செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

ஒரு சுயமரியாதைத் திருமணம் நடந்த போது (1930) பெரியாரியரிடம் "ஒரு தாரமிருக்கிற பொழுது மறுதாரம் கட்டலாம் என்பதுதான் சுயமரியாதை இயக்கத்தின் கொள்கையா?' என்று கேள்வி கேட்கப்பட்டது. நடத்தி வைத்த திருமணம் அவ்வாறுதான் இருந்திருக்க வேண்டும்.
இதற்கு சுற்றி வளைத்து ஏதேதோ சொல்லி விட்டு பெரியார் கடைசியில் விஷயத்திற்கு வருகிறார்.
" கல்யாணம் என்பது ஒரு மனிதனுக்கு இன்பத்தைப் பொறுத்ததே தவிர வேறு ஒன்றுமில்லை. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் வாழ்க்கையில் ஒத்து வராவிட்டால் வேறு கல்யாணம் செய்து கொள்வதில் எந்தப் பிசகும் இல்லை. அதே உரிமையைப் பெண்ணுக்கு கொடுக்கவும் ஆண் தயாராக இருக்கிறார்."
ஆஹா, எவ்வளவு தெளிவாகப் பேசுகிறார் என்றுதானே நினைக்கத் தோன்றும்?
அவரே சொல்வது போல பூனைக்குட்டி கடைசியில் வெளியே வருகிறது!
"சமீபத்தில் நகர் என்ற இடத்தில் ஒரு சுயமரியாதைக் கல்யாணம் நடந்தது. மாப்பிள்ளை கிறிஸ்தவர். கிறிஸ்துவ மதச் சட்டப்படி ஒரு மனைவியிருக்க மற்றொரு மனைவியை விவாகம் செய்து கொள்ள அனுமதியில்லை என்றாலும் அவரவர் சுதந்திரத்தை கட்டுப்படுத்தல் விரோதமாகும். எனவே அக்கல்யாணத்தைச் சிறப்பாக நடத்தி முடித்தோம். இங்கு நடைபெற்ற திருமணத்தின் தம்பதிகள் மிகச் சிறந்தவர்கள் என்பது என் கருத்து. தகுதி வாய்ந்த இத்தம்பதிகள் சிறந்து வாழ விரும்புகிறேன்"
குடிஅரசு 12. 10.1930
எப்படியிருக்கிறது கதை?
பெரியாரின் கட்டளையை சிரம் மேல் தாங்கி தங்கள் சுதந்திரத்தை கட்டுப் படுத்தாமல், பல பெண்களைத் திருமணம் செய்த பகுத்தறிவுச் சிங்கங்கள் அலைந்து கொண்டிருந்தன என்பது வரலாறு.
இதுதான் உண்மையான சுயமரியாதை.

P  A Krishnan post 27 02 2018
தேசிய அறிவியல் நாள் 2018!
விழா எடுக்கிறோம், வாருங்கள்!
-------------------------------------------------
நாள்: 28.02.2018 புதன் மாலை 6 மணி.

இடம்: சிவன் பூங்கா (Sivan Park), கே கே நகர், சென்னை 78.
( பி வி சாலை, செக்டார்-3, கே கே நகர்)
பேருந்து நிறுத்தம்: சிவன் பார்க் பஸ் ஸ்டாப் (அல்லது)
அம்மன் கோவில் பஸ் ஸ்டாப். 

நிகழ்வு: அறிவியல் பரிசோதனைகளின் விளக்கம்.
நிகழ்த்துபவர்: பேராசிரியர் என் இளங்கோவன் மற்றும்
அவரின் மாணவர்கள்.

தலைமை:  ஜார்ஜ் ஜோசப், தமிழ் மாநிலத் தலைவர்,
BREAKTHROUGH அறிவியல் கழகம்.

அறிவியல் நாள் குறித்த விளக்கவுரை:
தோழர் பி இளங்கோ சுப்பிரமணியன்
தலைவர், நியூட்டன் அறிவியல் மன்றம்.

கூட்ட ஏற்பாடு: BREAKTHROUGH அறிவியல் கழகம்.

அனைவரும் வருக!
**********************************************************


திங்கள், 26 பிப்ரவரி, 2018

உண்மை குற்றவாளிகள் தலித்தாக இருந்தாலும் கடு மையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பது நமது நிலைபாடு.
................


விழுப்புரத்தில் ஒரு நிர்பயா! பிறப்புறுப்பில் 12 தையல்கள், சிறுமி கொடூர கற்பழிப்பு, திசை திருப்பிய தலித் சாதி வெறியர்கள்.

விழுப்புரம் மாவட்டம், வேலாம்புதூர் கிராமத்தில் தலித் குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள் கொடூரமாக தாக்குதலுக்குள்ளாகியும், மகன் படுகொலை செய்யப்பட்டார்கள்.

அந்த குடும்பத்தைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். 8ம் வகுப்பு படிக்கும் பெண்ண் நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார், அப்பெண்ணின் பிறப்புறுப்பில் 12 தையல்கள் போடப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார் ஜிப்மர் மருத்துவமனையில். நிலப்பிரச்சினைக்கு 14 வயது சிறுமியை கூட்டாக கற்பழிக்கும் கொடூரத்தை நிகழ்த்தியுள்ளார்கள்.

இது டெல்லி நிர்பயாவுக்கு நடந்தது போன்ற ஒரு கொடூரம், இதை பெண்ணுக்கு எதிரான குற்றமாக தான் அணுகியிருக்க வேண்டும் (பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தானே தமிழகத்தில் புரட்சியாக கருதப்படுகிறது) இப்பெண்ணுக்கு நடந்த கோரத்தை வெளி உலகிற்கு கொண்டு வந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விவாதங்களையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் தலித் அமைப்புகள் எவிடென்ஸ் கதிர் இக்கொடூரத்தை செய்தது ஆதிக்க சாதியினர் என வன்னிய சாதியினர் மீது அவதூறு கிளப்ப இது சாதிபிரச்சினையானது.

இக்கொலை மற்றும் கற்பழிப்பு தொடர்பாக அதே காலனியை சேர்ந்த ஆலடியான்(45) மற்றும் அவனது 4 நண்பர்கள் கைது செய்யப்பட்டு காவல்துறை விசாரணையில் உள்ளனர். இச்சிறுமியை கற்பழித்த கும்பல் இவர்கள் தான். இவர்களும் தலித் சாதி தான்.

ஒரு சிறுமிக்கு எதிரான ஒரு மாபெரும் குற்றத்தை தலித் சாதி அமைப்புகள் சாதிப்பிரச்சினையாக மடை மாற்றி அந்த தலித் பெண்ணிற்கு ஏற்பட்ட அநீதியை திசை திருப்புகிறார்கள்.

குற்றத்தை குற்றமாக பார்க்கும் போக்கு முதலில் ஊடகங்கள், பொதுமக்கள், கட்சிகள், இயக்கங்கள், தலித் அமைப்புகளுக்கு ஏற்பட வேண்டும். குறிப்பாக பேஸ்புக் போராளிகள் சற்று பொறுமை காத்து பொங்கலாம்.

எல்லா குற்றங்களையும் உண்மை நிலை அறியாமல் சாதியோடு கோர்ப்பது உண்மையாக சாதிக்கொடூரம் நடைபெற்றால் அதை பிறர் நம்பாத நிலைக்கும் உண்மை குற்றத்தின் கொடூரத்தை உணர்த்தாமலும் போய்விடும். விழுப்புரம் கொலையில் உள்ளூர் சிறுத்தைகளே சைலண்ட்டாக உம்முன்னு இருக்கும் போது வெளியூர் எவிடென்ஸ் கதிரும் சென்னை சிறுத்தைகளும் இதை சாதிப்பிரச்சினையாக்க முயன்றுள்ளனர்.

இச்சிறுமிக்கு இந்நிலை ஏற்பட காரணமான கொடூர குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், டெல்லி நிர்பயா படுகொலைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்பட்டது போல இக்கொடுமை குறித்து பேசி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கடைசியாக அனைத்து குற்றங்களையும் சாதியோடு இணைத்து பதட்ட அரசியல் செய்ய முனைவது நிறுத்தப்பட வேண்டும்.

........
விழுப்புரம் சம்பவம் பற்றிய Ponnusamy Purushothaman ன் பதிவு
Manage

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

ப்ரோடோகால் மீனிங் ------------
Protocols Vs. Applications - டோக்கன் 02
=================================
இணையம் என்கிற வலைப்பின்னல் ராணுவத்திற்காகவும், அமெரிக்க பல்கலைக் கழகங்கள் இடையே பரிவர்த்தனைகளுக்காகவும் உருவான காலக் கட்டத்தில் ஏகப்பட்ட ஃப்ரோட்டோகால்கள் (Protocol) உருவாயின. எளிமையாக சொல்ல வேண்டுமெனில், ப்ரோட்டோகால் என்பதை ’மொழி’-யாக வைத்துக் கொள்ளலாம். நான் தமிழில் எழுதினால், அதே தமிழ் எழுத்துருக்களை உங்களால் படித்து நான் சொல்லும் செய்தியை புரிந்துக் கொள்ள முடியுமெனில், இங்கே தமிழ் என்பது ஒரு ப்ரோட்டோகால். அது போல, இரண்டு கணினிகளுக்கு இடையே ஒரு செய்தியோ, டேட்டாவோ, செய்கைகளோ புரிந்துக் கொள்ளப் பட வேண்டுமெனில் அதற்கு ப்ரோட்டோகால்கள் அவசியம்.
அதனால் தான் இன்றளவும் புழங்கக்கூடிய இணையம் என்பது HTTP (Hypertext Transfer Protocol) என்பதின் மீது இயங்குகிறது. எந்த ப்ரொவுசரில் இருந்தும் எந்த தளத்தினைப் பார்க்கவும் இந்த HTTP தான் அடிப்படை. ஒரு வேளை இந்த HTTP இல்லாமல் இருந்து வலைப்பின்னலை உருவாக்க வேண்டும் என்கிற சூழல் இருப்பின், ஆளாளுக்கு வெவ்வேறு விதமாக வலைப்பக்கங்களை உருவாக்கி இருக்க முடியும். ஒவ்வொன்றையும் பயன்படுத்த வெவ்வேறு ப்ரோட்டோகால்கள் தேவைப் பட்டு இருக்கும். அடிப்படையில் இணையமாக நாம் எந்த முன்யோசனையும் இல்லாமல் எடுத்துக் கொள்வது நடந்திருக்க வாய்ப்பில்லை.
அவுட்லுக்கில் இருந்து அனுப்பும் ஒரு மின்னஞ்சல், ஜிமெயிலுக்கும், அதன் ஒரு பிரதி யாஹு மின்னஞ்சலுக்கும், இன்னொன்று வடிவுடையம்மன்.காமுக்கும் போக, தனித்தனியான ப்ரோட்டோகால் வேண்டுமென்று சொன்னால் மின்னஞ்சல் என்கிற பயன்பாடே வந்திருக்காது. மின்னஞ்சல் முழுமையாக இயங்க SMTP (Simple Mail Transfer Protocol) என்கிற ப்ரோட்டோகால் 1982ல் வெளியானது. நம்முடைய அனைத்து மின்னஞ்சல்களும் இந்த ப்ரோட்டோகாலை அடிப்படையாக வைத்து தான் இயங்கிக் கொண்டு இருக்கின்றன.
அதாவது, ஒரு ப்ரோட்டோகால் ஏராளமான சிக்கல்களைத் தீர்த்து வைக்கிறது.
ஆக, ப்ரோட்டோகால்கள் நவீன தகவல் தொழில்நுட்ப உலகின் இன்றியமையாத அடிப்படை. ப்ரோட்டோகால்கள் முக்கியம். ஆனால் ப்ரோட்டோகால்களை விட அதி முக்கியம், அதன் மீது உருவாக்கப் படும் செயலிகள். வலைத்தளங்களே உருவாகாமல் இருந்திருந்தால், HTTPயால் என்ன பயன்? மின்னஞ்சலே வராமல் போய் இருந்தால் SMTP எதற்கு? ஆக, இந்த ப்ரோட்டோகால்களின் மீது உருவாக்கப்பட்ட கணக்கிலடங்கா அப்ளிகேஷன்கள் தான் நாம் இன்றைக்கு பார்த்துக் கொண்டிருக்கும் இணையத்தினை பயனுள்ளதாகவும், உலகம் முழுக்க விரவி இருப்பதாகவும் மாற்றி இருக்கிறது.
ஆனால் இந்த அப்ளிகேஷன்களை யார் தந்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது தான் நவீன உலகின் பெரிய கேள்வி. இன்றைக்கு தேடல் என்பது கிட்டத்திட்ட கூகுளின் வசத்தில் இருக்கிறது. இதை நீங்கள் படிக்கும் பேஸ்புக்கில் தான் உங்களுடைய, என்னுடைய சமூக வலை இணைப்பு மொத்தமாக பின்னப்பட்டு இருக்கிறது. ஒரு ஊபரோ, ஓலாவோ, காரீமில், க்ராப்பில் மொத்த வாடகை டாக்சிகள் என நம்முடைய பயணங்கள் நிர்ணயிக்கப் படுகின்றன. அமெசானில் இருந்தாலேயொழிய பல பொருட்கள், இருக்கிறதா என்பது கூட பல பேருக்கு தெரியாது. கொஞ்சம் கொஞ்சமாய் நாம் நம்முடைய சுயத்தினை இந்த அப்ளிகேஷன்களிலும், அதை நிர்வகிக்கும் பெருநிறுவனங்களிடமும் இழந்து விட்டோம்.
உ.தா உங்களுடைய ஜிமெயில் கணக்கும், அதன் பாஸ்வேர்டும் பேஸ்புக்கில் இல்லை. பேஸ்புக்கிற்கு என்று நீங்கள் ஒரு கணக்கினை உருவாக்குதல் அவசியம். அதே தான் நீங்கள் தினந்தோறும் பயன்படுத்தும் பல்வேறு அப்ளிகேஷன்களுக்கும். ஆக உங்களுடைய வாழ்க்கை என்பது 30-40 கணக்குகள், பாஸ்வேர்டுகள், அதை நிர்வகிக்கும் பெருநிறுவனங்கள், அவர்களின் சட்டதிட்டங்கள், அவர்கள் உள்நுழைக்கும் விளம்பரங்கள், அவர்கள் உருவாக்கும் சிந்தனைகள் என மாறிக் கொண்டிருக்கிறது. We are slowly but steadily becoming a receptive cog in these Big Tech Firms' giant wheel.
சிம்பிளாய் சொல்ல வேண்டுமெனில், அஸ்திவாரமான ப்ரோட்டோகால் மறக்கடிக்கப் பட்டு, மேலே எழும்பி இருக்கின்ற கட்டடமான அப்ளிகேஷன்களில் வாழ்க்கை ஒடுகிறது. ஆனால் வாழ்க்கையை நிலைநிறுத்த அஸ்திவாரங்கள் பலமாய் இருப்பது மிக அவசியம். அந்த ‘வீடு திரும்பல்’ தான் க்ரிப்டோவின் அடிப்படை.

1) புறாவுக்காக தன் தொடைச் சதையை அறுத்துக்
கொடுத்த சித்தார்த்தனை விடவும், வாடிய பயிரைக்
கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரை விடவும்
வேறு எவரும் கருணை மிக்கவர்களாக இருந்து விட
முடியாது.

2) இங்கு விவாதப் பொருள் தாமஸ் பாதிரியார் புரிந்த
ஆதரவற்ற முதியோர்  1590பேரின் கொலைகள் (as alleged).
கருணை இல்லம் நடத்துவது கருணை காட்டுவதற்கு
மட்டுமே. கொலைகளைப் புரிய ஒரு லைசன்சாக
கருணை இல்லத்தைக் கருதுவது தவறு.

3) தொழு நோயாளிகளைச் சுத்தப்படுத்தித் தொண்டு
செய்த தாமின் அடிகள் (Father Damian) போன்ற கருணையின்
வடிவம் அல்ல தாமஸ் பாதிரியார். அவர் நடத்துவது
கார்ப்பொரேட் கருணை இல்லம். அவரை தாமின்
அடிகளாகக் கருதுவது தவறு.

4) ஒவ்வொரு குற்றம் நடக்கும்போதும், குற்றவாளி
பிடிபடும்போதும், குற்றவாளியின் மதத்தை அல்லது
சாதியைச் சேர்ந்தவர்கள் அவனுக்கு வக்காலத்து
வாங்குவது என்ன நியாயம்? மனித மதிப்பீடுகள்
வீழ்ச்சி அடைந்து விட்ட ஒரு காலக்கட்டத்தில்
நாம் வாழ்கிறோம் என்பது வேதனையானது.     

சனி, 24 பிப்ரவரி, 2018

Occams razor

when one person suffers from a delusion it is called insanity. When many people suffer from a delusion it is called religion.
Robert Pirsig 
Author of the book Zen and the art of motor cycle maintenance.வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

சித்திர குப்தன் (பெரியார்) கேள்வி_பதில். 
கேள்வி_கடவுள் ஏன் காண முடியாதவராய் இருக்கிறார்? 
பதில்_
அவர் செய்த செய்கைக்கு யார் கண்ணிலேயும் படக்கூடாது என்று பயந்து கொண்டிருக்கிறார். 
கேள்வி. 
அவர் அப்படி பயப்படும் படியான காரியம் செய்தது என்ன?
பதில்.
ஏன் அவர் ஈ, கொசு இரண்டையும் படைத்தது போதாதா...

----------------------------------------------------
அறிவியல் திரைப்படங்களும்
திரைப்படங்களில் அறிவியலும்!
--------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
-------------------------------------------------------
இந்தப் பெண்ணின் முகம் அழகு. இந்த வாக்கியத்தில்
அழகு என்பது கருத்துப்பொருள் (abstract). கருத்துப்
பொருளை விளங்கிக் கொள்வது எளிதல்ல. ஆனால்
அதையே  ஒரு காட்சிப் பொருளால் விளக்கும்போது
மனதில் எளிதில் பதியும்.

அவளுக்கு நிலா முகம். இந்த வாக்கியத்தில் நிலா
என்பது காட்சிப் பொருள் (concrete). நிலா முகம் என்னும்போது
அழகு முகம் என்று நம் மனம் எளிதில் விளங்கிக்
கொள்கிறது.கருத்துப் பொருளான அழகு, காட்சிப்
பொருளான நிலாவால் விளக்கப் படுகையில்
புரிதல் எளிதாகிறது.

முற்காலத்தில் அறிவில் சிறந்த ஒருவரை கல்வி கேள்விகளில்
சிறந்தவர் என்று கூறுவார்கள். முற்காலம் தொட்டு அண்மைக்காலம் வரை அறிவைப் பெறும் வழிகளாக
கல்வியும் கேள்வியும் மட்டுமே இருந்து வருகின்றன.
தற்காலத்தில் நவீன அறிவியல் வளர்ச்சியின்
விளைவாக கல்வி கேள்வியுடன் காட்சியும் அறிவைப்
பெறும் வாயிலாக ஆகியுள்ளது. கல்வி கேள்வி காட்சி
ஆகிய மூன்றும் தற்காலத்தில் அறிவின் வாயில்கள்.

கேள்வி ஞானத்தை விட காட்சி ஞானம் சிறந்தது.
செவிப்பறையை விட விழித்திரை ஆற்றல் மிக்கது.
திரைப்படம், ஆவணப்படம், காணொளிகள்
(You Tube videos etc) ஆகியவற்றைப் பார்ப்பதன் மூலம்
அறிவைப் பெறுதல் எளிதாகிறது. ஒரு புத்தகத்தைப்
படித்து, அதைப் புரிந்து, அதன் சாரத்தை உட்கிரகித்தால்
மட்டுமே, அப்புத்தகம் தரும் அறிவைப் பெற முடியும்.
புத்தக வாசிப்பு என்பதில் வாசகனின் பங்கு செயலூக்கம்
உடையது (active). ஆனால், ஒரு படத்தைப் பார்த்து, அறிவைப்
பெறும் செய்கையில் வாசகனின் பங்கு செயலூக்கம்
குன்றியதாக (passive) இருந்தாலும் போதும்.

தற்காலத்தில் அறிவியல் மற்றும் அறிவியல் புனைவு
திரைப்படங்கள் அறிவு வழங்கலில் பெரும் பங்கு
வகிக்கின்றன. பத்து அறிவியல் புத்தகங்களைப் படித்துப்
பெறும் அறிவை ஒரு நல்ல அறிவியல் புனைவை
(science fiction) பார்ப்பதன் மூலம் பெற முடிகிறது.

ஹாலிவுட்டின் ஆங்கிலப் படங்கள் அறிவியலுக்கும்
அறிவியல் புனைவுக்கும் பெயர் பெற்றவை. தமிழ்ப்
படங்களில் அறிவியலோ புனைவோ அறவே இல்லை.
என்றாலும் நடிகர் கமல் ஹாசன் மட்டும் தமது படங்களில்
தொடர்ந்து அறிவியல் செய்திகளைச் சொல்லி வருகிறார்.
தசாவதாரம் படத்தில் எபோலா வைரஸ் குறித்து கமல்
குறிப்பிடுவார். இப்படம் வெளிவந்த 2008ஆம் ஆண்டில்
எபோலா வைரஸ் குறித்து தமிழ்ச் சமூகம்
அறிந்திருக்காத நிலையில் கமலின் கூற்று காலத்தை
மீறிய சிந்தனையின் வெளிப்பாடு.

உயிர் காத்த ஃபாரடே கூண்டு!
-------------------------------------------------------
கமல்ஹாசன் எழுதி இயக்கிய 2013இல் வெளிவந்த
விஸ்வரூபம் படத்தில் இங்கிலாந்து விஞ்ஞானி
மைக்கேல் ஃபாரடே (1791-1867) படத்தின் உச்சக்
காட்சியில் (climax) சிறப்பிடம்  பெற்று இருப்பார். இக் காட்சியில் ஃபாரடே கூண்டு (Faraday cage or shield)
பற்றி தீவிரமாகப் பேசப்படும். உடனடியாக
ஒரு  ஃபாரடே கூண்டு வேண்டும் என்பார் படத்தின்
நாயகி. கதைப்படி கதாநாயகி முனைவர் பட்டம் பெற்ற ஓர்  அணுக்கதிரியக்க மருத்துவ அறிஞர் (Nuclear oncologist).

ஃபாரடே கூண்டு படத்தில் வர வேண்டிய அவசியம் என்ன?
நியூயார்க் நகரில் அல்கைதா பயங்கரவாதிகள் ஒரு
கட்டிடத்தில் வெடிகுண்டு வைத்திருப்பார்கள். அமெரிக்க
காவல்துறை (FBI)  வெடிகுண்டைக் கண்டுபிடித்து
அகற்றி விடும். அதை அங்குள்ள ஒரு அறையில்
ஒரு மேஜையின் மீது வைத்து .இருப்பார்கள்.
அந்த வெடிகுண்டு சீசியம் (Caesium) என்னும் தனிமத்தால்
செய்யப்பட்டது. இந்தக் குண்டு வெடித்தால், ஒரு சிறிய
அணுகுண்டு வெடித்தது போன்ற சேதாரத்தை ஏற்படுத்தும்

அந்த வெடிகுண்டுடன் ஒரு செல் போன்
இணைக்கப்பட்டு .இருக்கும். இந்த செல்போன்தான்
வெடிகுண்டை வெடிக்க வைக்கும் கருவி (detonator) ஆகும். 
யாரேனும் ஒருவர் அந்த செல்போன் நம்பரை அழைத்து,
அந்த அழைப்பின் மணியோசை இந்த செல்போனில்
கேட்டாலே போதும் வெடிகுண்டு வெடித்து விடும்.

இந்தச் சூழலில்தான் ஃபாரடே கூண்டு  தேவைப்
படுகிறது. ஃபாரடே கூண்டு என்ன செய்யும்? வெடிகுண்டு
வெடிக்காமல் தடுக்கும். எப்படி? ஃபாரடே கூண்டால் 
வெடிகுண்டை மூடிவிட வேண்டும். வெளியில் இருந்து
வரும் எந்த ஒரு மின்காந்தத் துடிப்பையும்
(Electro Magnetic Pulse), வெடிகுண்டை அண்ட விடாமல்,
ஃபாரடே கூண்டு தடுத்து விடும்; அதாவது வெடிகுண்டுடன்
இணைக்கப் பட்டுள்ள செல்போனுக்கு எந்த  சிக்னலும் வராமல்
தடுத்து விடும். இப்படி குண்டு வெடிக்காமல் தடுத்து
விட முடியும்.

அங்கிருந்த பலரில் ஒருவருக்குக் கூட நிகழவிருக்கும்
பேராபத்தைத் தடுப்பதற்கான வழி பற்றித்  
தெரியாது, கதாநாயகி டாக்டர் நிருபமாவைத் தவிர.
எனவே அவர் உடனடியாக ஃபாரடே கூண்டு வேண்டுமென்று கேட்பார். அது வரும் வரை காத்திருக்க முடியாது என்பதால்,
அந்த அறையில் உள்ள ஏதாவது ஒன்று ஃபாரடே கூண்டு
போன்று பயன்படுமா என்று சுற்றுமுற்றும்
பார்ப்பார் கதாநாயகி.

என்ன ஆச்சரியம்! அவருக்கு ஒரு ஃபாரடே கூண்டு 
கிடைத்து விடும். அங்கு ஒரு மைக்ரோவேவ்
ஓவன் (microwave oven), அதாவது நுண்ணலை அடுப்பு எரிந்து
கொண்டு இருக்கும். அந்த ஓவனின் வெளிப்புறப் 
பகுதியை (outer case) எடுத்து வெடிகுண்டை
மூடி விடுவார் நிருபமா. மைக்ரோவேவ் ஓவன்
என்பது உண்மையில் ஒரு ஃபாரடே கூண்டு ஆகும்.
(Every micro wave oven is a Faraday cage), இதன் மூலம் வெடிகுண்டு
வெடிப்பதை வெற்றிகரமாகத் தடுத்து விடுவார்.

சரி, ஃபாரடே கூண்டு (Faraday shield or cage) என்றால்
என்ன? இந்தக் கூண்டால் ஒரு பொருளை மூடிவிட்டால்,
கூண்டுக்கு வெளியில் இருந்து வரும் எந்தவொரு
மின்காந்தத் துடிப்பும் கூண்டுக்குள் இருக்கும்
பொருளை அணுக இயலாது. இதை மைக்கேல்
ஃபாரடே 1836இல் கண்டு பிடித்தார்.

1. ஃபாரடே கூண்டு  2. மைக்ரோவேவ் ஓவன் 
3.கதிரியக்கத் தனிமமான சீசியம்
4. கதிரியக்கத்தால் விளையும் நோய்க்கான
மருத்துவம் (nuclear oncology) என்று ஆழமான அறிவியல்
செய்திகளை ஒன்றாகத் திரட்டி சில நிமிடக் காட்சியில்
வைத்த கமலஹாசனின் மேதைமை அறிவியலுக்கு
ஒப்பற்ற பணியை ஆற்றி உள்ளது.

மெதுவாய்ச் செல்லும் காலம்!
---------------------------------------------------
ஹாலிவுட் திரைப்பட இயக்குனர் கிறிஸ்டோபர்
நோலன் (Christopher Nolan) உலகப் புகழ் பெற்ற இயக்குனர்..
அவர் ஒரு பல்கலைக் கழகத்திற்குச் சமமானவர்.
2014 இறுதியில் வெளியான அவரின் இன்டெர் ஸ்டெல்லார்
(Interstellar) திரைப்படம் அற்புதமானது. உலக வரலாற்றில்
இதுவரை இப்படி ஒரு படம் எடுக்கப் பட்டதில்லை.

இன்டெர் ஸ்டெல்லார் ஒரு அறிவியல் புனைவு.
(science fiction) ஐன்ஸ்டினின் சார்பியல் கொள்கையை 
அற்புதமாக விளக்கும் படம் அது.  ஈர்ப்பு அலைகளைக்
கண்டறிந்தமைக்காக 2017ஆம் ஆண்டிற்கான 
இயற்பியல் நோபல் பரிசைப்  பெற்ற கிப் தோர்னே
(Kip Thorne) இப்படத்தின்  அறிவியல் ஆலோசகர்.
இப்படத்தைப் பார்ப்பதும்  சார்பியலில்  ஒரு
சான்றிதழ் படிப்பு (certificate course) படித்து முடிப்பதும் சமமே.

படத்தின் உச்சக் காட்சி (climax) காவியத் தன்மை
வாய்ந்தது. மகள் 10 வயதுச் சிறுமியாக இருந்தபோது,
அவளைப் பிரிந்து தந்தை விண்வெளிக்குப் போவார்.
பல ஆண்டுகள் கழித்து விண்வெளிப்பயணம்
முடிந்து, தந்தை திரும்பி வருவார். இதற்குள்
திருமணமாகி,  குழந்தை குட்டிகள் பெற்று 
பேரன் பேத்திகளையம் எடுத்திருப்பாள் மகள்.
முதுமையால் உடல் தளர்ந்து மரணத் தருவாயில்
இருப்பாள் மகள். பேரன் பேத்திகள் எல்லாம்
சாகப் போகும் பாட்டியைச் சுற்றி நிற்பார்கள்.

அப்போது தந்தை மகளைப் பார்க்க வருவார்.
விண்வெளியில் இருந்ததாலும், ஒளியின் வேகத்தில்
பயணம் செய்ததாலும் தந்தைக்கு வயதாகி
இருக்காது. விண்வெளிக்குப் புறப்படும்போது
35 வயது என்றால், இப்போது திரும்பி வந்த பிறகு,
வயதில் பெரிய மாற்றம் இருக்காது. ஆனால் மகளோ
பூமியில் இருந்ததால் பாட்டியாகி 80 வயதுடன்
இருப்பாள். மகளுக்கும் தந்தைக்கும் ஒரு சிறிய
உரையாடல் நடக்கும். அழகியலின் உச்சம் தொட்ட
உரையாடல் அது.

இன்று HBO போன்ற ஆங்கில சானல்கள்       
அநேகமாக இப்படத்தை  2 அல்லது 3 மாதங்களுக்கு
ஒருமுறை ஒளிபரப்புகின்றன. வீட்டில் நாற்காலியில்
அமர்ந்து கொண்டு, வேறு வேலையையும்
பார்த்துக் கொண்டு இந்தப் படத்தைப் பார்க்கலாம்
பத்துப் பைசா செலவில்லாமல். 

கிறிஸ்டோபர் நோலனின்  பிற படங்களில்
ஒன்றுக்கொன்று தொடர்ச்சியான பின்வரும் மூன்று
படங்களும் குறிப்பிடத் தக்கவை.
1.Batman Begins 2.Dark Knight 3. Dark knight rises ஆகிய தொடர்ச்சியான மூன்றில், 2008இல் வெளிவந்த Dark knight படத்தில் விளையாட்டுக் கொள்கை (game theory) மிகச் சிறப்பாகக்
காட்சிப் படுத்தப் பட்டுள்ளது. 

2010இல் வெளியான  நோலனின் புகழ்பெற்ற இன்செப்ஷன் (Inception) படத்தில் நரம்பியல் உளவியல் சிக்கல்களும் கனவுகளும் நுட்பமாகச் சித்தரிக்கப் பட்டுள்ளன.ஒருவனின்
ஆழ்மனத்திற்குள் (sub conscious mind) நுழைந்து அங்கு
ஒளிந்திருக்கும் ரகசியங்களை அறிந்து கொள்வது
இப்படத்தில் காட்டப் பட்டுள்ளது.

புகழ்பெற்ற பிற திரைப்படங்கள்!
-----------------------------------------------------
2013இல் வெளிவந்த அல்போன்சா கியூரான் இயக்கிய
கிராவிட்டி (Gravity) படமும் உலகெங்கும் போற்றப்பட்ட
ஒரு படமாகும். விண்வெளிப் பயணத்தின்போது,
விண்கலத்தின் சுற்றுப்பாதை சிதைந்து விட்டதால்
விண்வெளியில் வழிதவறிப்போன அமெரிக்க விண்வெளி
வீரர்கள் பூமிக்குத் திரும்பும் முயற்சியை விவரிக்கும்
அறிவியல் புனைவே கிராவிட்டி படமாகும்.

மேலும் வாச்சோவ்ஸ்கி சகோதரர்கள் (Wachowski brothers)
இயக்கிய  1999இல் வெளிவந்த மேட்ரிக்ஸ் (The Matrix)
படமும் மிகவும் விரும்பிப் பார்க்கப்பட்ட படமாகும். கணினிகளுக்கும் மனிதர்களுக்கும்  நடக்கும் போரை
விவரிக்கும் புனைவு இது. இப்படத்தின் வெற்றியைத்
தொடர்ந்து இதன் தொடர்ச்சியாக The matrix reloaded,
The matrix revolutions ஆகிய இரண்டு படங்களும் எடுக்கப்பட்டன.

2014இல் ஆஸ்திரேலியாவில் எடுக்கப்பட்ட ஆங்கிலத்
திரைப்படம் ப்ரிடெஸ்டினேஷன் (Predestination). காலப்
பயணத்தை (time travel) விவரிக்கும் புனைவு இது.
ஸ்பிரிக் சகோதரர்கள் (The Spierig brothers) இப்படத்தை
இயக்கினர். நிகழ்காலத்தில் இருந்து கொண்டு
இறந்த காலத்திற்குச் செல்வதையம் அதனால் ஏற்படும் விளைவுகளையும் விவரிக்கும் படம் இது.

இங்கிலாந்தில் பிறந்து இலங்கையில் வாழ்ந்த 
ஆர்தர் கிளார்க் (Arthur C Clarke 1919-2008) ஓர் அறிவியல் 
எழுத்தாளர். இவர் அறிவியல் புனைவு எழுத்தாளரும்கூட.
இவரின் ஒரு நாவல் 2001: A space Odyssey. இதைத் தொடர்ந்து  
"2010: Odyssey Two".என்ற நாவலையும் எழுதினார்.

இந்த நாவலைப் பின்பற்றி ஒரு ஆங்கிலத்
திரைப்படம் எடுக்கப் பட்டது. அதன் பெயர்:
"2010: The year we make contact" ஆகும். இப்படத்தை
இயக்கியவர்  பீட்டர் ஹைமஸ் (Peter Hyams).

2001இல் அமெரிக்கா "டிஸ்கவரி ஒன்று" என்ற 
விண்கலத்தை வியாழனுக்கு அனுப்பியது. அதன்
கதி என்னவென்று தெரியவில்லை. அதில் சென்ற விண்வெளியாளர்களில் (astronauts) 4 பேர் இறந்து
விட்டனர் என்று செய்தி கிடைக்கிறது.

எனவே அதைக் கண்டறிந்து மீட்க அமெரிக்காவும்
சோவியத் ஒன்றியமும் தனித்தனியாக
விண்கலன்களை அனுப்புகின்றன. வியாழனை
விண்கலன் அடைந்தபோது, வியாழனில் உயிர்
இருப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.
இப்படிப் போகிறது கதை. மீதியை வெள்ளித்
திரையில் காணவும்.

சதுரங்கம் முற்றிலும் கணிதமே!
---------------------------------------------------------
1972இல் எங்கள் கல்லூரிக் காலத்தில், சதுரங்க
உலகில் பெரும் செல்வாக்குடன் இருந்தவர்கள்
இரண்டு பேர். ஒருவர் பாபி ஃபிஷர்; இன்னொருவர்
போரிஸ் ஸ்பாஸ்கி. பாபி ஃபிஷர் அமெரிக்கர்.
ஸ்பாஸ்கி சோவியத் ஒன்றிய (ரஷ்யா) நாட்டவர்.

1972இல் சதுரங்க உலக சாம்பியன் போட்டி
ஐஸ்லாந்து ரெய்க்ஜெவிக் நகரில் நடைபெற்றது.
சாம்பியன் ஸ்பாஸ்கி; சாலஞ்சர் பாபி பிஷர்.

மொத்தம் 24 ஆட்டங்கள்; யார் முதலில் 12.5 புள்ளிகள்
பெருகிறாரோ அவருக்கே வெற்றி. இதுதான் உலக
சதுரங்க சம்மேளனம் (FIDE) நிர்ணயித்த போட்டியின் விதி.
1948 முதல் உலக சதுரங்க சாம்பியனாக சோவியத்தே
இருந்து வந்தது. ஆனாலும், சோவியத்தின் இந்த 
கால் நூற்றாண்டு கால வையத் தலைமையை
பாபி ஃபிஷர் தகர்த்து விட்டார். ஆம், ஸ்பாஸ்கியைத்
தோற்கடித்து, ஃபிஷர் உலக சாம்பியன் ஆனார்.
( ஃபிஷர்= 12.5; ஸ்பாஸ்கி= 8.5)

மாஸ்கோ விமான நிலையத்தில் வந்து இறங்கிய
ஸ்பாஸ்கியை வரவேற்க நாதியில்லை. சோவியத்
ஒன்றியத்தில் சதுரங்கம் என்பது வெறும்
விளையாட்டல்ல. அது சோவியத்தின் பெருமை.
அது சோவியத்தின் அரசியல். அதைப் பறிகொடுத்த
ஸ்பாஸ்கி சோவியத் அரசால் வெறுக்கப் பட்டதில்
வியப்பில்லை.

சதுரங்கப் பலியாடுகள் (Pawn Sacrifice) என்ற 
அமெரிக்கப் படம் 2014இல் வெளிவந்தது. ஃபிஷரின்  
வாழ்க்கை வரலாற்றை விளக்கும் படம் இது. ஃபிஷர், ஸ்பாஸ்கி இருவரின் உலக சாம்பியன் ஆட்டங்கள் படத்தில் சிறப்பாகக் காட்டப் படுகின்றன.

முற்றிலும் கணித விதிகளுக்கு உட்பட்ட விளையாட்டு 
சதுரங்கம் என்பதால், இப்படம் ஒரு வாழ்க்கை வரலாறு 
(biography) என்ற போதிலும் இதுவும் அறிவியல் படமாக 
வகைப்படுத்தத் தக்கது.

கணிதமேதைகளின் வாழ்க்கை வரலாறுகள்!
---------------------------------------------------------------------------------
நோபல் பரிசு ஏபெல் பரிசு இரண்டையும் வென்ற 
அமெரிக்கக் கணித மேதை ஜான் நாஷின் (John Forbes Nash Jr
1928-2015) வாழ்க்கை வரலாறு A beautiful mind என்ற பெயரில் 
படமானது. 2001இல் வெளியான இந்த அமெரிக்கப் படத்தை ரான் ஹாவர்டு இயக்கியுள்ளார்.

இந்தியக் கணிதமேதை ராமானுஜனின் வாழ்க்கை 
வரலாற்றை விளக்கும் பிரிட்டிஷ் திரைப்படம் 
The man who knew infinity என்பது. 2015இல் வெளியான 
இந்த ஆங்கிலப்படத்தை மாத்யூ பிரௌன் இயக்கியுள்ளார். 

தமிழிலும் ராமானுஜனின் வாழ்க்கை வரலாறு 
ராமானுஜன் என்ற பெயரில் படமாகி உள்ளது.
ஜூலை 2014இல் வெளிவந்த இப்படத்தை பிரபல 
இயக்குனர் ஞானசேகரன் இயக்கி உள்ளார்.

மேற்கூறிய மூன்று படங்களும் கணித மேதைகளின் 
வாழ்க்கை வரலாற்றைக் கூறுவதால் இவையும் 
அறிவியல் படங்களே ஆகும்.

கற்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் கடினமானது 
அறிவியல் என்ற கருத்தை உடைத்து நொறுக்கி 
அறிவியல் கற்பதை இன்பமான நிகழ்வாக 
மாற்ற வல்லவை இக்கட்டுரை கூறும் திரைப்படங்கள்.
அறிவியல் படங்கள் என்ற பட்டியல் மிகவும் 
நீண்டது. விரிவஞ்சி அவை அனைத்தும் இங்கு 
தரப்படவில்லை. கூறப்பட்ட படங்கள் மிகுதியும் 
அண்மைக் காலத்தவை. அறிவியல் ஆர்வலர்களுக்கு 
மட்டுமல்ல ஏனையோருக்கும் இவை கண்டிப்பாகப் 
பார்க்க வேண்டிய படங்களே (must watch movies).

மேற்கூறிய படங்கள் அனைத்தையும் யூ டியூபில்
இலவசமாகப் பார்க்கலாம்.
*********************************************************** 
    


வியாழன், 22 பிப்ரவரி, 2018

மையமா மய்யமா எது சரி?
-----------------------------------------------
மையம் என்பதே சரியானது. மய்யம் என்பது
கடுமையான பிழை. இந்தப் பிழையின் தோற்றுவாய்
பெரியாரிடம் உள்ளது. அவர் தமிழின் 12 உயிர்
எழுத்துக்களை 10 ஆகக் குறைக்க வேண்டும் என்றார்.
ஐ, ஒள ஆகிய இரண்டு உயிர்களை நீக்க வேண்டும்
என்றார். நீக்க இயலாது என்று அனுபவத்தில்
உணர்ந்தார். என்றாலும் தம்மைத் திருத்திக்
கொள்ளவில்லை.
**
தேவநேயப் பாவாணர், பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட
பல்வேறு தமிழறிஞர்கள் பெரியாரின் சீர்திருத்தம்
என்ற பெயரிலான இந்தக் கோமாளித்தனத்தைக்
கடுமையாக எதிர்த்தார்கள்.
**
பெரியார் கூறியபடி எழுதினால், கை மை என்பனவற்றை
கய், மய் என்று எழுத வேண்டும்.
தலை சிலை விலை என்பனவற்றை தலய், சிலய், விலய்
என்றே எழுத வேண்டும். இப்படி எழுத இயலாது.
இதையும் பின்னர் உணர்ந்தார் பெரியார். ஆனாலும்
தமது அபத்தத்தைக் கைவிட மறுத்தார்.
**
இலக்கணமே தெரியாத சிலர், மய்யம் என்பது
இலக்கணப் போலி என்று கூறி, சப்பைக்கட்டு
கட்ட முயல்கின்றனர். மையல் என்பதை பண்டைய
இலக்கியம் சில நேரங்களில், செய்யுளில், மயல்
என்று வழங்கும். இது இலக்கணப் போலி ஆகும்.
ஆனால் மையம் என்பதை மய்யம் என்று எழுதுவது
இலக்கணப் போலியன்று. போலியாயின் மயம்
என்றல்லவா எழுத வேண்டும். மய்யம் என்பது எங்ஙனம்
போலியாகும்?
**
குட்டி முதலாளித்துவம் பிறரிடம் இருந்து தன்னை
வேறுபடுத்திக் காட்ட விரும்பும். எதையும்
வித்தியாசமாகச் செய்ய விரும்பும். அதன் மூலம்
பிரமிப்பை ஏற்படுத்த முயலும். குட்டி முதலாளித்துவ
கமலஹாசன் பெரியாரின் மய்யம் என்ற சொல்லைப்
பார்த்தார். அது அவரைக் கவர்ந்தது. எனவே தாம்
நடத்திய சிற்றிதழுக்கு மய்யம் என்று பெயரிட்டார்.
இத்தகைய பயன்பாடு தவறு என்று பலரும்
உணர்ந்து திருந்தி விட்டனர். ஆனால் கமல் இன்னும்
உணரவில்லை. உணர்ந்தால்  நாணுவார். 
----------------------------------------------------------------------------------             

குழூஉக்குறி என்பது மொழியின் பொதுச்சொல் ஆகாது.
--------------------------------------------------------------------------------------------------
பிணம் (அல்லது சவம்) என்ற பொருளைத் தரும்
ஒரு சொல்லன்று மய்யம் என்பது. மய்யம் என்பது
இப்பொருளைத் தருமானால். தமிழ் இலக்கணப்படி,
அது குழூஉக்குறி ஆகும். ஒரு குறிப்பிட்ட  குழுவினர்
ஒரு குறிப்பிட்ட பொருளில் தங்களுக்குள் மட்டும்
பயன்படுத்தும் சொல் குழூஉக்குறி ஆகும்.

,எடுத்துக்காட்டாக. பொற்கொல்லர் தங்கத்தை
"பறி"என்று சொல்லுவர். இது குழூஉக்குறி ஆகும்.
அது போலவே, இசுலாமியர் மய்யம் என்பதை
பிணம் என்ற பொருளில் வழங்குவார்கள் என்றால்,
அது குழூஉக்குறி ஆகுமே அன்றி தமிழின்
பொதுச்சொல் ஆகாது; வட்டார வழக்கும் ஆகாது.

தற்காலத்தில் கல்லூரி மாணவிகள், குடைச்சல்
கொடுக்கும் சக மாணவனை குர்குரே என்று
குறிப்பிடுவர். ஈண்டு குர்குரே என்பது குழூஉக்குறி
ஆகும். ஒருபோதும் குர்குரே என்பது தமிழ்ச்சொல் 
ஆகாது. அதுபோலவே பிணம் என்ற பொருளில்
வழங்கப்படும் மய்யம் என்பதுவும். 
       
    


Friday, 28 April 2017


வெறும் இராமசாமி ஈ.வே.ரா - பெருஞ்சித்திரனார் கட்டுரை

வெறும் இராமசாமி ஈ.வே.ரா
- பெருஞ்சித்திரனார் கட்டுரை
ஈ.வே.ரா 1965 மொழிப்போரில் இருந்து தொடர்ந்து வெளியிட்டு வந்த தமிழ் எதிர்ப்பு கருத்துகளைக் கண்டு சினமடைந்த பெருஞ்சித்திரனார் பதிலடியாக எழுதிய கட்டுரரையின் முக்கிய வரிகள் கீழே,
"கடந்த மாதம் 16-ஆம் பக்கல் அன்று 'விடுதலை'யில்  ‘தமிழ்’ என்ற தலைப்பில் பெரியார் ஈ.வே.இராமசாமி அவர்கள் எழுதிய கட்டுரை கண்டு மிகவும் வருந்தினோம்.
அண்மையில் நடந்த தேர்தலில் தம் மண்டையில் விழுந்த அடியால் பெரியார் மூளை குழம்பிப் பிதற்றியுள்ளதாகவே நம்மைக் கருதச் செய்தது அக்கட்டுரை.
அவர் சிற்சில வேளைகளில் எழுதும் அல்லது கூறும் இத்தகைய கருத்துகள் தமிழ் மக்களுக்கிடையில் அவருக்குள்ள மதிப்பை அவர் கெடுத்துக் கொள்ளத்தான் பயன்பட்டிருக்கின்றனவே அன்றி,
அவர் உறுதியாகக் கடைப்பிடித்து வரும் பொதுமைக் கொள்கையை வளர்த்துள்ளதாகத் தெரியவில்லை.
கடந்த சில ஆண்டுகளாகவே அவர் எல்லாருடைய வெறுப்புக்கும் கசப்புக்கும் ஆளாகி வருவதற்கும்,
அவருக்குத் துணையாக நின்று பணியாற்றிய பலரும் விலகி போய்க் கொண்டிருப்பதற்கும் அவரின் இத்தகைய மூளை குழப்பமான கருத்துகளை அவ்வப்பொழுது அவிழ்த்து விட்டுக் கொண்டிருப்பதுதான் பெருங்காரணம்.
இந்தத் தேர்தலில் காமராசர் ஒருவர்க்காகத், தாம் மனமார ஆரிய அடிமை, பொதுநலப் பகைவன் என்று கருதிய பக்தவத்சலம் போன்றவர்களைக் கூட கைதூக்கிவிட எப்படித் தம் மானத்தையும் பகுத்தறிவையும் அடகு வைத்துப் பேசிக் கொண்டு திரிந்தாரோ ,
அப்படியே இதுபோன்ற கருத்துகளை முன்பின் விளைவுகளை எண்ணிப்பாராமல் வெளிப்படுத்துவதும் அவர் இயல்பு.
ஆனால் அவர் போன்று இல்லாமல் நாம் எந்நிலையிலும் அஞ்சாமை , அறிவுடைமை, நேர்மை இவற்றின் அடிப்படையில் உண்மையை உண்மை என்றும், பொய்மையைப் பொய்யென்றும் துணிந்து கூறிவருவதால் அவரைப் பற்றிய சிலவற்றையும் நாம் ஈண்டுக் கூற நேர்ந்தமைக்காக மிகவும் வருந்துகிறோம்.
அவரைப்போல் இரங்கத்தக்க நிலையில் இருந்து கொண்டு நாம் இதைக் கூறவில்லை.
தமிழ் மொழியைப் பற்றிய பெரியாரின் கருத்தும் குமுகாயத் தொண்டைப்பற்றிப் பக்தவத்சலம் பேசும் கருத்தும் ஏறத்தாழ ஒன்றுதான்.
பக்தவத்சலம் ஆரிய அடிமை.
பெரியார் திராவிட அடிமை.
இன்னுஞ் சொன்னால் குமுகாய அமைப்பில் இராசாசியால் எப்படித் தமிழர் இனம் அழிகின்றதாக இவர் கூறுகின்றாரோ,
அப்படியே மொழியியல் துறையில் தமிழ் வளர்ச்சிக்கு இவர் இராசாசியாகவே இருக்கின்றார்.
இவர் பற்றி “திரு.வி.க.” அவர்கள் கூறியதாக ஒரு நிகழ்ச்சி சொல்லப்படுகிறது.
ஒருகால் தமிழறிஞர் பா.வே.மாணிக்கம் (நாயக்கர்) , திரு.வி.க., ஈ.வே.ரா. மூவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்களாம்.
அக்கால் திரு.வி.க. இவரிடம்
“ஏன், ஐயா ‘திராவிட நாடு திராவிடருக்கே’ என்று கூறுகின்றீர்களே!
அதை விட்டுத் ‘தமிழ் நாடு தமிழருக்கே’ என்று கூறினால் நாங்களும் உங்களோடு இணைந்து கொள்ளுவோமே”
என்று கூறினாராம்.
அப்பொழுது பா.வே.மாணிக்க (நாயக்கர்) அவர்களும் திரு.வி.க. கருத்தே சரி என்று கூறினாராம்.
சிறிதுநேரம் கழித்துத் திரு.வி.க. எழுந்து போய் மீண்டும் வந்தாராம்.
அவர் வருவதற்குள் ஈ.வே.ரா., பா.வே.மாணிக்க (நாயக்கர்) அவர்களிடம்,
“ஏன் ஐயா, நீங்களும் அவரோடு சேர்ந்து கொண்டு 'தமிழ் நாடு தமிழருக்கே' என்று கூப்பாடு போடச் சொல்கிறீர்களே,
அப்படியே தமிழ்நாடு கிடைத்தால் அதில் உங்களுக்கும் எனக்கும் எப்படி ஐயா இடமிருக்கும்?
முதலில் நம்மையன்றோ தெலுங்கு நாட்டிற்கும் கன்னட நாட்டிற்கும் ஓடச் சொல்லுவார்கள்.
இது தெரியாமல் நீங்களும் பேசுகின்றீர்களே”
என்று கூறினாராம்.
பா.வே.மாணிக்கம் அவர்கள் உண்மையான தமிழ்த் தொண்டாரனதால் அதைப்பற்றி ஒன்றும் கருத்துக் கூறவில்லையாம்.
இந்நிகழ்ச்சி தொடக்கத்தில் பெரியாரின் உட்கோள் எவ்வாறு இருந்தது என்பதற்கோர் எடுத்துக்காட்டு.
இதனை இங்கு ஏன் வெளிப்படுத்தினோம் எனில்,
பெரியார்க்குத் தமிழ் பற்றிய எண்ணமும் எந்த அளவில் இருந்தது, இருக்கின்றது என்பதைப் புலப்படுத்தவே ஆகும்.
ஆனால் திராவிட நாட்டுப் பிரிவினைக் கொள்கையை இப்பொழுது இவரும் வற்புறுத்துவதில்லை.
தமிழ் நாடு பிரியவேண்டும் என்பதுதான் இப்பொழுது இவர் கொள்கையாக இருக்கின்றது.
திராவிட முன்னேற்றக் கழகத்தினராவது திராவிட நாட்டுப் பிரிவினைக் கொள்கையைக் கைவிட்டு விட்டதாக வெளிப்படையாகவே அறிவித்துவிட்டனர்.
ஆனால் இவரோ தம் திராவிட நாட்டுக் கொள்கையை மக்கள் உணராதவாறு சிறிது சிறிதாகப் பேச்சிலும் எழுத்திலும் கைநழுவவிட்டதுடன் தமிழ்நாட்டுப் பிரிவினைக் கொள்கையைச் சிறிதுசிறிதாக கைக்கொண்டும் விட்டார்.
இவர்தம் நாளிதழான “விடுதலை”யில் முன்பெல்லாம் தலைமுகத்துப் பொறித்து வந்த “திராவிட நாடு திராவிடர்க்கே” என்ற வேண்டுரை இப்பொழுது எடுபட்டுப் போய்விட்டது.
இவரைப் பின்பற்றும் அன்பர்களும் காலத்திற்குக் காலம் மாறுபட்டவர்கள்.
ஆகையால், அதுபற்றி ஒருவரும் கவலைப்பட்டதாகவே காட்டிக்கொள்ளவில்லை.
இவர் அரசியல் வீழ்ச்சி இப்படியாக முடிந்துவிட்டாலும் குமுகாயப் போராட்டத்தில் இவர் நல்ல வெற்றி கண்டுள்ளார்.
தூங்கிக் கொண்டிருந்த தமிழர்களைத் தட்டியெழுப்பித் தன்மான உணர்வை ஊட்டிய தொண்டிற்குத் தமிழர்கள் என்றும் கடமைப்பட்டவர்கள்.
இத்துறையில் இவர் கண்ட வெற்றியே தமிழ்த் துறையிலும் இவரைப் இப்படிப் பேசச் செய்திருக்கிறது. //
// பாவாணர் ஒருகால் தாம் எழுதிய ஓர் அரிய ஆராய்ச்சி நூலை அச்சிட இவர் உதவி கேட்டார்.
இவரோ “பண உதவி ஏதும் செய்யமுடியாது;
வேண்டுமானால் அதை எப்படியாகிலும் அச்சிட்டுக் கொண்டு வாருங்கள்;
நான் விற்றுத் தருகின்றேன்.”
என்று கூறினாராம்.
பாவாணர் அவர்களும் அதை மெய்யென்று நம்பி, தம் துணைவியார் கழுத்தில் கிடந்த பொன்தொடரியை விற்று அதை அச்சிட்டுக் கொண்டு போய், விற்றுக் கொடுக்க கேட்டாராம்.
பெரியார் இரண்டு மூன்று உரூபா மதிக்கப்பெறும் அந்நூலை நாண்கணா மேனி விலைக்குக் கேட்டாராம்.
இதுபோன்ற நிகழ்ச்சிகள் நிறைய உள.
பகுத்தறிவுக் கொவ்வாத பழங்கொள்கைகளைப் பேசித் திரியும் பத்தாம் பசலித் தமிழ்ப் புலவர்களை வேண்டுமானால் இவர் வெறுக்கலாம்.
அவர்களை நாமும் பாராட்டுவதில்லை .
அவர்களால் தமிழ்மொழிக்கு என்றும் கேடுதான்.
ஆனால் தமிழ்ப் பற்றும் , தமிழ்நாட்டுப் பற்றும் தமிழர் முன்னேற்றமுமே தலையாகக் கொண்ட மறைமலையடிகள், திரு.வி.க., பாவாணர் போன்ற மெய்த்தொண்டர்களுக்கும் பேரறிஞர்களுக்கும் , இவர்தம் பகுத்தறிவு கொள்கைகளையே ஆயிரக்கணக்கான தமிழ்ப் பாடல்களாக வடித்தெடுத்த பாவேந்தர் பாரதிதாசன் அவர்களுக்கும் இவர் உதவாதிருந்த காரணமென்ன?
உ.வே.சா. , நா.கதிரைவேல் போன்றவர்களை இவர் மதிக்காமற் போனாலும் பாவாணர், பாரதிதாசன், இலக்குவனார் போன்றவர்களைக் கண்ணெடுத்தும் இவர் பார்க்காமல் போனதற்கும் அந்தத் தமிழ்தான் காரணமோ?
ஆம்; தமிழ்தான் காரணமென்றால் அந்தத் தமிழ் மொழியைத் தம் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்கள் பால் மட்டும் எப்படி முழு கருத்துக் கொண்டு இவர் தொண்டாற்றிவிட முடியும்?
உ.வே.சா. , இவரைப் ‘பிரபு’ வாக மதிக்கவில்லை என்று இவருக்குத் தமிழைப் பிடிக்காமற் போனால்,
இவரைத் தம் தெய்வமாக கருதிய பாவேந்தருக்காக , தமிழ்மொழி மேல் இவருக்கு ஆராக் காதலன்றோ ஏற்பட்டிருக்கவேண்டும்? //
//தமிழில் என்ன இருக்கின்றது? என்று இவர் கேட்கும் வெறுப்புக் கொள்கை ( Cynicism) தான் இவர் காணும் பகுத்தறிவு என்றால் அப்பகுத்தறிவு நமக்கு வேண்டுவதில்லை. உலகில் உள்ள மாந்த மீமிசைக் (Supernal) கொள்கைக்கு வழிகாட்டாத இவர் குமுகாய அமைப்பு நமக்குத் தேவையில்லை.//
// தமிழ் மொழியில் உள்ள திருக்குறளைப் போன்றதோர் அறநூலும் ,
சிலப்பதிகாரம் போன்றதோர் இசை நூலும்,
புறநானூறு போன்றதொரு மற (வீர) நூலும் ,
மணிமேகலை பெருங்கதை போன்றதொரு துறவு நூலும் ,
அகநானூறு குறுந்தொகை போன்றதொரு காதல் நூலும் ,
திருமந்திரம் போன்றதொரு மெய்யறிவு நூலும்,
திருவாசகம் போன்றதொரு வழிபாட்டு நூலும் உலகில் வேறெந்த நாட்டிலும் வேறெந்த மொழியிலும் வேறெந்த மக்களிடையேயும் காண்பது அரிது என்பது நூற்றுக்கணக்கான மேனாட்டுப் பல்துறை அறிஞர்கள் எல்லாரும் ஒருமுகமாக ஒப்புக் கொண்ட பேருண்மையாகும்.
// இவர் அரசியல்காரர்;
அல்லது குமுகாயச் சீர்திருத்தக்காரராக விருக்கலாம்; ஆனால் ஒரு மொழிப் பேராசிரியராகவோ ,
வரலாற்றுப் பேராசிரியராகவோ,
மக்களியல் பேராசிரியராகவோ , ஆகிவிட முடியாது.
அவர் கூறியிருக்கின்ற தமிழைப் பற்றிய கருத்துகள் தம்மை ஒரு மொழிப் பேராசிரியராக எண்ணிக் கொண்டு கூறிய கருத்துகளாகும்.//
// மொழித்துறையைப் பொறுத்தவரையில் – இவர் வெறும் இராமசாமி தான்.
இவ்விருபதாம் நூற்றாண்டில் வாழ்கின்றார் என்பதற்காகவே வள்ளுவரை விட , தொல்காப்பியரை விட , திருமூலரை விட , கபிலரை விட , இளங்கோவை விட , முதிர்ந்த அறிவின் ஆகிவிடார்.//
// ஈ.வே.இரா. ஒரு குமுகாய சீர்திருத்தக்காரர்;
பகுத்தறிவு வழிகாட்டி;
அவர் ஒரு பேராசிரியரோ அறிவியல் வல்லுநரோ அல்லர். "
_ பாவலேறு பெருஞ்சித்தரனார்
தென்மொழி ஏடு,
1967ஆம் ஆண்டு ஏப்ரல் மாத இதழ்,
தலைப்பு “பெரியாரின் தமிழ் ஆராய்ச்சி”.
நன்றி: tamilthesiyan.wordpress
சிலர் பெருஞ்சித்திரனார் எழுதிய தொண்டு செய்து பழுத்த பழம்' என்ற பாடலை வைத்துக்கொண்டு ஏதோ அவருக்கு ஈ.வே.ராதான் வழிகாட்டி என்பது போல எழுதுகிறார்கள்.
ஈ.வே.ராவின் சாயம் வெளுத்த பிறகு பாவலேறு, பாரதிதாசன், பாவாணர் ஆகியோர் பிற்காலத்தில் அவருக்கு எதிராக எழுதியதை இருட்டடிப்பு செய்ய நினைக்கிறார்கள்.
அது இனி நடக்காது.

புதன், 21 பிப்ரவரி, 2018

அறிவியல் திரைப்படங்களும் தொகுப்பு
----------------------------------------------------------------------------------------------------------------
HBO சானலில் கிறிஸ்டோபர் நோலனின்
DARK KNIGHT படத்தை தற்போது மீண்டும்
பார்க்கிறேன்.Opening sceneல் ஜோக்கரின்
வருகையும் actionம் அட்டகாசம்.  படம் பார்த்து அபாரம்!
--------------
பார்க்க வேண்டிய ஓர் அறிவியல் சினிமா!
2010: ஒடிசி இரண்டு!
--------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------
ஆர்தர் கிளார்க் ஓர் அறிவியல் புனைவு எழுத்தாளர்
(science fiction writer). சில அணுக்களுக்கு முன்பு இவர்
இறந்து விட்டார். இவர் புனைவாக எழுதிய பல
விஷயங்கள் அறிவியலின் வளர்ச்சியில்
உண்மையாகி விட்டன. இவரின் ஒரு நாவல்
"2010: Odyssey Two".

இந்த நாவலைப் பின்பற்றி ஒரு ஆங்கிலத்
திரைப்படம் எடுக்கப் பட்டது. அதன் பெயர்:
"2010: The year we make contact" ஆகும். இப்படத்தை
இயக்கியவர் Peter Hyams.

படத்தின் கதை:
----------------------------
2001இல் அமெரிக்கா "டிஸ்கவரி ஒன்று" என்ற
விண்கலத்தை வியாழனுக்கு அனுப்பியது. அதன்
கதி என்னவென்று தெரியவில்லை. அதில் சென்ற விண்வெளியாளர்களில் (astronauts) 4 பேர் இறந்து
விட்டனர் என்று செய்தி கிடைக்கிறது.

எனவே அதைக் கண்டறிந்து மீட்க அமெரிக்காவும்
சோவியத் ஒன்றியமும் தனித்தனியாக
விண்கலன்களை அனுப்புகின்றன. வியாழனை
விண்கலன் அடைந்தபோது, வியாழனில் உயிர்
இருப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.
இப்படிப் போகிறது கதை. மீதியை வெள்ளித்
திரையில் காணவும்.

நியூட்டன் அறிவியல் மன்றம் இப்படத்தைப்
பார்க்கும்படி பரிந்துரைக்கிறது. இதுபோன்ற
படங்களை பார்ப்பதன் மூலமும், விண்வெளி
குறித்த சில தகவல்களை அறிந்து கொள்ள
முடியும். தோராயமாகவேனும் விண்வெளி
அறிவியல் (space science) குறித்து ஒரு புரிதல்
கிடைக்கும். சிலருக்கு இது அறிவியலில்
ஆர்வத்தைத் தூண்டக் கூடும்.

அறிவியல் புத்தக வாசிப்புக்குத் தேவையான
ஒரு பின்னணி இப்படத்தைப் பார்ப்பதன் மூலம்
கிடைக்கும். எல்லாவற்றையும் எழுதிப் புரிய
வைக்க முடியாது.

எனவே படத்தைப் பார்க்க வேண்டுகிறோம்.
*********************************************************   
சதுரங்கப் பலியாடுகள்!
Pawn Sacrifice அமெரிக்கத் திரைப்படம்!
---------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------
1972இல் எங்கள் கல்லூரிக் காலத்தில், சதுரங்க
உலகில் பெரும் செல்வாக்குடன் இருந்தவர்கள்
இரண்டு பேர். ஒருவர் பாபி ஃபிஷர்; இன்னொருவர்
போரிஸ் ஸ்பாஸ்கி. பாபி ஃபிஷர் அமெரிக்கர்.
ஸ்பாஸ்கி சோவியத் நாட்டவர்.
(சோவியத்=USSR= இன்றைய ரஷ்யா).

1972இல் சதுரங்க உலக சாம்பியன் போட்டி
ஐஸ்லாந்து ரெய்க்ஜெவிக் நகரில் நடைபெற்றது.
சாம்பியன் ஸ்பாஸ்கி; சாலஞ்சர் பாபி பிஷர்.

மொத்தம் 24 ஆட்டங்கள்; யார் முதலில் 12.5 புள்ளிகள்
பெருகிறாரோ அவருக்கே வெற்றி. இதுதான் உலக
சதுரங்க சம்மேளனம் FIDE நிர்ணயித்த போட்டியின் விதி.

2013இல்  ஆனந்த், மாக்னஸ் கார்ல்சன்
இடையே உலக சாம்பியன் போட்டி சென்னையில்
நடைபெற்றது. அப்போது மொத்த ஆட்டங்கள் 12
என்றும் முதலில் 6.5 புள்ளிகள் பெறுபவர்க்கே வெற்றி
என்றும் FIDE போட்டி விதியை நிர்ணயித்து இருந்தது.
கால மாற்றத்தில் 24 ஆட்டங்கள் பாதியாகக்
குறைந்து விட்டன.சென்னையில் நடந்த இந்த
ஆட்டத்தை எத்தனை பேர் நேரில் போய் பார்த்தீர்கள்!

1948 முதல் உலக சதுரங்க சாம்பியனாக சோவியத்தே
இருந்து வந்தது. கால் நூற்றாண்டு காலத்து
வையத் தலைமை. (இக்கட்டுரையைப் படிக்கும்
இளைஞர்களுக்கு வையத்தலைமை என்ற
சொல்லுக்குப் பொருள் தெரியவில்லை எனில்
பாரதியின் ஆத்திசூடியைப் படித்த பிறகு
இக்கட்டுரையைப் படிக்கவும்).

ஆனாலும், இந்த கால் நூற்றாண்டு காலத் தலைமையை
பாபி ஃபிஷர் தகர்த்து விட்டார். ஆம், ஸ்பாஸ்கியைத்
தோற்கடித்து, ஃபிஷர் உலக சாம்பியன் ஆனார்.
( ஃபிஷர்= 12.5; ஸ்பாஸ்கி= 8.5)

உலகமே எதிர்பார்த்தது போல, முதல் ஆட்டத்தில்
ஸ்பாஸ்கியே வென்றார். இரண்டாவது ஆட்டத்தை
ஃபிஷர் walkover செய்தார். எனவே 2-0 என்ற நிலையில்
ஸ்பாஸ்கி முன்னிலையில் இருந்தார். மூன்றாவது
ஆட்டத்தில் ஃபிஷர் வென்றார். மொத்த உலகமும்
ஃபிஷரை உற்று நோக்க ஆரம்பித்தது. பின் பிரசித்தி
பெற்ற அந்த ஆறாவது ஆட்டம். அதிலும் ஃபிஷருக்கே
வெற்றி. முன்னதாக 4ஆவது ஆட்டம் டிரா. 5ஆவதிலும்
ஃபிஷருக்கே வெற்றி. முதல் 6 ஆட்டங்கள் வரையிலான
இந்த முடிவுகளை என்னுடைய நினைவில் இருந்து
எடுத்து எழுதுகிறேன். காரணம் அந்த நினைவுகள்
அவ்வளவு ஆழமானவை; பசுமையானவை.

மாஸ்கோ விமான நிலையத்தில் வந்து இறங்கிய
ஸ்பாஸ்கியை வரவேற்க நாதியில்லை. சோவியத்
ஒன்றியத்தில் சதுரங்கம் என்பது வெறும்
விளையாட்டல்ல. அது சோவியத்தின் பெருமை.
அது சோவியத்தின் அரசியல். அதைப் பறிகொடுத்த
ஸ்பாஸ்கி சோவியத் அரசால் வெறுக்கப் பட்டதில்
வியப்பில்லை.

போன மாதமோ அல்லது அதற்கும் முந்தியோ
வீட்டு டி.வி.யில் HBO போன்ற ஒரு சானலில்
ஒரு அமெரிக்கப் படம் பார்த்தேன்.  Pawn Sacrifice என்ற
படம். ஃபிஷரின்  வாழ்க்கை வரலாற்றை விளக்கும்
நோக்கில் அமைந்த படம். அது ஒரு biography.

ஃபிஷர் ஸ்பாஸ்கி உலக சாம்பியன் ஆட்டங்கள்
படத்தில் சிறப்பாகக் காட்டப் படுகின்றன.
அது பனிப்போர் (cold war) நடந்த காலம். இந்நிலையில்
ஃபிஷரின் வெற்றி அமெரிக்காவின் வெற்றியாக
அமைந்தது.

விரும்புபவர்கள் இந்தப் படத்தைப் பார்க்கலாம்
என்று பொதுவாகச் சொல்ல விரும்பவில்லை.
இப்படம் ஒரு must watch movie என்று பரிந்து
உரைக்கிறோம். ஃபிஷர் ஸ்பாஸ்கி இருவருமே
pawns என்பதுதான் படத்தின் message.

பனிப்போர் பற்றி, சதுரங்கம் பற்றி, ஃபிஷர்
என்னும் மாயக்காரனைப் பற்றி, ஸ்பாஸ்கி
என்னும் அற்புதமான ஆட்டக்காரனைப் பற்றி,
உலக அரசியல் பற்றி .....  இவ்வாறு பற்பல
விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

சுமார் 10 புத்தகங்களைப் படித்துத் தெரிந்து கொள்ள
வேண்டிய இத்தனை விஷயங்களையும் இந்த
அமெரிக்கத் திரைப்படம் சுலபத்தில் சொல்லிக்
கொடுத்து விடுகிறது.
********************************************************
   அண்மையில் வந்த ஹாலிவுட் ஆங்கில சினிமாவின்
அறிவியல் ஆலோசகர் அண்மையில்  நோபல் பரிசு
பெற்றுள்ளார். அவர் யார்? அந்த சினிமா எது?  அதன்
இயக்குனர் யார்?

உங்களின் ஸ்டேட்மென்ட் மிகவும் elelmentaryயான,
நுனிப்புல் தன்மையானது. ஆட்டக்காரர்களின்
தரத்தை அளவிட பல்வேறு தர நிர்ணய முறைகள்
உள்ளன. Elo rating என்ற முறை அதில் ஒன்று. FIDE
போட்டிகளில் Elo rating பயன்படுகிறது. இதில் எல்லாம்
காஸ்பரோவ் all time high அந்தஸ்தில் உள்ளார்.
அஜித் விஜய் மாதிரி காஸ்பரோவ் ஆனந்த்
விவகாரத்தை மாற்ற வேண்டாம்.

காஸ்பரோவும் ஆனந்தும் விளையாடிய 14 ஆண்டு
காலக் கட்டத்தில், 48 classical ஆட்டங்களில், ஆனந்த்
3 முறை மட்டுமே வென்றுள்ளார். 15 முறை
காஸ்பரோவிடம் தோற்றுள்ளார். மீதி draw.
இந்தப் புள்ளி விவரமும் இல்லாமல், வாய்க்கு
வந்தபடி இங்கு பேச இயலாது. 
------------------------
ஹாலிவுட் ஆங்கில சினிமா
1. The Matrix 2. Matrix Reloaded 3.Matrix Revolutions பாருங்கள்.
பார்த்தது உண்டா? பொருள்முதல்வாதம்
கருத்துமுதல்வாதம் பற்றி புரிந்து கொள்ளலாம். அறிந்து கொள்ளலாம் அறியலாம்

இன்றைய இளைய தலைமுறை இந்த ஆங்கில
சினிமாக்களை பார்த்து புறநிலை யதார்த்தம் (Reality)பற்றி, பொருள்முதல்வாதம் பற்றி அறிந்து கொள்கிறார்கள்.
HBO போன்ற சானல்களில் அடிக்கடி காட்டுகிறார்கள்.
10 புத்தகங்களைப் படிப்பதால் கிடைக்கும் அறிவை
இது போன்ற சினிமாக்களை பார்ப்பதன் மூலம்
பெறுகிறார்கள்.

உங்கள் வீட்டு டி.வி.யில் காசு செலவில்லாமல்
பார்க்கலாம். ஒரே ஒரு நிபந்தனை: ஆங்கிலம்
நனறகத் தெரிந்து இருக்க வேண்டும். ஓரளவு
ஆங்கிலம் பயன்படாது.
----------------
சமீப காலம் வரை ‘காலப் பயணம்’ என்பதையே அறிவியலுக்குப் புறம்பான ஒரு கற்பனை என்றுதான் புகழ் பெற்ற அறிவியலாளர்கள் உட்பட பலரும் எள்ளி நகையாடிவந்தார்கள். ‘காலப் பயணம்’ ஏன் சாத்தியம் இல்லை என்பதற்கு மூன்று முரண்பாடுகளை முன்வைத்தார்கள். அவை இங்கே…
அப்பா பிறப்பதற்கு முன்பே தாத்தாவைக் கொல்லுதல்:
குணாளன் என்பவர் கால இயந்திரத்தின் மூலம் கடந்த காலத்தை நோக்கிப் பயணிக்கிறார். அங்கே அவர் தனது தாத்தாவைச் சந்திக்கிறார். அப்போது குணாளனின் அப்பா பிறந்திருக்கவில்லை. குணாளன் தனது தாத்தாவைச் சுட்டுவிடுகிறார். அப்படியென்றால் குணாளனின் அப்பாவும் பிறக்க மாட்டார். குணாளனும் பிறக்க மாட்டார் அல்லவா! பிறக்காத குணாளன் எப்படிக் காலப் பயணம் செய்து தன் தாத்தாவைச் சுட்டுக்கொல்ல முடியும்?
கடந்த காலம் இல்லாத மனிதன்:
முத்தழகன் என்ற இளைஞர் கால இயந்திரத்தைக் கண்டுபிடிக்க முயன்றுகொண்டிருக்கிறார். அப்போது அவரைப் பார்க்க வரும் முதியவர் ஒருவர் கால இயந்திரத்தை வடிவமைப்பது எப்படி என்று சொல்லித்தருகிறார். அதைக் கொண்டு முத்தழகன் எதிர்காலத்தை நோக்கிப் பயணித்து பங்குச் சந்தை, கார் பந்தயம், விளையாட்டுப் போட்டி போன்றவற்றின் முடிவுகளைத் தெரிந்துகொண்டு மறுபடியும் நிகழ்காலத்துக்கு வருகிறார்.
தான் தெரிந்துகொண்டதை வைத்துக்கொண்டு பெரும் பணக்காரர் ஆகிறார். முத்தழகனுக்கு வயதாகிறது. தனது கடந்த காலத்தை நோக்கிப் பயணித்து, இளைஞராக அப்போது இருக்கக் கூடிய தனக்குக் கால இயந்திரத்தை வடிவமைப்பதன் ரகசியத்தைச் சொல்லுகிறார். அப்படியென்றால் ஆரம்பத்தில் பார்த்த முதியவர் முத்தழகன்தான். முத்தழகனுக்கு முத்தழகனே யோசனை என்றால் முதன்முதலில் கால இயந்திரத்தை முத்தழகனுக்கு யார் சொல்லிக்கொடுத்திருப்பார்கள்?
தாயும் நீயே தந்தையும்…
ப்ரீடெஸ்டினேஷன் படத்தில் ஜேன் மற்றும் ஜான்
காலப் பயணத்தைப் பற்றிய முக்கியமான திரைப்படங்களுள் ஒன்று ‘ப்ரீடெஸ்டினேஷன்’. காலப்பயணம் செய்யும் ஒரு ரகசிய ஏஜென்ட் மதுவிடுதி ஒன்றில் வேலை பார்க்கிறார். அங்கே வரும் ஜான் என்ற நபர் மது குடித்துக்கொண்டே தனது விசித்திரமான வாழ்க்கைக் கதையைப் பற்றிச் சொல்கிறார்.
பெண்ணாகப் பிறந்தவர் ஜான் (பெண் பெயர்- ஜேன்). பிறந்த உடனேயே யாரோ ஒருவரால் ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டுபோய் விடப்பட்ட ஜேன் அங்கேயே வளர்கிறார். பருவமடைந்த பிறகு சந்திக்கும் ஒரு இளைஞனிடம் காதல் வயப்பட்டு அவளுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. ஆனால், அந்தக் குழந்தை காணாமல் போகிறது. பிரசவத்தின்போது ஜேனுக்கு இரண்டு பாலினத்துக்கும் உரிய உறுப்புகளும் இருப்பது மருத்துவர்களுக்குத் தெரிகிறது. அப்போது ஏற்பட்ட ஒரு சிக்கலின் காரணமாக ஜேனை ஆணாக மாற்றிவிடுகிறார்கள். அந்த ஆண்தான் ஜான்
predestination movie poster
இந்தக் கதையைச் சொல்லிமுடித்ததும் ஜேனின் காதலனைக் கண்டு பிடிப்பதற்காக ஜானைக் கால இயந்திரத்தில் ஏற்றிக்கொண்டு, ஜேனும் அவளது அடையாளம் தெரியாத காதலனும் முதன்முதலின் சந்தித்த தருணத்துக்கு அழைத்துச்செல்கிறார் அந்த ஏஜென்ட். அங்கே, ஜேனும் ஜானும் (இரண்டு பேரும் ஒன்றுதான்!) சந்தித்துக்கொள்கிறார்கள். காதல் வயப்படுகிறார்கள். ஜேன் கர்ப்பமாகிறாள். இறுதியில், அந்த ஏஜென்ட், ஜேன், ஜான், குழந்தை அனைவரும் ஒரே நபர் என்பதும், காலப்பயணங்களால் ஏற்பட்ட விசித்திர சந்திப்புகளின் விளைவுகளே அவர்கள் என்பதும் நமக்குத் தெரியவருகிறது. தானே தனக்குத் தாயும் தகப்பனும் குழந்தையும் என்றால் தாத்தா, பாட்டி யார்?
நான்காவது முரண்:
காலப் பயணம் சாத்தியம் இல்லை என்பதற்கு அறிவியலாளர்களால் முன்வைக்கப்பட்ட முரண் உதாரணங்கள்தான் இவை. இவற்றோடு நான்காவதாக ஒரு முரணை ஸ்டீவன் ஹாக்கிங் முன்வைக்கிறார். காலப் பயணம் செய்வது சாத்தியம் என்றால் நம் எதிர்காலத் தலைமுறைகள் யாராவது காலப் பயணம் செய்துவந்து நம்மை ஏற்கெனவே சந்தித்திருப்பார்களே? அப்படி யாரும் இதுவரை சந்திக்கவில்லை என்பதே எதிர்காலத்திலும் காலப் பயணத்துக்கான வழிமுறைகள் சாத்தியப்படாது என்பதற்கான உதாரணம்தானே என்று கேள்வி கேட்கிறார்.
ஆனால், தற்போதோ ஸ்டீவன் ஹாக்கிங் உட்பட பல அறிவியலாளர்கள் காலப் பயணம் என்பது சாத்தியமாகலாம் என்ற மனமாற்றத்துக்கு வந்திருக்கிறார்கள். ஏன்?
காலம் ஒரு அம்பு போல முன்னே பாய்ந்து செல்கிறது என்றும், பூமி, செவ்வாய், சூரியன் என்று பிரபஞ்சத்தில் எங்கும் காலம் ஒரே மாதிரி பயணித்துக்கொண்டிருக்கிறது என்றும் நியூட்டன் சொல்கிறார். நியூட்டன் காலத்துக்குப் பிறகு, 18-ம் நூற்றாண்டில் இத்தாலிய அறிவியலாளர் லக்ராஞ், இயக்கவியலைப் பற்றிச் சொல்லும்போது “இயக்கம் என்பது நான்கு பரிமாணங்களில் நடைபெறுகிறது. மூன்று பரிமாணங்கள் இடத்தைச் சார்ந்தவை, ஒரு பரிமாணம் காலம்” என்று காலத்தை நான்காவது பரிமாணமாக முன்வைக்கிறார். அதற்குப் பிறகு ‘நான்காவது பரிமாணமாகக் காலம்’ என்ற கோட்பாடு சூடுபிடிக்கிறது.
நதி போல பாயும் காலம்
காலத்தைப் பற்றிய கோட்பாடுகள் எல்லாவற்றையும் அடித்து நொறுக்கிப் போடுகிறார் ஐன்ஸ்டைன். அண்டவெளி, காலம் இரண்டும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்த ‘கால-வெளி’என்ற கோட்பாட்டை முன்வைக்கிறார். காலத்தை ஐன்ஸ்டைன் ஒரு நதி போல உருவகிக்கிறார். நதி எப்படி ஒரு இடத்தில் வேகமாகவும் வேறொரு இடத்தில் மெதுவாகவும் போகிறதோ அதுபோலத்தான் காலமும். செவ்வாய் கிரகத்தின் ஒரு நொடியும் பூமியின் ஒரு நொடியும் ஒன்று கிடையாது. அதேபோல் பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு இடத்தில் இருக்கும் விண்மீனின் ஒரு மணி நேரமும் பூமியின் ஒரு மணி நேரமும் ஒன்று இல்லை என்பதை 1915-ல் வெளியான ஐன்ஸ்டைனின் பொதுச் சார்பியல் கோட்பாடு சொல்கிறது.
இதில்தான் காலப் பயணத்துக்கான சாத்தியத்தை ஐன்ஸ்டைன் தன்னையே அறியாமல் ஒளித்துவைத்திருக்கிறார். இத்தனைக்கும் காலப் பயணம் சாத்தியமில்லை என்றே நம்பியவர் ஐன்ஸ்டைன்!
கருந்துளையைச் சுற்றி...
பொதுச் சார்பியல் கோட்பாட்டின் படி பெரும் நிறையானது காலத்தையும் அண்டவெளியையும் வளைக்கிறது. சூரியன் போன்ற பெரும் நிறைகொண்ட விண்பொருள் தன்னைச் சூழந்திருக்கும் கால-வெளியை வளைக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எந்த அளவுக்கு ஒரு விண்பொருள் அதிக நிறை கொண்டிருக்குமோ அந்த அளவுக்கு அது கால-வெளியை வளைக்கும். அந்த விண்பொருளுக்கு அருகில் காலம் மெதுவாகிறது. இதுவும் ஒரு வகையில் காலப் பயணம்தான்.
காலத்தை மிகவும் மெதுவாக ஆக்குவதற்கு சூரியனை விட ஆயிரக்கணக்கான மடங்கு நிறை தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட நிறை கொண்ட பொருள் ஒன்று நமது விண்மீன் மண்டலமான பால்வீதியிலேயே இருக்கிறது. ஆம், பால்வீதியின் மையத்தில் சூரியனை விட 40 லட்சம் மடங்கு நிறை கொண்ட கருந்துளை ஒன்று இருப்பதாகக் கருதப்படுகிறது.
பால்வீதியின் மையத்திலுள்ள கருந்துளையை ஒரு விண்கலத்தைச் சுற்றிவரச் செய்ய வேண்டும். பூமியில் 16 நிமிடங்கள் கழிந்திருந்தால் அந்த விண்கலத்தில் உள்ள கடிகாரத்தில் 8 நிமிடம் கழிந்திருக்கும். அந்த விண்கலத்தில் உங்களின் இரட்டைச் சகோதரர் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். விண்கலத்தில் அவர் புறப்பட்டபோது உங்கள் இருவருக்கும் 25 வயது என்றால் பூமியில் 10 ஆண்டுகள் கழிந்த பிறகு உங்களுக்கு 35 வயது ஆகியிருக்கும். உங்கள் சகோதரருக்கோ 30 வயதுதான் ஆகியிருக்கும். தனது 30-வயதில் 35 வயதுக்காரரான உங்களை அவர் சந்தித்ததால் உங்கள் சகோதரர் மேற்கொண்டது காலப் பயணமே.
ஆனால், இந்த கருந்துளையை அடைவதில் இரண்டு சிக்கல்கள் உள்ளன. ஒன்று, அந்தக் கருந்துளை இருப்பது பூமியிலிருந்து 26,000 ஒளியாண்டுகள் தொலைவில், அதாவது 260,00,00,000,00,00,000 கிலோ மீட்டர் தொலைவில். ஒளியின் வேகத்தில் பயணம் செய்வது சாத்தியமில்லை என்றாலும் அப்படிப் பயணம் செய்வதாக வைத்துக்கொண்டாலும் அந்தக் கருந்துளைக்கு அருகே செல்வதற்கு 26 ஆயிரம் ஆண்டுகள் ஆகும்.
ஆனால், மனிதர்கள் செல்லும் விண்கலத்திலேயே அதிக வேகம் கொண்ட அப்போலோ-10 கலமே கிட்டத்தட்ட மணிக்கு 40 ஆயிரம் கிலோ மீட்டர்தான் செல்லும். இன்னொரு சிக்கல், கருந்துளைக்கு அருகில் சென்றால் அது ஒளியைக்கூடத் தப்ப விடாது. ஆக, காலப் பயணம் மேற்கொள்வதற்காகக் கருந்துளையைச் சுற்றிவருவதென்பது கோட்பாட்டளவில் சாத்தியமே ஒழிய நடைமுறையில் சாத்தியம் இல்லை.
பேரனைவிட இளைய தாத்தா
அடுத்த சாத்தியமும் ஐன்ஸ்டைனின் சிறப்புச் சார்பியல் கோட்பாட்டில்தான் இருக்கிறது. ‘ஒளியை விட வேகமாகப் பயணித்தால் கடந்த காலத்துக்கு நாம் தந்தி அனுப்ப முடியும்’ என்று ஐன்ஸ்டைன் நகைச்சுவையாக ஒருமுறை குறிப்பிட்டார். என்றாலும், பிரபஞ்சத்தின் உச்சபட்ச வேகம் ஒளியினுடையதே; அந்த வேகத்தை எதுவும் தாண்ட முடியாது என்பது அவருடைய கோட்பாடு.
ஒளியின் வேகத்துக்குச் சற்று அருகே ஒரு விண்வெளி வீரர் விண்கலத்தில் பயணித்துவிட்டுச் சில வருடங்கள் கழித்து பூமிக்கு வருவாரென்றால் பூமியில் இருக்கும் அவரது பேரனைவிட இளமையாக இருப்பார்.
ஒளியின் வேகத்துக்கு அருகே பயணிக்கும் எதுவும் மிக மெதுவாகவே மூப்படையும் என்பது சுவிட்சர்லாந்தில் உள்ள செர்ன் (CERN) ஆய்வுக் கூடத்தில், பை-மேசான்கள் என்ற அணுத்துகள்களைக் கொண்டு நிரூபிக்கப் பட்டிருக்கிறது. ஒரு நொடியை 2,500 கோடி மடங்காகப் பகுத்தால் எவ்வளவு நேரம் கிடைக்குமோ அவ்வளவு நேரம்தான் ஆயுள் அந்தத் துகள்களுக்கு. செர்னில் தரைக்கு அடியில் 16 மைல் தொலைவுகொண்டதாய் 
அமைக்கப்பட்டிருக்கும் சுற்றுப்பாதையில் அந்தத் துகள்களை ஒளியின் வேகத்தில் 99.99% வேகத்தில் அனுப்பிப் பார்த்தபோது அந்தத் துகள்கள் தங்கள் வழக்கமான ஆயுளைவிட 30 மடங்கு அதிக நேரம் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆகவேதான் ஒளியின் வேகத்துக்கு அருகில் பயணிப்பதும்கூட காலப் பயணமாகக் கருதப்படுகிறது. இதுபோன்ற நிரூபணங்களால்தான் காலப் பயணம் சாத்தியம் என்ற மனமாற்றத்துக்கு அறிவியலாளர்கள் வந்திருக்கிறார்கள்.
காலப் பயணம் மேற்கொள்வதற்கு மேலும் பல வழிமுறைகள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் ‘கால-வெளித்துளை’ (wormhole). பெயருக்கேற்ப காலத்திலும் வெளியிலும் இருப்பதாக நம்பப்படும் துளை இது. பிரபஞ்சம் முழுவதும் இந்தத் துளைகள் இருப்பதாகவும், இவை மிகவும் நுண்ணியவை என்றும் கருதப்படுகிறது. இந்தத் துளையைப் பெரிதாக்கி, அதன் ஒரு முனையில் நுழைய முடிந்தால் பிரபஞ்சத்தில் நாம் சாதாரணமாக எட்ட முடியாத இன்னொரு மூலைக்கு மட்டுமல்ல, காலத்திலும் வேறொரு புள்ளிக்கு இந்தத் துளை நம்மைக் கொண்டுபோய் விடும் என்று நம்பப்படுகிறது.
கடந்த காலத்துக்குப் போக முடியாது
‘இண்டெர்ஸ்டெல்லார்’ படம் நினைவிருக்கிறதா? (படம் பார்த்தவர்களுக்கு மட்டும்) ‘கால-வெளித் துளை’ வழியே பயணிக்கும் கதாநாயகன் தன் மகளைச் சந்திக்கத் திரும்பி வருகிறார். கதாநாயகன் இளைஞராகவும் அவருடைய மகள் தொண்டு கிழவியாகவும் இருக்கிறார். காலப் பயணம் மேற்கொண்டதன் விளைவுதான் இது.
interstellar
எதிர்காலத்தை நோக்கிய காலப் பயணம்தான் சாத்தியம்; கடந்த காலத்தை நோக்கிய காலப் பயணம் சாத்தியமே இல்லை என்கிறார் ஸ்டீவன் ஹாக்கிங். ஒரு வகையில் காலப் பயணத்துக்கான கனவுகள் காலத்தை மட்டுமல்ல, காலத்தோடு பின்னிப் பிணைந்துள்ள மரணத்தையும் வெல்வதற்கான கனவுகளே. கூடவே, தூரத்தை வெற்றிக்கொள்வதற்குமானது காலப் பயணம் என்ற கனவு.
பால்வீதி
இதைப் பற்றி ஸ்டீவன் ஹாக்கிங் இப்படிச் சொல்கிறார்: ‘காலம் மெதுவாவதால் இன்னுமொரு பலன் உண்டு. கோட்பாட்டளவில் ஒருவர் தனது ஆயுட்காலத்துக்குள் மிக மிக நீண்ட தொலைவை எட்ட முடியும் என்பதுதான் இதன் அர்த்தம். நமது பால்வீதியின் விளிம்பை 80 ஆண்டுகளுக்குள் நாம் எட்டிப் பிடிக்கலாம். இந்தப் பிரபஞ்சம் எவ்வளவு விசித்திரமானது என்பதை அது உணர்த்தக்கூடும் என்பதுதான் எல்லாவற்றையும் விட மிகவும் பரவசமூட்டக் கூடியது.’
நன்றி: ஸ்டீவன் ஹாக்கிங், மிஷியோகாக்கு
--------------
கமல ஹாசனும் மைக்கேல் ஃபாரடேயும்!
ஃபாரடே கூண்டால் எதை மூடினார் கமல்?
---------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
===========================================
நம் காலத்தின் தலைசிறந்த சினிமாக் கலைஞர்
கமலஹாசன். தமிழ் சினிமாவை உலகத் தரத்துக்கு
உயர்த்தியவர் அவர். கமல் உண்மையிலேயே
உலக நாயகன்தான்!

மைக்கேல் ஃபாரடே (1791-1867) இங்கிலாந்து நாட்டு
விஞ்ஞானி; மிகச் சிறந்த பரிசோதனை இயற்பியலாளர்
(experimental physicist). இன்றும் நம் அன்றாட வாழ்வில்
பயன்படும் மின்காந்த தூண்டல் (electromagnetic induction)
பற்றிக் கண்டறிந்தவர்.

கமலஹாசனுக்கும் மைக்கேல் ஃபாரடேவுக்கும் என்ன
தொடர்பு? பார்ப்போம்.

தம் படங்களில் அறிவியல் செய்திகளைச் சொல்கிறவர்
தமிழ் மற்றும் இந்திய சினிமா உலகில் கமல் மட்டுமே.
எனவே அவர் நியூட்டன் அறிவியல் மன்றத்தின்
அக்கறைக்கு உரியவர் ஆகிறார். தசாவதாரம் படத்தில்
எபோலா வைரஸ் குறித்துப் பேசப்படும். இப்படம்
வெளிவந்த 2008ஆம் ஆண்டில் எபோலா வைரஸ்
குறித்து தமிழ்ச் சமூகம் அறிந்திருக்கவில்லை.
காலத்தை மீறிச்  சிந்திப்பவர் கமல் (thinking ahead of times).

அவரின் விஸ்வரூபம் படத்தின் இறுதிக் காட்சியில்
ஃபாரடே கேஜ் (Faraday cage) என்பது பற்றி தீவிரமாகப்
பேசப்படும். உடனடியாக ஒரு  ஃபாரடே கேஜ் வேண்டும்
என்பார் படத்தின் நாயகி பூஜா. படத்தில் இவரின்
பாத்திரம் ஒரு மருத்துவர்; அணுக்கதிர் வீச்சால் ஏற்படும்  புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்.
(Dr நிருபமா Nuclear oncologist),

5 நிமிடத்தில் ஃபாரடே கேஜ் வரும் என்பார் FBI .அதிகாரி.
அந்த  நொடியே வேண்டும் என்பார் பூஜா. 

ஃபாரடே கேஜ் படத்தில் வர வேண்டிய அவசியம் என்ன?
நியூயார்க் நகரில் தலிபான் பயங்கரவாதிகள் ஒரு
கட்டிடத்தில் வெடிகுண்டு வைத்திருப்பார்கள். அமெரிக்க
காவல்துறை (FBI)  வெடிகுண்டைக் கண்டுபிடித்துக்
கைப்பற்றி விடும். அதை அங்குள்ள ஒரு அறையில்
ஒரு மேஜையின் மீது வைத்து .இருப்பார்கள்.
அந்த வெடிகுண்டுடன் ஒரு செல் போன்
இணைக்கப்பட்டு .இருக்கும்.

யாரேனும் ஒருவர் அந்த செல்போன் நம்பரை அழைத்து,
அந்த அழைப்பின் மணியோசை இந்த செல்போனில்
கேட்டாலே போதும் வெடிகுண்டு வெடித்து விடும்.
வெடிகுண்டு அப்படி டிசைன் செய்யப்பட்டு இருந்தது.

இந்தச் சூழலில்தான் ஃபாரடே கேஜ் தேவைப்
படுகிறது. ஃபாரடே கேஜ் என்ன செய்யும்? வெடிகுண்டு
வெடிக்காமல் தடுக்கும். எப்படி? ஃபாரடே கேஜால்
வெடிகுண்டை மூடிவிட வேண்டும். வெளியில் இருந்து
வரும் எந்த ஒரு மின்காந்தத் துடிப்பையும்
(Electro Magnetic Pulse), வெடிகுண்டை அண்ட விடாமல்,
ஃபாரடே கேஜ் தடுத்து விடும்; அதாவது வெடிகுண்டுடன்
உள்ள செல்போனுக்கு எந்த  சிக்னலும் வராமல்
தடுத்து விடும். இப்படி குண்டு வெடிக்காமல் தடுத்து
விட முடியும்.

அங்கிருந்த பலரில் ஒருவருக்குக் கூட இந்த ஆபத்து
பற்றித் தெரியாது, டாக்டர் நிரூபமாவைத் தவிர.
எனவே அவர் உடனடியாக (instantaneously required)
ஃபாரடே கேஜ் வேண்டுமென்று கேட்கிறார்.
அது வரும் வரை காத்திருக்க முடியாது என்பதால்,
டாக்டர் நிருபமா அந்த அறையில் உள்ள ஏதாவது
ஒன்று ஃபாரடே கேஜ் போன்று பயன்படுமா என்று
சுற்றுமுற்றும் பார்க்கிறார்.

என்ன ஆச்சரியம்! அவருக்கு ஒரு ஃபாரடே கேஜ்
கிடைத்து விடுகிறது. அங்கு ஒரு மைக்ரோவேவ்
ஓவன் (microwave oven), அதாவது நவீன அடுப்பு எரிந்து
கொண்டு இருந்தது. அந்த ஓவனின் வெளிப்புற
மூடுபகுதியை (outer case) எடுத்து வெடிகுண்டை
மூடி விடுவார் நிருபமா. மைக்ரோவேவ் ஓவன்
என்பது உண்மையில் ஒரு ஃபாரடே கேஜ் ஆகும்.
(Every micro wave oven is a Faraday cage),

சரி, ஃபாரடே கேஜ் (Faraday cage) என்றால் என்ன? இதை
ஃ பாரடே கூண்டு  என்று தமிழில் சொல்லலாம்.
இந்தக் கூண்டால் ஒரு பொருளை மூடிவிட்டால்,
கூண்டுக்கு வெளியில் இருந்து வரும் எந்தவொரு
மின்காந்தத் துடிப்பும் கூண்டுக்குள் இருக்கும்
பொருளை அணுக இயலாது. இதை மைக்கேல்
ஃபாரடே 1836இல் கண்டு பிடித்தார்.

அந்த வெடிகுண்டு சீசியம் (Caesium) என்னும் தனிமத்தால்
செய்யப்பட்டது. சீசியத்தின் ஒரு குறிப்பிட்ட
ஐசோடோப் கதிரியக்கத் தன்மை உள்ளது. இந்தக்
குண்டு வெடித்தால், அணுகுண்டு வெடித்தது
போன்ற சேதாரத்தை ஏற்படுத்தும்.

ஆக, இரண்டு அல்லது மூன்று நிமிடக் காட்சியில்
எவ்வளவு ஆழமான அறிவியல் செய்திகளை
வைத்து விட்டார் கமல்!

1. ஃபாரடே கேஜ் 2. மைக்ரோவேவ் ஓவன் 3.சீசியம்
4. நியூக்ளியர் ஆன்காலஜி என்று எல்லா
அறிவியலையும் ஒன்றாகத் திரட்டி சில நிமிடக்
காட்சியில் வைத்த கமலஹாசனின் மேதைமைக்கு
நியூட்டன் அறிவியல் மன்றம் தலை வணங்குகிறது.

என் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு தமிழ்ப்
படத்துக்கு அறிவியல் விளக்கம் எழுதுகிறேன். இது
ஒரு ஆச்சரியம்! ஒரு தமிழ் நடிகர் ஒரு தமிழ்ப்
படத்தில் அணுக்கரு அறிவியலைச் சொல்கிறார்!
இது அடுத்த ஆச்சரியம்!

இருந்தும் கமலுக்கு இப்படம் காரணமாக ஏன் இவ்வளவு
எதிர்ப்பு? இதுவும் ஆச்சரியம்தான் என்றாலும்
அதற்கான விடை இதோ!

When a true a genius appears in the world all the dunces are in confederacy
against him.----Jonathan Swift.
**************************************************************
மகளின் வயது 80, தந்தையின் வயது 35!
இது சாத்தியமா? சாத்தியமே என்கிறார் ஐன்ஸ்டின்!
கிறிஸ்டோபர் நோலன் சாத்தியப் படுத்தினார்!
-----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------------------
1) ஹாலிவுட் திரைப்பட இயக்குனர் கிறிஸ்டோபர்
நோலன் (Christopher Nolan) பற்றி ஆங்கிலப்படம்
பார்க்கும் இளைஞர்கள் அறிந்திருக்கலாம்.
அவர் நூறு பல்கலைக் கழகங்களுக்குச் சமமானவர்.
நடமாடும் பல்கலைக் கழகம் என்ற பட்டம்
அவருக்கு கச்சிதமாகப் பொருந்தும்.

2) அவர் காலத்தில் வாழ்பவர்கள் உண்மையிலேயே
கொடுத்து வைத்தவர்கள்.அவரின் படங்கள்
அற்புதமானவை. 2014 இறுதியில் வெளியான
அவரின் இன்டெர் ஸ்டெல்லார் (Interstellar) அற்புதமானது.
உலக வரலாற்றில் இதுவரை இப்படி ஒரு சினிமா
எடுக்கப் பட்டதில்லை.

3)  இன்டெர் ஸ்டெல்லார் ஒரு அறிவியல் புனைவு.
(science fiction) ஐன்ஸ்டினின் ரிலேட்டிவிட்டி தியரியை
அற்புதமாக விளக்கும் சினிமா அது. இவ்வாண்டின்
(2017) இயற்பியல் நோபல் பரிசு பெற்ற கிப் தோர்னே
(Kip Thorne) அந்த சினிமாவின் அறிவியல் ஆலோசகர்.
ஈர்ப்பு அலைகளைக் கண்டறிந்தமைக்காக
அவர் நோபல் பரிசு பெற்றார்.

4) ஐன்ஸ்டின் இரண்டு ரிலேட்டிவிட்டி தியரிகளைச்
சொன்னார். ஒன்று Special Relativity. இன்னொன்று
Genenral Relativity. SR, GR என்று எழுதினாலே போதும்,
ஆங்கில வாசகர்கள் புரிந்து கொள்வார்கள். ஆனால்
தமிழில் எழுதுவதற்கும் தாலி அறுந்து விடும்.

5) ஐன்ஸ்டினின் இரண்டு ரிலேட்டிவிட்டி
தியரிகளையும்  இன்டெர் ஸ்டெல்லார் சினிமா
அற்புதமாக விளக்கி உள்ளது. அந்த சினிமாவைப்
பார்ப்பதும் சரி, ரிலேட்டிவிட்டி தியரியில் ஒரு
சர்ட்டிபிகேட் கோர்ஸ் படித்து முடிப்பதும் சரி,
இரண்டும் ஒன்றுதான்.

6) படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அற்புதம். மகள்
10 வயதுச் சிறுமியாக இருந்தபோது, அவளைப்
பிரிந்து தந்தை விண்வெளிக்குப் போவான்.
பல ஆண்டுகள் கழித்து விண்வெளிப்பயணம்
முடிந்து, தந்தை திரும்பி வருவான். இதற்குள்
மக்களுக்குத் திருமணமாகி,  குழந்தை குட்டிகள்
பிறந்து, பின் பேரன் பேத்திகளையம்
எடுத்திருப்பாள் மக்கள். முதுமையால் உடல்
தளர்ந்து மரணத் தருவாயில் .இருப்பாள் மகள்
பேரன் பேத்திகள் எல்லாம் சாகப் போகும்
பாட்டியைச் சுற்றி நிற்பார்கள்.

7) அப்போது தந்தை மகளைப் பார்க்க வருவான்.
விண்வெளியில் இருந்ததாலும், ஒளியின் வேகத்தில்
பயணம் செய்ததாலும் தந்தைக்கு வயதாகி
இருக்காது. விண்வெளிக்குப் புறப்படும்போது
35 வயது என்றால், இப்போது திரும்பி வந்த பிறகு,
வயதில் மாற்றம் இருக்காது. ஆனால் மகளோ
பூமியில் இருந்ததால் பாட்டியாகி 80 வயதுடன்
இருப்பாள்.

8) சிறுமி (10 வயது)--தந்தை (35 வயது) என்ற பழைய நிலை
மாறி, மகள் 80 வயதிலும் தந்தை அதே 35 வயதிலும்
இருப்பார்கள்.மகளுக்கும் தந்தைக்கும் ஒரு சிறிய
உரையாடல் நடக்கும். காவியத் தன்மை
கொண்ட உரையாடல் அது.

9) ஆக, இந்தப் படம் இரண்டு ரிலேட்டிவிட்டிகளையும்
அற்புதமாக விளக்கி இருக்கிறது. 2015ல் இந்தப் படத்தை
சென்னை அமிஞ்சிக்கரை ஸ்கைவாக் தியேட்டரில்
பார்த்தேன். இன்று HBO போன்ற ஆங்கில சானல்கள்       
அநேகமாக இப்படத்தை  2 அல்லது 3 மாதங்களுக்கு
ஒருமுறை ஒளிபரப்புகின்றன. வீட்டில் நாற்காலியில்
அமர்ந்து கொண்டு, வேறு வேலையையும்
பார்த்துக் கொண்டு இந்த சினிமாவைப் பார்த்து
முடிக்கலாம். பத்துப் பைசா செலவில்லாமல்.

10) அண்டவெளி (SPACE) நான்கு பரிமாணம் உடையது
என்றார் ஐன்ஸ்டின். அதை விளக்க டெசரக்ட்
என்ற நான்கு பரிமாணமுள்ள ஒரு ஆசனத்தை
(tesseract) இப்படத்தில் காண்பித்து இருப்பார்கள்.

11) இம்மாத (நவம்பர் 2017) அறிவியல் ஒளி இதழில்
ஈர்ப்பு அலைகள் குறித்து ஒரு கட்டுரை எழுதி
உள்ளேன். General Relativity பற்றி அதில் விளக்கி
இருக்கிறேன். இன்னும் 10 நாட்களில் அறிவியல்
ஒளி ஏடு நூலகங்களுக்குச் சென்று விடும்.
படிக்கலாம்.

12) கிறிஸ்டோபர் நோலனின்  பிற படங்களான Dark Knight,
Insomnia ஆகியவற்றையும் பாருங்கள். கிராவிட்டி
(Gravity) படத்தையும் பாருங்கள். கிராவிட்டி
நோலனின் படமல்ல. மேலும் வாச்சோவ்ஸ்கிகள்
( Wachowski brothers) இயக்கிய The Matrix படங்களையும்
பாருங்கள். இவை  அறிவியலைப் புரிந்து கொள்ள
உதவும்.

13) கல்வி கேள்வி மூலமாக அறிவைப் பெறுவது
முற்கால வழக்கம். கல்வி கேள்வி மட்டுமின்றி,
காட்சிகளைப் பார்ப்பதன் மூலமும் அறிவைப்
பெற முடியும் என்பது தற்கால நடைமுறை.
***********************************************************    
   
  


(2) திரைப்படம், ஆவணப்படம், காணொளிகள்
(You Tube videos etc) ஆகியவற்றைப் பார்ப்பதன் மூலம்
அறிவைப் பெற முடிகிறது. வெற்றுக் கேளிக்கை
மற்றும் பொழுதுபோக்கு நோக்கிலான
திரைப்படங்கள் இங்கு சுட்டப்படவில்லை.

(3) ஒரு புத்தகத்தைப் படித்து, அதை புரிந்து, அதன்
சாரத்தை உட்கிரகித்தால் மட்டுமே, அப்புத்தகம்
வழங்கும் அறிவைப் பெற முடியும். புத்தக வாசிப்பு
என்பதில் வாசகனின்செயலூக்கமான பங்கு
முக்கியமானது. அது இல்லாமல் புத்தக வாசிப்பின்
பயனைப் பெற முடியாது.

(4) ஆனால், ஒரு படத்தைப் பார்த்து, அறிவைப்
பெறுவது என்பதில் வாசகனின் பங்கு ஒப்பீட்டளவில்
குறைவு.

(5) தற்காலத்தில் அறிவியல் மற்றும் அறிவியல் புனைவு
 திரைப்படங்கள் அறிவு வழங்கலில் பெரும் பங்கு
வகிக்கின்றன. பத்துப் புத்தகங்களைப் படித்துப்
பெரும் அறிவை ஒரு நல்ல திரைப்படத்தைப்
பார்த்து எளிதில் பெற முடியும்.

கிளைமாக்ஸ் காட்சி!
--------------------------------------
தந்தையும் மக்களும் சந்தித்து உரையாடும் அந்த
அற்புதக் காட்சியைப் பாருங்கள். இந்த 4 நிமிட
யூ டியூப் வீடியோவில் அது உள்ளது. பாருங்கள்.
மக்கள் 80 வயதுக்கு கிழவியாக இருப்பதையும்
அப்பா 35 வயதில் இருப்பதையும் பாருங்கள்.
--------------------
வயது ஆவதற்கும் முதுமை அடைவதற்கும்
என்ன தேவை? காலம் (time) தேவை. 20 வயது
இளைஞன் 60 வயது கிழவன் ஆக
வேண்டுமென்றால் அதற்கு 40 ஆண்டு காலம் தேவை.
ஒளியின் வேகத்தில் செல்வதால் காலமே மிக
மெதுவாகத்தான் செல்லும்.
உதாரணமாக பூமியில் 10 ஆண்டு ஆகிற காலம்
விண்வெளியில் வேறு இடத்தில் அல்லது ஒளிவேகப்
பயணத்தில் இந்த 10 ஆண்டு என்பது 10 நிமிடம்
போன்றது. எனவே காலம் மெதுவாகச் செல்வதால்
இளமை நீடிக்கிறது.
  ---------------------------