சனி, 28 பிப்ரவரி, 2015

ஏமாற்றத்திலும் அதிருப்தியிலும் முடிந்த CPI மாநாடு!
மறைந்திருந்து வாலியைக் கொன்ற  தா,பாண்டியன்!
-------------------------------------------------------------------------------------- 
பி இளங்கோ சுப்பிரமணியன் 
-----------------------------------------------------------------------------------------
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாநில மாநாடு 
முடிந்து விட்டது என்றாலும் இழவு விழுந்த வீடாகக் 
காட்சி அளிக்கிறது கம்யூனிஸ்ட் கட்சி.
அறுநூறு பேர் என்ற அளவில் சார்பாளர்கள் பங்கேற்ற 
இம்மாநாடு, ஆகக் கடைசியில் முத்தரசன்  என்ற 
அனாமதேயத்தைக் கட்சியின் மாநிலச் செயலாளராகத் 
"தேர்ந்து" எடுத்திருக்கிறது. 
------------------------------------------------------------------------------------------------ 
யார் இந்த முத்தரசன்? கட்சிக்கு உள்ளும் கட்சிக்கு வெளியிலும் 
எத்தனை பேருக்கு முத்தரசனைத் தெரியும்? தா.பாண்டியனின் 
அடிவருடி என்ற ஒற்றைத் தகுதியைத் தவிர, இந்த நபருக்கு 
வேறு எதுவும் கிடையாது.

600 சார்பாளர்களில் 450 சார்பாளர்களுக்கும் மேல் தோழர் 
மகேந்திரனை ஆதரிப்பவர்கள். இது மாநாட்டு நிகழ்வுகளில் 
வெளிப்படையாகத் தெரிந்தது. இருப்பினும் மகேந்திரன் ஏன் 
மாநிலச் செயலராக வர முடியவில்லை?
----------------------------------------------------------------------------------------------------- 
அங்குதான் இருக்கிறது தா.பாண்டியனின் நயவஞ்சகம்!
"மாநிலச் செயலராக மகேந்திரன்தான் வரப் போகிறார்,
அதலால், மாநிலக்குழுவில் எனது ஆதரவாளர்களுக்கு 
நிறைவான பிரதிநிதித்துவம் வேண்டும்" என்று வலியுறுத்தி
122 பேர் கொண்ட மாநிலக் குழுவில், சரிபாதி இடங்களைப் 
பெற்றுக் கொண்டார் தா.பா. அதன் பிறகு, சாணக்கியனையே 
வெல்லும் தனது அருவருக்கத் தக்க தந்திரங்களைப் 
பிரயோகித்தார். ஒப்புக் கொண்டபடி, மகேந்திரனை 
மாநிலச் செயலராக ஏகமனதாகத் தேர்ந்து எடுக்காமல்,
தனது அடிவருடியான முத்தரசனைப் போட்டியிடச் செய்து,
சொற்ப வாக்குகளில் அவரை மாநிலச் செயலாளராக 
"வெற்றி"பெறச் செய்து, கட்சியில் தமது பிடியை உறுதி 
செய்து கொண்டார்.
------------------------------------------------------------------------------------------------ 
தா.பா வெளியேறி விட்டார் என்பது "சனியன் தொலைந்தது"
(GOOD RIDDANCE) என்பது போல, ஒரு நிம்மதிப் பெருமூச்சைக் 
கட்சிக்கு உள்ளும் வெளியிலும் ஏற்படுத்திய போதிலும்,
மறைந்திருந்து வாலியைக் கொன்ற ராமனைப் போல,
தா.பா,  சார்பாளர்களின் பேராதரவு பெற்ற மகேந்திரனைத் 
தோல்வியுறச் செய்தார்.  

தனக்குக் கிடைக்காதது வேறு எவனுக்கும் கிடைத்து விடக் 
கூடாது என்ற தா.பா.வின் வக்கிர சிந்தனையின் விளைவாக 
600 சார்பாளர்கள் கொண்ட நிறைந்த சபை ஏமாற்றப் பட்டது.
கம்யூனிஸ்ட் கட்சியில் இப்படியும் நடக்குமா என்று அரசியல் 
விமர்சகர்கள் வியக்கிறார்கள்.

இனி காரல் மார்க்சே வந்தாலும் கட்சியைக் காப்பாற்ற 
முடியாது என்று கம்யூனிச லட்சியங்களை  இன்னமும் 
நேசிக்கிற CPI கட்சியின் அணிகளும் ஆதரவாளர்களும் 
சோர்ந்து போய் இருக்கிறார்கள்! அவர்களின் துக்கத்தில் 
நாமும் பங்கு பெறுகிறோம்.
*************************************************************8   
     

      
ராமன் விளைவு பற்றிய சிறப்புரை
-------------------------------------------------------
இடம்: டாக்டர் அம்பேத்கார் அரசு கலைக்கல்லூரி,
              வியாசர்பாடி, சென்னை 600039.
நாள்: 28.02.2015, சனிக்கிழமை,பிற்பகல் 1.00 மணி முதல்
தேசிய அறிவியல் நாள் சிறப்புரை:
------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்,
தலைவர், நியூட்டன் அறிவியல் மன்றம்.
பொருள்:
--------------
ராமன் விளைவும் அது இன்றும் பயன்படும் நிலையும்  
RAMAN EFFECT AND ITS RELEVANCE TODAY.

குறிப்பு: கல்லூரி நிர்வாகத்தால் அனுமதிக்கப் படுவோர்
                 மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க இயலும்.

*************************************************************88 
தேசிய அறிவியல் நாள்: பெப்ரவரி 28
-----------------------------------------------------------
கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப்
பணியாற்றும்போது, டாக்டர் சி.வி.ராமன், "ராமன் விளைவு"
என்னும் அரிய அறிவியல் கண்டுபிடிப்பை நிகழ்த்தினார்.
இக்கண்டுபிடிப்பு நிகழ்ந்த நாள்: பெப்ரவரி 28, 1928.
மகத்துவம் மிக்க இந்நாள், 1986ஆம் ஆண்டு முதல் இந்தியாவில்
தேசிய அறிவியல் நாளாகக் கொண்டாடப்பட்டு
வருகிறது.
அறிவியலைப் படியுங்கள், படியுங்கள் என்று இந்த நாள்
நாட்டுக்கு உணர்த்துகிறது.
..... நியூட்டன் அறிவியல் மன்றம்......
**********************************************************8

வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

எக்காரணம்கொண்டும் தமிழை ஆங்கில வரிவடிவத்தில் 
எழுத வேண்டாம். தமிழில் எழுத உதவும் குறிப்புக்கள்:
---------------------------------------------------------------------------------------------

Rajeevan Kuganathan Thedal Paithiyam தமிழில் எழுத இதையும் உபயோகிக்கலாம். Download செய்ய தேவையில்லை.http://www.google.com/inputtools/try/
Get your message across in the language and style you want. Switching among over 80 languages and input...
GOOGLE.COM
------------------------------------------------------------------------------------------------------------
வின் டி.வி.யில் விவாதம்!
DEBATE IN WIN TV!
-------------------------------------------- 
நாள்: இன்று 27.02.2015 இரவு 7.00 to 8.00
பொருள்: 
--------------
காஸ்மீரில் புதிய ஆட்சி! பாஜக-PDP கூட்டணி ஆட்சி!
பங்கேற்பு:
------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
மற்றும் இருவர்!
விரும்புவோர் காணலாம்!
......அன்புடன், நியூட்டன் அறிவியல் மன்றம்......

***********************************************************   

திங்கள், 23 பிப்ரவரி, 2015

ரோஷமான ஆங்கிலக் குத்துச் சண்டை போடும் மார்க்சிஸ்ட்கள்!
அச்சுதானந்தனுக்கு மாநிலக் குழுவில் இடம் மறுப்பு!
பினராயி விஜயனுக்கு மாநிலச் செயலர் பதவி மறுப்பு!
கொடியேறி பாலகிருஷ்ணன் புதிய மாநிலச் செயலர்!
------------------------------------------------------------------------------------------ 
பி இளங்கோ சுப்பிரமணியன் 
------------------------------------------------------------------------------------------
1) கேரளா மாநில மார்க்சிஸ்ட் கட்சியின் ஆலப்புழை 
மாநாடு சந்தி சிரித்துப் போனது.
2) பினராயி விஜயன் ஒரு ஊழல் பேர்வழி, பல்லாயிரம் 
கோடி லவ்லின் மின்சாரத் துறை ஊழலில் முக்கிய 
குற்றவாளி என்று அச்சு கோஷ்டி ஆதாரங்களுடன் குற்றம் 
சாட்டியது.
3) காங்கிரசிடம் சரண் அடைந்தும் கள்ளக்கூட்டு வைத்தும் 
தம் மீதான வழக்கை நீர்த்துப் போகச் செய்தார் பினராயி 
என்று ஆதாரத்துடன் அச்சு கோஷ்டி நிரூபித்தது.
-------------------------------------------------------------------------------------------- 
4) பாஜகவுடன் கள்ளக் கூட்டு வைத்து, தம் மீதான 
வழக்கு பற்றிய ஆவணங்களை பாஜகவுக்குத் தந்து 
விட்டார் அச்சு என்று பினராயி கோஷ்டி நிரூபித்தது.
5) அச்சு-பினராயி ரோஷமான ஆங்கிலக் குத்துச் சண்டையைத் 
தீர்த்து வைக்க முடியாமல் மூச்சுத் திணறினார் காரத்.
------------------------------------------------------------------------------------------
6) வரும் அகில இந்திய மாநாட்டில், காரத்தின் பதவி 
பறிக்கப் பட்டு விடும் என்று எச்சூரி கோஷ்டியினர் மிகுந்த 
மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
7) எச்சூரி முதலாளித்துவப் போக்கு உடைய மார்க்சிஸ்ட்.
------------------------------------------------------------------------------------------------ 
8) மாநில மாநாட்டில் பினராயி நீக்கப் பட்டு, கொடியேறி 
பாலகிருஷ்ணன் புதிய மா.செ.வாகத்  தேர்வாகி உள்ளார்.
9) மாநிலக்குழுவில் அச்சுவுக்கு இடம் தரப்படவில்லை.
10) மத்தியக் குழு உறுப்பினர் பதவியும் அச்சுவிடம் இருந்து 
பிடுங்கப்படும் என்று தெரிய வருகிறது.
----------------------------------------------------------------------------------------------
11) பேர்தான் மார்க்சிஸ்ட் கட்சி. இக்கட்சிஎடுக்கும் 
முடிவுகளில்  காங்கிரசும் பாஜகவும் செல்வாக்குச் 
செலுத்துகின்றன.
12) மார்க்சிஸ்ட் கட்சி என்பது ஒரு போலிக் கம்யூனிஸ்ட் 
கட்சி என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப் பட்டுள்ளது.
***************************************************************     
மார்க்சிஸ்ட் கட்சியில் ( கேரளம்) பிளவு!
மாநில மாநாட்டில் பிளவு வெடித்தது!
---------------------------------------------------------------
கேரளம் மாநிலத்தின் மார்க்சிஸ்ட் கட்சியின் 
மாநில மாநாடு ஆலப்புழையில் நடந்து வருகிறது.
மாநாட்டில் ஆண்டறிக்கை வாசிக்கப் பட்டது.
ஆண்டறிக்கையின் சில பகுதிகளை ( அமைப்பு நிலை பற்றியது)
ஆட்சேபித்து வி எஸ். அச்சுதானந்தன் வெளிநடப்புச் செய்தார்.
------------------------------------------------------------------------------------------ 
அப்போது மேடையில் அமர்ந்து இருந்த மேலிடத் 
தலைவர்கள் பிரகாஷ் காரத்தும் யெச்சூரியும் கடும் 
அதிர்ச்சி அடைந்தனர்.
--------------------------------------------------------------------------------
மாநாட்டு அமர்வின்போது வெளிநடப்புச் செய்த அச்சுதானந்தனோ,
பின்னர் ஆலப்புழையில் இருந்தே வெளியேறி திருவனந்தபுரம்
வந்து விட்டார். உடனடியாகத் திரும்பி வந்து மாநாட்டில்
பங்கேற்க வேண்டும் என்றும், மீறினால் கட்சியில் இருந்து 
நீக்கப் படுவது உறுதி என்றும் பிரகாஷ் காரத் எச்சரித்து 
உள்ளார்.
---------------------------------------------------------------------------------------------
அச்சுதானந்தனும், கேரளா மாநிலச் செயலாளர் பினராயி 
விஜயனும் தொடர்ந்து பல ஆண்டுகளாகவே கோஷ்டிச் 
சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர் ஆட்களை 
இவர் தோற்கடிப்பதும், இவர் ஆட்களை அவர் தோற்கடிப்பதும் 
தான் இவர்கள் இருவரும் செய்து வரும் புரட்சிப் பணி.
---------------------------------------------------------------------------------------------- 
இதற்காக இருவருமே காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியினருடன் 
கள்ளக் கூட்டு சேர்ந்து, எதிர் கோஷ்டி ஆட்களைத் தோற்கடிப்பது 
என்பதை ஒரு நடைமுறையாகக் கொண்டுள்ளனர்.
------------------------------------------------------------------------------------------------- 
மார்க்சிஸ்ட் கட்சி ஒரு போலிக் கம்யூனிஸ்ட் கட்சி என்று 
இவர்கள் இருவரும் நிரூபித்து உள்ளனர். போலிக் கம்யூனிஸ்ட்கள் 
என்று இவர்களை நாம் குறிப்பிடும் போதெல்லாம் நம் மீது 
கோபம் கொள்ளும் மார்க்சிஸ்ட் கட்சியின் அப்பாவித் 
தொண்டர்கள், இப்போது என்ன சொல்லப் போகிறார்கள்?
----------------------------------------------------------------------------------------------
அச்சுதானந்தனும் விஜயனும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 
சுடுகாட்டில் இடம் ஒதுக்கி விடுவார்கள், பாருங்கள்!
----------------------------------------------------------------------------------------          

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

நெடுமாறனை சந்தி சிரிக்க வைத்த எம்.ஜி.ஆர்.
------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
-------------------------------------------------------------------------------- 
பாசிச இந்திராவின் அடிவருடி நெடுமாறன், ஒரு ஈழ ஆதரவு நாடகத்தை, எம்.ஜி. ராமச்சந்திர மேனனின் ஆட்சிக் காலத்தில்
நடத்தினார். ராமச்சந்திர மேனனோ அது ஒரு போலி நாடகம்
என்பதை அம்பலப் படுத்தி, நெடுமாறனை சந்தி சிரிக்க வைத்தார்.
சிறு வயது முதலே, பாய்ஸ் நாடகக் கம்பெனியில் பயிற்சி
பெற்று, சிறந்த நாடக நடிகராகவும், சினிமா நடிகராகவும்,
அரசியல் நடிகராகவும் திகழ்ந்த ராமச்சந்திர மேனனிடம்,
கத்துக்குட்டி நடிகரான நெடுமாறன் தோல்வி அடைந்தார்.
அது என்ன நிகழ்வு என்பதைக் கீழே காணவும்.
---------------------------------------------------------------------------------------------
"தியாகப் பயணம்"என்ற பெயரில் ஒரு நாடகத்தை, அதாவது,
போராட்டத்தை நெடுமாறன் அறிவித்தார். படகுகளை
ஏற்பாடு செய்து கொண்டு, ராமேஸ்வரம் கடற்கரையில்
இருந்து, யாழ்ப்பாணத்துக்குத் தியாகப் பயணம்(!!)
செல்வது என்பதுதான் அந்தப் போராட்டம். ஆட்களுடனும்
வாடகைப் படகுகளுடனும் ராமேஸ்வரம் கடற்கரையில்
திரண்டார் நெடுமாறன். படகுகளில் யாழ்ப்பாணம் செல்வது
என்பதுதான் அந்த நாடகம். ஆனால் உண்மையிலேயே
யாழ்ப்பாணம் போவது என்பது நெடுமாறனிடம் கற்பனையில்
கூடக் கிடையாது. எப்படியும் போலிசார் கைது செய்வார்கள்;
புரட்சி வேடம் போடலாம் என்று காத்திருந்தார் நெடுமாறன்.
-------------------------------------------------------------------------------------------------
 ஆனால், முதல்வர் மேனன் இதைத் திறம்பட முறியடித்தார்.
எந்தக் காரணம் கொண்டும் நெடுமாறனையோ அவரது
ஆட்களையோ கைது செய்யக் கூடாது; என்ன நடந்தாலும்
கைகட்டி வேடிக்கை பார்க்க வேண்டுமே தவிர, வேறு
எதுவும் செய்யக் கூடாது என்று போலிஸ் அதிகாரிகளுக்குக்
கறாரான உத்தரவு பிறப்பித்தார் மேனன். வீரவுரை ஆற்றி
முடிந்ததும் படைகளில் ஏறப் போவதாகப் பாசாங்கு
செய்தார் நெடுமாறன். ஆனால் காவல் துறை அவர்களைக்
கைது செய்ய முன்வரவே இல்லை. மணிக்கணக்காகக்
காத்திருந்தும் போலிசார் மௌனச் சாமியார்களாக வேடிக்கை
பார்த்தனரே தவிர, கைது செய்யவில்லை.
ஏமாந்துபோன நெடுமாறன் வீடு திருப்பினார். அப்போது
செய்தியாளர்களிடம், தாங்கள் கைது செய்யப் பட்டதாகப்
பொய் கூறினார். சிறிது நேரத்தில் இந்தப் பொய்யை
காவல்துறை உயர் அதிகாரி மறுத்து உண்மையை
விளக்கினார். இவ்வாறு நெடுமாறனின்  போராட்ட நாடகம்
சந்தி சிரிக்க வைத்தது. பெரிய மீன் சிறிய மீனை
விழுங்கி விடுவதைப் போல, பெரிய நடிகர் மேனன்,
குட்டி நடிகர் நெடுமாறனை விழுங்கி ஏப்பம் விட்டார்.
-----------------------------------------------------------------------------------------------------     

சனி, 21 பிப்ரவரி, 2015

The pseudo communists (CPI and CPM ) and the real revolutionaries
(Maoists) do not enjoy the same degree of freedom. Because the latter challenges
the state while the former does not.
வியட்நாம் போரும் வியட்நாம் வீடு திரைப்படமும்!
---------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
--------------------------------------------------------------------------------------
வியட்நாம் கட்டுரை: பகுதி நான்கு 
--------------------------------------------------------------------------------------- 
அமெரிக்க எதிர்ப்பு என்பது இந்தியாவின் அரசியல் அரங்கில் 
பெரிதும் பேசப்படும் ஒரு கோட்பாடு. அமெரிக்க எதிர்ப்பு உளவியல் 
இந்திய இடதுசாரிகளின் சிந்தனையில் ஒரு கூறாகவே அமைந்துள்ளது.
இந்திய மக்களில் பெரும்பகுதியினருக்கு இடதுசாரிகளின் 
அமெரிக்க எதிர்ப்பு நன்கு பரிச்சயமானது. பரந்துபட்ட மக்களிடம் 
தொடர்ந்து அமெரிக்க எதிர்ப்புக் கருத்துக்கள் இந்திய 
இடதுசாரிகளால்முன்வைக்கப் பட்டுக்கொண்டே இருக்கின்றன,
அவை மக்களால் ஏற்கப் படுகின்றனவா என்பது குறித்த 
எவ்வித ஆய்வுமின்றி.
----------------------------------------------------------------------------------------------------- 
நரசிம்மராவ் முதற்கொண்டு எல்லா இந்தியப் பிரதமர்களும் 
அமெரிக்க அடிவருடிகளாகவே சித்தரிக்கப் படுகின்றனர்.
எல்லா நிதியமைச்சர்களும் அவ்வாறே. குறிப்பாக, 123 ஒப்பந்தம் 
கையெழுத்தானபோது, டாக்டர் மன்மோகன்சிங் பட்டபாடு 
கொஞ்சநஞ்சம் அல்ல.  
---------------------------------------------------------------------------------------------------
அமெரிக்க ஜனாதிபதியின் பூட்ஸ் காலை, இந்தியப் பிரதமர்கள் 
துடைப்பது போல அமைந்த கேலிச்சித்திரங்கள், உருவகங்கள் 
ஆகியன இடதுசாரி ஏடுகளில் மலிந்து கிடக்கும். உலகமே கண்டு 
அஞ்சுகிற மகா கொடூர அரக்கன் அமெரிக்கா என்ற கண்டுபிடிப்பும்,  
உலக மக்களின் துன்ப துயரங்களுக்கு ஒரே காரணம் அமெரிக்காதான் 
என்ற சித்தரிப்பும் இந்திய இடதுசாரிகளின் ஒற்றை ஆயுதமாக 
நீண்ட காலமாக இருந்து வருகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------- 
எனினும், இடதுசாரித் தலைவர்களின் குழந்தைகள் 
அமெரிக்காவில் கல்வி பயில்வதும், வேலை பார்ப்பதும்,
குடியுரிமை பெறுவதும்,அமெரிக்க மருத்துவமனைகளில் 
சிகிச்சை பெறுவதும் எவ்விதக் குற்ற உணர்வும் இன்றி 
நடந்து கொண்டுதான் இருக்கின்றன. எப்பேர்ப்பட்ட
HYPOCRITS இவர்கள் என்பதும் மக்களுக்குத் தெரிந்தேதான்  
இருக்கிறது.
---------------------------------------------------------------------------------------------------- 
 1960களில் வியட்நாம் வீடு என்று ஒரு திரைப்படம் வந்தது.
சிவாஜி கணேசன் நடித்த படம். இந்தப் படத்தைக் கடுமையாகக் 
கண்டித்து, அன்றைய ஜனசக்தியில், எரிமலை பகுதியில், 
அறந்தை நாராயணன் எழுதினார். ஏகாதிபத்திய அமெரிக்காவை 
எதிர்த்து வியட்நாம் நடத்தும் புனிதப் போரை, சாதாரண 
நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் நடக்கும் அற்பத்தனமான 
சண்டையுடன் ஒப்பிடுவதா என்று ஆவேசத்தின் எல்லையைத் 
தொட்டிருந்தார் அறந்தை அக்கட்டுரையில். தமது கண்மண் 
தெரியாத ஆவேசத்தில், அவர் சிவாஜி கணேசனையே 
அமெரிக்க அடிவருடியாகச் சித்தரித்து இருந்தார்.
------------------------------------------------------------------------------------------ 
இதுபோல, அமெரிக்க எதிர்ப்புக் கருத்துக்களை வரம்பே 
இல்லாமல் பேசுவதற்கான உரிமையை இந்திய 
ஜனநாயகம் வழங்குகிறது. எனவே பேசுகிறார்கள். பேசட்டும், 
தவறில்லை.
------------------------------------------------------------------------------------------ 
ஆனால், நக்சல்பாரி வெடித்தபோது, இந்திய சமூகத்தில் 
நிலவும் பிரதான முரண்பாடாக, ஏகாதிபத்தியத்துக்கும் 
பரந்துபட்ட மக்களுக்கும் உள்ள முரண்பாட்டை, சாரு மஜும்தார் 
ஏற்கவில்லை. மாறாக, நிலப்பிரபுத்துவத்துக்கும் விவசாயிகளுக்கும் 
உள்ள முரண்பாடே பிரதான முரண்பாடு என்றுதான் சாரு 
மஜும்தார் வரையறுத்தார்.
----------------------------------------------------------------------------------------------- 
இதன் பொருள், இந்தியப் புரட்சியின் பிரதான எதிரி, இந்திய 
நிலப்பிரபுக்களே அன்றி, அமெரிக்க ஏகாதிபத்தியம் அல்ல 
என்பதாகும். எனவே நாடாளுமன்ற இடதுசாரிகளான CPI, CPM 
கட்சிகளின் குருட்டுத் தனமான அமெரிக்க எதிர்ப்பு பெரிதும் 
மிகைப்படுத்தப் பட்டது என்பதும், எத்தகைய புறநிலை ஆய்வும் 
மேற்கொள்ளாமல் போகிற போக்கில் சொல்லப் படுவது 
என்பதும் புலனாகிறது.
--------------------------------------------------------------------------------------------------- 
 உலகிலேயே அமெரிக்க எதிர்ப்புக் கருத்துகளைப் பேசுவதற்கான 
பரிபூரண சுதந்திரம் இந்தியாவில் வழங்கப் படுகிறது. இந்தச் 
சுதந்திரத்தில் ஒரு மிகச் சிறிய அளவு கூட கம்யூனிஸ்ட் 
சீனாவில் கிடையாது. வியட்நாமிலும் கிடையாது.
இடதுசாரிகளின் குட்டி முதலாளித்துவ, சந்துமுனை மற்றும் 
வாயில் கூட்டப் பேச்சாளர்கள், தங்களின் பேச்சுக்களை 
சீனாவிலோ வியட்நாமிலோ பேசுவார்கள் என்றால், நீண்ட 
காலச் சிறைவாசம் உறுதி.
ஏனெனில், மார்க்சியம் எதிரி வர்க்கத்தினருக்குக் 
கருத்துரிமையை வழங்குவதில்லை. எதிரி வர்க்கம் யார் 
என்பதைக் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானிக்கும்.
------------------------------------------------------------------------------------------------------ 
இப்போது நம் முன்னால் நிற்கும் கேள்வி இதுதான்.
அமெரிக்க ஆதரவு நிலையும் அமெரிக்காவுக்கு நட்புநாடு 
அங்கீகாரமும் தரும் வியட்நாமிய கம்யூனிஸ்ட் கட்சி 
சரியானதா?
( அல்லது)
மாற்றமே இல்லாத, அமெரிக்க எதிர்ப்பு நிலையைக் 
கொண்டிருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி(கள்)
சரியானதா?
விடை காண்போம். தொடர்ந்து படியுங்கள்.
------------------------------------------------------------------------------------- 
நான்காம் பகுதி முற்றியது!
------------------------------------------------------------------------------------------ 
வெளியீடு: மார்க்சிய சிந்தனைப் பயிலகம் 
*********************************************************************                
         

வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஒன்றாக இணையுமா?
-------------------------------------------------------------------------------------------- 
தோல்வி, படுதோல்வி, தொடர்ந்த தோல்வி இவற்றால் 
பாதிக்கப் பட்ட  CPI, CPM கட்சிகள் ஒன்றாக இணைய 
வேண்டும் என்று சில நல்ல உள்ளம் கொண்ட அப்பாவித் 
தொண்டர்கள் விரும்புகின்றனர்.
---------------------------------------------------------------------------------
1986 பாட்னா CPI மாநாட்டில் இரு கட்சிகளும் ஒன்றிணைய 
வேண்டும் என்று CPI பொதுச் செயலர் சி ராஜேஸ்வர் ராவ் 
வேண்டுகோள் விடுத்தார்.
அதே ஆண்டில் நடைபெற்ற AITUC மாநாட்டில் இதே 
வேண்டுகோள் ( MERGER) முன்வைக்கப் பட்டது.
--------------------------------------------------------------------------------------- 
ஆனால், மார்க்சிஸ்ட் கட்சி, இணைப்புக்கான இவ்விரு 
வேண்டுகோள்களையும் இகழ்ச்சியுடன் நிராகரித்தது.
பாயாசத்தில் சாக்கடைத் தண்ணீரைக் கலக்க முடியுமா 
என்று மார்க்சிஸ்ட்கள் கேட்டனர். CPI கட்சி அவமானத்துடன் 
வாயை மூடிக் கொண்டது.
--------------------------------------------------------------------------------------------------  
தற்போது, MERGER OF CPI and CPM என்கிற அஜண்டாவே
இரு கட்சிகளிடமும் கிடையாது. 
----------------------------------------------------------------------------------- 
திமுகவும் அதிமுகவும் இணையலாம்.
பாஜகவும் காங்கிரசும் இணையலாம்.
ஆர்.எஸ்.எஸ்.சம் இசுலாமிய அமைப்புகளும் இணையலாம்.
இவையெல்லாம் நடக்கலாம்.
------------------------------------------------------------------------------------------------- 
ஆனால், CPIயும் CPMமும் இணையாது.
காரணம் என்ன?
இரண்டு கட்சி என்றால், இரண்டு மாநாடு, இரண்டு வசூல்!
இரண்டு மாநிலச் செயலாளர் பதவி, இன்ன பிற.
ஆனால், ஒரே கட்சியாக இணைந்தால், 
ஒரு வசூல்தான். ஒருவருக்குத் தான் பதவி.
இதுதான் ஒரே காரணம்!
மெய்யான காரணம்!!
***************************************************88
  
  
கேப்டன் செய்திகள் டி.வி.யில் விவாதம்!
-------------------------------------------------------------------
DEBATE IN CAPTAIN NEWS CHANNEL TODAY!
-------------------------------------------------------------------------
நாள்: இன்று  20.02.2015 இரவு 9 to 10 மணி 
பொருள்:
-------------------
இந்தியாவில் சமூகநீதி!
உலகச் சமூகநீதி நாளை முன்னிட்டு.
-------------------------------------------------------------------------
பங்கேற்பு:
---------------- 
தோழர் பி இளங்கோ சுப்பிரமணியன் 
-------------------------------------------------------------- 
விரும்புவோர் காணலாம்!
.....அன்புடன் அழைக்கும்,..................................
................நியூட்டன் அறிவியல் மன்றம்...................

***********************************************8888888    
நெருக்கடி நிலைக் காலக் கொடுமைகள்:
------------------------------------------------------------------
கேரளத்தின் கொலைகார முதலமைச்சரால்
சித்திரவதை  செய்து கொல்லப்பட்ட
நக்சல்பாரிப் புரட்சியாளர்  ராஜன்!
---------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
------------------------------------------------------------------
1)  சேலம் சிறையில் கம்யூனிஸ்ட்களைப் படுகொலை செய்த
 ராஜாஜியும்,1965  மொழிப்போரில் மாணவர்களைப் படுகொலை
செய்த பக்தவத்சலமும் கொலைகாரப் பாவிகள்தாம்.
2) என்றாலும் ஹிடலரைப்போல் இவர்கள் சித்திரவதை
முகாமை உருவாக்கவில்லை.    
3) "ELIMINATE THEM"   என்பதுதான் இவர்களின் .கோட்பாடு.
4) ஆனால், சித்திரவதைவாதிகளின் கோட்பாடு:
DON'T ELIMINATE THEM, TORTURE THEM என்பது.
------------------------------------------------------------------------------------
5) கேரளத்தில் 1970 அக்டோபர் முதல், 1977  மார்ச்  வரை
முதலமைச்சராக   இருந்த  ஒருவரை "ரண ரசிகர்" என்று
புரட்சியாளர்கள் அழைப்பார்கள். சித்திரவதைப் பிரியர்
என்று பொருள்.
6) தோழர் ராஜனை நினைவு இருக்கிறதா? இந்திரா காந்தியின்
கொடிய நெருக்கடி நிலையை (1975-1977) எதிர்த்துப்
போராடிய பொறியியல் மாணவர்.
7) கோழிக்கோடு REC பொறியியல் கல்லூரியில் படித்த
அவரை ரண ரசிகரின் காவல் மிருகங்கள் சித்திரவதை
செய்து கொன்று பிணத்தையும்  எரித்து விட்டன.
8) நெருக்கடி நிலை என்றால் என்ன என்று தெரியாதவர்களால்
இந்தக் கட்டுரையைப் புரிந்து  முடியாது.
--------------------------------------------------------------------------------
9) காக்கயம் சித்திரவதை முகாமில் ஜெயராம் படிக்கல்
என்ற காவல் அதிகாரியும் அவன் ஏவல் நாய்களும்
ரண ரசிகனின் உத்தரவுக்கு  இணங்க இந்தக்
கொடூரத்தைச் செய்தனர்.
10) யார் இந்த ரண ரசிகன்? யார் இந்தக் கயவன்?
அவன்தான் அச்சுத மேனன்! போலிக் கம்யூனிஸ்ட்
கட்சியான CPI கட்சித் தலைவன். (படத்தில் உள்ளவன்)
11) சஞ்சய் காந்தியின் எடுபிடியான கருணாகரனும்
( இவன் உள்துறை அமைச்சர்) , அச்சுத மேனனும்
இந்தப் படுகொலைக்குப் பொறுப்பானவர்கள்.
----------------------------------------------------------------------------
12) நெருக்கடி நிலை முடிந்து, அச்சுத மேனன்
பதவி விலகியதும், மக்களின் தீவிரமான எதிர்ப்பால்
அரசியலை விட்டே இவன் ஒதுங்கியதும் வரலாறு.
13) 1991இல் ஒரு நாயைப் போலச் செத்தான் கொடிய
கொலைகார அச்சுத மேனன்.அதற்கு முன்பே மானமுள்ள
மலையாளி மக்களின் எதிர்ப்பால், 1978முதல் அரசியலை
விட்டு விலகி வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தான்.
---------------------------------------------------------------------------
14) இவன் செத்த செய்தி அறிந்து, நக்சல்பாரிப்
புரட்சியாளர்கள் இவனது சாவைத் தீபாவளியாகக்
கொண்டாடினார்கள்.
15) நானும், என்னுடன் பணியாற்றிய, மறைந்த
நக்சல்பாரிப் புரட்சியாளர் ரவீந்திரனும், அண்ணாசாலை
புகாரி ஓட்டலில் மட்டன் பிரியாணி சாப்பிட்டு இவனுடைய
சாவைக் கொண்டாடினோம்.
--------------------------------------------------------------------------
16) போலிக் கம்யூனிஸ்ட்களை அம்பலப் படுத்தி
முறியடிக்காமல் புரட்சி என்பது ஒரு அங்குலம் கூட
முன்னேறாது.
16) புரட்சி என்பது மாலை நேரத்து விருந்து அல்ல
என்பதை உணர்த்திய ராஜனுக்கு செவ்வணக்கம்.
***************************************************        
  

இன்னுமா 1552 பேர் நம்மள நம்புதான்?
----------------------------------------------------------- 
சுப மங்களமாக இனிதே முடிந்தது மார்க்சிஸ்ட் கட்சியின் 
21ஆவது மாநில மாநாடு, நேற்று (19.02.2015.).
இசக்கிமுத்து அண்ணாச்சி மாநாட்டுக்குப் போய் விட்டு 
வந்து விட்டார்.
------------------------------------------------------------------------
மாநாட்டில் சாப்பாடு பிரமாதம் என்றார் அண்ணாச்சி.
பிரியாணி போட்டாங்களா என்றேன்.
ஏ, அவுங்க சைவம்லாடே , பியூர் வெஜிடேரியன் 
சாப்பாடுல்லா போட்டான்; தூள் பரத்திப் புட்டானே, 
சமையல் கான்ட்ராக்ட் கூட யாரோ ஒரு அய்யரு 
என்று இழுத்தார் அண்ணாச்சி.
" பிராமணஹ போஜனப் பிரியஹ" என்று சிவாஜி 
கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் அறிஞர் அண்ணா 
எழுதியது எனக்கு நினைவுக்கு வந்தது.
----------------------------------------------------------------------------- 
சரி அண்ணாச்சி, ஸ்ரீரங்கம் தேர்தல் முடிவு பற்றி 
ஏதேனும் விவாதம் நடந்ததா என்றேன்.
விவாதம் என்னத்தடே நடத்த, எல்லாம் 
ஆச்சரியப் பட்டுக்கிட்டுலா  கிடக்கான் என்றார் அண்ணாச்சி.
என்னத்துக்கு ஆச்சரியம் என்றேன் நான்.
---------------------------------------------------------------------------- 
" இன்னுமா 1552 பேரு நம்மள கம்யூனிஸ்ட்டுன்னு
நம்புதான்"ன்னு எல்லாரும் ஆச்சரியம்லாடே படுதான்
என்றார் அண்ணாச்சி.
டெல்லியில் இருந்து வந்திருக்காங்களே காரத், எச்சூரி,
அவுங்க அபிப்பிராயம் என்ன சொன்னாங்க என்றேன் நான்.
------------------------------------------------------------------------------------ 
" ஏ என்னத்தெ காரட்டு பீட்ருட்டுன்னுட்டுக் கெடக்கே, 
டெல்லில எப்படி 49 பேரு நமக்கு ஓட்டுப் போட்டான், 
இன்னுமா இவனுக நம்மள கம்யூனிஸ்ட்டுன்னு
நம்பிதான்" ன்னு அவரே ஆச்சரியப் பட்டுக்கிட்டுக் 
கெடக்காரு" என்று உண்மையைப் போட்டு உடைத்தார் 
இசக்கிமுத்து அண்ணாச்சி!
---------------------------------------------------------------------------------
***************************************************************
     
    
              

வியாழன், 19 பிப்ரவரி, 2015

AK-47 தெரியும்! அது என்ன AK-67?
------------------------------------------------------- 
1) AK-67 என்பது அரவிந்த் கேஜ்ரிவால் 67 இடங்களில் 
வென்றார் என்று பொருள்படும்.
2) டில்லியில் கேஜ்ரிவால் வென்றதை முன்னிட்டு,
இங்கு தமிழ்நாட்டில் உள்ள ஆம் ஆத்மிகள் 
கர்வத்துடனும் ஆணவத்துடனும் நடந்து கொள்கிறார்கள்.
3) வல்லமை வாய்ந்த நரேந்திர மோடியின் முகத்தில் 
எட்டி உதித்தவர் அல்லவா இவர்களின் தலைவர் கேஜ்ரிவால்!
4) எனவே, லோக்கல் ஆம் ஆத்மிக்களுக்குத் திமிர் 
இருக்கும்தான். இருந்துவிட்டுப் போகிறது, அதனால் என்ன?
------------------------------------------------------------------------------------------------- 
5) மக்கள் என் பக்கம் என்கிறார் கேஜ்ரிவால். மக்களைத் 
தன பக்கம் இழுத்துக் கொண்டவர்களுக்கு கர்வம் 
இருக்கும்தான்.திமிர் இருக்கும்தான்!
------------------------------------------------------------------------------------- 
6) 95 வருஷம் கட்சி நடத்தியும் மக்களைத் தங்கள் 
பக்கம் இழுக்க முடியாத CPI போன்ற போலிக் 
கம்யூனிஸ்ட்களுக்குத் தான் திமிர் இருக்கக் கூடாது.
7) தா பாண்டியன், நல்லகண்ணு போன்ற போலிக் 
கம்யூனிஸ்ட்கள், டில்லிக்குப் போய் கேஜ்ரிவாலின்
காலை அமுக்கி  விடட்டும்.  
----------------------------------------------------------------------------------------- 
8) நாங்கள் (இடதுசாரிக் கூட்டணி) 15 இடங்களில் போட்டி 
இடுகிறோம். மீதி 55 இடங்களிலும் கேஜ்ரிவாலை 
ஆதரிக்கிறோம் என்று அறிவித்த போலிக் கம்யூனிஸ்ட்
தலைவர்கள் கேஜ்ரிவாலுக்கு சிசுரூசை செய்யட்டுமே!   
----------------------------------------------------------------------------------------- 
95 வருஷம் கட்சி நடத்தியும் ஏன் மக்கள் நம்மை 
நம்பவில்லை என்ற கேள்விக்கு விடை தேடுங்கள்.
போலிகளே, இதுதான் இப்போது முக்கியம்.
***************************************************************

வியட்நாம் குறித்துத் தொடர்ச்சியாகக் கட்டுரைகளை
மார்க்சிய சிந்தனைப் பயிலகம் வெளியிடுகிறது.
இன்னும் வெளிவரும். அவை அனைத்தையும்
படிக்குமாறு வாசகர்களை வேண்டுகிறோம்.

பாம்பையும் போலிக் கம்யூனிஸ்ட்டையும் கண்டால்
பாம்பை விட்டு விடு. போலிக் கம்யூனிஸ்ட்டை அடி!
--------------------------------------------------------------------------------   

போலிக் கம்யூனிஸ்ட்களுக்கு எதிரான தீர்ப்பு   
என்பது மார்க்சியத்துக்கு எதிரான தீர்ப்பு அல்ல.
------------------------------------------------------------------------------------ 
டில்லி மாநிலத் தேர்தல்,
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்.
மேற்கு வங்க கிருஷ்ணகன்ச் இடைத் தேர்தல் 
இங்கெல்லாம் போலிக் கம்யூனிஸ்ட் கட்சிகளை 
மக்கள் விரட்டி விரட்டி அடித்துள்ளனர்.
இதனால், மார்க்சியத்தை மக்கள் விரும்பவில்லை 
என்று பொருள் கொள்ள முடியுமா?
நிச்சயமாக முடியாது.
----------------------------------------------------------------------------- 
ஏக் தோ சீட்டுக்காக செங்கொடியை போயஸ் 
தோட்டத்தில் அடகு வைத்துவிட்ட இப்போலிகளுக்கு
மார்க்சியம் பற்றிப் பேச அருகதை இல்லை என்றுதானே 
மக்கள் தீர்ப்பு அளித்து உள்ளனர்.
----------------------------------------------------------------------------------------- 
மக்கள் மார்க்சியத்தை விரும்புகிறார்கள்!
ஆனால், போலிகளை வெறுக்கிறார்கள்.
இதுதானே உண்மை!
-----------------------------------------------------------------------------------
டி.கே. ரங்கராஜனுக்கு எம்.பி பதவி, அம்மா போட்ட பிச்சை 
என்றும், யாருடைய தயவில் டி.ராஜா டில்லியில் 
எம்.பி.யாக வலம் வர முடிகிறது என்றும் கொக்கரிக்கும்
அதிமுகவினரைப் பார்த்து தலைகுனிந்து போவதைத் 
தவிர இந்தப் போலிகளுக்கு என்ன வழி இருக்கிறது?
----------------------------------------------------------------------------------- 
போலிகளே, நீங்கள் மார்க்சியம் பேசாதீர்கள் என்றுதானே 
மக்கள் தீர்ப்பு அளித்து உள்ளார்கள்.
--------------------------------------------------------------------------------- 
இது போலிகளுக்கு எதிரான தீர்ப்பே தவிர,
மார்க்சியத்துக்கு எதிரான தீர்ப்பு அல்ல.
-----------------------------------------------------------------------------------
       
அமெரிக்காவுடன் அணுஉலை ஒப்பந்தம்
செய்த வியட்நாமின் கம்யூனிஸ்ட் கட்சிகள்!
-------------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
மார்க்சிய சிந்தனைப் பயிலகம் 
-----------------------------------------------------------------------------------------
நினைவு இருக்கிறதா 123 ஒப்பந்தம்?
டாக்டர் மன்மோகன்சிங்கின் UPA -1 ஆட்சிக் காலத்தின்
இறுதியில், அமெரிக்காவுடன் செய்து கொள்ள இருந்த
அணுஉலை ஒப்பந்தம்! ( அமெரிக்கச் சட்டத்தின் 
123ஆவது பிரிவின்கீழ் வருவதால் இது 123 ஒப்பந்தம்).

டாக்டர் மன்மோகன் சிங் இதில் மிகவும் தீவிரம் காட்டி,
123 ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தீர்மானித்தார். 
இதனால்  ஐ.மு.கூ-1அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 
பிரகாஷ் காரத் விலக்கிக்கொண்டதும், நாடாளுமன்றத் 
தேர்தல்(2009) வந்ததும், அதில் மீண்டும் ஐ.மு.கூ வெற்றி 
பெற்றதும் ஆகிய வரலாற்றை இங்கு நினைவுகூர 
வேண்டும்.

ஆனால், வியட்நாம் மிகச் சுலபமாக, அமெரிக்காவுடன்
அணுஉலை ஒப்பந்தம், அதாவது 123 ஒப்பந்தம் செய்து
கொண்டது. இது பற்றி  எந்த முனகலோ முணுமுணுப்போ
வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியிடமோ மக்களிடமோ 
இல்லை. IT WAS A CAKEWALK FOR VIETNAM COMMUNIST PARTY. 

அமெரிக்க-வியட்நாம் 123 ஒப்பந்தம் அக்டோபர் 2013இல்
கையெழுத்தானது. வியட்நாமின் வெளியுறவு அமைச்சர்
பாம் பின் மின் (Pham Binh Minh) மற்றும் அமெரிக்க அரசுச்
செயலர் ஜான் கெர்ரி இருவரும் ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டனர். 10 பில்லியன் அமெரிக்க டாலரில் 
தொடங்கும் இந்த அணுஉலை வணிகம் 50 பில்லியன்
டாலரில் முடியும்.( ஒரு பில்லியன் என்பது நூறு கோடி).

வியட்நாம் என்பது பூகோள ரீதியாக, நிலநடுக்க முறிவுப்
பாதையில் ( SEISMIC FAULT LINE) அமைந்துள்ளது. மேலும்
3260 கி.மீ  நீண்ட கடற்கரையை உடையது. இதனால் 
சுனாமி ஆபத்து ஒட்டு மொத்த வியட்நாமிலும் 
பெருமளவுக்கு உள்ளது.

இருப்பினும், இது பற்றித் துளியும் கவலைப் படாமல்,
வியட்நாம், அமெரிக்காவுடன்  அணுஉலை 
ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்று மார்க்சியத்தில் 
ஒரு கோட்பாடு உண்டு. இது மார்க்சியத்தின் 
அடிப்படையான கோட்பாடுகளில் ஒன்று. இதை 
வெளிப்படுத்தும் "சர்வதேச கீதம்" என்ற இசைப்பாடலும் 
உண்டு. உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் 
என்றுதானே மார்க்ஸ் அறைகூவல் விடுத்தார்!
ஆக, பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்பது 
புறக்கணிக்க முடியாத ஒரு கோட்பாடு.

ஆனால், 123 ஒப்பந்தத்தைப் பொருத்தமட்டில், உலகக்
கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே சர்வதேசியம் கடைப்
பிடிக்கப் பட்டதா?

வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி 123 ஒப்பந்தத்தை ஏற்றுக்
கொள்கிறது. ஆனால் இந்தியாவின் இரண்டு கம்யூனிஸ்ட்
கட்சிகளான CPI, CPM ஆகியவை இதே 123 ஒப்பந்தத்தை
எதிர்க்கின்றன. 123 ஒப்பந்தத்தை முன்வைத்து மன்மோகன்
சிங்கின் ஆட்சிக்கு ஆதரவை மறுக்கிறது CPM. இதே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, அமெரிக்காவை மகிழ்விக்கிறது வியட்நாம் கட்சி. அப்படியானால், 
பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்ன ஆனது?

ஒரே பிரச்சினையில் (123 ஒப்பந்தம்) வியட்நாம் கம்யூனிஸ்ட்களும் இந்தியக் கம்யூனிஸ்ட்களும் 
எதிர் எதிர் நிலை எடுப்பது ஏன்?
ஏன் இந்தப் பாரதூரமான வேறுபாடு?

இதில், எது சரி? இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலை
சரியானதா? அல்லது, வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின்
நிலை சரியானதா?

வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியானது, பிரெஞ்சு 
ஏகாதிபத்தியத்தின் அடிமை விலங்கை ஒடித்து,
வியட்நாமுக்கு விடுதலை பெற்றுத் தந்தது.
இருபதாண்டு காலம் தங்கள் மண்ணை ஆக்கிரமித்து 
இருந்த  அமெரிக்காவை விரட்டி அடித்து நாட்டுக்கு 
சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும்  
புரட்சிகரப் பாரம்பரியம் உண்டு. அதோடு 
95 ஆண்டுகளாய், ஒரு மிகப் பெரிய நாட்டில் 
கட்சி நடத்தி வரும் அனுபவமும் 
உண்டு. இருப்பினும் ஏன் இந்த முரண்பாடு?

இதற்குக் காரணம் வாக்கு வங்கி அரசியலைப்
பின்பற்றி நிற்பதுதான். இதன் காரணமாக, 
மக்களின் பின்தங்கிய உணர்வு நிலைக்கு வால் 
பிடிக்க வேண்டிய அவலம் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 
ஏற்பட்டது.

அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடிய 
வியட்நாம், இன்று பழசை எல்லாம் மறந்து,
அமெரிக்காவுடன் 123 ஒப்பந்தம் (அணுஉலை ஒப்பந்தம்)
செய்து கொண்டது ஏன்? ஏன்? ஏன்?

வியட்நாமில் வாக்கு வங்கி அரசியல் கிடையாது.
எனவே அங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சி, தான் எடுத்த 
நிலைபாட்டைச் செயல்படுத்துகிறது. இந்தியாவின் 
நாடாளுமன்றக் கம்யூனிஸ்டுகள் வாக்கு வங்கி 
அரசியலில் மாட்டிக் கொண்டதால், திணறிப் போய் 
நிற்கிறார்கள். பாட்டாளி வர்க்க சர்வ தேசியத்தைக் 
காவு கொடுத்து விடுகிறார்கள்.   
------------------------------------------------------------------------------------------------

(4) லெனின் படத்தை அழுக்குத் துணியால் மறைத்த 
வியட்நாமிய கம்யூனிஸ்ட் தலைவர்கள்!
--------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம் 
------------------------------------------------------------------ 
வியட்நாம் ஒரு கம்யூனிஸ்ட் நாடு.
வியட்நாமிய சோஷலிசக் குடியரசு என்றுதான் அந்த 
நாட்டுக்குப் பெயர். (VIETNAM SOCIALIST REPUBLIC).
மேலும் வியட்நாம் ஒரு நாத்திக நாடும் கூட.
வியட்நாமிய அரசமைப்புச் சட்டப்படி, IT IS A DECLARED 
ATHIEST STATE. வியட்நாம் நாட்டில் 2009ஆம் ஆண்டு 
கணக்கெடுத்த சென்சஸ் பிரகாரம், 81 சதம் மக்கள் 
எந்த மதத்தையும் சாராதவர்கள், அதாவது நாத்திகர்கள்.
** 
தென்கிழக்கு ஆசியாவின் குட்டி நாடான வியட்நாமின் 
மக்கள்தொகை சற்றேறக்குறைய ஒன்பது கோடி. நம் 
தமிழ்நாட்டின் அளவுதான், தோராயமாக.
இங்கு ஒரு கட்சி ஆட்சிமுறை நடைபெறுகிறது.
அந்த ஒரு கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சிதான்.
வேறு எந்த அரசியல் கட்சிக்கும் அங்கு இடம் கிடையாது.
அனுமதியும் கிடையாது. VIETNAM IS A ONE-PARTY STATE,
AS PER ITS CONSTITUTION.
இங்கு வியட்நாம் என்பது வடக்கு வியட்நாம்,
தெற்கு வியட்நாம் இரண்டையும் உள்ளடக்கிய 
ஒருங்கிணைந்த வியட்நாம் ஆகும்.
**       
வியட்நாம் உலக வர்த்தகக் கழகத்தில் இணைந்து கொண்ட 
ஒரு நாடு. 2007 ஜனவரியில், WTOவில் வியட்நாம் 
இணைந்தபோது, WTOவில் 150 நாடுகள் இணைந்து 
இருந்தன. WTOவில் இணைந்த அந்த நிகழ்வு, வியட்நாமில் 
கோலாகலமாகக் கொண்டாடப் பட்டது. கொண்டாட்டங்களை 
 CPV, அதாவது வியட்நாமிய கம்யூனிஸ்ட் கட்சி 
முன்னெடுத்தது.இனிப்புகள் பரிமாறப் பட்டன.
பூங்கொத்துகள் WTO அதிகாரிகளுக்கு வழங்கப் பட்டன.
வியட்நாமிய கம்யூனிஸ்ட் தலைவர்களும், WTOவின் 
அதிகாரிகளும் ஒன்றாக அமர்ந்து உண்ட அந்த விருந்தில் 
உயர்வகை உணவுகள் பரிமாறப் பட்டன.
** 
மேலும், வியட்நாம் ஏற்கனவே உலக வங்கியில் 
உறுப்பினராக உள்ளது. (ஆனால், கியூபா உலகவங்கியில் 
உறுப்பினராக இல்லை என்பது கருதத் தக்கது.)
உலகவங்கி, IMF,WTO ஆகியவை எல்லாம் ஏகாதிபத்திய 
நிறுவனங்கள். லெனின் கூறியபடி, நிதி மூலதனத்தை 
ஏற்றுமதி செய்து, உலக நாடுகளைச் சுரண்டிக் கொழுக்கும்
பகாசுர நிறுவனங்கள்.
"ஏகாதிபத்தியம், முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம்"
என்ற தமது புகழ் பெற்ற நூலில், லெனின் இது பற்றி 
விளக்கி இருப்பார்.
** 
ஆனாலும், எவ்விதக் குற்ற உணர்வும் இன்றியே, 
வியட்நாம் WTOவில் இணைந்தது. தாலி கட்டிய 
புருஷனுடன் படுக்கைக்குச் செல்லும் பெண்டாட்டி 
போல, வியட்நாம் மிக இயல்பாக WTOவில் இணைந்தது.
அமெரிக்க அதிகாரிகள் பங்கேற்ற விழாக்களில், லெனின் 
படத்தை அழுக்குத் துணியால் மூட வேண்டி இருந்தது 
ஒன்றுதான் லேசான ஒரு அசவுகரியம்.
** 
மாலையில் நடைபெற்ற, அமெரிக்க அதிகாரிகளுக்கு 
அளித்த மதுபான விருந்தின்போது, வியட்நாமிய கம்யூனிஸ்ட் 
தலைவர்கள், அமெரிக்க முதலாளிகளின் நலனுக்காக, 
குடித்தார்கள். விருந்து மண்டபம் எங்கும் நிறைந்து 
ஒலித்தது  "சியர்ஸ்" ஓசை.  
** 
இருபது லட்சம் வியட்நாமியர்களை அமெரிக்க 
ராணுவத்துக்குப் பலி கொடுத்த வியட்நாம் நாடு,
அதையெல்லாம் மறந்து விட்டு, இன்று அமெரிக்காவுடன் 
கை குலுக்குவதா என்று நீங்கள் பதைபதைப்பீர்கள்
என்றால், உங்கள் வாயிலேயே சூடு போடுவார்கள் 
வியட்நாமியக் கம்யூனிஸ்ட் தலைவர்கள். "நாபாம் 
குண்டுகளை மறந்து விட்டீர்களா காம்ரேட்ஸ்" என்று 
நீங்கள் புலம்பத் தொடங்கினால், வியட்நாமின் "மக்கள் 
ராணுவ" வீரர்கள் உங்கள் நாக்கை அறுப்பது உறுதி.
** 
ஏன் இந்தத் தலைகீழ் மாற்றம்? 1975இல் போரின் 
முடிவில், சைகோன் வீழ்ந்ததுமே, குதிகால் பிடரியில்    
பட ஒடிப்போனார்களே அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு 
ராணுவத் தளபதிகள்! அவர்களுக்கா இன்று வியட்நாமில் 
விருந்து? சிவப்புக் கம்பள வரவேற்பு?
** 
இதுதான் இன்றைய வியட்நாம். இதுதான் உண்மை!
முக்கால உண்மை! ஏன் நிகழ்ந்தது இந்த மாற்றம்?
எப்படி நிகழ்ந்தது இந்த மாற்றம்?
விடை காண வேண்டாமா?
------------------------------------------------------------------------ 

             
      

புதன், 18 பிப்ரவரி, 2015

அநாதை ஆகிறது பாஜக தமிழ்நாட்டில்!
--------------------------------------------------------------- 
பாஜகவை வைகோ கைகழுவினார்!
தற்போது, பாமக பாஜகவை கைகழுவி உள்ளது.
பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று 
பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு 
எடுக்கப் பட்டுள்ளது.
ஏற்கனவே, தேமுதிக மவுனம் காத்ததால்,
ஸ்ரீரங்கத்தில் வெறும் 5000 வாக்குகளுடன் 
அவமானகரமான தோல்வியைச் சந்தித்தது.
2016க்குள் பாஜக முற்றிலும் தனிமைப் படுத்தப்பட்டு 
அநாதை ஆகிவிடும்.
அது சரி, இந்தத் தரகர் தமிழருவி மணியனை 
எங்கே காணோம்?
கருத்துச் சொல்லாமல் எந்தப் பொந்துக்குள் 
பதுங்கிக் கொண்டு இருக்கிறார்?
**************************************************88
மார்க்சிஸ்ட்களுக்கு அசாமிலும் அடி!
அடி மேல் அடி விழுவது ஏன்?
----------------------------------------------------------------- 
அண்மையில் அசாம் மாநிலத்தில் உள்ளாட்சி 
அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்று முடிந்தது.
வழக்கம் போலவே, இங்கும் மார்க்சிஸ்ட்கள் படுதோல்வி 
அடைந்து உள்ளனர்.
--------------------------------------------------------------------------------------------- 
இங்கு பாஜக பெரும் வெற்றி அடைந்துள்ளது.
அடுத்து 2016இல் வரும் சட்டமன்றத் தேர்தலில் 
பாஜக எப்படியும் ஆட்சியைப் பிடித்து விடும் என்று 
எல்லா அரசியல் நோக்கர்களும் எழுதி உள்ளனர்.
---------------------------------------------------------------------------- 
காங்கிரஸ் முதல்வர் தருண் கோகாய் நடத்தும் 
ஊழல் மலிந்த ஆட்சியும், அவரது மகன் அரசு நிர்வாகத்தில் 
தலையிட்டுச் செய்யும் அத்துமீறல்களும், பாஜகவின் 
செல்வாக்குப் பெருகிட முக்கியமான காரணம்.
--------------------------------------------------------------------------------- 
மார்க்சிஸ்ட்கள் தங்களின் சித்தாந்த ஓட்டாண்டித்
தனத்தால், பாஜகவின் செல்வாக்குப் பெருகிட வழி வகுத்தனர்.
அசாம் மக்கள் போலிகளுக்கு மரண அடி கொடுத்துள்ளனர்.
---------------------------------------------------------------------------------------------- 
தந்தை பெரியார் பாணியில், 
"பாம்பையும் போலிக் கம்யூனிஸ்ட்டையும் கண்டால்,
பாம்பை விட்டுவிடு, போலிக் கம்யூனிஸ்டை அடி!" 
என்ற முடிவை அசாம் மக்கள் எடுத்துள்ளனர்.
*************************************************************88      
என்னுடைய இளமைக் காலத்தில் "கண்டது கற்கப் பண்டிதன்
ஆவான்" என்பது  என் தாரக மந்திரமாக இருந்தது. கண்டதையும்
கற்றேன். ( அது இன்று பயன்படுகிறது).
ஆனால், தற்போது என் தாரக மந்திரம் இதுதான்.
'கல்வி கரையில கற்பவர் நாள்சில
மெல்ல நினைக்கின் பிணிபல ஆதலினால்
ஆராய்ந்து அமைவுடைய கற்கவே
பாலுண்  குருகின் தெரிந்து."
மேற்கண்ட நாலடியார்ச் செய்யுள்தான் இன்று எனக்கு
வழிகாட்டும் கோட்பாடு. பொருள் புரிகிறதா?
ஆராய்ந்து அமைவுடைய கற்பது! எல்லாவற்றையும் கற்பது அல்ல.


கருத்துரிமைப் போலிகள்!
அஞ்சி நடுங்கும் கோழைகள்!!
----------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------
விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் ஐந்து 
ஆண்டுகளுக்கு நீட்டித்து உள்ளது மோடியின் அரசு.
2015 பிப்ரவரி முதல் இந்தத் தடை நீடிக்கப் பட்டுள்ளது 
என்பதையும் நாம் ஏற்கனவே அறிவித்து இருந்தோம். 
**
விடுதலைப் புலிகள் முற்றிலுமாகத் துடைத்து எறியப் பட்டு 
விட்டார்கள் என்று சிங்கள ராஜபக்சே அரசும், இந்திய 
மன்மோகன் அரசும் அறுதியிட்டுக் கூறியபின்னால், 
இந்தத் தடைக்கு எவ்வித நியாயமும் இல்லை. 
**
ஆனாலும், மோடி அரசின் இந்தத் தடை நீட்டிப்பை  
எதிர்த்து, கருத்துரிமைப் போராளிகளாகத் தங்களை 
வரித்துக் கொண்ட பல்வேறு குட்டி முதலாளித்துவ 
அமைப்புகளோ தனிநபர்களோ இதுவரை வாய் 
திறக்கவில்லை.
**
பின் நவீனத்துவ எழுத்தாளர் பெருமாள் முருகனின் 
நூலுக்கு எதிர்ப்பு வந்தபோது, தமிழகத்தில் உள்ள 
ஒவ்வொரு குட்டி முதலாளித்துவப் போலியும் 
பெருமாள் முருகனின் கருத்துரிமையை ஆதரித்து 
புரட்சியின் உச்சத்தைத்  தொட்டான்.
**
கருத்துரிமைக் காவலனாக இருந்து கொண்டா இவன் 
பெருமாள் முருகனை ஆதரித்தான்? இல்லை, இல்லவே 
இல்லை. பெருமாள் முருகனின் சர்ச்சைக்குரிய 
மாதொருபாகன் நூலை தமிழக அரசோ, மத்திய அரசோ,
நீதிமன்றமோ தடை செய்யவில்லை. எனவே, பெருமாள் 
முருகனின் கருத்துரிமையை ஆதரிப்பதில் எந்தவொரு 
ஆபத்தும் இல்லை என்பதால் இவன் பெருமாள் முருகனை 
ஆதரித்து எல்லை தாண்டிய புரட்சி செய்தான்.
**
ஆனால் விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 
ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பு என்று மத்திய அரசு 
உத்தரவு வெளியிட்டபோது, இந்தக் கருத்துரிமைக் 
காவலர்கள் எல்லோரும் தலைமறைவாகிப் 
போனார்கள். தடையைக் கண்டிக்க இவர்களில் ஒரு பயலும் முன்வரவில்லை. இப்படி ஒரு சம்பவமே நடக்காதது போல இந்தக் கயவர்கள் கிரிமினல்தனமான மௌனம் 
காத்தார்கள்.
**
பெப்ரவரி 2015இல், புலிகளின் மீதான தடையை எதிர்த்துக் 
கருத்துக்கூற முயன்றபோது, கேப்டன் நியூஸ் டி.வி.,
வின் டி.வி ஆகிய இரண்டு தொலைக்காட்சிகள் மட்டுமே 
நமக்கு அந்த வாய்ப்பைத் தந்தன. பிரபலமாக இருக்கும் 
இரண்டு டி.வி.கள் அந்த வாய்ப்பைத் தரவில்லை.
இந்தத் தடையை மிகக் கடுமையாகக் கண்டித்து 
முதல் குரல் கொடுப்பதற்கான வாய்ப்பை நியூட்டன் 
அறிவியல் மன்றத்துக்கு வழங்கிய வின், கேப்டன் 
டி.வி.க்களுக்கு நன்றி.
********************************************************************       
பின்குறிப்பு: பெருமாள் முருகனுக்கு ஆதரவாகக் குரல் 
கொடுப்பது தவறு என்று இப்பதிவு கூறவில்லை. அவ்வாறு 
புரிந்து கொள்வது பிறழ் புரிதல் ஆகும்.
------------------------------------------------------------------------------------------------------     


அமெரிக்கா வாழ்க என்று கோஷமிடும் 
வியட்நாமியக் கம்யூனிஸ்ட்கள்!
-------------------------------------------------------------------- 
பி இளங்கோ சுப்பிரமணியன் 
------------------------------------------------------------------------ 
அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒழிக என்று உலகின் எந்த மூலையில்  
இருந்துகொண்டும்  நீங்கள் கோஷம் போடலாம். அதற்கான 
கருத்துரிமை உங்களுக்கு உண்டு. இந்தியாவில் அப்படி நீங்கள் 
கோஷம் போட்டால், உடனடியாக உங்களுக்கு முற்போக்குப் 
பட்டம் வழங்கப்பட்டு விடும். கூடுதலாக, ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியாகவும் நீங்கள் வலம் வரலாம்.

ஆனால், இந்த உலகில், ஒரே ஒரு இடத்தில் மட்டும், யாரும் 
மேற்கண்ட கோஷத்தைப் போட முடியாது. மீறி எவரும் 
கோஷமிட்டால், அவர் சிறை செய்யப் படுவார். சுட்டுத் 
தள்ளவும் படலாம்.

அது எந்த இடம்? அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒழிக என்று 
கோஷமிடும் எளிய உரிமையைக்கூட  மறுக்கும் 
அந்த இடம் எது?

இந்தக் கேள்விக்கான விடை அனேகமாக எல்லோரையும் 
வியப்பில் ஆழ்த்தலாம். அதிர்ச்சியையும் தரலாம். ஆனால் 
அதுதான் உண்மை. பரிபூரண உண்மை.

அந்த இடம் வியட்நாம்! மாபெரும் பாட்டாளி வர்க்கப் 
புரட்சியாளர் ஹோ சி மின் அவர்களின் வியட்நாம். 
பெரியாரின் மண், காந்தியின் தேசம் என்பதைப் போல, 
அது ஹோ சி மின்னின் வியட்நாம்.
------------------------------------------------------------------------------------------------------ 
ஆம். வியட்நாம் ஒரு கம்யூனிஸ்ட் நாடு. சோஷலிச நாடு.
அங்கு இன்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிதான் 
நடைபெற்று வருகிறது.  

வியட்நாம் என்பது தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு 
சின்னஞ் சிறிய நாடு. அமெரிக்கா இந்த நாட்டை 
ஆக்கிரமித்தது. வியட்நாம் போர் 1955 முதல் 1975 வரை 
இருபது ஆண்டுகள் நீடித்தது. உலக வரலாற்றின் மிகவும் 
அநீதியான போர் இது.

இறுதியில் ஆக்கிரமிப்பாளன் அமெரிக்கா படுதோல்வி 
அடைந்து வியட்நாமை விட்டு ஓடியது. 

ஆனால், இன்று இதெல்லாம் பழைய கதை. அமெரிக்காவும் 
வியட்நாமும் மிக நெருக்கமான நட்பு நாடுகள். இந்த நட்பு 
இன்று, இந்த 2015இல் முகிழ்த்த புதிய நட்பு என்று யாரும் 
கருதி விடவேண்டாம். இந்த நட்புக்கு வயது 20. ஆம், இருபது 
ஆண்டுகளாக, 1995 முதல் 2015 வரை இந்த நட்பு செழித்து 
வளர்ந்து பூத்துக் குலுங்குகிறது.
----------------------------------------------------------------------------------------------------- 
1955 முதல் 1975 வரையிலான இருபது ஆண்டுக் காலத்தில்
இருநாடுகளும் கொடிய பகை நாடுகள்.
1995 முதல் 2015 வரையிலான இந்த இருபது ஆண்டுகளில் 
இருநாடுகளும் மிகவும் நெருங்கிய நட்புநாடுகள். இந்த நட்பு 
வருங்காலத்திலும் தொடர்ந்து நீடிக்கும் ஒளி வீசும் நட்பு.

இருபது லட்சம் வியட்நாமியர்கள்அமெரிக்க எதிர்ப்புப் 
போரில்  உயிர்த் தியாகம் செய்தார்கள்.ஊனமுற்றவர்கள், 
காயம் அடைந்தவர்கள் மேலும் பல லட்சம். 

இருபது லட்சம் பேர் பலி என்பது மிகப்பெரிய நாடான 
இந்தியாவில் சாதரணமாக இருக்கலாம். ஆனால் சின்னஞ் 
சிறிய வியட்நாமில் இருபது லட்சம் என்பது மிகவும் 
அசாதாரணம்.

1955இல் அமெரிக்க ஆக்கிரமிப்பின்போது, வியட்நாமின் 
மக்கள் தொகை வெறும் மூன்று கோடிதான் என்னும்போது 
இந்த இருபது லட்சம் பேர் பலி என்பது மிகப் பெரிய விஷயம்.

நிற்க. இன்று இதெல்லாம் ஊசிப்போன பழங்கதை. கிழவி 
வடை சுட்ட கதை. பாரதியார் கூறுவது போல், "கிழவியர் 
தபசியர் போல்" வெறும் கிளிக்கதையை வியட்நாமில் 
யாரும் இன்று கூற முடியாது.
-------------------------------------------------------------------------------------------------------- 

வாழ்க வாழ்க அமெரிக்கா!
அமெரிக்க-வியட்நாம் நட்பு நீடூழி வாழ்க!
பில் கிளிண்டன் ஜிந்தாபாத்!
ஜார்ஜ் புஷ் ஜிந்தாபாத்!
பாரக் ஒபாமா ஜிந்தாபாத்!

விண்ணதிரும் இந்த முழக்கங்களை வியட்நாம் நாடு 
முழுவதும் இன்று கேட்கலாம். வடக்கே ஹனாய் முதல் 
தெற்கே சைகோன் (ஹோசிமின்சிட்டி) வரை. 
----------------------------------------------------------------------------------------------- 

ஏன் இந்த மாற்றம்? எப்படி இது நிகழ்ந்தது? வியட்நாமில் 
அன்று முதல் (1955) இன்று வரை கம்யூனிஸ்ட் கட்சிதானே 
ஆள்கிறது! ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது வெறும் மாயை 
என்று கம்யூனிஸ்ட் கட்சி கருதுவது ஏன்?
தவறு நிகழ்ந்துள்ளதா? தவறு என்றால் இது இமாலயத் 
தவறு ஆயிற்றே!

அப்படி என்றால் தத்துவமே தவறா? கேள்விகள் நெஞ்சைக் 
குடைகின்றன.

சிந்திக்க வேண்டாமா? மூலதன வகுப்பு எடுக்கும் 
பித்துக்குளி முருகதாஸ்கள் இதற்கு என்ன பதில் வைத்து 
இருக்கிறார்கள்? போலிக் கம்யூனிஸ்ட் தலைவர்கள் இதற்கு 
என்ன பதில் தருவார்கள்? முட்டாள்களாகவே வளர்த்து 
எடுக்கப்பட்டு முட்டாள்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் 
போலிக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் அணிகளுக்கு, இவ்வளவு 
தீவிரமான மாற்றங்கள் வியட்நாமில் ஏற்பட்டிருப்பது பற்றி 
ரோமம் அளவுக்காவது தெரியுமா?

மார்க்சியம் சந்திக்கும் சமகாலப் பிரச்சினைகள், சிக்கல்கள்,
நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்காமல், மூலதனப் 
பழங்கதையில் முகத்தை ஒளித்துக் கொண்டிருக்கும் 
கோழைகளும் மூடர்களும் என்ன பதில் சொல்லப் 
போகிறார்கள்?

அடுத்த கட்டுரையில் பார்ப்போம்!
-----------------------------------------------------------------------------------------------------
முதல் பகுதி முற்றியது!
----------------------------------------------------------------------------------------------------------- 
வெளியீடு: மார்க்சிய சிந்தனைப் பயிலகம் 
********************************************************************     

     
      


   
கிறிஸ்துவரான சீமான் இந்துக் கடவுள் முருகனை 
வைத்து அரசியல் பண்ணலாமா?
இந்தக் கேள்வி தேவையற்றது!! மதவெறியைக் கைவிடுங்கள்!!
----------------------------------------------------------------------------------- 
நாம் தமிழர் இயக்கத்தின் தலைவரான திரு சீமான் 
ஒரு நாடார் கிறிஸ்துவர்.
அவரின் உண்மையான பெயர் செபஸ்டியன் சைமன்.
சினிமாவுக்காக அவர் சீமான் என்று பெயர் வைத்துக் கொண்டார்.
அது சினிமாவுக்காக வைத்துக் கொண்ட பெயர். அவ்வளவுதான்.
மற்றப்படி, அவர் சைமன் ஆகவே வாழ்ந்து வருகிறார்.
அவரை வாழ்த்துவோம்!
------------------------------------------------------------------------------------------- 
தற்போது அவர் முருகக் கடவுள் என்றும் முருகனே மூத்த 
தமிழ்க் கடவுள் என்றும் கூறிக்கொண்டு, வேல், காவடி இவற்றை 
எல்லாம் தரித்துக் கொண்டு, இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்று 
காட்ட முயல்கிறார்.
--------------------------------------------------------------------------------------------------- 
அப்படியானால் அவர் இந்து மதத்துக்கு மாறி விட்டாரா என்று 
கேள்வி எழுப்புகிறது இந்து முன்னணி.
--------------------------------------------------------------------------------------------- 
கிறித்துவராக இருந்து கொண்டு, முருகக் கடவுள் என்று 
கூறுவதால் பாதிரியார்கள் கோபம் கொண்டுள்ளனர்.
------------------------------------------------------------------------------------------- 
மதமும் மதவெறியும் எப்படி எல்லாம் மனிதனின் 
வாழ்வில் தலையிடுகின்றன பாருங்கள்!
----------------------------------------------------------------------------------
நமது கருத்து!
சீமான் அவர்களின் அரசியலை விமர்சியுங்கள்!
தயவு செய்து மதத்தின் அடிப்படையில் அவரை விமர்சிக்க 
வேண்டாம்!
மதம் வேண்டாம்! வேண்டாம்!!
*****************************************************************     

செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

மீத்தேன் திட்டம்: அதிமுக அரசு என்ன நிலை எடுக்கும்?
---------------------------------------------------------------------------------------- 
இன்று தமிழக சட்ட மன்றத்தில் ஆளுநர் வாசித்த 
உரையில், மீத்தேன் திட்டம் குறித்து ஒன்றுமே சொல்லப் 
படவில்லை என்பது அரசியல் விமர்சகர்களால்
கண்டனம் செய்யப் படுகிறது.
விசாரித்தபோது அதிமுக வட்டாரம் பின்வரும் 
தகவலைக் கூறியது.
மீத்தேன் திட்டப் பணிகள் தொடர அனுமதிக்கப் 
படுமானால், டெல்டா பகுதிகள் குறைந்தது 65 தொகுதிகளில் 
அதிமுக தோல்வி அடையும் என்ற கணிப்பும் 
உளவுத்துறை அறிக்கையும் ஜெ.விடம் வழங்கப் 
பட்டுள்ளதாகச் சொல்லப் படுகிறது.
எனவே, கட்சி நலனும் சொந்த ஆதாயமும் கருதி 
அதிமுக அரசு இத்திட்டத்தை குறைந்தது 2016 தேர்தல் 
முடிவுகள் தெரியும் வரை அனுமதிக்காது என்று 
அதிமுக மேலிடத் தகவலைச் சுட்டிக் காட்டி 
ஊடக அன்பர்கள் தெரிவிக்கின்றனர்.
****************************************************************