புதன், 21 பிப்ரவரி, 2018

அறிவியல் திரைப்படங்களும் தொகுப்பு
----------------------------------------------------------------------------------------------------------------
HBO சானலில் கிறிஸ்டோபர் நோலனின்
DARK KNIGHT படத்தை தற்போது மீண்டும்
பார்க்கிறேன்.Opening sceneல் ஜோக்கரின்
வருகையும் actionம் அட்டகாசம்.  படம் பார்த்து அபாரம்!
--------------
பார்க்க வேண்டிய ஓர் அறிவியல் சினிமா!
2010: ஒடிசி இரண்டு!
--------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------
ஆர்தர் கிளார்க் ஓர் அறிவியல் புனைவு எழுத்தாளர்
(science fiction writer). சில அணுக்களுக்கு முன்பு இவர்
இறந்து விட்டார். இவர் புனைவாக எழுதிய பல
விஷயங்கள் அறிவியலின் வளர்ச்சியில்
உண்மையாகி விட்டன. இவரின் ஒரு நாவல்
"2010: Odyssey Two".

இந்த நாவலைப் பின்பற்றி ஒரு ஆங்கிலத்
திரைப்படம் எடுக்கப் பட்டது. அதன் பெயர்:
"2010: The year we make contact" ஆகும். இப்படத்தை
இயக்கியவர் Peter Hyams.

படத்தின் கதை:
----------------------------
2001இல் அமெரிக்கா "டிஸ்கவரி ஒன்று" என்ற
விண்கலத்தை வியாழனுக்கு அனுப்பியது. அதன்
கதி என்னவென்று தெரியவில்லை. அதில் சென்ற விண்வெளியாளர்களில் (astronauts) 4 பேர் இறந்து
விட்டனர் என்று செய்தி கிடைக்கிறது.

எனவே அதைக் கண்டறிந்து மீட்க அமெரிக்காவும்
சோவியத் ஒன்றியமும் தனித்தனியாக
விண்கலன்களை அனுப்புகின்றன. வியாழனை
விண்கலன் அடைந்தபோது, வியாழனில் உயிர்
இருப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.
இப்படிப் போகிறது கதை. மீதியை வெள்ளித்
திரையில் காணவும்.

நியூட்டன் அறிவியல் மன்றம் இப்படத்தைப்
பார்க்கும்படி பரிந்துரைக்கிறது. இதுபோன்ற
படங்களை பார்ப்பதன் மூலமும், விண்வெளி
குறித்த சில தகவல்களை அறிந்து கொள்ள
முடியும். தோராயமாகவேனும் விண்வெளி
அறிவியல் (space science) குறித்து ஒரு புரிதல்
கிடைக்கும். சிலருக்கு இது அறிவியலில்
ஆர்வத்தைத் தூண்டக் கூடும்.

அறிவியல் புத்தக வாசிப்புக்குத் தேவையான
ஒரு பின்னணி இப்படத்தைப் பார்ப்பதன் மூலம்
கிடைக்கும். எல்லாவற்றையும் எழுதிப் புரிய
வைக்க முடியாது.

எனவே படத்தைப் பார்க்க வேண்டுகிறோம்.
*********************************************************   
சதுரங்கப் பலியாடுகள்!
Pawn Sacrifice அமெரிக்கத் திரைப்படம்!
---------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------
1972இல் எங்கள் கல்லூரிக் காலத்தில், சதுரங்க
உலகில் பெரும் செல்வாக்குடன் இருந்தவர்கள்
இரண்டு பேர். ஒருவர் பாபி ஃபிஷர்; இன்னொருவர்
போரிஸ் ஸ்பாஸ்கி. பாபி ஃபிஷர் அமெரிக்கர்.
ஸ்பாஸ்கி சோவியத் நாட்டவர்.
(சோவியத்=USSR= இன்றைய ரஷ்யா).

1972இல் சதுரங்க உலக சாம்பியன் போட்டி
ஐஸ்லாந்து ரெய்க்ஜெவிக் நகரில் நடைபெற்றது.
சாம்பியன் ஸ்பாஸ்கி; சாலஞ்சர் பாபி பிஷர்.

மொத்தம் 24 ஆட்டங்கள்; யார் முதலில் 12.5 புள்ளிகள்
பெருகிறாரோ அவருக்கே வெற்றி. இதுதான் உலக
சதுரங்க சம்மேளனம் FIDE நிர்ணயித்த போட்டியின் விதி.

2013இல்  ஆனந்த், மாக்னஸ் கார்ல்சன்
இடையே உலக சாம்பியன் போட்டி சென்னையில்
நடைபெற்றது. அப்போது மொத்த ஆட்டங்கள் 12
என்றும் முதலில் 6.5 புள்ளிகள் பெறுபவர்க்கே வெற்றி
என்றும் FIDE போட்டி விதியை நிர்ணயித்து இருந்தது.
கால மாற்றத்தில் 24 ஆட்டங்கள் பாதியாகக்
குறைந்து விட்டன.சென்னையில் நடந்த இந்த
ஆட்டத்தை எத்தனை பேர் நேரில் போய் பார்த்தீர்கள்!

1948 முதல் உலக சதுரங்க சாம்பியனாக சோவியத்தே
இருந்து வந்தது. கால் நூற்றாண்டு காலத்து
வையத் தலைமை. (இக்கட்டுரையைப் படிக்கும்
இளைஞர்களுக்கு வையத்தலைமை என்ற
சொல்லுக்குப் பொருள் தெரியவில்லை எனில்
பாரதியின் ஆத்திசூடியைப் படித்த பிறகு
இக்கட்டுரையைப் படிக்கவும்).

ஆனாலும், இந்த கால் நூற்றாண்டு காலத் தலைமையை
பாபி ஃபிஷர் தகர்த்து விட்டார். ஆம், ஸ்பாஸ்கியைத்
தோற்கடித்து, ஃபிஷர் உலக சாம்பியன் ஆனார்.
( ஃபிஷர்= 12.5; ஸ்பாஸ்கி= 8.5)

உலகமே எதிர்பார்த்தது போல, முதல் ஆட்டத்தில்
ஸ்பாஸ்கியே வென்றார். இரண்டாவது ஆட்டத்தை
ஃபிஷர் walkover செய்தார். எனவே 2-0 என்ற நிலையில்
ஸ்பாஸ்கி முன்னிலையில் இருந்தார். மூன்றாவது
ஆட்டத்தில் ஃபிஷர் வென்றார். மொத்த உலகமும்
ஃபிஷரை உற்று நோக்க ஆரம்பித்தது. பின் பிரசித்தி
பெற்ற அந்த ஆறாவது ஆட்டம். அதிலும் ஃபிஷருக்கே
வெற்றி. முன்னதாக 4ஆவது ஆட்டம் டிரா. 5ஆவதிலும்
ஃபிஷருக்கே வெற்றி. முதல் 6 ஆட்டங்கள் வரையிலான
இந்த முடிவுகளை என்னுடைய நினைவில் இருந்து
எடுத்து எழுதுகிறேன். காரணம் அந்த நினைவுகள்
அவ்வளவு ஆழமானவை; பசுமையானவை.

மாஸ்கோ விமான நிலையத்தில் வந்து இறங்கிய
ஸ்பாஸ்கியை வரவேற்க நாதியில்லை. சோவியத்
ஒன்றியத்தில் சதுரங்கம் என்பது வெறும்
விளையாட்டல்ல. அது சோவியத்தின் பெருமை.
அது சோவியத்தின் அரசியல். அதைப் பறிகொடுத்த
ஸ்பாஸ்கி சோவியத் அரசால் வெறுக்கப் பட்டதில்
வியப்பில்லை.

போன மாதமோ அல்லது அதற்கும் முந்தியோ
வீட்டு டி.வி.யில் HBO போன்ற ஒரு சானலில்
ஒரு அமெரிக்கப் படம் பார்த்தேன்.  Pawn Sacrifice என்ற
படம். ஃபிஷரின்  வாழ்க்கை வரலாற்றை விளக்கும்
நோக்கில் அமைந்த படம். அது ஒரு biography.

ஃபிஷர் ஸ்பாஸ்கி உலக சாம்பியன் ஆட்டங்கள்
படத்தில் சிறப்பாகக் காட்டப் படுகின்றன.
அது பனிப்போர் (cold war) நடந்த காலம். இந்நிலையில்
ஃபிஷரின் வெற்றி அமெரிக்காவின் வெற்றியாக
அமைந்தது.

விரும்புபவர்கள் இந்தப் படத்தைப் பார்க்கலாம்
என்று பொதுவாகச் சொல்ல விரும்பவில்லை.
இப்படம் ஒரு must watch movie என்று பரிந்து
உரைக்கிறோம். ஃபிஷர் ஸ்பாஸ்கி இருவருமே
pawns என்பதுதான் படத்தின் message.

பனிப்போர் பற்றி, சதுரங்கம் பற்றி, ஃபிஷர்
என்னும் மாயக்காரனைப் பற்றி, ஸ்பாஸ்கி
என்னும் அற்புதமான ஆட்டக்காரனைப் பற்றி,
உலக அரசியல் பற்றி .....  இவ்வாறு பற்பல
விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

சுமார் 10 புத்தகங்களைப் படித்துத் தெரிந்து கொள்ள
வேண்டிய இத்தனை விஷயங்களையும் இந்த
அமெரிக்கத் திரைப்படம் சுலபத்தில் சொல்லிக்
கொடுத்து விடுகிறது.
********************************************************
   அண்மையில் வந்த ஹாலிவுட் ஆங்கில சினிமாவின்
அறிவியல் ஆலோசகர் அண்மையில்  நோபல் பரிசு
பெற்றுள்ளார். அவர் யார்? அந்த சினிமா எது?  அதன்
இயக்குனர் யார்?

உங்களின் ஸ்டேட்மென்ட் மிகவும் elelmentaryயான,
நுனிப்புல் தன்மையானது. ஆட்டக்காரர்களின்
தரத்தை அளவிட பல்வேறு தர நிர்ணய முறைகள்
உள்ளன. Elo rating என்ற முறை அதில் ஒன்று. FIDE
போட்டிகளில் Elo rating பயன்படுகிறது. இதில் எல்லாம்
காஸ்பரோவ் all time high அந்தஸ்தில் உள்ளார்.
அஜித் விஜய் மாதிரி காஸ்பரோவ் ஆனந்த்
விவகாரத்தை மாற்ற வேண்டாம்.

காஸ்பரோவும் ஆனந்தும் விளையாடிய 14 ஆண்டு
காலக் கட்டத்தில், 48 classical ஆட்டங்களில், ஆனந்த்
3 முறை மட்டுமே வென்றுள்ளார். 15 முறை
காஸ்பரோவிடம் தோற்றுள்ளார். மீதி draw.
இந்தப் புள்ளி விவரமும் இல்லாமல், வாய்க்கு
வந்தபடி இங்கு பேச இயலாது. 
------------------------
ஹாலிவுட் ஆங்கில சினிமா
1. The Matrix 2. Matrix Reloaded 3.Matrix Revolutions பாருங்கள்.
பார்த்தது உண்டா? பொருள்முதல்வாதம்
கருத்துமுதல்வாதம் பற்றி புரிந்து கொள்ளலாம். அறிந்து கொள்ளலாம் அறியலாம்

இன்றைய இளைய தலைமுறை இந்த ஆங்கில
சினிமாக்களை பார்த்து புறநிலை யதார்த்தம் (Reality)பற்றி, பொருள்முதல்வாதம் பற்றி அறிந்து கொள்கிறார்கள்.
HBO போன்ற சானல்களில் அடிக்கடி காட்டுகிறார்கள்.
10 புத்தகங்களைப் படிப்பதால் கிடைக்கும் அறிவை
இது போன்ற சினிமாக்களை பார்ப்பதன் மூலம்
பெறுகிறார்கள்.

உங்கள் வீட்டு டி.வி.யில் காசு செலவில்லாமல்
பார்க்கலாம். ஒரே ஒரு நிபந்தனை: ஆங்கிலம்
நனறகத் தெரிந்து இருக்க வேண்டும். ஓரளவு
ஆங்கிலம் பயன்படாது.
----------------
சமீப காலம் வரை ‘காலப் பயணம்’ என்பதையே அறிவியலுக்குப் புறம்பான ஒரு கற்பனை என்றுதான் புகழ் பெற்ற அறிவியலாளர்கள் உட்பட பலரும் எள்ளி நகையாடிவந்தார்கள். ‘காலப் பயணம்’ ஏன் சாத்தியம் இல்லை என்பதற்கு மூன்று முரண்பாடுகளை முன்வைத்தார்கள். அவை இங்கே…
அப்பா பிறப்பதற்கு முன்பே தாத்தாவைக் கொல்லுதல்:
குணாளன் என்பவர் கால இயந்திரத்தின் மூலம் கடந்த காலத்தை நோக்கிப் பயணிக்கிறார். அங்கே அவர் தனது தாத்தாவைச் சந்திக்கிறார். அப்போது குணாளனின் அப்பா பிறந்திருக்கவில்லை. குணாளன் தனது தாத்தாவைச் சுட்டுவிடுகிறார். அப்படியென்றால் குணாளனின் அப்பாவும் பிறக்க மாட்டார். குணாளனும் பிறக்க மாட்டார் அல்லவா! பிறக்காத குணாளன் எப்படிக் காலப் பயணம் செய்து தன் தாத்தாவைச் சுட்டுக்கொல்ல முடியும்?
கடந்த காலம் இல்லாத மனிதன்:
முத்தழகன் என்ற இளைஞர் கால இயந்திரத்தைக் கண்டுபிடிக்க முயன்றுகொண்டிருக்கிறார். அப்போது அவரைப் பார்க்க வரும் முதியவர் ஒருவர் கால இயந்திரத்தை வடிவமைப்பது எப்படி என்று சொல்லித்தருகிறார். அதைக் கொண்டு முத்தழகன் எதிர்காலத்தை நோக்கிப் பயணித்து பங்குச் சந்தை, கார் பந்தயம், விளையாட்டுப் போட்டி போன்றவற்றின் முடிவுகளைத் தெரிந்துகொண்டு மறுபடியும் நிகழ்காலத்துக்கு வருகிறார்.
தான் தெரிந்துகொண்டதை வைத்துக்கொண்டு பெரும் பணக்காரர் ஆகிறார். முத்தழகனுக்கு வயதாகிறது. தனது கடந்த காலத்தை நோக்கிப் பயணித்து, இளைஞராக அப்போது இருக்கக் கூடிய தனக்குக் கால இயந்திரத்தை வடிவமைப்பதன் ரகசியத்தைச் சொல்லுகிறார். அப்படியென்றால் ஆரம்பத்தில் பார்த்த முதியவர் முத்தழகன்தான். முத்தழகனுக்கு முத்தழகனே யோசனை என்றால் முதன்முதலில் கால இயந்திரத்தை முத்தழகனுக்கு யார் சொல்லிக்கொடுத்திருப்பார்கள்?
தாயும் நீயே தந்தையும்…
ப்ரீடெஸ்டினேஷன் படத்தில் ஜேன் மற்றும் ஜான்
காலப் பயணத்தைப் பற்றிய முக்கியமான திரைப்படங்களுள் ஒன்று ‘ப்ரீடெஸ்டினேஷன்’. காலப்பயணம் செய்யும் ஒரு ரகசிய ஏஜென்ட் மதுவிடுதி ஒன்றில் வேலை பார்க்கிறார். அங்கே வரும் ஜான் என்ற நபர் மது குடித்துக்கொண்டே தனது விசித்திரமான வாழ்க்கைக் கதையைப் பற்றிச் சொல்கிறார்.
பெண்ணாகப் பிறந்தவர் ஜான் (பெண் பெயர்- ஜேன்). பிறந்த உடனேயே யாரோ ஒருவரால் ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டுபோய் விடப்பட்ட ஜேன் அங்கேயே வளர்கிறார். பருவமடைந்த பிறகு சந்திக்கும் ஒரு இளைஞனிடம் காதல் வயப்பட்டு அவளுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. ஆனால், அந்தக் குழந்தை காணாமல் போகிறது. பிரசவத்தின்போது ஜேனுக்கு இரண்டு பாலினத்துக்கும் உரிய உறுப்புகளும் இருப்பது மருத்துவர்களுக்குத் தெரிகிறது. அப்போது ஏற்பட்ட ஒரு சிக்கலின் காரணமாக ஜேனை ஆணாக மாற்றிவிடுகிறார்கள். அந்த ஆண்தான் ஜான்
predestination movie poster
இந்தக் கதையைச் சொல்லிமுடித்ததும் ஜேனின் காதலனைக் கண்டு பிடிப்பதற்காக ஜானைக் கால இயந்திரத்தில் ஏற்றிக்கொண்டு, ஜேனும் அவளது அடையாளம் தெரியாத காதலனும் முதன்முதலின் சந்தித்த தருணத்துக்கு அழைத்துச்செல்கிறார் அந்த ஏஜென்ட். அங்கே, ஜேனும் ஜானும் (இரண்டு பேரும் ஒன்றுதான்!) சந்தித்துக்கொள்கிறார்கள். காதல் வயப்படுகிறார்கள். ஜேன் கர்ப்பமாகிறாள். இறுதியில், அந்த ஏஜென்ட், ஜேன், ஜான், குழந்தை அனைவரும் ஒரே நபர் என்பதும், காலப்பயணங்களால் ஏற்பட்ட விசித்திர சந்திப்புகளின் விளைவுகளே அவர்கள் என்பதும் நமக்குத் தெரியவருகிறது. தானே தனக்குத் தாயும் தகப்பனும் குழந்தையும் என்றால் தாத்தா, பாட்டி யார்?
நான்காவது முரண்:
காலப் பயணம் சாத்தியம் இல்லை என்பதற்கு அறிவியலாளர்களால் முன்வைக்கப்பட்ட முரண் உதாரணங்கள்தான் இவை. இவற்றோடு நான்காவதாக ஒரு முரணை ஸ்டீவன் ஹாக்கிங் முன்வைக்கிறார். காலப் பயணம் செய்வது சாத்தியம் என்றால் நம் எதிர்காலத் தலைமுறைகள் யாராவது காலப் பயணம் செய்துவந்து நம்மை ஏற்கெனவே சந்தித்திருப்பார்களே? அப்படி யாரும் இதுவரை சந்திக்கவில்லை என்பதே எதிர்காலத்திலும் காலப் பயணத்துக்கான வழிமுறைகள் சாத்தியப்படாது என்பதற்கான உதாரணம்தானே என்று கேள்வி கேட்கிறார்.
ஆனால், தற்போதோ ஸ்டீவன் ஹாக்கிங் உட்பட பல அறிவியலாளர்கள் காலப் பயணம் என்பது சாத்தியமாகலாம் என்ற மனமாற்றத்துக்கு வந்திருக்கிறார்கள். ஏன்?
காலம் ஒரு அம்பு போல முன்னே பாய்ந்து செல்கிறது என்றும், பூமி, செவ்வாய், சூரியன் என்று பிரபஞ்சத்தில் எங்கும் காலம் ஒரே மாதிரி பயணித்துக்கொண்டிருக்கிறது என்றும் நியூட்டன் சொல்கிறார். நியூட்டன் காலத்துக்குப் பிறகு, 18-ம் நூற்றாண்டில் இத்தாலிய அறிவியலாளர் லக்ராஞ், இயக்கவியலைப் பற்றிச் சொல்லும்போது “இயக்கம் என்பது நான்கு பரிமாணங்களில் நடைபெறுகிறது. மூன்று பரிமாணங்கள் இடத்தைச் சார்ந்தவை, ஒரு பரிமாணம் காலம்” என்று காலத்தை நான்காவது பரிமாணமாக முன்வைக்கிறார். அதற்குப் பிறகு ‘நான்காவது பரிமாணமாகக் காலம்’ என்ற கோட்பாடு சூடுபிடிக்கிறது.
நதி போல பாயும் காலம்
காலத்தைப் பற்றிய கோட்பாடுகள் எல்லாவற்றையும் அடித்து நொறுக்கிப் போடுகிறார் ஐன்ஸ்டைன். அண்டவெளி, காலம் இரண்டும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்த ‘கால-வெளி’என்ற கோட்பாட்டை முன்வைக்கிறார். காலத்தை ஐன்ஸ்டைன் ஒரு நதி போல உருவகிக்கிறார். நதி எப்படி ஒரு இடத்தில் வேகமாகவும் வேறொரு இடத்தில் மெதுவாகவும் போகிறதோ அதுபோலத்தான் காலமும். செவ்வாய் கிரகத்தின் ஒரு நொடியும் பூமியின் ஒரு நொடியும் ஒன்று கிடையாது. அதேபோல் பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு இடத்தில் இருக்கும் விண்மீனின் ஒரு மணி நேரமும் பூமியின் ஒரு மணி நேரமும் ஒன்று இல்லை என்பதை 1915-ல் வெளியான ஐன்ஸ்டைனின் பொதுச் சார்பியல் கோட்பாடு சொல்கிறது.
இதில்தான் காலப் பயணத்துக்கான சாத்தியத்தை ஐன்ஸ்டைன் தன்னையே அறியாமல் ஒளித்துவைத்திருக்கிறார். இத்தனைக்கும் காலப் பயணம் சாத்தியமில்லை என்றே நம்பியவர் ஐன்ஸ்டைன்!
கருந்துளையைச் சுற்றி...
பொதுச் சார்பியல் கோட்பாட்டின் படி பெரும் நிறையானது காலத்தையும் அண்டவெளியையும் வளைக்கிறது. சூரியன் போன்ற பெரும் நிறைகொண்ட விண்பொருள் தன்னைச் சூழந்திருக்கும் கால-வெளியை வளைக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எந்த அளவுக்கு ஒரு விண்பொருள் அதிக நிறை கொண்டிருக்குமோ அந்த அளவுக்கு அது கால-வெளியை வளைக்கும். அந்த விண்பொருளுக்கு அருகில் காலம் மெதுவாகிறது. இதுவும் ஒரு வகையில் காலப் பயணம்தான்.
காலத்தை மிகவும் மெதுவாக ஆக்குவதற்கு சூரியனை விட ஆயிரக்கணக்கான மடங்கு நிறை தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட நிறை கொண்ட பொருள் ஒன்று நமது விண்மீன் மண்டலமான பால்வீதியிலேயே இருக்கிறது. ஆம், பால்வீதியின் மையத்தில் சூரியனை விட 40 லட்சம் மடங்கு நிறை கொண்ட கருந்துளை ஒன்று இருப்பதாகக் கருதப்படுகிறது.
பால்வீதியின் மையத்திலுள்ள கருந்துளையை ஒரு விண்கலத்தைச் சுற்றிவரச் செய்ய வேண்டும். பூமியில் 16 நிமிடங்கள் கழிந்திருந்தால் அந்த விண்கலத்தில் உள்ள கடிகாரத்தில் 8 நிமிடம் கழிந்திருக்கும். அந்த விண்கலத்தில் உங்களின் இரட்டைச் சகோதரர் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். விண்கலத்தில் அவர் புறப்பட்டபோது உங்கள் இருவருக்கும் 25 வயது என்றால் பூமியில் 10 ஆண்டுகள் கழிந்த பிறகு உங்களுக்கு 35 வயது ஆகியிருக்கும். உங்கள் சகோதரருக்கோ 30 வயதுதான் ஆகியிருக்கும். தனது 30-வயதில் 35 வயதுக்காரரான உங்களை அவர் சந்தித்ததால் உங்கள் சகோதரர் மேற்கொண்டது காலப் பயணமே.
ஆனால், இந்த கருந்துளையை அடைவதில் இரண்டு சிக்கல்கள் உள்ளன. ஒன்று, அந்தக் கருந்துளை இருப்பது பூமியிலிருந்து 26,000 ஒளியாண்டுகள் தொலைவில், அதாவது 260,00,00,000,00,00,000 கிலோ மீட்டர் தொலைவில். ஒளியின் வேகத்தில் பயணம் செய்வது சாத்தியமில்லை என்றாலும் அப்படிப் பயணம் செய்வதாக வைத்துக்கொண்டாலும் அந்தக் கருந்துளைக்கு அருகே செல்வதற்கு 26 ஆயிரம் ஆண்டுகள் ஆகும்.
ஆனால், மனிதர்கள் செல்லும் விண்கலத்திலேயே அதிக வேகம் கொண்ட அப்போலோ-10 கலமே கிட்டத்தட்ட மணிக்கு 40 ஆயிரம் கிலோ மீட்டர்தான் செல்லும். இன்னொரு சிக்கல், கருந்துளைக்கு அருகில் சென்றால் அது ஒளியைக்கூடத் தப்ப விடாது. ஆக, காலப் பயணம் மேற்கொள்வதற்காகக் கருந்துளையைச் சுற்றிவருவதென்பது கோட்பாட்டளவில் சாத்தியமே ஒழிய நடைமுறையில் சாத்தியம் இல்லை.
பேரனைவிட இளைய தாத்தா
அடுத்த சாத்தியமும் ஐன்ஸ்டைனின் சிறப்புச் சார்பியல் கோட்பாட்டில்தான் இருக்கிறது. ‘ஒளியை விட வேகமாகப் பயணித்தால் கடந்த காலத்துக்கு நாம் தந்தி அனுப்ப முடியும்’ என்று ஐன்ஸ்டைன் நகைச்சுவையாக ஒருமுறை குறிப்பிட்டார். என்றாலும், பிரபஞ்சத்தின் உச்சபட்ச வேகம் ஒளியினுடையதே; அந்த வேகத்தை எதுவும் தாண்ட முடியாது என்பது அவருடைய கோட்பாடு.
ஒளியின் வேகத்துக்குச் சற்று அருகே ஒரு விண்வெளி வீரர் விண்கலத்தில் பயணித்துவிட்டுச் சில வருடங்கள் கழித்து பூமிக்கு வருவாரென்றால் பூமியில் இருக்கும் அவரது பேரனைவிட இளமையாக இருப்பார்.
ஒளியின் வேகத்துக்கு அருகே பயணிக்கும் எதுவும் மிக மெதுவாகவே மூப்படையும் என்பது சுவிட்சர்லாந்தில் உள்ள செர்ன் (CERN) ஆய்வுக் கூடத்தில், பை-மேசான்கள் என்ற அணுத்துகள்களைக் கொண்டு நிரூபிக்கப் பட்டிருக்கிறது. ஒரு நொடியை 2,500 கோடி மடங்காகப் பகுத்தால் எவ்வளவு நேரம் கிடைக்குமோ அவ்வளவு நேரம்தான் ஆயுள் அந்தத் துகள்களுக்கு. செர்னில் தரைக்கு அடியில் 16 மைல் தொலைவுகொண்டதாய் 
அமைக்கப்பட்டிருக்கும் சுற்றுப்பாதையில் அந்தத் துகள்களை ஒளியின் வேகத்தில் 99.99% வேகத்தில் அனுப்பிப் பார்த்தபோது அந்தத் துகள்கள் தங்கள் வழக்கமான ஆயுளைவிட 30 மடங்கு அதிக நேரம் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆகவேதான் ஒளியின் வேகத்துக்கு அருகில் பயணிப்பதும்கூட காலப் பயணமாகக் கருதப்படுகிறது. இதுபோன்ற நிரூபணங்களால்தான் காலப் பயணம் சாத்தியம் என்ற மனமாற்றத்துக்கு அறிவியலாளர்கள் வந்திருக்கிறார்கள்.
காலப் பயணம் மேற்கொள்வதற்கு மேலும் பல வழிமுறைகள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் ‘கால-வெளித்துளை’ (wormhole). பெயருக்கேற்ப காலத்திலும் வெளியிலும் இருப்பதாக நம்பப்படும் துளை இது. பிரபஞ்சம் முழுவதும் இந்தத் துளைகள் இருப்பதாகவும், இவை மிகவும் நுண்ணியவை என்றும் கருதப்படுகிறது. இந்தத் துளையைப் பெரிதாக்கி, அதன் ஒரு முனையில் நுழைய முடிந்தால் பிரபஞ்சத்தில் நாம் சாதாரணமாக எட்ட முடியாத இன்னொரு மூலைக்கு மட்டுமல்ல, காலத்திலும் வேறொரு புள்ளிக்கு இந்தத் துளை நம்மைக் கொண்டுபோய் விடும் என்று நம்பப்படுகிறது.
கடந்த காலத்துக்குப் போக முடியாது
‘இண்டெர்ஸ்டெல்லார்’ படம் நினைவிருக்கிறதா? (படம் பார்த்தவர்களுக்கு மட்டும்) ‘கால-வெளித் துளை’ வழியே பயணிக்கும் கதாநாயகன் தன் மகளைச் சந்திக்கத் திரும்பி வருகிறார். கதாநாயகன் இளைஞராகவும் அவருடைய மகள் தொண்டு கிழவியாகவும் இருக்கிறார். காலப் பயணம் மேற்கொண்டதன் விளைவுதான் இது.
interstellar
எதிர்காலத்தை நோக்கிய காலப் பயணம்தான் சாத்தியம்; கடந்த காலத்தை நோக்கிய காலப் பயணம் சாத்தியமே இல்லை என்கிறார் ஸ்டீவன் ஹாக்கிங். ஒரு வகையில் காலப் பயணத்துக்கான கனவுகள் காலத்தை மட்டுமல்ல, காலத்தோடு பின்னிப் பிணைந்துள்ள மரணத்தையும் வெல்வதற்கான கனவுகளே. கூடவே, தூரத்தை வெற்றிக்கொள்வதற்குமானது காலப் பயணம் என்ற கனவு.
பால்வீதி
இதைப் பற்றி ஸ்டீவன் ஹாக்கிங் இப்படிச் சொல்கிறார்: ‘காலம் மெதுவாவதால் இன்னுமொரு பலன் உண்டு. கோட்பாட்டளவில் ஒருவர் தனது ஆயுட்காலத்துக்குள் மிக மிக நீண்ட தொலைவை எட்ட முடியும் என்பதுதான் இதன் அர்த்தம். நமது பால்வீதியின் விளிம்பை 80 ஆண்டுகளுக்குள் நாம் எட்டிப் பிடிக்கலாம். இந்தப் பிரபஞ்சம் எவ்வளவு விசித்திரமானது என்பதை அது உணர்த்தக்கூடும் என்பதுதான் எல்லாவற்றையும் விட மிகவும் பரவசமூட்டக் கூடியது.’
நன்றி: ஸ்டீவன் ஹாக்கிங், மிஷியோகாக்கு
--------------
கமல ஹாசனும் மைக்கேல் ஃபாரடேயும்!
ஃபாரடே கூண்டால் எதை மூடினார் கமல்?
---------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
===========================================
நம் காலத்தின் தலைசிறந்த சினிமாக் கலைஞர்
கமலஹாசன். தமிழ் சினிமாவை உலகத் தரத்துக்கு
உயர்த்தியவர் அவர். கமல் உண்மையிலேயே
உலக நாயகன்தான்!

மைக்கேல் ஃபாரடே (1791-1867) இங்கிலாந்து நாட்டு
விஞ்ஞானி; மிகச் சிறந்த பரிசோதனை இயற்பியலாளர்
(experimental physicist). இன்றும் நம் அன்றாட வாழ்வில்
பயன்படும் மின்காந்த தூண்டல் (electromagnetic induction)
பற்றிக் கண்டறிந்தவர்.

கமலஹாசனுக்கும் மைக்கேல் ஃபாரடேவுக்கும் என்ன
தொடர்பு? பார்ப்போம்.

தம் படங்களில் அறிவியல் செய்திகளைச் சொல்கிறவர்
தமிழ் மற்றும் இந்திய சினிமா உலகில் கமல் மட்டுமே.
எனவே அவர் நியூட்டன் அறிவியல் மன்றத்தின்
அக்கறைக்கு உரியவர் ஆகிறார். தசாவதாரம் படத்தில்
எபோலா வைரஸ் குறித்துப் பேசப்படும். இப்படம்
வெளிவந்த 2008ஆம் ஆண்டில் எபோலா வைரஸ்
குறித்து தமிழ்ச் சமூகம் அறிந்திருக்கவில்லை.
காலத்தை மீறிச்  சிந்திப்பவர் கமல் (thinking ahead of times).

அவரின் விஸ்வரூபம் படத்தின் இறுதிக் காட்சியில்
ஃபாரடே கேஜ் (Faraday cage) என்பது பற்றி தீவிரமாகப்
பேசப்படும். உடனடியாக ஒரு  ஃபாரடே கேஜ் வேண்டும்
என்பார் படத்தின் நாயகி பூஜா. படத்தில் இவரின்
பாத்திரம் ஒரு மருத்துவர்; அணுக்கதிர் வீச்சால் ஏற்படும்  புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்.
(Dr நிருபமா Nuclear oncologist),

5 நிமிடத்தில் ஃபாரடே கேஜ் வரும் என்பார் FBI .அதிகாரி.
அந்த  நொடியே வேண்டும் என்பார் பூஜா. 

ஃபாரடே கேஜ் படத்தில் வர வேண்டிய அவசியம் என்ன?
நியூயார்க் நகரில் தலிபான் பயங்கரவாதிகள் ஒரு
கட்டிடத்தில் வெடிகுண்டு வைத்திருப்பார்கள். அமெரிக்க
காவல்துறை (FBI)  வெடிகுண்டைக் கண்டுபிடித்துக்
கைப்பற்றி விடும். அதை அங்குள்ள ஒரு அறையில்
ஒரு மேஜையின் மீது வைத்து .இருப்பார்கள்.
அந்த வெடிகுண்டுடன் ஒரு செல் போன்
இணைக்கப்பட்டு .இருக்கும்.

யாரேனும் ஒருவர் அந்த செல்போன் நம்பரை அழைத்து,
அந்த அழைப்பின் மணியோசை இந்த செல்போனில்
கேட்டாலே போதும் வெடிகுண்டு வெடித்து விடும்.
வெடிகுண்டு அப்படி டிசைன் செய்யப்பட்டு இருந்தது.

இந்தச் சூழலில்தான் ஃபாரடே கேஜ் தேவைப்
படுகிறது. ஃபாரடே கேஜ் என்ன செய்யும்? வெடிகுண்டு
வெடிக்காமல் தடுக்கும். எப்படி? ஃபாரடே கேஜால்
வெடிகுண்டை மூடிவிட வேண்டும். வெளியில் இருந்து
வரும் எந்த ஒரு மின்காந்தத் துடிப்பையும்
(Electro Magnetic Pulse), வெடிகுண்டை அண்ட விடாமல்,
ஃபாரடே கேஜ் தடுத்து விடும்; அதாவது வெடிகுண்டுடன்
உள்ள செல்போனுக்கு எந்த  சிக்னலும் வராமல்
தடுத்து விடும். இப்படி குண்டு வெடிக்காமல் தடுத்து
விட முடியும்.

அங்கிருந்த பலரில் ஒருவருக்குக் கூட இந்த ஆபத்து
பற்றித் தெரியாது, டாக்டர் நிரூபமாவைத் தவிர.
எனவே அவர் உடனடியாக (instantaneously required)
ஃபாரடே கேஜ் வேண்டுமென்று கேட்கிறார்.
அது வரும் வரை காத்திருக்க முடியாது என்பதால்,
டாக்டர் நிருபமா அந்த அறையில் உள்ள ஏதாவது
ஒன்று ஃபாரடே கேஜ் போன்று பயன்படுமா என்று
சுற்றுமுற்றும் பார்க்கிறார்.

என்ன ஆச்சரியம்! அவருக்கு ஒரு ஃபாரடே கேஜ்
கிடைத்து விடுகிறது. அங்கு ஒரு மைக்ரோவேவ்
ஓவன் (microwave oven), அதாவது நவீன அடுப்பு எரிந்து
கொண்டு இருந்தது. அந்த ஓவனின் வெளிப்புற
மூடுபகுதியை (outer case) எடுத்து வெடிகுண்டை
மூடி விடுவார் நிருபமா. மைக்ரோவேவ் ஓவன்
என்பது உண்மையில் ஒரு ஃபாரடே கேஜ் ஆகும்.
(Every micro wave oven is a Faraday cage),

சரி, ஃபாரடே கேஜ் (Faraday cage) என்றால் என்ன? இதை
ஃ பாரடே கூண்டு  என்று தமிழில் சொல்லலாம்.
இந்தக் கூண்டால் ஒரு பொருளை மூடிவிட்டால்,
கூண்டுக்கு வெளியில் இருந்து வரும் எந்தவொரு
மின்காந்தத் துடிப்பும் கூண்டுக்குள் இருக்கும்
பொருளை அணுக இயலாது. இதை மைக்கேல்
ஃபாரடே 1836இல் கண்டு பிடித்தார்.

அந்த வெடிகுண்டு சீசியம் (Caesium) என்னும் தனிமத்தால்
செய்யப்பட்டது. சீசியத்தின் ஒரு குறிப்பிட்ட
ஐசோடோப் கதிரியக்கத் தன்மை உள்ளது. இந்தக்
குண்டு வெடித்தால், அணுகுண்டு வெடித்தது
போன்ற சேதாரத்தை ஏற்படுத்தும்.

ஆக, இரண்டு அல்லது மூன்று நிமிடக் காட்சியில்
எவ்வளவு ஆழமான அறிவியல் செய்திகளை
வைத்து விட்டார் கமல்!

1. ஃபாரடே கேஜ் 2. மைக்ரோவேவ் ஓவன் 3.சீசியம்
4. நியூக்ளியர் ஆன்காலஜி என்று எல்லா
அறிவியலையும் ஒன்றாகத் திரட்டி சில நிமிடக்
காட்சியில் வைத்த கமலஹாசனின் மேதைமைக்கு
நியூட்டன் அறிவியல் மன்றம் தலை வணங்குகிறது.

என் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு தமிழ்ப்
படத்துக்கு அறிவியல் விளக்கம் எழுதுகிறேன். இது
ஒரு ஆச்சரியம்! ஒரு தமிழ் நடிகர் ஒரு தமிழ்ப்
படத்தில் அணுக்கரு அறிவியலைச் சொல்கிறார்!
இது அடுத்த ஆச்சரியம்!

இருந்தும் கமலுக்கு இப்படம் காரணமாக ஏன் இவ்வளவு
எதிர்ப்பு? இதுவும் ஆச்சரியம்தான் என்றாலும்
அதற்கான விடை இதோ!

When a true a genius appears in the world all the dunces are in confederacy
against him.----Jonathan Swift.
**************************************************************
மகளின் வயது 80, தந்தையின் வயது 35!
இது சாத்தியமா? சாத்தியமே என்கிறார் ஐன்ஸ்டின்!
கிறிஸ்டோபர் நோலன் சாத்தியப் படுத்தினார்!
-----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------------------
1) ஹாலிவுட் திரைப்பட இயக்குனர் கிறிஸ்டோபர்
நோலன் (Christopher Nolan) பற்றி ஆங்கிலப்படம்
பார்க்கும் இளைஞர்கள் அறிந்திருக்கலாம்.
அவர் நூறு பல்கலைக் கழகங்களுக்குச் சமமானவர்.
நடமாடும் பல்கலைக் கழகம் என்ற பட்டம்
அவருக்கு கச்சிதமாகப் பொருந்தும்.

2) அவர் காலத்தில் வாழ்பவர்கள் உண்மையிலேயே
கொடுத்து வைத்தவர்கள்.அவரின் படங்கள்
அற்புதமானவை. 2014 இறுதியில் வெளியான
அவரின் இன்டெர் ஸ்டெல்லார் (Interstellar) அற்புதமானது.
உலக வரலாற்றில் இதுவரை இப்படி ஒரு சினிமா
எடுக்கப் பட்டதில்லை.

3)  இன்டெர் ஸ்டெல்லார் ஒரு அறிவியல் புனைவு.
(science fiction) ஐன்ஸ்டினின் ரிலேட்டிவிட்டி தியரியை
அற்புதமாக விளக்கும் சினிமா அது. இவ்வாண்டின்
(2017) இயற்பியல் நோபல் பரிசு பெற்ற கிப் தோர்னே
(Kip Thorne) அந்த சினிமாவின் அறிவியல் ஆலோசகர்.
ஈர்ப்பு அலைகளைக் கண்டறிந்தமைக்காக
அவர் நோபல் பரிசு பெற்றார்.

4) ஐன்ஸ்டின் இரண்டு ரிலேட்டிவிட்டி தியரிகளைச்
சொன்னார். ஒன்று Special Relativity. இன்னொன்று
Genenral Relativity. SR, GR என்று எழுதினாலே போதும்,
ஆங்கில வாசகர்கள் புரிந்து கொள்வார்கள். ஆனால்
தமிழில் எழுதுவதற்கும் தாலி அறுந்து விடும்.

5) ஐன்ஸ்டினின் இரண்டு ரிலேட்டிவிட்டி
தியரிகளையும்  இன்டெர் ஸ்டெல்லார் சினிமா
அற்புதமாக விளக்கி உள்ளது. அந்த சினிமாவைப்
பார்ப்பதும் சரி, ரிலேட்டிவிட்டி தியரியில் ஒரு
சர்ட்டிபிகேட் கோர்ஸ் படித்து முடிப்பதும் சரி,
இரண்டும் ஒன்றுதான்.

6) படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அற்புதம். மகள்
10 வயதுச் சிறுமியாக இருந்தபோது, அவளைப்
பிரிந்து தந்தை விண்வெளிக்குப் போவான்.
பல ஆண்டுகள் கழித்து விண்வெளிப்பயணம்
முடிந்து, தந்தை திரும்பி வருவான். இதற்குள்
மக்களுக்குத் திருமணமாகி,  குழந்தை குட்டிகள்
பிறந்து, பின் பேரன் பேத்திகளையம்
எடுத்திருப்பாள் மக்கள். முதுமையால் உடல்
தளர்ந்து மரணத் தருவாயில் .இருப்பாள் மகள்
பேரன் பேத்திகள் எல்லாம் சாகப் போகும்
பாட்டியைச் சுற்றி நிற்பார்கள்.

7) அப்போது தந்தை மகளைப் பார்க்க வருவான்.
விண்வெளியில் இருந்ததாலும், ஒளியின் வேகத்தில்
பயணம் செய்ததாலும் தந்தைக்கு வயதாகி
இருக்காது. விண்வெளிக்குப் புறப்படும்போது
35 வயது என்றால், இப்போது திரும்பி வந்த பிறகு,
வயதில் மாற்றம் இருக்காது. ஆனால் மகளோ
பூமியில் இருந்ததால் பாட்டியாகி 80 வயதுடன்
இருப்பாள்.

8) சிறுமி (10 வயது)--தந்தை (35 வயது) என்ற பழைய நிலை
மாறி, மகள் 80 வயதிலும் தந்தை அதே 35 வயதிலும்
இருப்பார்கள்.மகளுக்கும் தந்தைக்கும் ஒரு சிறிய
உரையாடல் நடக்கும். காவியத் தன்மை
கொண்ட உரையாடல் அது.

9) ஆக, இந்தப் படம் இரண்டு ரிலேட்டிவிட்டிகளையும்
அற்புதமாக விளக்கி இருக்கிறது. 2015ல் இந்தப் படத்தை
சென்னை அமிஞ்சிக்கரை ஸ்கைவாக் தியேட்டரில்
பார்த்தேன். இன்று HBO போன்ற ஆங்கில சானல்கள்       
அநேகமாக இப்படத்தை  2 அல்லது 3 மாதங்களுக்கு
ஒருமுறை ஒளிபரப்புகின்றன. வீட்டில் நாற்காலியில்
அமர்ந்து கொண்டு, வேறு வேலையையும்
பார்த்துக் கொண்டு இந்த சினிமாவைப் பார்த்து
முடிக்கலாம். பத்துப் பைசா செலவில்லாமல்.

10) அண்டவெளி (SPACE) நான்கு பரிமாணம் உடையது
என்றார் ஐன்ஸ்டின். அதை விளக்க டெசரக்ட்
என்ற நான்கு பரிமாணமுள்ள ஒரு ஆசனத்தை
(tesseract) இப்படத்தில் காண்பித்து இருப்பார்கள்.

11) இம்மாத (நவம்பர் 2017) அறிவியல் ஒளி இதழில்
ஈர்ப்பு அலைகள் குறித்து ஒரு கட்டுரை எழுதி
உள்ளேன். General Relativity பற்றி அதில் விளக்கி
இருக்கிறேன். இன்னும் 10 நாட்களில் அறிவியல்
ஒளி ஏடு நூலகங்களுக்குச் சென்று விடும்.
படிக்கலாம்.

12) கிறிஸ்டோபர் நோலனின்  பிற படங்களான Dark Knight,
Insomnia ஆகியவற்றையும் பாருங்கள். கிராவிட்டி
(Gravity) படத்தையும் பாருங்கள். கிராவிட்டி
நோலனின் படமல்ல. மேலும் வாச்சோவ்ஸ்கிகள்
( Wachowski brothers) இயக்கிய The Matrix படங்களையும்
பாருங்கள். இவை  அறிவியலைப் புரிந்து கொள்ள
உதவும்.

13) கல்வி கேள்வி மூலமாக அறிவைப் பெறுவது
முற்கால வழக்கம். கல்வி கேள்வி மட்டுமின்றி,
காட்சிகளைப் பார்ப்பதன் மூலமும் அறிவைப்
பெற முடியும் என்பது தற்கால நடைமுறை.
***********************************************************    




   
  


(2) திரைப்படம், ஆவணப்படம், காணொளிகள்
(You Tube videos etc) ஆகியவற்றைப் பார்ப்பதன் மூலம்
அறிவைப் பெற முடிகிறது. வெற்றுக் கேளிக்கை
மற்றும் பொழுதுபோக்கு நோக்கிலான
திரைப்படங்கள் இங்கு சுட்டப்படவில்லை.

(3) ஒரு புத்தகத்தைப் படித்து, அதை புரிந்து, அதன்
சாரத்தை உட்கிரகித்தால் மட்டுமே, அப்புத்தகம்
வழங்கும் அறிவைப் பெற முடியும். புத்தக வாசிப்பு
என்பதில் வாசகனின்செயலூக்கமான பங்கு
முக்கியமானது. அது இல்லாமல் புத்தக வாசிப்பின்
பயனைப் பெற முடியாது.

(4) ஆனால், ஒரு படத்தைப் பார்த்து, அறிவைப்
பெறுவது என்பதில் வாசகனின் பங்கு ஒப்பீட்டளவில்
குறைவு.

(5) தற்காலத்தில் அறிவியல் மற்றும் அறிவியல் புனைவு
 திரைப்படங்கள் அறிவு வழங்கலில் பெரும் பங்கு
வகிக்கின்றன. பத்துப் புத்தகங்களைப் படித்துப்
பெரும் அறிவை ஒரு நல்ல திரைப்படத்தைப்
பார்த்து எளிதில் பெற முடியும்.

கிளைமாக்ஸ் காட்சி!
--------------------------------------
தந்தையும் மக்களும் சந்தித்து உரையாடும் அந்த
அற்புதக் காட்சியைப் பாருங்கள். இந்த 4 நிமிட
யூ டியூப் வீடியோவில் அது உள்ளது. பாருங்கள்.
மக்கள் 80 வயதுக்கு கிழவியாக இருப்பதையும்
அப்பா 35 வயதில் இருப்பதையும் பாருங்கள்.
--------------------
வயது ஆவதற்கும் முதுமை அடைவதற்கும்
என்ன தேவை? காலம் (time) தேவை. 20 வயது
இளைஞன் 60 வயது கிழவன் ஆக
வேண்டுமென்றால் அதற்கு 40 ஆண்டு காலம் தேவை.
ஒளியின் வேகத்தில் செல்வதால் காலமே மிக
மெதுவாகத்தான் செல்லும்.
உதாரணமாக பூமியில் 10 ஆண்டு ஆகிற காலம்
விண்வெளியில் வேறு இடத்தில் அல்லது ஒளிவேகப்
பயணத்தில் இந்த 10 ஆண்டு என்பது 10 நிமிடம்
போன்றது. எனவே காலம் மெதுவாகச் செல்வதால்
இளமை நீடிக்கிறது.
  ---------------------------
   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக