வெள்ளி, 31 ஜூலை, 2015

செருப்பால் அடித்த மாவட்டச் செயலாளர்!
--------------------------------------------------------------------
FAULTக்கு மேல் FAULT வரும். வாடிக்கையாளர்கள் கத்துவார்கள்.
GM வரைக்கும் புகார் போகும். DEயைக் கூப்பிட்டு விசாரிப்பார் GM. 
FILEDஇல் வேலை செய்யும் போன் மெக்கானிக்குகளை 
GM முன் ஆஜர் படுத்துவார்  DE. 
**
சார், எல்லாம் சுக்ராம் ஒயர், சார் என்பார்கள் போன் 
மெக்கானிக்குகள். GMஆல் பதில் பேச முடியாது.
VIP வாடிக்கையாளர்களிடம் GM திட்டு வாங்குவார். 
ஆக, GM முதல் RM வரை சுக்ராமால் பாதிக்கப் பட்டவர்கள் 
நாங்கள். (GM-General Manager; RM-Regular Mazdoor)    
**
சுக்ராமை எதிர்த்து ஒவ்வொரு எக்சேஞ்ச் வாசலிலும் 
கண்டன ஆர்ப்பாட்டங்கள் அன்றைய காலக் கட்டத்தில் 
நடந்தன. சென்னை CTO மற்றும் CTXஇல் பெருந்திரள் 
ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அப்போது CTOவில் நடந்த 
கண்டன ஆர்ப்பாட்டத்தில்,கூட்ட நடுவில், சுக்ராமின் 
படம் வைக்கப்பட்டு செருப்பால் அடிக்கப் பட்டது.
**
ஒவ்வொரு போன் மெக்கானிக்கும் அது தங்கள் 
டியூட்டி என்பது போல் கருதிக் கொண்டு, சுக்ராம் 
படத்தைச் செருப்பால் அடித்த காட்சி இன்றும் எங்கள் 
மனக்கண்ணில் அகலாமல் இருக்கிறது. இந்த நிகழ்வுக்கு 
ஏற்பாடு செய்தவர் அன்றைய சென்னை NFTE மாவட்டச் 
செயலாளர். அது நான்தான்.
**
இந்தப் பதிவு ஒரு முக்கியமான அறிவியல் நிகழ்வை 
எடுத்துச் சொல்லும் நோக்குடன் எழுதப் பட்டது. புழுத்துப் 
போன ஊழலைத் தவிர இந்தியாவில் எதைப் பற்றியும் 
பேச முடியாது போல் இருக்கிறது. 
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக