சனி, 25 ஜூலை, 2015

மீண்டும் கூறுகிறோம்!
-------------------------------------
இந்தப் பதிவு திருமதி தீஸ்தா அம்மையார் பற்றிய
பதிவு மட்டுமே என்று கருதிட வேண்டாம். தீஸ்தா
நல்லவர் என்று கருதி அவருக்கு வக்காலத்து வாங்குவதோ
அல்லது அவர் கெட்டவர்  என்று நிரூபிப்பதோ
இந்தப் பதிவின் நோக்கம் அல்ல.
**
தீஸ்தா விவகாரம் ஒரு முக்கியமான கோட்பாட்டுப்
பிரச்சினையை மீண்டும் பொதுவெளியில் எழுப்பி
இருக்கிறது. NGOக்கள் குறித்த தங்களின் நிலைப்பாடு
என்ன என்பதைத் தெளிவாகவும் பகிரங்கமாகவும்
அறிவிக்க வேண்டிய கடமை இடதுசாரிகளுக்கும்
மார்க்சிய லெனினிஸ்டுகளுக்கும் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், கள்ள மௌனம் காப்பது சரியல்ல
என்று வற்புறுத்தும் ஒரே நோக்கம் கொண்டது இப்பதிவு.
**
இது புரியாமல், தீஸ்தாவின் ரசிகர்கள் சிலர், மிகவும்
மனம் வருந்தி நிற்கிறார்கள். அது தேவையற்றது.
தீஸ்தாவோ அவரின் ரசிகர்களோ நமது அஜெண்டாவில்
இல்லை. கமல்-ரஜினி, அஜித்-விஜய் போன்ற லாவணி
எங்கள் சக்திக்கு அப்பாற்பட்டது. அதுபோலவே,
Pro-Teesta, Anti-Teesta லாவணிக்கு நாங்கள் தயாராக இல்லை.
**
PRO-NGO or ANTI-NGO என்பதுதான் இந்தப் பதிவு. எனவே
விவாதம் திசைதிருப்பப் படாமல் இருக்க வேண்டும்.
திசை திரும்பினால், பதில் சொல்ல வேண்டியவர்கள்
தப்பித்து விடுவார்கள்.
**
Come on leftists, answer the question:
ARE YOU PRO-NGO or ANTI-NGO?
---------------------------------------------------------------------------------------  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக