வியாழன், 31 மே, 2018

ரஜனிக்கு செல்வாக்கு இருப்பது ஏன்?
இளைஞர்களும் மக்களும் ரஜனி மீது
நம்பிக்கை வைத்திருப்பது ஏன்?
---------------------------------------------------------------
சுதந்திரப் போராட்ட காலத்தில் மகாத்மா காந்தி, நேரு
ஆகிய தலைவர்களால் ஈர்க்கப்பட்டு இளைஞர்கள்
காங்கிரசின் மீது பற்றுக் கொண்டனர்.

திராவிட இயக்கத்தை பெரியார் ஆரம்பித்தபோது,
பெரியார், அண்ணா ஆகிய தலைவர்களின் சமூக
சீர்திருத்தக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள்
திராவிட இயக்கங்களில் இணைந்தனர்.

1969இல் வசந்தத்தின் இடி முழக்கமாக நக்சல்பாரி
ஆயுதம் தாங்கிய எழுச்சி ஏற்பட்டபோது, சாரு மஜூம்தார்
பின்னால் மொத்த தேசமும் அணிதிரண்டது.
இளைஞர்கள் கல்லூரிப் படிப்பைத் துறந்து
நக்சல்பாரி இயக்கத்தில் அணிதிரண்டனர். இந்திய
அரசியலில், மகாத்மா காந்திக்குப் பின்னர் நாடு
முழுவதும் கோடிக்கணக்கான மக்களையும்
லட்சக் கணக்கான இளைஞர்களையும் ஈர்த்த
ஒரே தலைவர் சாரு மஜூம்தார் மட்டுமே.

ஆக, தத்துவ வெற்றிடமோ, அரசியல் வெற்றிடமோ
மேற்கூறிய காலக்கட்டத்தில் இல்லை. 1990களில்
இந்த நிலைமை மாறுகிறது. அடுத்த தலைமுறை
வந்து விடுகிறது. அத்தலைமுறை அரசியலற்ற
போக்கைக் கொண்டிருக்கிறது.

இதற்கு என்ன காரணம்?
அத்தனை அரசியல் தலைவர்களும் அம்பலப்பட்டு
நிற்கிறார்கள்.அவ்வளவு பேரும் முழு நிர்வாணமாக
நிற்கிறார்கள். ஒரு காலத்தில் இளைஞர்களின் ஆதர்சமாக
இருந்த தலைவர்கள் ஊழல் பேர்வழிகளாக, வாரிசு
அரசியலையும் குடும்ப அரசியலையும் மேற்கொண்டு
சுயநலப் பிண்டங்களாக இழிந்து போய் நிற்கிறார்கள்.

அரசியல்வாதி என்றால், எந்தக் கட்சியாக இருந்தாலும்,
அவன் ஊழல் பேர்வழி என்பதையும் , ஊரைக்
கொள்ளையடிக்கவே அரசியலில் இருக்கிறான்
என்பதையும் மக்கள் நன்கு உணர்ந்து விட்டனர்.

உலகிலேயே அரசியல்வாதிகளை மிகவும் கீழ்த்தரமாக
மதிக்கும் நாடு இந்தியா என்று ஒரு ஆய்வு
கூறுகிறது.

தலைசிறந்த பொருளாதார அறிஞரும் சட்ட நிபுணருமான
ப சிதம்பரம், உலகெங்கும் சொத்துக்களை வாங்கிக்
குவித்து விட்டு, இன்று ஒவ்வொரு கோர்ட்டிலும்
முன்ஜாமீனுக்கு  அலைந்து கொண்டு இருப்பதை நாடு
பார்த்துக் கொண்டிருக்கிறது.

அத்தனை அரசியல்வாதிகளும் கல்வித் தந்தைகளாக
மாறி, நாட்டைக் கொள்ளை அடித்துக் கொண்டிருப்பதை
மக்கள் தெளிவாக உணர்ந்து இருக்கிறார்கள்.

எனவே மக்களுக்கோ இளைஞர்களுக்கோ ஆதர்சமாக
உள்ள தலைவரோ, அரசியல் கட்சியோ இல்லை.

1980களில் புற்றீசல் போல் NGOகள் இந்தியா முழுவதும்
பரவின. பின்நவீனத்துவம் தத்துவ அரங்கில்
பெரிதாகத் தன்னை  வெளிப்படுத்திக் கொண்டது.
அனைத்தையும் மறுவாசிப்புச் செய்வது, கட்டுடைப்பது
என்று களமிறங்கிய பின்நவீனத்துவம் எல்லாத்
தத்துவங்களையும் கேள்விக்கு உள்ளாக்கியது.
எல்லாத் தலைவர்களையும் விமர்சனத்துக்கு
உள்ளாக்கியது. இதன் விளைவாக அனைத்தும்
அம்பலப் பட்டன.

எனவே இன்றைய இளைஞர்களுக்கு  எந்தத் தலைவர் மீதும்
அல்லது எந்தக் கட்சி மீதும் மதிப்பு இல்லாத நிலை
உருவாகி விட்டது. இப்படிப்பட்ட சூழலில் ரஜனிகாந்த்
போன்ற அரசியலற்ற தலைவர்கள் மக்களின்
நாயகர்களாக உருவாகிறார்கள்.

இளைஞர்கள் மட்டுமல்ல மக்களும் அரசியல் கட்சிகள் மீது
முற்றிலுமாக நம்பிக்கை இழந்து விட்டார்கள்.
கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம்,
ஜல்லிக்கட்டுப் போராட்டம், ஸ்டெர்லைட் போராட்டம்,
கதிராமங்கலம் மீத்தேன் எதிர்ப்புப் போராட்டம்
ஆகிய இவை யாவும் எந்த ஒரு அரசியல் கட்சியின்
தலைமையிலும் நடைபெறவில்லை. ஏன்?
என்ன காரணம்? அரசியல் கட்சிகள் மீது மொத்த
சமூகமும் நம்பிக்கை இழந்து விட்டது என்பதுதானே
காரணம்!

கட்சிசாரா மக்கள் எழுச்சியை (Non party upsurge) இன்று
அநேகமாக இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும்
காணலாம். எல்லாக் கட்சிகளும் மக்களிடம்
அம்பலப் பட்டுப்போய் நிற்கின்றன.

இது போன்ற புறச்சூழல் ரஜனிகாந்த் போன்ற
தலைவர்களிடம் மக்களைப் புகலிடம் தேட
வைக்கிறது. இதுவே உண்மை!
***************************************************
  
       தன்னை
       
கூத்தாடி ராகவா லாரன்ஸின் திருமண நாள்!
மார்க்சியக் கண்ணோட்டத்தில் முக்கியமான நாள்!!
--------------------------------------------------------------------------------------------- 
நடிகர் ராகவா லாரன்ஸின் திருமண  நாளாம் .இன்று!
அவரின் வீட்டுக்குச் சென்று அவரை HAPPY WEDDING DAY
என்று வாழ்த்த ஏராளமான ரசிகர்களின் கூட்டம்.

மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் அதன் முக்கிய
தலைவர்கள் ரோஜாப்பூ மாலையுடன் ராகவா
லாரன்ஸை வாழ்த்த காத்துக் கிடக்கின்றனர்.
தமுஎகச தலைவர்களும் பட்டுச் சால்வைகளுடன்
வரவேற்பறையில் காத்துக் .கிடக்கின்றனர்.

அனுபவம் செறிந்த ஜியார், MP யாக இருக்கும் TKR,
புதிய மாநிலச் செயலாளர் என்று பாட்டாளி வர்க்கத்
தலைவர்கள் உட்க்கார்ந்து சோபாவை அழுத்துவதால்
சோபாவின் STRESS TENSOR அதிகரிக்கிறது. 
 
ஏற்கனவே கூத்தாடி விஜயகாந்தின் பிறந்தநாளில்
அவரை வாழ்த்த காத்துக் கிடந்த அனுபவம்
மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களிடம் மிளிர்கிறது.

ராகவா லாரன்ஸ் ஜிந்தாபாத்!
வெட்டிங் டே ஜிந்தாபாத்!!
மார்க்சிஸ்ட் கட்சி ஜிந்தாபாத்!!!
காரல் மார்க்ஸ் மூர்தாபாத்!!!
****************************************************    


புதன், 30 மே, 2018

தூத்துக்குடி மக்களுக்கு ரஜனி மீது நம்பிக்கை
இருக்கிறதா இல்லையா என்பதுதான் இப்பதிவு
எழுப்பும் கேள்வி. இதில் காத்திரமான கருத்துக்கள்
தூத்துக்குடி மற்றும் தென் மாவட்ட மக்களிடம்
இருந்து வரவேற்கப் படுகின்றன. அந்தக் அக்கருத்துக்கள்
தேவைப் படுகின்றன.
I request the petti bourgeois section NOT to masturbate here.

than makanip pol

தன் மகனைப் போல் தானும் கைது செய்யப்பட்டு
திஹார் சிறையில் களி தின்ன நேருமோ?
அச்சத்தில் உறைந்த ப சிதம்பரம்!
ஆ ராசா எக்காளம்! 

அதே நேரத்தில், ரஜனியைக் காயடித்து முட்டி போட
வைத்தவர்கள் மூவர்,
1. ஜெயா 2. டாக்டர் ராமதாஸ் 3. காடுவெட்டி குரு.
காடுவெட்டி குருவை இப்போது நினைத்தாலும்
ராஜனிக்கு பேதி நிற்காது.

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த விடத்து.
ரஜனி என்ற முள்செடியை முள்மரமாக
வளர்த்த பாவிகள் கலைஞரும் மூப்பனாரும்!
  
ஸ்டெர்லைட்
இப்சனும் ரேயும்: சமூகவிரோதிகளை முன்வைத்தவர்கள்
=========================== ======== ===================
இந்திய மொழிகள் பெரும்பாலானவற்றில் நாடகங்கள் ஹென்ரிக் இப்சனின் நாடகங்கள் மொழிபெயர்ப்பாகி இருக்கின்றன. அவர் நார்வேஜிய மொழியில் எழுதிய நாடகம் ஆங்கிலத்தில் -An Enemy of the People . அதைத் தமிழில் ‘மக்களின் பகைவன்’ எனத் தமிழில் மொழிபெயர்க்கப்பெற்றிருக்கிறது. ஏறத்தாழ ஸ்டெரிலைட்டும் போல ஒரு தொழில் நகரத்தின் கதைதான். இங்கே தாமிர உருக்காலை; அங்கே தோல் தொழிற்சாலை.
அந்நாடகத்தின் மைய விவாதம் ’தோல் தொழிற்சாலை வெளியேற்றும் கழிவு நீர்’ நகரத்தில் பரவும் நோய்க்குக் காரணமாக இருக்கிறது. அதனை ஆய்வுசெய்து அறிக்கை அளிப்பவர் டாக்டர் ஸ்டோக்மேன். அறிக்கையை வாங்கி நடவடிக்கை எடுக்க வேண்டியவர் அவரது அண்ணன் பீட்டர். அவரோ தொழிற்சாலை முதலாளிக்கு ஆதரவாக நின்று, டாக்டர் ஸ்டோக்மேனை மக்கள் விரோதி எனத் திருப்பிவிடுகிறார். அவரோடு சேர்ந்து பத்திரிகை உதவுகிறது. மக்கள் முன் பேசநினைத்து மேடைபோட்டு நிற்கும்போது சாதுரியமான உரையால் மக்களைக் கல்லெறியத்தூண்டுகிறார். டாக்டர் ஊரைவிட்டு வெளியேறுவார்.
இந்த நாடகத்தைச் சத்யஜித்ரே ஜனசத்ரு என்று சினிமாவாகத் தந்துள்ளார்.ஜனசத்ருவில் தோல்தொழிற்சாலைக்குப் பதில் நகரத்தின் மையத்தில் இருக்கும் கோயில் குளமும் அதன் புனிதநீரும். அதுவே பரவும் கொள்ளை நோய்க்குக்காரணம்.
எது சமூகவிரோதம்? யார் சமூகவிரோதி? இப்சனைப் படித்துப் புரிந்துகொள்ளலாம்; சத்யஜித்ரேயின் படத்தைப் பார்த்துப் புரிந்துகொள்ளலாம்
புழுவினும் இழிந்த எடப்பாடியை
சட்ட மன்றத்தில் மடக்கி அம்பலப் படுத்தாமல்
ஓடிப் போகிறவன் லூசு கோமாளி மட்டுமல்ல
கோழைப்பயலும் ஆவான். 

ப சிதம்பரம் கைது செய்யப் படுகிறார்!
திகார் சிறையில் அவருக்காக வசதியான  
ஒரு அறை தயார் ஆகிறது! எல்லா வழக்கிலும்
முன்ஜாமீன் கிடைக்குமா? 

ப சிதம்பரம் முன்ஜாமீனுக்கு அலைகிற
அலைச்சலும் செலவழிக்கிற பணமும் பற்றி
எந்த தேசிய ஊடகமும் விவாதம் நடத்தாது.
எந்தத் தமிழ் ஊடகமும் விவாதம் நடத்தாது.
ஊடகப் பெருச்சாளிகள் அனைவருக்கும்
பெருந்தொகை பட்டுவாடா ஆகி விட்டது. 



கூத்தாடி ரஜனியின் மீது
மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை!
-----------------------------------------------------------------
புழுவினும் இழிந்த கூத்தாடி ரஜனிக்கு
உண்மையில் மக்கள் மத்தியில் செல்வாக்கு
இருக்கிறது. தூத்துக்குடி மக்கள் அவருடைய
வருகையை விரும்பினார்கள். அவரிடம் தங்களின்
குறையைச் சொல்ல வேண்டும் என்றும் அவர்
ஏதேனும் தீர்வு தருவார் என்றும் தூத்துக்குடி
மக்கள் கருதினர்.

ஆக மக்களின் நம்பிக்கையைப் பெற்றவராக
கூத்தாடி ரஜனி இருக்கிறார் என்பது உண்மை.
ஆனால் புழுவினும் இழிந்த குட்டி முதலாளித்துவம்
இந்த உண்மையைக் காண மறுத்து சுய இன்பம்
அனுபவித்துக் கொண்டு இருக்கிறது.

தமிழ்நாட்டின் மிகப்பெரும் இழிவு என்பது கூத்தாடிப்
பயல்களைத் தலைவராகவும் முதல்வராகவும்
ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை. மேனன், ஜெயா,
வி என் ஜானகி ஆகியோர் முதல்வர்களாக இருந்த
இழிவு தமிழ்நாட்டுக்குச் சொந்தம். அண்ணாவும்
கலைஞரும் கூட திரைத்துறையைச் சார்ந்தவர்கள்தாம்.
இவையெல்லாம் கசப்பான உண்மைகள்.

அமைதியாக நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தில்
சமூக விரோதிகள் புகுந்து வன்முறையை
ஏற்படுத்தி விட்டார்கள் என்று அழுத்தம்
திருத்தமாகக் கூறுகிறார் ரஜனி.

போலிஸைத் தாக்கியது, கலெக்டர் அலுவலகத்தை
தீ வைத்து எரித்தது, ஸ்டெர்லைட் ஊழியர்களின்
குடியிருப்பைத் தீவைத்து எரித்தது ஆகிய
நிகழ்வுகளுக்கும் பொது மக்களுக்கும் எவ்வித
சம்பந்தமும் இல்லை என்கிறார் ரஜனி.

ரஜனியின் இந்தக் கருத்துக்கு தூத்துக்குடி
மக்கள் என்ன எதிர்வினை ஆற்றுகிறார்கள்
என்பதை கவனிக்க வேண்டும். இந்தக்
கருத்துக்களுக்கு தூத்துக்குடி மக்களிடம்
கடுமையான எதிர்வினை இருக்குமேயானால்
ரஜனியின்  ஆட்டம் விரைவில் முடிந்து விடும்.

ஆனால், ரஜனியின் கருத்துக்கு தூத்துக்குடி
மக்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு
ஏற்படவில்லை என்றால், ரஜனியின் செல்வாக்கிற்கு
எவ்வித பந்தமும் இல்லை என்று உணரலாம்.

பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம் இது.
----------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: தூத்துக்குடி மக்களின் எதிர்வினை
மட்டுமே இதில் கவனம் கொள்ளப்பட வேண்டும்.
சுயஇன்பம் அனுபவிக்கும் குட்டி முதலாளித்துவ
லும்பன்களின் கருத்து பைசா பெறாது!  
*********************************************************

புழுவினும் இழிந்த ரஜனியை
வளர்த்து விட்ட குற்றவாளிகள்
A1 கலைஞர், A2 மூப்பனார், A3 ப சிதம்பரம்.
ரஜனியைக் காயடித்தவர்கள் 1, ஜெயா 2, Dr ராமதாஸ்.

ரஜனியை ஓட ஓட விரட்டியவர் டாக்டர் ராமதாஸ்.
ரஜனியை அடக்கி ஒடுக்கி முட்டி போடா வைத்தவர்
ஜெயலலிதா. ஆனால் கலைஞரும் மூப்பனாரும்
ப சிதம்பரமும் ரஜனியின் கயமையை நன்கு
அறிந்த பின்னரும், அந்த இழிந்த கூத்தாடியை
வளர்த்து விட்ட குற்றவாளிகள்.

தமிழ்நாட்டை விழுங்கி கபளீகரம் செய்யும்
அளவுக்கு இன்று கூத்தாடி ரஜனி வளர்ந்து
இருக்கிறார் என்றால், இந்த வளர்ச்சிக்கு
அடித்தளம் இட்ட குற்றவாளிகள் மூவர்.
இதில் A1 கலைஞர். A2 மூப்பனார். A3 ப சிதம்பரம்.
இதில் மூப்பனார் மண்டையைப் போட்டு விட்டார்.
கலைஞர் உடல்நலம் இல்லாமல் இருக்கிறார்.
சிதம்பரம் எந்த நேரம் திஹார் சிறைக்குப் போக
நேரும் என்று அச்சத்தில் இருக்கிறார்.    

அமலாக்கப் பிரிவு தொடர்ந்த வழக்கில். ஒரு வழக்கில்
கைது செய்யத் தடை வாங்கி உள்ளார். இன்னொன்றில்
முன்ஜாமீனுக்கு அலைகிறார். இன்னமும் கைதாவில்லை.

 
  


     

செவ்வாய், 29 மே, 2018

ஸ்டெர்லைட்
  அடைத்தும்
வாரார் கொழுநர் என அடைத்தும்


சீல் வைத்தது நிற்கலாம் அல்லது நிற்காமல் போகலாம்.
ஆனால் நஷ்ட ஈடு தராமல் ஸ்டெர்லைட் தப்பிக்க
முடியாது. ரெண்டே ரெண்டு லேத் உள்ள சின்ன
பாக்டரியாக இருந்தாலும், அதில் வேலை பார்க்கும்
தொழிலாளி எக்குத்தப்பாக மெஷினுக்குள் கையை
விட்டு விபத்துக்கு உள்ளானால், பாக்டரி  நிர்வாகம்
நஷ்ட ஈடு தர வேண்டும். 

ராமானுஜனை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி. 

திங்கள், 28 மே, 2018

நஷ்டஈடு கேட்க வேண்டும் என்ற
எண்ணம் இல்லையா?
---------------------------------------------------------------
ஒரு தொழிற்சாலை சுற்றுச் சூழலை மாசு
படுத்துமானால் அதற்கான நஷ்ட ஈட்டை
அந்த ஆளை கொடுக்க வேண்டும். இது
உலகம் முழுவதும் உள்ள சட்டம்.

ஸ்டெர்லைட் சூழலை மாசு படுத்துகிறது.
அதனிடம் நஷ்டஈடு கேட்க்க வேண்டும் என்ற
சிந்தனை கூட இல்லாத சமுதாயத்தில் நாம்
வாழ்ந்து வருகிறோம்.

ஒரு ரயில் விபத்து நடந்ல், ரயில்வே நிர்வாகம்
மரணம் அடைந்தோரின் குடும்பத்தார்க்கு இழப்பீடு
வழங்குவதை நாம் நன்கறிவோம். அது ரயில்வேயின்
கடமை. அதே போல, சுற்றுச் சூழல் மாசு படுவது
என்பதும் விபத்து போன்றதே. அதற்குரிய இழப்பீட்டை
ஸ்டெர்லைட் நிர்வாகம் வழங்க வேண்டும்.

ஸ்டெர்லைட் நிறுவனம் ரூ 5000 கோடி நஷ்ட ஈடு
தர வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்ச் சமூகம்
முன்வைக்க வேண்டும். தமிழக அரசு உச்சநீதி
மன்றத்தில் ஸ்டெர்லைட்  வழக்குத் தொடர வேண்டும்.

சூழலை மாசு படுத்திய ஸ்டெர்லைட் நிறுவன
அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்குத் தொடர்ந்து
சிறை தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும்.

இதைச் செய்ய எந்த அரசியல் கட்சியும் முன்வராது.
மக்கள்தான் செய்ய வேண்டும்.
*************************************************************   


ஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடல்!
அடுத்து என்ன செய்ய வேண்டும்?
------------------------------------------------------------
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக
மூடுவதாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்து
உள்ளது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட
கலெக்டர் ஆலைக்கு சீல் வைத்தார்.

போராடிய தூத்துக்குடி மக்களுக்கு இது ஆறுதலையும்
நிம்மதியையும் தரும். இந்த ஆலைமூடலை எதிர்த்து
ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்துக்குச்
செல்லும். தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் வரும்.

ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் சூழலை மாசு படுத்திய
குற்றத்துக்காக ரூ 5000 கோடி நஷ்ட ஈடு கேட்டு
தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் வழக்குத்
தொடர வேண்டும். இக்கருத்தை ஏற்கனவே
தெரிவித்தோம். அதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
**************************************************************
ஸ்டெர்லைட்டை இழுத்துமூட அரசால் முடியுமா?
கிட்டத்தட்ட இருபது வருடகாலம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ...அதன் அதிகாரங்கள்:...செயல்பாடுகள்,,..அது சார்ந்த நடைமுறைகளோடு தொடர்பில் இருந்தவன் என்ற முறையில் எனக்குத்தெரிந்த சில விஷயங்களை பகிர்ந்துகொள்கிறேன்...
தமிழகத்தைப்பொறுத்தவரை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தொழிற்சாலைகளை மூன்றுவிதமாக பிரித்திருக்கிறது... சிவப்பு , ஆரஞ்சு மற்றும் பச்சை... [ எந்தெந்த தொழில்கள் எந்த பிரிவில் வரும் என்ற பட்டியலுக்கான லிங்கை பதிவின் இறுதியில் கொடுத்திருக்கிறேன்...]
அதிக‌ப்படியான , சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய கழிவுகளை வெளியேற்றும் தொழிற்சாலைகள் ரெட் கேட்டகரியில் வருகின்றன...
ரெட் பிரிவில் வரும் நிறுவனம் ஆரம்பிப்பது முன்பாக , மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் இசைவாணை பெறவேண்டும்... அதன்பிறகுதான் அந்த தொழிற்சாலைக்கு மின் இணைப்பே வழங்கப்படும்....
முதலில் நீர் மாசுபாட்டை எடுத்துக்கொள்வோம்...
இசைவாணை பெறுவது சுலபமல்ல... முதலில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவேண்டும்... வெளியேறும்கழிவுகளைப்பொறுத்து அதில் பலகட்ட அமைப்புகள் உண்டு...ஒவ்வொரு கட்டத்திலும் புகைப்படங்கள் எடுத்து வாரியத்திடம் ஒப்புதல் பெற்ற பிறகே அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியும்...ஒவ்வொரு கட்டத்திலும் டி.இ அல்லது ஜே.இ ஆகியோர் ஆய்வு செய்வர்...
கழிவுநீர் சேகரிக்கப்படும் இடத்தில் இருந்து , சுத்திகரிப்புக்குச்செல்லும் ஒவ்வொருகட்டத்திலும் , ஒவ்வொரு பைப்பிலும் டிஜிட்டல் மீட்டர்கள் பொருத்தப்படும்...எல்லா மீட்டர்களின் ரீடிங்குகளும் பதிவுசெய்யப்படவேண்டும்...எல்லா ரீடிங்குகளும் ஒருங்கிணைக்கப்ப்பட்டு , டேலி செய்யப்பட வேண்டும்...
அதாவது கழிவு நீர் சுத்திகரிப்பின் ஒவ்வொரு கட்டமும் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு , சீரான இடைவெளிகளில் மா.க வாரியத்திடம் ஒப்புதல் பெற்றே ஆகவேண்டும்...
ரீடிங் டேலி செய்வது எப்படி?
நம் ஆலையின் உற்பத்தி ஆகும் பொருள் என்ன... அதற்கு மொத்தம் ஒரு நாளைக்கு எத்தனை லிட்டர் தண்ணீர் செலவாகும் என்பதன் அடிப்படையில்தான் இசைவாணை வழங்கப்படும்... அதற்குமேல் நம் உற்பத்தி கொள்ளளவை அதிகரிக்க முடியாது...
ஒரு லட்சம் லிட்டர் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யப்பட எடுத்துக்கொள்கிறோம்... முதல் கட்ட சுத்திகரிப்பில் அறுபதாயிரம் லிட்டர் சுத்தம் செய்யப்பட்டு ஆலையின் மறுபயன்பாட்டுக்கு அல்லது வெளியேற்றப்படுகிறது...அதற்கான மீட்டர் ரீடிங் பதிவு செய்யப்படும்...
மீதி நாற்பதாயிரம் லிட்டர் இரண்டாம் கட்ட சுத்திகரிப்புக்குச்செல்கிறது...அதில் இருபத்தைந்தாயிரம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்டு மறுபயன்பாட்டுக்குச்செல்லும்...அந்த மீட்டர் ரீடிங்கும் பதிவாகியிருக்கும்...
மீதமுள்ள பதினைந்தாயிரம் லிட்டர் மூன்றாவது கட்ட சுத்திகரிப்புக்குச்செல்லும்... இதில் பத்தாயிரம் லிட்டர் மறுபயன்பாட்டுக்கு செடுத்துச்செல்லப்படும்... [ இங்கும் மீட்டர் - ரீடிங் இருக்கும்...] மீதி உள்ள ஐந்தாயிரம் லிட்டர் கூழ் போன்ற கரைசல் இறுதியாக உலர்களம் மூலமாகவோ , எவாப்பொரேட்டர் தொழில்நுட்பம் மூலமாகவோ ஆவியாக்கப்படும்... இறுதியாக மிஞ்சும் உப்பு அல்லது உலர்ந்த மண் தனியாக சேமிக்கப்படும்...
இந்த எல்லா மீட்டர்களின் ஆரம்பம் - முடிவு ரீடிங்குகள் தினந்தோறும் பதிவுசெய்யப்பட்டு , பரமாரிக்கப்படவேண்டும்... வாராவாரமோ , அல்லது திடீர் சோதனைக்கு வரும் மா. க. வாரிய பொறியாளர்களிடமோ ஒப்புதல்பெறவேண்டும்... கழிவுநீரில் ஆரம்பித்து , ஒவ்வொரு கட்ட ரீடிங்கும் மற்றதோடு டேலி ஆகவேண்டும்...இல்லாவிட்டால் முறைகேடு நடந்தது உறுதியாகிவிடும்... பெரும் தொழிற்சாலைகளில் இந்த மீட்ட்ர்கள் ஆன்லின் மூலம் இணைக்கப்ட்டு மா.க.வாரியத்தில் இருந்தே கண்காணிக்கும் வசதியும் உண்டு..இவையெல்லாம் போக முறைகேடுகளை கண்காணிக்க பறக்கும் படையும் உண்டு...
[ மிக முக்கியமான விஷயம்... இந்த ஒப்புதல் விவகாரத்தில் கணிசமாக லஞ்சம் விளையாடும்... ]
காற்று மாசு அளவைக்கண்காணிக்கவும் கிட்டத்தட்ட இதேபோன்ற நடைமுறைகள்தான்...
இனி ஸ்டெர்லைட்டுக்கு வருவோம்...
நான் மேலே சொன்ன நடைமுறைகளை அவர்கள் நிச்சயம் பின்பற்றியிருப்பார்கள்... அதாவது முறையான சுத்திகரிப்பு நடைமுறைகளை பின்பற்றினார்களோ இல்லையோ , எல்லாம் பக்காவாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கும்... அதன் ஒவ்வொரு கட்டத்திலும் தூத்துக்குடி மாவட்ட மா.க வாரிய செயற்பொறியாளரின் ஒப்புதலும் பெறப்பட்டிருக்கும்...
அரசு தடைவிதித்தால் அவர்கள் சும்மா இருக்கப்போவதில்லை... உடனடியாக நீதிமன்றம் செல்வார்கள்...அங்கு செண்டிமென்ட்டெல்லாம் செல்லுபடியாகாது...ஆதாரங்கள் வேண்டும்... இந்த நிமிடம் வரை அவர்கள் சரியாக செயல்பட்டதற்கான எல்லா ஆதாரங்களையும் சமர்ப்பிப்பார்கள்...ஒவ்வொரு கட்டத்திலும் தமிழக அரசு அதிகாரிகளின் ஒப்புதலைப்பெற்றதையும் காட்டுவார்கள்...
அப்போது தமிழக அரசு என்ன செய்யமுடியும்? தவறு நடந்திருக்கிறது என்று ஒப்புக்கொண்டால் , ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் தவறு செய்ததை , லஞ்சம் பெற்றுக்கொண்டு கடமை தவறியதை ஏற்றுக்கொண்டதாக ஆகிவிடும்...இல்லாவிட்டால் ஸ்டெர்லைட் செயல்பட நீதிமன்றம் உத்தரவிடும்...
பிடிவாதமாக அந்த ஆலையை மூடியே ஆகவேண்டும் என்று தமிழக அரசு பிடிவாதமாக நின்றால் , வேதாந்தா குழுமத்துக்கு பல ஆயிரம் கோடிகள் நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும்...சம்பளம் போடவே சிங்கியடிக்கும் மாநில அரசிடம் ஏது அவ்வளவு பணம்..?.


எனவே.. நடப்பதெல்லாம் நாடகம்... நாம் வேடிக்கை பார்ப்போம்...


நஷ்ட ஈடு (ரூ 5000 கோடி) தராமல் ஸ்டெர்லைட்
தப்பிச் செல்லக் கூடாது!
ஸ்டெரிலைட் மீது கிரிமினல் வழக்கு!
எமது கோரிக்கைக்கு ஆதரவு தாருங்கள் மக்களே!
-------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------
1) சுற்றுச் சூழலை மாசு படுத்திய ஸ்டெர்லைட் நிறுவனம்
புனரமைப்புப் பணிகளுக்காக ரூ 5000 கோடி
நஷ்ட ஈடாக தமிழக அரசுக்குத் தர வேண்டும்.

2) தமிழக அரசு ஸ்டெர்லைட் மீது உச்ச நீதிமன்றத்தில்
வழக்குத் தொடர்ந்து ரூ 5000 கோடி இழப்பீடு கோரிப்
பெற வேண்டும்.

3) தூத்துக்குடி மக்கள் மீது உண்மையான அக்கறை உடைய
எவரும் இந்தக் கோரிக்கையை உரத்த குரலில்
எழுப்ப வேண்டும்.

4) சுற்றுச்சூழல் அமைப்புகள், போராளிகள் என்று
பலரும் தமிழ்நாட்டில் திரிந்து கொண்டிருந்தாலும்
ஒருவர் கூட இக்கோரிக்கையை எழுப்பவில்லை.
இந்தக் கோணத்தில் அவர்களின் மூளை
சிந்திக்கவில்லை. ஏனெனில் சுற்றுச் சூழல்
"போராளிகள்"அனைவரும் குட்டி முதலாளித்துவ
மற்றும் தாராளவாத முதலாளித்துவ ஆசாமிகள்.
அவர்களுக்கு பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டம்
கிடையாது.

5) நியூட்டன் அறிவியல் மன்றம் மட்டுமே இந்தக்
கோரிக்கையை முதன் முதலில் எழுப்புகிறது.
இதற்காக முதல் குரல் கொடுத்தது நியூட்டன்
அறிவியல் மன்றமே.

6) இந்தியாவில் நியூட்டன் அறிவியல் மன்றம் மட்டுமே
அறிவியலோடு மார்க்சிய லெனினியத்தை ஏற்றுக்
கொண்ட ஒரே அமைப்பு. இதனால்தான் பாட்டாளி
வர்க்க நலன் பேணுவது மிக இயல்பாக நியூட்டன்
அறிவியல்  மன்றத்திற்கு எளிதாக சாத்தியம் ஆகிறது.

5) ஒரு தொழிற்சாலையால் சுற்றுச் சூழல் மாசு பட்டால்,
அதற்குரிய நஷ்ட ஈட்டை அந்த நிறுவனம் தர வேண்டும்
என்பது உலகெங்கும் உள்ள சட்டம். இந்தியாவிலும்
அந்தச் சட்டம் .உள்ளது.

6) இந்தச் சட்டப்படி, தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப்
புறங்களிலும் ,நிலத்தை வளி மண்டலத்தை, நிலத்தடி
நீரை மாசு படுத்தியும் மக்களுக்கு நோய்களை
உண்டாக்கியும் மாபெரும் சூழல் கேட்டுக்கு காரணமான
ஸ்டெர்லைட் நிறுவனம் தண்டிக்கப் பட வேண்டும்.

7) நஷ்ட ஈடு ரூ 5000 கோடி தருவது மட்டுமல்ல, சூழலை
மாசு படுத்திய ஸ்டெர்லைட் நிறுவனத்தின்
அதிகாரிகளுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட
வேண்டும்.

8) எடப்பாடி அரசோ, திமுகவோ, காங்கிரஸ், பாஜக,
 கட்சிகளோ இக்கோரிக்கையை ஒருபோதும்
எழுப்பாது. ஸ்டெர்லைட்டுக்கு ஒரு பைசா நஷ்டம்
கூட ஏற்படாமல் பார்த்துக் கொள்வதுதான்
வாங்கிய காசுக்கு அவர்கள் காட்டும் விசுவாசம்.

9) தமிழகத்தில் உள்ள ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள்,
முற்போக்காளர்கள், நாடாளுமன்ற இடதுசாரிகள்
என்று ஒருவர் கூட இக்கோரிக்கையை எழுப்பவில்லை
என்பதை மக்கள் உணர வேண்டும்.

10) எனவே அன்பார்ந்த தமிழ் மக்களே,
நியூட்டன் அறிவியல் மன்றம் முன்வைக்கும்
இந்தக் கோரிக்கையான (அ) ரூ 5000 கோடி
நஷ்ட ஈடு (ஆ) சூழலை மாசு படுத்திய ஸ்டெர்லைட்
அதிகாரிகளுக்கு தண்டனை (இ) இதற்காக தமிழக
அரசு வழக்குத்  தொடுப்பது ஆகிய மூன்று
கோரிக்கைகளையும் மக்களிடம் பேரளவில்
கொண்டு செல்லுமாறு நியூட்டன் அறிவியல்
மன்றம் அனைவரையும் கேட்டுக் கொள்கிறது.

இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற நக்சல்பாரிகளால்
மட்டுமே முடியும் என்று நியூட்டன் அறிவியல் மன்றம்
கருதுகிறது.
=================================================
கோரிக்கைகள்:
1) சூழலை மாசு படுத்திய ஸ்டெர்லைட்டே, ரூ 5000 கோடி
இழப்பீடு வழங்கு.
2) தமிழக அரசே, ஸ்டெர்லைட் மீது உச்சநீதி மன்றத்தில்
வழக்குத் தொடர்ந்து இழப்பீடு கேள்.
3)தமிழக அரசே, சூழலை மாசு படுத்திய ஸ்டெர்லைட் அதிகாரிகளைக்
கைது செய்து கிரிமினல் வழக்குத் தொடு. 
*************************************************************   

கசப்பான உண்மை! 100 சதம் உண்மை!

தூத்துக்குடியில் உள்ளூர் கட்சிக்காரர்கள்
அனைவரும் (திமுக, அதிமுக, மதிமுக)
ஸ்டெர்லைட்டிடம் காசு வாங்கியவர்களே.
அனைவரும் ஸ்டெர்லைட்டின் கைத்தடிகளே!
போராட்டக் காரர்களை போலீசுக்கு ஆள் காட்டியதும்
இக்கட்சிக்காரர்களே.  எனவேதான் இவர்களை
தூத்துக்குடி மக்கள் கண்ட இடங்களில் உதைக்க
ஆரம்பித்தார்கள். இதற்குப் பயந்து உள்ளூர்
கட்சிக்காரர்கள் தலைமறைவு ஆகி விட்டார்கள்.
**
எனவே கட்சிக் கொடிக்கம்பங்களை வெட்டிச்
சாய்க்கும்போது, இந்தக் கட்சிக்காரனாவது
தட்டிக் கேட்டானா? ஒரு பயலுக்கும் தட்டிக்
கேட்காத தைரியம் கிடையாது. எல்லோருமே
 ஸ்டெர்லைட்டின் எச்சில் காசு எடுபிடிகளே.

இழப்பீட்டுத் தொகை பிரச்சசினை அல்ல. அதை
வழக்குப் போடும்போது, தரவுகளின் அடிப்படையில்
வக்கீல்கள் முடிவு பண்ணுவார்கள். முதலில்
இந்தக் கோரிக்கை மக்களின் கோரிக்கையாக
மாற வேண்டும். இந்தக் கருத்து தமிழர்களிடம்
வேகமாகவும் பரவலாகவும் எடுத்துச் செல்லப்
பட வேண்டும்.இதுதான் முக்கியம்.

இப்படி வழக்குப் போடுவதன் மூலம், ஸ்டெர்லைட்
ஆலையை தமிழக அரசு மூடினால், அதை மீண்டும்
திறப்பது இயலாத காரியம் ஆகி விடும். எப்படியெனில்,
இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது,
ஸ்டெர்லைட்டைத் திறக்க உச்சநீதிமன்றம் அனுமதிக்காது.
 


    


ஞாயிறு, 27 மே, 2018

ஸ்டெர்லைட்டிடம் இருந்து ரூ 5000 கோடி
நஷ்ட ஈடு வசூலிக்க வேண்டும்!
ஸ்டெர்லைட் பிரச்சினைக்குத் தீர்வு என்ன?
ஆலையை மூடுவது தீர்வாகுமா?
கட்டுரையின் மூன்றாவது மற்றும் இறுதிப் பகுதி!
---------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------------
அணு  உலைகளும் அணு மின்சாரமும்  மானுட
வரலாற்றில் புதிய வரவுகள். இரண்டாம்  உலகப்
போருக்குப் பின்னரே அணு மின்சாரம் வந்தது.

ஆனால் மூலத்தாதுவில் இருந்து தாமிரத்தைப்
பிரித்தெடுப்பது  மூவாயிரம் ஆண்டுகளாக
நடந்து கொண்டிருக்கிறது. 3000 ஆண்டுகளுக்கு
முந்திய நம் முன்னோர்கள் நம்முடன் ஒப்பிடும்
போது காட்டு மிராண்டிகளே. ஆனால் அவர்கள்
மூலத்தாதுவில் இருந்து தாமிரத்தை அழகாகப்
பிரித்தெடுத்தார்கள். மானுட வரலாற்றில்
வெண்கல யுகம் (bronze age) என்று படிக்கிறோம்.
வெண்கலம் என்பது தாமிரமும்  தகரமும்
கலந்து செய்யப்பட ஒரு கூட்டு உலோகம் (alloy).
தாமிர உற்பத்தி என்பது மானுட வரலாற்றை
அடையாளப் படுத்தும் முதன்மைக் காரணியாக
இருந்தது என்பதை வெண்கல யுகம் என்ற பகுப்பு
உணர்த்துகிறது.

ஆக, தாமிர உற்பத்தி என்பது 3000 ஆண்டுத் தொன்மை
மிக்கது.இன்றைய உலகில் பல நாடுகளில் தாமிரம்
பிரித்தெடுக்கப் படுகிறது. சீனா இதில் முதல்
இடத்தில் உள்ளது. 2016, 2017 ஆண்டுகளில் சீனாவின்
தாமிர உற்பத்தி முறையே 19 லட்சம் டன், 18,60,000 டன்
என்பதாக இருந்தது.

தென்னமெரிக்க நாடான சிலியும், ஜப்பானும்
இன்னும் சில நாடுகளும் தாமிர உற்பத்தியில்
முன்னணியில் உள்ளன. இந்தியாவின் தாமிர
உற்பத்தி அண்மைக் காலங்களில் 6 லட்சம் டன்
என்ற அளவில் உயர்ந்துள்ளது.

இந்தியாவில் குஜராத், ஜார்கண்ட், ராஜஸ்தான் ஆகிய
மாநிலங்களில் தாமிரம் பிரித்தெடுக்கும் ஆலைகள்
உள்ளன. குஜராத்தில் உள்ள பிர்லா குழுமத்தின்
ஹிண்டால்கோ ஆலையில் தூத்துக்குடியின்
ஸ்டெர்லைட்டை விட. பல மடங்கு அதிகமாக
தாமிரம் எடுக்கப் படுகிறது என்பதை முந்தைய
கட்டுரையில் பார்த்தோம்.

குஜராத்திலோ ஜார்கண்டிலோ ராஜஸ்தானிலோ
தாமிரம் பிரித்தெடுத்தலில் எந்தப் பிரச்சினையும்
இல்லை. காற்றை நீரை மண்ணை சுற்றுச் சூழலை
மாசு படுத்துகிறது என்று எந்தப் புகாரும் இல்லை.
ஆனால் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம்
பற்றி மட்டுமே புகார்கள் வந்துள்ளன. இதன் பொருள்
என்ன? சுற்றுச் சூழல் விதிகளையும் மாசுக் கட்டுப்பாடு
விதிகளையும் முறையாகக் கடைப்பிடித்தால்
தாமிர உற்பத்திக்கான தொழில்நுட்பம்
பாதுகாப்பானதே என்பதுதானே!
 
ஆனால் தூத்துக்குடியிலும் அதன் சுற்றுப்புற
கிராமங்களிலும் சுற்றுச்சூழல் மிகக் கடுமையாக
மாசு பட்டுக் கிடக்கிறது என்பதும் மக்கள் நோய்களுக்கு
இலக்காகி இருக்கின்றனர் என்பதும் உண்மை.
இதன் பொருள் என்ன? ஸ்டெர்லைட் நிறுவனம் சுற்றுச்
சூழல் விதிகளையும் மாசுக் கட்டுப்பாடு விதிகளையும்
கடைப்பிடிக்காமல், சூழலை நச்சுப் படுத்துகிறது
என்பதுதானே!

ஆக குற்றவாளி யார்? தாமிரம் பிரித்தெடுக்கும்
தொழில்நுட்பமா? அல்லது விதிகளைப் பின்பற்றாத
ஸ்டெர்லைட்டா?   ஸ்டெர்லைட்தான் குற்றவாளி.
(அடுத்த பத்தியில் விரிவாகப் பார்ப்போம்)
அப்படியானால், ஸ்டெர்லைட்டின் குற்றத்துக்காக
தாமிர உற்பத்தியே கூடாது, தொழிற்சாலைகளே
கூடாது என்று சொல்லுவது எப்படிச் சரியாகும்?
அது அறிவியலுக்கு எதிரான பிற்போக்கான நிலை
அல்லவா?

மூலத்தாதுவில் இருந்து தாமிரம் பிரித்தெடுத்தல்
பற்றிய பாடம் பத்தாம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில்
வேதியியல் பகுதியில் (chemistry portion) உள்ளது.
வாசகர்கள் அதைப் படிப்பது நல்லது.
 
தாமிரத் தாதுவில் (copper ore) பல்வேறு வகைகள் உண்டு.
பெரும்பாலும் காப்பர் பைரைட்ஸ் (copper pyrites, CuFeS2)
என்னும்   தாதுவில் இருந்துதான் தாமிரம்
பிரித்தெடுக்கப் படுகிறது. மூலத்தாதுவில் இருந்து
தாமிரத்தைப் ,பிரிக்கும்போது,
1. கந்தகம் (sulphur) 2. பாஸ்வரம் (phosphorous) 3.ஆர்செனிக்
(Arsenic) ஆகிய தனிமங்கள் தாதுவில் இருந்து நீக்கப் பட வேண்டும்.இத்தனிமங்கள் ஆக்சைடுகளாக
(SO2,  P2O5, As2O3)  மாற்றப்பட்டு வெளியேற்றப் படும்.
எஞ்சியிருக்கும் தேவையற்ற பிற பொருட்களும்
நீக்கப்பட்ட பிறகு தனிமமாக உள்ள தாமிரம்
(elemental copper) கிடைக்கும். இவ்வளவுதான் டெக்னாலஜி!
(Copper extractionஐ முழுமையாக விவரிப்பதற்கு இல்லை;
தகுந்த பாடப் புத்தகங்களைப் படிக்கலாம்).

கந்தக டை ஆக்ஸைடை (SO2) வளிமண்டலத்தில்
கலந்தால், காற்று மாசுபடும். எனவே அதை
ஆலையிலேயே (plant) தக்க வைத்துக் கொண்டு,
அதை கந்தக அமிலமாக (Suphuric acid H2SO4) மாற்றி
விடுவார்கள். தாமிர உற்பத்தி செய்யும் ஒரு
ஆலையில், கூடவே ஏன் அமிலத்தையம்  உற்பத்தி
செய்கிறார்கள் என்ற கேள்விக்கு விடை இதுதான்.
அது போலவே பாஸ்பாரிக் அமிலம் உற்பத்தி
செய்யப்படும்.

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அறிக்கை மற்றும்
நீரி என்னும் சூழல் காப்பு அமைப்பின் அறிக்கை
(NEERI = National Environmental Engineering Research Institute)
ஆகியவற்றின் தரவுகளின் படி, தூத்துக்குடியில்
வளிமண்டலத்தில் உள்ள கந்தக டை ஆக்ஸைடின்
அளவு அனுமதிக்கப்பட்ட அளவை விட மிகப்
பல மடங்கு அதிகமாக இருந்தது என்ற உண்மை
தெரிய வந்தது. இந்த அதிகரித்த அளவுக்கு பல
நிறுவனங்கள் காரணமாக இருக்கக் கூடும்.
என்றாலும் இதில் ஸ்டெர்லைட்டின் பங்கு மிக
அதிகம் என்று உணர காமன் சென்ஸ் போதுமானது.

அதாவது கந்தக டை ஆக்ஸைடை கந்தக அமிலமாக
மாற்றாமல், வளி மண்டலத்தில் திருட்டுத் தனமாக கலந்து விடுகிறது ஸ்டெர்லைட் என்பதை நாம் புரிந்து
கொள்ள முடியும்.

அடுத்து ஆர்செனிக். இது மிகவும் நச்சுத்தன்மை உள்ளது.
மேலும் புற்று நோயை உண்டாக்க வல்லது (toxic and carcinogenic).
பாதுகாப்பாகக் கையாளாமல் போனால் புற்றுநோய்
ஏற்படும்.  ஸ்டெர்லைட்டால்தான் புற்றுநோய்
ஏற்படுகிறது என்று நிரூபிக்க எம்மிடம் தரவுகள்
இல்லை. அதே நேரத்தில், ஸ்டெர்லைட்டாக
இருக்கக்கூடும் என்று கூறுவதற்கு அதிகபட்ச
நிகழ்தகவு (probability) உள்ளது.

ஆக, குற்றவாளி ஸ்டெர்லைட் என்னும் நிறுவனத்தின்
ஆணவமும் அசட்டையும்தான். மாசுக்கட்டுப்பாடு
விதிகளை மதிக்காமல் செயல்பட்டு சூழலை
நச்சுப்படுத்திய ஸ்டெர்லைட்டை சும்மா விட முடியாது.
ஸ்டெர்லைட்டை மூடினாலும், உச்சநீதிமன்றம்
சென்று ஆலை இயங்குவதற்குரிய தீர்ப்பை அவர்கள்
பெற்று விடலாம்.

எனவே ஸ்டெர்லைட்டிடம் சூழலை நச்சுப்
படுத்தியதற்காக  5000 கோடி ரூபாய் நஷ்டஈடு
வாங்க வேண்டும். ஆலையை மூடிவிட்டுத்
தப்பித்துச் செல்ல அனுமதிக்கக் கூடாது.  
உயிரிழந்தோருக்கும் காயம் அடைந்தோருக்கும்
தமிழக அரசு தரும் நஷ்ட ஈட்டை ஸ்டெர்லைட்
நிர்வாகத்திடம் இருந்து வசூலிக்க வேண்டும்.

ஸ்டெர்லைட் என்பது ஒரு அறிவியல் விஷயம்.
(science subject). இதில் வேதியியல் நிபுணர்களின்
கருத்தைக் கேட்ட பிறகே, ஆலையை மூடுவதா
வேண்டாமா என்று முடிவெடுக்க வேண்டும்.
ஸ்டெர்லைட்டை மூடு என்று முழங்குகிறார்
செயல் தலைவர் மதிப்புக்குரிய ஸ்டாலின் அவர்கள்.
இந்த முடிவை அவரும் துரைமுருகனும் சேர்ந்து
எடுக்க இயலாது. செயல் தலைவர் அவர்கள்
கெமிக்கல் என்ஜினியர் அல்ல. அறிவியல்
நிபுணர்களுடன் கலந்து  ஆலோசித்து அவர்களின்
அறிவுரையின் பேரில்தான் இந்த விஷயத்தில்
எல்லா அரசியல் கட்சிகளும் முடிவு எடுக்க
வேண்டும்.

ஸ்டெர்லைட்டை ஏன் மூட வேண்டும் என்பதற்கான
காரணங்களை சமூகத்தின் முன் வைக்க வேண்டிய
கடமை, மூட வேண்டும் என்று சொல்லும்
ஒவ்வொருவருக்கும் உள்ளது. மற்றப்படி மழைக்காலத்
தவளைக் கூச்சல்களால் யாருக்கும் பயன் இராது.
மாறாக, அது ஸ்டெரிலைட்டின் தரப்பை
வலுப்படுத்தி விடும்.
**************************************************************

 


 
            








       

     

   
       

சனி, 26 மே, 2018

ஸ்டெர்லைட் 
சீனா -- 32 லட்சம் டன்
சிலி -- 13.4 லட்சம் டன்
ஜப்பான் -- 13 லட்சம் டன்
இந்தியா -- 6.8 லட்சம் டன்
அமேரிக்கா -- 4.8 லட்சம் டன்
ரஷ்யா -- 6 லட்சம் டன்
ஸாம்பியா -- 5.5 லட்சம் டன்
தென் கொரியா -- 4.7 லட்சம் டன்
போலந்து -- 4.5 லட்சம் டன்
ஆஸ்திரேலியா -- 4.2 லட்சம் டன்
ஜெர்மனி -- 3.4 லட்சம் டன்
இது உலக நாடுகளில் தாமிர உற்பத்தி அளவு வரிசையில் முதலாவதாக உள்ள நாடுகள் பட்டியல் - 2012 புள்ளி விவரப்படி!
----------------------------------
ஒரு வீடியோ பார்த்தேன், துக்ளக் இதயா பேசியதாக! அதில் அவர், காப்பர் கனிமம் வெட்டியெடுப்பது ஆஸ்திரேலியாவில் என்றும், ஆனால், அவர்கள் நாட்டில், அதிலிருந்து தாமிர உற்பத்தி செய்யாமல், இந்தியா போன்ற நாடுகளுக்கு கனிமத்தை அனுப்பி, தாமிரம் உருவாக்கி, பின் இறக்குமதி செய்து கொள்கிறார்கள் - அதாவது, அந்த ஆலையால் உண்டாகும் மாசு, தங்கள் மக்களை பாதிக்காமல் காப்பாற்றவே, இந்தியா போன்ற நாடுகளுக்கு அனுப்பி, ஸ்டெர்லைட் போன்ற நச்சு உருவாக்கும் ஆலைகளை நிறுவ வழி செய்கிறார்கள்! எனும் அர்த்தம் வரும் வகையில்!
அதாவது, நம் மக்களை பலிகடா ஆக்குமளவுக்கு, அந்த தொழிற்சாலைகள் நச்சு உருவாக்கும் ஒன்று, எனும் மறை பொருள் பட பேசியுள்ளார் !
----------------------------------------
நான் மேலே கொடுத்துள்ள பட்டியல், பொதுவெளியில் உள்ளதுதான்! யார் வேண்டுமானாலும் List of countries by copper smelter production என்று கூகிளில் தேடி, தெளியலாம்!
----------------------------------------
இதில் முக்கியமாக, கவனித்தால்,... பொருளாதாரத்தில் மிகவும் முன்னேறிய நாடுகளில் பெரும்பாலானவையும், தங்கள் நாட்டிலேயே காப்பர் தயாரிப்பை, வைத்துக்கொண்டிருப்பது தான்! அளவு மட்டுமே வித்தியாசம்.!!!
காரணம், தாமிரம் இல்லாமல், அணுவும் அசையாது, இன்றைய நிலையில்! இது மிகைப்படுத்தல் அல்ல! விவரமானவர்களிடம் இது பற்றி கேட்டு தெரிந்து கொள்ளலாம்.! இந்த உலோகத்துக்கு வெளி நாடுகளை மட்டுமே நம்பினால், பொருளாதாரத்தை சுலபமாக திட்டமிட முடியாது! அந்த அளவுக்கு மிக முக்கியமான உலோகம் இது! மின்னணு உபகரணங்களில், வாகனங்களில், பாட்டரிகளில், மின்கடத்தி வயர்களில், செல் போன் களில், ஏசி, பிரிட்ஜ், மைக்ரோவேவ், டீவீ, என, தாமிர உபயோகம் இல்லாத தொழில்நுட்ப இடமே இல்லை, என்று சொல்லலாம்!
--------------------------------
பதிவு அது பற்றி அல்ல!
--------------------------------
மேற்கண்ட நாடுகளில், மிகவும் வளர்ந்த நாடுகளில், தனி மனித உயிருக்கு மிகுந்த, மிகுந்த, முக்கியத்துவம் தரும் சமூகம் அவர்களது! ஓரிரு மரணங்களே, நாட்டை ஸ்தம்பிக்க வைத்து விடும்!
அப்படிப்பட்ட நாடுகளில், இம்மாதிரி தாமிர ஆலைகளை, சுற்றுச்சூழலுக்கும், மனிதர்களுக்கும், துளிக்கூட பாதிப்பு ஏற்படா வண்ணம் இயக்குவது எப்படி, என்று தெளிவான தொழில்நுட்பம் நடைமுறையில் உள்ளது!
அதனால், முதலில், ஸ்டெர்லைட் தாமிர ஆலை என்றாலே, என்னவோ உயிர்க்கொல்லி என்பது போன்ற, விஷம பிரச்சாரம் உண்மைக்கு புறம்பானது, என்று சாமானியன் உணர வேண்டும்.
ஸ்டெர்லிட்
Air Pollution ஐ முற்றிலும் இல்லாமல் செய்ய வாயுக்களை Absorb செய்யும் Solvent Circulation Tower கள் இருக்கின்றன. ஒவ்வொரு வாயுவையும் கரைக்கத் தகுதியான Solvent கள் உண்டு. நான் பணியாற்றிய Chloro-Alkali தொழிற்சாலையில் இல்லாத விஷ வாயுக்களே இல்லை. அவைகளைக் கரைக்கும் Tower கள் அமைக்கப்பெற்று சுத்தமான காற்றைத்தான் வெளிவிட்டோம். ஒரே ஒரு தரம் Gasket Failure காரணமாய் வாயு வெளியேறிய போது அரசாங்கம் எங்களை மூடச் சொல்லவில்லை. அப்படி மீண்டும் ஆகாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்று சோதித்து மீண்டும் தொழிற்சாலை ஓட வகை செய்தது.
சயனைடைக் கழிவாக வெளியேற்றும் தொழிற்சாலைகள் இருக்கின்றன. நேராகக் குழாய் மூலம் நடுக் கடலில் அவை Pump செய்கின்றன! எல்லா ரசாயனத் தொழிற்சாலையிலும் திட, திரவ, வாயுக் கழிவுகள் உண்டு. அவற்றைச் சரியானபடி Treat செய்தும், மக்களுக்கு ஆபத்தில்லாத இடத்தில் வெளியேற்றுவதுமே எல்லாத் தொழிற்சாலைகளும் செய்யும் வேலை.
ஆபத்தான கழிவுப் பொருட்கள் இருக்கும் தொழிற்சாலைகள் மூடப் படவேண்டும் என்றால் அநேகமாய் ரசாயனத் தொழிற்சாலைகளே இருக்கா.
ஒரு தொழிற்சாலையை நம்பி அதில் பணியாற்றும் நேரடித் தொழிலாளர்கள் மாத்திரம் இல்லை; தொடர்பான தொழிற்சாலைகளின் ஏராளமான தொழிலாளர்களும் உண்டு
ஆலைகளை நிறுவுமுன் என்ன செய்ய வேண்டும்?
---------------------------------------------------------------------------------------
இனிமேல், மக்கள்-நிபுணர்கள் ஒன்றிணைந்த
கமிட்டி அமைக்காமல் எந்த ஒரு தொழிற்சாலையும்
நிறுவக்  கூடாது. இதற்கு தற்போது சட்டம் இல்லை.
மத்திய அரசு இதற்காக ஒரு சட்டத்தை இயற்ற
வேண்டும். இது சாத்தியமான விஷயமே. இதைச்
செய்யத் தவறினால், இந்தியாவில் இனிமேல்
எங்குமே யாருமே எந்த ஒரு ஆலையையும்
நிறுவ முடியாது. இதை அரசும் உணர்ந்து வருகிறது.
தேவை அரசை நிர்ப்பந்திக்கும் மக்களின்
போராட்டமே.

நலிவுற்றால் மட்டுமே அரசு ஏற்று நடத்த இயலும்.
உலகின் மிகப்பெரிய நிறுவனம் ஸ்டெர்லைட்.
அதன் மாசுகளை அரசு கட்டுப் படுத்தினால்
போதும்.

ஸ்டெர்லைட் ஆலையை 1997இல் கலைஞர் தொடக்கி
வைத்தபோது, அதன் தொடக்க உற்பத்தித்திறன்
(initial capacity) ஆண்டொன்றுக்கு 60,000 டன் காப்பர்.
அதே நேரத்தில் குஜராத்தில் உள்ள, ஆதித்திய
பிர்லா குழுமத்தின் ஹிண்டால்கோ நிறுவனத்தின்
தாமிர உற்பத்தித் திறன் (initial capacity) ஒரு லட்சம் டன்.
ஸ்டெர்லைட்டை விட உற்பத்தி அதிகமுள்ள
குஜராத்தில் சூழல் மாசு படவில்லை. மக்களின்
போராட்டம் இல்லை. ஏன்? காரணம், பிர்லாவின்
நிறுவனம் சூழல் விதிகளை மதிக்கிறது.
**
ஆனால் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம்
திமுக அதிமுக கயவர்களுக்கு லஞ்சம் கொடுத்து
விட்டு, கந்தக டை ஆக்ஸைடை (SO2) வளி மண்டலத்தில்
கலந்து விடுகிறது. இதைத் தட்டிக் கேட்டால்
பெரியசாமியின் அடியாட்களும் சசிகலா புஷ்பாவின்
அடியாட்களும் வீட்டுக்கு ஆட்டோவில் ரவுடிகளை
அனுப்புவார்கள்.
*****************************************************

ஸ்டெர்லைட் போராட்டத்திற்குத் தத்துவார்த்தத்
தலைமை வழங்குவது பின்நவீனத்துவமே!
ஸ்டெர்லைட் பிரச்சினைக்குத் தீர்வு என்ன?
ஆலையை மூடுவது தீர்வாகுமா?
கட்டுரையின் இரண்டாம் பகுதி!
----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில்
NGOகளின் பங்கு இருந்ததா? இந்தக் கேள்விக்கு கண்ணை
மூடிக்கொண்டு ஆம் என்று பதில் சொல்லி விடலாம்.
இந்தியாவில் நடக்கும் எந்தவொரு மக்கள்
போராட்டத்திலும் NGOகள் கலந்து விடுவார்கள்.

மறைந்த லெனின் உயிருடன் மீண்டு வந்து, ஸ்டெர்லைட்
போராட்டத்தை நடத்தினாலும், அந்தப் போராட்டத்திலும்
லெனினுக்குத் தெரியாமல் NGOகள் பங்கு பெற்று
விடுவார்கள். லெனினால் அதை அறியவோ தடுக்கவோ
இயலாது.ஜீரணிக்கக் கடினமாக இருந்தாலும் இதுதான்
உண்மை. காற்று நுழையாத இடத்தில் கூட NGOகளும்
அவர்களின் ஆட்களும் நுழைந்து விடுவார்கள்.

NGOகள் செயல்படும் விதம் (modus operandi) பற்றி எதுவும்
தெரியாதவர்கள் மட்டுமே நாம் கூறியதை ஏற்கத்
தயங்குவார்கள்.எனவே ஸ்டெர்லைட் போராட்டத்தில்
NGOகளும் பங்கெடுத்தார் என்பது உண்மையே. அதே
நேரத்தில், அவர்கள் பத்தோடு பதினொன்று என்ற
விதத்தில் மற்றவர்களைப் போல் பங்கேற்றார்களே
தவிர, விஷயங்களைத் தீர்மானிக்கிற இடத்தில்
இல்லை என்ற உண்மையையும் நாம் காணத்
தவறக் கூடாது.  (It is true that the NGOs did not dictate the terms).

அடுத்து பங்குத் தந்தைகளின் பங்கு ஸ்டெர்லைட்
போராட்டத்தில் எவ்வளவு இருந்தது என்பதும்
விவாதத்துக்கு உரியதாகி உள்ளது. பங்குத்
தந்தைகள், பங்கு கிடைக்காத தந்தைகள்,
பாதிரியார்கள் என்று பலருக்கும் ஸ்டெரிலைட்
போராட்டத்தில் செயலூக்கமுள்ள பங்கு இருந்தது.

தூத்துக்குடியில் வாழும் பிரதான சமூக மக்களில்
பலர் கிறிஸ்துவர்கள். எனவே பாதிரியார்கள் இந்தப்
போராட்டத்தில் பங்கேற்பதில் குறை காண முடியாது.

லெனின் காலத்திலேயே ரஷ்யப் புரட்சிக்கு முன்னதாக
கப்போன் பாதிரியார் என்பவர் ஜார் மன்னனின்
நல்லெண்ணத்தை நம்பி மக்களை ஊர்வலமாக
அழைத்துச் சென்றார். போல்ஷ்விக்குகளின்
அறிவுரையை மீறி மக்கள் கப்போன் பாதிரியாரின்
தலைமையில் திரண்டனர். ஜார் மன்னன் மக்களை
ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தான்.

மக்கள் தங்களின் சொந்த அனுபவங்கள் மூலமாகவே
பாடம் கற்றுக் கொள்கின்றனர் என்றார் லெனின்.
இந்த நிகழ்வுக்குப் பின்னரே மக்கள்
போல்ஷ்விக்குகளின் தலைமையில் அணி திரண்டனர்.

ஸ்டெர்லைட்டைக் காப்பாற்றுவதற்காக சாதிக்
கலவரங்கள் தூண்டி விடப்பட்டன என்பது
தூத்துக்குடியின் வரலாறு. இது உள்ளூர்
அரசியல்வாதிகளின் கைங்கரியம் ஆகும்.
ஸ்டெர்லைட்டால் விலைக்கு வாங்கப் படாத
அரசியல்வாதி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும்
ஒருவர்கூட இல்லை.

ஸ்டெர்லைட் ஆலையை மூடி விட்ட பிறகும்
தூத்துக்குடியில் காற்று மாசு குறையும் என்றோ
சுற்றுச் சூழல் மேம்படும் என்றோ கூற இயலாது.
ஸ்டெர்லைட் தவிர வேறு பல ரசாயன ஆலைகளும்
தூத்துக்குடியில் உள்ளன. ஸ்பிக் (SPIC) என்னும் ரசாயன
உரம் தயாரிக்கும் ஆலை உள்ளது. அனல் மின்
நிலையங்கள் உள்ளன. அவை  வெளியேற்றும்
புகையும், காற்றில் பரவும் சாம்பலும் கரித்துகளும்
தொடர்ந்து தூத்துக்குடியில் வளி மண்டலத்தை நச்சுப்
படுத்திக் கொண்டே இருக்கும்.

தூத்துக்குடி ஊரிலும் சுற்றியுள்ள கிராமங்களிலும்
வாழும் மக்கள் சுவாசக் கோளாறுகள், மூச்சுத்
திணறல் முதல் தோல் நோய்கள், புற்றுநோய் வரை
எல்லா விதமான நோய்களுக்கும் இலக்காகி
உள்ளனர். இது கண்கூடாகத் தெரிகிற உண்மை.
நிலத்தடி நீர்மட்டம் கணிசமாகக் குறைந்துள்ளதும்
குடிநீர் மாசு பட்டிருப்பதும் உண்மை.

அனால் இவை அனைத்துக்கும் ஒரே காரணம்
ஸ்டெர்லைட் மட்டுமே என்று கருதுவதும்,
ஸ்டெர்லைட்டை மூடுவதே சர்வரோக நிவாரணி
என்று கருதுவதும் சரியல்ல. இது அறிவியலுக்கு
எதிரான போக்கு ஆகும்.

ஸ்டெர்லைட்டை மூடிய பிறகும் காற்று மாசும்
நோய்களும் கொஞ்சமும் குறையாமல் முன்பிருந்த
அளவிலேயே இருக்கும். இதுதான் உண்மை.

எனவே ஸ்டெர்லைட்டை மூடுவது என்பது எதற்கும்
தீர்வாகாது.தூத்துக்குடியில் உள்ள எல்லா ரசாயன
ஆலைகளையும், அனல் மின் நிலையங்களையும்
மூட வேண்டும். ஏனெனில் அவையும் காற்றை,
சூழலை மாசு படுத்துகின்றன. இது சாத்தியமா?

இவ்வாறு எல்லாவற்றையும் மூடிவிட்டு, நிலப்பிரபுத்துவ
காலத்தின் உற்பத்தி முறைக்குத் திரும்ப முடியாது.
சமகாலத்தின் பொருளுற்பத்தி முறை முதலாளியப்
பொருள் உற்பத்தி முறை ஆகும். அதாவது
தொழிற்சாலைகளைத் தொடங்கி பண்டங்களை
உற்பத்தி செய்வதாகும். இதைத் தடுத்து நிறுத்த
வேண்டும் என்று கோருவது மார்க்சியப் பார்வை
ஆகாது. அது பிற்போக்குத்தனமான பார்வை ஆகும்.

தொழிற்சாலை என்றாலே பண்ட உற்பத்தியோடு
கூடவே மாசையும் உற்பத்தி செய்துதான். சூழலை
மாசு படுத்தாத எந்த ஒரு ஆலையும் உலகில்
எங்கும் இல்லை. மாசு படுத்துகிறது என்பதற்காக
ஆலையை மூட வேண்டும் என்று கிளம்பினால்,
உலகில் எந்த ஆலையையும் நடத்த முடியாது.
எனவே ஸ்டெர்லைட்டை மூடுவது என்பது தீர்வல்ல.

ஆலையை மூடு என்பதன் பொருள் உற்பத்தியை
நிறுத்து என்பதாகும். அதாவது உற்பத்தியே கூடாது
என்பதாகும்.இது பின்நவீனத்துவப் பார்வை.
ஸ்டெர்லைட் சிக்கலுக்கு பின்நவீனத்துவம் வழங்குகிற
தீர்வு ஆலையை மூடு, உற்பத்தியை நிறுத்து,
உற்பத்தியே கூடாது என்பதுதான். இதை
ஏற்க இயலாது.

பின்நவீனத்துவம் கட்டமைக்க விரும்பும் உற்பத்தி
உறவானது உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கு
பெரும் முட்டுக்கட்டை போடுவதாகும். இது சமூக
வளர்ச்சியை பின்னுக்குத் தள்ளும் முயற்சியாகும்.

கூடங்குளத்தில் அணுஉலையை மூடு என்று தவறான
தீர்வு கூறிய பின்நவீனத்துவம், தூத்துக்குடியிலும்
ஸ்டெர்லைட்டை மூடு என்று அதே பாணியிலான
தீர்வை முன்வைக்கிறது. ஸ்டெர்லைட் மட்டுமல்ல,
தமிழகத்தில் நிகழும் சுற்றுச் சூழல் என்ற பெயரிலான
பல்வேறு போராட்டங்களுக்கு பின்நவீனத்துவமே
தத்துவார்த்தத் தலைமை வழங்குகிறது. பின்தங்கிய
உற்பத்தி உறவுகளுக்கு சமூகத்தை இட்டுச் செல்வதும்,
உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கு பெருந்தடையாக
இருப்பதுமே பின்நவீனத்துத்தின் நோக்கம்.
    
மக்களின் பின்தங்கிய உணர்வு நிலைக்கு வால்
பிடிப்பது மார்க்சியம் அல்ல. மாறாக அறிவியல்
பார்வையுடன் பிரச்சனைகளை அணுகித் தீர்வு
காண்பதே அறிவுடைமை ஆகும். அதுவே மார்க்சிய
வழிமுறை ஆகும்.

எடப்பாடி அரசின் அரைப்பாசிச அடக்குமுறைகள்
முறியடிக்கப்பட்டு வேண்டியவை. ஆனால் அந்த
அடக்குமுறையை வைத்துக் கொண்டு ஸ்டெர்லைட்
ஆலை பற்றித் தீர்மானிக்க முடியாது.

அப்படியானால் என்ன செய்ய வேண்டும்?
ஸ்டெர்லைட் ஆலையானது மாசுக்கட்டுப்பாடு
குறித்த சட்ட திட்டங்களை, விதிகளை ஒழுங்காகப்
பின்பற்றுகிறதா என்று கண்காணிக்க வேண்டும்.
இதற்காக ஒரு மக்கள் கமிட்டியை அமைக்க
வேண்டும். அக்குழுவில் சுற்றுச் சூழல் மற்றும்
மாசுக் கட்டுப்பாடு நிபுணர்களும் இடம் பெற
வேண்டும். இந்தக் குழுவுக்கு அரசு தேவையான
அதிகாரம் வழங்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை
நிர்வாகம் இந்த மக்கள் கமிட்டிக்கு கட்டுப்
பட்டதாகவும், அதற்குப் பதில் சொல்லக் கடமைப்
பட்டதாகவும் இருக்குமாறு சட்டம் இயற்ற வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலை தற்காலிகமாக ஒரு ஆறு மாத
காலம் மூடியிருக்கலாம். மீண்டும் திறக்கும்போது,
மாசு கட்டுப்படுத்தப் பட்டு, சூழலுக்கு இணக்கமாக
அந்த ஆலை செயல்பட வேண்டும். அதை உத்தரவாதம்
செய்ய மக்கள் போராட வேண்டும்.

எடப்பாடி அரசின் அடக்குமுறைகள், காவல் துறையின்
அத்து மீறல்கள் ஆகியவை மக்களின் விசாரணைக்கு
உட்படுத்தப்பட்டு குற்றவாளிகள் கடுமையாகத்
தண்டிக்கப்பட வேண்டும். இது மக்களின்
போராட்டத்தால் மட்டுமே சாதிக்க முடியும்.
**************************************************************

 
.

  




ஸ்டெர்லிட் டீடெயில்ஸ் 

யார் இந்த சபரிசன்..?
வேறு யாரும் இல்லை ஸ்டாலின் இன் மருமகன் ...!
வேதாந்த sterlite குழுமத்தின் புதிய ஆலை கட்ட வெளிநாட்டில் இருந்து கனரக இயந்திரங்களை இறக்குமதி செய்யும் ஒப்பந்தம் இட்டவனும் இவன் தான்..!மொத்த புதிய ப்ளன்ட் 2500 கோடி தான் ,தலை சுற்றுருகிறதா..?
உண்மைகள் ஒரு போதும் அழியாது..! 
விரைவில் ஆடியோ வெளியுடு..!
எம் மக்களை காவு வாங்கிய கயவர்களை களை எடுக்காமல் ஓய மாட்டேன்..!
நியாம்கிரி கிழக்கு ஒரிஸ்ஸாவில் உள்ள ஒரு மலைப்பகுதி. வேதாந்தாவின் அலுமினா ரிபைனரி இங்கே 5000 கோடி ரூபாய் செலவில் சுரங்கம் தோண்டி பாக்ஸைட் தாது எடுக்க அனுமதி பெற்றது. இதற்கு எதிரான வழக்கில் 2008ல் உச்சநீதி மன்றம் வேதாந்தா சுரங்கப் பணிகளைத் தொடர உத்தரவிட்டது.
நியாம்கிரி மலைகள் டோங்கிரியா கோண்ட் (Dongria kondh) என்ற பழக்குடி மக்கள் வாழும் பகுதி. அவர்களால் தங்கள் தெய்வங்கள் உறையும் புனித இடமாகக் கருதப் பட்டது.
உச்சநீதி மன்ற உத்தரவுக்கு எதிராக இந்தப் பழங்குடி இனம் கிளர்ந்து எழுந்து போராடத் தொடங்கியது. அடர்காடுகளுக்குள் வெளியுலகம் அறியாத பழங்குடி மக்கள் தொடங்கிய போராட்டம் விரிந்து பரவியது.
மக்கள் வேதாந்தாவின் ஆலையையும் அங்கு செல்லும் சாலைகளையும் முற்றுகையிட்டனர். வேதாந்தா தனது புல்டோசர்களை இயக்கவே முடியாத நிலை ஏற்பட்டது.
போராட்டத்தின் தலைவர் போலீஸின் சித்திரவதையால் தற்கொலை செய்து கொண்டார். கைதுகள், மிரட்டல்கள்,தாக்குதல்கள், ஆசைகாட்டல்கள் மக்கள் அசையவில்லை.
இந்த நிறுவனம் ஏற்படுத்த இருக்கும் பேரழிவை உணர்ந்த சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். மாவோயிஸ்டுகளும் இப்போராட்டத்தை ஆதரித்ததாகச் சொல்லப்பட்டது.
சுற்றிலுமுள்ள நகரங்களும் புவனேஸ்வரும் பழங்குடி மக்களின் ஊர்வலங்களால் கிடுகிடுத்தன. வேதாந்தாவின் புல்டோசர்களும் லாரிகளும் செயலிழந்து நின்றன. வெடிமருந்து நிபுணர்களால் மலைகளை வெடிவைத்துத் தகர்க்கும் வேலையையும் நடத்த முடியவில்லை.
இதே உச்ச நீதிமன்றம் 2013ல் வன உரிமைச் சட்டப்படி இந்த நிறுனத்துக்கு ஊர்சபைகளின் ஆதரவு இருக்கிறதா என்று அறியும்படி உத்தரவிட்டது. ஊர்சபைகள் வேதாந்தாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றின.
மாபெரும் வல்லமை வாய்ந்ததாகவும், வெல்லப்பட முடியாததாகவும் கருதப்பட்ட வேதாந்தா வெளியுலகம் அறியாத பழங்குடி மக்களால் தோற்கடிக்கப்பட்டது. நியாம்கிரியில் தனது சுரங்கம் தோண்டும் முயற்சியை நிறுத்திக் கொண்டது.
வீரஞ்செறிந்த தூத்துக்குடியும் வெல்லும்.
வேதாந்தா இன்னொரு தோல்வியைச் சந்திக்கும்

வெள்ளி, 25 மே, 2018

ஸ்டெர்லைட் பிரச்சினைக்குத் தீர்வு என்ன?
ஸ்டெர்லைட்டை மூடுவது தீர்வாகுமா?
---------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------
முற்றிலும் தேவையற்ற (totally unwarranted) ஒரு துப்பாக்கிச்
சூட்டை அதிமுக எடப்பாடி அரசு நிகழ்த்தி 13 உயிர்களைப்
பலி வாங்கி உள்ளது. இது அரசு அடக்குமுறையின்
உச்சம் ஆகும். உயிரிழந்தோரின் குடும்பத்தார்க்கு
எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

காமராசர், பக்தவத்சலம், கருணாநிதி, ராமச்சந்திர மேனன்,
ஜெயலலிதா என்று மக்களைச் சுட்டுக் கொன்ற
தமிழக முதல்வர்களின் வரிசையில் எடப்பாடியும்
இடம் பெற்றுள்ளார். ராஜாஜி சேலம் சிறையில்
கம்யூனிஸ்டுகளைச் சுட்டுக் கொன்றார். புள்ளி
விவரங்களின்படி, அறிஞர் அண்ணா, ஓ பன்னீர்
செல்வம் ஆகிய இரு முதல்வர்கள் மட்டுமே தங்களின்
ஆட்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தி மக்களைக்
கொல்லாதவர்கள்.

ஸ்டெர்லைட் ஆலை மிகப்பெரும் கார்ப்பொரேட்
நிறுவனமான வேதாந்தா குழுமத்துக்குச் சொந்தமானது.
இக்குழுமத்தின் இயக்குனர் குழுவில் (Board of directors)
ப சிதம்பரம் இடம் பெற்று இருந்தார். அமைச்சரான
உடன் அப்பதவியில் இருந்து விலகினார்.

மூலத்தாதுவில் இருந்து தாமிரத்தைப் பிரித்தெடுத்து
கம்பிகளாகவோ தகடுகளாகவோ
மின்முனைகளாகவோ (cathodes) தயாரிக்கும் வேலை
ஸ்டெர்லைட்டில் நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வளாகத்தில் 1) தாமிரம்
பிரித்தெடுத்தல் (copper smelting)  2) கந்தக அமிலம்
தயாரித்தல் 3)பாஸ்பாரிக் அமிலம் தயாரித்தல்
ஆகியவற்றுக்கான தனித்தனி ஆலைகள் (plants)
உள்ளன.

சுருங்கக் கூறின், இந்தியாவின் மொத்த தாமிர
உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு ஸ்டெர்லைட்
ஆலை மூலம் உற்பத்தி ஆகிறது.  2016-17 நிதியாண்டில்
தூத்துக்குடி ஸ்டெர்லைட்டின் ஆண்டு முழுவதற்குமான
தாமிர உற்பத்தி (copper cathode production) 4,02,000 டன் ஆகும்.
இது நாள் ஒன்றுக்கு 1100 டன் ஆகும்.
தகவல் ஆதாரம்: வேதாந்தா நிறுவனத்தின்
இணைய தளம்.

1997இல் அன்றைய முதல்வர் கலைஞர் ஸ்டெர்லைட்
ஆலையின் உற்பத்தியைத் தொடங்கி வைத்தார்.
(commissioning of the plant). 1997-98 நிதியாண்டில் ஸ்டெர்லைட்டின்
உற்பத்தி (initial production) 60,000 டன் மட்டுமே.  

இந்தியாவில் குஜராத், ஜார்கண்டு. ராஜஸ்தான்  ஆகிய மாநிலங்களில் தாமிரம் பிரித்தெடுக்கும் ஆலைகள்
உள்ளன. குஜராத்தில் உள்ள ஹிண்டால்கோ
(Hindalco) எனப்படும் ஆதித்ய பிர்லாவின் நிறுவனம்
ஸ்டெர்லைட்டை விடப் பல மடங்கு அதிகமான
தாமிரத்தை உற்பத்தி செய்கிறது. இதனுடைய
தொடக்ககாலத் திறன் (initial capacity) ஆண்டொன்றுக்கு
ஒரு லட்சம் டன் ஆகும். பின்னர் இது 1.5 லட்சம் டன்னாக
உயர்த்தப் பட்டது.

1997இல் வெறும் 60,000 டன் என்று தொடங்கி, 2016-17இல்
நாலு லட்சம் டன் என்று ஸ்டெர்லைட்டின் உற்பத்தி
பல மடங்கு உயர்ந்துள்ளது. இதுவே பல
பிரச்சினைகளுக்குக் காரணம். 

ஸ்டெர்லைட் பல தடைகளைக்  கடந்துதான் இவ்வளவு
பிரம்மாண்ட உற்பத்தியை எட்டி உள்ளது.
ஸ்டெர்லைட்டின் வரலாற்றில் முக்கிய கட்டம்
2005இல் நிகழ்ந்தது. நாள் ஒன்றுக்கு 350 டன்னாக
இருந்த உற்பத்தியை 1000 டன்னாக உயர்த்த
ஸ்டெர்லைட் மத்திய மாநில அரசுகளிடம் .கோரியது.

அன்றைய டாக்டர் மன்மோகன்சிங் அரசில் திமுகவின்
ஆ ராசா சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்தார்.
எவ்விதத் தயக்கமும் இன்றி, மக்களின் கருத்தைக்
கேட்காமல், 900 டன்னாக உற்பத்தியை
அதிகரிப்பதற்கு, மூன்று மடங்கு அதிகரிப்புக்கு
ஆ ராசா அனுமதி அளித்தார்.

இதைத் தொடர்ந்து அன்றைய தமிழக முதல்வர்
ஜெயலலிதாவும் 900 டன் உற்பத்தி செய்வதற்கு
அனுமதி அளித்தார். பகுதிவாழ் மக்களின்
கருத்து கேட்கப்படவில்லை.

ஆ ராசா, ஜெயலலிதா ஆகிய இருவரும் வழங்கிய
அனுமதி ஸ்டெர்லைட்டை தலைகால்  புரியாமல்
ஆட வைத்தது. தனக்கு உதவியவர்களை கரன்சி
மழையில் குளிப்பாட்டியது ஸ்டெர்லைட். சுற்றுச்
சூழல் விதிகள் காற்றில் பறக்க விடப்பட்டன.
மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி, ஸ்டெர்லைட்டின்
சட்டைப் பையில் இருப்பதை ஸ்டெர்லைட்
அனைவருக்கும் உணர்த்தியது.

2012 ஆகஸ்டில் மேலும் விரிவாக்கப் பணிகளுக்காக
மத்திய அரசை நாடியது ஸ்டெர்லைட்.. அப்போது
UPA-II ஆட்சியில் சுற்றுச் சூழல் அமைச்சராக
இருந்த ஜெயராம் ரமேஷ் அதற்கான அனுமதியை
அளித்தார். பகுதிவாழ் மக்களின் கருத்தைக்
கேட்காமல் இப்படி விரிவாக்கத்துக்கு அனுமதி
கொடுப்பது பற்றி நாடாளுமன்றத்தில் ஆட்சேபம்
தெரிவிக்கப் பட்டது. மக்களின் கருத்தைக் கேட்கத்
தேவையில்லை என்று பதிலளித்தார் ஜெயராம்
ரமேஷ்.(பார்க்க: நாடாளுமன்றத்தில் அமைச்சரின்
பதில், நாள்: மார்ச் 10,.2010, ஆகஸ்ட் 11, 2010)  

தலமட்டத்தில் திமுகவின் பெரியசாமியும் அதிமுகவின்
ஹென்றி, சசிகலா புஷ்பாவும் ஸ்டெர்லைட்டின்
PROகளாகவும் பாதுகாவலர்களாகவும் செயல்பட்டார்கள்.
சட்ட திட்டப்படி அமைக்க வேண்டிய பாதுகாப்பு
ஏற்பாடுகள், சூழல் விதிகள் ஆகியவற்றைப்
பற்றிக் கவலைப் படாமல், சூழலை மாசு படுத்திக்
கொண்டு உற்பத்தியை அதிகரித்தது ஸ்டெர்லைட்.

ஸ்டெர்லைட்டை எதிர்த்து எவரும் மூச்சுக்கூட
விடாமல் பெரியசாமி பார்த்துக் கொண்டார்.
தூத்துக்குடி மேயராக இருந்த சசிகலா புஷ்பா,
அதிமுக ஹென்றி ஆகியோரை மீறி, ஸ்டெர்லைட்
ஏற்படுத்தும் மாசு பற்றி எவரும் முணுமுணுக்கக் கூட
இயலாமல் போயிற்று. தூத்துக்குடியிலும்
அதன் சுற்றுப் புறங்களிலும் ஸ்டெர்லைட்டின்
கைத்தடிகளான இவர்களே ஆட்சி நடத்தி
வந்தார்கள். எனவேதான் பாதிக்கப்பட்ட மக்கள்
எழுச்சி அடைந்து, 100 நாள் போராட்டம் நடத்தியபோது,
திமுக  அதிமுக உள்ளிட்ட எந்தவொரு அரசியல்
கட்சியையும் போராட்டத்தில் அனுமதிக்காமல்
விரட்டி விரட்டி அடித்தனர்.பெரியசாமியின் மகளும்
தூத்துக்குடி MLAவும் ஸ்டெர்லைட்டின் கைத்தடியுமான
கீதா ஜீவன்தான் முதலில் விரட்டி அடிக்கப் பட்டவர்.

ஆக, ஸ்டெர்லைட்டின் வரலாற்றில் 1997 முதல் 2014 வரை
மத்தியில் உள்ள காங்கிரஸ் ஆட்சியானது
ஸ்டெர்லைட்டுக்கு விதிகளை மீறி எல்லா
அனுமதியையும் வழங்கியது. மே 2014க்குப் பின்னர்
ஸ்டெர்லைட்டின் நலன் பேணும் பொறுப்பை
பாஜக எடுத்துக் கொண்டது. காங்கிரசுக்கும்
பாஜகவுக்கும் ஸ்டெர்லைட் விவகாரத்தில்
ஒரே கொள்கைதான் என்பதை அறிய வேண்டும்.

காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுக ஆகிய நான்கு
கட்சிகளுமே ஸ்டெர்லைட்டின் நலம்
விரும்பிகளாகவே இருந்தன என்பதை
இக்கட்டுரையில் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளோம்.
பிற கட்சிகளும்  லெட்டர் பேட் கட்சிகள் உட்பட
ஸ்டெர்லைட்டிடம் பணம் வாங்கிய கட்சிகளே.
நக்சல்பாரிக் கட்சிகளைத் தவிர, மீதி அனைத்துக்
கட்சிகளும் ஸ்டெர்லைட்டிடம் யாசித்துப்
பெற்ற கட்சிகளே.
--------------------------------------------------------------------------------
தொடரும்.. மீதி அடுத்த கட்டுரையில்
****************************************************** 






 
   
             
STERLITE

வடகொரியா மாபெரும் கோபத்தில் இருக்கின்றது, மிக நுட்பமான தந்திரத்தில் அது வீழ்த்தபட்டதை எண்ணி உறுமிகொண்டிருக்கின்றது
அதாவது ஏவுகனை சோதனை , அணுகுண்டு என மிக சந்தோஷமாக இருந்த நாடு வடகொரியா, முதலில் அது யுத்தம் தவிர எதற்கும் தயாரில்லை
ஆனால் சி.ஐ.ஏ அதிகாரி சென்றுவந்ததிலிருந்து அதன் போக்கில் மாறுதல் தெரிந்தது. இனி எல்லாம் சமாதானம் என இறங்கி வந்து தென் கொரிய அதிபருடன் எல்லாம் வடகொரிய அதிபர் பேசினார்
...See More
Comments
M R Mohamed Irfan முழுமையாக அழித்து இருக்க வாய்ப்பு இல்லை,
எந்த நொடியும் திரும்ப தயாரிக்கும் நிலையில் தான் இருப்பார்கள்.

Manage


Reply8m
மாறன்
Comments
Thirumeni Gt added 4 comments on this.
இன்றைய தமிழர்களின் நிலையை அன்றே சொன்ன ஆதித்தனார் . உலகம் முழுவதும் தமிழர்கள் வாழ்ந்தாலும் அவர்கள் மதிக்கப்படாததற்கு காரணம் தமிழர்களுக்கென்று ஒரு நாடில்லை என்பதால்தான் .
~~~~~~~~
"தமிழர்களுக்கு என்று ஒரு நாடு அமையும் வரை எந்த நாட்டிலும் தமிழர்களுக்கு உறுதியற்ற நிலை தான் நீடிக்கும். இதனை முடிவாகத் தீர்க்க சுதந்திரத் தமிழ்நாடு பெறுவதைத் தவிர வேறு வழியில்லை." 
...See More
Comments
Thirumeni Gt பெரியார் கேட்ட தனித்தமிழ்நாடு
சுதந்திர தமிழ்நாடா?
காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற சுதந்திர தமிழ்நாடா?
Manage


Reply21h
Thirumeni Gt இந்திய நாட்டை அடிமைப்படுத்தி ஆதிக்கம் செய்வதில்
ஏகபோகநிதிமூலதனவாதிகள் தீர்மானமானகர சக்தியாக விளங்குகின்றனர்.
உலகவங்கி,ஐஎம்எப், WTO-வின் ஆதிக்கம் ஒருபக்கம் என்றால்....
...See More
Manage


Reply6hEdited
Sundaram Rajeswaran பெரியார் தனித்தமிழ்நாடு கேட்டாரா இது என்ன புதுசா இருக்கு
Manage


Reply20h
கதிர் நிலவன் பிரித்தானியருக்கு கட்டுப்பட்ட திராவிட நாடு கேட்டார். பிரித்தானியர் போன பிறகு 1956க்குப் பிறகே தமிழ்நாடு தமிழருக்கே என்று விடுதலையில் தலைப்பை போட்டுத் கொண்டு ஏகாதிபத்திய காங்கிரசை ஆதரித்தார்.
Manage


Reply20h
வைகுண்டராசனை ஒழிப்பது எப்போது.
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்துக்கான முக்கிய காரணம் என்பது கடந்த இருபது ஆண்டுகளாக தூத்துக்குடியில் பல மடங்காக பெருகி இருக்கும் கேன்சர்.
சராசரியாக கேன்சர் வியாதி உள்ள ஆட்கள் இல்லாத தெருவே இல்லை என்னும் அளவுக்கு அந்த வியாதியின் தீவிரமும் கொடூரமும் மக்களை உலுக்கி இருக்கிறது.
ஸ்டெர்லைட்டின் கொடூரத்தை போலவே கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கடற்கரையில் சட்ட விரோதமாக தாது மணல் எடுத்துக் கொண்டிருக்கிறான் வைகுண்டராசன். இந்த தாதுக்களை எடுப்பதால் எழும் கதிர்வீச்சால் கடுமையான புற்று நோய் பாதிப்பு அனைத்து கடலோர ஊர்களிலும் உண்டு. குறிப்பாக நெல்லை மாவட்டத்தில்.
அனில் அகர்வாலுக்கு எதிராக திரண்டு இவ்வளவு பெரிய போராட்டத்தை முன்னெடுத்த மக்கள் நாளை தாது மணல் வைகுண்டராசனுக்கு எதிராக திரள வேண்டும் என்று கோரிக்கை வெச்சி பாருங்க. முக்கால் வாசி கூட்டம் ஓடிப் போய் விடும். அரசியல் கட்சிகள் ஓடி விடூம். சாதிய பிளவுகள் வந்து விடும். சீமான்கள் வாயே திறக்க மாட்டார்கள்.
காரணம் வைகுண்டராசன் நம்ம பங்காளி. கேன்சரை அனில் அகர்வால் கொண்டு வந்தா தப்பு . ஆனால் அண்ணாச்சி கொண்டு வந்தா தப்பில்ல. இம்புட்டு தான் அரசியல்..