செவ்வாய், 10 செப்டம்பர், 2019

கஞ்சி அதிகம் கேட்ட ஆலிவர் டுவிஸ்டைப் போல
இஸ்ரோவிடம் அறிவியலை அதிகம் கேட்கும் சமூகம்!
-----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------- 
சந்திரயான்-2 நிலவில் இறங்கும் நிகழ்வை இஸ்ரோ
நேரலையில் ஒளிபரப்பியது. உலகம் முழுவதும் இதைப்
பார்த்தனர். இந்தியாவில் இது பேரளவில் அறிவியல்
விழிப்புணர்வை, ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.
மக்களிடையே அறிவியல் உளப்பாங்கை
ஏற்படுத்துவதில் இது பெரும்பங்காற்றியது.

எனினும் சொல்லத் தக்கதும் சொல்ல வேண்டியதுமான
பல்வேறு அறிவியல் விவரங்களை இஸ்ரோ சொல்லவில்லை.
ஒரு பாமரனுக்கு (layman) எவ்வளவு சொல்ல வேண்டுமோ
அந்த அளவு வரை மட்டுமே சொல்லி உள்ளது இஸ்ரோ.
அறிவியல் சமூகத்திற்கு (scientific community) சொல்ல வேண்டிய
விஷயங்கள் எதையும் சொல்லாமல் வெறும் rudimentary level
விவரங்களுடன் இஸ்ரோ தன்னை மட்டுப்படுத்திக் கொண்டது.
இது இந்தியாவின் அறிவியல் சமூகத்திற்குப் பெரிதும்
ஏமாற்றம் அளிக்கிறது.

1) இஸ்ரோ எதுவும் சொல்லவில்லை      
2) Telemetry dataவுக்கான access எதுவும் இல்லை.
இந்நிலையில் விக்ரம் லேண்டர் என்ன ஆனது என்ற
கேள்விக்கு intelligent guess என்ற அடிப்படையில்தான்
நியூட்டன் அறிவியல் மன்றம் விளக்கம் அளித்து
வருகிறது.

நியூட்டன் அறிவியல் மன்றம் மட்டுமல்ல, பல்வேறு
அறிவியலாளர்களும் இதே போன்று intelligent guess
முறையில்தான் விளக்கம் அளிக்க நேருகிறது.
நாட்டின் அறிவியல் சமூகத்தை இத்தகைய
இரங்கத்தக்க நிலையில் இஸ்ரோ வைத்திருப்பது
வருந்தத் தக்கது.

Our predictions on Vikram lander are based on the strength of our 
profound study of physics and we are confident that our robust
common sense is a derivative of such study.

சந்திரயான்-2வின் தொடக்க காலத்தில், ஜூலை
மாதத்தில் நான் எழுதிய சில முகநூல் பதிவுகளை
எடுத்து இஸ்ரோ தன் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில்
வெளியிட்டு இருந்தது. ஆனால் எனது பதிவுகள்
தொடர்ந்து தமிழில் மட்டுமே இருந்தமையால்,
இஸ்ரோவின் கவனத்தைப் பெற இயலவில்லை.
ஆங்கிலத்தில் எழுதி இருந்தால், அவை பெரிய
அளவில் இஸ்ரோவால் கொண்டாடப்பட்டு இருக்கும்.

சந்திரயான் குறித்த மேலதிகமான அறிவியல் செய்திகளை
இஸ்ரோ ஏன் வெளியிடவில்லை என்று கேட்டபோது,
ஒரு insider என்னிடம் கூறியது; " அறிவியல் செய்திகளை
ஆங்கிலத்தில் மட்டும்தான் வெளியிட இயலும். அப்படி
வெளியிட்டதும் இந்தியில் மொழிபெயர்த்து
வெளியிடுமாறு கோரிக்கை வலுவாக எழும். அதை
மத்திய அரசு நிறுவனமான இஸ்ரோவால் தட்ட முடியாது.

இந்தியில் வெளியானதுதான் தாமதம்! உடனே தமிழில்
வெளியிடுங்கள் என்று கோரிக்கை வலுக்கும்.
a plus b whole squared என்றால் என்னவென்றே தெரியாத
மேதைகள் தத்தம் மொழியில் வெளியிடுமாறு
கோரிக்கை வைப்பார்கள். இது போன்ற வம்புகளில்
மாட்டிக் கொள்ளக் கூடாது என்று இஸ்ரோ கருதுவதாலேயே
barest minimum என்பதுடன் இஸ்ரோ நிறுத்திக் கொள்கிறது
என்றார் அந்த insider. ஆக இத்துப்போன மொழித்
தற்குறி  அரசியலானது அறிவியலைக் காவு
வாங்கி விடுகிறது.
*************************************************   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக