இந்தக் கவிதை எட்டுக்கோடித் தமிழர்களுக்கும்
என்று புரிகிறதோ, அன்றுதான் தமிழ்நாடு விடுதலை அடையும்!
-----------------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------------------------------
நீராரும் கடலுடுத்த, ஜன கண மன ஆகிய பாடல்களின் வரிசையில்
இக்கவிதையை நியூட்டன் அறிவியல் மன்றம் கருதுகிறது.
இக்கவிதை ஓர் அளவுமானி. மக்களின் அறிவியல் புரிதலை
அளந்து பார்க்க உதவும் கவிதை இது. இந்தக் கவிதையை எவர்
ஒருவரால் புரிந்து சுவைக்க முடிகிறதோ, அவர் அறிவியல் புரிதல்
உடையவர் என்று பொருள். இந்தக் கவிதையைப் புரிந்து
சுவைக்க முடிந்தவர்களே, நியூட்டன் அறிவியல் மன்றத்தின்
உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்ளப் படுகிறார்கள்.
**********************************************************************
காதலின் இயற்பியல்
----------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி
-------------------------------------------------
உன் இளமூங்கில் தோளில்
துப்பட்டா
தொங்கும் அழகில் லயித்து
கச்சிதமான பேரபோலா என்று
உறுத்து உறுத்துப் பார்த்தேன்
வசவு உமிழ்ந்து நீ நகர்ந்தாய்.
**
உன் தங்கையைக் கண்டதும்
உன் ஐசோடோப் உன்னினும் அழகு என்றேன்
கோபத்தில் நீ சிவந்தாய்.
**
மின்னி மறையும் உன் இடை
எவ்வளவு வோல்டேஜில் மின்சாரம் தயாரிக்கிறது
என்று அறிய
மல்டிமீட்டரை உன் இடையில் பொருத்த முற்பட்டேன்
கண்டிப்புடன் நீ தடுத்தாய்.
**
நம் காதல் அசிம்ப்டோட் ஆகவே நீள்கிறதே
தொடுபுள்ளியில் சங்கமிப்பது எப்போது என்றேன்.
**
துருத்திக் கொண்டு என்னுடன் கூடவே வரும்
இயற்பியலைக் கைவிட்டால்
உன் கைத்தலம் பற்றலாம் என்றாய்.
**
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து
அப்பாலுக் கப்பாலும் உச்சம் தரும்
இயற்பியலைக் கைவிடுவது எங்ஙனம்?
**
நியூட்டனும் கலாமும்
வெளிச்சம் பாய்ச்ச
ஒரு நானோ நொடியில்
நான் தெளிந்தேன்.
************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக