தப் பதிவைப் புறக்கணிக்கிறவர்கள்
அல்லது கண்டுகொள்ளாமல் செல்கிறவர்கள்
தங்களுக்குத் தாங்களே தீங்கு விளைவித்துக்
கொள்கிறார்கள். அத்தோடு நில்லாது
தமிழுக்கும் துரோகம் இழைக்கிறார்கள்.

      

   

    
நயன்தாராவின் அலைநீளத்தைக்
கண்டு பிடித்து விட்டேன்! யூரேகா! யூரேகா!!
-------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------
குறிப்பிட்ட நிறையுடன் (mass) குறிப்பிட்ட வேகத்தில்
செல்லும் ஒரு எலக்ட்ரானின் அலைநீளத்தைக்
கண்டுபிடிப்பது எப்படி என்று பார்த்தோம்.

மிக எளிய ஃபார்முலா மூலம் எலக்ட்ரானின்
அலைநீளத்தைக் கண்டு பிடித்துக் காட்டி இருந்தேன்.
ஒன்றுமில்லை நண்பர்களே, பிளாங்கின் மாறிலியை
momentumஆல் வகுக்க வேண்டியதுதான். உங்களுக்கு
அலைநீளம் கிடைத்து விடும். It is as simple as that!

இயற்பியல் கற்கும் மாணவர்களே எலக்ட்ரானின்
அலைநீளம் என்றவுடனே மூர்ச்சித்து விடுகிறார்கள்.
ஆனால் மிக மிக எளிமையாகக் கண்டுபிடிக்கும்
வழியை நான் சொல்லி இருந்தேன்.ஆயினும் என்ன
பயன்? யாரும் சீந்தவில்லை! இந்த நாடு உருப்படுமா
என்று கேட்க ஆசைப்படுகிறேன்!

நயன்தாராவின் அலைநீளத்தைக் கண்டுபிடிக்கும்
கணக்கை மனக்கணக்காகப் போடும் விதத்தில்
வடிவமைத்து இருந்தேன்.

இதோ பாருங்கள்! நயன்தாராவின் நிறை எவ்வளவு?
50 கிலோகிராம். (இது SI unitல் உள்ளது).
அடுத்து நயன்தாராவின் momentum.
momentum = mass x velocity
அதாவது 50 x 2 km = 100 km.
கிலோமீட்டர் என்பது SI unit அல்ல. எனவே 2km
என்பதை 2000 மீட்டர் என்று எடுத்துக் கொள்ள
வேண்டும்.

எனவே momentum in SI units = 50 x 2000 = 100 000  with due units.
அவ்வளவுதான். பிளாங்கின் மாறிலியை இந்த ஒரு
லட்சத்தால் வகுத்தால் நயன்தாராவின் அலைநீளம்
கிடைத்து விடும். வசதிக்காக ஒரு லட்சம் என்பதை
10^5 என்று வைத்துக் கொள்க.

பிளாங்கின் மாறிலி = 6.63 x 10^minus 34 J s.
யூனிட்டுகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.
வெறுமனே பிளாக்கின் மாறிலியை முற்கூறிய
ஒரு லட்சத்தால் வகுத்தால் போதும். யூனிட்டுகள்
ஒன்றுக்கொன்று cancel ஆகி அலைநீளம் அழகாக
மீட்டரில் கிடைக்கும்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்  ஒன்றே ஒன்றுதான்.
பிளாக்கின் மாறிலியான 6.63 x 10^minus 34ஐ 10^5 ஆல்
வகுக்க வேண்டியதுதான்.

வகுத்தால் என்ன கிடைக்கும்? ஒரு குத்து மதிப்பாகச்
சொல்லுங்களேன் ஐயா!

அலைநீளம் = 6.63 x  10^minus 39 மீட்டர் என்பதே விடை.
(10 to the power of minus 39 என்பதை உணர வேண்டும்)

ஏற்கனவே எலக்ட்ரானின் அலைநீளம் 0.26 நானோமீட்டர்
என்று கண்டு பிடித்து இருந்தோம். இப்போது
நயன்தாராவின் அலைநீளம் 6.63 x 10^minus 39 மீட்டர்
என்றும் கண்டு பிடித்து விட்டோம்.

இப்போது ஒரு கேள்வி! இந்தக் கேள்விக்காவது
பதில் சொல்லுங்கள். எலக்ட்ரானின் அலைநீளம்
அதிகமா? அல்லது நயன்தாராவின் அலைநீளம்
அதிகமா? ஏன்?
------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
அமலா பால் முதல் அமித் ஷா வரை
ராஜாத்தி அம்மாள் முதல் ராகுல் காந்தி வரை
எவருடைய அலைநீளத்தை வேண்டுமானாலும்
கண்டு பிடிக்க முடியும். மனிதர்கள் யார் எவரானாலும்
அவரின் அலைநீளம் 10^minus 39 என்பதாகவே
இருக்கும். குஷ்பு போன்றோருக்கு மட்டும் 6.63 என்பது
சற்றுக் குறையும். புரிகிறதா?
****************************************************** 

மனிதகுல வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு
மனிதர்களின் அலைநீளத்தை
மனக்கணக்காகக் கண்டுபிடிப்பது எப்படி
என்று முதன் முதலில் கூறி உள்ளேன்.
மகாத்மா காந்தி முதல் மன்மோகன் சிங் வரை
எவருடைய அலைநீளத்தையும் மனக்கணக்காகக்
கண்டு பிடித்து மகிழுங்கள்.

ஏன் இந்த அலைநீளம் பற்றிய கணக்கு?
குவாண்டம் தியரியின் சூட்சுமம் இதில்தான் உள்ளது.
அதை அடுத்துச் சொல்கிறேன்.

அறிவியலைப் புறக்கணிக்கும் சமூகம் உருப்படுமா?
---------------------------------------------------

யெச்சூரி அறிக்கை!
---------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் கொடுத்துள்ள
சீன அதிபர் ஜின் பிங்கின் அலைநீளம் பற்றிய
கணக்கைச் செய்யாதவர்களை மார்க்சிஸ்ட் கட்சியில்
இருந்து நீக்க யெச்சூரி உத்தரவு!மிஸ்டர் ஸ்டான்லி ராஜன்,
உமக்கு எல்லா நலமும் விளைவதாக!
நீர் எமது அறிவியல் பதிவுகள் பக்கம்
வருவதில்லை என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன்
அறிவிக்கிறோம்.

குஷ்பூவின் அலைநீளம் என்ன என்பதை எங்களால்
கண்டறிந்து சொல்ல முடியும். குஷ்பூவின் TORQUE என்ன
என்பதை அளந்து சொல்கிறோம். நீவிர் இங்கே
வந்து செல்க.

குஷ்பூ குறித்து உமக்கு என்ன வேண்டும்; கேளும்.
இயேசுவோ கர்த்தரோ தா இயலாமல் போகலாம்.
ஆனால் நியூட்டன் அறிவியல் மன்றம் தரும்.

அறிவியலை ஆதரிக்க வேண்டியது சமூகப்
பொறுப்புள்ள உமது கடமை.
 

    

                  


  
    

வெள்ளி, 27 செப்டம்பர், 2019

எலக்ட்ரானின் அலைநீளம் என்ன?
நடிகை நயன்தாராவின் அலைநீளம் என்ன?
-----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------
எலக்ட்ரான் என்பது ஒரு துகள்: மிகவும் நுண்ணிய
ஒரு துகள். அதே நேரத்தில் ஒரு துகளான எலக்ட்ரான்
அலையாகவும் இருக்கிறது. தன்னை ஒரு அலையாகவும்
அது வெளிப்படுத்திக் கொள்கிறது. எனவே அதற்கு
அலைநீளம் உண்டு.

ஒளி அலை என்கிறோம். மின்காந்த அலை என்கிறோம்.
ஆற்றல் என்பது அலையாக இருக்கிறது என்ற புரிதல்
பொதுச் சமூகத்திற்கு உண்டு.

ஆற்றலுக்கு மட்டுமல்ல, பொருளுக்கும் அலைப்பண்பு
உண்டு என்றார் லூயி டி பிராக்லி. எனவே புரோட்டான்,
நியூட்ரான், எலக்ட்ரான் ஆகியவை பொருளின் துகள்கள்.
அதாவது பொருட்கள். அவை அலையாகவும் இருப்பதால்,
அவற்றுக்கும் அலைநீளம் உண்டு.
இதை டி பிராக்லி அலைநீளம் என்று அழைக்கிறோம். 

ஆக எலக்ட்ரானின் அலைநீளத்தைக் கண்டறிவது எப்படி?
மிக எளிய ஒரு ஃபார்முலாவைக் கொண்டு எலக்ட்ரானின்
அலைநீளத்தைக் கண்டறிய முடியும்.

இப்போது ஒரு கணக்கு. ஒரு எலக்ட்ரான் வினாடிக்கு
28 லட்சம் மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது.
இதன் அலைநீளம் என்ன?

அலைநீளம் கண்டறிவதற்கான ஃபார்முலாவை
இணைக்கப்பட்ட படத்தில் காணவும்.
கணக்கில் எலக்ட்ரானின் வேகம் மட்டுமே கொடுக்கப்
பட்டுள்ளது. வேறு எந்தத் தரவும் இல்லை. வேறு தரவு
எதையும் தரவும் மாட்டார்கள்.

இந்தக் கணக்கைச் செய்யும் ஒருவருக்கு, பிளாங்கின்
மாறிலி (Plank's constant) மனப்படமாகத் தெரியும்;
தெரிந்திருக்க வேண்டும்.

அடுத்து எலக்ட்ரானின் நிறை (mass) என்ன என்றும்
தெரிந்திருக்க வேண்டும். மாணவர்களின்
கால்குலேட்டரில் இந்த விவரங்கள் இருக்கும்.
எனினும் இந்தவிவரங்கள் மனதில் பதியாமல்
ஒருவரால் இந்தக் கணக்கைச் செய்ய முடியாது.

சரி, ஃபார்முலாவைப் பயன்படுத்தினால்,
எலக்ட்ரானின் அலைநீளம் 0.26 நானோமீட்டர் வரும்.
ஒவ்வொருவரும் கணக்கைச் செய்து பார்த்தால்
மட்டுமே இதை புரிந்து கொள்ள முடியும்.

நயன்தாராவின் அலைநீளம்:
----------------------------------------------
நடிகை நயன்தாரா  50 கிலோகிராம் நிறை உள்ளவர்.
அவர் மணிக்கு 2 கிமீ வேகத்தில் சென்று
கொண்டிருக்கிறார். அவரின் அலைநீளம் என்ன?

இதைக் கண்டுபிடியுங்கள். இயற்பியலைக் கற்பது
என்பது வெறுமனே ஒரு கட்டுரையை வாசிப்பதல்ல.
இது போன்ற கணக்குகளைச் செய்து பார்க்காமல்
இயற்பியலைக் கற்க இயலாது.

விடைகள் வரவேற்கப் படுகின்றன.
*****************************************
   


     

வியாழன், 26 செப்டம்பர், 2019

நியூட்டன் அறிவியல் மன்றத்தின்
கடவுள் பற்றிய கொள்கைப் பிரகடனம்!
எலக்ட்ரானின் அலைநீளம் என்ன?
புலிகள் அழிந்த பிறகு எல்லா உண்மைகளும்
சந்திக்கு வந்த பிறகு, வைகோவும் சீமானும்
எல்லாருக்கும் தெரிந்த உண்மைகளை
அவர்களும் சொல்லி வருகிறார்கள்.

வாஜ்பாய் அரசு போர்க்கப்பலை வழங்கியது
எப்போது? 1999க்குப் பிறகு. இன்றைக்கு 20 ஆண்டுகளுக்கு
முன்பு. அன்று இந்திய அரசோடு வாஜ்பாய்
அரசோடு சேர்ந்த கொண்டு, இந்திய அரசின்
ஈழ அழிப்புக்குத் துணை போனவர்கள்
ஈழத் தரகர்கள். அவர்கள் மீது பரிவு காட்ட முடியாது.

ஈழ விடுதலையை அன்று முதல் இன்று வரை
ஆதரிக்கிறோம். புலிகளை விமர்சனத்துடன்
ஆதரிக்கிறோம்.

அவரும் ஒரு ஈழத் தரகரே. இப்பதிவு ஈழத்தரகர்கள்
அனைவரையும் பற்றியது. போர் என்றால் அப்பாவி
மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று சொன்ன
ஜெயலலிதாவை ஈழத்தாய் என்று சொன்ன சீமான்
என்ன புரட்சியாளரா?

இல்லை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று சொன்ன
சீமான் ஈழத்தரகர் அல்லாமல் வேறு யார்?

ஜெயலலிதா ஒருபோதும் தனி ஈழத்தை
ஏற்றுக் கொண்டதே இல்லை> அவரிடம்
காசு வாங்கி கொண்டு அவரை ஆதரித்து
தேர்தல் பிரச்சாரம் செய்தது எப்படிப் புரட்ச்சி ஆகும்?
இவர்கள் அனைவரும் தரகர்கள்.

நவம்பரில் உள்ளாட்சித் தேர்தலில்
IJK போட்டியிடாது! பாரிவேந்தர் அறிவிப்பு!
CPI, CPM தலா 5c கேட்பதால்
போட்டியிடாமல் தப்பிக்கும் பாரிவேந்தர்!

அறிவியல், தத்துவம் தமிழ் ஆகியவையே
எமது பதிவுகளில் இடம் பெறும். இது
எல்லோரையும் குதூகலப் படுத்தும்
பல்சுவை வாரஇதழ் அல்ல. CPI CPM மீதான
விமர்சனம் கண்டிப்பாக இடம் பெறும்.
ஏனெனில் நாங்கள் ஒன்றாக வேலை
செய்தவர்கள். இதை ஒரு பத்திரிகையாகக்
கருதிக்கொண்டு அது இல்லை, இது இல்லை
என்று கூறுவதில் பயனில்லை.

எது அபூர்வமானது, எது மற்ற எவராலும்
சொல்லப் பட முடியாதது அதை மட்டுமே
நாங்கள் சொல்கிறோம். எனவே எல்லோரையும்
திருப்திப் படுத்துவது அல்லது காலரிக்கு வாசிப்பது
என்பதெல்லாம் இங்கு கிடையாது.

கடவுள் இல்லை என்று நார் நாறாகக் கிழித்துத்
தூங்கப் போடுகிறோமே அடிக்கடி, அதெல்லாம்
பாஜகவுக்கு உவப்பானதா?

எமது பதிவுகள் IQ 105க்கு மேலான வாசகர்களை
மனதில் கொண்டு எழுதப் படுவது.

இதுவரை நான் எழுதிய பல பதிவுகளை எவரும்
எழுதியதில்லை. ஏனெனில் நான் சொல்லுவதற்கு
முன்னால்  ஒருவருக்கும் தெரியாது.  மு

ESMA சட்டம் அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது
அட்டவணையில் இருக்கிறது; அதை நீக்க வேண்டும்
என்று சொன்ன ஒரே ஆள்தான். வேறு எவருக்குமே
ESMA சட்டம் 9ஆவது அட்டவணையில் இருக்கிறது
என்பது தெரியாது. வேறு எவருக்காவது தெரியுமா?
ஒருவருக்கும் தெரியாது.

நான் ஒரு தேற்றத்தைப் பின்பற்றி வருகிறேன்.
"I am always right and others are always wrong" என்ற
தேற்றம்தான் அது. இத்தேற்றம் இதுவரை
யார் எவராலும் தப்பு என்று நிரூபிக்கப்
படவே இல்லை.
-------------------------------------------------

குழந்தைகளுக்கான அறிவியல் மாநாடு!
சென்னையில் நடக்கிறது!
----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------
சென்னை தீவுத்திடலில் உள்ள கேந்திரிய வித்யாலயா
பள்ளியில் குழந்தைகளுக்கான அறிவியல் மாநாடு
(Children Science Congress) நடைபெறுகிறது  இரண்டு
நாட்கள் செப்டம்பர் 27, 28 தேதிகளில் இந்த
மாநாடு நடைபெறுகிறது.

குழந்தைகள் தங்களின் creative thinkingஉடன் கூடிய
ப்ராஜக்டை, மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை
இம்மாநாட்டில் முன்வைப்பர். தமிழ்நாடு முழுவதும்
இருந்து குழந்தைகள் பங்கேற்கின்றனர்.

குழந்தைகளின் performanceஐ மதிப்பிடும்
மதிப்பீட்டாளராக (evaluator) ஆக நியூட்டன் அறிவியல்
மன்றம் இம்மாநாட்டில் பங்கேற்கிறது.

அனுமதிக்கப் பட்டவர்கள் மட்டுமே மாநாட்டில்
பங்கேற்க இயலும்.
**********************************************     
   

 
 


  

புதன், 25 செப்டம்பர், 2019

ரூ 25 கோடிக்கு பாரிவேந்தரிடம்
கம்யூனிஸ்ட் கட்சிகளை விலைபேசி விற்ற
போலிக் கம்யூனிஸ்ட் புரோக்கர்கள்!
----------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------
இன்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு! ஆண்டு 1971.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நேரம். நெல்லை மாவட்டம்
அம்பாசமுத்திரம் தொகுதியில் தோழர் நல்லசிவன் (CPM)
போட்டி இடுகிறார்.

அவரை ஆதரித்துத் தேர்தல் பிரச்சாரம் செய்ய
வீரவநல்லூரில் இருந்து CITU தோழர்கள் சிலர்
செல்கின்றனர். அவர்கள் வீரவநல்லூரில் உள்ள
கோமதி மில்லில் வேலை பார்க்கும் தொழிலாளிகள்.
தூக்குச் சட்டியில் சோறு எடுத்துக் கொண்டு
மில்லுக்கு வேலைக்குப் போவதைப் போல
அவர்கள் செல்வதை எங்கள் தெருத் தலைமாட்டில்
நின்று கொண்டு நாங்கள் பார்த்தோம்.
அப்போது நான் மாணவன்.

ஐந்து நிமிடம் கழித்து இன்னொரு செட் தொழிலாளிகள்
அதே போல தூக்குச் சட்டியில் சோறு எடுத்துக் கொண்டு
தேர்தல் வேலைக்காக அம்பாசமுத்திரம் செல்வதை
நாங்கள் பார்த்தோம். இவர்களும் கோமதி மில்
தொழிலாளிகள்தாம். ஆனால் இவர்கள் AITUCயைச்
சேர்ந்தவர்கள்.

இவர்கள் தோழர் நல்லகண்ணுவை (CPI) ஆதரித்துப்
பிரச்சாரம் செய்யச் செல்கிறார்கள். தோழர் நல்லசிவனை
எதிர்த்து தோழர் நல்லகண்ணு போட்டியிடுகிறார்.

தேர்தல் பிரச்சாரம் என்றாலே தொண்டர்களுக்கு
பிரியாணி என்ற நுகர்வுக் கலாச்சாரம் அப்போது
கிடையாது. நுகர்வு மறுப்புக் கலாச்சாரம் நிலவிய
காலக்கட்டம் அது.

ஆண்டு 1972. கம்யூனிஸ்ட் கட்சி (CPI) தமிழகம் எங்கும்
நிலமீட்சிப் போராட்டத்தை நடத்துகிறது. நிலப்பறி
இயக்கம் என்று பத்திரிகைகள் இதை எழுதின.
கோமதி மில் தொழிலாளர்களான எங்கள்
வீரவநல்லூர் தோழர்கள் அன்றைய CPI மாவட்டச்
செயலாளர் தோழர் வி எஸ் காந்தி தலைமையில்
திருச்செந்தூரில் உள்ள தினத்தந்தி ஆதித்தனாரின்
தாதன்குளம் பண்ணையில் இறங்கி செங்கொடியை
நட்டார்கள். எல்லோரும் பாளையங்கோட்டைச்
சிறையில் அடைக்கப் பட்டனர்.

இதையொட்டி வீரவநல்லூரில் கம்யூனிஸ்ட் கட்சி
ஒரு சுவரெழுத்து இயக்கத்தை நடத்தியது. நிலமீட்சிக்
கைதிகளை விடுதலை செய் என்பது பிரதான முழக்கம்.
வீரவநல்லூர் முழுவதும் மேல பஜாரிலும் கீழ பஜாரிலும்
பஸ் ஸ்டாண்டிலும் உள்ள சுவர்கள் முழுவதிலும்
முழங்கங்களை எழுதினோம்.

அவ்வளவு முழக்கங்களையம் தயாரித்தது எல்லாச்
சுவர்களிலும் எழுதியவன் நான்தான். பெயிண்டு
பிரஷ் எதுவும் கிடையாது. செம்மண்ணைக் குழைத்து
பெயிண்டு போல ஆக்கி, வைக்கோல் பிரிகளால்
பிரஷ் செய்து, அதைக் கொண்டு ஏணியில் ஏறி
சுவர் சுவராக எல்லாச் சுவர்களிலும் எழுதினேன்.
இரவு 9 மணிக்கு மேல் இந்த வேலையை ஆரம்பித்தோம்.

டீக்கடை கூட எங்கள் ஊரில் அந்த நேரத்துக்குக்
கிடையாது. யாருக்கும் டீ தேவைப்படவும் இல்லை.
இரவு இரண்டாம் ஆட்டம் சினிமா முடிந்து ஆட்கள்
வெளியேறி வரும்போது என் வேலையும் முடிந்து
வீடு திரும்பினேன். பைசாச் செலவு கிடையாது.

அன்று பேனர் பிளக்ஸ் கலாச்சாரம் கிடையாது.
எல்லாம் மூங்கில் தட்டிதான். அதில் காகிதத்தை
ஒட்டி அதில் போஸ்டர் கலர் பிரஷ் கொண்டு
எழுதுவார்கள். பட்டு என்பவர்தான் ஊரில்
எல்லாக் கட்சிக்கும் தட்டி எழுதும் ஆர்ட்டிஸ்ட்.
கம்யூனிஸ்ட் கட்சிக்கு நானும் தட்டி எழுதுவேன்.
எனக்கும் போஸ்டர் கலரும் பிரஷும் வாங்கித்
தருவார்கள். தோழர் பட்டு தொழில்முறை ஆர்ட்டிஸ்ட்.
அவருக்கு அதுதான் பிழைப்பு. நான் அமெச்சூர்.

இதையெல்லாம் ஏன் நினைவு படுத்துகிறேன்
என்றால், இவையெல்லாம் மிக அண்மைக்காலம்
வரை  நிலவிய அரசியல் கலாச்சாரங்கள். இன்றுபோல்
சுவர்களில் எழுத லட்சக் கணக்கில் கான்ட்ராக்ட் விடும்
பழக்கம் அப்போது வேட்பாளர்களுக்குக் கிடையாது.

இன்று அனைத்தும் கார்ப்பொரேட் மயம் ஆகிவிட்டது.
கார்ப்பொரேட் என்பதன் பொருள் இதுதான். பொருள்
தெரியாமலேயே கார்ப்பொரேட் என்று உளறிக்
கொண்டிருக்கும் விடலைகள் உண்மையை அறியட்டும்.

அப்போதெல்லாம் நல்லகண்ணுவோ நல்லசிவமோ
நேர்மையான மக்களுக்குக் கட்டுப்பட்ட வாழ்க்கையை
வாழ்ந்தார்கள். பொதுவாழ்வில் பத்துப்பைசா
சம்பாதித்ததில்லை.  அவர்கள் பொறுக்கித் தின்றார்கள்
என்று அவர்களின் கொடிய எதிரிகூடச் சொல்ல மாட்டான்.

இன்று முதலாளித்துவ வளர்ச்சியோடு CPI,CPM
கடசிகளின் சீரழிவும் ஓர் வரலாற்று நிகழ்வாக
ஆகி விட்டது. மற்ற  பூர்ஷ்வாக் கட்சிகளை விட
சீரழிவில் கம்யூனிஸ்டுகள் முன்னணியில்
நிற்கின்றனர். இதன் காரணமாகவும் புரட்சிக்கு
எதிராக இருப்பதாலும் இவர்கள் போலிக் கம்யூனிஸ்டுகள்
என்று சரியாகவே அழைக்கப் படுகிறார்கள்.

மு க ஸ்டாலின் பிச்சை போட்ட இரண்டே இரண்டு
தொகுதிகளில் நிற்க CPIக்கு ஏன் ரூ 15 கோடி?
CPMக்கு ஏன் ரூ 10 கோடி?

இந்தத் தொகை கடசிக்கே போய்ச்சேராமல்
பங்கு போட்டுக் கொண்டது யார்? எவ்வ்ளவு
பெரிய கயமை? ஸ்டாலினிடமே ரூ 25 கோடி
வாங்கியவர்கள் ஜெயலலிதாவிடம் எவ்வளவு
கோடி வாங்கி இருப்பார்கள்?

இது ஒன்றும் புதிதல்ல; வழக்கமாக நடப்பதுதான்
என்கிறாரே முத்தரசன்! அப்படியானால்
ஜெயலலிதாவிடம் வாங்கியது எவ்வளவு?

திமுகவை வீழ்த்த ஜெயலலிதாவிடம் பணம்
வாங்கிக்கொண்டு (ரூ 1500 கோடி) மக்கள் நலக்
கூட்டணி அமைத்தார்களே, அப்போது CPI,CPMக்கு
வைகோ பங்கு பிரித்துக் கொடுத்தது எவ்வளவு?

எல்லா உண்மைகளும் விரைவில் வெளியாகும்.
இனி CPI, CPM கடசிகள் காரல் மார்க்சின்
பெயரை உச்சரிக்க அருகதை கிடையாது.
**************************************************   
  
இது திமுகவைக் குறைகூறும் பதிவு அல்ல.
விலைபோன போலிக் கம்யூனிஸ்டுகளை
விமர்சிக்கும் பதிவு. இதைப் புரிந்து கொள்ள
முயலுக. குட்டி முதலாளியத்தால் இதைப்
புரிந்து கொள்ள இயலாது.

அடுத்து இங்கு நடுநிலை

கொழுத்த பங்கு கிடைக்காவிட்டால்
கட்சியை உடைத்து விடுவார் என்ற பயம்
நல்லகண்ணுவுக்கு இருக்காதா?

நல்லகண்ணு தனக்கென எந்தப் பங்கையும்
பெறவில்லை. ஆனால் மூத்த தலைவர் என்ற
முறையில் பங்கு பிரிக்கும் பொறுப்பு அவருக்கு
வந்து சேர்வது இயல்புதானே!

திமுகவின் பன்மொழிப் புலவர்
கவிஞர் கனிமொழி அவர்கள் வாழியவே!
------------------------------------------------------------
ஆண்டு: 1989
கனிமொழி அப்போது கல்லூரி மாணவி.
இப்படத்தில் சென்னையில் நடைபெற்ற
வி பி சிங் பேசிய கூட்ட மேடையில்
கனிமொழி அமர்ந்து இருக்கிறார். எதற்காக?

தேவிலால் (துணைப் பிரதமராக இருந்தவர்)
அக்கூட்டத்தில் இந்தியில் உரையாற்றினார்.
அவரின் இந்தி உரையை மொழிபெயர்த்தார்
கனிமொழி!

அண்மைக்கால வரலாற்றில் தமிழ் மக்களின் மீதான
முதல் இந்தித் திணிப்பு இதுதான்!
வாழ்க இந்தித்திணிப்பு!
வளர்க இந்தித்திணிப்பு!!
இந்தித் திணிப்பை என்றும் ஆதரிப்போம்!!!
************************************* 
 


பத்து கோடி ரூபாயைப் பங்கு வைப்பது எப்படி?
-------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல்  மன்றம்
------------------------------------------------------------------------
ஒரு பணக்காரரிடம் இருந்து ஆறு பேர் ரூ 10 கோடியை
நன்கொடையாகப் பெற்றனர். அதை அவர்களுக்குள்
பின்வருமாறு பங்கு வைத்துக் கொள்ள விரும்பினார்.

முதலாமவருக்கு இருபதில் ஒரு பங்கு என்றும்
இரண்டாமவருக்கு முதல் நபருக்குக் கொடுத்ததை
விட ஒன்றரை மடங்கு அதிகம் கொடுப்பது என்றும்
முடிவானது.

மீதி இருப்போரில், 3ஆவது முதல்  5ஆவது நபர் வரை,
வரிசை மாறாமல் ஒவ்வொருவருக்கும் அவரின்
முந்திய நபருக்குக் கொடுத்ததில் ஒன்றரை மடங்கு தொகை
கொடுப்பதென்றும் முடிவானது. மீதி எவ்வளவு
இருக்கிறதோ அதை 6ஆவது நபருக்குக் கொடுப்பது
என்றும் முடிவானது.

அப்படியானால் ஆறாவது நபர் பெற்ற தொகை எவ்வளவு?

விடைகள் வரவேற்கப் படுகின்றன.
*************************************************** 
செவ்வாய், 24 செப்டம்பர், 2019

Marxism about STALIN
=====================
However what took the cake was Joseph Stalin’s abuse of the judicial system to purge his rivals at one stroke. The Moscow Trials from 1936 to 1938 were the most gargantuan judicial sham in history. The only object of this kangaroo process was to exterminate the Bolshevik old guard thereby allowing Stalin to make the state synonymous with the self.
On 15 August 1936, the official Soviet news agency reported that the Russian state prosecutor had charged Gregory Zinoviev, Leon Kamenev, I.N. Smirnov and 13 others of conspiring with the Nazi regime to assassinate seven front ranking Soviet leaders, and the murder of one S.M. Kirov more than 18 months earlier. Nine days later on 24 August 1936, the president of the tribunal read the verdict sentencing all the defendants to death and forfeiture of all property belonging to them. Less than twenty-four hours later the press proclaimed that the mercy appeal of the condemned men had been vetoed by the Presidium of the Central Executive Committee of the Soviet Union and further reported, the verdict has been actioned.
In less than a fortnight since the first revelation of an alleged terrorist plot, 16 men were allegedly tried and mercilessly executed after a judicial sham. Among them were names inextricably linked with the Russian revolutionary movement, the October Revolution, and the initial period of the Third International. The sentence pronounced included the directive to bring before the court on the same charges, Leon Trotsky and his son L.L. Sedov. Both “Father and Son” were Stalin’s proverbial nightmare.
Sixty-seven years later in the September 2013, the National Association of Judicial Magistrates of Chile issued a statement — imploring victims of the Pinochet dictatorship to pardon the judiciary’s “wrongful omissions of its duties.” The statement candidly confessed “Our courts’ inadmissibility and rejections of thousands of complaints­ — many of which were rightly filed on behalf of compatriots whose fate was never determined — the systematic refusal to investigate criminal acts perpetrated by state agents, and reluctance to personally get involved in the actions taking place in detention centers and torture, no doubt contributed to the painful imbalance of human rights during this dark period,” Furthermore while beseeching for absolution, the magistrates catechised Chile’s Supreme Court to reflect on their own conduct during Pinochet’s 17-year-old dictatorship.

போலிக் கம்யூனிஸ்ட் பிழைப்புவாதம்!
உதயநிதியிடம் விலைபோன தா பாண்டியன்!
---------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------
நல்ல விலை கொண்டு நாயை விற்போர்-அந்த
நாயிடம் யோசனை கேட்பதுண்டோ?
------------மகாகவி பாரதி-----------

வரலாறு இப்படியும் சில ஈனப் பிழைப்புவாதிகளைப்
படைத்து இருக்கிறது. தேர்தல் செலவுக்குப் பணம் என்ற
பெயரில், திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்களிடம்
இருந்து ரூ 15 கோடியைப் பெற்று இருக்கிறது போலிக்
கம்யூனிஸ்ட் பிழைப்புவாதக் கும்பல்.

தா பாண்டியன், நல்லகண்ணு, முத்தரசன், சுப்புராயன்,
மகேந்திரன் என்று நீளும் இந்தப் பிழைப்புவாதக் கும்பல்  
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை (CPI) விற்பனை செய்யும்
உரிமை படைத்த பவர் ஏஜெண்டுகள் ஆவர்.

நான் சீனிவாச ராவை நினைத்துப் பார்க்கிறேன்.
என் கண்களில் இருந்து தாரை தாரையாகக் கண்ணீர்
வருகிறது. தியாகத்தின் மகோன்னதத்தை உலகுக்கு
உணர்த்திய உயர்ந்த கம்யூனிஸ்டுகளில் அவர் ஒருவர்.
உலக வரலாற்றில் இப்படிப்பட்ட கம்யூனிஸ்டுகள்
வெகுசிலர்தான் காணப்படுகின்றனர்."கம்யூனிஸ்டுகள்
தனியொரு பொருளினால் வார்க்கப் பட்டவர்கள்"
என்று ஸ்டாலின் சொன்னது சீனிவாசராவ் போன்றோரை
மனதில் கொண்டுதான். இங்கு ஸ்டாலின் என்பது
மார்க்சிய மூல ஆசான் ஸ்டாலினைக் குறிக்கும்.  

தேர்தல் செலவு என்ற சாக்கில் திமுக தலைவர் மு க
ஸ்டாலினிடம் எடுத்த எடுப்பிலேயே 50 கோடி
கேட்டுப் பேச்சு வார்த்தையைத் தொடங்கியது
தா பாண்டியன் முத்தரசன் வகையறா.இவர்களை எல்லாம்
டீல் செய்வதில் நோபல் பரிசு பெற்ற துரை முருகன்
"50 சின்னு நீங்க பேசினா, கதவு  அங்க இருக்குன்னுதான்
நான் கைகாட்ட முடியும்" என்றார்.

சுதாரித்துக் கொண்டு சுய நினைவுக்கு வந்த தா பாண்டியன்
தமது புரட்சிகர ராஜதந்திரத்தைச் செயல்படுத்த
ஆரம்பித்தார்.

உலகப் பிச்சைக்காரர் சங்கத் தலைவரே தோற்றுப்
போகும் அளவுக்கு பிச்சையில் உச்சத்தைக் காட்டிய
தா பாண்டியன், பலவீனமான இதயம் கொண்ட
ஸ்டாலினைக் கண்கலங்க வைப்பதில் வெற்றி பெற்றார்.

இந்தப் பேச்சுவார்த்தையின் போது திமுக தரப்பில்
மொத்தம் மூன்று பேர் இருந்தனர். ஸ்டாலின், துரைமுருகன்
ஆகியோருடன் பாரிவேந்தர் பச்சமுத்துவும் இருந்தார்.
பேச்சினிடையே அடிக்கடி "நீங்கதான் கருணை
காட்டணும்" என்று தா பாண்டியன் முத்தரசன்
கும்பிடும் போதெல்லாம். மு க ஸ்டாலின் ஒரு
விஷயத்தை அவர்களுக்கு நினைவு படுத்திக்
கொண்டே இருந்தார்.

"நீங்க அவர்ட்ட பேசுங்க; அவர்தான் நீங்க கேக்குற
பணத்தைக் கொடுக்கப் போறவரு" என்று
பாரிவேந்தரைச் சுட்டிக்காட்டிக் கொண்டே
இருந்தனர் ஸ்டாலினும் துரைமுருகனும்.

இறுதியில் CPMக்கு கொடுத்த ரூ 10 கோடியை விட
அதிகமாக, ரூ 15 கோடி தொகையை  இவர்களுக்குப் 
பிச்சையிட பாரிவேந்தர் ஒப்புக் கொண்டார்.
பிச்சைப் படலம் முடிவுக்கு வந்தது. பகவதி பிட்சாந்தேஹி! 

இந்த 15 கோடியை வாங்கி, நாகப்பட்டினத்தில்
உள்ள வறுமையில் வாடும் கூலி விவசாயிகளுக்கு
இவர்கள் கொடுத்தால், நவீன ராபின் ஹுட்கள்
என்று தா பா வகையறாவைப் பாராட்டலாம்.

ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. ரூ 15 கோடியை
முக்கியத் தலைவர்கள் பங்கு போட்டுக் கொண்டதுதான்
நடந்துள்ளது.

தேர்தல் ஆணையத்திடம் திமுக சமர்ப்பித்த பிரமாணப் 
பத்திரத்தின் (affidavit) மூலம் இந்த உண்மை மக்களுக்குத்
தெரிய வந்தது. இல்லாவிட்டால், இந்தக் கயவர்கள்
திமுகவிடம் வாங்கிய பணத்தை முழுங்கியது
ஒருபோதும் மக்களுக்குத் தெரிய வராது.

1) ஸ்டாலினிடம் பணம் வாங்கியது தவறு.
2) பணத்தைத் தங்களுக்குள் பங்கு போட்டுக்
கொண்டது கயமை.
3) இவர்கள் போலிக் கம்யூனிஸ்டுகள் என்பது
ஆயிரத்து ஒன்றாவது முறையாக நிரூபிக்கப்
பட்டிருக்கிறது.

கண்டதைச் சொல்லுகிறேன்-உங்கள்
கதையைச் சொல்லுகிறேன்
அதைக் காணவும் கண்டு நாணவும்
உமக்குக் காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ?
----------ஜெயகாந்தன்---------

**********************************************     


தங்கள் கட்சிகளின் பெயர்களில் உள்ள
திராவிடம் என்ற சொல்லை
தமிழக அரசியல் கட்சிகள் நீக்க வேண்டும்!
இல்லாத திராவிடத்தின் பெயரில் கட்சி ஏன்?
-------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------
திராவிட மொழிகள் என்று கால்டுவெல் பாதிரியார்
கூறும் மொழிகள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்
ஆகியன.  பிரிட்டிஷ் காலத்தில் தெலுங்கு கன்னட மலையாள
நிலப் பகுதிகள் சென்னை ராஜதானி (Madras Province)
என்ற பெயரில் ஒரே மாநிலமாகவே இருந்தன.
1956ல்தான் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்
பட்டன. அப்போதுதான் இன்றுள்ள மாநில அமைப்பு
ஏற்பட்டது.

திராவிடம் என்ற பெயரிலான அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டில்
மட்டுமே உள்ளன. ஆந்திரத்தில் தெலுங்கு தேசம் என்ற கட்சி
உள்ளதே தவிர, திராவிட தேசம் என்ற கட்சி இல்லை.
தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி என்று
கட்சி உள்ளதே தவிர, திராவிட சமிதி என்று கட்சி எதுவும்
இல்லை.

தமிழ்நாட்டில் திராவிடர் கழகம் என்ற பெயரில் கட்சி
உள்ளது. இதே போல ஆந்திரத்திலும் திராவிடர் கழகம்
இருக்க வேண்டும் அல்லவா? தெலுங்கு மொழியும்
ஒரு திராவிட மொழிதானே கால்டுவெல்லின் ஆய்வுப்படி!
தெலுங்கர்களும் திராவிடர்கள்தானே கால்டுவெல்லின்
ஆய்வுப்படி!

ஆனால் பத்துக்கோடித் தெலுங்கர்கள் நடுவில்
ஏன் ஒரு திராவிடர் கழகம் இல்லை? என்றாவது
இதைப்பற்றி நாம் சிந்தித்தோமா?

சரி, தெலுங்கர்களை விடுங்கள். கன்னடர்களும்
திராவிடர்கள்தானே! கன்னட  மொழியும் திராவிட
மொழிதானே! கால்டுவெல்லின் கோட்பாடு
அப்படித்தானே கூறுகிறது!

ஆனால் ஏன் கன்னடர்களிடம் ஒரு திராவிடர் கழகமோ
அல்லது ஒரு திராவிடக் கட்சியோ ஏன் இல்லை?
கன்னட சலுவாலிகர் கட்சி என்று ஒரு கட்சியை
நடத்தும் வட்டால் நாகராஜ் போன்றவர்கள் ஏன்
ஒரு திராவிடக் கட்சியை நடத்தவில்லை? ஏன்
கர்நாடக மாநிலத்தில் ஒரு திராவிடக் கட்சி கூட இல்லை?

மலையாள மொழியும் திராவிட மொழிதானே!
மலையாளிகளும் திராவிடர்கள்தானே கால்டுவெல்
கோட்பாட்டின்படி! பின் ஏன் மலையாள மண்ணில்
திராவிடக் கட்சியோ திராவிட இயக்கமோ இல்லை?

சரி, ஆந்திரம் கர்நாடகம் தெலுங்கானா கேரளம்
ஆகிய மாநிலங்களில் அம்மாநில மக்கள்
தங்களுக்கென்று ஒரு திராவிடக் கட்சியை
ஏற்படுத்திக் கொள்ளவில்லை! அவர்களுக்காக
அங்கு சென்று ஒரு திராவிடக் கட்சியை இங்குள்ள
தலைவர்கள் ஏன் அமைக்கவில்லை?

வைக்கம் போராட்டத்தின் காரணமாக வைக்கம் வீரர்
என்று பட்டம் பெற்ற ஈ வெ ரா கேரளம் சென்று
அங்கு ஒரு திராவிடக் கட்சியை அமைக்க முயற்சி
செய்தாரா? செய்யவே இல்லை. "முயற்சி செய்தோம்;
ஆனால் முடியவில்லை" என்றால்கூட ஏற்றுக் கொள்ளலாம்.
ஆனால் முயற்சியே செய்யவில்லையே ஏன்?

ஈவெராவுக்கு நன்றாகத் தெரியும் தமிழன் மட்டுமே
ஏமாந்த சோணகிரி என்று! தமிழர்களை திராவிடம்
என்று சொல்லி ஏமாற்றுவது போல, கன்னடர்களையோ
மலையாளிகளையோ ஏமாற்ற முடியாது என்று
ஈவெராவுக்கு நன்கு தெரியும். திராவிடம் என்ற
முற்றிலும் போலியான சித்தாந்தம் வேறெங்கும்
விலை போகாது என்றும் அவருக்கு நன்கு தெரியும்.

ஈவெராவுக்கு மட்டுமல்ல, அண்ணாத்துரைக்கும் இந்த
உண்மை நன்கு தெரியும். 1956ல் மொழிவாரி
மாநிலங்கள் அமைக்கப்பட்ட போதே, திராவிடம்
செத்துப் போய் விட்டது என்று அண்ணாத்துரைக்கு
நன்கு தெரியும். ஆனாலும் முடிந்த வரை தமிழனை
ஏமாற்றலாமே என்று இருந்தார் அவர்.

1962ல் இந்திய சீனப்போர் வருகிறது. அதையொட்டி
பிரிவினைத் தடைச் சட்டத்தைக்  கொண்டு வருகிறது
இந்திய அரசு. பிரிவினை கேட்கும் கட்சிகள் தடை
செய்யப்படும் என்று அறிவிக்கிறார் ஜவகர்லால் நேரு.

அண்ணாத்துரையோ ஈவெராவோ இந்தச் சட்டத்தை
எதிர்த்தார்களா? இல்லை. திராவிட நாடு என்னும்
தங்களின் பிரிவினைக் கொள்கையைக் கைவிட்டு
விட்டதாக உடனடியாக அறிவிக்கிறார் அண்ணாத்துரை.
பெரும் சரணாகதி இது.

மனித குலம் கண்டிராத இழிவின் உச்சமாக, தங்களின்
உயிராதாரமான திராவிடத்தைக் கைவிடுகின்றனர்
ஈவெராவும் அண்ணாத்துரையும்.
திராவிடம் என்பது ஒரு பொய்மை என்று ஈவெராவும் அண்ணாத்துரையும்நன்கு அறிவார்கள்.எனவே அதைக்
கைவிடுவதில் அவர்களுக்கு எவ்விதக் குற்ற உணர்வும்
இருக்கவில்லை.

திராவிடத்தின் பிதாமகன்களான ஈவெராவும்
அண்ணாத்துரையுமே கைவிட்டு ஒழித்த
திராவிடத்தை இன்றைக்கும் தலையில் தூக்கி
வைத்துக் கொண்டு ஆடுகின்றன சில அசடுகள்!

திராவிடம் என்பது பிரிட்டிஷ் சித்தாந்தவாதிகளான
வில்லியம் ஜோன்சும் கால்டுவெல் பாதிரியாரும்
பெற்றெடுத்த குழந்தை என்பதை எமது முந்திய
கட்டுரையில் தெளிவு படுத்தி இருந்தோம். திராவிடம்
என்பது முற்றிலும் அறிவியலுக்கு எதிரானது; பிரிட்டிஷ்
காலனி ஆடசியை நிரந்தரமாகத் தக்க வைக்கும்
இழிந்த உள்நோக்கத்துடன் புனையப்பட்ட பொய்மை.

இந்தியாவில் வேறெங்குமே அரசியல் தளத்தில்
செல்வாக்குப் பெறாத இந்தப் பொய்மையை
பிரிட்டிஷாரின் பெருந்தாசரான ஈவெரா அன்றைய
சென்னை ராஜதானியிலும் இன்றைய தமிழ்நாட்டிலும்
விதை போட்டு வளர்ந்து பெரும் நச்சு விருட்சமாக
வேரூன்றச் செய்தார். தமிழ்நாட்டின் அரசியல்
அதிகாரத்தைக் கைப்பற்றும் அளவுக்கு இந்தப்
போலி திராவிடத்தை வளர்த்தெடுத்தார் அண்ணாத்துரை.

ஈவெரா பிரிட்டிஷ்தாசர் என்பது சூரியன் கிழக்கே
உதிக்கிறது என்பதைப் போன்ற ஓர் ஒளிவீசும் உண்மை.
இதோ அவரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார்
பாருங்கள்!

"வெள்ளைக்காரன் காலை நக்கியவர்கள் என்று நீங்கள் 
எங்களை கேவலமாகச் சொல்லலாம். பார்ப்பான் காலை விட வெள்ளைக்காரன் கால் சுத்தமானது. அது சாக்ஸ் போட்ட 
கால். சுத்தமாக இருக்கும். இதை நக்குவதைவிட 
அதை நக்குவது என்பது நல்லது என்று பெரியார் 
தனக்கே உரிய பாணியில் ஓங்கி அடித்து பதில் 
சொன்னார்.” 
(வீரமணி, மொழியால் தமிழர், இனத்தால் திராவிடர்
என்ற நூல்,பக்கம் 65).

ஈவெராவைப் போன்ற பிரிட்டிஷ் பெருந்தாசர்கள் 
பிற தென்னக மாநிலங்களில் இல்லை. ஈவெராவின் 
செல்வாக்கும் தமிழ்நாட்டைத் தாண்டவில்லை.
எனவேதான் ஆந்திரத்திலோ கன்னடத்திலோ 
கேரளத்திலோ திராவிடப் பொய்மை 
விலைபோகவில்லை. 

கீழடி ஆய்வுகள் தமிழின் தொன்மையை முன்னிலும்
துல்லியமாக நிறுவி இருக்கின்றன. திராவிடம் என்ற
பொய்மைத் தத்துவம் நாளும் நாளும் முகமூடி
கிழிந்து முற்றிலுமாக அம்பலப்பட்டு விட்டது.

இந்த நிலையிலும் தமிழ்நாட்டில் உள்ள அரசியல்
கட்சிகள் தங்களின் கட்சிப் பெயரில் திராவிடம்
என்ற பொய்மையை வைத்துக் கொண்டு
இருக்கின்றன. இது பெருங்கயமை. இது கூடாது.
திராவிடம் என்ற சொல்லும் திராவிடம் என்ற கோட்பாடும்
தமிழர்களை ஏய்ப்பதன் அடையாளம்.  திராவிடம் என்பது
தமிழர்களின் அவமானச் சின்னம்.

எனவே திமுக அதிமுக தேமுதிக மதிமுக ஆகிய
கட்சிகளும் பல்வேறு திராவிடர் கழகங்களும்
தங்களின் கட்சிகளில் உள்ள திராவிடம் என்ற
பெயரை நீக்க வேண்டும். அதற்குப் பதிலாக
தமிழர் என்ற பெயரைச் சூட்டிக் கொள்ள வேண்டும்.

அதாவது திமுக என்பது தமிழர் முன்னேற்றக்
கழகமாக தமுகவாக ஆக வேண்டும். ஏனைய
கட்சிகளும் இவ்வாறே பெயரை மாற்றிக் கொள்ள
வேண்டும்.

தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரையே
தமிழக நடிகர் சங்கம் என்று பெயர் மாற்ற வேண்டும்
என்ற கோரிக்கை வலுத்து வரும் காலம் இது. எனவே
திராவிடம் என்ற இழிந்த பெயரை அரசியல் கட்சிகள்
நீக்கிவிட்டு வேறு நல்ல பெயரை வைத்துக் கொள்ளட்டும்.
இது எட்டுக்கோடித் தமிழ் மக்களின் கோரிக்கை.
*****************************************************


  

 
     

  

திங்கள், 23 செப்டம்பர், 2019

திரு பிரபாகரன் மார்க்கோஸ்,
திராவிடம் என்ற சொல் கால்டுவெல்லுக்குப் பிறகுதான்
பெருவழக்காக ஆனது. அதற்குக் காரணம் பிரிட்டிஷ்
காலனி ஆட்சியாளர்களின் அரசு ரீதியான ஆதரவுதான்.

இரட்டைமலை சீனிவாசனும் அயோத்திதாசரும்
இன்னும் பலரும் ரவீந்திரநாத் தாகூர் உட்பட  திராவிடம்
என்ற சொல்லைப் பயன் படுத்தியவர்கள்தாம்.
அவர்கள் திராவிடம் என்ற கோட்பாட்டை ஏற்றவர்கள்
அல்லர்.ஒரு சொல்லைப் பயன்படுத்துவது என்பது வேறு;
ஒரு கோட்பாட்டை ஏற்றுக் கொள்வது என்பது வேறு.   

உங்களுடைய கருத்தை நீங்கள் எவ்வளவு
வலிமையாக வேண்டுமானாலும் வைக்கலாம்.
எவ்வளவு ஆணித்தரமாக வேண்டுமானாலும்
சொல்லலாம். ஆனால்  வசைகள்,அவதூறுகள்
இல்லாமல் உங்களின் கருத்தைச் சொல்ல
வேண்டும். இது annihilation நடந்த இடம்.
குட்டி முதலாளியத்துக்கு இது உகந்த இடம் அல்ல.

திராவிடம் என்பது இன்று திராவிட இந்துத்துவமாகச்
சீரழிந்து நிற்கிறது. சந்தர்ப்ப வாதம், அரசியல்
பிழைப்பு வாதம், ஊழல் செய்து சொத்துக் குவித்தல்,
வாரிசு அரசியல் என்னும் வர்ணாசிரமம் ஆகிய
இழிவுகளின் மையமாக நிற்கிறது.

பயனற்ற விவாதங்களில் நேரத்தை விரையம்
ஆக்க வேண்டாம். திமுக உள்ளிட்ட திராவிட
இயக்கத்தில் எந்தவொரு முற்போக்குக் கூறும் இல்லை.
திமுக என்பது திராவிட இந்துத்துவக் கட்சியாக
ஆகி வெகுகாலம் ஆகி விட்டது. ஏற்கனவே அதிமுக
இந்துத்துவக் கட்சியாக ஆகி நிலைபெற்று விட்டது.

பாட்டி பழைய ஞாபகத்தில் மஞ்சள் தேய்த்துக்
குளித்த கதையாக திராவிட இயக்கம் முற்போக்கானது
என்ற கதை ஆகி விட்டது. கேடுகெட்ட வர்ணாசிரம
வாரிசு அரசியலில் திமுக உலக அளவில் முதலிடம்
பெற்றுள்ளது.


பெரியாரின் திராவிட இயக்கக் கோட்பாட்டை
அண்ணல் அம்பேத்காரோ இரட்டைமலையாரோ
ஏற்கவில்லை. இது குறித்து விரிவாக அடுத்து
எழுதப்படும். அதைப்படித்த பின் கருத்துக் கூறலாம்.


இந்தி பிறந்தது எப்போது?
--------------------------------------
13ஆம் நூற்றாண்டில் அதாவது 1201-1300 காலத்தில்
இந்தி என்றொரு மொழி பிறக்கவே இல்லை.
பிறக்காத ஒரு மொழி எப்படி தமிழ்நாட்டுக்கு
வந்திருக்க முடியும்? அதை எப்படி தமிழர்கள்
எதிர்த்திருக்க முடியும்?

இந்தி என்பது மொகலாய ஆடசி இந்தியாவில்
ஸ்தாபிக்கப் பட்ட பிறகே பிறக்கிறது. மொகலாய
ஆட்சி எப்போது ஸ்தாபிக்கப் பட்டது. பொயு 1526ல்
முத்தாலாவத் பானிபட் போரில் இப்ராகிம் லோடியை
எதிர்த்து பாபர் வென்ற பிறகே மொகலாய
ஆடசி இந்தியாவில் உருவாகிறது. பாருக்குப் பின்
ஹுமாயூன். இடையில் செர்ஷாவால் ஹுமாயூன்
ஆடசி இழப்பு. பின் இரண்டாம் பானிபட் போரில் 1556ல்
அக்பர் வெற்றி பெற்ற பின்னரே  மொகலாய ஆடசி
நிலைநிறுத்தப் படுகிறது. அப்போதுதான் இந்தி
தோன்றுகிறது.

டில்லி சுல்தான்களின் ஆடசிக் காலத்தில் குதுபுதீன்
ஐபெக் முதல் இப்ராஹிம் லோடி வரையிலான
காலத்தில் இந்தி பிறக்கவே இல்லை.

ஆனால் தொல்லியல் துரையின் தற்குறி டைரக்டர்
தனது அறியாமையை வெளிப்படுத்துகிறார்.
  DMK affidavit to EC puts CPM, CPI in tight spot
Monday, 23 September 2019
CPM affidavit doesn’t mention DMK donation
The DMK’s Lok Sabha election expenditure affidavit submitted to the Election Commission has put its alliance partners CPI(M) and CPI in a tight spot.
As per the affidavit submitted on September 20, the DMK has given Rs 10 crore to CPI(M) and Rs 15 crore to CPI which were allotted two seats each in Tamil Nadu by the major alliance partner DMK. Interestingly, this Rs 10 crore donation from the DMK is not reflected in the CPI(M)’s affidavit to the Election Commission.
The CPI(M) had submitted the first expenditure affidavit on July 10 and on September 13 the party claimed that its total election expenditure across India is around Rs 7.2 crore in their last affidavit. The CPI has not yet submitted their affidavit to the Election Commission.
According to the DMK’s affidavit, it had given Rs 10 crore to the CPI(M) through bank transfer in three installments on April 5, 8 and 9. The DMK transferred Rs 15 crore to the CPI through bank in two installments on April 5 and 16. The DMK also gave Rs 15 crore to one of their regional alliance partners Kongu Nadu Democratic Party, which was allotted one seat in Lok Sabha elections from the DMK-led alliance.
It is interesting to note that the DMK’s self-declared total expenditure is Rs 79.26 crore including the above mentioned total Rs 40 crore donations to its alliance partners.
The CPI(M) in its expenditure affidavit showed around Rs 82 lakh as receipts from Coimbatore and Madurai constituencies, while the DMK’s affidavit claims they have given Rs 10 crore.


ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

ஆயிரம் கீழடிகள் வந்தாலும்
திராவிடத்தை அசைக்க முடியாது!
----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------
மானுட சமூகத்தின் வரலாற்றை அறிந்து கொள்வது எப்படி?
இதற்கு ஏதேனும் சரியான வழிமுறை உண்டா?
உண்டு. அதற்குப் பெயர்தான் "வரலாற்றியல்
பொருள்முதல்வாதம்" (Historical materialism). இது
மார்க்சியம் உலகிற்கு அளித்த கொடை.

ஒரு சமூகத்தின் உற்பத்தி முறை என்ன? உற்பத்திக்
கருவிகள் என்னென்ன? உற்பத்திச் சாதனங்கள்
யாவை? உற்பத்தி உறவுகள் எப்படி இருந்தன?
இக்கேள்விகளுக்கு விடை தேடும்போதுதான் ஒரு
சமூகத்தின் வரலாற்றை அறிய முடியும்.

உலகம் முழுவதும் மனித குலம் தொடக்க காலத்தில்
இடம் பெயரும் வாழ்க்கையைக் கொண்டிருந்தது.
வேட்டை ஆடுவதும் உணவு சேகரிப்பதுமே
அன்றைய சமூகத்தின் உற்பத்தி முறையாக இருந்தது.

மொத்த மானுடமும் இடம் பெயரும் வாழ்க்கை
முறையைத் தாண்டி ஓரிடத்தில் நிலையாக வாழும்
முறைக்கு வந்து சேர்ந்தது. நிலையாக வாழ  ஏதுவாக
அவ்விடத்தில் குடியிருப்புகள் கட்டப்பட்டன. இதுவே
settlement என்றும் settled life என்றும் வரலாற்று
ஆசிரியர்களால்  அழைக்கப் பட்டது.

இத்தகைய நிலையான குடியிருப்புகள் யாவும்
ஆற்றங்கரைகளில் அமைந்தன. மானுட வரலாறு
முழுவதும் முதல் குடியிருப்புகள் ஆற்றங்
கரைகளில்தான் ஏற்பட்டன.

அத்தகையதொரு குடியிருப்பு வைகை ஆற்றங்கரையில்
இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் கீழடி
அகழ்வாய்வில் கிடைத்துள்ளன. கீழடி தமிழர் நாகரிகத்தின்
அடையாளம் ஆகும். முதற்கட்டத் தகவலின் படி,
இந்நாகரிகம் 2600 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று
தெரிய வருகிறது.

உண்மையில் தமிழர் நாகரிகம், தமிழ் மொழியின்
தோற்றம் ஆகியவை 2600 ஆண்டுகளுக்கும் முற்பட்டவை.
நிலத்திற்குப் பதிலாக, கடலில் தோண்டும்போது
அந்த உண்மைகள் புலப்படும். தற்போது 2600 ஆண்டுகளுக்கு
முற்பட்டது தமிழ் என்று மெய்ப்பிக்கப் பட்டுள்ளது.

பொயு 1757ல் நடைபெற்ற பிளாசிப் போரில் (Battle of Plassey)
ராபர்ட் கிளைவ் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து,
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆடசி தொடங்கியது. தொடர்ந்து
நடைபெற்ற பக்சார் போரும் (1764) அதைத் தொடர்ந்த
அலஹாபாத் உடன்படிக்கையும் (1765) இந்தியாவில்
பிரிட்டிஷ் ஆடசியை ஸ்தாபித்தன.

பெரும் நிலப்பரப்பும், பல்வேறு மொழிகளும், மிகுந்த
பன்மைத்துவமும் கொண்டிருந்த இந்தியாவை ஆள்வது
உள்ளபடியே பிரிட்டிஷாருக்கு பெரும் சவாலாக இருந்தது.
ஆளும் கலை (art of governance) பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்த
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு பிரித்தாளும் சூழ்ச்சி
தலைசிறந்த வழியாகும் என்று எடுத்துக் கூறினர்
பிரிட்டிஷ் ஆளும் வர்க்கச் சிந்தனையாளர்கள்.

கொல்கத்தாவில் நீதிபதியாக இருந்த ஆங்கிலேயரான
வில்லியம் ஜோன்ஸ் என்பவரும் தமிழ்நாட்டில்
கிறிஸ்துவப் பாதிரியாராக இருந்த ராபர்ட் கால்ட்வெல்
என்பவரும் திராவிடம் எனப்படும் ஒரு பிரித்தாளும்
கோட்பாட்டை (divisive philosophy) பெற்றெடுத்தனர்.

திராவிடம் என்று ஒரு மொழியோ இனமோ எந்தக்
காலத்திலும் இருந்ததே இல்லை. திராவிடம் என்று
ஒரு மொழி தோன்றியதே இல்லை. முற்றிலும் கற்பிதமான
ஒரு கோட்பாடே திராவிடக் கோட்பாடு.

வில்லியம் ஜோன்ஸ் என்பவர் ஒரு மொழித்தோற்றவியல்
அறிஞர் (philologist). இவருடைய திராவிடம் என்ற
கற்பிதத்தை அப்படியே ஏற்றுக் கொண்ட கால்டுவெல்
பாதிரியார் திராவிட மொழிக்குடும்பம் என்ற ஒன்றைப்
போலியாக உருவாக்கி தமிழ் ஒரு திராவிட மொழி
என்று போலியாக நிறுவினார்.

இதன் இயற்கையான பின்விளைவாக திராவிட இனம்,
திராவிட நிலம் என்றெல்லாம் பொய்மைகள் கட்டமைக்கப்
பட்டன. திராவிட மொழியோ இனமோ எந்தக்
காலத்திலும் இந்த பூமியின் எந்த இடத்தில் இருந்ததோ
தோன்றியதோ கிடையாது. வில்லியம் ஜோன்சும்
கால்டுவெல் பாதிரியாரும் மிகுந்த கயமைத்தனத்துடன்
உருவாக்கிய மானுட விரோத, தமிழ் விரோதத் தத்துவமே
திராவிடம்.

வில்லியம் ஜோன்சும் கால்டுவெல் பாதிரியாரும் வழங்கிய
திராவிடம் என்னும் ஆயுதத்தை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள்
திறம்படப் பயன்படுத்திக் கொண்டனர். அன்றைய
தமிழ்நாட்டில் (Madras Province) வாழ்ந்து வந்த பிரிட்டிஷ்
ஆட்சியின் தாசர்கள் தத்துவத் தளத்திலும் மொழித்
தளத்திலும் மட்டுமே இருந்து வந்த திராவிடக்
கோட்பாட்டை அரசியல் தளத்துக்குக் கொண்டு வந்து
தமிழ் மக்களை சிந்தனாரீதியாக திராவிடப்
பொய்மைக்கு அடிமைப் படுத்தினர். பல தமிழ்
அறிஞர்களும்கூட இவ்வாறு திராவிடப் படுகுழியில்
வீழ்ந்தனர். அவ்வாறு வீழ்ந்தவர்களுள் ஒருவராக
திராவிட வாழ்த்தை எழுதிய மனோன்மணீயம்
சுந்தரம் பிள்ளையைக் குறிப்பிடலாம்.

இதன் உச்ச கட்டமாக பிரிட்டிஷ் காலனிய தாசரான
ஈவெரா திராவிடர் கழகம் என்ற அரசியல் கட்சியைத்
தொடங்கினார்.அவரின் சீடரும் பிரிட்டிஷின்
தாசானுதாசருமான  சி என் அண்ணாத்துரை
திமுக என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி
மொத்தத் தமிழர்களையும் திராவிட மாயையில்
வீழ்த்தினார்.

இல்லாத திராவிடத்துக்கு ஏன் ஒரு கழகம்? இல்லாத
திராவிடர்களை எப்படி ஐயா முன்னேற்ற முடியும்?
இக்கேள்விகளைத் தமிழன் கேட்கத் தவறினான்.
இதன் விளைவாக அதிகார பேராசை பீடித்த அத்தனை
தெலுங்கர்களும் திராவிடம் என்ற பெயரில் பல்வேறு
கட்சிகளை அரசியல் இயக்கங்களை அமைப்புகளை
ஆரம்பித்தனர்.

தமிழ்நாட்டின் அறிவுத் தளத்தில், சிந்தனைத்
தளத்தில், அரசியல் தளத்தில் வலுவாகவும் ஆழமாகவும்
கிளை பரப்பியும் நிற்கும் திராவிடம் என்னும் நச்சு
மரத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்தாமல்,
வெட்டி எறியாமல் ஆயிரம் கீழடிகள் வந்தாலும்
அதனால் தமிழுக்கோ தமிழனுக்கோ எப்பயனும்
விளையப் போவதில்லை. இதுவே உண்மை.
***********************************************

 .

   


  

  
       
குவான்டம் விசையியலும் பௌதிக மெய்ம்மையும்!
Quantum mechanics and the Physical Reality!
இதுதான் பொருள்முதல்வாதம்!
---------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------
புறநிலை மெய்ம்மை அல்லது பௌதிக மெய்ம்மை
(physical reality) என்பது குவான்டம் விசையியலிலும்
தத்துவத்திலும் (philosophy) அடிப்படையான முக்கியத்துவம்
வாய்ந்தது.

1 அடி நீளம், 1 அடி அகலம், 1 அடி உயரம் உள்ள ஒரு
கன சதுரப் பெட்டியில் ஒரு எலக்ட்ரான் இருப்பதாக
வைத்துக் கொள்வோம். பெட்டியின் நடுவிலோ,
ஓரத்திலோ, அடியிலோ, பக்கவாட்டிலோ இப்படி
ஏதேனும் ஓர் இடத்தில் அத்துகள் இருக்கக் கூடும்.

அத்துகள்  எங்கே இருக்கிறது என்பதைத் துல்லியமாக
அறிய இயலுமா? குவாண்டம் விசையியல் என்ன
கூறுகிறது?

வெர்னர் ஹெய்சன்பெர்க் (Werner Heisenberg) இதற்குப்
பதிலளிக்கிறார். இவர் தாம் கண்டு பிடித்த
உறுதியின்மைக் கோட்பாட்டுக்காக (uncertainty principle)
நோபல் பரிசு பெற்றவர்.

மிகவும் எளிமையாகச் சொன்னால், உறுதியின்மைக்
கோட்பாடு என்பது இதுதான்:
"ஒரு துகளின் இருப்பிடத்தையும் அதன் வேகத்தையும்
ஒரே சமயத்தில் ஒருபோதும் துல்லியமாகச் சொல்ல முடியாது.
இருப்பிடத்தைத் துல்லியமாகக் கூறினால்,
வேகத்தைத் துல்லியமாகக் கூற இயலாது.அதைக்
கணிப்பதில் பெரும் பிழை ஏற்பட்டு விடும்.
வேகத்தைத் துல்லியமாகக் கூறினாலோ, இருப்பிடத்தை
அளப்பதில் பெரும் பிழை ஏற்பட்டு விடும்". இதுதான்
உறுதியின்மைக் கோட்பாடு.

மேலே கூறியிருப்பது உறுதியின்மைக் கோட்பாட்டின்
official version அல்ல. ஆங்கிலத்தில் இக்கோட்பாடு
பின்வருமாறு கூறப்படுகிறது. ஆங்கிலத்தில்
உள்ளதே அதிகாரபூர்வமானது.

Uncertainty principle:
"The position and momentum of a particle cannot be simultaneously
measured with precision."

ஆக பெட்டிக்குள் உள்ள எலக்ட்ரான் எந்த இடத்தில்
இருக்கிறது என்பதை ஒருபோதும் துல்லியமாகக்
கூற முடியாது என்கிறார் வெர்னர் ஹெய்சென்பெர்க்.
இவ்வாறு துல்லியமாகக் கூற முடியாமல் போவதற்கு
என்ன காரணம்? கருவிகளின் நுட்பமின்மையா?
இல்லை என்கிறார் ஹெய்ஸன்பெர்க். That uncertainty is
INHERENT in nature என்கிறார் அவர். இத்தகைய
உறுதியின்மை இயற்கையாகவே இருக்கிறது
என்கிறார் ஹெய்சென்பெர்க்.

அப்படியானால் பெட்டிக்குள் இருக்கும் எலக்ட்ரானின்
இருப்பிடத்தை அறியவே முடியாதா? இதற்கு
விடையளிக்கிறார் எர்வின் ஷ்ராடிங்கர் (Erwin Schrodinger)
என்னும் ஆஸ்திரிய விஞ்ஞானி. இவரும் இயற்பியலில்
நோபல் பரிசு பெற்றவர்.

குவான்டம் விசையியலில் ஷ்ராடிங்கரின் Wave equation
மிகவும் புகழ் பெற்றது; மிகவும் அடிப்படையானது.
பெட்டிக்குள் இருக்கும் எலக்ட்ரான் எந்த இடத்தில்
இருக்கக்கூடும் என்பதற்கான நிகழ்தகவை (probability)
தெளிவாகக் கூற முடியும் என்கிறது ஷ்ராடிங்கரின்
சமன்பாடு.

படத்தில் உள்ள ஷ்ராடிங்கரின் சமன்பாட்டைப்
பாருங்கள். இச்சமன்பாட்டுக்கான விளக்கம்
இக்கட்டுரையின் வரம்புக்கு அப்பாற்பட்டது.
சமன்பாட்டில் வரும் கிரேக்க எழுத்தான
ப்சை (psi) என்பதைக் கவனியுங்கள்.

இந்த "ப்சை" ஐ square செய்து அதன் absolute valueஐக்
கண்டறிந்தால், அது துகள் இருக்கும் இடத்திற்கான
நிகழ்தகவை அறிவிக்கும். அதாவது,
modulus psi squared = probability density.
 
ஆக, துகளின் துல்லியமான இருப்பிடத்தை (exact location)
கூற இயலாது. அதாவது இந்த இடத்தில்தான் துகள் இருக்கிறது
என்று அடித்துக் கூற இயலாது. ஆனால் எந்த இடத்தில்
இருக்கக்கூடும் என்பதற்கான நிகழ்தகவை மட்டுமே
கூற இயலும்.
  
ஒரு துகள் எங்கே இருக்கிறது என்பதைக்கூட
அறிவியலால் சொல்ல முடியாதா? அப்படியானால்
அறிவியல் குறைபாடு உடையதுதானே என்று
சிலர் கேட்கலாம். துகளின் இருப்பிடத்தைக்
கூற முடியாமல் போனதில் அறிவியலின் குறைபாடு
எதுவும் இல்லை. இயற்கை அப்படித்தான் இருக்கிறது.
அதாவது பௌதிக மெய்ம்மை எனப்படும் physical reality
அப்படித்தான் இருக்கிறது.

புறநிலை மெய்ம்மை அதாவது இயற்கை இப்படித்தான்
இருக்க வேண்டும் என்று  மனிதன் ஒரு சட்டகத்தை
(frame) உருவாக்கிக் கொண்டு, அதனுள் இயற்கையை
அடைக்க முடியாது. " இயற்கை எப்படி இருக்கிறதோ
அதை அப்படியே மனிதன் ஏற்றுக் கொள்ள வேண்டும்"
என்கிறார் வெர்னர் ஹெய்சென்பெர்க்.

என்றாலும் ஐன்ஸ்டின் குவான்டம் விசையியலில்
உள்ள இந்த உறுதியின்மையை (uncertainty) ஏற்றுக்
கொள்ள விரும்பவில்லை. ஐன்ஸ்டின் மட்டுமா?
லூயி டி பிராக்லியம் விரும்பவில்லை. இன்னும்
சிலரும் விரும்பவில்லை. அக்காலத்தில் நியல்ஸ் போர்
(Neils Bohr) தலைமையில் சிலரும் ஐன்ஸ்டின்
தலைமையில்  சிலரும் என அறிவியல் உலகமே
இரு பிரிவாகப் பிரிந்து நின்று விவாதித்தது.

மனிதனின் சட்டகத்துக்குள் இயற்கை ஒருபோதும்
அடங்காது. இயற்கையை அது எப்படி இருக்கிறதோ
அப்படியே அதைப் புரிந்து கொள்வதுதான் சரியானது.
பௌதிக மெய்ம்மை (physical reality) என்பது இப்படித்தான்
இருக்கிறது; அது ஏகப்பட்ட உறுதியின்மைகளைக்
கொண்டிருக்கிறது என்றால், அதை அப்படியே
ஏற்றுக் கொள்வதுதான் சரியானது.

சரி, இந்தக் கட்டுரை புரிகிறதா? குவான்டம்
விசையியலிலும் தத்துவத்திலும் உள்ள மிக
முக்கியமான ஒரு பிரச்சினை குறித்து எழுதப்பட்ட
கட்டுரை இது. இதை இந்த அளவுதான்
எழுத இயலும். தமிழில் எழுதுவது ஒரு சிக்கல்.
அறிவியல் குறியீடுகளைப் பயன்படுத்தாமல்
எழுதுவது இன்னொரு சிக்கல்.

ஒரு முறைக்கு இருமுறை படியுங்கள். புரிந்து
கொள்ள முயற்சி செய்யுங்கள்.இந்தப் பொருளில்
தமிழில், இவ்வளவு  அக்கறையுடன் எவரும் எழுதப்
போவதில்லை.
--------------------------------------------------------------------
பின்குறிப்பு:
அறிவியல் ஒளி இதழில் இக்கட்டுரை ஆசிரியர் எழுதிய
ஷ்ராடிங்கரின் பூனை என்ற கட்டுரைப் படிப்பது
இக்கட்டுரையைப் புரிந்து கொள்ள உதவும்.
***********************************************


 
 


.                

சனி, 21 செப்டம்பர், 2019

சூரியனுக்குச் செல்லும் ஆதித்யா!
இஸ்ரோ அனுப்பும் விண்கலன்!
--------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------
சூரியனை ஆய்வு செய்ய ஒரு விண்கலத்தை அனுப்ப
இருக்கிறது இஸ்ரோ. சூரியனை ஆய்வு செய்வது என்றால்
சூரியனின் வளிமண்டலமாக இருக்கின்ற வெளிப்புற
அடுக்குகளை (outer layers) ஆய்வு செய்வது என்று பொருள்.
1. Photosphere 2. coronasphere 3.Corona ஆகிய மூன்றும் வெளிப்புற
அடுக்குகள் ஆகும்.

சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பும் விண்கலம்
ஆதித்யா எனப் பெயரிடப் பட்டுள்ளது. இதன்
அதிகாரபூர்வமான பெயர் Aditya L-1 ஆகும். இங்கு
L-1 என்பது Lagrengian-1 ஆகும். L-1 என்பது ஒரு
லாக்ரேஞ்சியன் புள்ளி ஆகும்.

L-1 என்னும்  லாக்ரேஞ்சியன் புள்ளியைச் சுற்றி
ஆதித்தியாவின் orbit இருக்கும். எனவேதான் விண்கலனுக்கு
ஆதித்யா L-1 என்று பெயர்.

ஜோசப் லூயி லாக்ரேஞ்ச் (Joseph Louis Lagrange 1736-1813)
என்பவர் ஒரு பிரெஞ்சுக் கணித மேதை. இவர் உலகப்
புகழ் பெற்ற கணித மேதை ஆய்லரின் சீடர். இவரின்
பங்களிப்பு கணிதத்தில் பல துறைகளைத் தழுவியது.
லாக்ரேஞ்சியன் புள்ளிகள் இவரின் celestial mechanicsல்
வருபவை.

ஆதித்யா L-1 விண்கலன் ஹாலோ சுற்றுப்பாதையில்
(halo orbit) விடப்படும். இந்தச் சுற்றுப்பாதை L-1 என்னும்
லாக்ரேஞ்சியன் புள்ளியைச் சுற்றி அமையும்.
இப்புள்ளி (L-1) குறித்தும் halo orbit குறித்தும் நிறைய
எழுத இயலாது. அதுவும் தமிழில் எழுத இயலாது.

எனவே வாசகர்கள் உரிய நூல்களைப் படித்துத்
தெளிவு பெறவும்.
************************************************            


வெள்ளி, 20 செப்டம்பர், 2019

ISRO and its future missions.
------------------------------------
The advent of space era
----------------------------
The advent of space era began with the launch of Sputnik-1 in 1957 by the then USSR
(presently Russia). In 1961 Yuri Gagarin of USSR became the first human to fly in outer space.
In 1963 Valentina Tereshkova, a woman cosmonaut was the first woman to fly in space
around the earth.

Neil Armstrong and Buzz Aldrin have landed on moon in 1969 and the
decade of 60s was filled with space adventures. India lagged behind and only
in 1975 Indian satelite Aryabhata was launched using the launch vehicle of USSR.
 
Though belated the progress of India in space was slow but steady. India on its own
has developed her launch vehicles PSLV and GSLV. India has set a world record
in 2017 while launching 104 satellites in a single launch using PSLV C-37. India's
lunar orbiter mission, Chandrayan-1 in 2008 and Mars orbiter mission in 2013
were successful.

The future plans of ISRO are as follows.

Aditya L1 mission to the sun:
------------------------------------
a) The project is approved and the launch is expected to be in 2020.
b) Aditya L1 is not like Chandrayan which is a full fledged orbiter
closely orbiting the moon in a lunar polar orbit as close as 100x100 km.
(periselene 100 km and aposelene 100 km).
3) It is a mission to the sun to observe and study it and placed in a halo orbit
around the Lagrangian point L1 which is 1.5 million km away from the earth.
(The distance between sun and earth is 150 million km).
4) Halo orbit is so advantageous that even during the eclipses the sun's view
will not be interrupted.
5) Aditya L1 has 7 pay loads and VELC (Visible Emission Line Coronagraph)
is the main one.
6) NASA's Parker Solar Probe, a massive project launched in 2018 is
already functioning and compared to this our Aditya L1 is tiny but once
the mission is successful it will be useful to the entire mankind.
7) The purpose is to study the corona, the outer layer of the sun which has a
temperature of  about a few million degree Kelvin.This is far far greater
than the surface temperature of the sun which is about 6000 degree Celsius.
------------------------------------------------------------------------
NB: Wherever there is a three body system like Sun-Earth-orbiting satellite
comes, halo orbits will arise. Lagrangian points are the positions in a halo
orbit where the orbiting satellite can maintain its position without being
pulled by the gravitation of the massive bodies.
-------------------------------------------------------------------------------------
Gaganyaan:
----------------
1) This project with a budget of Rs 10,000 crore was approved by Union cabinet.
2) This would be the first manned space mission by India. (Earlier in 1984,
Rakesh Sharma, an Indian astronaut traveled in space in Soyuz, a spacecraft
launched by USSR).
3) Gaganyaan is expected to be launched in August 2022.
4) Three Indian astronauts will be taken to space by Gaganyaan.
After the astronauts are selected they will be given rigorous training for 1.5 years.
5) GSLV Mark III will launch Gaganyaan.
6) Gaganyaan will be placed in an LEO (Low Earth Orbit) of 300 to 400 km.
It will take 16 minutes to reach the orbit and will stay in space for 5 to 7 days.
7) ISS (International Space Station) is already functioning in space at an altitude
of 408 km for the past 20 years.
8) Orange coloured space suits were prepared by ISRO and displayed at a
space expo held in Bangaluru earlier.
9) The astronauts will conduct experiments on micro gravity in space.
10) After staying for 5 or 7 days in space, Gaganyaan will safely return to
earth and land at Arabian sea near the coast of Gujarath. The return journey
will take 36 hours.
--------------------------------------------------------
Mangalyan-2
-----------------
1) Mangalyan-2, the second Mars Orbiter Mission is proposed by ISRO and
the expected launch would be during 2022-2023.
2) Generally Mangalyan-2 will be an orbiter but whether a lander and rover
will accompany it is not yet known.
3) The project is funded by the union govt in its 2018 budget.
4) Mangalyan-2 will have GSLV Mark III as its launch vehicle.
Mangalyan-1 was launched using PSLV XL C-25 and this  is to be remembered here.
(PSLV is less powered when compared to GSLV).
5) The aim of the mission is to have a still closer look at Mars using highly
sophisticated instruments.
6) Stephen Hawking has often told that the humanity should colonize
other planets because our earth is fastly becoming unsuitable to live.
So an investigation of Mars which is the second best planet after earth in our
solar system is necessary. Thus Mangalyan-2 is justified.
-----------------------------------------------------------------------------------
Shukrayaan (Venus probe mission)
------------------------------------------
1) Venus is the brightest planet in our solar system. It does not have a moon
but has a dense atmosphere. Its surface temperature is about 462 degree Celsius.
Shukrayaan will probe Venus. The necessary budget allocations were already made.
2) Shukrayaan is an orbiter mission.
3) The proposed launch would be in 2023.
4) GSLV Mark III will be the launch vehicle.
5) The final configuration is being studied and after that a full approval
will be sought from the government.
6) The aim of the mission is to study the surface of Venus and its
atmospheric features.
----------------------------------------------------------------------------
Indian Space Station:
------------------------
1) It is proposed to have a separate space station for India alone.
2) However this will be seriously perused only after the success of
Gaganyaan, India's manned mission to space which is scheduled for
August 2022.
3) Our space station will weigh 20 tonne and astronauts may stay there
for a period of 15 to 20 days.
4) It will be placed in an orbit at an altitude of 400 km above earth.
5) The launch may take 5 to 7 years after the success of Gaganyaan.
************************************************************

     
இந்தியக் கணிதத்தின் தந்தை (Father of Indian mathematics)
என்று போற்றப் படுகிறார் ஆரிய பட்டர். காலம்
பொதுயுகம் 5ஆம் நூற்றாண்டு. கணிதம், வானியலில்
பெரும் பங்காற்றி உள்ளார்.

முக்கோணவியலில் sine, cosine ஆகியவற்றைக்
கண்டறிந்து அவற்றின் மதிப்புகளை அட்டவணைப்
படுத்தி உள்ளார்.

இவர் எழுதிய நூற்கள் ஆரியபட்டியம், ஆரிய சித்தாந்தம்
ஆகியவை. இவை சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட
நூற்கள்.

குப்தர்கள் காலத்தில் வராக மிகிரர் என்னும் கணித
வானியல் நிபுணர் இருந்தார்.       

வியாழன், 19 செப்டம்பர், 2019

குரங்குகள் எத்தனை?
---------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------
ஒரு குரங்குக் கூட்டத்தில் உள்ள குரங்குகளின்
அரைக்கால் பாகத்தின் வர்க்கம் ஒரு பழத்
தோட்டத்திற்குள் நுழைந்தன. மீதமுள்ள 12 குரங்குகள்
அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று விட்டன.
அப்படியானால் அக்கூட்டத்தில் உள்ள மொத்தக்
குரங்குகள் எத்தனை?   

லீலாவதி நூலில் இருந்து எடுக்கப்பட்ட கணக்கு!
------------------------------------------------------------------------
பாஸ்கரர் (Bhaskara II)  என்னும் இந்தியக் கணித மேதை
12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். உஜ்ஜயினியில் இருந்த
வானியல் மையத்தின் தலைவராக இருந்தார். இவர்
எழுதிய சிறந்த கணித நூல்களில் மிகவும் புகழ் பெற்றது
லீலாவதி என்னும் கணித நூல். அல்ஜிப்ராவில் உள்ள
எளிய கணக்குக்களைக் கொண்ட நூல் இது.

மேற்கண்ட குரங்குக் கணக்கு லீலாவதி நூலில் இருந்து
எடுக்கப் பட்டது.

இக்கணக்கு அல்ஜீப்ராவில் உள்ள இருபடிச் சமன்பாடு
(Quadratic equation) என்ற பிரிவில் வரும் கணக்கு.
மேலை உலகம் quadratic equation பற்றி எப்போது
அறிந்து கொண்டது? யாரிடம் இருந்து அறிந்து
கொண்டது? பாஸ்கரரிடம் இருந்துதான்.

பண்டைய கிரேக்கத்தில் வடிவியல் புகழ் பெற்று
இருந்தது. ஆனால் அல்ஜீப்ராவில் கிரேக்கர்களின்
பங்களிப்பு எதுவும் இல்லை. லீலாவதி நூல் இந்த
உண்மையை உணர்த்தும்.

படத்தில்: சமஸ்கிருதத்தில் பாஸ்கரர் எழுதிய நூல்
இன்றும் உள்ளது. படத்தில் உள்ளது அமெரிக்கப்
பல்கலைக்கழகம் பாதுகாத்து வைத்துள்ள ஒரிஜினல்
textன் புகைப்படப் பிரதி.

விடைகள் வரவேற்கப் படுகின்றன.
************************************************* 

திஹார் சிறையில் சிதம்பரம் நடத்தும் வகுப்புகள்!
வந்தவர்கள் எத்தனை பேர்?
---------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------
திஹார் சிறையில் ப சிதம்பரம் அவர்கள் பொருளாதார
வகுப்புகளை நடத்தி வருகிறார். முதல் நாள் நடந்த
வகுப்புக்கு 36 பேர் வந்தனர்.

இரண்டாம் நாள் நடந்த வகுப்புக்கு முந்திய வகுப்புக்கு
வந்தவர்களை விட 19 பேர் அதிகம் வந்தனர். இவ்வாறு
ஒவ்வொரு நாள் வகுப்புக்கும் முந்திய நாளின் வகுப்புக்கு
வந்தவர்களை விட 19 பேர் அதிகம் வந்தனர். மொத்தம் 14
நாட்கள் வகுப்புகள் நடந்தன.

இந்த 14 வகுப்புகளிலும் சேர்த்து மொத்தம் எத்தனை பேர்
வகுப்புக்கு வந்தனர்?

விடைகள் வரவேற்கப் படுகின்றன.
***************************************************
இந்தக் கணக்கைச் செய்யுங்கள். கல்வி சார்ந்த
விஷயங்களில் கருத்துக்கூறும் அருகதையைப்
பெறுங்கள்.
**************************************************** 

கணக்கைச் செய்ய முயற்சி செய்யவும். இந்தக்
கணக்கு 10, 11 வகுப்பின் பாடத்திட்டத்துக்குள்
அடங்கிய கணக்குதான். இக்கணக்கு எந்த
topicல் வருகிறது என்றாவது அறிய முயற்சி செய்யவும்.
அறியாமையை வெளிப்படுத்துவதில் இவ்வளவு


சரியான விடையும் விளக்கமும்!
-------------------------------------------------
வகுப்புகளுக்கு வந்தவர்கள் = 36, 55, 74,..... என்பதாக
அமையும். இவற்றைக் கூட்டினால் 2233 வரும்.
இதுதான் வகுப்புக்கு வந்தவர்களின் மொத்தம்.

 36,55,74,...... இது ஒரு Arithmetic Progression.
இதன் முதல் உறுப்பு= 36. இதை a என்க.
இத்தொடரில் மொத்தமுள்ள உறுப்புக்கள் = 14. (n என்க)
பொது வேறுபாடு = 19. இதை d என்க.
 
Sum of  n terms of an AP = S = n /2 ( 2a + (n-1) d)
இக்கணக்கில் n =14, a =36, d = 19.
S = 7 (72+ 13*19) = 2233.

வகுப்புக்கு வந்தவர்கள் = 2233 பேர்.
*******************************************
Plus 2வில் தற்போதுள்ள 6 பாடங்களை
ஐந்தாகக் குறைக்கும் தமிழக அரசின்
முடிவு கல்வியை அழிக்கும் முடிவு!
தற்போது 2 மொழிப்பாடங்களும் (தமிழ், ஆங்கிலம்)
4 பிற பாடங்களும் உள்ளன. உதாரணம்:
கணக்கு, உயிரியல், இயற்பியல், வேதியியல்.
இப்போது இந்த நான்கில் ஒன்றைக் குறைத்து
மூன்றாக ஆக்கும் உத்தேசத்தை செங்கோட்டையன்
அறிவித்துள்ளார்.

இது மாணவர்களின் வாய்ப்பைப் பறிக்கும் செயல்.
எந்தவொரு மாணவருக்கும் எந்தவொரு பள்ளியிலும்
4 பாடங்களின் இருப்பை உறுதி செய்ய வேண்டும்.

இந்திதான் ஆட்சிமொழி என்று
அரசமைப்புச் சட்டத்தில் உள்ளதை
நீக்கும்வரை இந்தி எதிர்ப்பு ஓர் அணையா நெருப்பாக
இருக்க வேண்டும்.


திமுக இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை
வாபஸ் பெற்றது கோழைத்தனமான செயல்.


தற்போதைய நிலைமை:
மொழிப்பாடம் 2 மற்றும் பிற பாடம் 4; மொத்தம்=6
செங்கோட்டையன் திட்டம்:
மொழிப்பாடம் 2 மற்றும் பிற பாடம் 3; மொத்தம் =5.

செங்கோட்டையன் கூறுவது:
1) 6 பாடங்களை விரும்பும் மாணவர்கள்
6 பாடங்களை எடுத்துக் கொள்ளலாம் என்றும்
விரும்பாத மாணவர்கள் 5 பாடங்களை எடுத்துக்
கொள்ளலாம் என்றும் கூறுகிறார்.

6 பாடங்களை விரும்பும் மாணவர்களின் நிலை என்ன?
அவர் படிக்கும் பள்ளியில் 5 பாடங்கள் மட்டுமே 


புதன், 18 செப்டம்பர், 2019

சரியான விடையும் விளக்கமும்!
--------------------------------------
சரியான விடை: 153 கைகுலுக்கல்கள்.

விளக்கம்:
18 MLAகளுக்கும் ABCD EFGH IJKL MNOP QR என்று
பெயர் கொடுப்போம். A என்பவர் B,C,D,E,....Q,R என்று
மொத்தம் 17 பேருடன் கைகுலுக்குவார். எனவே A என்பவர்
17 கைகுலுக்கல்களைச் செய்கிறார்.
**
இதே போல, B என்பவர் C,D,E,F.......R என்று 16 குலுக்கல்களை
செய்வார். (A என்பவர் Bயுடன் ஏற்கனவே கைகுலுக்கி
விட்டதால், அதை இங்கு மீண்டும் சேர்க்கக் கூடாது).
**
இதே போல, C என்பவர் 15 குலுக்கல்கள்,
D என்பவர் 14 குலுக்கல்கள் என்று தொடரும்.
இறுதியில் Q என்பவர் ஒரே ஒரு குலுக்கலை
மட்டுமே மேற்கொள்ளுவார். R= 0 குலுக்கல்.
**
இப்போது மேற்கூறிய அனைத்து கைகுலுக்கல்களையும்
கூட்டவும். 17+16+15+.......+1= 153.
விடை= 153 குலுக்கல்கள்.
**
PERMUTATION, COMBINATIONக்கெல்லாம் போகாமல்
மிக எளிமையாக கணக்கைச் செய்துள்ளேன்.
புரியும் என்று கருதுகிறேன்.
கற்பனை எண்கள் உள்ளனவா?
டி மோவிர் தேற்றம்! இது ஒரு முக்கோணவியல் தேற்றம்!
இதன் சிறப்பு அம்சம் என்ன?
----------------------------------------------------------------------------------
1,2,3 என்று எண்ணுகிறோம். இவை இயற்கையான எண்கள். 
இவை Natural numbers எனப்படும்.

கற்பனை எண்களும் உள்ளன. ஆனால் அவை கற்பனை அல்ல.
16ன் வர்க்க மூலம் என்ன? 4 ஆகும்.
மைனஸ் 16ன் வர்க்க மூலம் என்ன? 4i ஆகும்.
இந்த 4i யில் i stands for imaginary.

மெய்யான எண்களும் கற்பனையான எண்களும்
கலந்தால் சிக்கல் எண்கள் (complex numbers) தோன்றுகின்றன.
a+ib என்பது ஒரு complex நம்பர்.

நிற்க. எண்கள் என்றாலே கற்பனை எண்களும்
சேர்ந்ததுதான். கற்பனை எண்கள் இல்லாமல்
கணிதம் இல்லை.

முக்கோணவியலில் டி மோவிர் தேற்றம் (De Movir's theorem)
என்ற ஒன்று உண்டு. இந்தியாவில் இத்தேற்றத்தை
11ஆம் வகுப்பில் சொல்லித் தருகிறார்கள். ஐரோப்பாவில்
ஒன்பதாம் வகுப்பிலேயே சொல்லிக் கொடுத்து
விடுகிறார்கள்.

இத்தேற்றத்தின் சிறப்பு அம்சம் என்ன? n வரைக்கும்
expand செய்தால் n+1 terms கிடைக்க வேண்டும். ஆனால்
இரண்டே termsல் முடிந்து விடும். n+1 terms என்றால்
எவ்வளவு பெரிய கழுத்தறுப்பு! ஆனால் இரண்டே
termsல் முடித்து விடுகிறார் டி மோவிர்.

இந்தத் தேற்றத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.
விளக்கமாக எழுத இயலாது. அடுத்து ஆய்லர் (Euler)
குறித்தும் ராமானுஜன் குறித்தும் எழுத வேண்டி உள்ளது.
அதை புரிந்து கொள்ள வேண்டுமெனில் டி மோவிர்
பற்றி அறிந்திருக்க வேண்டும் என்பது நிபந்தனை.
 **************************************************
பின்குறிப்பு: கணிதப் பின்னணி உடையோருக்கு
மட்டுமானது  இக்கட்டுரை.
-------------------------------------------------------------- ப்

திங்கள், 16 செப்டம்பர், 2019

அன்று....அஞ்சாங்கிளாஸ் படித்தவன்
தினத்தந்தியை வாசித்தான்!
இன்று.... ஒன்பதங்கிளாஸ் படிக்கிற பையனால்
தினத்தந்தியை வாசிக்க முடியவில்லை!
--------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------
1960களில் ஒரு காட்சி! தமிழ்நாடு முழுவதும் இந்தக்
காட்சியைக் காணலாம். ஒரு டீக்கடையில் ஒருவர்
தினத்தந்தியை உரத்த குரலில் வாசித்துக் கொண்டு
இருப்பார். சுற்றிப் பத்துப்பேர் உட்கார்ந்து கொண்டு
அவர் வாசிப்பதைக் கேட்டுக் கொண்டு இருப்பார்கள்.

அவருக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியும். சுற்றி
உட்கார்ந்து கேட்பவர்களுக்கு படிக்கத் தெரியாது.
தினத்தந்தி வாசிப்பவர் என்ன எம் ஏ படித்தவரா?
இல்லை. அஞ்சாங்கிளாஸ் மட்டுமே படித்தவர்.

அஞ்சாங்கிளாஸ் படித்தவரால் அன்று தினத்தந்தியை
எல்லோருக்கும் படித்துக் காட்டும் அறிவு இருந்தது.

ஆனால் இன்று 2001ல் என்ன நிலைமை? ஒன்பதாம்
வகுப்பில் படிக்கும் மாணவனுக்கு தினத்தையை
எழுத்துக் கூட்டிக்கூட வாசிக்க முடியவில்லை.
இதுதானே அரசுப் பள்ளிகளின் நிலைமை! இதுதான்
லட்சணம் என்று பள்ளி ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

அன்று 1960ல் அஞ்சாங்கிளாஸ் படித்தவன் தினத்தந்தியை
அழகாக வாசித்தான். இன்று  ALL PASS முறையில்  .
ஒன்பதாம்  வகுப்பு வரை வந்த மூதேவிக்கு
தினத்தந்தியை வாசிக்க முடியவில்லை. இதற்கு ஒரு
காரணம் ALL PASS முறை.

தினத்தந்தியை வாசிக்க முடியாத மாணவர்களை
வைத்துக்கொண்டு தேர்ச்சி விகிதம் காட்ட வேண்டும்.
தேர்ச்சி விகிதம் குறைந்தால், மாவட்டக் கல்வி
அதிகாரியிடம் இருந்து ஆசிரியருக்கு மெமோ வரும்.

பையனைக் கண்டித்தாலோ ஒன்று தற்கொலை
செய்து கொண்டு விடுவான். அல்லது பெற்றோர்கள்
என்று ஒரு கூட்டமே வந்து ஆசிரியரைக் கைது செய்யச்
சொல்லிப் போராடும்.

எருதின் நோய் காக்கைக்குத் தெரியாது. ஆசிரியர்களின்
கஷ்டம் மற்றவர்களுக்குத் தெரியாது. கருத்து கந்தசாமிகள்
முற்போக்கு கருத்து என்று சொல்லிக் கொண்டு
தேர்வு வேண்டாம் என்று சொல்லி முற்போக்கு TRP
ரேட்டிங்கில் புள்ளிகளைப்  பெறுவார்கள்.

எனவே 5, 8 வகுப்புகளில் தேர்வு வேண்டுமா?
வேண்டாமா? ஆசிரியர்கள் முடிவு செய்யட்டும்.

எட்டாங்கிளாஸ் பெயிலாப் போனவனும்
SSLC பெயிலாப் போனவனும்
ஹோமியோபதி வைத்தியனும்
தேர்வு வேண்டாம் என்று கருத்துச் சொல்லும்
அருகதை அற்றவர்கள்.
***********************************************

உங்கள் சொந்த அனுபவத்தை வைத்துக் கொண்டு
தீர்மானிக்க முடியாது. தனிநபரை முன்னிலைப்
படுத்தி முடிவுகளை எடுக்கக் கூடாது.

அந்தக் காலத்தில் பெயிலாகப் போனால்
ஓராண்டு வீணாகி விடும். இன்று அப்படி இல்லை.
இரண்டே மாதத்தில் மறுதேர்வு (reexam) வைக்கிறார்கள்.
ஓராண்டு வீண் ஆவதில்லை.

இதில் என்னுடைய கருத்து, உங்களுடைய கருத்து
என்பதை விட, பாடம் எடுக்கும் ஆசிரிய சமுதாயம்
என்ன முடிவு எடுக்கிறது என்பதே முக்கியம்.
முடிவை அவர்கள் எடுக்கட்டும். 


ஆசிரியர் கண்டித்ததால் மாணவி தற்கொலை
என்ற செய்தி அபூர்வமான செய்தியே அல்ல.
ஆசிரியரைக் கைது செய் என்று போராட்டம்
சர்வ சாதாரணம்.


  


  

இந்தி ஆடசிமொழி என்பதை அம்பேத்கார் ஏற்கவில்லை!

இந்தி என்பது மாறுவேஷத்தில் இருக்கும் உருது!


இந்தி ஒருபோதும் இந்தியாவின் அடையாளமாக 
இருக்க இயலாது. அதை ஏற்க இயலாது.


லெனின் என்ன சொல்லி இருக்கிறாரோ அதை நான் 
சுட்டிக் காட்டுகிறேன். இந்தப் பதிவில் என் கருத்து 
என்று எதுவும் இல்லை. லெனின் மடத்தனமாகச் 
சொல்லி விட்டார் என்றுதான் நீங்கள் சொல்கிறீர்கள்.
அதை தைரியமாகச் சொல்லுங்கள். 

aintham vakuppu
   முதுகலை 


பண்பாட்டுத் தளத்தில் தனித்து இயங்கும்.
உற்பத்தித்துறையில் தமிழ் இயங்கவே இல்லை; தமிழே இல்லையே.தேர்வு! ஆசிரியர் சங்கம் வரவேற்பு!
------------------------------------------------------
ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்புகளில் 
மாவட்ட அளவிலான பொதுத்தேர்வு நடத்தும் 
தமிழக அரசு உத்தரவுக்கு
முத்துக்களை பட்டதாரி ஆசிரியர் சங்கம் வரவேற்பு!   


இந்தியாவின் ஆடசி மொழி என்றும் 
இந்தியாவின் அடையாளம் 
என்றும் நான் 
1) தமிழை ஏற்கிறேன் அல்லது 
2) வங்க மொழியை ஏற்கிறேன் அல்லது 
3) சமஸ்கிருதத்தை ஏற்கிறேன் அல்லது 
4) மராத்தியை ஏற்கிறேன் 
5) ஆனால் ஒருபோதும் இழிந்த இந்தியை ஏற்க மாட்டேன்.
மீண்டும் சொல்கிறேன்: இந்தி என்பது மலமே!

ஐயா லெனினை விட நான் பெரியவன் அல்ல.
லெனின் சொன்னதை அப்படியே ஏற்கிறேன்.
மார்க்சிஸ்ட் என்பவர் யாராக இருப்பினும்,
அவர் லெனின் சொன்னதை ஏற்க வேண்டும் என்று 
விரும்புகிறேன். 

ஏற்கவில்லை என்றால், லெனின் 
சொன்னது தப்பு என்று சொல்லும் உரிமை ஒவ்வொருவருக்கும் 
உண்டு. அறிவியலைக் கற்க வேண்டும் என்று லெனின் 
சொன்னதை எதிர்ப்பது கடைந்தெடுத்த பிற்போக்குச் 
சிந்தனை ஆகும். ஒரு பிற்போக்காளன் கம்யூனிஸ்ட்டாக 
இருக்க முடியாது.
  மொழி என்பது வெறும் கருவி மட்டுமல்ல.
வெறும் கருவியாக மட்டும் பார்ப்பது யாந்திரீகமான 
பார்வை. காந்தி செய்த தவற்றின் விளைவாக 
இந்தியாவில் இன்றும் ஆடசிமொழிச் சிக்கல் 
இருந்து கொண்டு இருக்கிறது.

இந்த வரலாற்றுக்கு களங்கத்தைத் துடைத்தெறியும் 
வாய்ப்பு பாஜகவுக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் 
காந்தியின் மலமான இந்தியையே பாஜகவும் 
விரும்பி உண்ணும் என்றால் நான் என்ன சொல்ல இருக்கிறது?

விண்ணியற்பியல் என்பது வேறு; சோதிடம் என்பது வேறு.
சோதிடம் என்பது மூட நம்பிக்கை. சோதிடம் என்னும்
பிற்போக்கு இந்த உலகம் முழுவதும் ஒவ்வொரு மொழியிலும் 
உள்ளது. இதில் பெருமை கொள்ள இயலாது.

ஆகாயப் புரவி என்பது விமானம் என்றால், ராவணன் 
சீதையை புஷ்பக விமானத்தில் தூக்கிச் சென்றான் 
என்பதையும் நம்ப நேரிடும்.

இவையெல்லாம் தமிழில் உள்ள அறிவியல் நூல்கள் 
என்று நூல்வாரியாக, நூலாசிரியர்வாரியாக 
ஒரு பட்டியலை நம்மால் ஏன் தர இயலவில்லை என்று 
சிந்திப்பதால் மட்டுமே பயன் விளையும்.


மாண்புமிகு சிதம்பரம் அவர்கள்   வேட்டி 
அன்று உள்துறை அமைச்சராக இருந்தபோது 
இந்தியில் பேசுகிறார்!
அழகான இந்தி! அற்புதமான இந்தி!
இந்தி வாழ்க என்கிறார் ப சிதம்பரம்!
வெட்டி கட்டிய தமிழன் இந்தியில் பேசலாமா?


கோள்களின் நகர்வு பற்றியது வானியல் (astronomy).
சோதிடம் (astrology) என்பது வெறும் மூடநம்பிக்கை 
மட்டுமே. வானியல் அறிஞர்கள் கண்டுபிடித்த 
வானியல் அறிவை வைத்துக் கொண்டு, ஆருடம் 
என்று பலன்களைக் கூறுவது மட்டுமே சோதிடம்.
சோதிடத்தில் இரண்டு பகுதிகள் என்றெல்லாம் இல்லை.
காலங்காலமாக இது போன்ற மூட நம்பிக்கைகள் 
எல்லா நாட்டினரிடமும் உண்டு. தமிழரிடமும் உண்டு.
அறிவியல் என்றால் இயற்பியல் என்று பொருள்.
மருத்துவம் வாரிசுகளுக்குச் சொல்லித் தரப்
படுகிறதே. பிரபல சேலம் சித்த வைத்தியர் சிவராஜ் 
குடும்பம்  பற்றி தமிழகமே அறியும்.
நான் கேட்பது இயற்பியல், பொறியியல் பற்றி.


சோதிடர்கள் 


அறிவியல் நூல் ஏன் இல்லை என்று சிந்திப்பதும் 
அதற்கு விடை காண முயல்வதும் மட்டுமே 
பயன் தரும். நோய் நாடி நோய் முதல் நாடி 
என்கிறார் வள்ளுவர். காய்ச்சலின் அளவு இத்தனை டிகிரி 
ஃபாரன்ஹீட் என்று காட்டுகிறது தெர்மா மீட்டர்.
அறிவார்ந்த மருத்துவன் தெர்மா மீட்டர் காட்டும் 
வெப்பத்தின் அளவை அறிந்து மருந்து கொடுக்கிறான்.
அறிவிலியோ தெர்மா மீட்டரை திகழ்கிறான்.
இந்தக் கட்டுரை தெர்மா மீட்டர் போன்றது. 

நூற்கள் இருந்தால் பட்டியல் தரலாம்.
பட்டியல் தர இயலவில்லை என்றால் ஏன் தர இயலவில்லை   
என்று சிந்திக்க வேண்டும்.

நவீன இயற்பியலில் இழைக்கொள்கை (string theory) 
என்று ஒரு கோட்பாடு உண்டு. சார்பியல் கொள்கை,
குவான்டம் கொள்கை ஆகியவற்றை எல்லாம் தாண்டி 
அதி நவீனக் கொள்கையாக இன்று இருப்பது 
நான் கூறிய இழைக்கொள்கை ( string theory). இது 
குறித்து தமிழில் எத்தனை கட்டுரைகள் இருக்கின்றன?
ஒரே ஒரு கட்டுரை மட்டுமே உள்ளது. அது நான் எழுதியது.
மூன்று ஆண்டுக்கு முன்பு எழுதியது.

வெறுமனே தமிழ் தமிழ் என்று சுயஇன்பம் அனுபவிப்பதால் 
தமிழுக்கு எந்த லாபமும் இல்லை.
யானையும் பூனையும்!
---------------------------------இந்தி பரிதாபத்துக்கு உரிய ஒரு மொழி. இந்தி மொழி 
சமூகத்தின் பொருள் உற்பத்தியில் இல்லை.
இந்தியாவின் பொருள் உற்பத்தியில் இருப்பது ஆங்கிலமே.
எனவே ஆங்கிலத்துடன் இந்தியை ஒப்பிடுவது  
யானையுடன் பூனையை ஒப்பிடுவது போன்றதே.
-----------------------------------------------------------------பொறியியல் படிப்பில் கூட (B.E) அண்ணா பல்கலையின் 
இணைப்புக் கல்லூரிகளில் Civil, Mechanical பிரிவுகளில் 
தமிழ் வழிக் கல்வி உள்ளது. மாணவர்கள் தமிழ் வழிக்
கல்வியில் சேர்வதில்லை. ஆண்டுதோறும் இடங்களைக் 
குறைத்துக் கொண்டே வருகிறது அண்ணா பல்கலை.
ஏன் என்று சிந்திக்க வேண்டாமா?    

தமிழுக்குக் கேடே இதுதான். சமூகத்தின் பொதுவெளியில் 
தமிழுக்கு ஆதரவாக ஒரு சிறு துரும்பைக்கூட நகர்த்தத் 
துப்பில்லாத அறிவிலிகள் தமிழ் தமிழ் என்று வெற்றுக் 
கூச்சல் இட்டுக் கொண்டு இருப்பதுதான்.

கட்டுரையை நீங்கள் படிக்காமலேயே பின்னூட்டம் 
இடுகிறீர்கள். தமிழனிடம் அறிவியல் இருந்தது என்றும் 
பொறியியல் இருந்தது என்றும் உதாரணங்களுடன் 
கட்டுரை சுட்டிக் காட்டுகிறது. கேள்வி இதுதான்!

தமிழனிடம் இவ்வளவு அறிவியல் இருந்த நிலையிலும் 
ஏன் தமிழில் அறிவியல் நூல் என்று எதுவும் இல்லை?
நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அறிவியல் இருக்கிறது;
ஆனால் அறிவியல் நூல் இல்லை. 

இதற்கான ஒரு விடை காணும் முயற்சியே இக்கட்டுரை.
இதற்குக் காரணம் நிலவுடைமைச் சமூக காலத்தில் 
தமிழ் ஆடசி மொழியாக இல்லை என்பதாக இருக்கக் கூடும் 
என்று நான் கருதுகிறேன். எனவே தமிழர்கள் கூட 
சமஸ்கிருதத்தைக் கற்றுக் கொண்டு அதில்தான் 
நூல் எழுதினார்கள் என்ற முடிவுக்கு வர வேண்டி இருக்க்கிறது.

இத்தகைய நிலை உலகம் முழுவதும் இருந்திருக்கிறது.
ஆங்கிலேயரான நியூட்டன் லத்தீனில்தான் தனது 
நூல்களை எழுதினார். எனவே சமஸ்கிருதத்தில் 
தமிழ அறிவியலாளர்கள் எழுதி இருக்க வேண்டும் 
என்பது பெறப்படுகிறது.