தேர்வுக்குரிய பாடமாக திருக்குறள்! வரவேற்போம்!
குருவி மூளை அதிகாரிகளுக்கு ஓர் வேண்டுகோள்!
-----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------
தமிழக அரசுப்பணியாளர் தேர்வு பிரிவு-2ல்
(TNPSC Group II) தேர்வுக்குரிய பாடமாக திருக்குறள் வைக்கப்
பட்டுள்ளது. இதை முழுமனதுடன் வரவேற்போம்!
அதே நேரத்தில், தமிழரின் வரலாறு பண்பாடு
ஆகியவற்றைத் துல்லியமாகப் படம் பிடித்துக்
காட்டும் சங்க இலக்கியங்களையும் தேர்வுக்குரிய
பாடமாக வைக்க வேண்டும் என்று நியூட்டன்
அறிவியல் மன்றம் வலியுறுத்துகிறது.
பிரிவு-2 தேர்வை (Group II) பட்டப் படிப்பு படித்துத்
தேறியவர்கள் (degree holders) மட்டுமே எழுத இயலும்.
இத்தேர்வு எழுதுவதற்கான கல்வித் தகுதியே
பட்டப் படிப்பில் தேர்ச்சி ஆகும்.
திருக்குறள் தேர்வை பள்ளிப்படிப்பு முடித்தவர்களால்
எழுதி விட முடியும். ஆனால் கல்லூரி மட்டத்தில்
தமிழ் படித்திருந்தால் மட்டுமே சங்க இலக்கியங்களில்
தேர்வை எழுத முடியும்.
எனவே பிரிவு-2க்கான தேர்வு பட்டதாரிகளுக்கான
தேர்வு என்பதை மனதில் கொண்டு, திருக்குறளுடன்
சேர்த்து சங்க இலக்கியங்களையம் தேர்வுக்குரிய
பாடமாக வைக்க வேண்டும் என்று தேர்வாணைய
அதிகாரிகளைக் கேட்டுக் கொள்கிறோம்.
சங்க இலக்கியங்கள் யாவை என்று கேட்டால் தமிழர்களில்
எத்தனை பேருக்கு விடை தெரியும்? இதற்கு விடை
தெரிந்தவர்களை மனிதர் (human) என்றும்
விடை தெரியாதவர்களை குறை மனிதர் (sub human)
என்றும் கொண்டால், தமிழ்நாட்டில் 99.999999999 சதவீதம்
பேர் குறை மனிதர்களே (sub human) என்ற உண்மை
வெளிப்படும்.
பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும் சங்க இலக்கியம்
ஆகும். தனியொரு புலவரால் இயற்றப்பட்ட தனிநூலாக
அமைவது பத்துப்பாட்டு. பல்வேறு காலக்கட்டத்தில்
பல்வேறு புலவர்களால் எழுதப்பட்டு பின்னர் தொகுக்கப்
பட்ட தொகை நூற்கள் எட்டுத்தொகை ஆகும்.
ஆக சங்க இலக்கியம் என்றால் மொத்தம் பதினெட்டு
நூற்கள். பத்துப்பாட்டில் உள்ள பத்து நூற்களும்
எட்டுத் தொகையில் உள்ள எட்டு நூற்களும் சேர்ந்து
சங்க இலக்கியம் என்றால் 18 நூற்களே. இவை பதினெண்
மேற்கணக்கு எனப்படும்.
திருக்குறள் சங்க இலக்கியம் அல்ல. அது பதினெண்
கீழ்க்கணக்கு வகையைச் சேர்ந்தது.
பத்துப்பாட்டில் உள்ள பத்து நூற்கள் யாவை?
எட்டுத் தொகையில் உள்ள எட்டு நூற்கள் யாவை?
இவற்றை அறிந்திட உதவியாக நமக்கு முந்தி
வாழ்ந்த புலவர்கள் இரு வெண்பாக்களை
இயற்றி வைத்துள்ளனர். அந்த வெண்பாக்களை
அறிந்தோர் தமிழ்நாட்டில் எத்தனை பேர்?
அறியாதோர் 99.9999999999999999999999999 சதவீதம் பேர்.
நற்றிணை நல்ல குறுந்தொகை.... என்று தொடங்கும்
வெண்பா எட்டுத்தொகை நூற்களை அறிவிக்கும்.
பாலை கடாத்தொடும் பத்து என்ற ஈற்றடியைக் கொண்ட
வெண்பா எட்டுத்தொகை நூற்களை அறிவிக்கும்.
அருள்கூர்ந்து இவ்விரு வெண்பாக்களை வாசகர்கள்
எழுத வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம்.
திருக்குறளில் அறத்துப்பால் பொருட்பால் ஆகியவை
மட்டுமே பள்ளி மாணவர்களுக்குக் கற்பிக்கப்
படுகின்றன. வயது வந்தோருக்கு மட்டுமே இன்பத்துப்பால்
கற்பிக்கப்படும் என்ற கோட்பாட்டின்படி இவ்வாறு
இன்பத்துப்பால் புறக்கணிக்கப் படுகிறது. இக்கோட்பாட்டில்
குறைகாண்பதற்கில்லை. எனவே பிரிவு-2க்கான தேர்வில்
திருக்குறளில் இன்பத்துப்பாலுக்கு அதிக விழுக்காடு
மதிப்பெண்ணை ஒதுக்க வேண்டும்.
தேர்வாணைய அதிகாரிகளுக்கே சங்க இலக்கியம்
பற்றிய புரிதல் கிடையாது. சங்க இலக்கியத்தை
தேர்வுக்குரிய பாடமாக வைப்பதன் மூலமே
எதிர்காலத் தலைமுறை தமிழை அறிய முடியும்.
****************************************************
தனி ஒரு எலக்ட்ரானின் வேகம் அதிகம். கிட்டத்தட்ட
ஒளியின் வேகத்திற்கு நெருக்கமாகக்கூட ஒரு
எலக்ட்ரான் செல்லும்.
கோடிக்கணக்கான அணுக்களால், அதாவது கோடிக்
கணக்கான எலக்ட்ரான்களால் ஆன ஒரு மனிதன்
அவ்வளவு வேகத்தில் செல்ல இயலாது. கணக்கில்
நடைவேகம் அதாவது நடக்கும்போது உள்ள வேகம்
(மணிக்கு 2 கிமீ) தரப்பட்டு உள்ளது.
அடுத்து நிறை. தனி ஒரு எலக்ட்ரானின் நிறையும்
மனிதனின் நிறையும் வேறுபட்டவை.
ஆக, நிறை வேகம் இவ்விரண்டும் தனி ஒரு
எலக்ட்ராயனுக்கும் மனிதனுக்கும் வேறுபடுவதால்
அலைநீளமும் வேறுபடுகிறது.
கணக்கைச் செய்து பார்த்தால், வேகமும் நிறையும்
denominatorல் வரும். Numeratorல் பிளாங்கின் மாறிலியான
10^minus 34 வரும். செய்து பார்த்து உண்மை அறிக.
நெடுநல்வாடையை இயற்றியவர் யார்? அதன்
நெடுநல்வாடையின் முதல் அடி (முதல் வரி) சொல்க.
சொல் அல்லது சாவு! இனி வன்முறையின் மூலமே
தமிழைப் பரப்ப இயலும்!
நல்லது! நன்றி! நெடுநல்வாடையின் முதலடியிலேயே
ஓர் அளபெடை உள்ளது. அது என்ன வகை அளபெடை?
விடையிறுத்தல் மாண்பை மிகுவிக்கும்.
வளையணிந்த பெண்ணே தொகைஎட்டும் கற்பாய்
திளைத்திடும் நற்றிணை ஐங்குறுநூ றும்அகம்
சீர்புறம் மன்னுபரி பாடல் குறுந்தொகை
சூழ்பதிற்றுப் பத்துகலி என்க.
நற்றிணை நல்ல குறுந்தொகை ஒத்த
பதிற்றுப் பத்து ஓங்கு பரிபாடல்
கற்ற ருந்தார் ஏத்தும் கலியோடு
இதுதான் வரலாற்றுப் பொருள்முதல்வாதம்.
வரலாற்றைக் கடவுள் படைப்பதில்லை; மக்களே
படைக்கிறார்கள் என்பதுதான் மார்க்சியம்.
வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்றால்
என்னவென்றே தெரியாத அறியாமையைக்
கொண்டு சமூகச் சிக்கல்களைத் தீர்க்க இயலாது.
இது வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை
விவாதிக்கும் இடம் என்று அருள்கூர்ந்து அறிக..
சற்று முன் நான் இயற்றிய வெண்பா!
---------------------------------------------------------
வளையணிந்த பெண்ணே தொகைஎட்டும் கற்பாய்
திளைத்திடும் நற்றிணை ஐங்குறுநூ றும்அகம்
சீர்புறம் மன்னுபரி பாடல் குறுந்தொகை
சூழ்பதிற்றுப் பத்துகலி என்க.
------------------------------------------------------------------
எட்டுத்தொகை நூற்கள் யாவை என்ற கேள்விக்கு
விடையாக இவ்வெண்பாவை இயற்றி உள்ளேன்.
போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் இந்த
வெண்பாவை நன்கு மனதில் பதித்துக் கொள்க.
இது இறுதி வரை துணை நிற்கும்.
ஏற்கனவே எட்டுத்தொகை நூற்கள் பற்றி
ஒரு வெண்பா உள்ளது. அதைவிட இது எளிது.
நெடுநல்வாடையை இயற்றியவர்
நக்கீரன் கோபால் என்கிறாராம்
கீர்த்தனார்! புழுவினும் இழிந்த ஈனத்தனம்!
TNPSC பிரிவு-2 தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களே,
தமிழ் இலக்கிய மாணவர்களே,
தமிழக அரசின் பல்வேறு போட்டித் தேர்வுகளை
எழுதவிருக்கும் மாணவர்களே, TET தேர்வு எழுதும்
ஆசிரியர்களே,
இந்தப் பாடலை மனனம் செய்து கொள்க.
பயிற்சி மையம் நடத்திடுவோர் தங்களின்
மாணவர்களுக்கு இப்பாடலைக் கற்றுக்
கொடுப்பது நல்லது.
*******************************************
சிலம்பரசன்
மருதுபாண்டியன்
வளை என்பது ஓரசையாக (குறில்நெடில் - நிரையசை)
நிற்பின், யாப்புக்குப் பொருந்தாமையால் ஈரசையாய்
ஆக்கும் பொருட்டு அளபெடுத்தால் அது செய்யுளிசைநிறை
அளபெடையே.
முதல் அடியிலேயே தளை குன்றும் அளவுக்கு
பெரும்புலவர் நக்கீரனார் பாடியிருப்பார் என்று
ஏற்பதற்கில்லை. வளைஇ என்று சொல்லை விரும்பிய
பொருளுக்கு வளைக்கிறார் புலவர்.
எனவே சொல்லிசை அளபெடையே.
நண்பரே,
இலக்கண நூற்களைப் பட்டியல் இடும்போது
தொல்காப்பியத்தை விட்டு விட்டீர்களே!
அடுத்து, தேவாரம் திருவாசகத்துடன் பக்தி
இலக்கியம் 9சைவம் அடங்கி விடுவதில்லை. எனவே
அவற்றை பன்னிரு திருமுறை என்று குறிப்பிட
வேண்டும்.
நீங்கள் துண்டு துண்டாக எழுதும்போது
திருமூலரின் திருமந்திரத்தையும் இன்ன பிறவற்றையும்
விட்டு விடுகிறீர்கள்.
அடுத்து வைணவ இலக்கியங்கள் அனைத்தும்
நாலாயிரம் திவ்வியப் பிரபந்தமாகத்
தொகுக்கப் பட்டு விட்டன. அதை நீங்கள்
குறிப்பிட வேண்டும்.
ஐங்குறு காப்பியங்களையம் குறிப்பிட மறந்து
விட்டீர்கள்.
பிரபந்தம் என்னும் சிற்றிலக்கியங்கள் 96 வகைப்படும்.
அவற்றையும் கணக்கில் கொண்டு தமிழ் இலக்கியங்களின்
பட்டியலை முழுவதுமாகச் சொல்ல வேண்டும்.
--------------------------------------------------------------
இந்தப் பதிவைப் புறக்கணிக்கிறவர்கள்
அல்லது கண்டுகொள்ளாமல் செல்கிறவர்கள்
தங்களுக்குத் தாங்களே தீங்கு விளைவித்துக்
கொள்கிறார்கள். அத்தோடு நில்லாது
தமிழுக்கும் துரோகம் இழைக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக