இந்தி எதிர்ப்பும் போலித்தனமும்!
-------------------------------------------------------------
சுதந்திரம் அடையப்போகும் இந்தியாவுக்காக
ஓர் அரசமைப்புச் சட்டம் எழுத வேண்டும். இதற்காக
அரசியல் நிர்ணய சபை (Constituent Assembly) அமைக்கப்
பட்டது. 1946 டிசம்பரில் அமைக்கப்பட்ட அரசியல்
நிர்ணய சபை 1950 ஜனவரியில், பணிகள்
நிறைவேறியதை ஒட்டி கலைக்கப் பட்டது.
இந்த சபையில் மொத்தம் 389 உறுப்பினர்கள்
இருந்தனர். காங்கிரசும் முஸ்லீம் லீக் கட்சியும்
பெருவாரியான இடங்களை (208+73= 281) கொண்டிருந்தன.
சுதேச சமஸ்தானங்கள் 93 இடங்களைப் பெற்றிருந்தன.
தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கணிசமான
பேர் இச்சபையில் இருந்தனர். அவர்களுள்
1) காமராசர் 2) கக்கன் ஆகியோர் முக்கியமானவர்கள்.
திமுக அப்போது தோன்றவில்லை என்பது குறிப்பிடத்
தக்கது. தமிழ்நாட்டில் காங்கிரசும் நீதிக்கட்சியுமே
அப்போது பெரிய கட்சிகள்.
இந்தியாவின் ஆட்சி மொழி எது என்பதைத் தீர்மானிக்கும்
வாக்கெடுப்பு அரசியல் நிர்ணய சபையில் நடந்தது.
அப்போது காங்கிரசின் பிரபல தலைவர்களான
பச்சைத் தமிழர்கள் காமராசரும் கக்கனும் இந்திக்கு
ஆதரவாக வாக்களித்து இந்தியை ஆட்சிமொழி
ஆக்கினர்.
அதே நேரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த டி டி
கிருஷ்ணமாச்சாரி அரசியல் நிர்ணய சபையில்
இந்தியைக் கடுமையாக எதிர்த்தார்.
காமராசரும் கக்கனும் இந்தியை எதிர்த்து வாக்களித்து
இருந்தால், இந்தி நாட்டின் ஆட்சிமொழியாக ஆகி
இருக்கவே முடியாது.
புதுடில்லியில் இந்தியை ஆதரித்து வாக்களித்து
விட்டு, தமிழ்நாடு திரும்பிய காமராசரும் கக்கனும்
எந்த விதமான மக்களின் எதிர்ப்பையோ
கண்டனத்தையோ சம்பாதிக்கவில்லை என்பது
வரலாறு.
தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு என்பது அரசியல்
ஆதாயங்களுக்காக மேற்கொள்ளப் பட்ட ஒன்றே
தவிர, அந்தரங்க சுத்தியோடு நடந்த ஒன்றல்ல
என்பதை இந்த நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.
இந்தியை ஆதரித்து வாக்களித்து விட்டு, தமிழ் மண்ணை
எந்த தைரியத்துடன் காமராசரும் கக்கனும்
மிதித்தார்கள்? இங்குள்ளது போலியான இந்தி எதிர்ப்பு
என்று உணர்ந்ததால்தானே!
********************************************************************
தேசியமொழி என்பது ஏற்கப்படவில்லை. எனவே
இந்தியாவுக்கு என்று எந்த ஒரு தேசிய மொழியும்
கிடையாது. நாம் இங்கு கூறுவது ஆட்சிமொழி அல்லது
அலுவல்மொழி (ஆங்கிலத்தில் official language) பற்றியே.
யார் தலைமை வகித்தார் என்பதில் எவ்வித சிக்கலும்
இல்லை (no dispute at all). காமராசரும் கக்கனும்
இந்தியை ஆதரித்தது மன்னிக்க முடியாத தவறு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக