வியாழன், 30 ஜூன், 2016

இயற்றமிழ் என்பது இயல்பான தமிழ் என்று
பொருள் தரும். இயல்பான  எழுத்தும் பேச்சுமே
இயற்றமிழ் எனப்பட்டன. சற்று முயற்சி எடுத்தால்தான்
இசையும் நாடகமும் செய்ய முடியும். எனவே இயல்பாக
எந்த வித முயற்சியும் இன்றி உருவான தமிழ்
இயற்றமிழ் என்றும், முயற்சிக்குப் பின் வருகிற
தமிழாக இசையும் நாடகமும்   கருதப் பட்டன.
**
இன்று அறிவியல் இயல்பான ஒன்றாக இல்லை.
அதைக் கற்கவும், வெளிப்படுத்தவும் தனிச் சிறப்பான
முயற்சிகள் தேவைப் படுகின்றன. அறிவியல் தமிழ்
இயல்பானதாக இல்லை. பெரும் பெரும் முயற்சிகளைக்
கோருகிறது. எனவே அதை எப்படி இயற்றமிழில்
அடக்க முடியும்? தனிச்சிறப்பான ஒன்றைப்
பொதுவான ஒன்றாகக் கருதுவது சரியல்ல.
**
அறிவியலை விளக்குவது என்பது வெறும்
உரைநடையுடன் முடிந்து போகிற விஷயம் அல்ல.
எனவே நான்காம் தமிழ் தேவை. 


புதன், 29 ஜூன், 2016

இசையும் நாடகமும் ஒன்றுக்கொன்று மிக மிக
நெருக்கமானவை. நாடகத்தில் இசை அடங்கும்.
இசையில்லா நாடகம் இல்லை. எனினும்,
தேவை கருதி இசைத்தமிழ் என்றும் நாடகத் தமிழ்
என்றும் தனிப் பிரிவுகளை  ஆக்கி இருந்தனர்
நம் முன்னோர்.
**
இன்று கால மாற்றத்தின் விளைவாக, அறிவியல்
மிகவும் அசுரத் தனமாக வளர்ச்சி அடைந்துள்ளது.
அதைத் தமிழில் சொல்ல வேண்டும். தமிழை
அறிவியலுக்கு ஏற்ற மொழியாக மாற்றி அமைத்திட
வேண்டும் என்ற தேவை இன்றுள்ளது.
**
இத்தேவை கருதியே நான்காம் தமிழாக, அறிவியல்
தமிழை உருவாக்க வேண்டும் என்ற சூழல் உருவாகி
உள்ளது. கண்முன்னே நிற்கும் இந்தத் தேவையை
ஏற்க மறுத்து, அறிவியல் இயற்றமிழில் அடங்கும்
என்று கூறுவது வேருக்கு வெந்நீர் ஊற்றும் செயலாகி
விடும்.   
--------------------------------------------------------------------------------------------
சிறப்புக் கவனம் தேவைப்படும் எந்த ஒரு பிரிவையும்
பொதுவில் வைப்பதைத் தவிர்த்து, தனியாகப்
பிரித்து எடுப்பதன் மூலமே வளர்ச்சி சாத்தியப்படும்.
இது மானுடம் அதன் பட்டறிவின் மூலம் உணர்ந்த உண்மை.
**
ஏற்கனவே இருக்கும் இயற்றமிழில் அறிவியல்
இல்லை. எனவே அறிவியலுக்காக அதைத்
தனியாக எடுத்து, சிறப்புக் கவனம் செலுத்த
வேண்டும். எனவே நாக்கால் தமிழ் இன்றைய தேவை.
முயற்சிகள் எதுவும் தங்கள் மேற்கொள்ளாமல்
இருக்கலாம். அதனால் குற்றமில்லை.
மேற்கொள்ளப்படும் முயற்சிகளைத் தாங்கள்
ஆதரித்துப்  பரப்பலாம். அறிவியல் தமிழ் என்ற
கோட்பாட்டைத் தாங்கள் ஏற்றுக் கொண்டதே
மிகப் பெரிய தமிழ்த்தொண்டு.

வண்டியின் வேகம் 80 கி.மீ/மணி. பந்து வீசப்படும்போதே
இந்த வேகத்தைப் பெற்று விடுகிறது என்பது சரியே.
அதே நேரத்தில் பந்தின் வேகம் 80+60= 140 கி.மீ
என்று பொருள் கொள்ள முடியாது. ஏனெனில்
பந்தானது வண்டிக்குச் செங்குத்தாக வீசப்
படுகிறது. (வண்டி செல்லும் அதே திசையில் வீசப்
படவில்லை.). ஆகவே, நிகர வேகம் என்பது,
இது போன்ற கணக்குகளில் ஒரு சூத்திரத்தின்
அடிப்படையில் கணக்கிடப் படுகிறது.  அதன்படி,
நிகர வேகம்= 100 கி.மீ/மணி   

ஐயா,
இந்தப் படத்தைப் பாருங்கள். (இது இந்தக் கணக்கிற்கான
படம் அன்று. உரிய படம் கிடைக்கவில்லை). இது போன்று
இரண்டு வேறுபட்ட திசைவேகங்களை ஒரு பந்து 
கொண்டிருக்கும்போது, நிகர வேகத்தை
கணக்கிடுவதை புரிந்து கொள்ள இந்தப் படம்
உதவி செய்யும். இந்தப் படத்தில் இரண்டு வேகங்களும்
ஒன்றுக்கொன்று செங்குத்தாக உள்ளன. நம் கணக்கில்
உள்ளது போல.
**
எனவே சூத்திரத்தின் அடிப்படையில் நிகர வேகம்
100 கி.மீ என்று கணக்கிடப் படுகிறது.
**
நிகரவேகம் என்பது இரண்டு வேகங்களின்
வர்க்கங்களைக் கூட்டி வரும் கூட்டுத்தொகை
என்னவோ, அதன் வர்க்கமூலமே.   
80இன் வர்க்கம்= 6400; 60இன் வர்க்கம்= 3600.
இரண்டையும் கூட்டினால்= 10000. இதன் வர்க்க
மூலம்= 100. இதுவே பந்தின் நிகர வேகம்   


தமிழ் இனி முத்தமிழ் அல்ல!
அறிவியல் தமிழையும் சேர்த்து இனி நான்கு தமிழ்!
நான்காம் தமிழாக அறிவியல் தமிழ்!
இதை ஆதரிக்காதவன் போலித் தமிழனே!
-------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------
முத்தமிழ் என்றே தமிழ் அறியப் படுகிறது.
இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழும்
இருபதாம் நூற்றாண்டில் சிறந்து விளங்கின.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் புழுதி படிந்து
கிடந்த தமிழை, சமஸ்கிருதக் கலப்பால், தூய்மை
இழந்திருந்த தமிழை, மறைமலையடிகள்
தலைமையில் பல்வேறு தமிழறிஞர்கள் மீட்டனர்.

அறிஞர் அண்ணா, கலைஞர், நாவலர் போன்ற
தமிழறிஞர்களைத் தலைவர்களாகக் கொண்டிருந்த
திராவிட இயக்கம் தமிழை பரந்துபட்ட மக்களிடம்
கொண்டு சேர்த்து தமிழுக்கு உயிர்ப்பு அளித்தது.

1950களின் தினசரி செய்தித்தாட்களைப் படித்துப்
பாருங்கள். அக்ராசனர் என்ற சொல் அதிகம்
இருக்கும். அக்ராசனர் என்றால் என்ன பொருள்?
இன்றுள்ளவர்களுக்குத் தெரியாது. தலைவர்
என்று பொருள்.

வேட்பாளர் என்ற சொல்லை அக்கால தினசரிகளில்
யாராவது காட்ட முடியுமா? முடியாது. அபேட்சகர்
என்ற சொல்தான் இருக்கும். இன்னார் அபேட்சை
மனு தாக்கல் செய்தார் என்றுதான் இருக்கும்.

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
இன்றைய இயற்றமிழ் (இயல் தமிழ்) பெருமளவு
தமிழால் ஆனது. அதேபோல் இன்றைய இசைத் 
தமிழும் நாடகத் தமிழும் சமஸ்கிருதத் தாக்கத்தில்
இருந்து பெருமளவு விடுபட்டவை.

சுருங்கக் கூறின், பத்தொன்பதாம் நூற்றாண்டுத்
தமிழின்  பிறமொழிக் கலப்பு களையப்பட்டு,
மேக மறைப்பில் இருந்து விடுபட்ட நிலவு போல
இருபதாம்த நூற்றாண்டுத்  தமிழ் ஒளி சிந்தியது.

என்றாலும், சமூகத்தின் பொருள் உற்பத்தியில்
தமிழுக்கு இடமில்லை. அங்கு ஆங்கிலமே
கோலோச்சுகிறது. உற்பத்தியில் இடம் பெறாத
எந்த மொழியும் அழிந்து படும். எனவே எப்பாடு
பட்டேனும் தமிழை, சமூகத்தின் பொருள்
உற்பத்தியில் இடம் பெறச் செய்ய வேண்டும்.

அதற்கு, தமிழ் அறிவியல் மொழியாக மாற வேண்டும்.
பொருள் உற்பத்தியில் ஆங்கிலம் கோலோச்சுவதற்குக் 
காரணம் அது அறிவியல் மொழியாக இருப்பதே.

தமிழில் அறிவியல் இருக்க வேண்டும். அறிவியலைத்
தமிழில் சொல்ல வேண்டும். கோடிக் கணக்கான
அறிவியல் கட்டுரைகள் தமிழில் எழுதப் பட
வேண்டும். லட்சக் கணக்கான அறிவியல்
நூல்கள் தமிழில் எழுதப்பட வேண்டும். மருத்துவம்,
பொறியியல் ஆகிய படிப்புகள் தமிழில் இருக்க
வேண்டும். அப்போதுதான் தமிழ் அறிவியல் மொழி
ஆகும். அறிவியல் மொழியாக ஆனால் மட்டுமே
பொருள் உற்பத்தியில் தமிழ் இடம் பெறும்.

எனவே முத்தமிழ் என்று மூன்று தமிழோடு நிறைவு
அடைந்து விட முடியாது. நான்கு  தமிழ் வேண்டும்.
நான்காவது தமிழாக அறிவியல் தமிழ் உருவாக
வேண்டும்.

இல்லையேல் தமிழ் உற்பத்தியில் இருந்து
முற்றாகத் துண்டிக்கப் பட்டு, வெறும் பண்பாட்டு
அடையாளமாக மட்டுமே மிஞ்சும்.

இன்று, இந்தியா முழுவதும் சமஸ்கிருதம் வெறும்
அடையாளமாக மட்டுமே எஞ்சி நிற்கிறது.  
பொருள் உற்பத்தியில் சமஸ்கிருதம் இல்லை.
ஆனால் ஆங்கிலம் பொருள் உற்பத்தியில்
தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து நிற்கிறது.

எனவே, தமிழ் மீது பற்றும் ஆர்வமும் உடைய
எவராயினும், அவரின் முழுமுதல் கடமை என்பது
அறிவியல் தமிழை உருவாக்குவதே. நான்காம்
தமிழாக அறிவியல் தமிழ் என்பதே தமிழ்ப்
பற்றாளர்களின் இலக்காக இருக்க வேண்டும்.

நியூட்டன் அறிவியல் மன்றம் மட்டுமே இந்தக்
கருத்தை வலியுறுத்தி நிற்கிறது. நான்காம்
தமிழாக அறிவியல் தமிழை உருவாக்க
நியூட்டன் அறிவியல் மன்றம் உறுதி பூண்டுள்ளது.
அதற்கான வேலைத்திட்டத்தை உருவாக்கி
வருகிறது.

இது ஊர் கூடித்  தேர் இழுக்க வேண்டிய விஷயம்.
நியூட்டன் அறிவியல் மன்றத்தால் மட்டுமே
செய்து முடித்து விடும் அளவுக்கு எளிதான
செயல் அல்ல.

என்றாலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை
பார்த்தாலும் அறிவியல் தமிழை நான்காம்
தமிழாக்க ஆக்குவோம் என்ற குறிக்கோளைப் 
பற்றி நிற்பவர் எவரையும் காண இயலவில்லை.

கண்ணால் பார்ப்பது போதாது என்று ஆற்றல் மிக்க
தொலைநோக்கியைப் பயன்படுத்தி,
360 பாகைகளிலும் சுழன்று சுழன்று பார்த்தாலும்,
நான்காம் தமிழாக அறிவியல் தமிழ் என்ற
இலக்கு உடையோரைக் காண இயலவில்லை.

ஆங்காங்கே அறிவியலிலும் தமிழிலும் புலமை
உடைய தமிழார்வலர்கள் தம் சொந்த முயற்சியில்
மேற்கொள்ளும் அறிவியல் பணிகள் மட்டுமே
தமிழுக்கு ஆக்சிஜனாக உள்ளது. இல்லையேல்
பொருள் உற்பத்தியில் இருந்து விலகி நிற்கும்
தமிழ் தற்போதுள்ள கொஞ்ச நஞ்ச உரிமைகளையும்
பறி கொடுத்து விட்டிருக்கும்.

என்றாலும் நான்காம் தமிழாக அறிவியல் தமிழை
உருவாக்கும் இந்தப் பாரிய முயற்சியில்
தமிழகத்து தமிழர்களின் ஆதரவைப் பெறுவது
என்பது குதிரைக் கொம்பே என்பதையும்
நியூட்டன் அறிவியல் மன்றம் நன்கறியும்.

அறிவியலிலும் தமிழிலும் புலமை மிக்க
தமிழார்வலர்களை எங்கிருந்தாலும் தேடிப்
பிடித்து அவர்களின் ஒத்துழைப்பைப் பெற்று
நியூட்டன் அறிவியல் மன்றம் நான்காம் தமிழை
உருவாக்கும்.

நம்முடைய ஆதங்கம் இதுதான். செத்த பாம்பான
சமஸ்கிருதத்தை அடிக்க ஓடோடி வரும்
தமிழர்கள், நான்காம் தமிழின் உருவாக்கத்திற்கு 
ஏன் ஆதரவு தரக் கூடாது?

நான்காம் தமிழாக அறிவியல் தமிழ் உருவாக்கப்
பட வேண்டும் என்ற கோட்பாட்டை ஏற்காதவன்
போலித் தமிழனே. அவன் உயிர் வாழத் 
தகுதியற்றவன்.
********************************************************************

       


  
அறிவியல் கருவிகளைப் பயன்படுத்தும் சமூகம்
அறிவியல் மனப்பான்மையைப் பெறவில்லை!
சேலம் வினுப்பிரியா தற்கொலை உணர்த்தும்
உண்மை என்ன?
------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------------------
ஒரு புகைப்படம் கிடைத்தால் போதும். அதை
என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நிர்வாணமாக
இருப்பதாகக் காட்டலாம். ஆபாசமாகச் சித்தரிக்கலாம்.

இதெல்லாம் இன்று முகநூலில் செய்ய முடியும்.
ஆனால் இந்த உண்மையெல்லாம் தற்கொலை
செய்து கொண்ட சேலத்து இளம்பெண்
வினுப்பிரியாவின் பெற்றோர்களுக்குத் தெரியாது.

நாட்டில் ஒரு பிரிவினை நிலவுகிறது. ஒருவிதமான
எலெக்ட்ரானிக் பிரிவினை இது. டிஜிட்டல் குடிமக்கள்,
டிஜிட்டல் அல்லாத குடிமக்கள் (digital and non-digital citizens)
என்று மொத்த சமூகமே இரண்டாகப் பிரிந்து
கிடக்கிறது.  

இன்றைய இளைய தலைமுறை டிஜிட்டல்
தலைமுறை (digital generation) ஆகும். இன்றைய
இளைஞர்கள் அதாவது 1995க்குப் பிறகு
பிறந்தவர்கள் எல்லோருமே டிஜிட்டல் குடிமக்கள்.

முந்தைய தலைமுறையில் வெகுசிலர் மட்டுமே
டிஜிட்டல் குடிமக்கள். ஏனையோர் டிஜிட்டலற்ற
குடிமக்கள். வினுப்பிரியாவின் பெற்றோர்
டிஜிட்டல் உலகம் பற்றி அறியாதவர்கள்.
இது அவர்களின் குறை அல்ல.

ஒட்டுமொத்த சமூகமும் அறிவியலின் பயன்களை
நுகர்கிறது. 1970களில் கல்லூரிகளில் சேரும்
மாணவர்கள் தங்களின்  சான்றிதழை டைப்
அடித்து அட்டெஸ்டேஷன் வாங்கி அதைக்
கல்லூரியில் சமர்ப்பிப்பார்கள். அன்று ஜெராக்ஸ்
இயந்திரம் கிடையாது. இன்று ஒவ்வொரு
பாமரனும் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை
என்று எல்லாவற்றையும் ஜெராக்ஸ் எடுக்கிறான்.

கணினி, மொபைல், இணையதளம், முகநூல்
யூட்யூப் என்றெல்லாம் நவீன வரவுகள் வந்து
விட்டன. மொத்த சமூகமும் அவற்றை
நுகர்கிறது. ஆனால் அறிவியல் மனப்பான்மை
வளரவில்லை.

என் பெற்றோர்களே என்னை நம்பவில்லை என்று
வினுப்பிரியா கூறினாராம். எப்படி அம்மா
நம்புவார்கள்? இது நம்பிக்கை சார்ந்த விஷயம்
அல்ல. இது அறிவியல் சார்ந்த விஷயம்.

வினுப்பிரியா, நீ B.Sc Chemistry படித்து இருக்கிறாய்.
உன் தா யும் தகப்பனும் படித்து இருக்கிறார்களா?
முகநூல் பற்றியும் morphing செய்வது பற்றியும்
உனக்குத் தெரியும். உன் பெற்றோருக்குத்
தெரியுமா?

அவர்கள் உன்னை நம்பவில்லை என்று நீ எப்படி
முடிவுக்கு வரலாம்? ஒரு புகைப்படத்தை வைத்துக்
கொண்டு, அதை எப்படி வேண்டுமானாலும்
உருவகம் செய்யலாம் என்ற தகவல் உனக்குத்
தெரியும் என்பதாலேயே, உன் பெற்றோருக்கும்
தெரியும்; தெரிய வேண்டும் என்று எப்படி
நீ கருதினாய்?

படித்த பிள்ளைகளுக்கே அறிவியல் மனப்பான்மை
ஏற்படவில்லையே! படிக்காத உன் பெற்றோர்களுக்கு
எப்படி அந்த மனப்பான்மை உருவாகியிருக்கும்?

தென்னிந்தியாவிலேயே தமிழ்ச் சமூகம்தான்
அறிவியல் மனப்பான்மை வளராத சமூகம்.
கேரளம், ஆந்திரம், கர்நாடகத்துடன் ஒப்பிட்டால்
தமிழ்நாட்டில்தான் அறிவியல் மனப்பான்மை
மிகவும் குறைவு. இதுதான் உண்மை.

எந்த ஒன்றையும் திறந்த மனதுடன் பரிசீலித்துப்
பார்க்கிற பழக்கம் தமிழர்களுக்கு அறவே
கிடையாது. எதை எடுத்தாலும் வில்லன், ஹீரோ
என்ற இரண்டு துருவ நிலைகளில் வைத்துப்
பார்க்க மட்டுமே தமிழன் பழக்கப் பட்டுள்ளான்.

அறிவியல் மனப்பான்மைக்கு மிகப்பெரும்
எதிரியாக சமகாலத் தமிழன் இருக்கிறான்.
இவனுக்கு, எதையும் ஆராய்ந்து பார்த்த பின்னரே
முடிவுக்கு வர வேண்டும் என்ற  ஆராய்ச்சி
மனப்பான்மை துளியும் இல்லை. துருப்பிடித்த
குட்டி முதலாளித்துவத் தத்துவங்கள் கூறும்
முன்முடிவுகளை யோசனையே இல்லாமல்
ஏற்றுக் கொண்டு திரிகிறான்.

மிகப்பெரும் மூடநம்பிக்கைகளின் சுரங்கமாக,
ஊற்றுக் கண்ணாக சமகாலத்து தமிழன்
திகழ்கிறான். இவனைப் பிணித்திருக்கும்
விலங்குகளை உடைத்து, இவனை விடுதலை
செய்யாமல், விடிவு இல்லை.

அறிவியலைப் போற்றுவோம்!
அறிவியல் மனப்பான்மையை வளர்ப்போம்!!
*****************************************************************

கணக்கின் விடையும் விளக்கமும்!
--------------------------------------------------------------------
விடை: பந்தின் வேகம்= மணிக்கு 100 கி.மீ.
விளக்கம்:
--------------------
1) இந்தக் கணக்கு நான் PUC (இப்போதைய 12ஆம் வகுப்பு)
படித்தபோது எந்திரவியலில் உள்ள கணக்கு. அன்று
1970களில் பி.யூ.சி பாடத்திட்டத்தில் சார்பியல் கோட்பாடு
கிடையாது. எனவே இந்தக் கணக்கு முற்ற முழுக்க
நியூட்டனின் இயற்பியல் (Newtonian Physics) வரம்புக்குள்
அடங்கியது. இன்று இதே கணக்கு 11ஆம் வகுப்பு
இயற்பியலில் உள்ளது.

2) இது போன்ற கணக்குகளில் காற்றின் உராய்வைக்
கருத வேண்டியதில்லை (air friction is negligible)  என்று
விரிவுரையாளர் முன்னரே சொல்லி விடுவார்.

3) பந்தின் மீது இரண்டு திசைவேகங்கள்
செயல்படுகின்றன. ஒன்று: ரயில் வண்டியின்
திசை வேகமான 80கி.மீ/மணி. இன்னொன்று
பந்தின் வேகமான 60 கி.மீ/மணி. எனவே பந்தின்
நிகர வேகம் (resultant velocity) என்ன என்று காண வேண்டும்.

4) இரண்டு வேதங்களின் வர்க்கங்களைக் கூட்டி,
அவற்றின் வர்க்கமூலம் கண்டால், அதுவே பந்தின்
நிகர வேகம் ஆகும். அதாவது, 80^2 + 60^2 = 10000.
இதன் வர்க்க மூலம் 100. எனவே பந்தின் வேகம்
100 கி.மீ/மணி. இதுவே விடையாகும்.

5) என்றாலும், இத்துடன் கணக்கு முடிந்தது என்று
வீட்டுக்குச் செல்ல இயற்பியல் அனுமதிப்பதில்லை.
ஜனரஞ்சகமான கணக்கு என்பதற்காக,
இயற்பியலைக் காவு கொடுப்பதை நியூட்டன்
அனுமதிப்பதில்லை. நியூட்டனின் அபிமானிகள்
அனைவரின் மனதிலும் நியூட்டன் எப்போதும்
கையில் பிரம்புடன் நிற்கும் காட்சி உறைந்து
போயிருக்கும்.

6) இங்கு நியூட்டன் கத்துகிறார், "டேய், VELOCITY
என்பதில் அளவனை (அளவன் =magnitude) மட்டும்
சொல்லி விட்டு ஓடுகிறாய், velocity என்பது
திசையனடா (திசையன் = VECTOR) என்று
கத்துகிறார். எனவே நியூட்டனுக்கு விடை
சொல்லி இக்கணக்கை முடித்து வைப்போம்.
(கணக்கில் கேட்கப்படவில்லை என்றாலும்)

7) The magnitude of the resultant velocity of the ball is 100 kmph.
OK. Its direction? Answers are invited.
----------------------------------------------------------------------------------
    
        
நெல்லை எக்ஸ்பிரஸில் நிகழ்ந்த
திடுக்கிடும் சம்பவம்!
ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு!
----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------------
நெல்லை எக்ஸ்பிரஸில் நேற்றிரவு பயணம்!
நெல்லையில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டு
இருக்கிறேன். பொழுது நன்கு புலர்ந்து விட்டது.
பலரும் இறங்கி விட்டதால் வண்டியில்
கூட்டம் குறைவு!  விழுப்புரம் தாண்டி வண்டி
நன்கு வேகம் எடுத்து விட்டது. வேகம் மணிக்கு
80 கி.மீ.

எஸ்-8 கம்பார்ட்மெண்டின் கதவருகில் காற்று
வாங்கிக்  கொண்டு நான் நிற்கிறேன். இப்போது
வண்டியில் இருந்த ஒருவர் கையில் ஒரு பந்துடன்
அங்கு வருகிறார். நல்ல காத்திரமான பந்து என்பது
பார்த்தாலே தெரிகிறது.

கிடைமட்டமாகவும் ரயில் வண்டிக்குச்
செங்குத்தாகவும்  அவர் அந்தப் பந்தை வீசுகிறார்.
பந்தை வீசிய வேகம் மணிக்கு 60 கி.மீ.

வீசப்பட்ட பந்தின் வேகம் என்ன என்று என்னிடம்
கேட்கிறார். 100 கி.மீ என்றேன் நான் சட்டென்று.

 நான் சொன்ன விடை  சரிதானா?
வாசகர்கள் பதில் கூறுமாறு வேண்டுகிறேன்.

ஆங்கிலத்தில் சொல்வதானால்..........
---------------------------------------------------------------------
A man seated in a train throws a ball horizontally and perpendicular
to the train with a velocity of 60 kmph. If the velocity of the train is
80 kmph, find the velocity of the ball immediately after the throw.
(This is a very simple sum in Mechanics.)

கடினமான கணக்குகளையே நியூட்டன் அறிவியல்
மன்றம் கொடுக்கிறது என்று குறைப்பட்டுக்
கொள்கிறவர்கள், இந்தக் கணக்கைப் பார்த்ததும்
தங்களின் குறை தீர்ந்தது என்று மகிழ்ச்சி கொள்ளலாம்.
*********************************************************************    

செவ்வாய், 28 ஜூன், 2016

இதே கணக்கை மே  5ஆம் தேதி கொடுத்த போது,
அன்றைக்கு பெரிய எண்களைத் தமிழில் சொல்லும்
மென்பொருள் உருவாக்கப் படவில்லை. இன்று
அது உருவாக்கப் பட்டு விட்டது. அதை மக்களிடையே
பரவலாக்கும் பொருட்டே இந்தக் கணக்கு மீண்டும்
கொடுக்கப் படுகிறது.
**
நியூட்டன் அறிவியல் மன்றம் உருவாக்கிய
மீப்பெரு எண்களை, (very big numbers upto 10 to the power of 100)
ஓர் அமெரிக்கவாழ் மென்பொறியாளர்
மென்பொருளாக ஆக்கி உலகிற்கு
அர்ப்பணித்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள
பல்கலைக் கழகங்களில் தமிழ் பற்றி ஆய்வு
செய்யும் மாணவர்கள், பேராசிரியர்களுக்கு
இது பயன்படுகிறது.
நமது பதிவில் கூறப்பட்டு இருப்பது ஒரு குறிப்பிட்ட
மொழி குறித்த பார்வை அல்ல. எல்லா மொழிகளையும்
பற்றிய அறிவியல் பார்வை. உலகின் சிறந்த
மொழியியல் வல்லுனர்களும், மார்க்சிய மொழியியல்
அறிஞர்களும், ஏன் நோம் சாம்ஸ்கி உட்பட அனைவரும்
ஏற்றுக் கொண்ட அறிவியல் பார்வை.
**
லத்தீன் குறித்தோ தமிழ் குறித்தோ சமஸ்கிருதம்
குறித்தோ எழுதப் பட்ட கட்டுரை அல்ல அது.
**
தாங்கள் பதிவுக்குப் பொருத்தமற்ற விதத்தில்
சிலவற்றை எழுதி உள்ளீர்கள். அடுத்து திரு சீமான்
அரசியல்வாதியே  தவிர, தமிழ்ப்புலமையோ
அறிவியல் அறிவோ உள்ளவர் அல்ல. அவர்
அவ்வாறு உரிமை கோருவதும் இல்லை.
**
மொழிகளைப் பற்றிய அறிவியல் பார்வை என்ன
என்பது பற்றி மட்டுமே கட்டுரை பேசுகிறது.
அதில் தங்கள் முரண்பட்டால் அது பற்றிப் பேசலாம்.
இப்பதிவு சமஸ்கிருதம் பற்றிய ஆய்வுக் கட்டுரை
அல்ல. அது போல தமிழ் பற்றிய ஆய்வுக்
கட்டுரையும் அல்ல.
**
பதிவுக்குத் தொடர்பில்லாத  விதத்தில் எழுதுவதைத்
தவிர்க்கலாம். சமஸ்கிருதம் குறித்து நிறைய
பதிவுகள் எழுதி உள்ளேன். அதில் தாங்கள்
விவாதிக்கலாம்.
**
"சமஸ்கிருதத்தில் இருக்கிறது; ஆனால் தமிழில்
இல்லை" என்ற கூச்சலுக்கு மறுமொழியாக
நியூட்டன் அறிவியல் மன்றம் தமிழிலும்
இருக்கிறது என்று நிரூபித்துள்ளது. அதை
படித்துப் பார்க்கவும்.
**
தமிழ் தமிழ் என்று கூச்சலிடுவது; ஆனால் தமிழுக்கு
 அதைக் கண்டும் காணாமல் போவது என்பதுதான்
சீமானியம். அதுதான் தங்கள் பின்னூட்டத்தில்
உள்ளது.
**
இறுதியாக, மொழிகள் பற்றிய எங்கள் அறிவியல்
பார்வையில்   கூறலாம். பதிவு பேசாத விஷயங்களில்
விவாதம் செய்ய முற்படுவது சரியல்ல.      
மொழி பற்றிய அறிவியல் பார்வை!
-------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------
எந்த மொழியும் கடவுளால் படைக்கப் பட்டதில்லை.
எல்லா மொழிகளையும் மனிதன்தான் படைத்தான்.
ஐன்ஸ்டின் சார்பியல் கோட்பாட்டைக்
கண்டுபிடித்தார் என்பது போல, தனி ஒரு
மனிதனால் மொழி கண்டுபிடிக்கப் படவில்லை.
ஒரு நாளிலும் கண்டு பிடிக்கப் படவில்லை.

திரளான மக்களால் பல்வேறு காலங்களின்
படைப்புகள் தொகுக்கப்பட்டே  ஒரு மொழி
உருவாகிறது.

ஆக எந்த மொழியும் தெய்வீக மொழி இல்லை.
எந்த மொழியும் தேவபாஷை இல்லை. தமிழ்
தெய்வீக மொழி என்று கொண்டாடப்  படுகிறது.
சமஸ்கிருதம் தேவபாஷை என்று சொல்லப் படுகிறது.
இவை எவையும் உண்மையில்லை. எல்லா
மொழிகளும் மனிதனால் படைக்கப் பட்டவையே.

எல்லா மொழிகளும் மனிதனுக்கானவை. மனிதனுக்குப்
பயன்பட்டவை. பயன்படுபவை. எல்லா மொழிகளுக்கும்
பொதுத்தன்மை உண்டு. அதேபோல ஒவ்வொரு
மொழிக்கும் தனித்தன்மையும் உண்டு.

மனிதர்களைப் போல் மொழிகளுக்கும் பிறப்பு
இறப்பு உண்டு. ஒரு காலத்தில் பேசப்பட்ட மொழிகள்
இன்று அழிந்து போயின என்பதைக் காண்கிறோம்.
பாலி மொழியில் புத்தர் தம் போதனைகளை
எழுதினார். அன்று மக்களால் பேசப்பட்ட மொழி
பாலி. அம்மொழி இன்று இல்லை. இறந்து விட்டது.

நியூட்டன் ஆங்கிலேயர். அவரின் தாய்மொழி
ஆங்கிலம்.  ஆனாலும், உலகையே புரட்டிப்போட்ட
தமது பிரின்சிபியா மேத்தமேட்டிக்கா என்ற நூலை
நியூட்டன் லத்தீன் மொழியில்தான் எழுதினார்.
ஏனெனில், லத்தீன் மொழிதான் அறிவியலை 
எழுதத் தக்க மொழி என்று அக்கால ஆங்கில
சமூகம் ஏற்றுக் கொண்டு இருந்தது.

இந்தியாவிலும் அன்றைய இந்திய அறிவியல்
கண்டுபிடிப்புகள் யாவும் சமஸ்கிருத மொழியில்தான்
எழுதப் பட்டு இருந்தன. இது நம் விருப்பு வெறுப்புகளுக்கு
அப்பாற்பட்ட உண்மை.

எனவே, காரணமற்ற, அறிவுக்குப் பொருந்தாத
வெறுப்பு எந்த மொழியின் மீதும் இருக்கத்
தேவையில்லை.

அவரவர்கள் தத்தம் மொழியைப் பேணி வளர்க்க
வேண்டும். இது ஒன்றே தேவையானது.
இதுதான் மொழி குறித்த அறிவியல் பார்வை.

இந்தியாவைப் பற்றி அறிந்து கொள்ள விரும்பிய
காரல் மார்க்ஸ், சமஸ்கிருத மொழியைக்
கற்றுக் கொண்டார். ஏனெனில் இந்தியாவைப்
பற்றிய தகவல்கள் யாவும் அன்று சமஸ்கிருத
மொழியில்தான் இருந்தன. மார்க்சின் பார்வை
அறிவியல் பார்வை.

தன்னுடைய மொழியை வளப்படுத்த ஒரு
துரும்பைக் கூடத் தூக்கிப்போட வக்கற்ற
வீணர்களே பிற மொழி மீதான வெறுப்பை
மூலதனமாகக் கொள்வார்கள்.

எல்லா மொழிகளும் மானுடத்தின் பொதுவுடைமை.
அறிவுச் செல்வம் எந்த மொழியில் இருந்தாலும்
அதைத் தேடிச் சென்று பெறுவதில் தவறில்லை.
கண்மூடித்த தனமான மொழி வெறுப்பு
மனித குலத்திற்குப் பயன் தராது.
***********************************************************      

நியூட்டன் அறிவியல் மன்றம் அளிக்கும் கணக்குகள்
12ஆம் வகுப்புத் தகுதிக்கு அப்பாற்பட்டவை அல்ல.
முகநூலின் பொதுவெளியில் இதுதான் வரம்பு.
**
இந்தியா முழுவதும் 12ஆம் வகுப்புத் தகுதியில்
நடத்தப்படும் எந்தத் தேர்விலும் IIT, JEE, NEET உட்பட
கால்குலேட்டர் அனுமதிக்கப் படுவதில்லை. எனவே
நியூட்டன் அறிவியல் மன்றமும் கால்குலேட்டரை
அனுமதிப்பதில்லை.

கணக்கின் விடையும் விளக்கமும்!
-----------------------------------------------------------------
விடை: 10 எண்களில் எதுவும் முழுவர்க்கம்  இல்லை.

விளக்கம்:
------------------
முழு வர்க்கங்கள் 2,3,7,8 ஆகிய எண்களில் முடிவு பெறாது.
PERFECT SQUARES WILL NOT END IN 2,3,7,8.
அடுத்து, பூஜ்யங்களில் முடியும் எண்களைப் பொறுத்த
மட்டில், பூஜ்யங்கள் இரட்டைப் படையில் அமையாத
எண்கள் முழு வர்க்கங்கள் ஆகாது.

சான்று: 100 என்பது முழு வர்க்கம். இதில் 2 பூஜ்யங்கள்
(இரட்டைப்படை) உள்ளன. 1000 என்பது முழுவர்க்கம்
அல்ல. அதில் மூன்று பூஜ்யங்கள் உள்ளன. இது
இரட்டைப்படை அல்ல.

In order to drive home this point, the sum is given. Every sum of ours
is concept oriented.
mukkiya kurippu
முக்கிய அறிவிப்பு
-------------------------------------
2,3,7,8 ஆகிய எண்களில் முழுவர்க்கங்கள் முடிவுறாது
என்று கூறியுள்ளோம். இதனால்  பிற எண்களில்
(0,1,4.5,6,9) முடிவுறும் அனைத்து எண்களும்
முழுவர்க்கங்கள் ஆகும் என்று புரிந்து கொள்ளக்
கூடாது.வீரவநல்லூரில் அவலாதி என்றே சொல்லப் படுகிறது.
பிற இடங்களில் ஆவலாதி என்றும் சொல்லப் படுவது
உண்டு. இங்கிலாந்து நாட்டில் வெவ்வேறு பகுதிகளில்
வெவ்வேறு விதமாக ஆங்கிலம் பேசப் படுகிறது.
என்றாலும் ஆக்ஸ்போர்டு பகுதியில் பேசப்படும்
ஆங்கிலமே தரப்படுத்தப் பட்டு ஏற்கப் பட்டுள்ளது.
அதுபோல, நியூட்டன் அறிவியல் மன்றம் வீரவநல்லூரில்
பேசப்படும் தமிழே தரப்படுத்தத்தக்கது என்று கருதி
ஏற்றுக் கொண்டுள்ளது.   
சிறுவன் ஆங்கிலத்தில் சொல்கிறான்!
நீங்கள் தமிழில் சொல்லுங்கள்!!
தமிழில் சொல்ல முடியுமா? முடியாதா?
---------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------
ஓர் 21 இலக்க எண்ணை தமிழில் எப்படிச் சொல்வது?
சொல்லுங்கள்! இதோ அந்த எண்:

876,946,351,798,345,601,801. இது ஓர் 21 இலக்க எண்.

இதே எண்ணை ஆங்கிலத்தில் சொல்கிறான்,
சமஸ்கிருதத்தில் சொல்கிறான்!
தமிழில் சொல்ல முடியுமா? முடியாதா? 

முடியாது என்றால் தமிழ் சமஸ்கிருதத்திற்கு அடிமை.
முடியும் என்றால் தமிழுக்கு மணிமுடி!

தமிழ் தேசியம் பேசும் தமிழ்ப் "பற்று" மிக்க
தமிழ் தேசிய அன்பர்கள் முன்வர வேண்டும்.
எங்கே வரிசையாக வாருங்கள் தமிழ் தேசியக்
காவலர்களே!
--------------------------------------------------------------------------------------------
இந்த வீடியோவைப் பாருங்கள்.
சமஸ்கிருத ஆதிக்கத்தை ஒழிக்க வாருங்கள்!
   

வீடியோவில் உள்ள சிறுவன் எந்த எண்ணைச்
சொல்கிறானோ, அந்த எண்ணையே நியூட்டன்
அறிவியல் மன்றம் கணக்கில் கொடுத்து இருக்கிறது.
876 946 351 798 345601 801. (21 இலக்க எண்).
   
கடினமான கணக்குகளையே எப்போதும் நியூட்டன்
அறிவியல் மன்றம் தருகிறது என்று பலரும் அவலாதி
சொல்கிறார்கள். அதைக் கணக்கில் கொண்டு,
தற்போது எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் உள்ள
பகுதியை மனதில் கொண்டு, இந்தக் கணக்கை
நியூட்டன் அறிவியல் மன்றம் உருவாக்கி இருக்கிறது.
**
கணக்கைப் படித்துப் புரிந்து கொண்ட பின்,
ஒரு நிமிடத்திற்குள் விடை அளிக்க வேண்டும்.
**
இங்கு அவலாதி என்ற சொல் வருகிறது. நெல்லை
மாவட்டத்தில் இன்றும் வழக்கில் இருக்கும்
பழகுதமிழ்ச் சொல். பொருள் தெரியாதவர்கள்
நெல்லைத்  தோழர்களிடம் கேட்டு அறியவும்.  
ஒரு நிமிடத்திற்குள் செய்ய வேண்டிய கணக்கு!
----------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------------------
பின்வரும் பத்து எண்களில் எத்தனை
முழு வர்க்கங்கள் (perfect squares) உள்ளன?

How many perfect squares are there among the following 10 numbers?

1) 6,42,562  2) 81,00,000  3) 25,62,568

4) 19,67,657  5) 1,69,763  6) 25987

7) 62,58,793  8) 7,87,65,432  9) 36,00,00,000  10) 81,23,458.
---------------------------------------------------------------------------
முழுவர்க்கம்: உதாரணங்கள்.

25, 36, 49, 64 ஆகியவை முழு வர்க்கங்கள்.
(perfect squares). 25 என்பது 5இன் வர்க்கம்.
36 என்பது 6இன் வர்க்கம். இவை முழுவர்க்கங்கள்.
ஆனால், 26 என்பது முழு வர்க்கம் அல்ல. 35,65 ஆகிய
எண்களும் முழு வர்க்கங்கள் அல்ல.

A perfect square is a number which is obtained by squaring a whole
number.

விடைகளை அதிகபட்சம் ஒரு நிமிடத்துக்குள்
தர வேண்டும்.
********************************************************************    
இனி யாரும் தப்பிக்க முடியாது!
தமிழ் தேசியப்  போராளிகளே!
கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன்
போன்ற தலைவர்களே! கணக்கிற்கு விடை காண்க!
----------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------------------------
இந்த எண்ணைப் பாருங்கள். இது ஒரு 22 இலக்க எண்.
இதை ஆங்கிலத்தில் சொல்ல முடியும்.
சமஸ்கிருதத்தில் சொல்ல முடியும்.
ஆனால் தமிழில் சொல்ல முடியுமா?

3,800,400,000,000,600,812,302.

கணிதம் பயின்றவர்கள் விடை கூறலாம். ஆனால்
அவர்களுக்குப் பரிசு கிடையாது.

தமிழ் தேசிய "போராளிகள்" சரியான விடை
கூறினால் தக்க பரிசு உண்டு.

இணைக்கப்பட்ட லின்க்கில் உள்ள வீடியோவைப்
பாருங்கள். ஓரு சிறு பையன் விடை கூறுவதைப் 
பாருங்கள்.

அறிவியல் வளர்ந்தது; அதனால் ஆத்திகம் தேய்ந்தது.
இங்கு அறிவியலும் வளரவில்லை. பொருள்முதல்வாதமும் 
மக்களிடம் கொண்டுசெல்லப் படவில்லை. எனவே 
நாத்திகம் கழுத்தை தேய்ந்து கட்டெறும்பு ஆகிக் கொண்டு இருக்கிறது. 

பிரச்சாரம் என்பது ஒரு தொடக்கநிலைச் செயல்பாடு.
பிரச்சாரம் மட்டுமே மாற்றத்தைக் கொண்டு வரும் 
என்று மார்க்சியம் போதிக்கவில்லை. மார்க்சிய 
நடைமுறையில், பிரச்சாரம் -கிளர்ச்சி என்ற பைனரி 
முக்கியமானது. ajit-prop committees (agitation and propaganda) 
மார்க்சிஸ்ட் கட்சிகளில் அமைக்கப் படுவது ஒரு 
வழமையான நடைமுறை. இந்தியாவில் இன்னும் 
அரை நிலப்பிரபுத்துவம்  இருந்து வருவதால் 
மதம் அரசு அதிகாரத்துடன் ஒரு வலுவான பிணைப்பைக் 
கொண்டிருக்கும். இந்தப் பிணைப்பை மாற்ற 
ஆளும் வர்க்கக் காட்சிகள் முயற்ச்சி செய்யாது.
எனவே பொருள்முதல்வாதப் பிரச்சாரமும் 
கிளர்ச்சியும் இங்கு மற்ற நாட்டை விட அவசியம்.

இன்று இந்த நிமிடம் வரை தமிழ்நாட்டில் இரு மொழிக் 
கொள்கை மட்டுமே கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது.
தமிழ்நாட்டு மாநில நிர்வாகத்தில் தமிழ் ஆங்கிலம் 
மட்டுமே. இந்தி சமஸ்கிருதத்திற்கு இடமில்லை.
CBSE எனப்படும் மத்திய பாடத்திட்டம் உள்ள 
பள்ளிகளில் சமஸ்கிருதம் விருப்பப் பாடமாக 
கற்பிக்கலாம் என்று மத்திய மோடி அரசு கூறுகிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள சுமார் 60,000 பள்ளிகளில் 
மத்திய பாடத்திட்டம் செயல்படும் பள்ளிகள் மிக 
மிகக்  குறைவே. சுமார் 600 பள்ளிகள் இருக்கும். 
அவ்வளவே.
**
இங்கு தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாக அறிஞர் 
அண்ணா கொண்டு வந்த சட்டப்படி இருமொழிக் 
கொள்கைதான். அதற்கு எந்த ஆபத்தும் இல்லை.
இதை மாற்ற மத்திய அரசால் முடியாது.
**
சமஸ்கிருதத்தை வைத்துப் பிழைப்பு நடத்தும் 
தமிழ் தேசிய போலிகள் கூச்சல் போடுகிறார்கள்.   

மனோகர் மற்றும் நந்தகுமார் கவனத்திற்கு,
----------------------------------------------------------------------------------
திரு நந்த குமார் அவர்களுக்கு,
தங்களின் கூற்றில் முதல் பாதி ஏற்புடைத்தன்று.
பின்பாதிக் கூற்று நான் உரைத்த பொருளில்
இருந்து மாறுபடவில்லை. நெஞ்சைப் பறிகொடுத்தேன்
பாவியேன் என்பார் பாரதியார். இது மனோஹரமானது.
நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்பார் பாரதி
பிறிதோர் இடத்தில். சிலப்பதிகாரம் மனோஹரமானது
என்று இதற்குப் பொருள்.
**
மனதிற்கு  இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
என்பாள் ஆண்டாள். இங்கும் மனோஹரம் வருகிறது.
இன்னும் நிறையக் கூற இயலும். ஆகவே மனோஹர்
என்ற நண்பரின் பெயர் மனதிற்கு இனியவன் என்ற
பொருளைப்  பெறுகிறது.
**
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.
-----------------------------------------------------------------------------------------------------
பொருள்முதல்வாதம் என்பது அறிவியல். இது
இந்தியாவிலும் பிற கீழ்த்திசை நாடுகளிலும்தான்
முதலில் தோன்றியது. பின்னரே மேற்கத்திய
நாடுகளிலும் தோன்றியது.
**
தங்கள் குறிப்பிட்ட நார்வே, ஜப்பான் போன்ற
நாடுகளில் கம்யூனிஸ்ட் இயக்கமோ கம்யூனிஸ்ட்
ஆட்சியோ இல்லை. என்றாலும் அங்கே நாத்திகம்
(கடவுள் மறுப்பு) வளர்ந்திருக்கிறது. இது எப்படி
என்று தங்கள் கேட்கிறீர்கள்.
**
நார்வே, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கம்யூனிசம்
இல்லையே தவிர, பொருள்முதல்வாதம் நிரம்பவே
இருக்கிறது. காரணம் அறிவியல் வளர்ச்சி.
இங்கிலாந்தில் நாத்திகர்கள் அதிகம். காரணம்
அறிவியல் வளர்ச்சி. பொருள்முதல்வாதம் என்பது
அறிவியலின் அடிப்படையில் இந்த உலகின்
தோற்றத்தை, பிரபஞ்சத்தின் தோற்றத்தை
விளக்குவது அவ்வளவே.
**
எனவே அறிவியல் வளர்ந்தால் போதும்.
பொருள்முதல்வாதம் வளர்ந்ததாகத்தான் அர்த்தம்.
கம்யூனிசம் அங்கு இல்லை என்பது ஒரு குறையே அல்ல.
**
பொருள்முதல்வாதம் குறைந்தது 2000 ஆண்டு கால
வரலாறு உடையது. காரல் மார்க்ஸ்தான் பொருள்முதல்வாதத்தைக்   கண்டுபிடித்தார் என்று
யாரும் பொருள் கொள்ளக் கூடாது. மார்க்ஸ் 19ஆம் நூற்ராண்டுக்காரர். மார்க்ஸ் தம்முடைய மார்க்சியத்தில்
பொருள்முதல்வாதத்தைச் சேர்த்துக் கொண்டார்.
**
இந்தியாவில் போலி கம்யூனிஸ்ட்களாகச் சீரழிந்து
போன CPI,CPM கட்சியினர் தமது வேலைத்திட்டத்தில்
ஒரு பகுதியாக பொருள்முதல்வாதத்தைப் பரப்பவில்லை.
மாறாக, கட்சியின் அணிகள் வாக்கு வங்கி
அரசியலுக்காக கருத்துமுதல்வாதத்தை தூக்கிப்
பிடித்துக் கொண்டு கிடந்தனர். இதன் காரணமாகவும்
கடவுள் மறுப்புக்கு கொள்கை இந்தியாவில்
செல்வாக்குப் பெறவில்லை.
**
மெய்யான நாகசால்பாரிகள் மற்றும் மாவோயிஸ்டுகள்
மட்டுமே பொருள்முதல்வாதத்தில் ஊன்றி நிற்கின்றனர்.

திங்கள், 27 ஜூன், 2016


அர்னவ் (Arnav) என்ற சொல்லுக்கு கடல் என்று பொருள்.
கடலன், சமுத்திரன், கடலை ஆள்பவன் என்றெல்லாம் பொருள்.  

ஐயங்கார்கள் தமிழ்ப் பற்றின் காரணமாகவே
தமிழ் பெயர்களைச் சூடியுள்ளனர். அவர்கள்
வைணவர்கள். திராவிட வேதத்தை
( நாலாயிரம் திவ்வியப் பிரபந்தம்)
ஏற்றுக் கொண்டவர்கள்.
**
தமிழ் முன்செல, திருமால் பின்வர
என்பதுதான் வைணவர்களின் நடைமுறை.
தமிழ்தான் முதலில் செல்ல வேண்டும்.
திருமால் பின்னால்தான் வர வேண்டும்.
ராமானுஜர் குறித்து நான் எழுதிய கட்டுரைத்
தொடர்களை நினைவு கூரவும்.

உங்களுக்கு உள்ள கருத்து சுதந்திரம் எனக்குக் 
கிடையாது, சட்டென்று மனதில் பட்ட ஒரு கருத்தை
நீங்கள் சொல்வதுபோல், நான் சொல்ல இயலாத
நிலை உள்ளது. அடுத்து காலரிக்கு (gallery) வாசிக்க
வேண்டிய தேவை எனக்கு உள்ளது.
**
சமஸ்கிருதம் வேறு; சமஸ்கிருதத் திணிப்பு வேறு
என்ற உண்மை தமிழ்நாட்டில் உள்ள, சமஸ்கிருதத்தை
வைத்துப் பிழைப்பு நடத்துபவர்களிடம் எடுபடாது.


  
நியூட்டன் அறிவியல் மன்றம் வழங்கிய
நவீனப் பேரெண்களுக்கு உரிய தமிழ்ச் சொற்கள்!
---------------------------------------------------------------------------------------------
10^ 6 = மில்லியன் = எண்ணம்
10^ 9 = பில்லியன் = இரட்டம்
10^ 12 = டிரில்லியன் = மூவகம்
10^ 15 = quadrillion = நாவகம்
10^ 18 = quintillion = ஐவகம்
10^21 = sextillion = அறுவகம்
 and so on
10^63 = vigintillion = இருபதகம்.

இவ்வாறு தொடரும். இந்த உலகில் அறிவியலில்
உள்ள எந்த ஒரு பெரிய எண்ணுக்கும் தமிழில்
அதற்குரிய கலைச்சொல்லை நியூட்டன் அறிவியல்
மன்றம் உருவாக்கி உள்ளது.        
சமஸ்கிருதத்தின் மண்டையில் ஓங்கி அடித்த
நியூட்டன் அறிவியல் மன்றத்தின் சாதனை!
இதுதாண்டா சமஸ்கிருத எதிர்ப்பு!
மற்ற எல்லாமே போலிகளின் சமஸ்கிருதப் பிழைப்பு!
----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------------
சமஸ்கிருதத்தில் அறிவியல் இருக்கிறது! இது
சமஸ்கிருத அபிமானிகளின் கூற்று!

சமஸ்கிருதத்தில் உள்ள அறிவியல் தமிழில் இல்லை.
இதுவும் அபிமானிகளின் அடுத்த கூற்று.

அறிவியலுக்கு ஏற்ற மொழி சமஸ்கிருதமே!
இதுவும் அடுத்து வரும் கூற்று.

இதற்கு உதாரணமாக, கி.பி. ஆறாம் நூற்றாண்டைச்
சேர்ந்த இந்தியக் கணித நிபுணர் பாஸ்கரர்
எழுதிய "லீலாவதி" என்ற கணிதநூலில் இருந்து
ஒரு மேற்கோளைக் காட்டுகிறார்கள்.

அந்தக் காலத்திலேயே, கி.பி. ஆறாம் நூற்றாண்டிலேயே
மில்லியன் , பில்லியன், டிரில்லியன் போன்ற
பெரிய பெரிய எண்களுக்கு சமஸ்கிருதத்தில்
இடம் இருந்தது. அப்போது ஆங்கிலத்தில் கூட
இவ்வளவு பெரிய எண்கள் இல்லை என்கிறார்கள்
சமஸ்கிருத அபிமானிகள்.(ஆங்கிலத்தில் அன்று
இல்லை என்பது உண்மையே).

அந்த நூலில் பாஸ்கரர் ஏக, தஸ, ஸத, ஸகஸ்ர
என்று அடுக்கிக் கொண்டே போவார் பாஸ்கரர்.
தொடர்ந்து பெரும் பெரும் எண்களைச் சொல்லுவார்.

அற்புதம் = 10 கோடி
அப்ஜம் = 100 கோடி
பத்மம் = லட்சம் கோடி
ஸங்கம் = 10 லட்சம் கோடி
ஜலதி = கோடி கோடி (கோடானுகோடி)

தமிழிலும் பேரெண்கள் இருந்தன. ஆம்பல் என்றும்
வெள்ளம் என்றும் சொற்கள் இருந்தன. ஆனால்
அச்சொற்கள் இறந்து விட்டன. அதாவது வழக்கு
வீழ்ந்தன.

தற்போதைய தமிழன் பெரிய பெரிய எண்களைக்
குறிக்க, லட்சம், கோடி என்ற இரண்டு சொற்களை
மட்டுமே வைத்துள்ளான். இதிலும் லட்சம் என்பது
தமிழ்ச் சொல் அல்ல. சமஸ்கிருதச் சொல்.

சமகாலத்  தமிழில் (contemporary Tamil) பெரிய பெரிய
எண்களைக் குறிக்க, மில்லியன், பில்லியன்,
டிரில்லியன் என்ற எண்களைக் குறிக்க சொற்கள்
இல்லை என்பது ஏற்கத்தக்க உண்மையே.

எனவே இக்குறையை  நீக்க பல்வேறு
காலக்கட்டத்தில் பல்வேறு தமிழறிஞர்கள்
முயற்சி மேற்கொண்டனர். நியூட்டன் அறிவியல்
மன்றமும் இதில் முயற்சிகளை மேற்கொண்டது.

ஓரிரு நாட்களுக்கு முன்பு, தமிழரான அமெரிக்கவாழ்
மென்பொறியாளர் திரு வேல்முருகன் அவர்கள்
நியூட்டன் அறிவியல் மன்றம் முன்மொழிந்த
பெரிய எண்களுக்கான தமிழ்ச் சொற்களை
ஏற்றுக் கொண்டு, அதற்கு  ஒரு மென்பொருள்
நிரல் ( software program) உருவாக்கி உலகிற்கு
அர்ப்பணித்துள்ளார்.

திரு வேல்முருகன் அவர்களின் மென்பொருளானது
உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழர்கள் மற்றும்
உலகப்  பல்கலைகளின் தமிழ் ஆராய்ச்சியாளர்கள்
அனைவருக்கும் பயன்பட வல்லது.

இதுகுறித்த எமது பதிவை முன்னரே முகநூலில்
வெளியிட்டு இருந்தோம். ஆனாலும் ஒன்றிரண்டு
பேரைத் தவிர இப்பதிவை எவரும் சீந்தவில்லை.
(இதுதான் சமஸ்கிருத எதிர்ப்பின் லட்சணம்).

நியூட்டன் அறிவியல் மன்றம் உருவாக்கிய, நவீன
காலப் பேரெண்களுக்கு உரிய  தமிழ்ச் சொற்களை
அறிந்த சமஸ்கிருத அபிமானிகள் வாயடைத்துப் போனார்கள்; மூர்ச்சை அடைந்தார்கள். மருத்துவ
மனையில் சேர்க்கப்பட்ட அவர்களுக்கு குளுக்கோஸ்
செலுத்தப் பட்டு வருகிறது.

இங்கு கொடுத்துள்ள இணைப்பைத்  திறந்து
படியுங்கள். உண்மையை உணருங்கள்.
--------------------------------------------------------------------------------------


            
இல்லை தோழர். மனோகரன் சமஸ்கிருதத் சொல்.
மனோஹரம் என்ற சமஸ்கிருதத் சொல்லுக்கு
மனதிற்கு இதமான என்று பொருள். உள்ளத்துக்கு
உவகை தருபவர், அதாவது மனதிற்கு இனியவர் என்று பொருள். மனோஹர் = மனதிற்கு இனியவர்.

முக்காலே மும்மாகாணி என்பது முக்காலும்
மூன்று மாகாணிகளும் சேர்ந்த மொத்தம்.
முக்கால் = 3/4. மாகாணி = 1/16. மும்மாகாணி = 3/16.
முக்காலே மும்மாகாணி = 3/4 + 3/16 = 15/16.  

தமிழ்க் குழந்தைகளின் பெயர்கள்!
இந்தப் பெயர்களை யார் திணித்தார்கள்
என்று அறிய ஆசைப் படுகிறேன்!
-----------------------------------------------------------------
அபிநயா, ஜனனி, ஸ்ருதி, பவித்ரா, மனோஜ்குமார்,
வர்ஷினி, ஸ்ரீராம், ரேஷ்மா, அஜய் கார்த்திக், ரம்யா,
ஸ்நேகா, அபிஷேக், அபிராமி, சுப்ரியா, தினேஷ்,
லோகேஷ், தனுஷ், ஆர்த்தி, அக்ஷயா, பிரசன்னா.

ஸ்வர்ணா, ஸந்தியா, மதுவந்தி, ஹரிஷ் கௌதம்,
சந்தோஷ், மோனிஷா, தீபிகா, ஷாலினி, ஹரிணி,

ஷில்பா, ப்ரீத்தி, திவ்யா, ஹரிஹரன், சுஸ்மிதா 

இப்படித்தான் பெயர்கள் இருக்கின்றன.

தகவல் ஆதாரம்:
---------------------------------
2016-17 MBBS மாணவர்களின் தரவரிசைப் பட்டியல்.
நடப்பாண்டு MBBS தரவரிசைப் பட்டியலைப் பாருங்கள்.
இதில் 25000 மாணவ மாணவிகளின் பெயர்கள்
உள்ளது. இந்தப் பெயர்களில் எத்தனை தமிழ்ப்
பெயர்கள் உள்ளன என்று கண்டு பிடியுங்கள்.
இதில் உள்ள பெயர்களை பாருங்கள்:
------------------------------------------------------------------
அபிநயா, ஜனனி, ஸ்ருதி, பவித்ரா, மனோஜ்குமார்,
வர்ஷினி, ஸ்ரீராம், ரேஷ்மா, அஜய் கார்த்திக், ரம்யா,
ஸ்நேகா, அபிஷேக், அபிராமி, சுப்ரியா, தினேஷ்,
லோகேஷ், தனுஷ், ஆர்த்தி, அக்ஷயா, பிரசன்னா...
இத்தியாதி பெயர்கள்தான் உள்ளன! பிறகு
எங்கிருந்து சமஸ்கிருத எதிர்ப்பு?  

தற்போது தமிழ்நாட்டில் நிலவும் "சமஸ்கிருத எதிர்ப்பு"
என்பது போலியானது. இது உண்மையில் சமஸ்கிருத
எதிர்ப்பு அல்ல; சமஸ்கிருதப் பிழைப்பு.
**
சமஸ்கிருத எதிர்ப்பு என்றால் என்ன? எந்தெந்தத்
துறைகளில் சமஸ்கிருதத்தை எதிர்க்க வேண்டும்?
எப்படி எதிர்க்க வேண்டும்? ஏன் எதிர்க்க வேண்டும்?
என்ற கேள்விகள் உள்ளன. இவற்றுக்கு ஒரு வரியில்
விடை சொல்ல முடியாது. அடுத்தடுத்த கட்டுரைகளில்
காணலாம்.

பிழைப்புதான். அரசியல் பிழைப்புக்கு வழியில்லாத
தமிழ் தேசிய போலிகள் சமஸ்கிருத எதிர்ப்பு என்ற
பெயரில் காற்றோடு கத்திச் சண்டை இடுகின்றனர்.
விரிவான கட்டுரை இன்று இரவு.


கிட்டத்தட்ட 15, 20 ஆண்டுகளாக மருத்துவம்,
பொறியியல் படிப்புகளில் சேர்ந்த,  ஒரு கோடி
மாணவர்களின் பெயர்களைப் படித்து, ஆராய்ந்து
அதன் பிறகு இந்தக் கட்டுரை எழுதப் பட்டுள்ளது.
ஐயங்கார்களுக்கு இருக்கும் தமிழ்ப் பற்றில்
அணுஅளவாவது சூத்திரத் தமிழர்களுக்கு
இருக்க வேண்டாமா?

எங்கும் சமஸ்கிருதம் எதிலும் சமஸ்கிருதம்!
தடுக்கி விழுந்தால் சமஸ்கிருதம்!
அஜித், விஜய், கமல், ரஜனி பெயர்களின்
பொருள் என்ன?
-------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------------
தமிழ்க் குழந்தைகளின் ஒரு கோடிக்கும் மேலான
பெயர்களைப் படித்து ஆராய்ந்து, அதன் பிறகு
இக்கட்டுரை எழுதப் படுகிறது.

நடப்பாண்டு (2016) மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்த
25000 மாணவர்களின் தரவரிசைப் பட்டியலைப்
படித்துப் பாருங்கள். 25000 குழந்தைகளின் பெயர்கள்
எந்த மொழியில் உள்ளன என்று தெரியும்.

அதுபோல, நடப்பாண்டின் பொறியியல் தரவரிசையில் உள்ள ஒன்றேகால் லட்சம் மாணவர்களின் பெயர்களைப்
படித்துப் பாருங்கள்.  உண்மை தெரியும்.

நியூட்டன் அறிவியல் மன்றம் கடந்த 15 ஆண்டுகளுக்கும்
மேலாக, பொறியியல், மருத்துவம், ஐ.ஐ.டி தரவரிசைப்
பட்டியலில் உள்ள கோடிக்கணக்கான மாணவர்களின்
பெயர்களை  பரிசீலித்து உள்ளது.  

முக்காலே மும்மாகாணி பெயர்கள் சமஸ்கிருதத்தில்
உள்ளன. மேலும் இஸ்லாமிய மாணவர்களின்
பெயர்களில் எதுவும் தமிழில் இல்லை. கிறித்துவக்
குழந்தைகளின் பெயர்களும் தமிழில் இல்லை.

சேவியர், டேவிட், ஃபிரான்சிஸ், அல்போன்ஸ், பீட்டர்
போன்ற பெயர்களும்,
அன்சாரி, ஜமாலுதீன், ஷம்சுதீன், ரஸியா, பாத்திமா
போன்ற பெயர்களும் தமிழ்ப் பெயர்கள் இல்லை.

சுருங்கக் கூறின், தமிழகக்  குழந்தைகளின்
பெயர்களில்  97 சதம் பிற மொழிப் பெயர்களே.
3 சதம் மட்டுமே தமிழ்ப் பெயர்கள்.

இவ்வாறு ஒரு கோடிப் பெயர்களை ஆராய்ந்ததில்
ஓர் உண்மை புலப்பட்டது. அது என்ன? ஐயங்கார்
குடும்பங்களில்தான் பிள்ளைகளுக்குத் தமிழில்
பெயர் வைக்கிறார்கள் என்ற உண்மைதான் அது.
இது அழியாத உண்மை.

தமிழ்நாட்டில் அய்யங்கார்களின் எண்ணிக்கை
ஒன்றரை சதம். அதாவது மூன்று சதம் மட்டுமே
மக்கள்தொகை உள்ள பார்ப்பனர்களில் பாதிப்பேர்
ஐயங்கார்கள் என்று எடுத்துக் கொண்டால்.

ஒன்றரை சதமே உள்ள ஐயங்கார்கள், மொத்தத்
தமிழ்ப் பெயர்களில் 50 சதத்திற்கு மேல் உள்ள
பெயர்களை வென்று விடுகிறார்கள். ஆனால்
திராவிட இயக்கப் பின்புலம் உள்ள சூத்திரக்
குடும்பங்களில் 97 சதம் பெயர்கள் சமஸ்கிருதப்
பெயர்களே.

ஆராவமுதன், மணவாளன், ஆண்டாள், கோதை,
நப்பின்னை, மாலன் போன்ற பெயர்கள் 
ஐயங்கார் குடும்பங்களில் இயல்பு.

நிற்க. பிரபலமான நடிகர்களின் சமஸ்கிருதப்
பெயர்களின் பொருளை அறிவோம்.

அஜிதா என்ற பெயர் 1970களில் இந்தியப் புரட்சிகர
இயக்கத்தை புரட்டிப் போட்ட பெயர். அஜிதா
கேரளத்தைச் சேர்ந்த ஒரு நக்சல்பாரிப் போராளி.
அதாவது மாவோயிஸ்ட் போராளி. கேரளத்தில்
புன்புன் காவல் நிலையத்தைத் தாக்கி ஆயுதங்களைக்
கைப்பற்றிய ஒரு பெண் போராளி.

அஜிதா என்றால் வெல்ல முடியாதவர் என்று பொருள்.
அஜித் என்பது அதன் ஆண்பால் பெயர். ஆக,
அஜித் = வெல்லற்கரிய, வெல்ல முடியாத.

விஜய் என்றால் வெற்றி என்ற பொருள் பலருக்கும்
தெரியும். விஜயன், விஜயா என்று ஆணுக்கும்
பெண்ணுக்கும் தமிழ்நாட்டில் பெயர்கள் உண்டு.

கமல் என்றால் தாமரை. இதுவும் அனைவரும்
அறிந்ததே. பங்கஜம் என்றாலும் தாமரை. அம்புஜம்
என்றாலும் தாமரை.

ரஜனிகாந்த் என்றால்? ரஜனி= இரவு (ராத்திரி)
காந்தம் என்றால் ஈர்ப்பு. சூரியனை நோக்கி
ஈர்க்கப்படும் பூ சூரியகாந்தி. அதுபோல, இரவை
நோக்கி (நிலாவை நோக்கி) ஈர்க்கப்படும் பூ
என்ற பொருளில்  ரஜனிகாந்த் என்ற பெயர்
அமைகிறது.

எம்மிடம் மூன்று அகராதிகள் உள்ளன. மொழி சார்ந்த
அகராதிகள். 1) தமிழ் அகராதி (சைவ சித்தாந்த
நூற்பதிப்புக் கழகம்). 2) ஆங்கில அகராதி
(ஆக்ஸ்போர்டு).3) சமஸ்கிருத அகராதி.

அகராதியைப் புரட்டாமலேயே  மேற்கூறிய
சமஸ்கிருதப் பெயர்களின் பொருளை எம்மால்
சொல்ல முடிந்தது.

இக்கட்டுரை கூறும் நீதி என்ன? 97 சதம் தமிழர்களின்
பெயர்கள் தமிழில் இல்லை. தடுக்கி விழுந்தால்
சமஸ்கிருதப் பெயருடைய தமிழன் மீதுதான்
தடுக்கி விழ முடியும். எங்கும் சமஸ்கிருதம்!
எதிலும் சமஸ்கிருதம்!

யாராவது தமிழ்ப்பெயர் கொண்ட தமிழன் மீது
தடுக்கி விழ விரும்பினால், இக்கட்டுரை ஆசிரியர்
மீது விழலாம். அதற்குக் கட்டணம் ரூபாய் ஆயிரம்.

எனவே, சமஸ்கிருத எதிர்ப்பு என்று தமிழ் தேசியப்
போலிகள் யாராவது சொன்னால் சிரிப்புச் சிரிப்பாக
வருகிறது. என்னுடைய சிரிப்புச் சத்தம் கல்லறையில்
உறங்கும் மறைமலையடிகளுக்குக் கேட்டிருக்குமோ
என்னவோ, அவரும் என்னுடன் சேர்ந்து சிரிக்கிறார்.

சமஸ்கிருத எதிர்ப்பு குறித்துப் பேச, மறைமலை
அடிகளையும்  நியூட்டன் அறிவியல் மன்றத்தையும் 
தவிர வேறு யாருக்கும் அருகதை கிடையாது.
*********************************************************************


 
   
இளம்பெண் சுவாதி கொலை!
காவல்துறையை நிர்ப்பந்தம் செய்ய வேண்டாம்!
--------------------------------------------------------------------------------------------
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், சில நாட்களுக்கு
முன்பு, இளம்பெண் சுவாதியை படுகொலை செய்த
கொலைகாரனை இன்னும் காவல்துறை
கண்டுபிடிக்கவில்லை.

என்றாலும், காவல்துறைக்கு எந்த நிர்ப்பந்தமும்
கொடுக்க வேண்டாம். ஏனெனில், சமூக நிர்ப்பந்தம்
உருவானால், எவனாவது ஒருவனைப் பிடித்து,
கணக்குக்காட்டி, வழக்கை முடித்து விடும்
காவல்துறை. இதுதான் கால்துறையின் லட்சணம்.

எனவே நிதானமாகச் செயல்படுவதில் தவறில்லை.
உண்மையான குற்றவாளியை காவல்துறை கண்டு
பிடிக்கட்டும். காவல்துறை மீது அளவுக்கு மீறிய
நிர்ப்பந்தம்  வேண்டாம்.
*********************************************************************ஹேமா என்றால் தங்கம் என்று பொருள்.
ஹேமா என்ற பெயரை பொன்னி என்று தமிழில்
கூறலாம். ஹேமலதா என்றால் பொற்கொடி
என்று பொருள். லதா என்றால் கொடி.இங்கு கொடி
என்பது மரம்,செடி,கொடிஎன்பதில் வரும் கொடி.   

ஞாயிறு, 26 ஜூன், 2016

நிர்மலாவும் உஷாவும் மு.மேத்தாவும்!
கலைஞரை வன்மையாகக் கண்டிப்போம்!
----------------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------------------------------
நிர்மலா! அழகான தமிழ்ப் பெண்களுக்கு வைக்கப்
படும் சமஸ்கிருதப் பெயர். நிர்மலா மட்டுமா?
உஷா, ஐஸ்வர்யா, ஸ்வப்னா, புஷ்பலதா, வெறும் லதா
ஆகிய இவையெல்லாம் எவ்வளவு அழகிய
சமஸ்கிருதப் பெயர்கள்! தமிழ்ப்பற்று அளவுக்கு
அதிகமாக உள்ளவர்கள் அல்லவா தங்களின்
பெண்களுக்கு இவ்வாறு பெயர் வைக்கிறார்கள்!

நிர்மலா என்றால் என்ன பொருள்? பெயர் வைத்த
தமிழர்களுக்குத் தெரியுமா? நிர்+ மலம்= நிர்மலம்.
மலம் என்றால் அழுக்கு, கசடு, கழிவு என்று பொருள்.
நிர் என்பது சமஸ்கிருதத்தில் ஒரு முன்னொட்டு.
எதிர்மறைப் பொருளைத் தருவது. அதாவது நிர்
என்றால் இல்லை என்று பொருள்.

ஆக, நிர்மலா என்றால் அழுக்கற்றவள் என்று பொருள்.
அதாவது தூயவள் என்று பொருள். 1970களில்
கவிஞர் மு.மேத்தா ஒரு புதுக்கவிதை எழுதி
இருப்பார்.

"இருமலா என்றான் நண்பன்
என் காதில் நிர்மலா என்று விழுந்தது".
---- இந்த ரேஞ்சில் கவிதை போகும். மனைவி ஊருக்குப்
போய்விட்ட நிலையில், நிர்மலா என்ற மனைவியைப்
பிரிந்த கணவனுக்கு, எந்த வார்த்தையைக் கேட்டாலும்
மனைவியின் பெயராகவே தோன்றுகிறது.
இதுதான் மு.மேத்தாவின் கவிதை!

மும்மலம் அறுத்த முனிவர்கள் என்று படித்துள்ளோம்.
ஆணவம், கன்மம், மாயை ஆகியவையே அந்த
மூன்று மலங்கள். எந்த மலமும் அறுக்காமலே
இன்று எவர் வேண்டுமானாலும் முனிவர் ஆகலாம்.

உஷா என்ற சமஸ்கிருதச் சொல் வைகறைப்
பொழுதைக் குறிக்கும். "விடிந்தும் விடியாத
காலைப் பொழுதாக"  என்கிறாரே கண்ணதாசன்.
அந்தப் பொழுதுதான் உஷை (உஷா).

புஷ்பலதா என்பதும் அழகிய சமஸ்கிருதப் பெயரே.
புஷ்பம்+லதா= பூங்கொடி என்று பொருள். லதா
என்றால் கொடி.

ஐஸ்வர்யா என்றால் செல்வி என்று பொருள்.
ஐஸ்வர்யம் = செல்வம். கலைஞர் ஏன் தம்
மகளுக்கு செல்வி என்று பெயர் வைத்தார்?
ஐஸ்வர்யா என்று வைத்திருக்கலாமே!

குமரி அனந்தன் ஏன் தம் மகளுக்கு தமிழிசை
என்று பெயர் வைத்தார்? ஸங்கீதா என்று பெயர்
வைத்திருக்கலாமே! ஒரு காங்கிரஸ்காரருக்கு
ஏன் தமிழ்ப்பற்று?

அழகழகான சமஸ்கிருதப் பெயர்கள் இருக்க
ஏன் தமிழ்ப் பெயர்கள்? கலைஞர் கண்டிக்கத்
தக்கவர். வாருங்கள் கண்டிப்போம்!
*************************************************************      
     
நான் பயப்படுகிறேன்!
-------------------------------------------
இன்று மாலை சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில்
உள்ள ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் கடைக்குச்
சென்று, மொத்தம் ரூ 650 விலையில், இரண்டு
பேன்ட் பிட் துணி எடுத்தேன்.

என்ன செய்வது? வேட்டி அணிந்து வெளியே
செல்ல எனக்கு பயமாக இருக்கிறது. வேட்டியை
உருவுகிற சூழல் சமூகத்தில் உள்ளதே! 

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.
-----------------------------------------------------------------------------------------
முழுநிறைவு எண் என்றால் என்ன?
What is a perfect number?
----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------
ஒரு எண்ணின் காரணிகளில் அந்த எண்ணைத் தவிர்த்த
பிற அனைத்துக் காரணிகளின் கூட்டுத்தொகை
அந்த எண்ணுக்குச் சமமாக இருந்தால், அந்த எண்
முழுநிறைவு எண் எனப்படும்.

A PERFECT NUMBER IS ONE WHICH IS EQUAL TO THE SUM OF
ITS FACTORS EXCLUDING ITSELF.

எடுத்துக்காட்டு:
-----------------------------
6 என்ற எண்ணின் காரணிகள்: 1, 2, 3, 6
இதில் 6ஐ தவிர்த்த பிற காரணிகளின்
கூட்டுத்தொகை = 1+2+3 = 6.

எனவே 6 என்பது ஒரு முழுநிறைவு எண் ஆகும்.

மேலும் ஒரு எடுத்துக்காட்டு:
----------------------------------------------------
28 என்ற எண்ணின் காரணிகள்= 1,2,4,7,14,28
இதில் 28 தவிர, பிற காரணிகளின் கூட்டுத்
தொகை = 28. எனவே 28 ஒரு முழுநிறைவு எண்.

இவை தவிர மேலும் பல முழுநிறைவு எண்கள் உள்ளன.
வாசகர்கள் அவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும்.
****************************************************************** 

நான்கு முறைகளில் எது எளிமையானது?
வாசகர்கள் கூறுமாறு வேண்டுகிறோம்!
--------------------------------------------------------------------------
மென்பொறியாளர் திரு வேல்முருகன் இப்பதிவில்
ஓர் 28 இலக்க எண்ணை நான்கு முறைகளில் கூறுகிறார்.
இந்த 4 முறைகளில் எது சிறந்தது, எளிமையானது என்று
வாசகர்கள் கருத்துத் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.
எமது தாழ்மையான கருத்து இதோ!

முறை-1: பத்திலட்சங்கோடியே நாநூற்று இருபதுகோடியே 
ட்டுகோடியே பத்திலட்சத்து எண்பத்தெட்டு.
விமர்சனம்: இம்முறையில் கோடி என்ற சொல்
மீண்டும் மீண்டும் வந்து குழப்புகிறது.

முறை-3: ஓர் ஒன்பதுமடியாயிரத்து நாற்பத்திரண்டு ஐமடியாயிரத்து 
எட்டு கோடியே இருமடியாயிரத்து எண்பத்தெட்டு

இம்முறையிலும்  மடி, ஆயிரம் ஆகிய
சொற்கள் மீண்டும் மீண்டும் வந்து குழப்புகின்றன.

முறை-4: ஒரு மெய்யிரத்தாம்பலே நாற்பத்திரண்டு நெளையே 
எட்டு கோடியே மெய்யிரத்து எண்பத்தெட்டு

இங்கும் ஆம்பல், நெளை ஆகிய சொற்களின்
பொருள்  தெரியாமல் மாணவர்கள் குழம்பக்கூடும்.

முறை-2: ஓர் எண்மகத்து நாற்பத்திரண்டு நாவகத்து 
எட்டு கோடியே எண்ணத்து எண்பத்தெட்டு

இருக்கும் நான்கு முறைகளில் இதுவே
எளிமையானதாகவும், சுலபத்தில் பொருள்
விளங்குவதாகவும், ஆங்கிலத்தோடு ஒத்திசைவு
உள்ளதாகவும் இருக்கிறது. எனவே பொதுமக்களை
பொறுத்தமட்டில்இதுவே பின்பற்றத் தக்கது.

எமது இக்கருத்து சரிதானா? கருத்துக் கூறவும்.
தலை நிமிர்ந்து நிற்கிறது தமிழ் இந்தப் பதிவால்!
---------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------------------
மாணவர்களே, தமிழறிஞர்களே, தமிழ் மக்களே,
இந்தப் பதிவைக் கூர்ந்து கவனியுங்கள்.

நவீனகாலப் பேரெண்களுக்கு தமிழ்ச் சொற்களை
இந்தப் பதிவு வழங்குகிறது. இது தமிழ் கூறும்
நல்லுலகிற்கு ஒரு கொடை. இக்கொடை அளித்தவர்
மென்பொறியாளர் திரு வேல்முருகன்.

இப்பதிவில் ஓர் 28 இலக்க எண் சுட்டப்படுகிறது.
அந்த எண்ணை ஆங்கிலத்தில் சொல்ல இயலும்.
தமிழில் சொல்ல இயலாமல் இருந்தது. தற்போது
தமிழில் வரம்பிலி (infinity) வரை சொல்ல முடியும்.

தனித்தமிழ்ச் சொற்களால் பேரெண்களைக் கூற
முடியும். அதற்கான நிரலை (program) திரு வேல்முருகன்
வழங்கி உள்ளார்.

அதில் இருந்து ஒரு எடுத்துக்காட்டு!
-------------------------------------------------------------------
இந்த எண்ணைக் கருதுக. இது ஓர் 28 இலக்க எண்.

1 000 000 000 042 000 000 081 000 088. இந்த எண்ணை தமிழில்
சொல்வது எப்படி?

இதோ இந்த நிரல் (program) கூறுகிறது.


ஓர் எண்மகத்து நாற்பத்திரண்டு நாவகத்து எட்டு கோடியே 
எண்ணத்து எண்பத்தெட்டு

தமிழால் முடியும் என்று நிரூபித்துள்ளோம்.
இது குறித்து மேலும் விவரம் அறிய,
திரு வேல்முருகன் நடத்தும் Develop Tamil Platform
என்ற முகநூல் குழுமத்திற்குச் செல்லவும்.
*****************************************************************     
புதிய கலைச்சொற்களை உருவாக்கும்போது,
இயன்றவரையில் அடைகளை (adjective) பயன்படுத்தக்
கூடாது என்பது நான் பின்பற்றும் ஒரு கோட்பாடு.
இந்தக் கருத்தை நான் தோழர் தியாகு அவர்களிடம்
( தமிழ் தேசிய இயக்கத் தலைவர், காரல் மார்க்சின்
மூலதனம் நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர்)
இருந்து பெற்றேன். இவ்வாறு அவசரத் தேவைக்காக
அடைகளைப் பயன்படுத்துவது பிற்பாடு பெரிய
இடர்களைத் தருகிறது.
**
எனவேதான் இருமடியாயிரம், மும்மடியாயிரம்
ஆகிய சொற்களைப் பயன்படுத்த நான் விரும்பவில்லை.   
--------------------------------------------------------------------------------------------------------
ஐயா, தங்களின் நூலில் தங்கள் ஆயிரம் என்பதை
அடிப்படையாகக் கொண்டு, மில்லியன் பில்லியனுக்கு
முறையே இருமடியாயிரம், மும்மடியாயிரம் என்று
பெயர்களைத் தந்துள்ளீர்கள். நான் மில்லியன்
என்பதற்கு அடைமொழி ஏதுமற்ற "எண்ணம்" என்ற
சொல்லை வழங்கியுள்ளேன். அதைத்தொடர்ந்து,
இரட்டம் (பில்லியன்), மூவகம் (டிரில்லியன்) என்று
சொற்களைத் தொடர்கிறேன். அடைமொழியை
இயன்றவரை தவிர்ப்பதே இங்கு நோக்கம்.
**
இருமடியாயிரம் , மும்மடியாயிரம் ,நான்மடியாயிரம் ,
ஆகிய சொற்களில், ஆயிரம் என்ற சொல்லுக்கு
இரண்டு அடைகள் உள்ளன. அதுபோல
பத்தொன்பதுமடியாயிரம் என்ற சொல்லில்
மூன்று அடைகள் (பத்து, ஒன்பது, மடி) உள்ளன.
இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் வரும்
அடைகளைத் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கிலேயே
மில்லியன் என்ற சொல்லுக்கு எண்ணம் என்ற அடையற்ற
சொல்லைப்  பெய்தேன்.
**
மூவகம்  நாவகம் என்ற சொற்களில் அடைகள்
எவையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுருங்கக்  கூறின், மூன்று கனிகள் என்று சொல்வது
தங்களின் சொல்லாக்கமாகவும், முக்கனி என்று
சொல்வது போன்று என்னுடைய சொல்லாக்கமும்
உள்ளன. முக்கனி என்பது எளிதானது.
**
ஐயா, நான் பழுது சொல்வதற்காக இதைக் கூறவில்லை.
தங்களின் உழைப்பிலும் ஈடுபாட்டிலும் தினையளவு
கூட நான் மேற்கொள்ளவில்லை. இவையெல்லாம்
நான்  15, 20 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கியவை.
ஆங்கிலத்தில் உள்ளது தமிழில் இல்லை என்ற
கண்டனங்களைக் களைவதற்காக, வீம்பிலும்,
தமிழன்டா என்ற செருக்கிலும் உண்டாக்கியவை
இந்தச் சொற்கள். நிற்க.
**
கலைச்சொல்லாக்கத்தில் அடைமொழிகளை
(adjectives) தவிர்க்க வேண்டும் என்ற கொள்கையில்
ஊன்றி நிற்கிறேன். அதில் மாற்றமில்லை.        


      நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும்
மையில் கமலமும் வெள்ளமும் நுதலிய
செய்குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை
-----பரிபாடல், 2:13-15, கீரந்தையார்--------

நெய்தல் = 100 கோடி
கமலம் = 1,00,000 கோடி
சங்கம் = 10,00,000 கோடி  
வெள்ளம் = கோடி கோடி
ஆம்பல் = 1000 கோடி கோடி (ஆயிர வெள்ளம்)
----நெல்லை சு முத்து அவர்கள் எழுதிய ஒரு
கட்டுரையில் இருந்து; "அறிவியல் அறிக"
என்ற ஏட்டில் வெளியானது.
**
நிற்க. இன்று வெள்ளம், ஆம்பல் போன்றவற்றை
இவை இடுகுறித்  தன்மை கொண்டவையாக
இருப்பதால் ஏற்கத் தேவையில்லை.
**
இன்று நவீன அறிவியலுக்கு ஏற்றவாறு
உள்ளவற்றையே போற்றிட வேண்டும்.  
9 என்ற எண்ணுக்குரிய சொல்லை தமிழன்
தொலைத்து விட்டான். எனவே 90 என்ற எண்ணுக்குரிய
ஒன்பது என்ற சொல்லை எடுத்து 9க்குத் தந்தான்.
இப்போது 90 என்ற எண்ணுக்கு சொல் இல்லை.
எனவே மேலடுக்கில் இருந்த 900 என்ற எண்ணுக்குரிய
சொல்லான தொண்ணூறு  என்ற சொல்லை
எடுத்து 90க்குத்  தந்தான்.
**
இப்போது   900 என்ற எண்ணுக்குச் சொல் இல்லை.
எனவே 9000 என்ற எண்ணுக்குரிய சொல்லான
தொள்ளாயிரம் என்ற சொல்லை 900க்குத் தந்தான்.
**
இது பாவாணர் கருத்து.
**
70= எழுபது; 80= எண்பது ; எனவே 90= ஒன்பது.
இப்படித்தான் ஆதிகாலத்தில் இருந்தது. 
**
700= எழுநூறு; 800= எண்ணூறு; 900= தொண்ணூறு.
இப்படித்தான் ஆதியில் இருந்தது.
**
7000= ஏழாயிரம்; 8000= எண்ணாயிரம்;
9000= தொள்ளாயிரம். இப்படித்தான் ஆதியில்
இருந்தது.   

இக்கருத்தை பாவாணர் ஏற்கவில்லை.

பாவாணர் கூறியதை நான் அப்படியே ஏற்றுக்
கொண்டேன். பரிசீலித்துப் பார்த்ததில் அது
சரி என்று புலப்பட்டது. என்னுடைய ஆசிரியர்களும்
அதையே விளக்கினார்கள். மற்றப்படி, பாவாணர்
கூறியது குறித்து எதிர்க்கருத்துக் கூறவோ
ஆதாரம் கேட்கவோ என் சிந்தையில் இடமில்லை.
மேலும்  நான் இப்பொருளில் ஆய்வு எதுவும்
மேற்கொள்ளவில்லை.

நான் மேலே கூறிய கருத்துக்களின் அடிப்படையில்
பாவாணர் கூறியது சரியே என்று புலப்பட்டது.
அறுபது, எழுபது, எண்பது என்ற வரிசையில்
அடுத்து ஒன்பது என்றுதானே வர வேண்டும்.
எங்கிருந்து தொண்ணூறு வந்தது? தொள் +நூறு=
தொண்ணூறு (குறைந்த நூறு) என்ற கருத்தைப்
பாவாணர் ஏற்கவில்லை.
**
தொட்டு என்ற சொல்லை 9க்குரிய சொல்லாக
நான் வரித்துக் கொண்டேன். இதை பாவாணர்
கூறியதாக நினைவில்லை. எனவே தவறு இருந்தால்
அது என்னைச் சாரும். பாவாணரைச் சாராது. 

பாவாணர் கூறியதை என் கல்லூரிக் காலத்திலேயே
ஏற்றுக் கொண்டேன். இன்று நேற்று ஏற்றுக்
கொண்டதன்று இது. அது  என் சிந்தையில்
உறைந்து விட்டது. மேலும் இந்தக் குறைபாட்டை
நீக்க வேண்டும் என்று கருதினேன். எனவே 9க்கு
உரிய சொல்லாக தொட்டு என்று கொண்டேன்.
தர்க்கப்பிழை உள்ளதா?

9, 90, 900 ஆகிய எண்களுக்கு உரிய சொற்கள்
(ஒன்பது, தொண்ணூறு, தொள்ளாயிரம்)
தமிழின் எண்களுக்கான பெயர்களில் ஒரு
சமச்சீர்மை குலைவு (Symmetry breaking) ஏற்பட்டு
உள்ளதைக் காட்டுகின்றன. இந்த சீர்மைக்குலைவை
உணராத அல்லது ஏற்க மறுத்த தமிழறிஞர்கள்
தொண்ணூறு (குறைந்த நூறு), தொள்ளாயிரம்
(குறைந்த ஆயிரம்) என்று சப்பைக் கட்டு
கட்டினார்கள். பாவாணர் மட்டுமே இந்த
சீரமைக்க குலைவைக் கண்டறிந்து சொன்னவர்.
அதில் உள்ள தர்க்கம் எனக்கு ஏற்புடைத்தாக இருந்தது.
   
1) பாவாணர் கூறியதும்  2) அதை என் அறிவுக்கு எட்டிய
விதத்தில் சிந்தித்து ஏற்றதும் காரணங்கள். பாவாணர்
அடித்துக் கூறுகிறார். ஒன்பது என்ற சொல் மூலச்
சொல்லன்று. வேறு ஒரு சொல் இருந்தது என்று
பாவாணர் கூறுகிறார். இப்போது அந்தப் புத்தகம்
என்னிடம் இல்லை. 

9 என்ற எண்ணுக்குரிய மூலச் சொல்லை (original)
தமிழன் தொலைத்து விட்டான். எனவே மேலடுக்கில்
இருந்த ஒன்பது என்ற சொல்லை (இது 10 களின் பெயர்
வரிசையில் 90க்கானது) எடுத்து 9க்கு உரிய
சொல்லாக ஆக்கிக் கொண்டான் என்கிறாரே
பாவாணர். சமச்சீர்மை ஒவ்வொரு இடத்திலும்
குலைவதை நான் பரிசீலித்து உணர்ந்தேன்.


நான் இதில் விடாப்பிடியாக இல்லை. இருக்கவும்
விரும்பவில்லை. ஜான் ரூபர்ட் கேட்டதால்
விளக்கம் அளித்தேன். எது சாத்தியமோ அப்படிச்
செய்து கொள்ளுங்கள். எனக்கு எவ்வித ஆட்சேபமும்
கிடையாது.
Undecillion = பதினொன்றகம்
duodecillion = பன்னீரகம் (பன்னிருவகம்)
tredecillion = பதின்மூன்றகம்
quatturdecillion =  பதினான்ககம்
quin =பதினைவகம்
sex = பதினாறகம்
sept = பதினெழுவகம்
octo = பதினெண்மகம்
nov = பதிதொட்டகம்
---------------------------------------------------
குறிப்பு: பதிதொட்டகம் என்ற சொல்லைக் கருதுக.
ஒன்பது = தொட்டு என்ற மூல நிலையில் இருந்து
 உருவாக்கிய சொல் இது.
சுருங்கள் கூறின்,
ஒன்று,  இரண்டு,..............., ஒன்பது, பத்து என்பதை
ஒன்று, இரண்டு,................., தொட்டு, பத்து என்று
எடுத்துக் கொண்டுள்ளேன். இறந்து போன அந்தச்
சொல் (9க்குரிய மூலச் சொல்) தொட்டு என்பது கருத்து.
------------------------------------------------------------------------------------------------
vigintillion = இருபதகம்
unvigintillion = இருபத்தொன்றகம்
duovigintillion = இருபத்திரண்டகம்

இவ்வாறு உருவாக்கிக் கொள்ள இயலும்.     
----------------------------------------------------------------------------------
பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழன் என்ற செருக்கு
தலைக்கேறி நின்ற காலத்தில் இந்தத் தமிழ்ப்
பேரெண்களை ஆக்கினேன். ஆங்கிலப்பாணி
போன்று அப்படியே இருத்தல் வேண்டும் என்று
முடிவு செய்து, முன்னொட்டு, பின்னொட்டு
ஆகியவற்றைப் பெய்து ஆக்கினேன். அன்று
மிகப்பெரிய செயலாகத் தோன்றியது இது எனக்கு.
இன்று மிக எளிய செயலாகத் தோன்றுகிறது.
**
குறிப்பு: என்னுடைய தொட்டு என்ற சொல்லை
( 9க்குரிய சொல்) தமிழகம் ஏற்காவிட்டால்
நடப்பிலுள்ள ஒன்பது என்ற சொல்லையே
பயன்படுத்துவதில் எனக்குத் தடையில்லை.

மீதி எண்களின்  ஆங்கிலப் பெயர்களை வைத்துக்
கொண்டு, இதே போன்று எவராயினும் தமிழ்ச்
சொற்களை உருவாக்க இயலும். 

இவை ஏற்கவியலாதவை எனில் தள்ளுக.
திருத்தி ஏற்கலாம் எனில் திருத்துக.
அனைத்தும் உங்கள் உரிமை.எட்டுப்பேர் என்பதை எண்மர் என்கிறோம்.
அதுபோல் ஒன்பது பேர் என்பதை என்னுடைய
கருத்தில் தொட்டு+ பேர்= தொட்டுப்பேர் எனலாம்.
எனவே தொட்டகம் என்று குறிப்பிட்டேன்.
(கவனிக்கவும்: 9 என்ற எண்ணுக்குரிய சொல்லாக
ஒன்பது  என்பதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.
பாவாணரின் பாதிப்பு. எனவே 9 என்ற எண்ணுக்குரிய
சொல்லாக தொட்டு என்ற புதிய சொல்லை
பெய்துள்ளேன். எனவேதான் தொட்டகம்.
**
90 = தொண்ணூறு என்பது தவறு; ஒன்பது என்று
ஆரம்ப காலத்தில் சொன்னது   போல் சொல்ல வேண்டும்/

900 = தொள்ளாயிரம் என்பது தவறு. இது வெறும் நூறுதானே.
இதில் ஆயிரம் எங்கிருந்து வந்தது? எனவே
900= தொண்ணூறு என்று சொல்ல வேண்டும்.

இந்தக் கருத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது இது.  


வேல்முருகன், நான் எழுதி உள்ளவை, ஆக்கித்
தந்தவை எல்லாம் ஒரு வழிகாட்டலுக்குத்தான்.
எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும்
மாற்றிக் கொள்ளுங்கள். உங்களிடம் ஒப்படைத்து
விட்டேன்.  தேவைக்குத் தக்கபடி
மாற்றிக் கொள்க. அடுத்த தலைமுறை வந்து விட்டது.
இனி எமக்கு நிம்மதி. பயன்படுமானால் பயன்படுத்துக.
இல்லையெனில் வீசி எறிக.  .

million= எண்ணம்
billion= இரட்டம் 
trillion=மூவகம் 
quadrillion=நாவகம்
quintillion=ஐவகம்
sex =அறுவகம்
sept = எழுவகம்
oct =  எண்வகம்
non = தொட்டகம்
dec =பத்தகம்
-------------------------------
குறிப்பு: தொட்டகம் என்ற சொல்லைக் கருதுக.
9 என்பதற்கு தமிழில் மூலச்சொல் ஒன்பது அல்ல.
(பார்க்க: தேவநேயப்  பாவாணர்) அச்சொல்
இறந்து போனமையால் ஒன்பது என்ற சொல்
மேலடுக்கில் இருந்து எடுத்தாளப் பட்டது.
90 என்பதற்கு தொண்ணூறு மூலச் சொல் அல்ல.
இங்கு யான் 9 என்பதற்கு தொட்டு என்று எடுத்துக்
கொண்டு தொட்டகம்  என்று குறித்துள்ளேன்.
   

சனி, 25 ஜூன், 2016

CHENNAI: Students of Central Board of Secondary Education (CBSE) and Indian Certificate of Secondary Education (ICSE) schools will be studying three languages up to Class X and two languages in higher secondary classes, if the recommendations of a high-level committee of the Union Human Resource Development Ministry are approved.
In a recent report, the committee stated that the three-language formula would encourage students to study Sanskrit as one of the optional languages and hence more students would be taking up higher education studies in Sanskrit.
Currently, many of the Central Board schools offer only two language subjects and it is the discretion of the respective schools to offer a third language.
Calling it an ‘irony’, a committee member told Express, “The three-language formula was adopted only till Class VIII in these schools and students learn two languages in Class IX-X and one language in Class XI and XII.”
The report criticised the three National Boards — CBSE, ICSE and NIOS — directly under the government of India, for not implementing the three-language formula effectively. The report goes on to state that State Board schools too had started following this trend of teaching only English and the regional language at the cost of the mother tongue, even Hindi or Sanskrit, in Hindi-speaking states.
It strongly recommended implementation of the three-language formula in Secondary Schools and two-language formula in Higher Secondary Schools in CBSE, ICSE, NIOS schools, including Kendriya Vidyalayas and Navodaya Vidyalayas.
------------------------------------------------
However, experts opine that the Three-language Formula would burden the school students since they would have to clear three language papers in the board exams.
“There isn’t going to be any real benefit for the students. Adding one more subject would only increase their exam-related stress, particularly for Class X students in non-Hindi speaking States like Tamil Nadu and Puducherry,” said Prince Gajendra Babu, an educationalist.
He added that the choice of studying a third language should be left to the student and the present move was not the right way to popularise a language.
On the other hand, parents have welcomed the move. “I never got an opportunity to work outside the State as I never had a chance to learn a third language. If my daughter can learn an additional language, it will help her in future,” said A Deepak, parent of a CBSE school student.
The idea of making three languages compulsory for the students is not new. It was first devised in 1961 in the Chief Minister’s conference and was enunciated in the 1968 National Policy Resolution. Under the policy, mother tongue or regional language will be the first language. In non-Hindi speaking States, the second language will be English or Hindi. In Hindi-speaking States, it will English or any modern Indian language.
The third language, would be English, any modern Indian language or foreign languages like French or German.
நளினியை விடுதலை செய்ய முடியாது!
கண்டிக்க மறுக்கும் சீமான் நெடுமாறன்!
------------------------------------------------------------------------------
தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும்
என்று ராஜிவ் கொலையாளி நளினி சென்னை
உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து
இருந்தார். இந்த வழக்கில் பதில் மனு (counter)
தாக்கல் செய்தது தமிழக அரசு.

அதில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால்
நளினியை விடுதலை செய்ய முடியாது என்று
ஜெயலலிதா அரசு கராறாகவும் கண்டிப்பாகவும்
கூறி விட்டது.

தமிழக அரசின் இந்தப் பதில் தமக்கு மனவேதனை
அளிப்பதாக நளினி கூறியதாக அவரின் வழக்கறிஞர்
புகழேந்தி கூறியுள்ளார்.

1) நெடுமாறன்
2) சீமான்
3) வைகோ
4) கொளத்தூர் மணி
5) கோவை ராமகிருஷ்ணன்
6) விடுதலை ராசேந்திரன்
7) கவிஞர் தாமரை

இன்ன பிற ஈழப் போராளிகள் கனத்த மௌனம்
காப்பது ஏன்?
திருமதி அற்புதம் ஏன் இன்னும் கருத்துத்
தெரிவிக்கவில்லை?
**********************************************************************
பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஆர்.எஸ்.எஸ்.க்கு
தத்துவத் தளத்தில் செல்வாக்கு இல்லை. வாஜ்பாய்
ஆட்சியின்போது கூட, ஆர்.எஸ்.எஸ் தத்துவத்
தளத்தில் செல்வாக்குடன் இல்லை. இன்று தமிழகம்,
கேரளம், வங்கம் ஆகிய மாநிலங்களில் இதுவரை
இல்லாத செல்வாக்கு ஆர்.எஸ்.எஸ்.க்கு வந்துள்ளது.
(தேர்தல் தளத்தைப் பற்றி இங்கு பேசவில்லை)
எனவே ஆர்.எஸ்.எஸ் முன்வைக்கும் சித்தாந்த
ரீதியான விஷயங்களில், ஆர்.எஸ்.எஸ்.க்கு
பதில் கொடுக்க, திராவிட முகாம்களில் ஆளில்லை.
நியூட்டன் அறிவியல் மன்றம் மட்டுமே இதைச்
செய்து வருகிறது. 

உலகில் மார்க்சியம்  பரவி இருந்த நாடுகளில் எல்லாம்
மதமற்றவர்களும் கடவுளை ஏற்காதவர்களும்
மொத்த மக்கள் தொகையில் 80 சதம் உள்ளார்கள்.
இதற்கு ஆயிரம் நிரூபணங்கள் உள்ளன.

நீங்கள் கூறும் திராவிட நாத்திகம் வந்த வேகத்திலேயே
திரும்பிப் போய் விட்டதே. அதைத்தானே கூறுகிறார்
வைரமுத்து. இது ஒரு நீர்க்குமிழித்தன்மை உடைய
நாத்திகம். காத்திரமான நாத்திகம் அல்ல.

வைரமுத்துவும் நானும் கலைஞர் அபிமானிகள். திராவிட இயக்கத்தோடு நீண்ட காலத் தொடர்பு உடையவர்கள்.
வைரமுத்துவும் அறிவியல் கற்றவர்தான். முதலில்
அவர் B.Sc Zooதான் படித்தார். பின்னர்தான் எம்.ஏ தமிழ்
படித்தார். வைரமுத்து வேற்று ஆள் அல்ல. ராமகோபாலன்
சொன்னால் சந்தேகப் படலாம். ஆதாரம் கேட்கலாம்.
வைரமுத்து சொன்னதை நம்பால் இருக்கலாமா?  

சீன நாட்டின் அரசமைப்புச் சட்டம் சீனா ஒரு
நாத்திக தேசம் என்று வரையறுக்கிறது. உலகிலேயே 
அதிகமான நாத்திகர்கள் உள்ள நாடு சீனா.

தமிழ்நாட்டில் CPI, CPM கட்சிகள் மீது கடும் விமர்சனம்
இருந்தபோதிலும், கட்சி உறுப்பினர்களில்
முக்கால்வாசிப்பேர் நாத்திகர்களாக உள்ள
கட்சிகள்தான் CPI,CPM.

ஒரு தோப்பில் ஆயிரம் தென்னை மரங்களுடன்
ஒன்றிரண்டு மாமரங்களும் இருக்கலாம்.
அதற்காக அதை மாந்தோப்பு என்று அழைக்க முடியாது.
தென்னத்தோப்பு என்றுதான் அழைக்க முடியும்.
அதுபோலவே 94 ஆண்டுகள் வாழ்ந்தவர், மலை
மலையாக எழுதிக் குவித்தவர் பெரியார். அதில்
ஒன்றிரண்டு கருத்துக்களை எடுத்து வெளியே
போட்டு அதை சான்றாகக் காட்ட முயல்வதில்லை
பொருளில்லை.
**
நாங்கள் பெரியார் வாழ்ந்த
காலத்தில் கூடவே வாழ்ந்தவர்கள். பெரியார் பேசிய
பேச்சை நேரடியாகக் காதால் கேட்டவர்கள். பெரியார்
எப்படி இருந்தார், என்னவெல்லாம் சொன்னார்
என்பதற்கு நாங்கள்தான் சாட்ச்சியங்கள். எனவே
பெரியாரின் சாரத்தைக் கிரகித்துக் கொண்டு
பேச வேண்டும்.

பெரியாரின் கருத்து என்ன என்பதற்கு அவர் காலத்தில்
கூடவே வாழ்ந்த நாங்கள்தான் ஆதாரம். எங்களை மிஞ்சிய
ஆதாரம் என்ன உள்ளது? ஒவ்வொரு விஷயத்திலும் பெரியார் என்ன சொன்னார், அவரின் கருத்து என்ன என்பதை
நாங்கள் அறிவோம். பெரியார் ஏதோ கி.மு. காலத்துத்
தலைவரா என்ன?
(2) உண்மை சுடுகிறது!
வைரமுத்து கூறிய உண்மையும் எழுந்த சர்ச்சையும்!
திராவிட நாத்திகம் அறிவியல் வழிப்பட்ட
நாத்திகம் அல்ல, போலி நாத்திகமே!
--------------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------------------------------
எழுபதுகளின் பிற்பகுதியில் மதுரைப் பல்கலையில்
எம்.ஏ. முதுகலை தமிழ் இலக்கியப்  படிப்பில் 12 தாள்
இருந்தது. (அதே காலத்தில் சென்னைப் பல்கலையில்
10 தாள்தான்) அவற்றுள் ஒரு தாள் "உரையாசிரியர்கள்"
என்பது. ஒப்பிலக்கியம், சைவ சித்தாந்தம் போன்று
மாணவர்கள் தம் விருப்பத்தின் பேரில் தெரிவு செய்யும்
பாடம் இது. இதை இங்கு கூறக் காரணம்,
உரையாசிரியர்களுக்கு உள்ள முக்கியத்துவமே.

அடியார்க்கு நல்லார், அரும்பதவுரைகாரர்
என்றெல்லாம் உரையாசிரியர்கள் இருந்தனர்.
சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதியவர் யார்
என்று கேட்டால்  அடியார்க்கு நல்லார் என்று
சொல்லத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை,
புலியூர்க்கேசிகன் என்றாவது சொல்லத் தெரிந்து
இருக்க வேண்டும். அவர்களால் மட்டுமே
இப்பத்திகளின் கூற்றைப் புரிந்து கொள்ள இயலும்.

தமிழ் தமிழ் என்று இரட்டைக் கிளவியாகவும்
அடுக்குத்  தொடராகவும் கத்துவோர் கதறுவோர்
கழறுவோர், நச்சினார்க்கினியர் முதல் கலைஞர்
கருணாநிதி வரையிலான உரையாசிரியர்களை
அறிந்திராவிட்டால், தமிழ் என்ற சொல்லை
உச்சரிக்கும் அருகதை அவர்களுக்கு இல்லை.

உரையாசிரியர்களில் பலர் தமது உரையே
மெய்யுரை என்று நிறுவி உள்ளனர். அவ்வாறு
நிறுவிடும் பொழுது, பிறரின் தவறான உரையை
மேற்கோள் காட்டி, "இவ்வுரை போலியுரை என்க"
என்று சுட்டுவது உண்டு. உரையாசிரியர்களை
வாசித்தோர் இதை நன்கு அறிவர்.

உரையாசிரியர்களின் மரபைப் பின்பற்றியே,
அவர்கள் பயன்படுத்திய சொல்லட்சியான "போலி"
என்ற சொல்லாட்சியை நியூட்டன் அறிவியல் மன்றம்
பயன்படுத்துகிறது.

திராவிட இயக்கம் முன்னெடுத்த நாத்திகம் போலி
நாத்திகமே  என்று நியூட்டன் அறிவியல் மன்றம்
அடித்துக் கூறுகிறது. இங்கு போலி என்ற
சொல்லாட்சியை  யாம்  தெளிந்த புரிதலுடன்,
உரையாசிரியர்களின் மரபில் நின்று கொண்டு
பயன்படுத்தி உள்ளோம். (தமிழ் இலக்கணம் கூறும்
முதல் போலி, இடைப்போலி, கடைப்போலி ஆகியவை
குறித்து வாசகர்கள் படிக்கலாம்).

நிற்க. கடவுள் மறுப்பை  பெரியாருக்கு முன்பே
முன்னெடுத்தவர்கள் இந்த மண்ணில் பல்லாயிரம்
பேர் உண்டு. இந்தியாவிலும் சரி,  தமிழகத்திலும் சரி,
கடவுள் மறுப்புக்கு குறைந்தது இரண்டாயிரம் ஆண்டு
கால வரலாறு உண்டு. உலகின் வேறெந்த
பாகத்தையும் விட, இந்தியாவில்தான்
பொருள்முதல்வாதம் என்னும் கடவுள் மறுப்புத்
தத்துவம் சிறந்தோங்கி இருந்தது என்பதற்கான
வரலாற்றுச் சான்றுகளும் நிரூபணங்களும் உண்டு.

தமிழ் மண்ணே கடவுள் மறுப்பு மண்தான்.
என்றாலும்  இது குறித்ததெல்லாம் அறிய
பெரியார் என்றுமே ஆர்வம் காட்டியதில்லை.
பெரியார் பேசிய நாத்திகம் என்பது
பொருள்முதல்வாதம் அல்ல. பெரியாரின்
நாத்திகத்தில்  துளிகூட தத்துவச்  சாரம்
கிடையாது. அறிவியலின் சுவடு கூடக்  கிடையாது.
ஆத்திகம் வாளை உருவிக் கொண்டு வரும்போது,
பெரியாரின் நாத்திகத்தால் ஆத்திகத்தை
வீழ்த்த முடியாது.

எனவேதான் வந்த வேகத்திலேயே பெரியாரின்
நாத்திகம் வெளியேறி விட்டது. இந்த உண்மையைப்
புட்டுப் புட்டு வைக்கிறார் கவிஞர் வைரமுத்து.

நாத்திகர் என்ற பாத்திரத்தை வகித்ததை விட,
இந்து மத எதிர்ப்பாளர் என்ற பாத்திரத்தையே
பெரிதும் வகித்தவர் பெரியார். பிற மதங்களை
விமர்சிக்காதவர் பெரியார். குறிப்பாக இஸ்லாம்
மதத்தை ஆதரித்தவர் பெரியார். எனவேதான்
இஸ்லாமிய மத அபிமானிகளின் செல்லப்
பிள்ளையாகப் பெரியார் கொண்டாடப் படுகிறார்.

தீவிர பெரியார் ஆதரவாளரான பேராசிரியர்
அ மார்க்ஸ், தாம் எழுதிய "பெரியார்" என்ற
சிறுநூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
"திராவிட சமயம் என்பதே இஸ்லாம்தான் என்று
பெரியார் கருதினார்".

ஆக, இஸ்லாமியச் சார்பு, கிறிஸ்துவத்தைப்
பொறுத்து மௌனம், தீவிர இந்துமத எதிர்ப்பு
ஆகிய மூன்றும்தான் பெரியாரின் நாத்திகத்தின்
சாரம். இதை எவ்வாறு அறிவியல்வழி நாத்திகமாக
ஏற்க இயலும்?
-----------------------தொடரும்----------------------------
**********************************************************************                  
ஃபார்முலாவைப் பயன்படுத்தி கணக்கின் விடை  2 என்று
கண்டு பிடிக்கும் மாணவர்கள் மதிப்பெண் பெறுவார்கள்.
ஆனால் physically இதன் sumஜக் கண்டு பிடிக்க வேண்டும்.
அதற்கு சுமார் 10 அல்லது 20 termsஐக் கூட்டிப் பார்க்க
வேண்டும். அவ்வாறு கூட்டிப் பார்க்கும்போது இதன் விடை
2 தான் வரும் என்பதை யூகித்து அறிய முடியும்.
அப்போதுதான் கணக்கை master பண்ண முடியும்.  


அப்படிக் கூட்டிப் பார்த்த ஒருவன்தான் இதற்கான
ஃபார்முலாவை கண்டு பிடித்தான். ஆரம்ப காலத்தில்
இதற்கு ஃபார்முலா எல்லாம் கிடையாது. உட்கார்ந்து
கை வலிக்க வலிக்க கூட்டிக் கொண்டு இருக்க வேண்டும்.
ஃபார்முலா நம்முடைய முன்னோர்கள் கண்டு பிடித்தது.வட்டமும் சதுரமும் இல்லாமல் வாழ்க்கை இல்லை!
சதுரக்  கணக்கைச் செய்யுங்கள்!
--------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------------------------
சதுரத்தின் பக்கம் 1 அலகு  என்று கொண்டு  ஒரு
சதுரம் செய்யப் படுகிறது. இச்சதுரத்தின் பக்கங்களின்
மையப்புள்ளிகளை இணைத்து ஒரு சதுரம் செய்யப்
படுகிறது. இதே முறையில் தொடர்ந்து சதுரங்கள்
முடிவேயற்று செய்யப் படுகின்றன. இந்த எல்லாச்
சதுரங்களின் பரப்பளவின்  மொத்தம் என்ன?

A square with its side 1 unit is made.By joining the midpoints of
the sides of this square, another square is made. This process of
making new squares is repeated endlessly. Find the sum of the
areas of all these squares.

கணிதத்தின் எழிலையும் ஆழத்தையும் ஒருசேர
வெளிப்படுத்துகிறது இந்தக் கணக்கு. 11ஆம் வகுப்பு
CBSE பாடப்புத்தகத்தில் இருந்து இது எடுக்கப் பட்டது.

11,12 வகுப்பு மாணவர்கள் மற்றும் அதற்கு மேல் படிக்கும் மாணவர்கள் (முன்னாள் மாணவர்கள் உட்பட)
இந்தக் கணக்கைச் செய்யலாம்.
12ஆம் வகுப்பு மாணவர்கள் இந்தக் கணக்கைச் செய்யத் தெரியாமல் விழித்தால், உதைக்கப் படுவது திண்ணம்.

12ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தின் கீழ்
நடத்தப்படும் எல்லாத் தேர்வுகளிலும் கால்குலேட்டர்
பயன்படுத்துவது தடை செய்யப்பட்டு இருக்கிறது.
எனவே நியூட்டன் அறிவியல் மன்றமும் கால்குலேட்டர்
பயன்பாட்டைத் தடை செய்துள்ளது.

விடைகள் வந்து குவியட்டும்.
******************************************************************
  
கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய 
மாநிலங்களில் பாஜக கணக்கு கால் ஊன்றி
உள்ளது.தேர்தல் தளத்தில் அல்ல. கருத்துத் தளத்தில்,
தத்துவார்த்தத் தளத்தில். நவீன அறிவியல் படித்த
ஆர்.எஸ்.எஸ் அபிமானிகள் கடவுள் கொள்கையை
உயர்த்திப் பிடித்து வருகின்றனர்.
**
இதை எதிர்க்க பெரியாரின் நாத்திகம் துளியும்
பயன்படவில்லை. ஆர்.எஸ்.எஸ்.இன் கணைகளை
அறிவியல் வழியில் சந்தித்து முறியடித்து வரும் ஒரே
அமைப்பு நியூட்டன் அறிவியல் மன்றமே.


பொருள்முதல்வாதம் உலகெங்கும் பரவி வருகிறது.
ஆண்டுதோறும் கோடிக்கணக்கான மக்கள்
பொருள்முதல்வாதக் கருத்துக்களால் ஈர்க்கப்
படுகிறார்கள். இந்த உலகம் பற்றிய, பிரபஞ்சம்
பற்றிய முழு நிறைவான அறிவியல் பார்வையை
பொருள்முதல்வாதம் வழங்குகிறது.
**
தமிழ்நாட்டிலும் பொருள்முதல்வாதம் பரவுமென்றால்
அது மக்களை ஈர்க்கும். அது பரவ வேண்டுமென்றால்
போலியான, பயனற்ற, எதிரியை வீழ்த்த இயலாத
போலி நாத்திகம் அகற்றப் பட வேண்டும். 

வெள்ளி, 24 ஜூன், 2016

உலகின் மிக மோசமான பிறழ் புரிதல் இந்தப்
பின்னூட்டம். இந்தப் பதிவு திராவிட இயக்கத்தின்
ஒட்டு மொத்தமான பங்களிப்பு குறித்த பதிவே அல்ல.
தமிழ்ச் சமூகத்தில் திராவிட இயக்கமானது சமூகத்
தளத்திலும், பண்பாட்டுத் தளத்திலும் ஆற்றிய
முற்போக்கான பாத்திரம் மார்க்சியத்தால்
அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
**
இந்தப் பதிவு திராவிட இயக்கத்தின் பெரியாரின்
கடவுள் கொள்கை என்ற ஒற்றைப் பொருள் பற்றி
மட்டுமே பேசுகிறது. மீண்டும் ஒவ்வொருவரும்
மனதில் இருத்திட வேண்டும். இங்கு பேசப் படுவது
பெரியாரின் கடவுள் கொள்கை மட்டுமே.மட்டுமே.


பெரியார் என்றாலே பார்ப்பன எதிர்ப்பு என்று
பொருள். பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடி,
வெற்றி அடைந்தவர் பெரியார். இதை எவராலும் மறுக்க
முடியாது. தாம் வாழ்ந்த காலத்திலேயே தாம்
முன்னெடுத்த கொள்கையில் வெற்றி பெற்றவர்கள்
உலகில் வெகு சிலரே. அதில் பெரியாரும் ஒருவர்.
**
ஆனால் கடவுள் கொள்கையில் பெரியார் தோல்வி
அடைந்தார். காரணம் அவரின் கடவுள் கொள்கை
அறிவியல் வழியில் உண்டாக்கப் பட்டது அல்ல.


இந்தக் கட்டுரை ஒருநாள் இரவில் எழுதப் பட்டதல்ல.
இது 30 ஆண்டுகளின் இயக்கப் பணிகள், செயல்பாடுகள்,
அனுபவங்கள், அவற்றின் பகுப்பாய்வுகள் ஆகிய
எல்லாவற்றின் தொகுப்பு. இதை புரிந்து கொள்ள
இயக்கரீதியான அனுபவங்களும், செயல்பாடுகளும்,
பகுப்பாய்வும் தேவை. தினத்தந்தியில் ஒரு பக்கத்தை
வாசித்து விட்டுப் போவது போன்றதல்ல எமது
கட்டுரையை வாசித்துப் புரிந்து கொள்வது.
**
இந்துத்துவம் அறிவுத்தளத்தில் எங்கெல்லாம்
தலைதூக்குகிறது, அங்கெல்லாம் அதை
அடித்துப் போட்டுக் கொண்டிருக்கும் ஒரே
அமைப்பு இன்று தமிழ்நாட்டில் நியூட்டன்
அறிவியல் மன்றமே. இந்தப் பணியில் பெரும்
தடையாக இருப்பது பெரியாரிய மூட நம்பிக்கைகளே.


எனவேதான் சொல்கிறோம் அவரின் நாத்திகம்
போலி நாத்திகம் என்று. அதைத் தவிர வேறு எதையும்
நானோ இக்கட்டுரையின் மூல கர்த்தாவான
வைரமுத்துவோ சொல்லவில்லை.

தமிழகத்தில் ஏது ஆம் ஆத்மீ?


-------------------------------------------------------------------------
இது என் அபிப்பிராயம் அல்ல ஐயா. தமிழ்
இலக்கணப்படி சில்லறை என்றால் சில்லுச்
சில்லாக அறுத்தல் என்ற பொருளில் தோன்றிய
சொல். தேங்காய்ச் சில்லு என்றெல்லாம் சொற்கள்
நெல்லை மாவட்டத்தில் உண்டு.
எனக்கு கற்றுக் கொடுத்த தமிழாசிரியர்கள்
மற்றும் பேராசிரியர்கள் கற்பித்த விஷயம் இது.
**
நன்கு கவனிக்கவும். சில்லுச் சில்லாக அறுத்தல்
என்பது துண்டு துண்டாக உடைத்தல் என்ற
பொருளைத் தரும். சில் என்ற அறை என்று
யாரும் பொருள் கொள்ளவில்லை.


(1) அறிவியல் வழியிலான கடவுள் மறுப்பை
திராவிட இயக்கம் முன்னெடுக்கவில்லை!
கவிஞர் வைரமுத்து கருத்து! இது சரியா?
---------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------------
தினமணி நடுப்பக்கக் கட்டுரையில் (24.06.2016)
வைரமுத்து கூறிய பின்வரும் 3 கருத்துக்கள்:
1) கடவுள் மறுப்பு என்பது ஒரு சமூக விஞ்ஞானம்.
2) அறிவியல் வழியில் கடவுள் மறுப்பை
திராவிட இயக்கம் முன்னெடுக்கவில்லை.
3) மிக எளிமையாக முன்னடுக்கப்பட்ட கடவுள் மறுப்பு
மிக எளிமையாக வெளியேறி விட்டது.

மேற்கூறிய மூன்று கருத்துக்களையும் நியூட்டன்
அறிவியல் மன்றம் கடந்த 15 ஆண்டுகளாகக்
கூறி வருகிறது. வைரமுத்து கூறியதை ஏற்கிறது.

திராவிட இயக்கக் கட்சிகள்: தோற்றமும் கொள்கையும்:
-----------------------------------------------------------------------------------------------------
1) தந்தை பெரியார் 1925 வரை காங்கிரஸ் கட்சியில்
இருந்தார். பின்னர் நீதிக்கட்சியில் சேர்ந்தார்.


2) இதற்கிடையில் 1925இல் சுயமரியாதை இயக்கத்தைத்
தொடங்கினார். இது கடவுள் மறுப்பு இயக்கம் அல்ல.

3) காங்கிரஸ் கட்சியிலும்  நீதிக்கட்சியிலும் தாம்
விரும்பிய கொள்கைகளைச் செயல்படுத்த முடியாத
நிலையில், பெரியார் 1944இல் தி.க.வை தொடங்கினார்.
இது கடவுளை ஏற்காத இயக்கம். கடவுள் மறுப்பைத்
தீவிரமாக முன்னெடுத்த இயக்கம்.

4) 1944இல் தொடங்கிய தி.க, ஐந்தே ஆண்டுகளுக்குள்
பிளவு பட்டது. 1949இல் அறிஞர் அண்ணா பெரியாரைப்
பிரிந்து, திமுகவை தோற்றுவித்தார்.

5) திமுக கடவுள் மறுப்பு இயக்கம் அல்ல. "ஒன்றே குலம்
ஒருவனே தேவன்" என்று கடவுளை ஏற்கும் இயக்கமே
திமுக என்று அண்ணா அறிவித்தார். என்றாலும்
உலகின் தலைசிறந்த நாத்திகர்களில் ஒருவராக அறிஞர்
அண்ணா திகழ்ந்தார். திமுகவின் முதல் தலைமுறைத்
தலைவர்கள் பலரும் கடவுளை ஏற்காதவர்களாகவே
இருந்தனர்.

6) திமுகவின் இரண்டாம் தலைமுறை அப்படி அல்ல.

7) திமுகவை உடைத்து அதிமுகவை ஆரம்பித்த
ராமச்சந்திர மேனன் கொல்லூர் மூகாம்பிகை பக்தர்.
அவருக்குப் பின் வந்த ஜெயலலிதாவோ அதிதீவிர
கடவுள் பக்தர். யாகங்கள், பூசைகள், பரிகாரங்கள்
என்று எல்லாச் சடங்குகளையும் மேற்கொள்கிறவர்.

8) 1973இல் பெரியாரின் மறைவுக்குப் பின், மணியம்மை
அவர்களும் பின்னர் ஆசிரியர் வீரமணி அவர்களும்
தி.க.வை நடத்தி வருகின்றனர்.

9) ஆசிரியரோடு முரண்பட்ட பலரும் பெரியாரின்
பெயரைச் சொல்லிக் கொண்டு பல்வேறு அமைப்புகளை
நடத்தி வருகின்றனர். மதிப்பிற்குரிய வே ஆனைமுத்து
ஐயா. கோவை ராமகிருஷ்ணன், விடுதலை ராசேந்திரன்,
கொளத்தூர் மணி ஆகியோரே இவர்கள். இவர்களின்
அமைப்புகள் யாவும் கடவுளை ஏற்காத அமைப்புகள்.
கடவுள் மறுப்பை முன்னெடுக்கும் அமைப்புகள்.

10) சற்றேறக் குறைய தமது 48 வயதை ஒட்டித்தான்
பெரியார் நாத்திகர் ஆகிறார். தம்மை நாத்திகராக
அறிவித்துக் கொள்கிறார்.

11) 1925இல் சுயமரியாதை இயக்கத்தின் தொடக்க
விழாவுக்கு, ஒரு இந்துமதச் சாமியார்தான் தலைமை
தாங்கினார். குடியரசு பத்திரிகையின் முதல்
இதழின் அட்டைப் படத்தில் இந்து, கிறிஸ்துவ,
இஸ்லாமிய மதச் சின்னங்கள் பிரசுரிக்கப் பட்டன.
இறைவன் அருளை வேண்டியே இந்த இயக்கத்தை
ஆரம்பிப்பதாக பெரியார்  குறிப்பிட்டார்.

12) பெரியார் நடத்தி வைத்த முதல் சுயமரியாதைத்
திருமணத்தில் மணமகன் இரண்டு பெண்களைத்
திருமணம் செய்து கொண்டார். (அப்போது இது
சட்டபூர்வமாக அனுமதிக்கப் பட்ட ஒன்று. இருதார
மணத்தடைச் சட்டம் எல்லாம் அப்போது கிடையாது)
இறைவன் அருளால் இந்தத் திருமணம் நடைபெறுவதாக
ஓலை எழுதப் பட்டது.

13)இதில் எந்தத் தவறும் இல்லை; குற்றமும் இல்லை.
பார்ப்பனச் சடங்குகளில் இருந்து விடுபட வேண்டும்
என்பதே அன்று ஒரே நோக்கமாக இருந்தது.

14) மேலே கூறியவை அனைத்தும் தெளிவான, ஆதார
பூர்வமான வரலாறுகள். பெரியாரைப் படித்தவர்கள்
இவற்றை அறிவார்கள்.

15) புதிய வாசகர்களுக்காக  இவை இங்கே கூறப்
படுகின்றன.

16) அந்தக் காலக்  கட்டத்தில் தமிழ்ச் சமூகம் எப்படி
இருந்தது என்பது பற்றிய தெளிந்த அறிவு
உடையவர்களால் மட்டுமே பெரியாரின்
செயல்பாடுகளைப் புரிந்து கொள்ள முடியும்.

17) பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்ப்பது ஒன்றே
அன்று பெரியாரின் முழுமுதல் பணியாக
இருந்தது. பார்ப்பனர்கள் கடவுளை ஏற்றிப்
போற்றுவதால், பெரியார் கடவுளை எதிர்க்க
ஆரம்பித்தார். அவ்வளவே.

18) கடவுளின் தோற்றம் குறித்து ஆராய்ந்து, கடவுள்
தத்துவம் மற்றும் கடவுள் மறுப்புத் தத்துவம் ஆகிய
தத்துவங்களை எல்லாம் கசடறக் கற்று, தெளிந்து,
கடவுள் இல்லை என்ற முடிவுக்கு வந்தவர் அல்லர்
பெரியார். பார்ப்பான் எதைக் கொண்டாடுகிறானோ
அதை நாம் கீழே போட்டு மிதிக்க வேண்டும் என்ற
முடிவின் அடிப்படையில்தான் பெரியார்
கடவுள் மறுப்பைப் பேசினார்.

19) எனவே பெரியாரின் கடவுள் மறுப்பானது ஏட்டிக்குப்
போட்டி என்ற தன்மையில் அமைந்தது தானே தவிர
அறிவியல் வழிப்பட்டதல்ல. அறிவு பூர்வமானதல்ல.

20) பொருள்முதல்வாதம் என்னும் தத்துவமே உலகின்
தலைசிறந்த கடவுள் மறுப்புத் தத்துவம். இதைத்தான்
மார்க்சியம் தன்னுடைய தத்துவமாக ஏற்றுக்
கொண்டுள்ளது. ஆனால் பெரியாருக்கு இத்தத்துவம்
பற்றி எதுவும் தெரியாது. இது பற்றி அடுத்த கட்டுரையில்
விரிவாக்க காணலாம்.

21) இக்கட்டுரை பெரியாருக்கு எதிரானது என்று
யாரேனும் சில கத்துக் குட்டிகள் கருதலாம்.
கருதித் தங்களின் கசங்கிப்போன அட்டைக்
கத்திகளை எடுத்துக் கொண்டு வரலாம்.

22) பெரியார் இந்த அட்டைக்கத்திகளை நம்பி
இல்லை. பெரியாருக்கு வாளும் கேடயமுமாக
நியூட்டன் அறிவியல் மன்றம் இருக்கிறது. அது
பெரியாரைச் சுற்றி பல்வேறு "பொதுமைய லேசர்
வளையங்களை"(concentric LASER circles) அமைத்து
பெரியாரைப் பாதுகாக்கிறது.

23) பொருள்முதல்வாதம் பற்றிப் புரியாமல், இந்தக்
கட்டுரையின் கருத்துக்களையோ, கவிஞர்
வைரமுத்துவின் கருத்துக்களையோ புரிந்து
கொள்ள இயலாது. அடுத்த கட்டுரையில்
உலகெங்கும் வெற்றிக்கொடி நாட்டி வரும்
பொருள்முதல்வாதம் பற்றிப் பார்ப்போம். (தொடரும்).
***********************************************************
பின்குறிப்பு: வைரமுத்துவின் கட்டுரை முதல்
கமென்டில் தரப்பு பட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------------------

           
பிறழ் புரிதல் தவிர்ப்போம்!
------------------------------------------------
1) இன்றைய உலகின் மக்கள் தொகை 740 கோடி.
தமிழ்நாட்டில் மட்டும் எட்டுக்கோடி. இந்த
எட்டுக்கோடிப் பேரில் தனி ஒருவர் நாத்திகரா
இல்லையா என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை.
எனவே பெரியார் நாத்திகரா அல்லரா என்ற
பொருள் குறித்து எமது பதிவு பேசவில்லை.

2) திராவிட இயக்கம் முன்னெடுத்த கடவுள் மறுப்பு
இயக்கம் அறிவியல்பூர்வமானதா இல்லையா
என்பதுதான் இக்கட்டுரையின் பேசுபொருள்.

3) அறிவியல்பூர்வமான கடவுள் மறுப்பை
திராவிட இயக்கம் முன்னெடுக்கவில்லை
என்கிறார் வைரமுத்து. நாங்களும் அதையே
சொல்கிறோம்.

4) தனி ஒரு மனிதன் தன் அனுபவம் மூலமாகவோ,
தன் common sense  மூலமாகவோ நாத்திகன் ஆகலாம்.
அது இங்கு பேசுபொருள் இல்லை.

5) மக்கள் திரள் மத்தியில் ஒரு இயக்கமாக
முன்னெடுக்கும்போது, அந்த இயக்கம்
அறிவியல்பூர்வமாக இருந்ததா இல்லையா
என்பதுதான் இங்கு கேள்வி. 

6) Is it SCIENTIFIC or NOT?  இது மட்டும்தான் பேசுபொருள்.

7) இதை ஒரு தனிக்  கட்டுரையாக வெளியிடுகிறோம்.
எல்லோரும் போடுகிற பின்னூட்டங்களை கவனிக்க
முடியவில்லை. பார்வையில் தப்பி விடுகின்றன.      
பொருள்முதல்வாதம் அல்லாத நாத்திகம் எதுவாயினும்
அது போலி நாத்திகமே. பொருள்முதல்வாதம் மட்டுமே
அறிவியலின் அடிப்படையில் சமூகத்திற்கு
கடவுளை பற்றிய விளக்கம் அளிக்கிறது. கடவுளை
மனிதன்தான் படைத்தான் என்றும் கடவுள்
என்பது வெற்றுக் கற்பனை என்றும் அறிவியல்
வழி நின்று நிரூபித்து ஆத்திகத்தை வெட்டி
வீழ்த்தியது பொருள்முதல்வாதம். அது மட்டுமே
மெய்யான நாத்திகம்.
**
பெரியார் கூறிய கடவுள் மறுப்பானது அறிவியலின்
அடிப்படையில் உருவாகவில்லை. பிராமண
ஆதிக்கத்தை எதிர்க்க, கடவுளை மறுப்பது
உதவியாக இருக்கும் என்ற நோக்கில் பெரியார்
நாத்திகம் பேசினார்.
**
எனவே அந்த நாத்திகத்தால் ஆத்திகத்தை வெட்டி
வீழ்த்த முடியவில்லை. மலையாகக் குவிந்து
கிடைக்கும் பெரியாரின் எழுத்துக்களில்
பொருள்முதல்வாதம் பற்றி ஒரு சிறு குறிப்பு
கூட கிடையாது. ஏனெனில் பெரியார்
பொருள்முதல்வாதம் பற்றி அறியாதவர்.
**
இதைத்தான் வைரமுத்து கூறுகிறார். அவரின்
கட்டுரையைப் படியுங்கள்.
தமிழ்நாட்டில் இருந்தது போலி நாத்திகம் என்ற
நியூட்டன் அறிவியல் மன்றத்தின் கருத்தை
கவிஞர் வைரமுத்து ஏற்றுக் கொண்டுள்ளார்!
வைரமுத்துவின் கட்டுரையில் ஆதாரம் பாரீர்!
--------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------------------
கடந்த நூற்றாண்டில் (1901-2000) தமிழ்நாட்டில்
நாத்திக இயக்கங்கள் என்று உரிமை கோரிய
அமைப்புகள் எதுவும் மெய்யான நாத்திகத்தைப்
பரப்பவில்லை என்பது நியூட்டன் அறிவியல்
மன்றத்தின் ஆணித்தரமான கருத்து. இந்தக்
கருத்தைக் கடந்த 15 ஆண்டுகளுக்கும்
மேலாக, வாய்ப்புக்கு கிடைக்கும் இடங்களில்
எல்லாம் நியூட்டன் அறிவியல் மன்றம் சொல்லி
வந்திருக்கிறது என்பதை வாசகர்கள் அறிவார்கள்.

தற்போது நாத்திகராக கவிஞர் வைரமுத்து அவர்கள்
யாம் கூறிய கருத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
அவர் எழுதிய ஒரு கட்டுரையில் இந்த உண்மையைக்
குறிப்பிட்டுள்ளார்.

கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பிறந்த நாளை
ஒட்டி வைரமுத்து அவர்கள் எழுதிய கட்டுரையில்
இக்கருத்தைப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

"கடவுள் மறுப்பு என்பது ஒரு சமூக விஞ்ஞானம். அது அறிவியல்
என்ற ஆழத்திலிருந்து கட்டி எழுப்பப்படாமல் பிராமண 
எதிர்ப்பு என்ற பீடத்திலிருந்து கட்டமைக்கப்
பட்டு விட்டதாகக் கருதப் பட்டு விட்டதோ என்று 
கவலையோடு எண்ணத் தோன்றுகிறது."

பொருள்முதல்வாதம் என்ற அறிவியலின் அடிப்படையில் 
தமிழ்நாட்டில் பெரியாரிய நாத்திகம் கட்டி எழுப்பப் 
படவில்லை என்கிறார் வைரமுத்து, இந்த உண்மையை 
யாம்தான் முதலில் கூறினோம்; நிறுவினோம்.

பொருள்முதல்வாதம் என்றால் என்னவென்றே தெரியாத 
ஒரு மூடர் கூட்டம்தான் தங்களை நாத்திகர்கள் 
என்று உரிமை கோருகிறது. இதை ஏற்பதற்கில்லை.

கோவை ராமகிருஷ்ணன், கொளத்தூர் மணி,
விடுதலை ராசேந்திரன் இன்ன பிறர் பங்கேற்றுள்ள 
நாத்திக அமைப்புகள் யாவும் போலி நாத்திக 
அமைப்புகளே.

போலி நாத்திகனை விட, மயிலாப்பூர் சவுண்டிப் 
பார்ப்பான் எவ்வளவோ மேலான பொருள்முதல்வாதி 
என்ற தலைப்பில் அண்மையில் யாம் ஒரு கட்டுரை 
எழுதி இருந்தோம். அதை வாசகர்கள் நினைவு கூர்க.

அண்மைக்கால வரலாற்றில் நியூட்டன் அறிவியல் மன்றம் 
மட்டுமே தமிழ்நாட்டின் முதல், முழுமுதல் நாத்திக 
அமைப்பு என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. எமது அமைப்பின் 
கொள்கை அறிவியல் பொருள்முதல்வாதம் ஆகும்.
-----------------------------------------------------------------------------------------------------
கவிஞர் வைரமுத்து எழுதிய வாசகங்களுக்கு ஆதாரம்:
வைரமுத்து அவர்கள் தினமணியில் எழுதிய நடுப்பக்கக் 
கட்டுரை தேதி: 24.06.2016
இதை முதல் கமென்ட்டில் பார்க்கவும்.
****************************************************************************************************