என்றும் எம் தலைவர் பெரியாரே!
திமுகவில் பெரியாருக்கு இடமளித்த அண்ணா!
-------------------------------------------------------------------------------------
அறிஞர் அண்ணாவின் அகநிலை விருப்பத்தால்
திமுக உருவானது என்று எவரும் கருதினால் அது
தவறு. திமுகவின் தோற்றம் காலத்தின் கட்டாயம்.
காலம் தந்த கொடையே திமுக. ஒடுக்கப்பட்ட
சூத்திர பஞ்சம மக்களுக்கு ஆளுகையில் (governance)
பங்கு என்ற நோக்கமே திமுகவை உருவாக்கியது.
1949இல் ஒரு நோட்டுப் புத்தகத்தில் திமுகவிற்கான
சட்ட திட்டங்களை அண்ணா எழுதினார். அன்றைய
காலத்தில் கட்சிகளின் உள்கட்டமைப்பு பிரதானமாக
இரண்டு வகையில் இருந்தது.
அ) தலைவர் பதவியே முதன்மை நிர்வாகி
(President is the Chief Executive)
ஆ) பொதுக் காரியதரிசி பதவியே முதன்மை நிர்வாகி
(General Secretary is the Chief Executive)
பொதுக் காரியதரிசி என்றால் பொதுச் செயலாளர்
என்று இன்றைய தலைமுறை புரிந்து கொள்ள வேண்டும்.
காங்கிரஸ் போன்ற கட்சிகளில் தலைவர் பதவியே
முதன்மை நிர்வாகியாக இருந்தது. இது பழமைவாதப்
போக்கு (conservative trend) என்று கருதிய அறிஞர் அண்ணா,
திமுகவை, பொதுச்செயலாளரை முதன்மை
நிர்வாகியாகக் கொண்ட அமைப்பாகக் .கட்டமைத்தார்.
கம்யூனிஸ்ட் கட்சிகளில் பொதுச் செயலாளர் பதவி
மட்டுமே உண்டு.
எனவே திமுகவை ஆரம்பித்தபோது, கட்சி அமைப்பு
விதிகளின்படி, தலைவர் பதவி கிடையாது. பொதுச்
செயலாளரே திமுகவின் முதன்மை நிர்வாகி. அறிஞர்
அண்ணா அவர்கள் கழகத்தின் பொதுச் செயலாளராக
ஒருமானதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். இவ்வாறு
1949இல் திமுக மரபை மீறிய கட்டமைப்புடன் பிறந்தது.
பெரியாரை எதிர்த்தும் பெரியாரைப் பிரிந்தும்
கட்சி ஆரம்பித்தபோதும், என்றேனும் ஒருநாள்
பெரியார் திமுகவை அங்கீகரிப்பார் என்றே அண்ணா
கருதினார். திமுகவின் தலைவர் பெரியாரே! அவர்
இன்றில்லாவிடினும் நாளை திமுகவுக்கு வருவார்;
திமுகவின் தலைமையை ஏற்பார்; அதற்கு
இடமளிக்கவே தலைவர் பதவியில் யாரையும்
அமர்த்தாமல், பெரியாருக்காக திமுகவின் தலைவர்
பதவி காலியாக விட்டு வைக்கப் பட்டுள்ளது என்று
கூறினார் அண்ணா.
அண்ணாவின் மறைவுக்குப் பின்னர், திமுகவில்
சில பூசல்கள் எழுந்தபோது, கழகத்தின் சட்ட விதிகளில்
திருத்தம் செய்து, தலைவர் பதவியை முதன்மை
நிர்வாகியாகக் கொண்டு (Chief Executive), கலைஞர்
அவர்கள் கழகத்தின் தலைவராக 1970களில்
பொறுப்பேற்றார்.
ராமச்சந்திர மேனன் அதிமுகவை ஆரம்பித்தபோது,
பொதுச் செயலாளரே முதன்மை நிர்வாகி என்ற
கட்டமைப்புடன் கட்சி தொடங்கினார். தென்கிழக்கு
ஆசியாவின் மாபெரும் அறிவியக்கமாக, மாபெரும்
சீர்திருத்த இயக்கமாகத் திகழ்ந்த திமுகவை
மேனன் எவ்வாறு நாசம் செய்தார் என்பதை
அடுத்துக் காண்போம்!
*****************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக