வெள்ளி, 25 மே, 2018

ஸ்டெரிலைட் போராட்டம்! சில உண்மைகள்!
மறுக்க முடியாத உண்மைகள்!
--------------------------------------------------------------------------------
1) அமைச்சர் கடம்பூர் ராஜுவின் உறவினர்தான்
தூத்துக்குடி மாவட்ட SP மகேந்திரன். என்ன செய்ய
வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்
மகேந்திரன்.
2) ஸ்டெரிலைட் போராட்டக் கமிட்டியின் தலமைப்
பொறுப்பில் இதுவரை இருந்த பேராசிரியை
பாத்திமா பாபுவை தலைவர் பதவியில் இருந்து
போராட்டக் கமிட்டி நீக்கி உள்ளது.
3) பாத்திமா பாபு மதிமுகவைச் சேர்ந்தவர். அவரை
மதிமுகவின்  உயர்மட்டக் குழுவில் இருந்து நீக்கி
தானும் அம்பலம் ஆவதைத் தற்காலிகமாகத்
தடுத்துக் கொண்டார் வைகோ.
4) ஒரு மூத்த உயர்ந்த திராவிடத் தலைவரின்
மருமகன் ஸ்டெரிலைட் வேலைகளை ஏற்றுச்
செய்வது அம்பலப் பட்டுள்ளது.
5) அது எந்த மருமகன் என்பதையும் ஒரு மூத்த
பத்திரிகையாளர் உடைத்துச் சொல்லி விட்டார்.
6) நேற்று மாலை தமிழகத்தில் உள்ள எல்லாக்
காட்சி ஊடகங்களும் கடுமையாக எடப்பாடியால்
மிரட்டப் பட்டு விட்டன. ஊடகங்கள் மண்டி இட்டு
விட்டன.
7) ஜாம்பியாவில் ஸ்டெரிலைட் தொழில் தொடங்குகிறது.
அண்மையில் ஜாம்பியா சென்று வந்தார் ஸ்டெரிலைட்
தலைவர். அவரை ஜாம்பியா கூட்டிச் சென்று
அறிமுகம் செய்து வைத்தவர் யார்? அவர் சாமானியப்
பட்டவர் அல்ல.
8) ப சிதம்பரம் அவர்கள் போர்டு மெம்பராகவே
இருக்கிறார்.
9) காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுக ஆகிய நான்கு
ஆளும் வர்க்கக் கட்சிகளும் அன்று தொட்டு இன்று
வரை ஸ்டெரிலைட்டுக்கு ஆதரவாகவே உள்ளன.
இல்லை என்று எவர் மறுத்தாலும் அதற்கான
ஆதாரங்களைக் குவிக்க முடியும்.
10) மதிமுகவுக்கும் ஸ்டெரிலைட்டுக்கும் மோதல்
என்று ஒரு சித்திரம் போலியாக உருவாக்கப்
பட்டுள்ளது. அதில் உண்மை இல்லை.
11) பல்வேறு துண்டு துக்காணி அமைப்புகள், லெட்டர்
பேடு அமைப்புகள் அனைத்துக்கும் பட்டுவாடா
செய்யப் பட்டு விட்டது.
12) மிகப்பெரும் கார்ப்பொரேட் நிறுவனமான
ஸ்டெரிலைட் இந்திய ஆளும் வர்க்கத்தின்
முதலாளித்துவப் பொருளாதாரத்தின் தூண் ஆகும்.
இதை எல்லா அரசியல் கட்சிகளும் உயிரைக்
கொடுத்துப் பாதுகாப்பார்கள்.
13) ஸ்டெரிலைட் போராட்டத்தில் நக்சல்கள் ஊடுருவல்
என்பது அப்பட்டமான பொய். எந்த நக்சல்பாரி
அமைப்புக்கும் ஸ்டெரிலைட் போராட்டத்தை
வழிநடத்தவோ, தலைமை தங்கவோ அமைப்பு
பலமும் இல்லை; ஆளும் இல்லை. நக்சல் பூச்சாண்டி
காட்டுவது கேவலமான பொய்.
14) மக்கள் அதிகாரம் என்று ஒரு அமைப்பு உள்ளது.
ஒரு காலத்தில் நக்சல்பாரி அமைப்பாக இருந்து
பின்னாளில் தீவிர திராவிடக் கட்சியாக (Radical Dravidian party)
மாறிப்போன ஒரு அமைப்பின் வெகுஜன முன்னணியே
(MASS FRONT) இந்த மக்கள் அதிகாரம். இந்த
அமைப்புதான்  ஸ்டெரிலைட் போராட்டத்தை
தலைமை தாங்கி நடத்துவதாக தினமலர் ஏடு பொய்ச்
செய்தி வெளியிடுகிறது.
15) மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த
ஒன்றிரண்டு பேர் ஸ்டெரிலைட் போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளது உண்மைதான். ஆனால் அவர்கள்
போராட்டத்துக்கு தலைமை தாங்குவதாகக்
கூறுவது கேவலமான பொய். அந்த அளவுக்கு
அவர்களின் அமைப்புக்கு அரசியல் வலிமையோ
அமைப்பு பலமோ கிடையாது. ராமர் பாலம்
கட்டும்போது அணில் எந்த அளவுக்கு உதவி செய்ததோ
அந்த அளவுதான் மக்கள் அதிகாரத்தின் பங்களிப்பும்.
16) தூத்துக்குடியிலும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும்
உள்ள மக்களின் கூட்டுப் போராட்டக் கமிட்டிதான்
ஸ்டெரிலைட் போராட்டத்தை வழிநடத்துகிறது.
இதில் தேர்தல் அரசியலில் பங்கேற்கும் எந்தவொரு
கட்சிக்கும் இடம் இல்லை. எந்தவொரு நக்சல்பாரி
அமைப்புக்கும் இடம் இல்லை. இதுதான் உண்மை.
17) இதுபோன்ற மக்கள் போராட்டங்களுக்கு
தலைமை ஏற்கும் அளவுக்கு நக்சல்பாரிகள்
என்று வளர்கிறார்களோ, அன்றில் இருந்து சில
நாட்களில் புரட்சி வெடிக்கும்.
18) மறைந்த தூத்துக்குடி பெரியசாமி (திமுக மாவட்டச்
செயலாளர்) இருந்தவரை ஸ்டெரிலைட் நிர்வாகம்
நிம்மதியாக இருந்தது. ஏனெனில்  பெரியசாமியின்
செல்வாக்கும் செயல்பாடும் அப்படி. இன்று பெரியசாமி
இல்லையே என்று ஏங்குவது ஸ்டெரிலைட் தான்.
=================================================
உண்மைகள் தொடரும்
*********************************************************


        

கூடங்குளம், கதிராமங்கலம், ஸ்டெரிலைட்
என்று தொடரும் மக்களின் போராட்டங்களில்
Non Party UPSURGE எனப்படும் கட்சிசாரா மக்கள் ள்
எழுச்சி தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது!


காப்பர் எடுப்பதை ஒவ்வொருவரும் ஆதரிக்க வேண்டும்.
3000 வருஷத்துக்கு முன்பே நமது முன்னோர்கள்
(நம்மோடு ஒப்பிடும் போது காட்டு மிராண்டிகள்)
காப்பர் எடுக்கவில்லையா? வெண்கல யுகம்,
இரும்பு யுகம் என்றெல்லாம் வரலாற்றில்
படிக்கிறோம்! ஆனால்  ஸ்டெரிலைட் எந்த விதியையும்
கடைப்பிடிக்காமல் சூழலை மாசு படுத்திக் கொண்டு
காப்பர் எடுப்பதை ஏற்க முடியாது.

இன்று நான் சொல்லி இருப்பது சற்றுப் பூடகமாக
இருந்தாலும், கொஞ்ச காலத்தில் அவை அவ்வளவும்
வெட்ட வெளிச்சமாகும்.

பணத்தையும் வாங்கிக் கொண்டு
புரட்சி வேஷம் போட முயன்றபோது
பணம் வாங்கியவர்களின் பட்டியலை
வெளியிடுவோம் என மிரட்டியது ஸ்டெரிலைட்
நிர்வாகம்! அவ்வளவுதான், எல்லாக் கட்சிகளும்
கப்சிப்!


கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா?
இனி மக்கள் ஸ்டெரிலைட்டை ஏற்க மாட்டார்கள்.
பெரும் வன்முறையை அடக்குமுறையை அரசு
கட்டவிழ்த்து விட்டால்தான் ஸ்டெரிலைட் இயங்க முடியும்.

  ஆழ்ந்த சோகத்துடன்

உண்மையான பட்டியலே கிடைக்கும். பொறுத்திருங்கள்.
இப்போது வெளியிட சந்தர்ப்பம் சரியில்லை.

இணையம் அல்ல. மக்களின் எழுச்சியே!
இணையம் என்பது குட்டி முதலாளித்துவம்
கூத்தாடவும் சுயஇன்பம் அனுபவிக்கவுமான ஒரு இடம்.
இணையத்தால் சொந்தமாக எந்த மக்கள் எழுச்சியையும்  உருவாக்க முடியாது. ஆனால் ஒரு மக்கள் எழுச்சி
உருவானால், அதை வேகப்படுத்தவோ அல்லது
மட்டுப் படுத்தவோ இணையத்தால் இயலும்.
இணையம் can act a catalyst. Just that is all.


சேஷாத்ரி அவர்களே,
போராட்டக்காரர்களுக்கு கல்வித் தகுதியோ IQ டெஸ்டோ
நிர்ணயிக்க முடியாது. மக்கள் தங்களின் சொந்த
அனுபவத்தில் என்ன உணர்ந்தார்களோ, என்ன அனுபவப்
பட்டார்களோ, அதன் அடிப்படையில் போராடுகிறார்கள்.
தங்களின் வாழ்வாதாரம் பறிபோவதாக உணரும்போதும்,
தங்களின் உயிருக்கே ஸ்டெரிலைட்டால் ஆபத்து என்று
அஞ்சும்போதும் அவர்கள் தன்னெழுச்சியாக போராட
வருகிறார்கள். தேர்தல் அரசியலில் ஈடுபட்ட எல்லா
அரசியல் கட்சிகளும் ஸ்டெரிலைட்டிடம் காசு
வாங்கிய கயவர்கள் என்ற உண்மையையும் அவர்கள்
உணர்ந்து இருக்கிறார்கள். எந்த அரசியல் கட்சியையும்
நம்பி, அவர்கள் பின்னல் போய் ஏமாறுவதற்கு மக்கள்
தயாராக இல்லை. இது ஒருவகையில் வரவேற்கத் தக்கதே.


மக்கள் திரண்டு தெருவில் இறங்கிப் போராடும்போது,
அவர்கள் மென்மையாகவும் நாசூக்காகவும் நளினமாகவும்
நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது மடமை.
மானுட உளவியல் பற்றி எத்தகைய புரிதலும்
இல்லாதவர்களே மக்கள் போராட்டங்களில் மென்மையை
எதிர்பார்ப்பார்கள்.மகாத்மா காந்தி காலத்திலேயே
மக்களின் போராட்டங்கள் அவர் எதிர்பார்த்த அளவு
அஹிம்சையுடன் இல்லாதபோது காந்தி அதிர்ச்சி அடைந்தார்.

 




ஸ்டெரிலைட் போராட்டக் குழுவில் இருந்து
பாத்திமா பாபு ஏன் நீக்கப் பட்டார்?
-----------------------------------------------------------------------------
ஸ்டெரிலைட் போராட்டக் கமிட்டியின் தலைவர்
பதவியில் இருந்து சில நாட்களுக்கு முன்பு
பேராசிரியை பாத்திமா பாபு நீக்கப் பட்டார்.
இவர் மதிமுகவைச் சேர்ந்தவர். வைகோவின்
கட்டளைப்படி போராட்டத்தை நீர்த்துப் போகச்செய்ய
முயன்றபோது அம்பலப் பட்டார். மக்களின்
போராட்டக்குழு அவரை தலைவர் பதவியில்
இருந்து நீக்கியது.

பாத்திமா பாபுவை நீக்கியது வைகோவை
நீக்கியதற்குச் சமம்.

இந்த நிகழ்வால் தான் அம்பலப் பட்டு விடுவோமோ
என்று அஞ்சிய வைகோ, பாத்திமா பாபுவை
மதிமுகவின் உயர்மட்டக் குழுப் பதவியில் இருந்து
நீக்கி, தனது புரட்சிகர முகமூடியைத் தக்க
வைத்துக் கொண்டார்.


வேதாந்தா முதலாளி (ஸ்டெர்லைட் அதிபர்)
அனில் அகர்வாலின் மகனை
லண்டனில் தாக்கிய 3 தமிழர்கள் கைது!
இதுதாண்டா மக்களின் உலகமயம்!

இதுவும் உலகமயம்தான்!


சிங்கூர் நந்தி கிராமம் போராட்டங்களை
வெற்றிகரமாக ஒடுக்கிய மார்க்சிஸ்ட்
முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவிடம்
அறிவுரை கேட்கும் எடப்பாடி!


யார் உண்மையான செயல் தலைவர்?
----------------------------------------------------------------------
சிங்கூர் நந்தி கிராமில்
மார்க்சிஸ்ட் அரசு மக்களை சுட்டுக்
கொன்றபோது மாபெரும் எதிர்ப்பு இயக்கத்தைக்
கட்டமைத்தார் மமதா பானர்ஜி. மமதாவே
எதிர்க்கட்சித் தலைவருக்கு இலக்கணம்!

எதிர்க்கட்சித் தலைவர் என்றால் மமதாவைப்
போல் இருக்க வேண்டும். மமதாவே உண்மையான
செயல் தலைவர்! செயல்படும் தலைவர்!

தங்கள் மாநிலத்து எதிர்க்கட்சித் தலைவரும்
மமதாவைப் போல் இருக்க வேண்டும் என்று
மக்கள் எதிர்பார்ப்பது இயல்பு!

அப்படி இல்லையென்றால் கொதிப்படைவதும்
இயல்பு!

டாட்டா என்ற பெரும் கார்ப்பொரேட் முதலாளிக்காக
சிங்கூர், நந்தி கிராமம் என்ற ஊர்களில் உள்ள
விவசாயிகளின் நிலங்களைப் பறித்து டாட்டாவிடம்
ஒப்படைத்தார் மார்க்சிஸ்ட் புத்ததேவ். எதிர்த்துப்
போராடிய மக்களை காக்கை குருவிகளைப்  போல்
சுட்டுக் கொன்றார்.

மார்க்சிஸ்ட்  குண்டர்களை ஏவி, சிங்கூரிலும்
நந்திகிராமிலும்  உள்ள பெண்களைக் கற்பழித்தார்
புத்ததேவ். கற்பனை செய்ய முடியாத கொடுமைகளை
அரங்கேற்றினார் புத்ததேவ். விளைவு:  ஆட்சியை
இழந்தார்; தேர்தலில் தோற்றார். அவரின் அரசியல்
வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

கயமைத்தனம் என்பதற்கு இலக்கணம் வகுத்தார்
புத்ததேவ். விளைவு: இன்று மார்க்சிஸ்ட் கட்சி
மூன்றாவது இடத்திற்குத் தள்ளப் பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கட்சியினர் 10 பேரை இந்த உள்ளாட்சித்
தேர்தலில் படுகொலை செய்தார் மமதா. இருப்பினும்
மமதாவின் மயிரைக்கூட மார்க்சிஸ்டுகளால்
தொட முடியவில்லை.ஏன்? மார்க்சிஸ்ட் குண்டர்களை
மமதா கொலை செய்வதை மக்கள் ஆதரிக்கிறார்கள்.
அந்த அளவுக்கு  கொடிய மக்கள் விரோதிகளாக
இருந்து மக்களின் எதிர்ப்பைச் சம்பாதித்து
வைத்து இருந்தார்கள் மார்க்சிஸ்டுகள்.

நிற்க. வேறு ஒருவரைப் பற்றி எண்ணெய் பார்ப்போம்!
அவரும் ஒரு எதிர்க்கட்சித் தலைவர்தான்.
என்றாலும் மமதாவின்  நிழலுக்குக் கூட அவர்
சமமாக மாட்டார். 24 மணி நேரமும் செயல் படுகிறவர்
மமதா! இவரோ செயல்பாடு இல்லாதவர்!

பழனிச்சாமி மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டாலே
போதும், நாம் சுலபமாக ஆட்சிக்கு வந்து விடலாம்
என்று கனவு காண்கிறார்.

யாராக இருந்தாலும் கடுமையாக உழைக்க வேண்டும்.
அப்படி உழைப்பவர்களை மற்றவர்களால் வெற்றி
கொள்வது கடினம்.

அன்று மகாத்மா காந்தி கடுமையான உழைப்பாளி!
டாக்டர் அப்துல் கலாம் கடுமையான உழைப்பாளி!
கலைஞர் கடுமையான உழைப்பாளி!
மோடி கடுமையான உழைப்பாளி!
மமதா கடுமையான உழைப்பாளி!

ராகுல், ஓமர் அப்துல்லா, குமாரசாமி கவுடா ஆகியோர்
சுகவாசிகள்!
*******************************************************

ஆட்சியில் இருக்கும்
 







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக