ஆரியம் என்றும் திராவிடம் என்றும்
மனித இனமோ (human race), இனக்குழுச்
சமூகமோ (ethnic social group), தேசிய இனமோ
(nationality) கிடையாது என்கிறது அறிவியல்.
இதை அறிவியல் நிரூபித்துள்ளது.
1) இந்தியன் என்று ஒரு தேசிய இனம் (nationality)
இல்லை. இந்தியா என்பது பல தேசிய இனங்களின்
கூட்டமைப்புதான். அதுபோலவே திராவிடன் என்றும்
ஒரு தேசிய இனம் கிடையாது.
2) தமிழர்கள் ஒரு இனக்குழுச் சமூகத்தைச்
சேர்ந்தவர்கள். அந்த இனக்குழுச் சமூகம்
(ethnic group) தமிழ்ச் சமூகமே தவிர திராவிட
இனக்குழு அல்ல. திராவிடம் என்ற பெயரில்
எந்தவொரு இனக்குழுவும் எந்தக் காலத்திலும்
இருந்தது கிடையாது.
3) மனித இனம் (human race) என்று எடுத்துக் கொண்டால்
வெள்ளையன், கருப்பன், மஞ்சள் நிறத்தவன் என்றுதான்
மனித இனம் உள்ளதே தவிர, ஆரிய இனம் என்றோ
திராவிட இனம் என்றோ எந்த ஒரு மனித இனமும்
கிடையாது.
4) மேற்கூறிய மூன்றையும் அறிவியல் நிரூபித்து உள்ளது.
திமுகவை கைப்பற்றி விடலாம் என்ற
நப்பாசை வைகோவிடம் மீண்டும்
துளிர் விடுகிறது என்பதையே அவரின்
அறிவாலய விஜயம் காட்டுகிறது!
நாம் Negroid எனப்படும் கறுப்பர் இனப்பிரிவின்
ஓர் உட்பிரிவினர் ஆவோம். இக்கருத்தே இன்று ஏற்கப்பட்டும்
பரிசீலிக்கப் பாடும் வருகிற கருத்தாகும்.
இன்று நாம் அவ்வளவு கருப்பாக இல்லை. இதற்குக்
காரணம் வசிப்பிடத்தின் தட்பவெப்பச் சூழலே.
மனித இனம் குறித்த பல்வேறு அறிவியல் பிரிவுகள்
பொதுவாகத் தோராயமானவையே. கணிதம் இயற்பியல்
போல் அவை துல்லியம் உடையவை அல்ல.
இவற்றுள் evolutionary biology மட்டுமே பெருமளவு
ஏற்கத்தக்கது என்பது என் கருத்து. எனவே அந்த
அடிப்படையில்தான் இப்பதிவின் கருத்து
அமைந்துள்ளது.
ஆரியர் என்று கருதப்படும் வட இந்தியாவின்
உயர்சாதி பிராமணர் ஒருவரையும் தென் கோடி
முனையில் உள்ள திராவிடர் எனப்படும் திருநெல்வேலி
மாவட்டத்தைச் சேர்ந்த நல்ல கருப்பரான மிகவும் பிற்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவரையும் எடுத்துக்கொண்டு
பரிசீலிப்போம். இருவருக்கும் DNA ரீதியான வேறுபாடோ
அல்லது வேறு உயிரியல் ரீதியான வேறுபாடோ இல்லை
என்பது அறிவியலால் நிரூபிக்கப் பட்டுள்ளது.
தேசிய இனம் (nationality) என்பது மானுட வரலாற்றில்
சமீபத்திய வரவு. முதலாளித்துவ காலக்கட்டத்தின்
கோட்பாடு அது. அது ஒரு சமூகக் கட்டுமானம்
(social construct).
மறப்பினும்
மரபினம் (race) என்பதே வெறும் சமூகக் கட்டுமானம்தான்
(just a mere social construct) என்ற ஒரு கருத்தும் செல்வாக்குப்
பெற்று வருகிறது நம் சமகாலத்தில். இந்தச் சூழலில்
ஆரிய இனம் திராவிட இனம் என்று கதைத்துக்
கொண்டிருப்பது நகைப்புக்கு இடமாகும். திருநெல்வேலிக்
காரனுக்கெல்லாம் ஒரு பொதுத்தன்மை உண்டு.
அது மிகப்பரவலாக வெளிப்படும். அதற்காக திருநெல்வேலிக் காரன் ஒரு தனி இனமாகி விடுவானா?
ஆப்பிரிக்காவில் தோன்றிய மனித இனத்தில் ஒரு
"வந்து சேர்ந்தது" என்று ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்?
இங்கு இந்தியாவில் மனித இனமே தோன்றவில்லை
என்ற கருத்து ஏற்புடையது அல்ல. அடுத்து, தமிழ் நிலத்தில்
தோன்றி வாழ்ந்த இனக்குழு தமிழ் இனக்குழுவே
தவிர, திராவிட இனக்குழு அல்ல என்பதுதான்
பதிவில் சுட்டப்படுகிறது.
திராவிடம் என்பது வெறும் பிரதேசத்தின் பெயர்.
வட இந்தியாவிலும் இனக்குழுக்கள் தோன்றி
வாழ்ந்தன. எல்லோரையும் வந்தேறிகள் என்று
சொல்லி விடுவதா?
மாந்த இனப்பகுப்பு (racial classification) ஒரு விசாலமான
அகன்ற பகுப்பாகும். ஒரு பகுப்புக்குள் பல்வேறு
உட்பகுப்புகள் மற்றும் கிளைகள் உண்டு.எல்லைக்கோடுகள்
கறார் ஆனவை அல்ல. எனவே வேற்றுமையும் ஒற்றுமையும்
இணைந்தே காணக் கிடைக்கின்றன. .
ஆரிய திராவிட இனப்பகுப்பு பற்றியும் அதன்
சரித்தன்மை அல்லது பிழை பற்றியும் தற்போது
படிக்கத் தொடங்கியுள்ளேன்.இது பிழையானது
என்பதற்கான ஆதாரங்கள் தொடர்ந்து கிடைத்துக்
கொண்டே இருக்கின்றன. ஆழ்ந்து படிப்பதாக
உத்தேசம். இது சில மாதங்களை விழுங்கிவிடும்.
சற்றுக் காத்திரமான கருத்துகள், கேள்விகள்
வந்துள்ளன. விவாதம் தொடரட்டும். படித்து முடிந்ததும்
ஒரு தொடராக எழுத விருப்பம். காத்திரமான
கருத்துகள் தொடர்ந்து வரவேற்கப் படுகின்றன.
நாம் அனைவருமே ஹோமோ சேப்பியன்களே. இதில்
மட்டும் அனைவரும் ஒத்துப் போகின்றனர்.
தென் தமிழகத்தில் கடலுக்கு அடியில் தோண்ட வேண்டும்.
நிலப்பகுதிலேயே தோண்டி அகழ்வாய்வு மேற்கொள்வது
அதிகப்பயனைத் தராது. இதற்கான செலவில் ஒரு
பகுதியை அரசு வரி விதித்தாலும் சரி, ஏற்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக