திங்கள், 16 பிப்ரவரி, 2015

டெப்பாசிட் இழப்பு என்றால் என்ன?
டெப்பாசிட் இழக்காமல் இருக்க எவ்வளவு வாக்குகள் பெற வேண்டும்?
---------------------------------------------------------------------------- 
ஒரு தொகுதியில் பதிவான வாக்குகளில் 
ஆறில் ஒரு பங்கு வாக்குகளைப் பெற்றால் மட்டுமே,
ஒரு வேட்பாளர் டெப்பாசிட் பெற முடியும்.
பதிவான வாக்குகள் என்பதை கவனிக்கவும்.
மொத்த வாக்குகள் அல்ல.
---------------------------------------------------------------------------- 
ஸ்ரீரங்கம் தொகுதியில்
மொத்த வாக்குகள்: 2,70,281
பதிவான வாக்குகள்: 2,21,060
(தகவல் ஆதாரம்: தி இந்து (தமிழ்) 14.02.2015, பக்கம்-1)
-----------------------------------------------------------------------------------
டெப்பாசிட் பெறுவதற்கு இந்த 2,21,060 வாக்குகளில் 
ஆறில் ஒரு பாகமான 36844 வாக்குகள் பெற வேண்டும்.
போட்டியிடும் மொத்தமுள்ள 29 வேட்பாளர்களில்,
பாஜக, மார்க்சிஸ்ட், சுயேச்சைகள் உட்பட 
27 வேட்பாளர்கள் டெப்பாசிட் இழப்பார்கள்.
அதிமுகவெற்றி பெறும். திமுக தோற்கும் ஆனாலும்
டெப்பாசிட் பெற்று விடும்.  
இதை நாம் இன்று சொல்லவில்லை. அன்றே 
சொல்லி இருந்தோம்.       
*************************************************************** 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக