அறிவியல் திரைப்படங்களும்
திரைப்படங்களில் அறிவியலும்!
--------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
-------------------------------------------------------
இந்தப் பெண்ணின் முகம் அழகு. இந்த வாக்கியத்தில்
அழகு என்பது கருத்துப்பொருள் (abstract). கருத்துப்
பொருளை விளங்கிக் கொள்வது எளிதல்ல. ஆனால்
அதையே ஒரு காட்சிப் பொருளால் விளக்கும்போது
மனதில் எளிதில் பதியும்.
அவளுக்கு நிலா முகம். இந்த வாக்கியத்தில் நிலா
என்பது காட்சிப் பொருள் (concrete). நிலா முகம் என்னும்போது
அழகு முகம் என்று நம் மனம் எளிதில் விளங்கிக்
கொள்கிறது.கருத்துப் பொருளான அழகு, காட்சிப்
பொருளான நிலாவால் விளக்கப் படுகையில்
புரிதல் எளிதாகிறது.
முற்காலத்தில் அறிவில் சிறந்த ஒருவரை கல்வி கேள்விகளில்
சிறந்தவர் என்று கூறுவார்கள். முற்காலம் தொட்டு அண்மைக்காலம் வரை அறிவைப் பெறும் வழிகளாக
கல்வியும் கேள்வியும் மட்டுமே இருந்து வருகின்றன.
தற்காலத்தில் நவீன அறிவியல் வளர்ச்சியின்
விளைவாக கல்வி கேள்வியுடன் காட்சியும் அறிவைப்
பெறும் வாயிலாக ஆகியுள்ளது. கல்வி கேள்வி காட்சி
ஆகிய மூன்றும் தற்காலத்தில் அறிவின் வாயில்கள்.
கேள்வி ஞானத்தை விட காட்சி ஞானம் சிறந்தது.
செவிப்பறையை விட விழித்திரை ஆற்றல் மிக்கது.
திரைப்படம், ஆவணப்படம், காணொளிகள்

(You Tube videos etc) ஆகியவற்றைப் பார்ப்பதன் மூலம்
அறிவைப் பெறுதல் எளிதாகிறது. ஒரு புத்தகத்தைப்
படித்து, அதைப் புரிந்து, அதன் சாரத்தை உட்கிரகித்தால்
மட்டுமே, அப்புத்தகம் தரும் அறிவைப் பெற முடியும்.
புத்தக வாசிப்பு என்பதில் வாசகனின் பங்கு செயலூக்கம்
உடையது (active). ஆனால், ஒரு படத்தைப் பார்த்து, அறிவைப்

பெறும் செய்கையில் வாசகனின் பங்கு செயலூக்கம்
குன்றியதாக (passive) இருந்தாலும் போதும்.
குன்றியதாக (passive) இருந்தாலும் போதும்.
தற்காலத்தில் அறிவியல் மற்றும் அறிவியல் புனைவு
திரைப்படங்கள் அறிவு வழங்கலில் பெரும் பங்கு
வகிக்கின்றன. பத்து அறிவியல் புத்தகங்களைப் படித்துப்
பெறும் அறிவை ஒரு நல்ல அறிவியல் புனைவை
(science fiction) பார்ப்பதன் மூலம் பெற முடிகிறது.
உயிர் காத்த ஃபாரடே கூண்டு!
-------------------------------------------------------
கமல்ஹாசன் எழுதி இயக்கிய 2013இல் வெளிவந்த
விஸ்வரூபம் படத்தில் இங்கிலாந்து விஞ்ஞானி
மைக்கேல் ஃபாரடே (1791-1867) படத்தின் உச்சக்
காட்சியில் (climax) சிறப்பிடம் பெற்று இருப்பார். இக் காட்சியில் ஃபாரடே கூண்டு (Faraday cage or shield)
அந்த வெடிகுண்டுடன் ஒரு செல் போன்
(science fiction) பார்ப்பதன் மூலம் பெற முடிகிறது.
ஹாலிவுட்டின் ஆங்கிலப் படங்கள் அறிவியலுக்கும்
அறிவியல் புனைவுக்கும் பெயர் பெற்றவை. தமிழ்ப்
படங்களில் அறிவியலோ புனைவோ அறவே இல்லை.
என்றாலும் நடிகர் கமல் ஹாசன் மட்டும் தமது படங்களில்
தொடர்ந்து அறிவியல் செய்திகளைச் சொல்லி வருகிறார்.
அறிவியல் புனைவுக்கும் பெயர் பெற்றவை. தமிழ்ப்
படங்களில் அறிவியலோ புனைவோ அறவே இல்லை.
என்றாலும் நடிகர் கமல் ஹாசன் மட்டும் தமது படங்களில்
தொடர்ந்து அறிவியல் செய்திகளைச் சொல்லி வருகிறார்.
தசாவதாரம் படத்தில் எபோலா வைரஸ் குறித்து கமல்
குறிப்பிடுவார். இப்படம் வெளிவந்த 2008ஆம் ஆண்டில்
எபோலா வைரஸ் குறித்து தமிழ்ச் சமூகம்
அறிந்திருக்காத நிலையில் கமலின் கூற்று காலத்தை
மீறிய சிந்தனையின் வெளிப்பாடு.
குறிப்பிடுவார். இப்படம் வெளிவந்த 2008ஆம் ஆண்டில்
எபோலா வைரஸ் குறித்து தமிழ்ச் சமூகம்
அறிந்திருக்காத நிலையில் கமலின் கூற்று காலத்தை
மீறிய சிந்தனையின் வெளிப்பாடு.
உயிர் காத்த ஃபாரடே கூண்டு!
-------------------------------------------------------
கமல்ஹாசன் எழுதி இயக்கிய 2013இல் வெளிவந்த
விஸ்வரூபம் படத்தில் இங்கிலாந்து விஞ்ஞானி
மைக்கேல் ஃபாரடே (1791-1867) படத்தின் உச்சக்
காட்சியில் (climax) சிறப்பிடம் பெற்று இருப்பார். இக் காட்சியில் ஃபாரடே கூண்டு (Faraday cage or shield)
பற்றி தீவிரமாகப் பேசப்படும். உடனடியாக
ஒரு ஃபாரடே கூண்டு வேண்டும் என்பார் படத்தின்
நாயகி. கதைப்படி கதாநாயகி முனைவர் பட்டம் பெற்ற ஓர் அணுக்கதிரியக்க மருத்துவ அறிஞர் (Nuclear oncologist).
ஃபாரடே கூண்டு படத்தில் வர வேண்டிய அவசியம் என்ன?
ஒரு ஃபாரடே கூண்டு வேண்டும் என்பார் படத்தின்
நாயகி. கதைப்படி கதாநாயகி முனைவர் பட்டம் பெற்ற ஓர் அணுக்கதிரியக்க மருத்துவ அறிஞர் (Nuclear oncologist).
ஃபாரடே கூண்டு படத்தில் வர வேண்டிய அவசியம் என்ன?
நியூயார்க் நகரில் அல்கைதா பயங்கரவாதிகள் ஒரு
கட்டிடத்தில் வெடிகுண்டு வைத்திருப்பார்கள். அமெரிக்க
காவல்துறை (FBI) வெடிகுண்டைக் கண்டுபிடித்து
அகற்றி விடும். அதை அங்குள்ள ஒரு அறையில்
ஒரு மேஜையின் மீது வைத்து .இருப்பார்கள்.
அந்த வெடிகுண்டு சீசியம் (Caesium) என்னும் தனிமத்தால்
செய்யப்பட்டது. இந்தக் குண்டு வெடித்தால், ஒரு சிறிய
அணுகுண்டு வெடித்தது போன்ற சேதாரத்தை ஏற்படுத்தும்
அணுகுண்டு வெடித்தது போன்ற சேதாரத்தை ஏற்படுத்தும்
அந்த வெடிகுண்டுடன் ஒரு செல் போன்
இணைக்கப்பட்டு .இருக்கும். இந்த செல்போன்தான்
வெடிகுண்டை வெடிக்க வைக்கும் கருவி (detonator) ஆகும்.
வெடிகுண்டை வெடிக்க வைக்கும் கருவி (detonator) ஆகும்.
யாரேனும் ஒருவர் அந்த செல்போன் நம்பரை அழைத்து,
அந்த அழைப்பின் மணியோசை இந்த செல்போனில்
கேட்டாலே போதும் வெடிகுண்டு வெடித்து விடும்.
இந்தச் சூழலில்தான் ஃபாரடே கூண்டு தேவைப்
படுகிறது. ஃபாரடே கூண்டு என்ன செய்யும்? வெடிகுண்டு
வெடிக்காமல் தடுக்கும். எப்படி? ஃபாரடே கூண்டால்
வெடிகுண்டை மூடிவிட வேண்டும். வெளியில் இருந்து
வரும் எந்த ஒரு மின்காந்தத் துடிப்பையும்
(Electro Magnetic Pulse), வெடிகுண்டை அண்ட விடாமல்,
ஃபாரடே கூண்டு தடுத்து விடும்; அதாவது வெடிகுண்டுடன்
இணைக்கப் பட்டுள்ள செல்போனுக்கு எந்த சிக்னலும் வராமல்
தடுத்து விடும். இப்படி குண்டு வெடிக்காமல் தடுத்து
விட முடியும்.
அங்கிருந்த பலரில் ஒருவருக்குக் கூட நிகழவிருக்கும்
பேராபத்தைத் தடுப்பதற்கான வழி பற்றித்
பேராபத்தைத் தடுப்பதற்கான வழி பற்றித்
தெரியாது, கதாநாயகி டாக்டர் நிருபமாவைத் தவிர.
எனவே அவர் உடனடியாக ஃபாரடே கூண்டு வேண்டுமென்று கேட்பார். அது வரும் வரை காத்திருக்க முடியாது என்பதால்,
அந்த அறையில் உள்ள ஏதாவது ஒன்று ஃபாரடே கூண்டு
போன்று பயன்படுமா என்று சுற்றுமுற்றும்
பார்ப்பார் கதாநாயகி.
போன்று பயன்படுமா என்று சுற்றுமுற்றும்
பார்ப்பார் கதாநாயகி.
என்ன ஆச்சரியம்! அவருக்கு ஒரு ஃபாரடே கூண்டு
கிடைத்து விடும். அங்கு ஒரு மைக்ரோவேவ்
ஓவன் (microwave oven), அதாவது நுண்ணலை அடுப்பு எரிந்து
கொண்டு இருக்கும். அந்த ஓவனின் வெளிப்புறப்
பகுதியை (outer case) எடுத்து வெடிகுண்டை
மூடி விடுவார் நிருபமா. மைக்ரோவேவ் ஓவன்
என்பது உண்மையில் ஒரு ஃபாரடே கூண்டு ஆகும்.
(Every micro wave oven is a Faraday cage), இதன் மூலம் வெடிகுண்டு
வெடிப்பதை வெற்றிகரமாகத் தடுத்து விடுவார்.
வெடிப்பதை வெற்றிகரமாகத் தடுத்து விடுவார்.
சரி, ஃபாரடே கூண்டு (Faraday shield or cage) என்றால்
என்ன? இந்தக் கூண்டால் ஒரு பொருளை மூடிவிட்டால்,
என்ன? இந்தக் கூண்டால் ஒரு பொருளை மூடிவிட்டால்,
கூண்டுக்கு வெளியில் இருந்து வரும் எந்தவொரு
மின்காந்தத் துடிப்பும் கூண்டுக்குள் இருக்கும்
பொருளை அணுக இயலாது. இதை மைக்கேல்
ஃபாரடே 1836இல் கண்டு பிடித்தார்.
1. ஃபாரடே கூண்டு 2. மைக்ரோவேவ் ஓவன்
3.கதிரியக்கத் தனிமமான சீசியம்
4. கதிரியக்கத்தால் விளையும் நோய்க்கான
மருத்துவம் (nuclear oncology) என்று ஆழமான அறிவியல்
செய்திகளை ஒன்றாகத் திரட்டி சில நிமிடக் காட்சியில்
வைத்த கமலஹாசனின் மேதைமை அறிவியலுக்கு
ஒப்பற்ற பணியை ஆற்றி உள்ளது.
2010இல் வெளியான நோலனின் புகழ்பெற்ற இன்செப்ஷன் (Inception) படத்தில் நரம்பியல் உளவியல் சிக்கல்களும் கனவுகளும் நுட்பமாகச் சித்தரிக்கப் பட்டுள்ளன.ஒருவனின்
ஆழ்மனத்திற்குள் (sub conscious mind) நுழைந்து அங்கு
ஒளிந்திருக்கும் ரகசியங்களை அறிந்து கொள்வது
இப்படத்தில் காட்டப் பட்டுள்ளது.
புகழ்பெற்ற பிற திரைப்படங்கள்!
-----------------------------------------------------
2013இல் வெளிவந்த அல்போன்சா கியூரான் இயக்கிய
கிராவிட்டி (Gravity) படமும் உலகெங்கும் போற்றப்பட்ட
ஒரு படமாகும். விண்வெளிப் பயணத்தின்போது,
விண்கலத்தின் சுற்றுப்பாதை சிதைந்து விட்டதால்
விண்வெளியில் வழிதவறிப்போன அமெரிக்க விண்வெளி
வீரர்கள் பூமிக்குத் திரும்பும் முயற்சியை விவரிக்கும்
அறிவியல் புனைவே கிராவிட்டி படமாகும்.
மேலும் வாச்சோவ்ஸ்கி சகோதரர்கள் (Wachowski brothers)
இயக்கிய 1999இல் வெளிவந்த மேட்ரிக்ஸ் (The Matrix)
படமும் மிகவும் விரும்பிப் பார்க்கப்பட்ட படமாகும். கணினிகளுக்கும் மனிதர்களுக்கும் நடக்கும் போரை
விவரிக்கும் புனைவு இது. இப்படத்தின் வெற்றியைத்
தொடர்ந்து இதன் தொடர்ச்சியாக The matrix reloaded,
The matrix revolutions ஆகிய இரண்டு படங்களும் எடுக்கப்பட்டன.
2014இல் ஆஸ்திரேலியாவில் எடுக்கப்பட்ட ஆங்கிலத்
திரைப்படம் ப்ரிடெஸ்டினேஷன் (Predestination). காலப்
பயணத்தை (time travel) விவரிக்கும் புனைவு இது.
ஸ்பிரிக் சகோதரர்கள் (The Spierig brothers) இப்படத்தை
இயக்கினர். நிகழ்காலத்தில் இருந்து கொண்டு
இறந்த காலத்திற்குச் செல்வதையம் அதனால் ஏற்படும் விளைவுகளையும் விவரிக்கும் படம் இது.
மருத்துவம் (nuclear oncology) என்று ஆழமான அறிவியல்
செய்திகளை ஒன்றாகத் திரட்டி சில நிமிடக் காட்சியில்
வைத்த கமலஹாசனின் மேதைமை அறிவியலுக்கு
ஒப்பற்ற பணியை ஆற்றி உள்ளது.
மெதுவாய்ச் செல்லும் காலம்!
---------------------------------------------------
ஹாலிவுட் திரைப்பட இயக்குனர் கிறிஸ்டோபர்
---------------------------------------------------
ஹாலிவுட் திரைப்பட இயக்குனர் கிறிஸ்டோபர்
நோலன் (Christopher Nolan) உலகப் புகழ் பெற்ற இயக்குனர்..
அவர் ஒரு பல்கலைக் கழகத்திற்குச் சமமானவர்.
2014 இறுதியில் வெளியான அவரின் இன்டெர் ஸ்டெல்லார்
(Interstellar) திரைப்படம் அற்புதமானது. உலக வரலாற்றில்
இதுவரை இப்படி ஒரு படம் எடுக்கப் பட்டதில்லை.
(Interstellar) திரைப்படம் அற்புதமானது. உலக வரலாற்றில்
இதுவரை இப்படி ஒரு படம் எடுக்கப் பட்டதில்லை.
இன்டெர் ஸ்டெல்லார் ஒரு அறிவியல் புனைவு.
(science fiction) ஐன்ஸ்டினின் சார்பியல் கொள்கையை
அற்புதமாக விளக்கும் படம் அது. ஈர்ப்பு அலைகளைக்
கண்டறிந்தமைக்காக 2017ஆம் ஆண்டிற்கான
கண்டறிந்தமைக்காக 2017ஆம் ஆண்டிற்கான
இயற்பியல் நோபல் பரிசைப் பெற்ற கிப் தோர்னே
(Kip Thorne) இப்படத்தின் அறிவியல் ஆலோசகர்.
இப்படத்தைப் பார்ப்பதும் சார்பியலில் ஒரு
சான்றிதழ் படிப்பு (certificate course) படித்து முடிப்பதும் சமமே.
படத்தின் உச்சக் காட்சி (climax) காவியத் தன்மை
வாய்ந்தது. மகள் 10 வயதுச் சிறுமியாக இருந்தபோது,
அவளைப் பிரிந்து தந்தை விண்வெளிக்குப் போவார்.
வாய்ந்தது. மகள் 10 வயதுச் சிறுமியாக இருந்தபோது,
அவளைப் பிரிந்து தந்தை விண்வெளிக்குப் போவார்.
பல ஆண்டுகள் கழித்து விண்வெளிப்பயணம்
முடிந்து, தந்தை திரும்பி வருவார். இதற்குள்
திருமணமாகி, குழந்தை குட்டிகள் பெற்று
பேரன் பேத்திகளையம் எடுத்திருப்பாள் மகள்.
முதுமையால் உடல் தளர்ந்து மரணத் தருவாயில்
இருப்பாள் மகள். பேரன் பேத்திகள் எல்லாம்
சாகப் போகும் பாட்டியைச் சுற்றி நிற்பார்கள்.
முதுமையால் உடல் தளர்ந்து மரணத் தருவாயில்
இருப்பாள் மகள். பேரன் பேத்திகள் எல்லாம்
சாகப் போகும் பாட்டியைச் சுற்றி நிற்பார்கள்.
அப்போது தந்தை மகளைப் பார்க்க வருவார்.
விண்வெளியில் இருந்ததாலும், ஒளியின் வேகத்தில்
பயணம் செய்ததாலும் தந்தைக்கு வயதாகி
இருக்காது. விண்வெளிக்குப் புறப்படும்போது
35 வயது என்றால், இப்போது திரும்பி வந்த பிறகு,
வயதில் பெரிய மாற்றம் இருக்காது. ஆனால் மகளோ
பூமியில் இருந்ததால் பாட்டியாகி 80 வயதுடன்
இருப்பாள். மகளுக்கும் தந்தைக்கும் ஒரு சிறிய
உரையாடல் நடக்கும். அழகியலின் உச்சம் தொட்ட
உரையாடல் அது.
உரையாடல் அது.
இன்று HBO போன்ற ஆங்கில சானல்கள்
அநேகமாக இப்படத்தை 2 அல்லது 3 மாதங்களுக்கு
ஒருமுறை ஒளிபரப்புகின்றன. வீட்டில் நாற்காலியில்
அமர்ந்து கொண்டு, வேறு வேலையையும்
பார்த்துக் கொண்டு இந்தப் படத்தைப் பார்க்கலாம்
பத்துப் பைசா செலவில்லாமல்.
பத்துப் பைசா செலவில்லாமல்.
கிறிஸ்டோபர் நோலனின் பிற படங்களில்
ஒன்றுக்கொன்று தொடர்ச்சியான பின்வரும் மூன்று
படங்களும் குறிப்பிடத் தக்கவை.
1.Batman Begins 2.Dark Knight 3. Dark knight rises ஆகிய தொடர்ச்சியான மூன்றில், 2008இல் வெளிவந்த Dark knight படத்தில் விளையாட்டுக் கொள்கை (game theory) மிகச் சிறப்பாகக்
காட்சிப் படுத்தப் பட்டுள்ளது.
ஒன்றுக்கொன்று தொடர்ச்சியான பின்வரும் மூன்று
படங்களும் குறிப்பிடத் தக்கவை.
1.Batman Begins 2.Dark Knight 3. Dark knight rises ஆகிய தொடர்ச்சியான மூன்றில், 2008இல் வெளிவந்த Dark knight படத்தில் விளையாட்டுக் கொள்கை (game theory) மிகச் சிறப்பாகக்
காட்சிப் படுத்தப் பட்டுள்ளது.
2010இல் வெளியான நோலனின் புகழ்பெற்ற இன்செப்ஷன் (Inception) படத்தில் நரம்பியல் உளவியல் சிக்கல்களும் கனவுகளும் நுட்பமாகச் சித்தரிக்கப் பட்டுள்ளன.ஒருவனின்
ஆழ்மனத்திற்குள் (sub conscious mind) நுழைந்து அங்கு
ஒளிந்திருக்கும் ரகசியங்களை அறிந்து கொள்வது
இப்படத்தில் காட்டப் பட்டுள்ளது.
புகழ்பெற்ற பிற திரைப்படங்கள்!
-----------------------------------------------------
2013இல் வெளிவந்த அல்போன்சா கியூரான் இயக்கிய
கிராவிட்டி (Gravity) படமும் உலகெங்கும் போற்றப்பட்ட
ஒரு படமாகும். விண்வெளிப் பயணத்தின்போது,
விண்கலத்தின் சுற்றுப்பாதை சிதைந்து விட்டதால்
விண்வெளியில் வழிதவறிப்போன அமெரிக்க விண்வெளி
வீரர்கள் பூமிக்குத் திரும்பும் முயற்சியை விவரிக்கும்
அறிவியல் புனைவே கிராவிட்டி படமாகும்.
மேலும் வாச்சோவ்ஸ்கி சகோதரர்கள் (Wachowski brothers)
இயக்கிய 1999இல் வெளிவந்த மேட்ரிக்ஸ் (The Matrix)
படமும் மிகவும் விரும்பிப் பார்க்கப்பட்ட படமாகும். கணினிகளுக்கும் மனிதர்களுக்கும் நடக்கும் போரை
விவரிக்கும் புனைவு இது. இப்படத்தின் வெற்றியைத்
தொடர்ந்து இதன் தொடர்ச்சியாக The matrix reloaded,
The matrix revolutions ஆகிய இரண்டு படங்களும் எடுக்கப்பட்டன.
2014இல் ஆஸ்திரேலியாவில் எடுக்கப்பட்ட ஆங்கிலத்
திரைப்படம் ப்ரிடெஸ்டினேஷன் (Predestination). காலப்
பயணத்தை (time travel) விவரிக்கும் புனைவு இது.
ஸ்பிரிக் சகோதரர்கள் (The Spierig brothers) இப்படத்தை
இயக்கினர். நிகழ்காலத்தில் இருந்து கொண்டு
இறந்த காலத்திற்குச் செல்வதையம் அதனால் ஏற்படும் விளைவுகளையும் விவரிக்கும் படம் இது.
இங்கிலாந்தில் பிறந்து இலங்கையில் வாழ்ந்த
ஆர்தர் கிளார்க் (Arthur C Clarke 1919-2008) ஓர் அறிவியல்
எழுத்தாளர். இவர் அறிவியல் புனைவு எழுத்தாளரும்கூட.
இவரின் ஒரு நாவல் 2001: A space Odyssey. இதைத் தொடர்ந்து
"2010: Odyssey Two".என்ற நாவலையும் எழுதினார்.
இந்த நாவலைப் பின்பற்றி ஒரு ஆங்கிலத்
திரைப்படம் எடுக்கப் பட்டது. அதன் பெயர்:
"2010: The year we make contact" ஆகும். இப்படத்தை
இயக்கியவர் பீட்டர் ஹைமஸ் (Peter Hyams).
2001இல் அமெரிக்கா "டிஸ்கவரி ஒன்று" என்ற
விண்கலத்தை வியாழனுக்கு அனுப்பியது. அதன்
கதி என்னவென்று தெரியவில்லை. அதில் சென்ற விண்வெளியாளர்களில் (astronauts) 4 பேர் இறந்து
விட்டனர் என்று செய்தி கிடைக்கிறது.
எனவே அதைக் கண்டறிந்து மீட்க அமெரிக்காவும்
சோவியத் ஒன்றியமும் தனித்தனியாக
விண்கலன்களை அனுப்புகின்றன. வியாழனை
விண்கலன் அடைந்தபோது, வியாழனில் உயிர்
இருப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.
இப்படிப் போகிறது கதை. மீதியை வெள்ளித்
திரையில் காணவும்.
சதுரங்கம் முற்றிலும் கணிதமே!
---------------------------------------------------------
1972இல் எங்கள் கல்லூரிக் காலத்தில், சதுரங்க
---------------------------------------------------------
1972இல் எங்கள் கல்லூரிக் காலத்தில், சதுரங்க
உலகில் பெரும் செல்வாக்குடன் இருந்தவர்கள்
இரண்டு பேர். ஒருவர் பாபி ஃபிஷர்; இன்னொருவர்
போரிஸ் ஸ்பாஸ்கி. பாபி ஃபிஷர் அமெரிக்கர்.
ஸ்பாஸ்கி சோவியத் ஒன்றிய (ரஷ்யா) நாட்டவர்.
1972இல் சதுரங்க உலக சாம்பியன் போட்டி
ஐஸ்லாந்து ரெய்க்ஜெவிக் நகரில் நடைபெற்றது.
சாம்பியன் ஸ்பாஸ்கி; சாலஞ்சர் பாபி பிஷர்.
மொத்தம் 24 ஆட்டங்கள்; யார் முதலில் 12.5 புள்ளிகள்
பெருகிறாரோ அவருக்கே வெற்றி. இதுதான் உலக
சதுரங்க சம்மேளனம் (FIDE) நிர்ணயித்த போட்டியின் விதி.
1948 முதல் உலக சதுரங்க சாம்பியனாக சோவியத்தே
இருந்து வந்தது. ஆனாலும், சோவியத்தின் இந்த
கால் நூற்றாண்டு கால வையத் தலைமையை
பாபி ஃபிஷர் தகர்த்து விட்டார். ஆம், ஸ்பாஸ்கியைத்
தோற்கடித்து, ஃபிஷர் உலக சாம்பியன் ஆனார்.
( ஃபிஷர்= 12.5; ஸ்பாஸ்கி= 8.5)
மாஸ்கோ விமான நிலையத்தில் வந்து இறங்கிய
ஸ்பாஸ்கியை வரவேற்க நாதியில்லை. சோவியத்
ஒன்றியத்தில் சதுரங்கம் என்பது வெறும்
விளையாட்டல்ல. அது சோவியத்தின் பெருமை.
அது சோவியத்தின் அரசியல். அதைப் பறிகொடுத்த
ஸ்பாஸ்கி சோவியத் அரசால் வெறுக்கப் பட்டதில்
வியப்பில்லை.
சதுரங்கப் பலியாடுகள் (Pawn Sacrifice) என்ற
அமெரிக்கப் படம் 2014இல் வெளிவந்தது. ஃபிஷரின்
வாழ்க்கை வரலாற்றை விளக்கும் படம் இது. ஃபிஷர், ஸ்பாஸ்கி இருவரின் உலக சாம்பியன் ஆட்டங்கள் படத்தில் சிறப்பாகக் காட்டப் படுகின்றன.
முற்றிலும் கணித விதிகளுக்கு உட்பட்ட விளையாட்டு
சதுரங்கம் என்பதால், இப்படம் ஒரு வாழ்க்கை வரலாறு
(biography) என்ற போதிலும் இதுவும் அறிவியல் படமாக
வகைப்படுத்தத் தக்கது.
கணிதமேதைகளின் வாழ்க்கை வரலாறுகள்!
---------------------------------------------------------------------------------
நோபல் பரிசு ஏபெல் பரிசு இரண்டையும் வென்ற
---------------------------------------------------------------------------------
நோபல் பரிசு ஏபெல் பரிசு இரண்டையும் வென்ற
அமெரிக்கக் கணித மேதை ஜான் நாஷின் (John Forbes Nash Jr
1928-2015) வாழ்க்கை வரலாறு A beautiful mind என்ற பெயரில்
படமானது. 2001இல் வெளியான இந்த அமெரிக்கப் படத்தை ரான் ஹாவர்டு இயக்கியுள்ளார்.
இந்தியக் கணிதமேதை ராமானுஜனின் வாழ்க்கை
வரலாற்றை விளக்கும் பிரிட்டிஷ் திரைப்படம்
The man who knew infinity என்பது. 2015இல் வெளியான
இந்த ஆங்கிலப்படத்தை மாத்யூ பிரௌன் இயக்கியுள்ளார்.
தமிழிலும் ராமானுஜனின் வாழ்க்கை வரலாறு
ராமானுஜன் என்ற பெயரில் படமாகி உள்ளது.
ஜூலை 2014இல் வெளிவந்த இப்படத்தை பிரபல
இயக்குனர் ஞானசேகரன் இயக்கி உள்ளார்.
மேற்கூறிய மூன்று படங்களும் கணித மேதைகளின்
வாழ்க்கை வரலாற்றைக் கூறுவதால் இவையும்
அறிவியல் படங்களே ஆகும்.
கற்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் கடினமானது
அறிவியல் என்ற கருத்தை உடைத்து நொறுக்கி
அறிவியல் கற்பதை இன்பமான நிகழ்வாக
மாற்ற வல்லவை இக்கட்டுரை கூறும் திரைப்படங்கள்.
அறிவியல் படங்கள் என்ற பட்டியல் மிகவும்
நீண்டது. விரிவஞ்சி அவை அனைத்தும் இங்கு
தரப்படவில்லை. கூறப்பட்ட படங்கள் மிகுதியும்
அண்மைக் காலத்தவை. அறிவியல் ஆர்வலர்களுக்கு
மட்டுமல்ல ஏனையோருக்கும் இவை கண்டிப்பாகப்
பார்க்க வேண்டிய படங்களே (must watch movies).
மேற்கூறிய படங்கள் அனைத்தையும் யூ டியூபில்
இலவசமாகப் பார்க்கலாம்.
மேற்கூறிய படங்கள் அனைத்தையும் யூ டியூபில்
இலவசமாகப் பார்க்கலாம்.
***********************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக