ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

நியூட்டன் அறிவியல் மன்றத்தின் கடவுள் பற்றிய
கொள்கைப் பிரகடனம்!
----------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------------------------
இந்து மதம், கிறிஸ்துவ மதம், இஸ்லாமிய மதம்,
சீக்கிய மதம், புத்த மதம், சமண மதம் உள்ளிட்ட
உலகில் உள்ள ஒவ்வொரு மதமும் கூறுகிற,
மக்களால் வணங்கப்படுகிற கடவுள்
என்பது மொத்தப் பிரபஞ்சத்திலும் இல்லை.
கடவுள் என்பது முற்றிலும் கற்பனையான
ஒன்றே தவிர, உண்மையில் இருப்பது அல்ல.

எல்லா மதங்களிலும் கடவுள் பற்றிய வர்ணனை
அநேகமாக ஒன்றுபோலத்தான் உள்ளது.
கடவுள் எங்கும் நிறைந்து இருப்பவர் (omnipresent),
சர்வ வல்லமை வாய்ந்தவர் (omnipotent), அனைத்தும்
அறிந்தவர் (omniscient), இந்த உலகை, பிரபஞ்சத்தை,
சகல உயிரினங்களையும் படைத்தவர், படைத்தல்
காத்தல் அழித்தல் என்னும் முத்தொழில்களையும்
புரிபவர், நன்மைக்கு வெகுமதியும் தீமைக்கு
தண்டனையும் தருபவர், அவரே அனைத்தும்
என்பதால்  அவரன்றி ஓரணுவும் அசையாது
என்று சொல்லத் தக்கவர், இம்மை மறுமை
இரண்டையும் படைத்து, மறுமையில் வாழும்
வாழ்க்கையை இம்மையினும்
மேலானதாகப் படைத்தவர். என்று
இவ்வாறாகவும் இன்னும் பலவிதமாகவும்
விதந்து ஓதப்படுகிறவர் கடவுள் என்பதாக
மதங்கள் கூறுகின்றன. அதாவது கடவுளை
மதங்கள் இவ்வாறு வரையறுக்கின்றன.     

இந்த வரையறைக்கு உட்பட்ட கடவுள் என்பது
மொத்தப் பிரபஞ்சத்திலும் எங்கும் இல்லை.
இந்த வரையறைகள் கூறும்  ஆற்றல்கள்
கொண்ட கடவுள் உண்மையில் இல்லாதவர்;
கற்பனையில் உருவாக்கப் பட்டவர். கடவுளின்
செயல்கள் என்று கூறப்படுகிறவை எவற்றையும்
செய்யத்தக்க கடவுள் என்று எவரும் இல்லை.

இந்த உலகையோ பிரபஞ்சத்தையோ
உயிர்களையோ கடவுள் படைக்கவில்லை.
மாறாக மனிதன்தான் கடவுளைத்  தன்
கற்பனையில் படைத்தான்.

கடவுளே இல்லை என்னும்போது, கடவுளின்
மனைவியர், கடவுளின் மகன், மகள். உறவினர்,
கடவுளின் தூதர் ஆகியவையும் கற்பிதங்களே.

பிரபஞ்சத்தின் இயக்கத்திலோ உயிர்களின்
இயக்கத்திலோ கடவுளுக்கு எவ்விதப் பங்கும்
இல்லை. ஏனெனில் இல்லாத கடவுள் எந்த
இயக்கத்திலும் பங்கெடுக்க இயலாது.

ஒட்டு மொத்தப் பிரபஞ்சத்திலும் கடவுளுக்கு
ஒரு பௌதிகத் தன்மை வாய்ந்த இருப்பு
(physical existence) என்பது இல்லவே இல்லை.

சொர்க்கம் நரகம் போன்ற இடங்கள், இம்மை மறுமை
ஆகிய உலகங்கள் மொத்தப் பிரபஞ்சத்திலும்
எங்கும் இல்லை. கோள்கள்,நட்சத்திரங்கள்
மற்றும் பிற வான்பொருட்களின்
சஞ்சாரம்  மனித வாழ்க்கையில் பாதிப்பை
ஏற்படுத்துகிறது என்ற அடிப்படையில் அமைந்த
சோதிடம் முழுவதும் பொய்யே.

பேய் பிசாசுகளும் மொத்தப் பிரபஞ்சத்தில்
எங்கும் இல்லை.

மறுபிறவி, மரணத்திற்குப் பிந்திய வாழ்வு என்பவை
முற்றிலும் பொய்யானவை. உயிர்களின் இறப்போடு
உயிரியல் செயல்பாடுகள் நிரந்தரமாக முடிவடைந்து
விடுகின்றன.
**********************************************************


கடவுள் இல்லை என்று தர்க்க ரீதியாக
ஆராய்ந்து ஒருவர் முடிவுக்கு வருதல் வேண்டும்.
வெறுமனே வறட்டு நம்பிக்கை சார்ந்து
கடவுள் மறுப்பாளர் என்று உரிமை கோருவது
போலி நாத்திகத்திற்கே இட்டுச் செல்லும்.


கடவுளை வீழ்த்திய பாவேந்தர்!
-------------------------------------------------------
எழுப்புசுவர் உண்டெனில்
எழுப்பியவன் ஒருவன் உண்டே
இவ்வுலகு கண்டு
நீ யாம் உண்டென அறிக
என்றார் கடவுள்.

கனமான கடவுளே
உமைச் செய்த சிற்பியெவன் காட்டுவீர்
என்றவுடன்
கடவுளைக் காண்கிலேன்
அறிவியக்கப் புலமை கண்ட
என் அன்னை நாடே!
------பாவேந்தர் பாரதிதாசன்--------------- 
**************************************************
பின்குறிப்பு: பொழிப்புரை தேவையில்லை என்று
கருதுகிறேன்.
----------------------------------------------------------------------------------------

இடஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்லும் உரிமை!
டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் உரிமை!
---------------------------------------------------------------------------------------
பெருவாரியான தேவேந்திரர்களின் குரலையே
டாக்டர் கிருஷ்ணசாமி பிரதிபலிக்கிறார். பல
ஆண்டுகளாக இதைப் பொதுவெளியில் சொல்லாமல்
தவிர்த்து வந்தார். தற்போது சொந்த சாதி மக்களின்
வற்புறுத்தல் காரணமாக பொதுவெளியில்
கூறியுள்ளார்.

கிறிஸ்துவர்களுக்கு 3.5 சதம் இடஒதுக்கீட்டை கலைஞர்
வழங்கினார். அச்சமூகத்தின் தலைவர்கள்
இடஒதுக்கீடு வேண்டாம் என்று
திருப்பிக் கொடுத்தனர். இது போலவே, ஒரு சமூகமாக
இட ஒதுக்கீடு வேண்டாம்  என்று சொல்வதற்கு
தேவேந்திரர் சமூகத்திற்கு உரிமை உள்ளது.
அச்சமூகத்தின் குரலை அவர்களின் தலைவரான
டாக்டர் அவர்கள் ஒலிப்பதற்கு எல்லா உரிமையும் உண்டு.

நான் மதிப்புக்குரிய குருசாமி சித்தர் ஐயா அவர்களுடன்
இது பற்றி மணிக்கணக்கில் உரையாடியவன்.
செந்தில் மள்ளரின் மீண்டெழும் பாண்டியர் வரலாறு
என்ற நூலைப்படித்தவன். இன்னும் நிறைய என்னால்
சொல்ல முடியும்.


தோழர் செந்தில் மள்ளரின் இரண்டாவது நூல் வெளியீட்டு
விழா சென்னை எழும்பூரில் சில ஆண்டுகளுக்கு
முன்பு நடந்தபோது, காவல் துறை வெளியீட்டு
விழாவைத் தடை செய்தது. அப்போது இக்சா மையத்தில்   
குருசாமி சித்தர் மற்றும் பலர் உட்கார்ந்து
மணிக்கணக்கில் இப்பிரச்சினையை (இடஒதுக்கீடு
வேண்டாம் என்பது) விவாதித்தனர். இந்த விவாதத்தில்
நானும் பங்கேற்றேன். டாக்டர்
கிருஷ்ணசாமி அவர்களிடம் இதை வலியுறுத்த
வேண்டும்  என்று முடிவு செய்து அதற்காக ஒரு
குழுவும் அமைக்கப் பட்டது.

டாக்டர் அவர்கள் தேவேந்திர குல  மக்களின்
இதயஒலியை பிரதிபலிக்கிறார். இது அவரின்
கடமை. இதற்காக பலர் அவரைத் திட்டலாம்;
அவதூறு செய்யலாம். ஆனால் டாக்டர் அவர்கள்
தேவேந்திர குல மக்களின் குரலாக ஒலிப்பதை
எவராலும் தடை செய்ய முடியாது. அதற்கு
எவருக்கும் உரிமை இல்லை.

தங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டுமா வேண்டாமா
என்பதை தேவேந்திர குல மக்களும் அம்மக்களின்
தலைவராகிய டாக்டர் அவர்களும் முடிவு
செய்வார்கள். இது அம்மக்களின் உரிமை.
இந்த உரிமைக்கு வேறு எவரும், மற்றவர்கள்
எவரும் தடை போட  முடியாது. தேவேந்திர குல
மக்களின் மனப்போக்கிற்கு எதிராக டாக்டர்
அவர்கள் முடிவு செய்வாரேயானால், அம் மக்களே
அவரைத் தூக்கி எறிவார்கள். இதில் மற்றவர்கள்
தலையிட்டு அவதூறு செய்வதை ஏற்க இயலாது.
**************************************************************

கிறிஸ்துவப் பெருமக்கள் கலைஞர் வழங்கிய
3.5 சத இட ஒதுக்கீட்டை ஏற்க மறுத்து, அரசிடமே
திருப்பிக் கொடுத்தனரே, ஏன்? என்ன காரணம்?
என்றாவது சிந்தித்துப் பார்த்தது உண்டா?

தோழர் செந்தில் மள்ளர் எழுதிய "வேந்தர் குலத்தின்
இருப்பிடம் எது?" என்ற நூலைப் படியுங்கள்.
தேவேந்திரரை பட்டியல் இனத்தில் சேர்த்தது
பற்றிய வரலாற்றை விரிவாக எழுதி இருப்பார்.

டாக்டர் குருசாமி சித்தர் யார் என்று தெரியுமா?
(இவர் சாமியார் அல்ல, படித்த பொறியாளர்,
அரசு அதிகாரி). தோழர் செந்தில் மள்ளர்
யார் என்று தெரியுமா? இவர்களின் நூல்களைப்
படித்து, இவர்களின் கருத்தை அறியாமலே,
விமர்சனம் செய்வது சரியா?

கொடுத்த இடஒதுக்கீட்டை வேண்டாம் என்று
மறுக்கிற உரிமை கிறிஸ்துவர்களுக்கு மட்டும்தான்
உண்டா? தேவேந்திரர்களுக்கு அது கிடையாதா?

ஓட்டரசியலில் இருக்கும் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள்
முட்டாள் அல்ல. தன சொந்த சமூகம் ஏற்றுக் கொள்ளாத
ஒன்றை பொதுவெளியில் பேசுகிற அளவுக்கு அவர்
விவரம் தெரியாதவர் அல்ல. தேவேந்திர சமூகத்தின்
உள்ளக் கிடக்கையைத்தான் அவர் பேசுகிறார்.
டாக்டரை முட்டாளாக எடை போட  வேண்டாம்.
அவர் ஒட்டு அரசியலின் நுணுக்கம் தெரியாமல்
பேசுபவர் அல்ல.

தோழர் செந்தில் மள்ளர் எழுதிய "வேந்தர் குலத்தின்
இருப்பிடம் எது?" என்ற நூலைப் படித்தவர்களுக்கு 
மட்டுமே டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின்
கருத்தை விமர்சனம் செய்யும் தகுதி உண்டு.
டாக்டர் அவர்கள் ஏன் அப்படிச் சொல்கிறார்
என்பதற்கான நியாயங்கள் அந்த நூலில் உள்ளன.
அந்த நூலில் உள்ள கருத்துக்களையே டாக்டர் அவர்கள்
பேசுகிறார்.

ஆம், பட்டியல் இனம் என்னும் அடிமைத் தனத்தில்
இருந்து வெளியேற வேண்டும் என்பதே தேவேந்திர
குல  மக்களின் கோரிக்கை. அதையே டாக்டர் அவர்கள்
பிரதிபலிக்கிறார். 
 

உள்நுழைவதும் வெளியேறுவதும் இயற்கையே!
---------------------------------------------------------------------------------------
இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு
சாதிகள் BC, MBC, SC, ST பட்டியலில் புதிதாக நுழைந்து
கொண்டுதான் இருக்கின்றன. கலைஞர் ஆட்சியில்
எத்தனையோ சாதிகள் BC பட்டியலிலும் MBC பட்டியலிலும்
சேர்க்கப் பட்டன.
**
குஜராத்தில் பட்டேல் சமூகம் BC ஆக்கச் சொல்லிப்
போராடுகிறது. ராஜஸ்தானில் குஜ்ஜார் சமூகம்
போராடுகிறது, ஹரியானாவில் ஜாட் சமூகம்
போராடுகிறது. இவையெல்லாம் இயற்கையே.
அதேபோல, தேவேந்திரர் சமூகம் BC பட்டியலில்
சேருங்கள் என்கிறது. இதில் தவறு என்ன?

BC பட்டியலில் சேரலாமா அல்லது MBC பட்டியலில்
சேரலாமா என்பது பற்றித்தான் தற்போது தேவேந்திர
சமூக இளைஞர்கள் பட்டி மன்றம் நடத்திக் கொண்டு
இருக்கிறார்கள். இதுதான் யதார்த்தம்.

தேவேந்திர குல சமுதாயத் தலைவர்கள் பலர்  இதே
கருத்தை நீண்ட  காலமாகச் சொல்லி வருகிறார்கள்.
டாக்டர் கிருஷ்ணசாமி மட்டுமே இதை ஏற்க
மறுத்து வந்தார். தற்போது அவரும் தன் சொந்த
சாதி மக்களின் குரலை ஒலிக்கத்  தொடங்கி
உள்ளார்.

எனக்குத் தெரிந்து டாக்டர் குருசாமி சித்தர் அவர்கள்
25 ஆண்டு காலமாக இந்தக் கருத்தைப் பேசியும்
எழுதியும் வருகிறார். முதலில், படித்த, வெளிநாடு
சென்று சம்பாதிக்கிற தேவேந்திரர்களின் கருத்தாக
மட்டுமே இது இருந்தது. இன்று அப்படியல்ல.
படிக்காத அல்லது SSLC மட்டுமே படித்த வயல் வேலை
செய்து வரும் இன்றைய தலைமுறை கூட,
இக்கருத்தை ஆதரிக்கிறது. இதுதான் கள யதார்த்தம்.
  

பட்டியல் இனச் சிறை எங்களுக்கு வேண்டாம் என்பதே
டாக்டர் அவர்களின் கருத்து. BC அல்லது MBCயில்
சேர்க்க வேண்டும் என்பதே உள்ளக் கிடக்கை. 

SC பட்டியலில் இருப்பதால்தான் வளர்ச்சிக்கான
எல்லாக் கதவுகளும் அடைபட்டதாக தேவேந்திர
குல  மக்கள் கருதுகிறார்கள். அதற்கான ஆய்வு
முடிவுகளையும் அவர்கள் வைத்து இருக்கிறார்கள்.

தோழர் செந்தில் மள்ளரின் நூல்களைப் படியுங்கள்.
அவர்கள் தரப்பு நியாயங்களை அறிந்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு விமர்சனம் செய்யுங்கள்.

பெரியாரைத் தலைவராக ஏற்ற வைகோ தொடர்ந்து
ஆர் எஸ் எஸ்சிடம் விலை போகவில்லையா?
ஆர் எஸ் எஸ் அமைப்பின் கைக்கூலி ஆகவில்லையா?
DEMONETISATION ஐ சமீபத்தில் ஆதரிக்கவில்லையா?  

வெறும் கெரவத்திற்காக மட்டும் அல்ல. பொருளியல்
வணிகம் ஆகிய துறைகளில் முன்னேற, பட்டியல்
இனத்தான் என்ற அடையாளம் தடையாக இருப்பதாக
அச்சமூகம் உணர்கிறது. ஆக இவர்களின்
கோரிக்கையின் பின்னால் ஒரு வலுவான பொருளியல்
அடித்தளம் இருக்கிறது. பல்வேறு உதாரணங்களை
என்னால் சொல்ல முடியும். அந்த சமூகத்தின்
கோரிக்கை என்ன, அது நியாயமா என்று மட்டும்தான்
மற்றவர்கள் பார்க்க வேண்டும். சாதியரீதியாக
அவமானப் படுத்தும் நோக்கில் அச்சமூகத்தின்
கோரிக்கையை உதாசீனம் செய்யக் கூடாது. 


சனி, 29 ஏப்ரல், 2017

மறுபிறவி,
மரணத்திற்குப் பின் வாழ்க்கை
என்பதெல்லாம் பொய்!
இறந்தவுடன் எல்லாம் முடிந்து விடும்!
இதுவே அறிவியல்!

வாழும்போது உயிர்!
இறந்தபின் பிணம்!
பிணம் என்றால் உயிரற்ற பொருள்
(inanimate object). மண் மலை கரி போன்ற ஒரு உயிரற்ற
பொருளே பிணம்.  மறுபிறவி என்பதெல்லாம் கிடையாது.


நிரோத் எதற்கு? குழந்தை பிறப்பதை தவிர்க்கத்தான்!
தம்பதியர்  வேண்டும்போது குழந்தை பெற்றுக்
கொள்கின்றனர். அது போல நவீன மருத்துவ
வசதிகள் காரணமாக, மரணம் பலகாலம் தள்ளிப்
போடப் படுகிறது.

பேய் பிசாசு
செய்வினை பில்லி சூனியம்
ஜாதகம் ஜோசியம்
அனைத்தும் பொய்!
மோசடி! பித்தலாட்டம்!

கிரஹ பலம் ஏமி
கிரஹ பலம் ஏமி
ஸ்ரீ ராமானு க்ரஹ பலமே பலமு.
இது ஒரு தியாகராஜ கீர்த்தனையின் பல்லவி.
நிற்க. தியாகய்யர் போன்ற மகத்தான ராம பக்தரே 
கிரஹ பலம் என்பதெல்லாம் ஒன்றும் இல்லை; எல்லாம்
ஸ்ரீ ராமனின் அனுக்ரஹம் மட்டும்தான் என்று
சொல்கிறார். இதன் பொருள் சோதிடம் என்பது
இகழ்ச்சியுடன் நிராகரிக்கத் தக்கது என்பதே.
மேலும் "சோதிடந்தனை இகழ்" என்கிறார் பாரதியார்
தமது ஆத்திசூடியில்.  

சொர்க்கம் நரகம்
எதுவும் இல்லை.
அவை இருக்கும் இடத்தை
காட்ட  முடியுமா?
சவாலுக்கு பதில் உண்டா? சவால்!

மறு சுழற்சி என்பது எப்போதும் நிகழ்ந்து கொண்டே
இருக்கும் ஒன்று. இதன் அபத்தமானதும்
அசாத்தியமானதுமான திரிபுதான் மறுபிறப்பு.
அது வெறுமனே நம்பிக்கை சார்ந்த விஷயம்.
அதில் உண்மை கிடையாது. Faith has no logic.

சொர்க்கம் நரகம் என்பதெல்லாம் நம் மனசுக்குள்
இருக்கின்றன என்றால் அதன் பொருள் சொர்க்கம்,
நரகம் என்பவை இல்லை என்பதுதான். அவற்றுக்கு
ஒரு பௌதிக இருப்பு (physical existence) உண்டா என்பதுதான்
கேள்வி. இல்லை என்பது அறிவியலின் பதில்.
 


இந்தி எதிர்ப்பும் போலித்தனமும்!
-------------------------------------------------------------
சுதந்திரம் அடையப்போகும் இந்தியாவுக்காக
ஓர் அரசமைப்புச் சட்டம் எழுத வேண்டும். இதற்காக
அரசியல் நிர்ணய சபை (Constituent Assembly) அமைக்கப்
பட்டது. 1946 டிசம்பரில் அமைக்கப்பட்ட அரசியல்
நிர்ணய சபை 1950 ஜனவரியில், பணிகள்
நிறைவேறியதை ஒட்டி கலைக்கப் பட்டது.

இந்த சபையில் மொத்தம் 389 உறுப்பினர்கள்
இருந்தனர். காங்கிரசும் முஸ்லீம் லீக் கட்சியும்
பெருவாரியான இடங்களை (208+73= 281) கொண்டிருந்தன.
சுதேச சமஸ்தானங்கள் 93 இடங்களைப் பெற்றிருந்தன.

தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கணிசமான
பேர் இச்சபையில் இருந்தனர். அவர்களுள்
1) காமராசர் 2) கக்கன் ஆகியோர் முக்கியமானவர்கள். 

திமுக அப்போது தோன்றவில்லை என்பது குறிப்பிடத்
தக்கது. தமிழ்நாட்டில் காங்கிரசும் நீதிக்கட்சியுமே
அப்போது பெரிய கட்சிகள்.

இந்தியாவின் ஆட்சி மொழி எது என்பதைத் தீர்மானிக்கும்
வாக்கெடுப்பு அரசியல் நிர்ணய சபையில் நடந்தது.
அப்போது காங்கிரசின் பிரபல தலைவர்களான
பச்சைத்  தமிழர்கள் காமராசரும் கக்கனும் இந்திக்கு
ஆதரவாக வாக்களித்து இந்தியை ஆட்சிமொழி
ஆக்கினர்.

அதே நேரத்தில் தமிழகத்தைச்  சேர்ந்த டி டி
கிருஷ்ணமாச்சாரி அரசியல் நிர்ணய சபையில்
இந்தியைக் கடுமையாக எதிர்த்தார்.

காமராசரும் கக்கனும் இந்தியை எதிர்த்து வாக்களித்து
இருந்தால், இந்தி நாட்டின் ஆட்சிமொழியாக ஆகி
இருக்கவே முடியாது.

புதுடில்லியில் இந்தியை ஆதரித்து வாக்களித்து
விட்டு, தமிழ்நாடு திரும்பிய காமராசரும் கக்கனும்
எந்த விதமான மக்களின் எதிர்ப்பையோ
கண்டனத்தையோ  சம்பாதிக்கவில்லை என்பது
வரலாறு.

தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு என்பது அரசியல்
ஆதாயங்களுக்காக மேற்கொள்ளப் பட்ட ஒன்றே
தவிர, அந்தரங்க சுத்தியோடு நடந்த ஒன்றல்ல
என்பதை இந்த நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.

இந்தியை  ஆதரித்து வாக்களித்து விட்டு, தமிழ் மண்ணை
எந்த தைரியத்துடன் காமராசரும் கக்கனும்
மிதித்தார்கள்? இங்குள்ளது போலியான இந்தி எதிர்ப்பு
என்று உணர்ந்ததால்தானே!
********************************************************************
தேசியமொழி என்பது ஏற்கப்படவில்லை. எனவே
இந்தியாவுக்கு என்று எந்த ஒரு தேசிய மொழியும்
கிடையாது. நாம் இங்கு கூறுவது ஆட்சிமொழி அல்லது
அலுவல்மொழி (ஆங்கிலத்தில் official language) பற்றியே.
யார் தலைமை வகித்தார் என்பதில் எவ்வித சிக்கலும்
இல்லை (no dispute at all). காமராசரும் கக்கனும்
இந்தியை ஆதரித்தது மன்னிக்க முடியாத தவறு.
 


       

வெள்ளி, 28 ஏப்ரல், 2017

கடவுள் இல்லை என்று கூறுவோர்
அதை நிரூபிக்க வேண்டும்! இது கடமை!
-------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------
1) கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் அதை
நிரூபிக்கத் தேவையில்லை. கடவுள் உண்டு என்று
சொல்பவர்கள்தான் அதை நிரூபிக்க வேண்டும்.

2) இப்படி ஒரு கருத்து தமிழ்நாட்டில் உலவுகிறது.
இது அறிவியலுக்கு எதிரானது. இக்கருத்தை அறிவியல் ஏற்பதில்லை.

3) ஒரு கூற்று (a statement) என்று இருந்தால், அது
நிரூபிக்கப்பட வேண்டும். நிரூபிக்கப் பட்ட
கூற்று ஒரு தேற்றம் ஆகும். நிரூபிக்கப் படாத
கூற்று இகழ்ச்சியுடன் நிராகரிக்கப் படும்.

4) A statement with a PROOF is called a THEOREM whereas a statement
WITHOUT a proof will find its place in a dust bin.

5) கடவுள் இருக்கிறார் என்பது ஒரு கூற்று.
கடவுள் இல்லை என்பதும் ஒரு கூற்று.
பின்னது ஓர் எதிர்மறைக் கருத்தைக் கூறுகிறது
என்பதாலேயே அது நிரூபிக்கப் பட வேண்டியதில்லை
என்று பொருளாகாது.  

6) உண்டு-இல்லை என்பது ஒரு பிரிக்க இயலாத
பைனரியாக உள்ளது. இது பரஸ்பரம் விலக்கத்
தக்கதாக (mutually exclusive) உள்ளது.

7) MUTUALLY EXCLUSIVE என்பதை சரியாகப் புரிந்து
கொள்ள வேண்டும். ஒரு நாணயத்தைச்
சுண்டும்போது, தலை விழலாம்; அல்லது பூ
விழலாம். தலை விழுந்தால் பூ விழாது.அதாவது
விழ இயலாது. அதே போல, பூ விழுந்தால் 
தலை விழாது; விழ இயலாது. இந்த நிலையே
MUTUALLY EXCLUSIVE எனப்படும். 

8) MUTUALLY EXCLUSIVE நிகழ்வுகளில், அதாவது
கடவுள் உண்டா, இல்லையா என்பது போன்ற
விஷயத்தில், ஒன்றை நிருபிப்பது என்பதே
இன்னொன்றைப் பொய்ப்பிப்பது என்று
பொருள்படும்.

9) என்றாலும், இரு தரப்பாரும் தங்களின்
கருதுகோளை நிரூபிக்க கடமைப் பட்டவர்கள்.
இதில் எவ்விதமான தப்பித்தல்வாதமும் (ESCAPISM)
அனுமதிக்கப் படாது.

10) எனவே கடவுள் உண்டு என்று சொல்பவர்கள்
அறிவியல் வழியில் அதை நிரூபிக்க வேண்டும்.
அதே போல, கடவுள் இல்லை என்பவர்களும்
தங்களின் கருத்தை அறிவியல் வழியில் நிரூபிக்க
வேண்டும்.

11) கடவுள் இல்லை என்பதை நியூட்டன் அறிவியல்
மன்றம் அறிவியல் வழியில் நிரூபித்து இருக்கிறது.
மீண்டும் நிரூபிக்கும். இதற்காக ஒரு சிந்தனைப்
பரிசோதனையை நாங்கள் வடிவமைத்து
வருகிறோம்.
(working hard on devising a THOUGHT EXPERIMENT).
********************************************************** மறைந்த இயற்பியல் பேராசிரியர் ஆனந்தன்
நினைவேந்தல் நிகழ்ச்சி!
----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------------
இயற்பியல் பேராசிரியர் ஆனந்தன் அவர்கள்
( து க வைணவக் கல்லூரி, சென்னை)
ஏப்ரல் 14,2017 அன்று காலமானார். அன்னாரின்
நினைவேந்தல் நிகழ்ச்சி பின்வருமாறு:-

நாள்: ஏப்ரல் 29, சனிக்கிழமை
நேரம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை

இடம்: ஜவஹர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளி,
அசோக் நகர், சென்னை 83/

பங்கேற்பாளர்கள்:
பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும்
அறிவியல் ஆர்வலர்கள், அறிவியல் மன்றத்தினர்.

நிகழ்ச்சிகள்:
1) காலை அமர்வில்
Why is the sky blue என்ற தலைப்பிலான சி.வி.ராமனின்
அன்றைய உரை மற்றும் விளக்கம்.
2) ரஷ்ய விஞ்ஞானி ஒருவரின் Amateur in science என்ற
கட்டுரை பற்றிய விளக்கம்.

3) மாலை அமர்வில் "பிரயோகம்"என்ற பெயரிலான
ஆய்வுக்கூடத்தில் மாணவர்கள் சொந்தமாகவே
பரிசோதனை மேற்கொள்ளுதல்.

முக்கிய குறிப்பு:
மத்திய உணவு மற்றும் மாலைத் தேநீர் வழங்கப்படும்.

கூட்ட ஏற்பாடு:
1) திரு விருபாக்ஷன், திரு சி கோபாலன்.
====================================================
நியூட்டன் அறிவியல் மன்றம் பங்கேற்கிறது
****************************************************************        

புதன், 26 ஏப்ரல், 2017

120 ஆண்டுகளுக்கு முன்பு 1897இல் ஹெச் ஜி வெல்ஸ்
இந்த நாவலை எழுதினார். அறிவியல் புனைவு
(science fiction) என்ற சொல்லே அப்போது உலக இலக்கிய
அரங்கில் உருவாகி இருக்கவில்லை. மாறாக
science romance என்றுதான் அறிவியல் புனைவுகள்
அழைக்கப் பட்டன. The invisible man has visible retinas என்ற
assumption மீதுதான் புனைவு கட்டமைக்கப் பட்டுள்ளது.

இந்தப் பதிவு தங்களைப் போன்ற ஓரிருவரைத்
தவிர எவராலும் சீந்தப் படவில்லை. சமூகம்
அந்த நிலையில் இருக்கிறது. ஆயிரக்கணக்கான
பேரைச் சென்றடையக்கூடும் இந்தப் பதிவு,
ஓரிருவரையேனும் இந்த நாவலைப் படிக்கத்
தூண்டக் கூடும் என்ற எண்ணமே இப்பதிவை
எழுதத் தூண்டியது. தங்களின் பின்னூட்டங்கள்
எமது நோக்கத்திற்கு வலு சேர்த்துள்ளன. பார்ப்போம்,
எவரேனும் வெல்சின் நாவலைப் படிக்கட்டும்.

போற்றுதலுக்கு உரியவர் ராமானுஜன். பெருங்கணித
மேதை. கணிதமேதை ஆய்லருடன் ஒப்பிடப்
படுபவர். எனினும் ஆய்லரையும் விஞ்சியவர்.
பை என்னும் எண்ணின் மதிப்பை பல கோடி
தசம இலக்கங்களுக்கு கண்டறிவதில் ராமானுஜனின்
கோட்பாடுகளே பயன்பட்டன!

செவ்வாய், 25 ஏப்ரல், 2017

கண்ணுக்குத் தெரியாத மனிதன்!
யார் கண்ணுக்கும் தெரியாமல் வாழ முடியுமா?
-------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------------------
இது மறு வாசிப்புக்கான காலம். இது பின்நவீனத்துவம்
கூறுகிற மறுவாசிப்பு அல்ல. இளவயதில் படித்ததை
தற்போது மீண்டும் படிப்பது.

The Invisible Man என்று ஒரு நாவல். எழுதியவர்  ஹெச் ஜி வெல்ஸ்.
இங்கிலாந்து நாட்டு அறிஞர். காலம்: 1866-1946. உண்மையில்
இது ஒரு அறிவியல் புனைவு (science fiction).

என்னுடைய 30ஆவது வயதில் இதைப்படித்தேன்.
இன்று ஒரு பழைய புத்தகக் கடையில் இதைப்
பார்த்ததும் வாங்க விரும்பினேன். புத்தகத்தின்
விலை ரூ 50 மட்டுமே. உண்மையில் இன்று இப்புத்தகம்
ரூ 400 விலைக்கு குறைவாகக் கிடைக்காது.

complete and unabridged புத்தகம் இது. இன்றிரவு இதைப் படிக்கத்
தொடங்குவேன்.

இது அறிவியல் புனைவு என்று சொன்னேன் அல்லவா?
எனவே இயற்பியலில் குறிப்பாக ஒளியியலில் (optics)
சிறிது அறிவு தேவை. அப்போதுதான் இதைப் படித்துப்
புரிந்து கொள்ள இயலும்.

கதாநாயகன் கிரிஃபின் (Griffin) தன் உடலின்
ஒளிவிலகல் எண்ணை (refractive index) காற்றின்
ஒளிவிலகல் எண்ணுக்குச் சமமாக வைத்துக்
கொள்வதன் மூலம், யார் கண்ணுக்கும் தெரியாமல்
வாழ்கிறார் என்பது கதை.

நிற்க. ஒளிவிலகல் குறித்த ஓர் எளிய கணக்கைச்
செய்து மகிழ்வதன் மூலம் ஹெச் ஜி வெல்சுக்கு
மரியாதை செய்வோம். கணக்கு இதுதான்:

The refractive index of a dense flint glass is 1.65 and for alcohal
it is 1.36 both with respect to air. Now determine the refractive index
of the dense flint glass with respect to alcohal.

ஒரு அடர்த்தியான கண்ணாடி மற்றும் ஆல்கஹாலின்
ஒளி விலகல் எண்கள் காற்றைப் பொறுத்து முறையே
1.65 மற்றும் 1.36. அப்படியானால், ஆல்கஹாலைப்
பொறுத்து அடர்த்தியான கண்ணாடியின் ஒளி விலகல்
எண்ணைக் கண்டுபிடிக்கவும்.

விடைகள் வரவேற்கப் படுகின்றன.
*********************************************************************

                 

திங்கள், 24 ஏப்ரல், 2017

பொருள்முதல்வாதம் பற்றி அறியாத யாரும்
நாத்திகம் (இறைமறுப்பு) பேசுவது
சிறுபிள்ளைத்தனமே!
வறட்டு நாத்திகமே இங்கு உள்ளது. அது பயன் தராது!

தேசியஇனங்களின்
பிரிந்து போகும் உரிமை அடங்கிய
சுயநிர்ணய உரிமையை
எந்த மாநிலக் கட்சியும் கோரவில்லை!


இன்று உலகில் பொருள்முதல்வாதத்தைச்
செயல்படுத்திய கம்யூனிச நாடுகளில்தான்
கடவுள் நம்பிக்கையும் மூட நம்பிக்கையும்
பெருமளவில் ஒழிக்கப் பட்டுள்ளன. அல்பேனியா
நாட்டில் தோழர் அன்வர் ஹோக்ஸ்சா பொது
இடங்களில் வழிபாடு,தொழுகை ஆகியவற்றைத்
தடுக்கும் சட்டங்களை இயற்றினார். அல்பேனியா
இஸ்லாமியர்கள் நிரம்பிய நாடு என்பது அறிந்ததே.
போர்க்குணமிக்க பொருள்முதல்வாதத்தை
லெனின் செயல்படுத்தினார்.
**
கீழ்த்தஞ்சையில் சவுக்கடியும் சாணிப்பாலும்
 நடைமுறையாக இருந்ததை மாற்றி, அதை
அடியோடு ஒழித்தது கம்யூனிஸ்ட் இயக்கமே.
வேறு எவருக்கும் அதில் பங்கில்லை. கொடிய
பண்ணையார் கோபாலகிருஷ்ண நாயுடுவை
அழித்து ஒழித்தது அதாவது படுகொலை செய்தது
கம்யூனிஸ்ட் இயக்கமே. மேனாமினுக்கி இயக்கங்களால்
நுனிப்புல்லர்களைக் கவர முடியும். அவ்வளவே.
பிரச்சினைகளுக்கு தீர்வு தர இயலாது.

ஞாயிறு, 23 ஏப்ரல், 2017

என்றும் எம் தலைவர் பெரியாரே!
திமுகவில் பெரியாருக்கு இடமளித்த அண்ணா!
-------------------------------------------------------------------------------------
அறிஞர் அண்ணாவின் அகநிலை விருப்பத்தால்
திமுக  உருவானது என்று எவரும் கருதினால் அது
தவறு. திமுகவின் தோற்றம் காலத்தின் கட்டாயம்.
காலம் தந்த கொடையே திமுக. ஒடுக்கப்பட்ட
சூத்திர பஞ்சம மக்களுக்கு ஆளுகையில் (governance)
பங்கு என்ற நோக்கமே திமுகவை உருவாக்கியது.

1949இல் ஒரு நோட்டுப் புத்தகத்தில் திமுகவிற்கான
சட்ட திட்டங்களை அண்ணா எழுதினார். அன்றைய
காலத்தில் கட்சிகளின் உள்கட்டமைப்பு பிரதானமாக
இரண்டு வகையில் இருந்தது.

அ) தலைவர் பதவியே முதன்மை நிர்வாகி
(President is the Chief Executive)
ஆ) பொதுக் காரியதரிசி பதவியே முதன்மை நிர்வாகி
(General Secretary is  the Chief Executive)

பொதுக்  காரியதரிசி என்றால் பொதுச் செயலாளர்
என்று இன்றைய தலைமுறை புரிந்து கொள்ள வேண்டும்.
காங்கிரஸ் போன்ற கட்சிகளில் தலைவர் பதவியே
முதன்மை நிர்வாகியாக இருந்தது. இது பழமைவாதப்
போக்கு (conservative trend) என்று கருதிய அறிஞர் அண்ணா,
திமுகவை, பொதுச்செயலாளரை முதன்மை
நிர்வாகியாகக் கொண்ட அமைப்பாகக் .கட்டமைத்தார்.
கம்யூனிஸ்ட் கட்சிகளில் பொதுச் செயலாளர் பதவி
மட்டுமே உண்டு.

எனவே திமுகவை ஆரம்பித்தபோது, கட்சி அமைப்பு
விதிகளின்படி, தலைவர் பதவி கிடையாது. பொதுச்
செயலாளரே திமுகவின் முதன்மை நிர்வாகி. அறிஞர்
அண்ணா அவர்கள் கழகத்தின் பொதுச் செயலாளராக
ஒருமானதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். இவ்வாறு
1949இல் திமுக மரபை மீறிய  கட்டமைப்புடன் பிறந்தது.

பெரியாரை எதிர்த்தும் பெரியாரைப் பிரிந்தும்
கட்சி ஆரம்பித்தபோதும், என்றேனும் ஒருநாள்
பெரியார் திமுகவை அங்கீகரிப்பார் என்றே அண்ணா
கருதினார். திமுகவின் தலைவர் பெரியாரே! அவர்
இன்றில்லாவிடினும் நாளை திமுகவுக்கு வருவார்;
திமுகவின் தலைமையை ஏற்பார்; அதற்கு
இடமளிக்கவே தலைவர் பதவியில் யாரையும்
அமர்த்தாமல், பெரியாருக்காக திமுகவின் தலைவர்
பதவி காலியாக விட்டு வைக்கப் பட்டுள்ளது என்று
கூறினார் அண்ணா.

அண்ணாவின் மறைவுக்குப் பின்னர், திமுகவில்
சில பூசல்கள் எழுந்தபோது, கழகத்தின் சட்ட விதிகளில்
திருத்தம் செய்து, தலைவர் பதவியை முதன்மை
நிர்வாகியாகக் கொண்டு (Chief Executive), கலைஞர்
அவர்கள் கழகத்தின் தலைவராக 1970களில்
பொறுப்பேற்றார்.

ராமச்சந்திர மேனன் அதிமுகவை ஆரம்பித்தபோது,
பொதுச் செயலாளரே முதன்மை நிர்வாகி என்ற
கட்டமைப்புடன் கட்சி தொடங்கினார். தென்கிழக்கு
ஆசியாவின் மாபெரும் அறிவியக்கமாக, மாபெரும்
சீர்திருத்த இயக்கமாகத் திகழ்ந்த திமுகவை
மேனன் எவ்வாறு நாசம் செய்தார் என்பதை
அடுத்துக் காண்போம்!
*****************************************************************        


அண்ணாவின் கம்பரசத்தை நான் பியூசி படிக்கும்போது
கல்லூரி நூலகத்தில் படித்தேன். இங்கு இப்பக்கத்தில்
காட்டப்பட்ட கம்ப ராமாயணச் செய்யுளை வாசித்துப்
புரிந்து கொள்ள "கொண்டு கூட்டு" அவசியம். சந்தி
பிரித்துக் கொள்வதும் அவசியம்.
**
இயல்புறு செலவின் நாவாய் = இயல்பான வேகத்துடன்
செல்கின்ற கப்பல்

இருகையும் எயினர் தூண்ட = இருபுறமும் துடுப்பாளர்கள்
துடுப்பசைக்க

இவ்வாறு சந்தி பிரித்துப் படிக்கவும்.
**
பின்னாளில் "குயிலுக் குப்பம்" என்று தொடங்கும்
ஒரு திரைப்பாடலில்,
"இங்கு ஆயிரம் கம்பரசம்
இனி ஆரம்பம் ஆவதென்ன?"
என்ற வரிகள் மூலமாக அண்ணாவின் கம்பரசம்
ஒரு காவிய அந்தஸ்த்தைப் பெற்று விட்டது.
        
மறுபிறப்பில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு. மறுபிறப்பு என்பது தடுக்க முடியாது என்பதை விஞ்ஞானிகளுக்கு என்னால் நிரூபித்துக் காட்டமுடியும். என்னுடைய கருத்தில் இயற்கை சக்திகள் மாறியிருக்கின்றனவே தவிர மனிதன் மாறவில்லை. - அம்பேத்கர்.
போஸ்ட் by வசுமித்ர (
---------------------------------
தொகுதி நூல். 37, பக்- 656- வருடம்1956 பிப்- 5. அண்ணன் பிச்சாண்டி அவர்களே... ஏழாயிரம் பக்க நூல் என்று பக்க எண்ணிக்கையை மட்டும் பேசும் தலித் அடையாள அரசியல் வாதிகள் இதைக் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். கண்டுபிடித்தாலும் சொல்ல மாட்டார்கள். சொன்னாலும் விளக்க மாட்டார்கள். மேலும் குறிப்பாக அம்பேத்கரை படிக்கவே சொல்ல மாட்டார்கள்.

------------------------------------------------------------------------------------------------------------
“உலகை அழிக்கும், குறிப்பாக அதன் தென்கிழக்கு ஆசியப் பகுதியைப் பாதிக்கும் மூன்றாவது அம்சம் ஒன்றும் உள்ளது. காரல் மார்க்சும் அவர் ஈன்றெடுத்த கம்யூனிசமும் தான் அந்த மூன்றாவது அம்சம்.” - அம்பேத்கர்
Volume 37, page 655 or 656
------------------------------------------------------------------------------------

சனி, 22 ஏப்ரல், 2017

சத்தியம் டி.வி.யில் விவாதம்!
தண்ணீர்ப் பஞ்சம்: காரணங்களும் தீர்வுகளும்!
நியூட்டன் அறிவியல் மன்றம் பங்கேற்பு!
நாள்: 21.04.2017 இரவு 7 to 8 மணி.
------------------------------------------------------------------------------------
இந்த ஒரு மணி நேர வீடியோவில் பின்வரும்
காலத்துண்டுகளில் நியூட்டன் அறிவியல் மன்றம்
பங்கேற்ற பகுதி உள்ளது.
1) 17 நிமிடம் முதல் 21 நிமிடம் வரை.
2) 44மிமி 45 நொடி முதல் 51 நிமி 50 நொடி.
3) 56.30 முதல் 58 நிமிடம் வரை.
---------------------------------------------------------------------------------------
 
தினமும் தன் மூத்திரத்தைக்
குடித்து வாழ்ந்தவர்
மறைந்த பிரதமர் மொரார்ஜி தேசாய்
தினமும் தன்னுடைய மூத்திரத்தை
ஒரு குவளை அருந்தும் பழக்கத்தை
கொண்டிருந்தவர். இது இன்றைய தலைமுறை
அறியாத தகவல்.

மொரார்ஜி தேசாயைப் பின்பற்றி, மூத்திரம்
குடித்த மற்றோரு தலைவர் ராஜ் நாராயணன்.
யார் இவர்? ரெபெரெலி தொகுதியில் 1977இல் இந்திரா
காந்தியைத் தோற்கடித்த ஜனதா தலைவர்.
தேசாய் அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சர்.

வெள்ளி, 21 ஏப்ரல், 2017

தீர்ப்பும் எழுதவில்லை! திறனாய்வும் செய்யவில்லை!
தாக்குதலின் இலக்காகவும் மீனா கந்தசாமி அவர்கள்
இருந்ததில்லை!
--------------------------------------------------------------------------------
அன்புச் சகோதரி மாலதி மைத்ரி அவர்களுக்கு,

1) மீனா கந்தசாமி அவர்களின் குறத்தியம்மன் என்ற
நூலுக்கு நான் தீர்ப்பு எழுதவில்லை.  திறனாய்வோ
மதிப்புரையோ எழுதவில்லை. தந்தை பெரியார்
குறித்த ஒரு அதிர்ச்சிகரமான தகவல்  அந்த நூலில்
இடம் பெற்றுள்ளதாக தங்களின் (மாலதி மைத்ரி அவர்கள்)
முகநூல் பதிவு வாயிலாகவே அறிந்தேன். அது குறித்து
தெளிவு படுத்துமாறு ஒரு கோரிக்கை விடுத்துள்ளேன்.
நூலில் உள்ள ஒரு  தகவல் குறித்த ஒரு ஐயத்திற்கு
விளக்கம் தருமாறு விடுத்த கோரிக்கை திறனாய்வு
ஆகாது. திறனாய்வு எனது தொழிலோ பொழுதுபோக்கோ
அல்ல. அதில் எனக்கு பயிற்சியும் கிடையாது. நான்
இலக்கியவாதியும் அல்ல.

2) வேறு எவரும் இவ்வாறு சொல்லியிருந்தால், அதைப்
பொருட்படுத்தாமல் கடந்து போயிருப்பேன். ஆனால்
நூலின் பதிப்பாளரான தாங்களே அக்கருத்தை
வெளியிட்டு இருப்பதால் அதை உதாசீனப் படுத்த
இயலவில்லை.

3) சூனியர் விகடன் ஏட்டில் பிரசுரமான அந்த நூல்
மதிப்புரையை தாங்கள் எவ்வித விமர்சனமும் இன்றி
வெளியிட்டு உள்ளீர்கள். பெரியார் குறித்த அக்கருத்து
தவறானது என்றோ, மீனா கந்தசாமி அவர்கள்
அப்படி எழுதவில்லை என்றோ தாங்கள் ஒரு
ஒற்றைவரிக் குறிப்பு எழுதியிருந்தால் போதுமே.

4) மாறாக, தங்களின் கனத்த மௌனம் தந்தை பெரியார்
குறித்த அந்தத் தகவலை தாங்கள் ஏற்பதாக ஒரு
சித்திரத்தைத் தந்து விடுகிறது. ஆனால், பெரியார்
நாயுடுவைச் சந்திக்கவில்லை என்பது தமிழ்ச் சமூகத்தில்
அறியப்பட்ட ஒன்று.

5) எனவே மீனா கந்தசாமி அவர்கள் தமது கருத்தை
நிரூபிக்க வேண்டும் என்றே எனது பதிவில் நான்
வலியுறுத்தி இருந்தேன். பெரியார் பற்றிய தகவல்
"பொய்" என்று நாங்கள் உறுதியுடன் உள்ளோம்.

6) அதே நேரத்தில், தாங்களோ மீனா கந்தசாமி அவர்களோ
பெரியார் நாயுடுவைச் சந்தித்தார் என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்கும் பட்சத்தில், அதை  ஏற்பதில் எமக்கு
எந்தத் தடையும் இல்லை. இங்கு உண்மை என்ன என்பதை
அறியும் விருப்பமே தலைதூக்கி நிற்கிறது.மற்றப்படி,
நட்பு முகாமில் உள்ள மீனா கந்தசாமி அவர்கள் எமது
தாக்குதலின் இலக்காக என்றுமே இருந்ததில்லை; .
இப்பொழுதும் கூட.

7) ஆனால் தாங்களோ போலி மார்க்சியவாதி என்ற
வசவுடன் என்னை அவதூறு செய்து தங்களின்
குட்டி முதலாளித்துவ மனநிலையை
வெளிப்படுத்துகிறீர்கள்.

8) எவர் ஒருவருக்கும் மார்க்சியவாதி என்றோ அல்லர்
என்றோ சான்றிதழ் வழங்கும் அதிகாரம்
குட்டி பூர்ஷ்வாக்கள், லிபரல் பூர்ஷ்வாக்கள்.
பின்நவீனப் பித்தர்கள், மேட்டுக்குடிப் பெண்ணியவாதிகள்
ஆகியோருக்கு இல்லை என்பது மார்க்சிய பாலபாடம்.

9) போராட்டக் களமும் மக்களுமே ஒருவரை
மார்க்சியவாதி ஆக்கும். பாவெல் விலாஸவ்
என்னும் ஓரு சராசரி இளைஞன்  மார்க்சியவாதியாக
பரிணாமம் அடைவதை தாய் நாவலில் மாக்சிம்
கார்க்கி எழுதி இருப்பார்.

10) 35 ஆண்டுகளைக் கொண்ட இழையறாத
தொழிற்சங்கச் செயல்பாடுகளில், கட்டமைத்த
பங்குபெற்ற கணக்கற்ற வேலைநிறுத்தக் களங்களில்,
124A சட்டப்பிரிவின் கீழான (Sedition charge) சிறைவாசத்தில்
மார்க்சியத்தைப் பிரயோகிப்பது எப்படி என்று
களத்தில் இருந்தும் தொழிலாளர்களிடம் இருந்தும்
கற்றவன் நான். லிபரல்களும் பின்நவீனத்துவர்களும்
எமக்கு சான்றிதழ் வழங்க முற்படுவது பேதைமையுள்
எல்லாம் பேதைமை ஆகும்.

தோழமையுள்ள,
பி இளங்கோ சுப்பிரமணியன்,
மார்க்சிய சிந்தனைப் பயிலகம், சென்னை.
முகநூல் முகவரி:  Ilango Pichandy. (நாள்: 21.04.2017)
**************************************************************            

தாங்கள் ஓர் இலக்கியவாதி என்றும் கவிஞர் மற்றும்
பதிப்பாளர் என்றும் அறிகிறேன். நான் இலக்கியவாதியோ
திறனாய்வுவாதியோ அல்ல. இலக்கியத் திறனாய்வில்
பரிச்சயமோ பயிற்சியோ உள்ளவன் அல்ல. எங்கள்
தொழிற்சங்க வகுப்புகளில் இலக்கியத் திறனாய்வு
ஒரு பாடமாக இருந்ததே இல்லை. எனவே "திறனாய்வு
செய்கிறான்", "தீர்ப்பு  எழுதுகிறான்" என்று தொடர்ந்து
பொய் சொல்லிக்கொண்டே போவதில் அர்த்தமில்லை.
**
மீனா அவர்கள் எழுதிய தகவலில் ஒரு ஐயம் எழுகிறது.
அதைத் தெளிவு படுத்துங்கள் என்று மட்டுமே உங்களிடம்
கேட்கிறேன். நாயுடுவை தந்தை பெரியார் சந்தித்தாரா
என்ற கேள்விக்கு விடையளிக்க வேண்டிய அவசியம்
தங்களுக்கு உள்ளது. இதைத் தாங்கள் எப்படி சகோதரி
தட்டிக் கழிக்க முடியும்? இதற்கு பதில் சொல்லுங்கள். 

அம்மா,
பத்ரி சேஷாத்ரி அவர்களின் கிழக்கு பதிப்பகம்
இந்த நூலை வெளியிட்டு இருக்குமானால், தீய
உள்நோக்கத்துடன் (malafide intention) கூடிய அவதூறு
என்று சுலபமாகக் கடந்து விடலாம். ஆனால் வெளியிட்டது
தங்களின் அணங்கு பதிப்பகம். நூலை எழுதியவர்
செயமோகன் அல்லர்; மீனா கந்தசாமி. பெரியாரைப்
போற்றி எழுதியவர். எனவே அதிர்ச்சிகரமான தகவல்
நட்பு முகாமில் இருந்து வருகிறது என்பதால்
இதில் உண்மை என்ன என்று அறிவதற்கு ஆவல்
பிறக்கிறது. எனவே பதிப்பாளரான தாங்களோ அல்லது  நூலாசிரியரான மீனா அவர்களோ
இந்த விஷயத்தில் உண்மை என்ன
என்பதைத் தெளிவு படுத்த வேண்டும். இது என்னுடைய
வலிமையான கோரிக்கை. அருள்கூர்ந்து செவி
சாய்க்க வேண்டுமாறு கோருகிறேன்..
**
நூலை நான் வாங்குகிறேன்; படிக்கிறேன் ஒரு
வாசகனாக.அவ்வளவுதான். என்னிடம் இருந்து
இலக்கியத் திறனாய்வு எதுவும் வராது. நன்றி.   
     

வெள்ளி, 14 ஏப்ரல், 2017

LUCKNOW: The Lucknow bench of the high court has said there is no error in decision of the state government to hold centralised counselling for MBBS and BDS courses in 2016-17 session on the basis of NEET conducted by the Medical Council of India.
The court, however, disagreed to the state's policy directing private unaided medical colleges to admit local financially weak students on 50% subsidised seats, leaving 50% non-subsidised seats to be filled on the basis of NEET merit list and those taking admission on these non-subsidised seats would pay double fees to compensate for subsidised seats to be occupied by financially weak students. The court asked the state government to reformulate and conduct the ongoing medical counselling afresh. It also said the state would conduct counselling for minorities institutions to fill up the seats as per the rules.


A bench of justice A P Sahi and justice Rajan Rai passed the order partly allowing the writ petition filed by UP Unaided Medical Colleges Welfare Association and about a dozen other petitions.
The private medical institutes had challenged the state government's September 2, 2016 order whereby it had prescribed guidelines for allotment of seats on the basis of NEET list.


The petitioners had pleaded that the state had not defined the category of poor and if the policy was implemented, students with less merit would occupy subsidised seats while merit holders would be left to make do with non-subsidised seats. This would disenchant the medical students to choose Uttar Pradesh as their destination for study medical and thus it would incur heavy losses to the private medical colleges. It was contended that the subsidised seats are meant for aspirants residing within UP, thus, this would lead disparity among the aspirants. Some minorities institutes had raised the issue that state cannot hold counselling for admission in these institutes.

எந்தக் கொம்பனாலும் இடஒதுக்கீட்டை
ரத்து செய்ய முடியாது!
உபியில் இடஒதுக்கீட்டை எவராலும்
ரத்து செய்ய முடியாது!
---------------------------------------------------------------------
1) இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டுமென்றால்,
இந்திய நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டத்
திருத்தம் கொண்டு வந்து, அதை மூன்றில் இரண்டு
பங்கு மெஜாரிட்டியுடன் நிறைவேற்ற வேண்டும்.
அப்போதுதான் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய முடியும்.
எந்த ஒரு மாநில முதல்வராலும் இட ஒதுக்கீட்டை
ரத்து செய்ய முடியாது.

2)உபியில் யோகி அரசு இடஒதுக்கீட்டை ரத்து செய்து
விட்டதாக வரும் செய்தி பொய்யானது.

3) உபி மாநிலத்துக்கு தனியாக ஒரு அரசமைப்புச்
சட்டம் (constitution) கிடையாது. உபி முதல்வர் என்பவர்
ஒரு முதல்வர்தானே தவிர, பிரதமர் அல்ல. எனவே
உபி முதல்வரால், அரசமைப்புச் சட்டம் உறுதி செய்த
இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய முடியாது.

4) ஒருவேளை அப்படி முட்டாள்தனமாக, உபி முதல்வர்
அரசமைப்புச் சட்டம் உறுதி செய்த இடஒதுக்கீட்டை
ரத்து செய்வார் என்று வைத்துக் கொள்வோம்.
அப்போது என்ன நடக்கும்? ஆட்டமேட்டிக்காக,
அவரின் ஆட்சி 356ஆவது பிரிவின்கீழ் உடனே
கலைக்கப் பட்டு விடும்.

5) எனவே இட ஒதுக்கீடு ரத்து என்று பொய்ச் செய்தி
 தங்களின் தவறை உணர்ந்து திருந்த வேண்டும்.

6) அரசமைப்புச் சட்டம் உறுதி செய்த இட ஒதுக்கீடு
இன்றும் உபியில் தொடர்கிறது. நாளையும் தொடரும்.
எனவே பொய்யான தகவல்களை, ஆராயாமல்
பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

7) தனியார் துறையில் இட ஒதுக்கீடு கிடையாது என்பதை
நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அரசமைப்புச் சட்டப்படி, அரசுத் துறையில் மட்டுமே இட ஒதுக்கீடு உண்டு.உபியில்
அகிலேஷ் முதல்வராக இருந்தபோது, தனியார் மருத்துவக் கல்லூரிகளில், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கான
50 சதம் இட ஒதுக்கீடு என்ற பெயரில்,2016 செப்டம்பரில்
ஒரு  தெளிவற்ற இடஒதுக்கீடு முறையைக் கொண்டு
வந்தார். இதை எதிர்த்து
அநேக வழக்குகள் லக்னோ உயர்நீதிமன்றத்தில்
தாக்கல் செய்யப் பட்டன. லக்னோ உயர்நீதிமன்றம்
அகிலேஷ் கொண்டு வந்த இடஒதுக்கீடு முறையை
ரத்து செய்து விட்டது.

8)உயர்நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று, அகிலேஷ் அரசு
இந்த ஒதுக்கீட்டை ரத்து செய்து விடுவது என்று முடிவு
எடுத்தது. அந்த முடிவை இப்போது யோகி அரசு
செயல்படுத்துகிறது. இதுதான் விஷயம்.

9) இதை நன்கு மனதில் பதிக்கவும்.
2016 செப்டம்பரில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில்
இட ஒதுக்கீடு கொண்டு வந்தவர் அகிலேஷ்.
அதை ரத்து செய்தவரும் அகிலேஷ். இதுதான் உண்மை.

10)  அம்பேத்கார் ஏகப்பட்ட பாதுகாப்பு அரண்களுடன்
இடஒதுக்கீட்டை அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெறச்
செய்தார். அதை அவ்வளவு சுலபமாக எந்த ஒருவராலும்
ரத்து செய்ய முடியாது.
************************************************************************
பின்குறிப்பு:
நான் கடந்த கால் நூற்றாண்டு காலத்திற்கும்
மேலாக இடஒதுக்கீடு சார்ந்து போராடி வருகிறேன். இடஒதுக்கீடு
குறித்து அகில இந்திய அளவில் மட்டுமின்றி, ஒவ்வொரு
மாநிலத்திலும் உள்ள நிலையை அறிவேன். மேற்கு வங்கத்தில்
பிற்பட்டோர் ஒதுக்கீடு கிடையாது. அதைக் கொண்டுவர
பாடுபட்டோரில் நானும் ஒருவன். எனவே உபி அரசு
குறித்த இந்த விவகாரம் அகிலேஷ் யாதவ் காலத்தில்
எடுத்து அறிவிக்கப்பட்ட முடிவு. அதை இப்போதைய
முதல்வர் யோகி செயல்படுத்துகிறார்.
**************************************************************************  
      

செவ்வாய், 11 ஏப்ரல், 2017

ஓங்கல் இடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலி நீர் ஞாலத் திருளகற்றும் ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னேர் இலாத #தமிழ்

குற்றம் என்பதன் வரையறை என்ன? எதுவெல்லாம்
குற்றம்? இந்தியாவிலோ அல்லது அமெரிக்கா,
ஐரோப்பிய நாடுகளிலோ குற்றம் என்பதன்
வரையறை வேறு. சவூதி அரேபியாவில்
குற்றம் என்பதன் வரையறை வேறு. நாத்திகமோ,
கடவுள் மறுப்புப் பிரச்சாரமோ  பல நாடுகளில்
குற்றமாக இல்லாதபோது, சவூதி அரேபியாவில்
குற்றமாகக் கருதப்படுவதும் மரண தண்டனை
வழங்கப் படுவதும் அனைவரும் அறிந்ததே.
அறிவியல் வளர வளர நாத்திகம் வளரும்.
அதாவது "குற்றங்கள்" பெருகும்.
சவூதி அரேபியாவும் மரண தண்டனைகள் வழங்கிக்
கொண்டிருக்கும். இதைக் கணக்கில் கொள்ளாமல்
பதிவு எழுதப்பட்டு உள்ளது.   

பின்நவீனத்துவச் செல்வாக்கு அல்லது சாயல்
இந்தப் பதிலில் மெலிதாகத் தெரிகிறது. நல்லது. நன்றி.
நேர்படப் பேசுவதும் வெடிப்புறப் பேசுவதுமே
இந்தியா போன்ற கல்வித்தரத்தில் பின்தங்கிய
நாடுகளில் பயன்தரும் என்பது பலரின் பட்டறிவு. 
வாசகனை உய்த்து உணர வைக்கும் பதிவுகள்
வாசகர்களின் மூளைக்குள் சென்று சேர்வதில்லை.  

அரவக்குறிச்சியிலும் தஞ்சாவூரிலும் நடந்த
இடைத்தேர்தல்களில் ஏன் திமுக வெற்றி பெற
முடியவில்லை? திமுகவுக்கு மக்களிடம் செல்வாக்கு
இல்லை என்பதாலா? இல்லை. அங்கே பணம் விளையாடியது.
ஏழை எளிய ஜனங்கள் விலைபோய் விட்டார்கள்.
ஆர்கே நகரில் நிலைமை படுமோசம். எல்லோரையும்
விளக்கு வாங்கி விட்டார் தினகரன்.

1967 முதல் தேர்தல்களில் நேரடியாகப் பங்கேற்று
வருகிறேன். இங்கு நான் கூறியுள்ளது கள யதார்த்தம்.
இது கற்க வேண்டிய பாடம். படிக்க வேண்டிய படிப்பினை.
தளபதி அவர்களும் மூத்த தலைவர்களும் இந்த உண்மையை
உணர்ந்து தக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்
என்பதை உணரவும்.
------------------------------------------------------------------------------------------
ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் யார்?
-----------------------------------------------------------------------------------------
வரும் 2017 ஜூன் மாதம் ஜனாதிபதி தேர்தலுக்கான
வேட்புமனு தாக்கல் தொடங்கி விடும். ஜூலை 22இல்
முடிவு அறிவிக்கப்படும்.

பாஜக வேட்பாளர் வெற்றி பெற 5,50,000 வாக்கு மதிப்புகள்
(அதாவது வாக்குகள்) தேவை.பாஜகவின் சொந்த
பலத்திலேயே 5.25,000 வாக்குகள் உள்ளன. அதன்
கூட்டணிக் கட்சிகள் மற்றும் ஆதரவு தெரிவிக்கும்
கட்சிகளின் வாக்குகளை சேர்த்தால், பாஜகவின்
வெற்றி உறுதியாகிறது. தெலுங்கு தேசம், சிவசேனை
ஆகிய கட்சிகள் பாஜகவை ஆதரிக்கும்.

ஒரிசாவைச் சேர்ந்த பழங்குடி இனப்பெண்மணியான
திரௌபதி முர்மு என்பவரை பாஜக ஜனாதிபதி
வேட்பாளராக நிறுத்தலாம் என்று கூறப் படுகிறது.
இது உண்மையானால், ஒரிசாவின் பிஜு ஜனதாதளம்
கட்சி பாஜகவை ஆதரிக்கக் கூடும்.

அண்ணா திமுகவின் 48 எம்.பி.க்கள் மற்றும்
122 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இல்லாமலேயே
பாஜகவால் ஜனாதிபதி தேர்தலில் வெல்ல முடியும்.

காங்கிரஸ் வேட்பாளர் யார்? மீண்டும் பிரணாப்
முகர்ஜி நிறுத்தப் படுவாரா? வெற்றி வாய்ப்பு
அறவே இல்லாத நிலையில் முகர்ஜி நிற்கவே
மாட்டார்.

தற்போதைய துணை ஜனாதிபதி ஹமீது  அன்சாரியை
காங்கிரஸ் நிறுத்தலாம். அவரும் நிற்க முன்வரலாம்.
சிறுபான்மையினரைக் கவரும் விதத்தில் காங்கிரஸ்
இவ்வாறு செய்யக்கூடும்.

அதைவிட, சோனியா குடும்ப விசுவாசியான ஏ கே
அந்தோணியை காங்கிரஸ் நிறுத்தக் கூடும்.
இதுவும் சிறுபான்மையினரின் வாக்கைக் கவர
உதவும். இல்லையேல் மீரா குமாரை நிறுத்தக் கூடும்.
எனினும் காங்கிரஸ் முகாமில் இது குறித்து
சந்தடி எதுவும் எழவில்லை.

பழங்குடி இனப் பெண்மணியை பாஜக
நிறுத்துமானால், அரசியல்ரீதியாக பாஜகவுக்கு
அதனால் பெரும் ஆதாயம் கிட்டும்.

என்ன நடக்கப் போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்.
********************************************************************

திங்கள், 10 ஏப்ரல், 2017

தேர்தல் ரத்து!
கட்டுக்கடங்காத
மகிழ்ச்சி வெள்ளத்தில் எடப்பாடி!
முதல்வர் பதவி நீடிப்பதால்!

விஜயபாஸ்கர் சரத்குமார்
கைது எப்போது?
ஓரிரு நாட்களில்
எனத் தகவல்!

1500 கோடி!
மக்கள் நலக் கூட்டணித்
தலைவர்களின் வீடுகளில் சோதனை?
வைகோ கலக்கம்!

நசீம் ஜைதியை
போனில் கூப்பிட்டு
கடிந்து கொண்ட ஜெயேந்திரர்!
தினகரனை எதிர்க்காதே என எச்சரிக்கை!

தேர்தல் ரத்து!
ஜெயேந்திரர் அப்செட்!
தினகரனுக்கு
போனில் கூப்பிட்டு ஆறுதல்!

மநகூ தலைவர்களின்
வீடுகளில் ரெய்டு நடத்த
நசீம் ஜைதியுடன்
அதிகாரிகள் ஆலோசனை!
1500 கோடி!

முன்ஜாமீன் பெறுவது பற்றி
ராம் ஜெத்மலானியுடன்
சரத்குமார் ஆலோசனை!

வக்கீல்
ஜெத்மலானி 1 சி கேட்கிறாராம். சரத் வாங்கியது
2 சி யாம்.  பாதி மிஞ்சும்!

ராஜேஷ் லக்கானிக்கு
ஜெயேந்திரர் சம்மன்!
தேர்தல் ரத்து பற்றி
விளக்கம் கேட்கிறார் ஜெயேந்திரர்!
கேட்கும் பெரியவா!

பெரியவா ரொம்பக் கோபமா இருக்கா!
சாந்தமாகட்டும்! நாளைக்கு வாங்கோ!
மைத்ரேயனிடம் சுந்தரேச அய்யர்!

மேலும் சில
தலைவர்களின் வீடுகளில் ரெய்டு!
கம்யூனிஸ்ட்  தளி ராமச்சந்திரன்
வீடும் லிஸ்டில் உள்ளது!

கஞ்சி சீர்
Kanchi seer His Holiness Jeyendra Saraswathi
has summoned Rajesh Lakhani, TN Chief Election Commissioner.

ithuthaandaa

இதுதாண்டா மக்கள் தீர்ப்பு!
இப்படித்தாண்டா இருக்கும் மக்களின் தீர்ப்பு!!
ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

156. குறிஞ்சி - தலைவன் கூற்று
பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
செம்பூ முருக்கி னன்னார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப்
படிவ உண்டிப் பார்ப்பன மகனே
எழுதாக் கற்பி னின்சொல் உள்ளும்
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
மருந்தும் உண்டோ மயலோ விதுவே.
(- பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்)
.
விளக்கம் தேவையெனில்....
‘பார்ப்பன மகனே பார்ப்பன மகனே செம்பூ முருங்க மரத்தின் தடியில் கமண்டலத்தை உடைய, நோன்பிருந்து உண்ணும் வழக்கமுடைய பார்ப்பன மகனே, உங்களுடைய எழுத்து வடிவம் இல்லாத கல்வியாகிய வேதத்தில் (’எழுதாக் கற்பி') உள்ள இனிய உரைகளில், பிரிந்து சென்ற தலைவன் தலைவியை மீண்டும் புணரச் செய்யும் மருந்து உள்ளதா?’
ஆர்கே நகரில் என் தலைமையில்
நாளை சாலை மறியல்!
கோரிக்கை:
தினகரனே ஓட்டுக்கு ரூ 10,000 வழங்கு!
அனைவரும் பங்கேற்று போராட்டத்தைச் சிறப்பிக்க
வாரீர்! கோரிக்கையின் நியாயத்தை மறுப்பவர்
எவரும் இல்லை என்பதில் பெருமைப் படுகிறேன்.

கோரிக்கைகள் வெற்றிபெற
கோடிக்கைகள் போராடும்.
கோடிக்கைகள் போராட
கோரிக்கைகள் வெற்றிபெறும்!

தேர்தல் ரத்து மற்றும்
தினகரனை தகுதிநீக்கம் செய்ய
தேர்தல் ஆணையம் பரிசீலனை!

கோரிக்கை சாசனத்தில் மொத்தம் 15 கோரிக்கைகள்
உள்ளன. அதில் பிரியாணி, குவாட்டர் மற்றும்
டாஸ்மாக் டோக்கன் வழங்க வேண்டும் ஆகிய
கோரிக்கைகள் உள்ளன.

சனி, 8 ஏப்ரல், 2017

89 கோடி பட்டுவாடா
நடந்து முடிந்த பின்பு
தேர்தல் நடத்துவது
முழு மூடத்தனம்!

தினகரன் தகுதிநீக்கத்திற்கு
வலுவான ஆதாரம்!
தகுதிநீக்கம் செய்யுமா
தேர்தல் ஆணையம்?

கண்டிப்பாக விடை சொல்ல வேண்டிய கணக்கு!
----------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------------------
தலைக்கு ரூ 4000 வீதம் கொடுத்த தொகை மொத்தம்
ரூ 89 கோடி என்றால், எத்தனை பேருக்கு பணம்
கொடுக்கப்பட்டு உள்ளது?

ஒவ்வொரு வாசகரும் விடையளிக்க வேண்டும்.
------------------------------------------------------------------------------------------
சரியான விடையை எழுதியமைக்கு நன்றி!

பணப் பட்டுவாடா குறித்த ஆவணங்கள்!
அசைக்க முடியாத ஆதாரம்!

---------------------------------------------------------------------------
ஜனாதிபதி தேர்தல் வருகிறது!
-----------------------------------------------------
1) இன்னும் மூன்று மாதங்களே உள்ளன. ஜூலை 2017இல்
ஜனாதிபதி தேர்தல் வருகிறது.

2) லோக்சபை, ராஜ்யசபை MPக்கள், 29 மாநிலங்களின்
MLAக்கள், யூனியன் பிரதேசங்களான பாண்டிச்சேரி,
புதுடில்லி MLAக்கள் என்று ஆக மொத்தம் இவர்கள்
மட்டுமே வாக்களிக்கத் தகுதி உள்ளவர்கள். MLCக்களுக்கு
வாக்களிக்கும் உரிமை இல்லை.

3) மொத்த வாக்கு மதிப்பு=  11 லட்சம் (தோராயமாக)

4) வாக்களிக்கத் தகுதி உடையோர்:
MPக்கள்= 776; MLAக்கள்= 4120.

5) மக்கள் தொகையைப் பொறுத்து MLAக்களின்
வாக்கு மதிப்பு மாறும். உதாரணமாக அதிக
மக்கள் தொகை கொண்ட உபி MLAவின் வாக்கு
மதிப்பு தமிழக MLAவின் வாக்கு மதிப்பை விட அதிகம்.

6) உபி MLA வின் வாக்கு மதிப்பு= 83824
தமிழக MLAவின் வாக்கு மதிப்பு= 41184

7) 1971ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள்தொகை
கணக்கெடுப்பின் அடிப்படையில்தான் மக்கள்தொகை
கணக்கிடப்படும். தற்போதுள்ள மக்கள்தொகை
கணக்கில் கொள்ளப் படாது.     

8) பாஜகவைச் சேர்ந்த திரௌபதி முர்மு என்ற பெண்மணி
அடுத்த ஜனாதிபதியாக வருவார் என்று கூறப்படுகிறது.
இவர்  பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர் (Scheduled Tribe).
******************************************************************** 

விஜய் மல்லையாவின்
கோவா மாளிகை ஏலம்!
ரூ 73 கோடிக்கு ஏலம் எடுத்த
தொழிலதிபர்!

விஜய் மல்லையா வாங்கிய மொத்தக் கடன்= 7000 கோடி
கோவா மளிகை ஏலம் மூலம் கிடைத்தது= 73 கோடி.
இனி ஒவ்வொரு சொத்தாக ஏலம் விடப்படும்.

ஜூன் மாதம் வேட்புமனு தாக்கல் தொடங்கி விடும்.
ஜூலையில் தேர்தல். ஜூலை 22, 2017இல் தேர்தல்
முடிவு அறிவிக்கப்படும்.

 

வியாழன், 6 ஏப்ரல், 2017

உபி மாநிலத்தில் 2017 தேர்தலில், மொத்தம் 
403 தொகுதிகள். எந்தத் தொகுதியிலும் எந்த
சுயேச்சை வேட்பாளரும் பூஜ்யம் வாக்குகள்
பெறவில்லை. தனக்கு பூஜ்யம் வாக்குகள் மட்டுமே
விழுந்ததாக ஒரு சுயேச்சை வேட்பாளர் புலம்புவதாக
வந்த செய்தியில் உண்மை இல்லை. 403 தொகுதியிலும்
தொகுதிவாரியாக (constituency) ஒவ்வொரு வேட்பாளரும்
பெற்றுள்ள வாக்குகள் விவரத்தை தேர்தல் ஆணையம்
வெளியிட்டு உள்ளது. அதற்கான லிங்க் கொடுத்துள்ளேன்.
எந்த வேட்பாளரும் உபி தேர்தலில் பூஜ்யம் வாக்கு
பெறவில்லை என்பதை தேர்தல் ஆணையம் வெளியிட்ட
தொகுதிவாரி முடிவு நிரூபிக்கிறது.
 

அமைச்சர் விஜயபாஸ்கரின்
உதவியாளர்  நயினார் வீட்டில்
ரூ 2,2 கோடி பறிமுதல்!

சுகாதார அமைச்சர்
விஜயபாஸ்கரை
பதவிநீக்கம் செய்!
மக்களின் வலுக்கும் கோரிக்கை! 
Trend says it will be BJP Govt in Tripura in 2018 as Left do not hold any moral right to continue in power after betraying people of Tripura with massive unemployment, gross nepotism and rampant corruption.
CPIM under its incompetent leadership have destroyed Tripura leaving 8 lakhs unemployed poor youths languishing day in and day out. Left have been a champion in hardcore nepotism and corruption. Left govt in Tripura have been slapped by high court numerous number of times (major one being 10,233 teacher recruitment case, with major job holders from CPIM cadres and family members) with nepotism and corruption charges.
Can a report card be issued on public interest on performance of CPIM led Govt in Tripura please? Massive 8 lakh unemployed youths languishing day in and day out, nepotism in Govt sector recruitment (e.g. 10,323 teacher's recruitment cancelled by Tripura High court an year back citing corrupt practices by Govt), corruption in pwd and healthcare (e.g. looting crores of central funds meant for state's infrastructure development, poor quality of healthcare stuffs and massive negligence leading to regular deaths of patients in leading Govt hospitals) and many more..
Hope BJP have a well drawn up plan for a thumping win in Tripura polls. People of Tripura have had enough of incompetent Govt who have failed miserably in all the sectors including failure to provide mass employment to 8 lakh youths who have been languishing day in and day out, with no action taken on the responsible non-performers.
2019 தேர்தலில்
ரேபரேலி அமேதி தொகுதிகளில்
சோனியா, ராகுல்
வெற்றி பெறுவது இயலாது.
இத்தொகுதிகளில் அடங்கிய சட்டமன்றத்
தொகுதிகளில் பாஜக அமோகமாக வென்றுள்ளது.

2014 நாடாளுமன்றத் தேர்தலில், ரேபரேலி அமேதி
தொகுதிகளில் போட்டியிட வேண்டாம் என்று
சோனியா முலாயம்சிங்கிடம் வேண்டுகோள்
விடுத்தார். பெருந்தன்மையுடன் அந்த வேண்டுகோளை
ஏற்ற முலாயம், ரேபரேலி அமேதி தொகுதிகளில்
தன கட்சி வேட்பாளரை நிறுத்தவில்லை. நிறுத்தி
இருந்தால் குறைந்தது ராகுல் தோற்றுப்போய் இருப்பார்.

இதுவரை சோனியா ராகுல் வெற்றி பெறுவதில்
எவ்வித சிக்கலும் இல்லை. இனிமேலும் அதே
நிலைமை நீடிக்க வாய்ப்பில்லை.

பசங்கன்னா அப்படித்தான்
கற்பழிக்கத்தான் செய்வாங்க
என்று கூறிய முலாயம்சிங்
இப்போது வருந்துகிறாராம்! என்ற
என்று கூறினார் முலாயம் அன்று
2014 தேர்தல் பிரச்சாரத்தில்.


பணம் தொடர்ந்து கொடுப்போம்
தேர்தல் ஆணையமே
உன்னால் மயிரைக்கூட
பிடுங்க முடியாது
தொப்பி!
   

செவ்வாய், 4 ஏப்ரல், 2017

வழுவமைதி என்பது தமிழில் உள்ளது. இந்தப் பதிவில் எவையெல்லாம்
வழுக்கள் என்று கருதப்படுகின்றனவோ
அவற்றை வழுவமைதியாகக் கொள்ள வேண்டும்
என்பதை வலியுறுத்த விழைகிறேன்.
**
மொழி தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பது.
இயங்கும்போதே மாறிக் கொண்டிருப்பது. இந்த
மாற்றத்தை ஏற்க வேண்டும். மாற்றம் என்பது
இயல்பானது.
**
மக்களால் பேசப்படும்போதுதான் மொழி உயிர்
பெறுகிறது. ஏதேனும் ஒரு தனியறையில் (isolated chamber)
வைத்துப் பராமரிப்பதன் மூலம் எந்தவொரு மொழியையும்
எவரும் உயிருடன் வைத்திருக்க இயலாது. எனவே
பேச்சு வழக்கையும் கருத்தில் கொண்டே இலக்கணம்
சமைக்க வேண்டும்.
**
மொழி என்பது எளிய சுருக்கமான சொற்களைக்
கொண்டிருக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பம்.
எனவேதான் சொற்குறுக்கங்கள் எல்லா மொழிகளிலும்
செல்வாக்குப் பெறுகின்றன. 10,15 எழுத்துக்களை அல்லது
அசைகளைக் கொண்ட நெடிய சொல்லை மக்கள்
விரும்புவதில்லை. biscuits என்ற ஆங்கிலச்சொல் bikis
என்று மாறியதை மக்கள் வியப்புடன் பார்க்கிறார்கள்.
பேச்சுமொழியில் மட்டுமல்ல எழுத்திலும்கூட சுருக்கம்
தேவைப்படுகிறது. ஒரு நீண்ட சொல்லை அப்படியே
நீளமாக எழுதுகையில் அதை வாசிக்க இன்றைய
தலைமுறை சிரமப்  படுகிறது.
**
"வந்துகொண்டிருக்கிறார்கள்" என்று எழுதும்போது அது
வாசிக்கப் படுவதில்லை. வந்து கொண்டு இருக்கிறார்கள்
என்று பிரித்து எழுதும்போது அது மக்களுக்குப்
புரிகிறது;வாசிக்கப் படுகிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு
முந்திய புணர்ச்சி விதிகளை இன்று பொருத்திப் பார்த்து,
பிரித்து எழுதுவது இலக்கணப்படி தவறு என்று
நிரூபிப்பதால் தமிழுக்கோ அதைப்பேசும் மக்களுக்கோ
என்ன பயன் விளையும்?
**
மார்க்சியம் மக்களுக்கே முதன்மை தருகிறது. எனவே
மக்களுக்குப் புரியும் விதத்தில் எழுதுவதே தேவையானது
என்ற கோட்பாட்டை நான் உணர்வுபூர்வமாகப்
பின்பற்றி வருகிறேன். இது இலக்கணத்தையே எதிர்க்கும்
அராசகவாதமோ (anarchism) (அல்லது) இலக்கணமே கூடாது
என்னும்  பின்நவீனத்துவமோ அல்ல. மாறாக மக்களின்
பேச்சு வழக்கு, எழுத்து முறை ஆகியவற்றைக்
கருத்தில் கொண்டு தேவையான மாற்றங்களை
மேற்கொள்ளுவது என்ற கோட்பாடுதான்.     
      

சனி, 1 ஏப்ரல், 2017

மின்னணு வாக்கு எந்திரம் பற்றிய
கெஜ்ரிவாலின் பொய்கள் அம்பலம் ஆயின!
------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------
1) மத்திய பிரதேசத்தில் ஒரு இடைத்தேர்தல்
வருகிறது. அதில் பயன்படவுள்ள மின்னணு
வாக்கு எந்திரங்களை அண்மையில் தேர்தல்
அதிகாரி பரிசோதனை செய்தார். இந்தப்
பரிசோதனை பத்திரிகையாளர்கள் முன்னிலையில்
நடந்தது.

2) இந்தப் பரிசோதனையின்போது, தேர்தல் அதிகாரி
எந்தப் பொத்தானை அழுத்தத்தினாலும், பாஜகவுக்கு
வாக்கு விழுவதாக பொய் பரப்பப் படுகிறது.
இந்தப்பொய்க்கு ஒரு வீடியோ ஆதாரம்
தரப்பட்டுள்ளது.

3) அந்த வீடியோ ஒரு நிமிடம் மட்டுமே ஓடும் வீடியோ.
ஆனால் அதில் பேசுபவர்கள் இந்தியில் பேசுகின்றனர்.
எனவே இந்தி தெரிந்திருந்தால் மட்டுமே அந்த
வீடியோவைப் புரிந்து கொள்ள முடியும்.

4) எனவே எல்லோரும் அந்த வீடியோவைப் பாருங்கள்.
எந்த வேட்பாளருக்கு பொத்தானை அழுத்துகிறோமா
அந்த வேட்பாளருக்குத்தான் வாக்கு விழுகிறது.
இதை VVPAT உறுதி செய்கிறது. எனவே குற்றச்சாட்டு
பொய் என்பதை அந்த  வீடியோவே உறுதி செய்கிறது.

5) இந்தி தெரியாதவர்கள், இந்தி தெரிந்த அன்பர்களின்
துணையுடன் அந்த வீடியோவைப் பார்த்துப்
புரிந்து உண்மை அறியவும்.

6) எவர் வேண்டுமானாலும் மின்னணு எந்திரத்தின்
சரித்தன்மையை சோதனை இடலாம். சோதனையிட்டு
உண்மையை அறியலாம். எந்திரங்கள் சரியாக
இருக்கின்றன. இதுவே உண்மை.
*********************************************************************
    
கெஜ்ரிவாலின் பொய் பற்றிய கட்டுரை ஆங்கிலத்தில்
உள்ளது. அது பொய் என்று நிரூபிக்கும் கட்டுரையும்
ஆங்கிலத்தில் உள்ளது. இது குறித்த வீடியோ
இந்தியில் உள்ளது. இவை எதையும் தமிழில்
மொழிபெயர்க்கப் போவதில்லை. வாசக அன்பர்கள்
படித்து உண்மையை அறியவும்.

இந்தியாவிலேயே
மின்னணு வாக்களிக்கும் எந்திரத்தை
குறைகூறாத ஒரே கட்சி
திமுக மட்டுமே! கலைஞர் வாழ்க!

1) 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களிலும்
திமுக தோற்றது. என்றாலும் இதற்குக் காரணம்
EVM எந்திரங்கள் என்று திமுக கூறவில்லை!

2) அண்மையில் 2016 சட்டமன்றத் தேர்தலிலும்
திமுக தோற்றது; ஆட்சி அமைக்க முடியவில்லை.
என்றாலும் கலைஞரோ தளபதியோ  EVM
எந்திரங்களைக் குறை கூறவில்லை.

3) அதற்கு முன்பு 2011 சட்டமன்றத் தேர்தலிலும்
திமுக தோற்றது. என்றாலும் EVM எந்திரங்களைக்
குறை கூறவில்லை.

4) திமுக அறிவியலை எதிர்க்கும் பிற்போக்கு
கட்சி அல்ல.

திமுகவின் நேர்மை!
---------------------------------------
தொடர்ந்து 2011 முதல் 2016 வரை எல்லாத் தேர்தல்களிலும்
தோல்வி அடைந்த நிலையிலும், தங்களின் தோல்விக்குக்
காரணம் மின்னணு எந்திரங்கள்தான் என்று திமுக
ஒருபோதும் சொன்னதில்லை. ஒரு சராசரி திமுக
மேடைப்பேச்சாளர் கூட அப்படி ஒரு குற்றச்சாட்டை
முன்வைத்தது இல்லை. இதுதான் உண்மை. இது
மட்டுமே உண்மை.

தேர்தல் தோல்வி!
மாயாவதி முலாயம் கட்சிகள்
பாஜகவுடன் போட்டி!
இந்துத்துவத்தை மேற்கொள்கின்றன. ஏற்றன

இதன் மூலம் ஒட்டு மொத்த உ.பி.யும்
இந்துத்துவ அரசியலை ஏற்றுக்கொண்டு
கடைப்பிடிக்கத் தொடங்கி உள்ளது.

மொத்தத் தமிழ்நாட்டிலும்
திராவிட அரசியல்!
மொத்த உபியிலும்
இந்துத்துவ அரசியல்!
இதுவே இன்றைய உபி!

என் மகன் அகிலேஷைப்போல இந்த வாழ்க்கையில்
என்னை யாரும் அவமானப் படுத்தியது இல்லை!
முலாயம் புலம்பல்!


தேர்தல் தோல்விக்குப் பின், அகிலேஷின் சமாஜவாதி
கட்சியும், மாயாவதியின் பகுஜன் கட்சியும் பாஜவுக்குப்
போட்டியாக இந்துத்துவ அரசியலைக் கையில்
எடுத்துள்ளன.

தமிழர்கள் கிணற்றுத் தவளைகளாய் இருந்து கொண்டு
இருக்கிறார்கள். உபி என்பது வெறும் வடஇந்திய
மாநிலம் அல்ல. மாறாக இந்தியாவின் தலைவிதியைத்
தீர்மானிக்கும் இடத்தை உபி வகிக்கிறது. உபி
அரசியலைப் பற்றி எம்மைத் தவிர வேறு எவரும்
பேசுவதில்லை. குண்டுச் சட்டியில் குதிரை
ஓட்டும் முட்டாள்களாக தமிழர்கள்!

மகாத்மா காந்தி படுகொலை என்பது ஒரு வரலாற்று
நிகழ்வு. இதில் அனுமானங்களுக்கு இடமில்லை.
ஆதாரங்களுக்கு மட்டுமே இடம் உண்டு."எந்த வழக்கிலும்
இவ்வளவு விரைவாக போலீஸ் FIRஐ எழுதாது"
என்பதெல்லாம் வெறும் வறட்டு அனுமானம். இதற்கு
என்ன ஆதாரம்? காந்தி கொலை 1948 இல். அன்றைய
காலத்தில் காவல் துரையின் வேலைப் பண்பாடு
(work culture) வேறு. அதை இன்றைய வேலைப்பண்பாட்டை
வைத்துக் கொண்டு நிர்ணயிக்க முடியாது. காந்தி கொலை
பற்றிய FIR எப்போது எழுதப்பட்டு இருக்கும் என்று
தாங்கள் கூற வருகிறீர்கள்? 1950இலா? இதன் மூலம்
தாங்கள் உணர்த்த விரும்புவது என்ன? எத்தகைய
குறிக்கோளும் இல்லாமல் வாய் புளித்ததோ மாங்காய்
புளித்ததோ என்று எதையாவது சொல்வதா?

மிஸ்டர் பூவண்ணன்,
உங்களின் வறட்டு அனுமானத்துக்குள் சிறைப்பட்டுக்
கொண்டு அதில் இருந்து வெளியேற மறுக்கிறீர்கள்.
உங்களின் கருத்தை (FIR உடனடியாக எழுதப்பட்டிருக்க
வாய்ப்பில்லை) நிரூபிக்க முயற்சி செய்யாமல், அதை
அனாதையாகச் செத்துப்போக விடுகிறீர்கள். எழுதப்பட்ட
FIRஐ ஏற்க இயலாது என்று கூறும் தாங்கள், எப்போதுதான்
FIR எழுதப்பட்டது என்று சொல்ல முன்வர வேண்டும்.
அதை நிரூபிக்க வேண்டும். மற்றப்படி, கோட்ஸே ஏன்
காந்தியைக் கொன்றார் என்பது பற்றி கோட்ஸேயே
வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார். அது
கொலையாளியின் வாக்குமூலம். எனவே மூன்றாம்
மனிதனின் வாக்குமூலம் பற்றி எனக்கு அக்கறை இல்லை.
கோட்ஸே தன் கையில் இஸ்மாயில் என்று பச்சை
குத்திக் கொண்டிருந்தாரா இல்லையா என்ற ஒரு
விஷயத்தில் மட்டுமே எனக்கு அக்கறை. அதில்
தங்களால் ஏதாவது வெளிச்சம் பாய்ச்ச முடியுமானால்
 நல்லது. பயனில்சொல் பாராட்டுதலால் என்ன பயன்
விளையும்?