ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

குஷ்டரோகிகளும் மேகவெட்டை நோயாளிகளும்
இந்தக் கட்டுரையை விரும்ப மாட்டார்கள், ஏன்?
----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------
1) அந்த வீட்டுக்குள் நுழைந்த திராவிடக் கவிமுரசு
எசக்கி வேந்தன் "தம்பி, அப்பா இருக்காரா?"
என்றார். படித்துக் கொண்டிருந்த பையன் அவரை
வரவேற்று அமரச் சொன்னான்.
2) பையன் +2 மாணவன். Physics பாடத்தைப் படித்துக்
கொண்டிருந்தான். "B B ROY Great Briton Very Good Wife" என்று
திரும்பத் திரும்பச் சொல்லி எழுதிப் பார்த்துக்
கொண்டிருந்தான் பையன். எசக்கி வேந்தன் அதிர்ச்சி
அடைந்தார். பையனுக்கு இப்போதே WIFE வேண்டுமா
என்று ஆத்திரம் கொண்டார் திராவிடக் கவிமுரசு.
3) அடுத்து Trigonometryயைப் படிக்கத் தொடங்கிய
பையன், அடிக்கடி "ALL SILVER TEA CUPS" என்று சொல்லிக்
கொண்டும் எழுதிக் கொண்டும் இருந்தான்.
கல்யாண சீர்வரிசைப் பாத்திரங்கள் எல்லாம்
வெள்ளியில் இருக்க வேண்டும் என்று பையன்
கண்டிஷன் போடுகிறான் என்று புரிந்து கொண்ட
கவிமுரசு எசக்கி வேந்தன் பையன் மீது
ஒரு வன்மத்தை வளர்த்துக் கொண்டார். .
4) "ALL SILVER TEA CUPS" என்பது Trigonometryயில்
ஒவ்வொரு கால்வட்டத்திலும் T ratios என்ன signஉடன்
இருக்கும் என்பதை நினைவில் இருத்தும் ஒரு
வாசகம். இங்கு ALL என்பதன் பொருள் என்ன?
முதல் கால்வட்டத்தில் sin cos tan cot sec cosec  ஆகிய 
அனைத்தும் positive signஐ பெற்றிருக்கும் என்பதே.  
5) "B B ROY Great Briton Very Good Wife" என்பது 
RESISTORகளின் COLOUR CODEஐ நினைவில் இருத்தும் 
ஒரு வாசகம்.
6) ஒரு சர்க்க்யூட்டில் resistorகளை இணைக்க வேண்டிய 
தேவை உண்டு. அப்போதுதான் தேவையான அளவில் 
current மற்றும் voltageகளைக் கொண்டு வர முடியும்.
ஒரு resistor எவ்வளவு மின்தடையைக் கொண்டிருக்கிறது 
என்பதை colour code மூலமாகவே அறிய முடியும்.
Very Good Wife என்பது violet, green, white ஆகிய நிறங்களைக் 
குறிக்கும்.     

7) நமது திராவிடக் கவிமுரசு SSLCயில் பெயில்
ஆனவர். கணக்கும் சயன்சும் வராததால் செப்டம்பர்
எழுதியும் தேறாமல் படிப்புக்கு கொள்ளி வைத்தவர்.
தற்போது ஒரு பிரபல பகுத்தறிவுக் கட்சியில் மாவட்ட
அளவில் பொறுப்பில் இருப்பவர். Trigonometry, Physics
என்பதை எல்லாம் சமூகச் சீர்கேடுகளாகத்தான் அவரால் 
கருத இயலும். அவருடைய கட்சித் தலைவரே 
அப்படித்தானே கருதுகிறார்!!

8) மேலே கூறிய எதுவுமே நகைச்சுவை அல்ல.
இதுதான் யதார்த்தம்.திராவிடக் கவிமுரசுகளின் 
 அறிவு வளர்ச்சி என்பது இப்படித்தான் இருக்கிறது.
******************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக