சனி, 26 மே, 2018

ஆலைகளை நிறுவுமுன் என்ன செய்ய வேண்டும்?
---------------------------------------------------------------------------------------
இனிமேல், மக்கள்-நிபுணர்கள் ஒன்றிணைந்த
கமிட்டி அமைக்காமல் எந்த ஒரு தொழிற்சாலையும்
நிறுவக்  கூடாது. இதற்கு தற்போது சட்டம் இல்லை.
மத்திய அரசு இதற்காக ஒரு சட்டத்தை இயற்ற
வேண்டும். இது சாத்தியமான விஷயமே. இதைச்
செய்யத் தவறினால், இந்தியாவில் இனிமேல்
எங்குமே யாருமே எந்த ஒரு ஆலையையும்
நிறுவ முடியாது. இதை அரசும் உணர்ந்து வருகிறது.
தேவை அரசை நிர்ப்பந்திக்கும் மக்களின்
போராட்டமே.

நலிவுற்றால் மட்டுமே அரசு ஏற்று நடத்த இயலும்.
உலகின் மிகப்பெரிய நிறுவனம் ஸ்டெர்லைட்.
அதன் மாசுகளை அரசு கட்டுப் படுத்தினால்
போதும்.

ஸ்டெர்லைட் ஆலையை 1997இல் கலைஞர் தொடக்கி
வைத்தபோது, அதன் தொடக்க உற்பத்தித்திறன்
(initial capacity) ஆண்டொன்றுக்கு 60,000 டன் காப்பர்.
அதே நேரத்தில் குஜராத்தில் உள்ள, ஆதித்திய
பிர்லா குழுமத்தின் ஹிண்டால்கோ நிறுவனத்தின்
தாமிர உற்பத்தித் திறன் (initial capacity) ஒரு லட்சம் டன்.
ஸ்டெர்லைட்டை விட உற்பத்தி அதிகமுள்ள
குஜராத்தில் சூழல் மாசு படவில்லை. மக்களின்
போராட்டம் இல்லை. ஏன்? காரணம், பிர்லாவின்
நிறுவனம் சூழல் விதிகளை மதிக்கிறது.
**
ஆனால் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம்
திமுக அதிமுக கயவர்களுக்கு லஞ்சம் கொடுத்து
விட்டு, கந்தக டை ஆக்ஸைடை (SO2) வளி மண்டலத்தில்
கலந்து விடுகிறது. இதைத் தட்டிக் கேட்டால்
பெரியசாமியின் அடியாட்களும் சசிகலா புஷ்பாவின்
அடியாட்களும் வீட்டுக்கு ஆட்டோவில் ரவுடிகளை
அனுப்புவார்கள்.
*****************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக