வெள்ளி, 31 ஜூலை, 2015

(1) மும்பை குண்டு வெடிப்பு 1993: 
வழக்கு, தண்டனை, தூக்கு, படிப்பினைகள்!
--------------------------------------------------------------------
முதலில் இது குறித்த விவரங்களைப் பார்த்து விடலாம்.
1) குண்டு வெடிப்பு நிகழ்ந்த நாள்:   12 மார்ச் 1993 வெள்ளிக் கிழமை.
2) நேரம்: மதியம் 1.30 முதல் 3.30 வரை 
3) இந்த நாள் கருப்பு வெள்ளி (BLACK FRIDAY) எனப்படுகிறது.
**
4) மொத்தம் 13 குண்டு வெடிப்புகள் நடந்தன. இவை மதியம் 
1.30 முதல் 3.30 வரையிலான இரண்டு மணி நேரத்தில், 
அடுத்து அடுத்துப் பல இடங்களில், ஒன்றன் பின் ஒன்றாக 
நடந்தன.
5) குண்டு வெடிப்பு நிகழ்ந்த காலத்தில் மகாராஷ்டிர 
முதல்வராக சரத் பவார் இருந்தார்.
**
6) மக்கள் அதிகம் கூடும் இடங்களையே இலக்காகக் கொண்டு 
குண்டுகள் வைக்கப் பட்டு இருந்தன.
7) பின்வரும் இடங்களில் குண்டுகள் வெடித்தன.
--------------------------------------------------------------------------------
1.சாவேரி பஜார் 2.செஞ்சுரி பஜார் 3.கத்தா பஜார்
4. பிளாசா திரையரங்கம் 5) சீ ராக் (sea rock) ஓட்டல் 
6) சாகர் விமான நிலையம் 7.ஏர் இந்தியா கட்டிடம் 
8.மும்பை ஸ்டாக் எக்சேஞ் கட்டிடம் 9.ஒர்லி ( Worli)
10) பாஸ்போர்ட் அலுவலகம் 11.ஜுஹு சென்டார் ஓட்டல்
12) மாஹிம் மீனவர் காலனி 13) எம்.எம் கார்ப்பொரேஷன் வங்கி 
**
8) இந்த 13 இடங்களில் ஒன்றன் பின் ஒன்றாக நடந்த குண்டு 
வெடிப்புகளில், 257 பேர் உயிர் இழந்தனர். 1400 பேர் காயம் 
அடைந்தனர். இந்த 1400இல் 800 பேர் நிரந்தர ஊனம் அடைந்தனர்.
(கை கால் துண்டிக்கப் பட்டனர்)
9) சக்தி வாய்ந்த RDX வெடிமருந்து பயன்பட்டு இருந்தது.
10) குண்டு வகை: கார் குண்டு முதலான வாகன குண்டுகள்.
-------------------------------------------------------------------------------------------------
தொடரும் 
---------------------------------------------------------------------------------------------------          
S.N. Thapa, former additional customs collector
R K Singh, Former assistant commissioner of customs,
Jaywant Gurav, former customs inspector
S S Talwadekar, former customs superintendent.
Vijay Patil, ex police sub-inspector
Ashok Muleshwar, P M Mahadik, Ramesh Mali and S Y Palshikar; -all Police Constables
------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு சகாப்தகரமான மாற்றம்!
---------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------
31.07.2015. இந்த நாளின் முக்கியத்துவம் என்ன தெரியுமா?
இந்தியத் தொலைதொடர்பு வரலாற்றில் இது ஒரு
PARADIGM SHIFTஐக் குறிக்கிறது. ஒரு சகாப்தகரமான
மாற்றத்தைக் குறிக்கிறது. A new age has dawn in Indian
Telecommunication.
**
இருபது ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில்தான் (31.07.2015)
இந்தியாவின் முதல் முதலாக, மொபைல் போன் மூலம்
இருவர் பேசிக் கொண்டனர். ஜோதிபாசுவும் சுக்ராமும்
அன்று பேசியதுதான் முதல் மொபைல் பேச்சு.
** 
WIRE  என்பதில் இருந்து WIRELESSக்கு இந்தியா இந்த
நாளில்தான் மாறுகிறது. அதாவது, கம்பி வழித் தொடர்பு
என்ற நிலை மாறி, கம்பியில்லாத் தொடர்பு என்ற புதிய
உலகில் இந்தியா அடியெடுத்து வைக்கிறது.
**
ஒரு டெலிபோன் என்றால் இரண்டு ஒயர். இதுதான்
தொலைபேசியின் தத்துவம். ஆனால் மொபைல் போன்
(அல்லது செல் போன்) வந்தவுடன் இந்தத் தத்துவம்
மாறுகிறது. எந்த ஒயரும் கிடையாது. NO WIRE!
That is WIRELESS technology. எனவேதான் இந்த நாளை
நாங்கள் கொண்டாடுகிறோம்.
**
உங்கள் வீட்டில் அல்லது அலுவலகத்தில் உள்ள
தொலைபேசியானது (LANDLINE TELEPHONE)
WIRE COMMUNICATION. ஆனால் உங்கள் கையில் உள்ள
செல் போன் WIRELESS கருவி ஆகும்.
** 
மார்க்சிய நோக்கில், இது உற்பத்திச் சக்திகளின்
வளர்ச்சியைக் குறிக்கிறது. எனவே வரவேற்கத் தக்கது.
***********************************************************

செருப்பால் அடித்த மாவட்டச் செயலாளர்!
--------------------------------------------------------------------
FAULTக்கு மேல் FAULT வரும். வாடிக்கையாளர்கள் கத்துவார்கள்.
GM வரைக்கும் புகார் போகும். DEயைக் கூப்பிட்டு விசாரிப்பார் GM. 
FILEDஇல் வேலை செய்யும் போன் மெக்கானிக்குகளை 
GM முன் ஆஜர் படுத்துவார்  DE. 
**
சார், எல்லாம் சுக்ராம் ஒயர், சார் என்பார்கள் போன் 
மெக்கானிக்குகள். GMஆல் பதில் பேச முடியாது.
VIP வாடிக்கையாளர்களிடம் GM திட்டு வாங்குவார். 
ஆக, GM முதல் RM வரை சுக்ராமால் பாதிக்கப் பட்டவர்கள் 
நாங்கள். (GM-General Manager; RM-Regular Mazdoor)    
**
சுக்ராமை எதிர்த்து ஒவ்வொரு எக்சேஞ்ச் வாசலிலும் 
கண்டன ஆர்ப்பாட்டங்கள் அன்றைய காலக் கட்டத்தில் 
நடந்தன. சென்னை CTO மற்றும் CTXஇல் பெருந்திரள் 
ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அப்போது CTOவில் நடந்த 
கண்டன ஆர்ப்பாட்டத்தில்,கூட்ட நடுவில், சுக்ராமின் 
படம் வைக்கப்பட்டு செருப்பால் அடிக்கப் பட்டது.
**
ஒவ்வொரு போன் மெக்கானிக்கும் அது தங்கள் 
டியூட்டி என்பது போல் கருதிக் கொண்டு, சுக்ராம் 
படத்தைச் செருப்பால் அடித்த காட்சி இன்றும் எங்கள் 
மனக்கண்ணில் அகலாமல் இருக்கிறது. இந்த நிகழ்வுக்கு 
ஏற்பாடு செய்தவர் அன்றைய சென்னை NFTE மாவட்டச் 
செயலாளர். அது நான்தான்.
**
இந்தப் பதிவு ஒரு முக்கியமான அறிவியல் நிகழ்வை 
எடுத்துச் சொல்லும் நோக்குடன் எழுதப் பட்டது. புழுத்துப் 
போன ஊழலைத் தவிர இந்தியாவில் எதைப் பற்றியும் 
பேச முடியாது போல் இருக்கிறது. 
  

வியாழன், 30 ஜூலை, 2015

மன்னிக்கவும் மோகனா அம்மா.
---------------------------------------------------
இந்திய, தமிழகச் சூழலில் ஆதிக்கம் செய்யும்
பார்ப்பனீயத்தை எதிர்க்காமல், வெறும் வர்க்க சிந்தனை
என்பது இந்தியாவில் செல்லுபடி ஆகாது. பார்ப்பானையும்
இசுலாமியனையும் வர்க்க அடிப்படையில் மட்டுமே
பார்ப்பது இந்தியாவில் செல்லுபடி ஆகாது.
**
நான் எழுதுவது முழுவதும் இந்த மண்ணின் மக்களும்
அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் பற்றியது மட்டுமே.
ஈழத்தில், இலங்கையில் நிலவும் வர்க்க முரண்பாடுகள்
பற்றி எல்லாம் எமக்குத் தெரியாது. அது பற்றி பேச நாங்கள்
தயாராக இல்லை.
**
பார்ப்பனீய எதிர்ப்பு என்பது எங்களின் அடிப்படை.
இந்த அடிப்படையோடு ஒத்திசைவு கொள்ளாதவர்களுடன்
நிகழ்த்தும் உரையாடலால் எங்களுக்கு எவ்விதப் பயனும்
இல்லை. இதில் எங்களின் நேரத்தை வீணடிக்க முடியாது.
இது முன்னமே தெரியாமல் போயிற்று.
**
நன்றி. வணக்கம். GOOD BYE.   
முதுகெலும்பை முறிக்கும் பதில்-2
-----------------------------------------------------------
தற்கால உலகம்  ஊடகங்களின் உலகம். அச்சு ஊடகம்,
எலெக்ட்ரானிக் ஊடகம், முகநூல் போன்ற சமூக ஊடகம்
ஆகிய ஊடகங்கள் செல்வாக்குச் செலுத்தும் உலகம்.
கருத்து உருவாக்கத்தில் இந்த ஊடகங்கள் முக்கியப்
பங்கு வகிக்கின்றன.
**

போலியோ குழந்தைகளுக்கு  எடை குறைந்த 
ஊன்றுகோலைக் கண்டுபிடித்த அப்துல் கலாம்!
-------------------------------------------------------------------------
1993இல் ஹைதராபாத்தில் DRDOவில் பணியாற்றிக் 
கொண்டிருந்தார் கலாம். ஒரு மருத்துவ மனைக்குச் 
சென்ற கலாம், போலியோ குழந்தைகள் ஊன்றுகோலை 
ஊன்றிக் கொண்டு சிரமத்துடன் நடப்பதைக் கவனித்தார்.
அவர்களின் ஊன்றுகோலை வாங்கிப் பரிசோதித்துப் 
பார்த்த கலாம், அது மூன்று கிலோ எடை இருப்பதைக் 
கண்டு அதிர்ந்தார்.
**
எடை குறைவான ஊன்றுகோல் இருந்தால் மட்டுமே 
குழந்தைகள் சிரமம் இன்றி நடக்க முடியும் என்று உணர்ந்த 
கலாம் அப்படிப் பட்ட ஒரு ஊன்றுகோலை உருவாக்கினார்.
**
அதிக வலிமை கொண்டதாகவும் அதே நேரத்தில் 
எடை குறைந்ததாகவும் ( more strength with less mass) உள்ள  
ஒரு பொருள் (MATERIAL ) ஏவுகணைகளில் பயன்படுத்தப்
படுவதை நினைவு கூர்ந்த கலாம், அதே பொருளைப் 
பயன்படுத்தி, ஊன்றுகோலைத் தயாரிக்குமாறு தமது 
டீமில் உள்ள, தன்னுடன் பணியாற்றும் அருண் திவாரி 
என்ற பொறியாளருக்குக் கட்டளை இட்டார். அதற்கான 
டிசைன் உள்ளிட்ட ஆலோசனைகளைக் கூறினார் கலாம்.
**
அவ்வாறே புதிய ஊன்றுகோல் உருவாக்கப் பட்டது.
அது வெறும் 300 கிராம் மட்டுமே இருந்தது. ஆக, மூன்று 
கிலோ எடையுடன் மிகக் கனமாக இருந்த ஊன்றுகோல் 
கலாமின் கண்டுபிடிப்பால், பத்து மடங்கு எடை குறைந்து,
வெறும் 300 கிராமுக்கு வந்தது. இந்த ஊன்றுகோலுடன் 
குழந்தைகள் மகிழ்ச்சியோடு நடப்பதைக் கண்டு 
அப்துல் கலாம் ஆனந்தக் கண்ணீர் சிந்தினார்.
**
(வின் டி.வி.விவாதத்தில் ( 30.07.2015, காலை 11 to 12 மற்றும் 
மறு ஒளிபரப்பு 30.07.2015 இரவு 8 to 9) நியூட்டன் அறிவியல் 
மன்றம் தெரிவித்த கருத்து.)      
********************************************************************
மோகனா அம்மா அவர்களின் கவனத்திற்கு,
---------------------------------------------------------------------
1) என் பெயர் இளங்கோ. 
பிச்சாண்டி என்பது என் தந்தையாரின் பெயர். 
என் தந்தையாரின் பெயரை பூச்சாண்டி என்று, 
உங்கள் விருப்பத்துக்கு இணங்க மாற்ற முடியாது.  
ஏனெனில் கடந்த ஆண்டு என் தந்தையார் இறந்து விட்டார்.
**
2) நியூட்டன் அறிவியல் மன்றமா அல்லது அறிவு கெட்ட 
மன்றமா என்பதை நீங்கள் முடிவு செய்ய முடியாது.
கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் உள்ள 
ஆசிரியர்களும் மாணவர்களும் எங்கள் மன்றத்தின் 
அறிவியல் பங்களிப்பை அங்கீகரிக்கும்போது,
காழ்ப்புணர்ச்சியோடு வெறியைக் கக்கும் உங்களை 
எண்ணி பரிதாபப் படுகிறோம்.
**
3) கலாம் ஒரு மார்க்சியர் அல்லர். அவர் அவ்வாறு கூறிக் 
கொண்டதே இல்லை. அவரை ஒரு மார்க்சியர் என்று 
யாரும் கூறியதும் இல்லை.கூறப் போவதும் இல்லை.
எனவே உங்களின் வீணான கற்பனைக்கு வேலையே 
இல்லை.
**
4) அடுத்து, எனக்கு ஹார்ட் அட்டாக் வந்து விடும் என்ற 
உங்களின் ஆருடத்துக்கு நன்றி.
**
5) குட்டி முதலாளித்துவம் என்ற வர்க்க வகைமைப்பாடு 
காரல் மார்க்சால் கூறப்பட்டது, 150 ஆண்டுகளுக்கு முன்பே.
அது பயன்படுத்தக் கூடாத சொல் என்று தடை போடும் 
உரிமை உங்களுக்கு இல்லை..
**
6) எனது மார்க்சிய அருகதை கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் 
மேலாக நடைமுறை சார்ந்தது, பிரதானமாக தொழிற்சங்க 
நடைமுறை. தொழிலாளி வர்க்கம் அதை அங்கீகரிக்கிறது.
உங்களைப் போன்ற குட்டி முதலாளித்துவ நபர்களுக்கு 
எது மார்க்சியம் என்று கூறும் அருகதை கிடையாது.
**
7) வின் டி.வி.யில் நான் பேட்டி கொடுப்பதில் உங்களுக்கு 
என்ன நஷ்டம்? யாரும் பார்க்காத நேரத்தில் அல்ல.
இரவு 7 to 8 நேரத்தில். இன்று 8 மணிக்குக் கூட என் 
நிகழ்ச்சி மறு ஒளிபரப்பாகிறது. வின் டி.வி தலைமறைவு 
டி.வி. அல்ல.
8) குட்டி முதலாளித்துவக் கருத்து என்றால் என்ன என்று 
எவரேனும் கேள்வி கேட்டால், உங்களின் இந்தப் 
பின்னூட்டத்தை அதற்கு அப்படியே உதாரணம் காட்டலாம்.
அந்த அளவுக்கு COPY BOOK STYLEஇல் அது உள்ளது.
**
9) வக்கிரமும் வெறி உணர்வும்  கொப்பளிக்கும் உங்களின் 
பின்னூட்டத்தால் எனக்கு எந்தக் கோபமும் இல்லை.
மாறாக, இது உங்களை நன்றாகவே எல்லோரிடமும்  
அம்பலப் படுத்தி விடுகிறது. சட்டியில் இருப்பதுதானே 
அகப்பையில் வரும்! 
**
10) இறுதியாக, எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி 
உள்ளீர்கள். இந்த 63 வயசுக் கிழவனுக்கெல்லாம் 
எதற்கம்மா பிறந்த நாள் வாழ்த்து? நான் பிறந்த நாள் 
கொண்டாடுவதெல்லாம் இல்லை. நான் படித்த காலத்தில் 
(1960-1975) எங்கள் தலைமுறையில் பிறந்தநாள் என்று 
எதுவுமே கிடையாது. இருந்தாலும், இந்த 63ஆவது 
வயதில் எனக்கு ஹார்ட் அட்டாக் வர வேண்டும் என்று 
பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய உங்களுக்கு நன்றி.
---------------------------------------------------------------------------------------------

முதுகெலும்பை முறிக்கும் பதில்-1
-----------------------------------------------------------
வெங்கட்ராமனும் அப்துல் கலாமும்!
--------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------
1) தமிழ்நாட்டில் பிறந்து  இந்திய ஜனாதிபதியாக உயர்ந்த
தமிழர்கள் இருவர். ஒருவர் ஆர் வெங்கட்ராமன்; இன்னொருவர் 
அப்துல் கலாம். இருவருமே தற்போது உயிருடன் இல்லை.
**
2) 98 வயது வரை வாழ்ந்து 2009இல் மறைந்த வெங்கட்ராமன் 
1987-1992 காலக்கட்டத்தில் ஜனாதிபதியாக இருந்தார்.
83 வயது வரை வாழ்ந்து அண்மையில் மறைந்த அப்துல் கலாம் 
2002-2007 காலக்கட்டத்தில் ஜனாதிபதியாக இருந்தார். முன்னவர் 
முழுநேர அரசியல்வாதி. பின்னவர் முழுநேர விஞ்ஞானி.
**
3) வெங்கட்ராமன் ஜனாதிபதியாக இருந்தபோது, தலித் 
நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர் அவமதித்த ஒரு 
சம்பவம் நடந்தது. இது நாடெங்கும் பலத்த கண்டனங்களை 
எழுப்பியது. விஷயம் இதுதான்.
**
4) ஆந்திராவில் ஒரு கிராமத்தில் சாதி வெறியர்கள் தலித் 
பெண்களை நிர்வாணம் ஆக்கி ஓட விட்டனர். காவல்துறை 
புகாரையே ஏற்றுக் கொள்ளவில்லை. இது மட்டுமின்றி 
நாட்டின் வேறு பல இடங்களிலும் தலித்துகள் மீது 
தாக்குதல்கள் நடைபெற்றன. இது பற்றி, நடவடிக்கை 
எடுக்க அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி, ஜனாதிபதியைச் 
சந்தித்து முறையிட, நூற்றுக்கும் மேற்பட்ட, எல்லாக் 
கட்சிகளையும் சேர்ந்த (காங்கிரஸ் உட்பட) தலித் 
நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயன்றனர். ஆனால்,ஜனாதிபதி வெங்கட்ராமன் தலித் எம்.பி.க்களைச் சந்திக்க மறுத்து விட்டார்.
**
5) தலித்தாக இருக்கிற, குப்பனையோ சுப்பனையோ 
வெங்கட்ராமன் சந்திக்க மறுக்கவில்லை. தலித் 
எம்.பி.க்களையே சந்திக்க மறுத்தார். இந்த எம்.பி.க்கள்தான் 
வாக்களித்து வெங்கட்ராமனையே தேர்ந்து எடுக்கின்றனர்.
தம்மைத் தேர்ந்தெடுத்த எம்.பி.க்களையே சந்திக்க 
மறுத்தவர்தான் இந்த வெங்கட்ராமன். 
**
6) அதே நேரத்தில், எவர் வேண்டுமானாலும் தம்மைச் 
சந்திக்கலாம் என்ற வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் 
கலாம். ஜனாதிபதி மாளிகையை பொதுமக்கள் பார்வையிட 
விதிக்கப் பட்டிருந்த தடைகளை அகற்றி, சுலபமாக 
அனைவரும் பார்வையிட வழி வகுத்தவர் கலாம்.
**
7) சாதி வெறியர் என்று நாடு முழுவதும் அம்பலப்பட்டுப் 
போன, வெங்கட்ராமனைக் கண்டிக்க முன்வராத பல 
குட்டி முதலாளித்துவ ஜென்மங்கள்தான் கலாம் மீது 
கல்லெறிந்து கொண்டு இருக்கின்றனர்.
**
8) இவர்கள் வெங்கட்ராம அய்யரின் சாதிவெறியைக் 
கண்டுகொள்ளாமல் ஒதுங்கி விடுவார்கள். இவர்களை  
பார்ப்பன அடிவருடிகள் என்று சொல்லக் கூடாது.
இவர்கள் பார்ப்பன மலம் உண்ணிகள். இவர்கள்தான் 
அப்துல் கலாம் மீது கல் எறிபவர்கள்.
**
9) கலாம் மீது வெறியோடு கல்லெறியும் இவர்களில் 
எவன் ஒருவனாவது வெங்கட்ராம அய்யரின் சாதி 
வெறியை என்றாவது கண்டித்து இருக்கிறானா? 
"நான் கண்டித்து இருக்கிறேன்" என்று இவர்களில் 
யாராவது சொல்ல முடியுமா?   
-------------------------------------------------------------------------------------------
தொடரும் 
********************************************************************** 
    
    

குட்டி முதலாளித்துவக் குற்றச்சாட்டுக்களும் 
அவற்றின் முதுகெலும்பை முறிக்கும் பதில்களும்!
------------------------------------------------------------------------------ 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-------------------------------------------------------------------------------
தமது 83 ஆண்டு கால வாழ்வில், ஐந்து ஆண்டு காலம் 
ஜனாதிபதியாக இருந்ததைத் தவிர்த்துப் பார்த்தால், 
தம் வாழ்நாள் முழுவதும் டாக்டர் கலாம் ஒரு 
விஞ்ஞானியாகவே இருந்தார். எனவே அவரை ஒரு 
விஞ்ஞானியாகவே கருதி மதிப்பீடு செய்ய வேண்டும்.
**
அவர் எந்த ஒரு அரசியல் கட்சியின் தலைவரும் அல்ல.
சமூக அரசியல் இயக்கம் எதையும் அவர் நடத்தவில்லை.
அவர் அரசியல்வாதியே அல்ல. அவரை அரசியல்வாதிகளை 
அளக்கும் அளவுகோலைக் கொண்டு அளப்பது மிகப் பெரிய 
தவறு மட்டுமல்ல அறிவியலுக்கு எதிரான செயலும் ஆகும்.
**
ஒரு சுவரின் நீளத்தை அளக்க வேண்டும் என்றால், அதை 
இன்ச் டேப் (inch tape) கொண்டு அளக்க வேண்டும். எடைக் 
கல்லும் தராசும் கொண்டு நீளத்தை அளக்க முடியாது.
அது அதற்குப் பொருத்தமான கருவியைக் கொண்டு 
அது அதை அளக்க வேண்டும். எனவே ஒரு விஞ்ஞானியை 
விஞ்ஞானிக்குரிய அளவுகோலைக் கொண்டு அளக்க வேண்டும்.
**   
கலைஞரை எவரும் காலை பத்து மணிக்கு விமர்சித்தால்,
பன்னிரண்டு மணிக்கே அவர் மறுப்புத் தருவார். ஜெயலலிதா,
மோடி, சோனியா ஆகிய எந்த அரசியல் தலைவரையும் 
நீங்கள் விமர்சித்துக் கருத்து தெரிவித்தால், அவர்கள் 
உடனே பதில் தருவார்கள். ஏனெனில் அவர்கள் அரசியல்வாதிகள்.
**
ஆனால், கலாம் அவர்கள் அரசியல்வாதி அல்ல. நீங்கள் 
என்னதான் அவரை விமர்சித்தாலும், அவர் பதில் தர 
மாட்டார். ஆக, அரசியலைப் பொறுத்த மட்டில் அவர்
ஒரு நிராயுதபாணி. அவரை அரசியல்வாதியாகக் கருதி 
அவர் மீது விமர்சனம்(!!!)  என்ற பெயரில் அவதூறுகளைப்  
பொழிவது கோழைத்தனம் மட்டுமல்ல முட்டாள் தனமும் 
ஆகும்.
**
ஆனால், குட்டி முதலாளித்துவத் தொழுநோய்ச் சிந்தனை 
உடையவர்கள், டாக்டர் கலாம் அவர்களை அரசியல்வாதியை 
அளப்பது போல் அளக்கிறார்கள். இது மடமை மட்டுமல்ல 
கயமையும் கூட. தொழுநோய் என்பது உணர்ச்சியைக் 
கொன்று விடும். தங்கள் கையில் இருப்பது அரசியல்வாதியை 
அளக்கும் அளவுகோல் என்ற பிரக்ஞையே (உணர்ச்சியே)
குட்டி முதலாளித்துவத் தொழுநோயாளிகளுக்கு 
இருப்பதில்லை. காரணம், அவர்களின் மூளையில் 
பீடித்துள்ள தொழுநோய்.   
**
கங்கையைத் தூய்மை செய்ய கலாம் என்ன செய்தார்?
காவிரிப் பிரச்சினைக்கு என்ன தீர்வு கண்டார்? என்ற 
கேள்விகளைக் கலாமிடம் கேட்கிறார்கள் தொழுநோயாளிகள்.
கங்கையைத் தூய்மை செய்யம் பொறுப்பு உமாபாரதியிடம் 
கொடுக்கப் பட்டுள்ளது. காவிரிப் பிரச்சினைக்குத் தீர்வு 
காண்பது கலைஞர்-ஜெயலலிதாவின் பொறுப்பு.
கலாம் என்ன தமிழ்நாட்டு முதல்வராகவா  இருந்தார்,
அவரிடம் கேட்பதற்கு.
** 
ஆக, ஒரு விஞ்ஞானியாக, டாக்டர் கலாமின் பாத்திரத்தை 
ஆய்வு செய்கிறபோது கிடைக்கிற ரிசல்ட் மிகவும் 
பாசிட்டிவ் ஆக உள்ளது. ஒரு தலைமுறையையே 
கலாம் பாதித்தார். அத்தலைமுறையைச் சார்ந்த 
மாணவர்கள்,  இளைஞர்களிடம் அவர் சக்தி வாய்ந்த 
தாக்கத்தை ஏற்படுத்தினார். ஐம்பது கோடி இளைஞர்களுக்கு 
அவர் ஆதர்சமாக இருந்தார்.
**
 இந்திய அரசமைப்புச் சட்டம் கூறும் அ றிவியல் உளப்பாங்கை 
மாணவர்களிடம் ஏற்படுத்தினார். உலகில் வேறெங்கும் 
ஒரு விஞ்ஞானியின் பெயர் இவ்வளவு ஆவேசத்துடன் 
கோடிக்கணக்கான மாணவர்களால் சுவீகரிக்கப் 
பட்டதில்லை என்று வரலாறு கூறும் அளவுக்கு, அவர் 
மாணவர்கள்-இளைஞர்களால் சுவீகரித்துக் கொள்ளப் 
பட்டார். பரந்துபட்ட மக்களுக்கு அறிவியலின் மீது 
நாட்டத்தை ஏற்படுத்தினார்.
**
  **********************தொடரும் ********************
பின்குறிப்பு:
-------------------
குட்டி முதலாளித்துவத் தொழு நோயாளிகளின் 
பிற்போக்கான குற்றச் சாட்டுகளின் முதுகெலும்பை 
முறிக்கும் பதில்கள் தொடரும்!
***********************************************************************  

  
ராஜா ராசா 

புதன், 29 ஜூலை, 2015

அப்துல் கலாமை ஏன் எதிர்க்க வேண்டும்?
------------------------------------------------------------------------
1) ஜவர்கர்லால் நேரு காலம் முதல் இன்று மோடி காலம் வரை
முந்திரா ஊழல் முதல் வியாபம் ஊழல் வரை எத்தனையோ
ஊழல்கள் நடந்துள்ளன. ஆனால், எந்த ஒரு ஊழலிலும்
அப்துல் கலாம் பெயர் அடிபடவில்லை. ஊழல் செய்யக் கூடத்
துப்பில்லாத கலாமை எப்படி ஆதரிக்க முடியும்?
**
2) இவர் பேரில் எந்த சொத்தும் இல்லை. சொத்துக் குவிக்கத்
தெரியவில்லை. தமிழ்நாட்டில் எவ்வளவோ புறம்போக்கு
இடங்கள் இருக்கின்றன. ஒரு செண்டு நிலத்தைக் கூட
வளைத்துப் போடத் தெரியவில்லை. இவரெல்லாம் என்ன
தலைவர்?
**
3) ஏதேனும் ஒரு பாலியல் விவகாரத்திலாவது இவர் பேர்
அடிபட்டதா! கல்யாணம் பண்ணவில்லை, போகட்டும்!
ஒரு வைப்பாட்டியாவது வைத்துக் கொள்ளக் கூடாதா?
என்.டி.திவாரி முதல் சங்கராச்சாரியார் வரை எத்தனை
எத்தனை காம லீலைகள்! எது ஒன்றிலும் இவருக்குப்
பங்கில்லையே! இவரெல்லாம் என்னய்யா மனுஷன்?
**
4) ஒய்வு பெற்றதும் ஜனாதிபதி மாளிகையில் இருந்து
வெளியேறும்போது, இரண்டே இரண்டு சூட்கேஸ்களில்
தமது துணிகளையும் புத்தகங்களையும் மட்டுமே எடுத்து
வந்தாராம். தமக்கு வந்த பரிசுப் பொருட்களை எல்லாம்
அங்கேயே விட்டு விட்டு வந்தாராம். இதெல்லாம்
நியாயாமா? ஜனாதிபதி மாளிகையை சூறையாடி
இருக்க வேண்டாமா?
**
5) தனது உறவினர்கள் டெல்லிக்கு வந்தபோது, அவர்களுக்கு
டெல்லியைச் சுற்றிக் காட்ட, அரசு வாகனத்தைப் பயன்படுத்த
வில்லை. அவர்களின் சாப்பாட்டுச் செலவுக்குக் கூட,
தன் சம்பளப் பணத்தில் இருந்து கொடுத்தாராம். இவர்தான்
கொள்ளை அடிக்கவில்லை. சொந்தக்காரனையாவது கொள்ளை
அடிக்க விட வேண்டாமா?
**
6) எல்லோரும் அம்மணமாக இருக்கும் ஊரில், இவர்
மட்டும் கோவணம் கட்டிக் கொண்டு திரிவது நியாயமா?
**
7) ஆகவே, நான் கலாமை எதிர்க்கிறேன்.
    
1) கம்யூனிச வேடம் தரித்து நிற்கும் போலிகள் முன்வைக்கும் 
வலுவற்ற வாதம்தான் இது. இது குட்டி முதலாளித்துவக் கருத்து.
2) அணுஉலைகள் என்பவை உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியின் 
போக்கில்,மனித குலம் கண்டு பிடித்தவை. உற்பத்திச் சக்திகளின் 
வளர்ச்சியை எதிர்ப்பது எப்படி மார்க்சியம் ஆகும்?
**
3) மங்கள்யான் அரசிடம் (ஆளும் வர்க்கத்திடம்) இருக்கிறது 
என்பதற்காக, அதை எதிர்ப்போமா?
4) ஹிக்ஸ் போசான் துகள் ஆராய்ச்சி என்ன பாட்டாளி 
வர்க்கத்தின் தலைமையிலா நடந்து கொண்டிருக்கிறது?
**
5) 2G, 3G அலைக் கற்றைகள் மாவோயிஸ்ட்டுகளின் ஆயுதப் 
படைக்குழு வசமா உள்ளன?
**
6) யார் கையில் இருக்கிறது என்று பார்க்க வேண்டும் என்பது  
மார்க்சியக் கருத்து அல்ல. ஆளும் வர்க்கத்திடம் இருக்கும் 
அரசியல் அதிகாரத்தை, பாட்டாளி வர்க்கம் அப்படியே 
கைப்பற்றிக் கொள்வதுதான் புரட்சி. புரட்சி வெற்றி அடைந்து 
அதிகாரம்கம்யூனிஸ்ட்டுகளிடம் வந்த பின், ஆளும் வர்க்கம் 
வைத்திருக்கும் அத்தனையும் பாட்டாளி வர்க்கத்திடம் 
வந்து விடும்.
**
7) பாட்டாளி வர்க்கம் ஆட்சிக்கு வரும் வரை, உற்பத்திச் 
சக்திகளை வளர விடாமல் எதிர்க்க வேண்டும் என்பது 
எப்படி மார்க்சியம் ஆகும்?     

அப்துல் கலாம் கண்டு பிடித்த ஸ்டென்ட்!
இதய நோயாளிகளுக்கு வரப் பிரசாதம்!
----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------
1) ஸ்டென்ட் (stent) என்றால் குழாய் என்று பொருள். இக்குழாய்
விரிவடையும் தன்மை உடையது.  
A stent is a small expandable tube used during a procedure called
angioplasty..... Dr Ramachandra Barik, Cardiologosit, Nizam's institute of
Medical Sciences.
**
2) கலாம்-ராஜு ஸ்டென்ட் (Kalam-Raju stent) என்று அறியப்படும் 
இந்தக் கண்டுபிடிப்பு இதய நோயாளிகளுக்கு ஒரு வரப் 
பிரசாதம் ஆகும். இந்தக் குழாய்கள் (stent) வெளிநாட்டில் 
இருந்துதான் இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. அதன் விலை 
ரூ 55000 ஆகும். கலாம் கண்டுபிடித்த ஸ்டென்ட் இந்தியாவில் 
சுதேசியாகத் தயாரிக்கப் பட்டது. இதன் விலை ரூ 10000 மட்டுமே.
இதயநோய் மருத்துவர் டாக்டர் சோம ராஜுவுடன் இணைந்து 
இக்கண்டுபிடிப்பை கலாம் 1993இல் செய்தார். அப்போது அவர் 
ஹைதராபாத்தில் DRDO நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டு 
இருந்தார்.
**
 கலாமின் அறிவுரையின் பேரில், அவருடன் DRDOவில் உடன் 
பணியாற்றிய பொறியாளர் அருண் திவாரி இந்த ஸ்டென்டை 
உருவாக்கினார். கடற்படைக்குச் சொந்தமான கப்பல்கள், அரிப்புக்கு 
இலக்கு ஆகாமல் இருக்கும் விதத்தில், ஒரு விசேஷமான 
எஃகு போன்ற பொருளால் கப்பலின் பாகங்கள் தயாரிக்கப் படும்.
அந்தப் பொருளைத் தேவைக்கு ஏற்ப மாற்றி அமைத்து இந்த 
ஸ்டென்ட் தயாரிக்கப் பட்டது. அதிகபட்ச ரத்தம் இந்தக் குழாய் 
(STENT) வழியாகப் போனாலும், இக்குழாய் உடைந்து விடாது. 
The material, originally developed to prevent corrosion of naval ships, was refined 
and adapted to ensure that while maximum flow of blood would be permitted 
the stent would not be too weak either.    
**
குறைந்த விலையில் கலாம் கண்டுபிடித்த இந்த ஸ்டென்ட்
காரணமாக, வெளிநாடுகளும் தங்களின் ஸ்டென்ட் விலையைக் 
குறைக்க நேரிட்டது. இதனால் வெளிநாட்டு நோயாளிகளும் 
பயன் அடைந்தனர்.
**
இந்தியாவில் 1990களில், இதயத் தமனி அடைப்பு சார்ந்த 
நோய்களால், 2.2 கோடி மக்கள் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
இருப்பினும் ANGIO  சிகிச்சை செய்து கொள்பவர்கள் 20000
பேர் மட்டுமே. இதற்குக் காரணம் சிகிச்சைக்கு ஆகும் செலவே.
கலாமின் கண்டுபிடிப்பு செலவைக் குறைத்து உள்ளதால், 
ANGIO செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
**
கலாம் என்ன கண்டுபிடித்தால் என்ன? நாம் தொடர்ந்து 
அவர் மீது கல் எறிந்து கொண்டிருப்போம் என்கின்றனர் 
குட்டி முதலாளித்துவ லும்பன்கள்.
**************************************************************
       
சீனாவிடம் இருக்கிறது, ஆனால்
இந்தியாவிடம் இல்லை, அது என்ன?
மாவோவும் ஸ்டாலினும் மனிதகுல எதிரிகளா?
அணுகுண்டும் ஹைட்ரஜன் குண்டும் தேவையா?
----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------------
சீனாவிடம் ஹைட்ரஜன் குண்டு இருக்கிறது. ஆனால்,
இந்தியாவில் ஹைட்ரஜன் குண்டு இல்லை. உலகில்
அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடுகள் எட்டு மட்டுமே.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், இந்தியா,
பாகிஸ்தான், வடகொரியா ஆகிய எட்டு நாடுகள் அணு
ஆயுதங்கள் உடையவை. இஸ்ரேலிடம் அணு ஆயுதம்
இருப்பதாகச்சந்தேகிக்கப் படுகிறது.
**
மேற்கூறிய எட்டு நாடுகளில், ஹைட்ரஜன் குண்டு
வைத்திருப்பவை ஐந்து நாடுகள் மட்டுமே. அவை:
அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ்.
இந்தியாவிடம் ஹைட்ரஜன் குண்டு இல்லை.
பாகிஸ்தான், வடகொரியா நாடுகளிடமும் இல்லை.
**
ஹைட்ரஜன் குண்டு என்பது அறிவியல் ரீதியாகச் சரியான
பெயர் அல்ல. Thermo nuclear fusion bomb என்பதுதான் அதன்
அறிவியல் பெயர். இருப்பினும் அறிவியல் பெயரைத்
தவிர்ப்போம். ஹைட்ரஜன் குண்டு என்பது அணுகுண்டை
விடப் பன்மடங்கு சக்தி உடையது. ஹைட்ரஜன் குண்டு
ஒரு TWO IN ONE குண்டு. ஒவ்வொரு ஹைட்ரஜன்
குண்டுக்கு உள்ளும், ஒரு அணுகுண்டு, அதை வெடிக்கச்
செய்வதற்காக (to trigger) இருக்கும். எனவே, ஹைட்ரஜன்
குண்டில் அணுகுண்டு உள்ளடங்கி உள்ளது. Every Hydrogen
bomb has an atom bomb in it.
**
யுரேனியம் போன்ற மிகப்பெரிய அணுவைப் பிளந்து
அணுகுண்டு செய்யப்படுகிறது. எனவே அணுகுண்டு என்பது
ஒரு FISSION BOMB. (fission என்றால் பிளவு, பிளப்பது என்று
பொருள்). ஹைட்ரஜன் குண்டு என்பது இரண்டு லேசான
அணுக்களைச் சேர்ப்பதன் மூலம் செயப் படுகிறது.
எனவே, ஹைட்ரஜன் குண்டு என்பது ஒரு FUSION BOMB.
சூரியனில்  இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள்  சேர்வதன்
மூலம் ஒரு ஹீலியம் அணு உண்டாகிறது என்பது நாம்
அறிந்ததே. இது ஒரு FUSION REACTION ஆகும். இதுதான்
ஹைட்ரஜன் குண்டின் தத்துவம்.
**
நிற்க. சீனா 1967இல் ஹைட்ரஜன் அணுகுண்டை வெடித்துச்
சோதனை செய்தது. வடமேற்கு சீனாவில் உள்ள சிங்ஜியாங்
பிரதேசத்தில், லாப் நுர் (Lop Nur) சோதனை மையத்தில்
இச்சோதனை ஜூன் 17, 1967இல் வெற்றிகரமாக நிகழ்ந்தது.
இதைத் தொடர்ந்து, ஹைட்ரஜன் குண்டு வைத்திருக்கும்
நான்காவது நாடாக சீனா அறியப் பட்டது.
**
மாவோ 1976 செப்டம்பரில் மறைகிறார். அதற்கு பன்னிரண்டு
ஆண்டுகளுக்கு முன்பே சீனாவை அணு ஆயுத வல்லரசு
நாடாக உயர்த்தினார். அக்டோபர் 16, 1964இல் சீனா
முதல் அணுகுண்டை வெடித்தது. தொடர்ந்து 1967இல்
ஹைட்ரஜன் குண்டையும் தயாரித்து விட்டது. இதன் மூலம்
சீனா ஹைட்ரஜன் குண்டுகளையே  வைத்திருக்கும்
ஆற்றல் மிக்க அணுஆயுத வல்லரசாக மாவோவால்
உருவாக்கப் பட்டது.
**
கட்டணக் கழிப்பிடம் முதல் கருத்தரங்கம் வரை,
இந்தியாவின் குட்டி முதலாளித்துவ சிந்தனைக் குள்ளர்கள்
அணுஆயுதங்களை எதிர்த்து வீராவேசம் பொங்க நாக்கில்
நுரைதள்ளப் பேசுவது அன்றாட நிகழ்வாக இருக்கிறது.
அணுஆயுதங்கள் மனித குலத்துக்கே எதிரானவை என்று
கருத்து உதிர்க்கும் குட்டி முதலாளித்துவ சிந்தனைக்
குள்ளர்களைப் பார்த்து நாம் ஒரு கேள்வி கேட்கிறோம்.
**
மாவோவும் ஸ்டாலினும் போட்டி போட்டுக் கொண்டு
ஹைட்ரஜன் குண்டுகளாகத் தயாரித்துத் தள்ளினார்களே,
அவர்கள் எல்லாம் மனித குலத்தின் எதிரிகளா?
சொல்லுங்கள் குட்டி முதலாளித்துவ அன்பர்களே,
சொல்லுங்கள்.
**
அணு உலைகளையும் அணு குண்டுகளையும் மார்க்சியம்
ஏற்றுக் கொள்கிறது. மார்க்சிய மூல ஆசான்கள் மாவோவும்
ஸ்டாலினும் அணுமின்சாரத்தையும் அணுகுண்டையும்
ஏற்றுக் கொண்டு இருந்தார்கள். இது வரலாறு. எனினும்
இதற்கு எதிராக, குட்டி முதலாளித்துவ சிந்தனைக்
குள்ளர்கள் கருத்துக் கொண்டு இருக்கலாம். அதற்கு
அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால் அக்கருத்துக்கள்
மார்க்சியத்துக்கு எதிரானவை.
****************************************************************
   
  

செவ்வாய், 28 ஜூலை, 2015

உலகம் முழுவதும் உள்ள சுரங்கங்களில் நிலக்கரி இருப்பு 
குறைந்து கொண்டே வருகிறது. அதிகம் போனால், இன்னும் ஒரு 
ஐம்பது ஆண்டுகளுக்கு மட்டுமே நிலக்கரி கிடைக்கும்.
பெற்றோலியமும் வற்றாத வளம் அல்ல. இவை இரண்டும் 
தீர்ந்து போகக் கூடிய வளங்களே. புதுப்பிக்கத் தக்கவை அல்ல.
**
எனவே, புதுப்பிக்கத் தக்க தன்மை உடைய, அணு மின்சாரம் 
அக்கறைக்கு உரியதாகிறது. 
மாற்று எரிசக்தி பற்றி உலகம் முழுவதும் கவனம் 
செலுத்தப் படுகிறது. மாற்று எரிசக்திப் பயன்பாடு 
உலகம் முழுவதும் அதிகரித்தே வருகிறது. தமிழ்நாட்டில்,
அண்மையில், செயலலிதா அம்மையார் அதானி குழுமத்துடன் 
செய்து கொண்ட சூரிய சக்தி மின்சார ஒப்பந்தம் வரவேற்கத் 
தக்கதே. (இதில் ஊழல் இருந்தால், அதைத் தவிர்த்து விட்டு)
**
இந்தியா energy independent நாடு அல்ல. energy secured நாடும் அல்ல.
மாறாக, energy hungry நாடு. இங்கு ஒரு குறிப்பிட்ட வகை 
மின்சாரத்தை மட்டும் நம்பி இருக்க முடியாது. எனவே, 
இந்தியாவின் ENERGY MIX என்பதில், அணு மின்சாரமும் 
தவிர்க்க இயலாதபடி இருந்தே தீரும். இந்த நிலைமையை 
உடனடியாக மாற்றி விட முடியாது. அதுவரை, அணு உலைகளில் 
இருந்து பாதுகாப்பான முறையில் மின்சாரம் தயாரித்தே 
தீர வேண்டும்.   
1) உற்பத்திச் சக்திகளின் தங்கு தடையற்ற வளர்ச்சிக்காக 
மார்க்சியம் நிற்கிறது. அதற்காகப் போராடுகிறது.
அணு உலைகள், அணு மின்சாரம் ஆகியவை எல்லாம் 
உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி சார்ந்த விடயங்கள். 
எனவே அணு உலைகளை எதிர்ப்பது என்பது உற்பத்திச் 
சக்திகளின் வளர்ச்சியை எதிர்ப்பதாகும். சுருங்கக் கூறின்,
மார்க்சியத்தையே எதிர்ப்பதாகும். இது மார்க்சிய பால பாடம்.
**
2) மார்க்சியம் மானுடத்தின் அளப்பரிய ஆற்றலில் நம்பிக்கை 
வைக்கிறது. மார்க்சியம் என்பதே மானுட வீறு பாடும் 
தத்துவம் ஆகும். அணு  உலைகளின் மூலம் பாதுகாப்பாக 
மின்சாரம் தயாரிக்க மானுடத்தால் முடியும் என்று மார்க்சியம் 
நம்புகிறது. இந்த நம்பிக்கை குருட்டு நம்பிக்கை அல்ல.
மாறாக, நவீன அறிவியலின் வளர்ச்சியால் உறுதி செய்யப் 
பட்ட ஒன்று.
**
3) அணு உலைகள் ஆபத்தானவை என்பது பிற்போக்கான 
கோட்பாடு. இது மனித சக்தியின் மீது நம்பிக்கை வைக்காத,
மானுடத்துக்கே எதிரான (anti-anthropical) கோட்பாடு.
**
4) ஸ்டாலின், மாவோ ஆகிய இருவரும் மார்க்சிய மூல 
ஆசான்கள் ஐவரில் இருவர். அவர்கள் காலத்தில் 
அணு ஆயுதங்கள் பெருமளவில் தயாரிக்கப் பட்டன.
இன்றைய, மாறிய உலகச் சூழலில், அணு ஆயுதங்கள் 
தேவையில்லை. எனவே, அணு ஆயுதங்கள் தயாரிக்கத் தேவையில்லை.ஆனால், அணு மின்சாரம்  தயாரிப்பதை 
நிறுத்த வேண்டிய அவசியம் எதுவும் உலகில் ஏற்பட்டு 
விடவில்லை.   
1949 ஆகஸ்ட் 29இல். அன்றைய சோவியத் ஒன்றியத்தில்
இருந்த கஜகஸ்தானில், சோவியத் விஞ்ஞானிகள்
அணுவெடிப்புச் சோதனையை நிகழ்த்தினர். வெற்றிகரமாக
அணுகுண்டு தயாரித்த இந்த விஞ்ஞானிகளில் தலைமைப்
பொறுப்பில் இருந்தவர்களுக்கு "சோஷலிசப் பாட்டாளி
வர்க்க நாயகர்கள்" (Heros of Socialist Labour) என்ற விருது
வழங்கப் பட்டது. இரண்டாம் இடத்தில் இருந்த
விஞ்ஞானிகளுக்கு லெனின் விருது (Order of Lenin)
வழங்கப் பட்டது.   


அப்துல் கலாமும் அணு உலைகளும்
மார்க்சியத்தை எதிர்க்கும் 
குட்டி முதலாளித்துவக் குள்ளர்களும்!
---------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
----------------------------------------------------------------
1) டாக்டர் அப்துல் கலாம் அணு உலைகளை, அணு மின்சாரத்தை,
அணு குண்டுகளை ஆதரிப்பவர்; உருவாக்கியவரும் கூட.
2) மார்க்சிய லெனினியம் அணு உலைகளும் அணுகுண்டுகளும்  
மனித சமூகத்துக்குத் தேவை என்று கூறும் தத்துவம்.
**
3) ரஷ்யாவில் ஸ்டாலின் காலத்தில் நாடு முழுவதும் 
அணு உலைகள் அமைக்கப் பட்டன. அணுகுண்டுகள் 
தயாரிக்கப் பட்டன. பல்வேறு அணு வெடிப்புச் சோதனைகள்
(nuclear explosion tests)  நிகழ்த்தப் பட்டன. நாம் நன்கு அறிந்த,
விபத்துக்குள்ளான செர்நோபில் அணு உலை லெனின் 
பெயரைத் தாங்கி நின்ற அணு உலையாகும்.
**
4) சீனாவில் மாவோவின் காலத்தில் அணு வெடிப்புச் 
சோதனைகள் நிகழ்த்தப் பட்டன. அணு குண்டுகள் 
தயாரிக்கப் பட்டன. அணு உலைகள் மூலம் அணு 
மின்சாரம் தயாரிக்கப் பட்டது.
**
5) மார்க்சிய மூல ஆசான்களான ஸ்டாலின், மாவோ ஆகிய 
இருவரும் அணு உலைகளைத் தீவிரமாக ஆதரித்தவர்கள்.
எனவே, அணு உலை எதிர்ப்பு என்பது மார்க்சியம் அல்ல.
அது வெறும் குட்டி முதலாளித்துவக் கோட்பாடே.
**
6) தமிழ்நாட்டில், CPI-ML PEOPLES WAR BOLSHVIK கட்சி 
எனப்படும் மார்க்சிய-லெனினியக் கட்சி, மார்க்சிய 
வழியில் கறாராக நின்று அணு உலைகளை ஆதரிக்கிறது.
**
7) அணு உலை ஆதரவாளர் என்பதற்காக, டாக்டர் கலாம் 
அவர்களை, குட்டி முதலாளித்துவ லும்பன்கள் எதிர்க்கட்டும்.
ஆனால், மார்க்சியர்கள் மற்றும் மார்க்சிய அமைப்புகள் 
அவ்வாறு எதிர்க்க முடியாது.
**
8) அணு உலைகளை எதிர்ப்பவன் மார்க்சிஸ்டாக இருக்க 
முடியாது. அணு உலை எதிர்ப்பு என்பதற்கு மார்க்சியத்தில் 
இடம் கிடையாது.
**
9) கூடங்குளம் உதயகுமார் அவர்கள் அணு உலைகளை 
எதிர்ப்பதற்கு முழு உரிமையும் அருகதையும் உடையவர்.
ஏனெனில், அவர் அணு உலை எதிர்ப்பாளர் மட்டுமல்ல,
கம்யூனிச எதிர்ப்பாளரும் கூட. ஆனால், மார்க்சியத்தின் 
பேரில் கட்சி நடத்தும் எவருக்கும் அணு உலையை எதிர்க்க 
உரிமை கிடையாது. அணு உலையை எதிர்ப்பது 
மார்க்சியத்தையே எதிர்ப்பதற்குச் சமம்.
**
10) சோவியத் ரஷ்யாவின் அணு விஞ்ஞானிகளுக்கு நிகராகப் 
பாராட்டப்படத் தகுந்தவர் அப்துல் கலாம் அவர்கள். அவரது 
மறைவுக்கு மார்க்சிய சிந்தனைப் பயிலகம் அஞ்சலி 
செலுத்துகிறது.
*******************************************************************
      
  
வின் டி.வி.யில் அப்துல் கலாம் குறித்து விவாதம்!
-----------------------------------------------------------------------------
28.07.2015 செவ்வாய் இரவு 7 to 8.
---------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் பங்கேற்கிறது!
******************************************************* 
கேப்டன் செய்திகள் டி.வி.யில் 
டாக்டர் அப்துல் கலாம் அஞ்சலி/விவாத நிகழ்ச்சி!
-------------------------------------------------------------------------------
28.07.2015 செவ்வாய் 12.30 AM டு 01.30 AM 
0030 hours to 0130 hours on 28.07.2015
----------------------------------------------------------------
This program is repeated continueously till fresh updates come.
--------------------------------------------------------------------------------
பங்கேற்பு:
நியூட்டன் அறிவியல் மன்றம் 
************************************************************

திங்கள், 27 ஜூலை, 2015

புதிய கிரகமும் புளுட்டோ பற்றிய ஆய்வும்!
நியூட்டன் அறிவியல் மன்றம் சிறப்புரை!
----------------------------------------------------------------------
அண்மையில் புதியதோர் கிரகம் கண்டு பிடிக்கப் பட்டு
இருக்கிறது. மேலும் புளுட்டோ கிரகம் குறித்த ஆய்வுகள் 
உயர்ந்த கட்டத்தை எட்டி உள்ளன.
**
இவ்விரு பொருளிலும் பெரியார் திடலில் செயல்படும் 
தமிழக மூதறிஞர் குழுவின் மாதாந்திரக் கூட்டத்தில் 
நியூட்டன் அறிவியல் மன்றம் சிறப்புரை நிகழ்த்துகிறது.
Power Point Presentation உண்டு.
**
நாள்: ஆகஸ்டு 8, 2015, இரண்டாம் சனிக்கிழமை 
             மாலை 6.30 மணி முதல்.
சிறப்புரை முடிந்தவுடன், பார்வையாளர்களின் கேள்விகளுக்கு 
நியூட்டன் அறிவியல் மன்றம் பதில் அளிக்கும்.
சென்னைவாழ் அன்பர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றுச் 
சிறப்பிக்குமாறும், பயனடையும்படியும் வேண்டுகிறோம்.
மாணவர்களை அழைத்துக் கொண்டு வரவும்.
-----அன்புடன் அழைக்கும், நியூட்டன் அறிவியல் மன்றம்-------    

ஞாயிறு, 26 ஜூலை, 2015

தலையங்க விமர்சனம்: அமர்வு-137, ஞாயிறு, 26.07.2015.
----------------------------------------------------------------------------------------
ஒவ்வொரு ஞாயிறு மாலையும் தலையங்க விமர்சனம்  என்ற
அமைப்பு கூட்டங்களை நடத்தி வருகிறது. ஊடகவியலாளர் 
சோதி ராமலிங்கம் இந்த அமைப்பின் நிறுவனர்-தலைவர்.
26.07.2015 ஞாயிறு இரவு 7 மணி முதல் 9 மணி வரை 
நடைபெற்ற இந்தக் கூட்டம், தலையங்க விமர்சனத்தின் 
137ஆவது கூட்டம் ஆகும். 
**
சென்னை கோடம்பாக்கம் வங்கி ஊழியர் பிற்பட்டோர் 
நலச் சங்க அலுவலகத்தில் இக்கூட்டம் நடைபெற்றது.
மேடையில்: (இடமிருந்து வலம்)
திரு நடராசன், வழக்கறிஞர், ஆசிரியர், VOICE OF OBC ஏடு.
தோழர் பி இளங்கோ, நியூட்டன் அறிவியல் மன்றம்.
**
வழக்கறிஞர் நடராசன் இந்த வார நாளிதழ்களில் 
வெளிவந்த தலையங்கங்களை விமர்சனம் செய்தார்.
**
தோழர் இளங்கோ,  "சி.பி.ஐ அதிகாரி தியாகராசனின் 
காலங்கடந்த ஞானோதயம்" என்ற தலைப்பில் 
உரையாற்றினார்.
------------------------------------------------------------------------------------        
தீஸ்தா பின்நவீனத்துவம் பெற்றெடுத்த குழந்தை!
---------------------------------------------------------------------------------
ஒரு தத்துவம், ஒரு கட்சி, ஒரு தலைமை, அதன் பின்னே 
அணிதிரளும் மக்கள் என்று இருந்த சமூக-அரசியல் நிலைமையை 
முற்றிலுமாக மாற்றி விட்டது பின்நவீனத்துவம். ஆயிரம் தத்துவம்,
ஆயிரம் அமைப்புகள், ஆயிரம் தலைவர்கள் என்பதாக 
சமூக-அரசியல் நிலையை மாற்றி விட்டது பின்நவீனத்துவம்.
**
மார்க்சியத்தின்கீழ் அணிசேர  வேண்டிய மக்களை,
துண்டு துண்டாக உடைத்து, பகுதி பகுதியாகப் பிரித்து
மக்களின் ஒற்றுமையை சுக்குநூறாகச் சிதறடித்து விட்டது 
பின்நவீனத்துவம். வர்க்க அரசியலைக் கீழே தள்ளி,
அடையாள அரசியலை மேலாகச் செய்தது பின்நவீனத்துவம்.
**
அணு உலையை எதிர்ப்பதற்கு ஒரு தலைவன், அணைக்கட்டை 
எதிர்ப்பதற்கு ஒரு தலைவன், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க 
ஒரு தலைவன், மதவெறியை  எதிர்ப்பதற்கு ஒரு தலைவன்,
இப்படி எல்லாத் தலைவர்களுக்கும் பின்னால்  NGOக்கள் 
என்று அரசியல் களத்தை COMPARTMENTALISE செய்து விட்டது 
பின்நவீனத்துவம்.
**
இவ்வாறு பின்நவீனத்துவம் பெற்றெடுத்த குழந்தைகள்தான் 
NGO தலைவர்களான தீஸ்தாவும் உதயகுமாரும். இந்தப் 
பின்நவீனத்துவத்தையே பெற்றெடுத்த பிதாமகன்தான் 
அ மார்க்ஸ். எய்தவன் இருக்க அம்பை நோவானேன் என்று 
சும்மா இருக்க முடியாது. எய்தவன் அம்பு எல்லாவற்றையும் 
சேர்த்து நொறுக்காமல் மார்க்சியத்துக்கு எதிர்காலம் 
இல்லை.
**
"NGOகளை எதிர்க்கிறோம்; ஆனால் தீஸ்தாவை ஆதரிக்கிறோம்" 
என்ற  கோட்பாடு சரியானதல்ல.
"முதலாளித்துவத்தை எதிர்க்கிறோம்; ஆனால் அம்பானியை 
ஆதரிக்கிறோம்"என்று சொன்னால் அது ஞாயமா/ சரியா?
அது போல்தான் இதுவும்.
**
பின்நவீனத்துவத்தை தமிழ்நாட்டில் எய்ட்ஸ் நோயைப்
போல் பரப்பிய   அ மார்க்சுக்கு மன்னிப்பே கிடையாது.
--------------------------------------------------------------------------------------------

  

சனி, 25 ஜூலை, 2015

மீண்டும் கூறுகிறோம்!
-------------------------------------
இந்தப் பதிவு திருமதி தீஸ்தா அம்மையார் பற்றிய
பதிவு மட்டுமே என்று கருதிட வேண்டாம். தீஸ்தா
நல்லவர் என்று கருதி அவருக்கு வக்காலத்து வாங்குவதோ
அல்லது அவர் கெட்டவர்  என்று நிரூபிப்பதோ
இந்தப் பதிவின் நோக்கம் அல்ல.
**
தீஸ்தா விவகாரம் ஒரு முக்கியமான கோட்பாட்டுப்
பிரச்சினையை மீண்டும் பொதுவெளியில் எழுப்பி
இருக்கிறது. NGOக்கள் குறித்த தங்களின் நிலைப்பாடு
என்ன என்பதைத் தெளிவாகவும் பகிரங்கமாகவும்
அறிவிக்க வேண்டிய கடமை இடதுசாரிகளுக்கும்
மார்க்சிய லெனினிஸ்டுகளுக்கும் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், கள்ள மௌனம் காப்பது சரியல்ல
என்று வற்புறுத்தும் ஒரே நோக்கம் கொண்டது இப்பதிவு.
**
இது புரியாமல், தீஸ்தாவின் ரசிகர்கள் சிலர், மிகவும்
மனம் வருந்தி நிற்கிறார்கள். அது தேவையற்றது.
தீஸ்தாவோ அவரின் ரசிகர்களோ நமது அஜெண்டாவில்
இல்லை. கமல்-ரஜினி, அஜித்-விஜய் போன்ற லாவணி
எங்கள் சக்திக்கு அப்பாற்பட்டது. அதுபோலவே,
Pro-Teesta, Anti-Teesta லாவணிக்கு நாங்கள் தயாராக இல்லை.
**
PRO-NGO or ANTI-NGO என்பதுதான் இந்தப் பதிவு. எனவே
விவாதம் திசைதிருப்பப் படாமல் இருக்க வேண்டும்.
திசை திரும்பினால், பதில் சொல்ல வேண்டியவர்கள்
தப்பித்து விடுவார்கள்.
**
Come on leftists, answer the question:
ARE YOU PRO-NGO or ANTI-NGO?
---------------------------------------------------------------------------------------  
போலிஸ் அதிகாரி தியாகராஜனே,
தமிழனை முட்டாள் ஆக்காதே!
-------------------------------------------------------------
யாரை ஏமாற்றுகிறார் இந்த தியாகராஜன்? புதிய தலைமுறை 
தொலைக்காட்சியில் சொன்ன விஷயத்தை, இவர் ஒரு 
நீதிமன்றத்தில் போய்ச் சொல்லி, அங்கு சரண் அடைய 
வேண்டும். அதை விட்டு மீண்டும் தமிழனை முட்டாள் 
ஆக்குவது ஏன்?
**
ஐ.பி.எஸ் படித்த அதிகாரிக்கு, ஒரு வழக்கில் ஏற்பட்ட 
தவறை எப்படிச் சரி செய்ய வேண்டும் என்று தெரியாதா? 
யாரிடம் நடிக்கிறார்!
**
போய்யா போ, நேரே நாளை காலை ஒரு உயர்நீதிமன்றத்துக்குச் 
சென்று, நிகழ்ந்த தவறைச் சுட்டிக் காட்டி, ஒரு மனுப்போட்டு,
அங்கேயே சரண் அடைந்து, நீதிபதி ரிமாண்ட் செய்தால்,
ஜெயிலுக்குப் போ, அல்லது ஜாமீன் வாங்கு. அதைவிட்டு 
ஒவ்வொரு டி.வி.யாகப் போய் சொல்வது முட்டாள் தனம் 
அல்லவா?
******************************************************************
திரு அரவிந்தன், திரு சக் ரிவான் கவனத்துக்கு,
-----------------------------------------------------------------------------
மோடியும் தீஸ்தாவும் பரம வைரிகள் என்று எவரேனும் கருதினால் 
அது பரிதாபத்துக்கு உரியது. இருவருக்கும் ஒரே எஜமானர்கள்தான்;
அமெரிக்க ஏகாதிபத்தியம்தான் இருவருக்கும் எஜமான். நாளைக்கே அமெரிக்கா கட்டளை இட்டால், இருவரும் தங்களின் எஜமான 
விசுவாசத்தைக் காட்டுவதில் ஒருவருக்கொருவர் மிஞ்சி
நிற்பார்கள்.
**
சமகால உலகில் NGO என்னும் தொண்டு நிறுவனங்களை 
எதிர்கொள்வது உலகம் முழுவதும் உள்ள மார்க்சியக் 
கட்சிகளின் முக்கியமான பிரச்சினை. NGO நிறுவனங்கள் 
முழுமையும் ஏகாதிபத்திய நிதியுடன் தங்கள் எஜமானனின் 
நலனுக்காக, அந்தந்த நாடுகளில் இயங்குபவை. மக்களை 
ஏமாற்ற இந்த NGO நிறுவனங்கள் தொடக்கத்தில் 
புரட்சி வேடம் இடுவது வாடிக்கை. இதில் அப்பாவி 
இளைஞர்கள் பலியாவதும், தங்களை அறியாமலே, 
ஏகாதிபத்திய   எடுபிடிகளாக மாறிப் போவதும், 
நாம் அன்றாடம் கண் முன்னே காணுகிற காட்சி ஆகும்.
**
தீஸ்தா அம்மையார் இன்று சில இளைஞர்களுக்கு
ஆதர்சமாக இருக்கிறார் என்பது உண்மையே. அவரைப் 
போற்றும் இளைஞர்கள், உண்மையை உணரும்போது 
தெளிவு பெறுவார்கள். உலக ஏகாதிபத்தியத்தின் மிக 
நீண்ட ஒரு சங்கிலித் தொடர்தான் இந்த NGO நிறுவனங்கள்.
அந்தச் சங்கிலியில் ஒரு கண்ணிதான் இந்த தீஸ்தா.
**
மார்க்சிய லெனினியக் கட்சிகளின் நிலைப்பாடு, NGOக்கள் 
என்பவை ஏகாதிபத்திய எஜமானின்  ஏவல் நாய்கள் என்பதே.
எனவே, அவர்களை அம்பலப் படுத்துவதும், முறியடிப்பதும் 
எங்களின் கடமை ஆகிறது.          
மார்க்சிய லெனினியத்துக்கு முன்னால் மோடியும் பி.ஜே.பி.யும் 
தீஸ்தாவும்  மலத்துக்குச் சமம். NGO பிரச்சினை என்பது உலகளாவிய 
மார்க்சியம் சந்தித்து வருகிற பிரச்சினை. இது என்னவென்றே 
தெரியாமல், குட்டிமுதலாளித்துவத் தனத்துடன் குதிப்பதை விட,
NGO பற்றி முதலில் படித்துத் தெரிந்து கொள்ள முயற்சி செய்யவும்.
**
அடுத்து, இந்தப் பதிவு NGO குறித்துக் கள்ள மௌனம் சாதிக்கும் 
சில போலி இடதுசாரிகளைக் குறித்தது. பதில் சொல்ல 
வேண்டியவர்கள் அவர்கள். அவர்கள் கட்சி NGO குறித்து என்ன 
நிலை எடுத்துள்ளது என்று சொல்ல வேண்டிய கடமை 
அவர்களுக்கு உண்டு. இது அவர்களை நோக்கிய பதிவு.
**
சுருங்கக் கூறின், இது இரும்பு அடிக்கிற இடம். இங்கு 
ஈக்களுக்கு வேலை இல்லை.
------மார்க்சிய சிந்தனைப் பயிலகம்---------  
திரு அரவிந்தன், வார்த்தையை அளந்து பேசவும்.
NGO என்னும் அரசுசாரா  நிறுவனங்கள் ஏகாதிபத்திய 
எடுபிடிகளாய் இருந்துகொண்டு, இந்தியப் புரட்சிக்குத் 
துரோகம் இழைப்பவை என்பது பல்வேறு மார்க்சிய 
லெனினியக் கட்சிகளின் நிலைப்பாடு. இந்த நிலைப்பாடு 
சரியானதே என்று உலக வரலாறு நிரூபித்து உள்ளது.
**
இங்கு கேள்வி என்னவென்றால், NGO அமைப்புகளால் 
புரட்சிக்கு நேரிடும் கேடுகளில் இருந்து, புரட்சிகர 
அமைப்புகள் எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்ள 
வேண்டும் என்பதே. எனவே, துரோகிகளான NGO அமைப்புகளின் 
தலைவர்கள் அனைவரையும்  அம்பலப் படுத்தி முறியடிக்க 
வேண்டும். நாங்கள் உள்ளிட்ட பல்வேறு மார்க்சிய-லெனினிய    
அமைப்புகளின் நிலைப்பாடு இதுவே.
**
தங்களின் குட்டிமுதலாளித்துவ அறிவின் வரம்புக்குள் 
நின்று கொண்டு இதைப் புரிந்து கொள்ள முடியாது. இது 
வெறுமனே தீஸ்தா மட்டும் சம்பந்தப் பட்டது அல்ல.
இது மிகப் பெரிய கோட்பாட்டுப் பிரச்சினை.

கியூபாவில் அரசுப் பதவியில் சே குவேரா இருக்கும்போது
பொருளாதார ரீதியாகச் சில பரிசோதனைகளை மேற்கொண்டார்.
அவை யாவும் trial and error ரகத்தைச் சேர்ந்தவை. இத்தகைய
முயற்சிகளை அவர் ஆவணப் படுத்தி உள்ளார். இவை யாவும்
மர்ர்க்சியத்துக்கு  ஒரு பங்களிப்பு (contribution) என்ற அந்தஸ்து பெறத்
தகுந்தவை அல்ல. அவை வெறும் collection of empirical data மட்டுமே.
இவற்றைத்தான் பொலிவிய நாட்குறிப்பு உள்ளிட்ட நூல்களில்
பதிவு செய்துள்ளார்.
**
அவரின் சோஷலிசமும் மனிதனும் படித்துள்ளேன். அதில்
விசேஷம் இருப்பதாக எனக்குப் படவில்லை. இருப்பினும் மீண்டும் படிக்கிறேன், தாங்கள் கூறுவதால். மற்றப்படி, சே குவேராவுக்கு
ஒரு theoreticianக்கான மன அமைப்பே கிடையாது. மார்க்ஸ்-எங்கல்ஸ்-
லெனின்-மாவோ ஆகியோரிடம் இருந்து அவர் பண்புரீதியாக
வேறுபட்டவர். 
     
குஜராத் கலவரங்களில் பாதிக்கப் பட்டவர்களுக்காக 
வழக்கு நடத்தியவர் தீஸ்தா என்பது உண்மையே. 
அதே நேரத்தில், பாதிக்கப் பட்டவர்களின் பெயரைச் 
சொல்லி அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய பணத்தை 
பாதிக்கப்பட்ட மக்களுக்காகச் செலவழிக்கவில்லை என்பதும் 
அம்பலம் ஆகிவிட்டது.
**
பாதிக்கப்பட்ட மக்கள் அழுவதையும்  கண்ணீர் சிந்துவதையும் 
புகைப்படம் எடுத்து, போஸ்டர் அடித்து, அமெரிக்க 
எஜமானர்களிடம் காட்டி, கோடிக்கணக்கில் பணம் 
பெற்றவர், அப்பணத்தைச் சுருட்டிக் கொண்டார் என்பது 
அவர்மீதான குற்றச்சாட்டு.
**
பார்ப்பன ஞானி, அ மார்க்ஸ் போன்றவர்கள் இவருக்கு 
வடபுலத்தில் இருக்கும் செல்வாக்கை மனதில் கொண்டு,
அந்தச் செல்வாக்கின் நிழலில் இளைப்பாற நினைப்பவர்கள்.
ஞானி, மார்க்ஸ், தீஸ்தா அனைவருமே முற்போக்கு 
வேடதாரிகள். வேடதாரிகளுக்கு இடையே பரஸ்பரம் 
புரிதல் இருப்பது இயற்கையே.
**
தீஸ்தாவின் சென்னைக் கூட்டத்தின்போதே, அவரை 
அம்பலப் படுத்தி என்னுடைய அப்போதைய பதிவுகளில் 
எழுதி உள்ளேன்.  
குறிப்பிட்டுள்ள Sabrang Communication என்ற அமைப்பு தீஸ்தா 
நடத்தி வருகிற தேசத் துரோக NGO அமைப்பு. COMBAT 
COMMUNALISM என்பது தீஸ்தாவும் அவர் கணவரும் சேர்ந்து 
நடத்தி வருகிற, அமெரிக்க சி.ஐ.ஏவிடம் இருந்து நிதி பெறுகிற 
பத்திரிக்கை.  
-------------------------------------------------------------------------------------------
TDS என்றால் Tax Deducted at source என்று அர்த்தம். சி.ஐ.ஏவிடம் 
இருந்து வாங்குகிற பணத்துக்கு நான் வருமான வரி செலுத்தி 
விடுகிறேனே என்பது தீஸ்தாவின் வாதம். 
-----------------------------------------------------------------------------------------------------
தீஸ்தாவின் கூந்தல் அலங்காரம் ஐரோப்பிய கூந்தல் 
அலங்காரக் கலைஞர்களால் செய்யப் படுகிறது.
ஆடம்பரப் பிரியையான தீஸ்தா ஒரு மேட்டுக்குடிச் சீமாட்டி. 
அமெரிக்க ஏகாதிபத்திய எடுபிடி 
ஃபோர்டு பவுண்டேஷன் கைக்கூலி  
தேசத் துரோகி தீஸ்தா செதல்வாத்துக்கு 
சி.பி.ஐ சிறப்பு நீதிபதி அனிஸ் கான் முன்ஜாமீன் மறுப்பு!
-----------------------------------------------------------------------------------------   
புரட்சித் தலைவி திருமதி தீஸ்தா செதல்வாத் அம்மையாரை 
உங்களுக்குத் தெரியுமா? தெரியாவிட்டால், உங்களை ஒரு 
புழுவுக்குச் சமமாகக் கருதுவார்கள் அவர்கள்.
யார் அந்த அவர்கள்?
**
அவர்கள்தான் போலிக் கம்யூனிஸ்ட்டுகள், போலி 
நக்சல்பாரிகள், போலி முற்போக்கு வகையறாக்கள். 
அவர்களைப் பொறுத்த மட்டில் தீஸ்தாதான் 
இந்தியாவின் லெனின்.  
**
உண்மையில் தீஸ்தா செதல்வாத் என்ற இந்த அம்மையார் 
அமெரிக்க அடிவருடி. ஃபோர்டு பவுண்டேஷன் என்னும் 
அமைப்பிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு, தேசத் துரோக 
வேலைகளில் ஈடுபடுபவர். இவர் இரண்டு பெரிய NGO 
அமைப்புகளை (அரசுசாரா நிறுவனங்களை) நடத்தி வருபவர்.
ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று தமது கூந்தலை அலங்காரம்
செய்து கொண்டு, அதற்கான பில்லை (BILL), ஃபோர்டு 
பவுண்டேஷனுக்கு  அனுப்பிப் பணம் பெற்றுக் கொள்பவர்.  
**
இன்றைய இந்து ஆங்கில ஏட்டில் (THE HINDU, 25.07.2015,
பக்கம்-17) தீச்தாவின் நேர்காணல் வெளியாகி உள்ளது.
அதில் ஃபோர்டு பவுண்டேஷனில் இருந்து தாம் பணம் 
பெற்று வருவதை ஒப்புக் கொண்டு  ஒப்புதல் வாக்குமூலம் 
கொடுக்கிறார் தீஸ்தா. கீழே பார்க்கவும்.
** 
"........ Sabrang communications, which published the monthly 'Communalism 
Combact' signed a consultancy agreement with the Ford Foundation in
2004 and 2006 to address the issues of caste and communalism........."
***
Ford Foundation deducted TDS with every instalment of consultancy fees
it paid to Sabrang Communications.
**
Activities and financial reports were submitted annual to the satisfaction of
Ford Foundation.
**
மேற்கூறிய ஆங்கிலப் பகுதி முழுவதும் தீஸ்தா அளித்த 
ஒப்புதல் வாக்குமூலங்கள். தீஸ்தாவை ஆதரிக்கும் அத்தனை 
போலிகள் முகத்திலும் கரியைப் பூசி விடுகிறார் இந்த 
ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததன் மூலம். சி.ஐ.ஏ.வால் 
வழிநடத்தப்படும் ஃபோர்டு பவுண்டேஷனில் இருந்து நான் 
பணம் பெறுகிறேன் என்று ஒப்புக் கொண்டுள்ளார் தீஸ்தா.  
**
ஃபோர்டு பவுண்டேஷன் இந்தியாவில் புரட்சியை நடத்தாது.
NGO அமைப்புகள் மூலம் அந்நிய நாட்டு நிதி உதவி பெற்று 
இந்தியாவில் புரட்சி செய்யலாம் என்று நினைப்பவன் 
 ஒரு கிரிமினலாகத்தான் இருக்க முடியும்.
**
போலி முற்போக்கு வகையறாக்களே, பார்ப்பன ஞானியே,
 பேராசிரியர் அ மார்க்ஸ் வகையறாக்களே, தொண்டு நிறுவனப் 
புரட்சி நடத்த இருக்கும் போலி நக்சல்பாரிகளே,
உங்கள் பதில் என்ன?
******************************************************************** 
 பின்குறிப்பு: மும்பை உயர்நீதிமன்றம் ஆகஸ்டு 10 வரை 
தீஸ்தாவைக் கைது செய்யத் தடை விதித்துள்ளது.
----------------------------------------------------------------------------------------------------------
    
       . 
அழகிய பெண்ணின் வயது என்ன?
சிறிய எளிய இனிய கணக்கு!
Small, Simple, Sweet Sum!
--------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-----------------------------------------------------
ஒரு அழகான பெண்ணிடம் அவளின் வயது என்ன என்று 
கேட்டபோது அவள் கூறினாள்: "இந்த ஆண்டில் என் வயது,
நான் பிறந்த ஆண்டில் உள்ள இலக்கங்களைக் கூட்டினால் 
என்ன வருமோ அதுதான்"என்றாள். அப்படியானால் 
அவளின் வயது என்ன?      
---------------------------------------------------------------------------------------------
இந்தக் கணக்கைச் செய்வதும் விடையைக் கண்டறிவதும் 
ஒவ்வொரு தமிழ்க் குடிமகனின் கடமையாகும்.
************************************************************  
திரு ஒவாய்சியின் ஒப்பீடு தவறு. ராஜீவ் கொலையாளிகள்
மூவருக்கும் (முருகன், சாந்தன், பேரறிவாளன்) விதிக்கப் பட்ட
தூக்குத் தண்டனை ரத்து செய்யப் பட்டு ஆயுள் தண்டனையாக
மாற்றப்பட்டு விட்டது. இதைச் செய்தது உச்ச நீதிமன்றம்.
தற்போது அவர்கள் ஆயுள் தண்டனைக் கைதிகள்.
ஆயுள் தண்டனைக் கைதிகளை எப்படித் தூக்கில்
போட முடியும்?
**
யாகூப் மேனன் தூக்குத் தண்டனை பெற்றவர்.
தூக்குத் தண்டனை பெற்ற இன்னொரு கைதியுடன் தான் அவரை
ஒப்பிட முடியும். தூக்குத் தண்டனை பெற்ற யாகூப் மேனனை,
ஆயுள் தண்டனை பெற்ற ராஜீவ் கொலையாளிகளுடன்
ஒப்பிடுவது தவறு.
**

வெள்ளி, 24 ஜூலை, 2015

நெகிழ்ச்சியான மனிதாபிமானம் என்னும் ஒற்றை அளவுகோலை 
வைத்துக் கொண்டு ராஜீவ் கொலை சார்ந்த விடயங்களைப் 
பார்க்கிறீர்கள். இவ்வாறு பார்ப்பது மக்களின் இயல்புதான்.
என்றாலும், அரசியல் என்பது மனிதாபிமானத்தை மட்டுமே 
கொண்டதல்ல. சூழ்ச்சிகள், சதிவலைகள், படுகொலைகள்,
துரோகங்கள் என்று பலவிதமான தீமைகளைக் கொண்டதே 
அரசியல்.
**
ராஜீவ் கொலையில் இன்னமும் விலகாத மர்மங்கள் ஏராளம்.
அஞ்சும் மூணும் எட்டு என்பது போல், எளிமையாகப் புரிந்து 
கொள்ளவே முடியாத அளவு இடியாப்பச் சிக்கல்கள் 
நிறைந்தது ராஜீவ் கொலை.
**
இந்தப் பதிவில் நான் கூறுவது இந்த ஒரு விடயம்தான்:
1) எழுவர் விடுதலையைப்  பொறுத்த மட்டில்,நீதிமன்றம் 
சாதகமாகத் தீர்ப்பு வழங்குவதற்கான வாய்ப்புகள் குறைவு.
எனவே இழவு காத்த கிளியாக ஏமாற வேண்டாம்.
2) மக்கள் போராட்டங்கள் மூலமாகவே விடுதலையைப் 
பெற முடியும்.
3) மக்கள் போராட்டம் சாத்தியமா? ராஜீவ் கொலை 
நியாயமானது என்று மக்கள் கருதினால் மட்டுமே, 
மக்கள் போராடுவார்கள்.
4) மக்கள் அப்படிக் கருதவில்லை என்றால், போராட 
மாட்டார்கள். போராடாவிட்டால் விடுதலை கிடைக்காது.  
1991, மே 21 அன்று இரவு பத்து மணிக்கு மேல், ஸ்ரீபெரும்புதூரில் 
நிகழ்ந்த ஒன்றுக்கும் மேற்பட்ட மரணங்களுக்குக் காரணம் 
பெல்ட் வெடிகுண்டு (BELT BOMB). இந்த பெல்ட் வெடிகுண்டு 
சிவராசனுக்கு எப்படிக் கிடைத்தது என்பதுதான் வேறு எதையும் 
விட, அதி முக்கியமான கேள்வி. இதற்கு கார்த்திகேயன் குழு 
எந்தப் பதிலையும் இதுவரை சொல்லவில்லை.
**
சென்னையில் தங்கி இருந்த சிவராசன் சென்னையில் வைத்து 
இந்த பெல்ட் வெடிகுண்டைத் தயாரிக்கவில்லை என்பது 
சி.பி.ஐ உள்ளிட்ட அனைவரும் ஏற்றுக் கொண்ட உண்மை.
இலங்கையில் இருந்தும் கொண்டுவரவில்லை என்பதும் 
நிரூபிக்கப் பட்ட உண்மையே.
**
ராணுவம் மட்டுமே பயன்படுத்தக் கூடிய சக்தி வாய்ந்த RDX 
வெடிமருந்து இந்த பெல்ட் குண்டில் உள்ளது. இது சாமியார் 
சந்திராசாமியால் சிவராசனுக்குத் தரப்பட்டது என்று 
வாக்குமூலம் அளித்த ரங்கநாத்தை கார்த்திகேயன் 
மிரட்டினார் என்பது நாடறிந்த உண்மை.
**
புலனாய்விலேயே மிக முக்கியமான இந்தக் கேள்விக்கு 
விடை அளிக்காத புலனாய்வு எப்படிச் சரியானதாக இருக்க 
முடியும்? பெல்ட் குண்டுக்கு பாட்டரி வாங்கிக் "கொடுத்த"
பேரறிவாலனுக்குத் தூக்கு. பெல்ட் குண்டையே சிவராசனுக்கு 
வழங்கிய சந்திராசாமி விசாரிக்கப் படவே இல்லை! இது என்ன 
நியாயம்/ இது என்ன புலனாய்வு?
**
சந்திராசாமியை விசாரிக்க வேண்டும் என்று ஜெயின் கமிஷன் 
கூறிய பின்னாலும், அவரை இன்னும் விசாரிக்கவே இல்லையே!
எனவே, இந்தப் புலனாய்வில் மிகப் பெருங்குறை இதுதான்.        
அன்புமணியின் சிறப்பு அதிகாரி வீட்டில்
சி.பி.ஐ நடத்திய ரெய்டு! சிக்கிய முக்கியமான தடயங்கள்!
கைது எப்போது?
--------------------------------------------------------------------------------------------
ஊழல் வழக்கில் சிக்கிக் கொண்டுள்ள அன்புமணி ராமதாஸ் 
மிகவும் திணறிப் போனார். அவரது அதிகாரியான டி.எஸ்.மூர்த்தியின் 
இல்லத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.
**
டி.எஸ்.மூர்த்தி என்பவர் அன்புமணி அமைச்சராக இருந்தபோது 
அவருக்கு சிறப்புப் பணி அதிகாரியாக (officer on special duty) இருந்தவர்.
இவரது வீடு சென்னை சேத்துப்பட்டில் உள்ளது. அன்புமணியின் 
ஊழல் குறித்த மிக முக்கியமான ஆவணங்கள் இவரது வீட்டில் 
பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக துப்புக் கிடைத்தது.
இதையொட்டி சி.பி.ஐ அதிகாரிகள் இவரது வீட்டைச் சோதனையிட 
ஏற்பாடு செய்தனர்.
**
இதை அறிந்த மூர்த்தி வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்று 
விட்டார். அவர் இல்லாமல் அவரது வீட்டில் சோதனையிட 
முடியாது என்ற நிலையில் சி.பி.ஐ அதிகாரிகள் அவரது 
வீட்டைப் பூட்டி சீல் வைத்தனர். பின்னர் பெருமுயற்சி செய்து 
சி.பி.ஐ அதிகாரிகள் அவரைத் தேடிப்  பிடித்து அவரின்
வீட்டுக்கு அழைத்து வந்து, அவரின் முன்னிலையில் 
வீட்டைச் சோதனை இட்டனர்.காலையில் தொடங்கிய 
சோதனை இரவு வரை நீடித்தது. 
**
சோதனையின்போது, அன்புமணி ஊழல் புரிந்தார் என்பதை 
நிரூபிக்கும் மிக முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப் 
பட்டன. இந்த ஆவணங்கள் அனைத்தும் டில்லி சி.பி.ஐ 
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டுள்ளன.
**
இந்த ரெய்டு 21 பிப்ரவரி 2011 அன்று நடந்தது. இந்த ரெய்டில்
கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் இல்லாமல் அன்புமணி மீது 
வழக்குத் தொடர்ந்து இருக்க முடியாது என்று சி.பி.ஐ 
அதிகாரிகள் தெரிவித்தனர்.
**
பெப்ரவரி 22, 2011 அன்று, இந்தச் செய்தி தேசிய ஊடகங்களில் 
பெரிதாக வெளியிடப் பட்டது. இந்து ஆங்கில ஏடு இச்செய்தியை 
national page இல் வெளியிட்டது.
**
தகவல் ஆதாரம்:  THE ECONOMIC TIMES Feb 22, 2011
********************************************************************** 
    
  
    

1) ராஜீவ் மரணம் குறித்து பல தியரிகள் (theories) உள்ளன. கார்த்திகேயன் 
முன்வைத்த தியரியான "புலிகள்தான் ராஜிவைக் கொன்றார்கள்"
என்ற தியரியில் ஆயிரம் ஓட்டைகள் உள்ளன. என்றாலும் 
கார்த்திகேயன் இதுவரை எதற்கும் பதில் அளிக்கவில்லை.  
2) சோனியாதான் ராஜிவைக் கொன்றார் என்கிறார் டாக்டர் 
சுப்பிரமணியன் சுவாமி; புத்தகமே எழுதி உள்ளார். 
இதுவும் ஒரு தியரி.
3) புலிகள்தான் கொன்றார்கள் என்று முடிவு செய்துவிடக் கூடாது.
இதில் விரிவான சர்வதேசச் சதி இருக்கக்கூடும் என்று மத்திய 
அரசு முடிவு செய்தது. இந்த விரிவான சதியை (wider conspiracy)
ஆராய பல்நோக்கு விசாரணைக் குழுவையும் மத்திய அரசு 
அமைத்தது. ஆக, விரிவான சதி என்பது இன்னொரு தியரி.
4) ராஜீவ் மரணம் ஒரு விபத்தே என்பது எங்கள் நியூட்டன் 
அறிவியல் மன்றம் முன்வைத்த ஒரு தியரி. கார்த்திகேயனின் 
அஸ்திரங்களுக்கு எதிர் அஸ்திரமாக இந்த தியரியை நாங்கள் 
முன்வைத்துள்ளோம்.
5) இவ்வாறு உள்ள பல தியரிகளில் எது சரி என்பது இன்னும் 
முடிவாகவில்லை என்பதே உண்மை.
***
6) நிற்க.பல தியரிகள் இருந்தாலும், தமிழக மக்களும் இந்திய 
மக்களும் புலிகள்தான் ராஜிவைக் கொன்றார்கள் என்று ஏற்றுக் 
கொண்டுள்ளார்கள்.அப்படியானால், புலிகள் ஏன் ராஜிவைக் 
கொன்றார்கள், அப்படிக் கொன்றதில் நியாயம் உள்ளதா என்ற 
கேள்வியை எழுப்பி, அதற்கு விடை காண வேண்டும். ஆனால்,
துரதிருஷ்ட வசமாக, இந்தக் கேள்விக்கு உள்ளேயே போக 
மறுக்கிறார்கள் தமிழ்நாட்டின் புலி ஆதரவாளர்கள் (வைகோ,
நெடுமாறன் போன்றோர்).
7) ராஜீவ் கொலை நியாயம் என்று தமிழ்ச் சமூகம் மொத்தமும் 
உணர்ந்தால் மட்டுமே, ராஜீவ் கொலையாளிகளை உடனே 
விடுதலை செய்ய வேண்டும் என்ற மக்கள் கருத்து வலுப்பெறும்.
அது ஆட்சியாளர்களை நிர்ப்பந்தம் செய்யும்.
8) இதையே நமது பதிவு குறிப்பிடுகிறது. எனவே, நமது 
கருத்துக்களில் எவ்வித முரண்பாடும் இல்லை. இன்னும் 
விளக்கம் தேவைப்படின், தயக்கமின்றிக் கேட்கலாம்.
   
ராஜீவ் கொலை நியாயமானதே என்று மொத்தத் 
தமிழ்நாடும் சொல்ல வேண்டும்!
------------------------------------------------------------------------------------------------------
சற்றேறக்குறைய கால்நூற்றாண்டு காலத்தைச் சிறையில் 
கழித்து விட்ட ராஜீவ் கொலையாளிகள் ஏழு பேரை விடுதலை 
செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நியாயமான ஒன்றுதான்.
என்றாலும் இந்தக் கோரிக்கை வெற்றி அடைந்திட, சட்டபூர்வமான 
வழிமுறைகளை மட்டும் நம்பி இருப்பது பரிதாபத்துக்கு உரியது.
**
ஏற்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தின்படியும் அதற்கான 
விளக்கத்தின் பேரிலும் மட்டுமே தீர்ப்புகள் வழங்கப்படும்.
அது நமக்குச் சாதகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.
**
மக்கள் போராட்டங்களே எழுவரின் விடுதலையைப் பெற்றுத் 
தரும். தமிழ்நாடெங்கும் பரவலாக, எழுவரின் விடுதலையைக் 
கோரி மக்கள் திரள் போராட்டங்கள் நடைபெறும்போதுதான் 
ஆள்வோரின் கவனம் ஈர்க்கப்பட்டு, விடுதலைக்குச் சாதகமான 
கருத்துருவாக்கம் நிகழ்ந்து நிர்ப்பந்தம் செலுத்தும்.   
**
அவ்வாறு, பரவலாக, மக்கள்திரள் போராட்டங்கள் நடைபெறு
வதற்கு ஒரு முன்நிபந்தனை உள்ளது. ராஜீவ் கொலை 
நியாயமானது என்று மொத்தத் தமிழர்களும் (அல்லது 
பெரும்பான்மையான தமிழர்கள்) கருத வேண்டும். தமிழ்ச் 
சமூகத்தின் கூட்டு மனச்சாட்சி ராஜீவ் கொலை நியாயமானதே 
என்று குரல் எழுப்ப வேண்டும். 
**
கேப்டன் செய்திகள் டி.வி விவாதத்தில் (23.07.2015 வியாழன் 
இரவு 9 to 10 மணி) நியூட்டன் அறிவியல் மன்றம் தெரிவித்த 
கருத்து).