செவ்வாய், 28 ஜூலை, 2015

1) உற்பத்திச் சக்திகளின் தங்கு தடையற்ற வளர்ச்சிக்காக 
மார்க்சியம் நிற்கிறது. அதற்காகப் போராடுகிறது.
அணு உலைகள், அணு மின்சாரம் ஆகியவை எல்லாம் 
உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி சார்ந்த விடயங்கள். 
எனவே அணு உலைகளை எதிர்ப்பது என்பது உற்பத்திச் 
சக்திகளின் வளர்ச்சியை எதிர்ப்பதாகும். சுருங்கக் கூறின்,
மார்க்சியத்தையே எதிர்ப்பதாகும். இது மார்க்சிய பால பாடம்.
**
2) மார்க்சியம் மானுடத்தின் அளப்பரிய ஆற்றலில் நம்பிக்கை 
வைக்கிறது. மார்க்சியம் என்பதே மானுட வீறு பாடும் 
தத்துவம் ஆகும். அணு  உலைகளின் மூலம் பாதுகாப்பாக 
மின்சாரம் தயாரிக்க மானுடத்தால் முடியும் என்று மார்க்சியம் 
நம்புகிறது. இந்த நம்பிக்கை குருட்டு நம்பிக்கை அல்ல.
மாறாக, நவீன அறிவியலின் வளர்ச்சியால் உறுதி செய்யப் 
பட்ட ஒன்று.
**
3) அணு உலைகள் ஆபத்தானவை என்பது பிற்போக்கான 
கோட்பாடு. இது மனித சக்தியின் மீது நம்பிக்கை வைக்காத,
மானுடத்துக்கே எதிரான (anti-anthropical) கோட்பாடு.
**
4) ஸ்டாலின், மாவோ ஆகிய இருவரும் மார்க்சிய மூல 
ஆசான்கள் ஐவரில் இருவர். அவர்கள் காலத்தில் 
அணு ஆயுதங்கள் பெருமளவில் தயாரிக்கப் பட்டன.
இன்றைய, மாறிய உலகச் சூழலில், அணு ஆயுதங்கள் 
தேவையில்லை. எனவே, அணு ஆயுதங்கள் தயாரிக்கத் தேவையில்லை.ஆனால், அணு மின்சாரம்  தயாரிப்பதை 
நிறுத்த வேண்டிய அவசியம் எதுவும் உலகில் ஏற்பட்டு 
விடவில்லை.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக