செல்போன் ஜாமர்களும் ப்ளூ டூத்தும்!
நீட் தேர்வின் கட்டுப்பாடுகள்!
---------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------
1) மூன்று ஆண்டுக்கு முன்பு, 2015 ஜூன் 17ல் உச்சநீதி
மன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது. அத்தீர்ப்பால்
மொத்த மருத்துவ மாணவர்களும் அதிர்ச்சி
அடைந்தனர்.
2) 2015 மே 3ல் நடைபெற்ற AIPMT தேர்வை ரத்து
செய்து உத்தரவிட்டது உச்சநீதி மன்றம். நான்கு
வாரங்களுக்குள் மறு தேர்வு நடத்தவும் உச்சநீதி
மன்றம் உத்தரவிட்டது. இதன் விளைவாகவே அதிர்ச்சி!
3) என்ன காரணம்? ப்ளூ டூத், மைக்ரோ ரிஸீவர்கள்,
நுண் காமிராக்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி
AIPMT தேர்வில் பல மாணவர்கள் காப்பி அடித்தது
கண்டு பிடிக்கப் பட்டது. ஹரியானா உள்ளிட்ட
பல்வேறு மாநிலங்களில் இவ்வாறு நடந்துள்ளது.
எனவே AIPMT தேர்வு ரத்தானது.
4) பேனாவில் மறைத்து வைக்கக் கூடிய காமிரா
(hidden camera) மூலம் கேள்வித்தாளில் உள்ள கேள்விகள்
படம் எடுக்கப் படுகின்றன. அவை ப்ளூ டூத் (Blue Tooth)
என்னும் கருவி மூலம் தேர்வு அறைக்கு வெளியே உள்ள
குழுவினருக்கு அனுப்பப் படுகின்றன. அவர்கள்
அதற்கான விடைகளை தேர்வு அறைக்குள்
உள்ள மாணவருக்கு அனுப்புகிறார்கள். ப்ளூ டூத்
என்னும் வயர்லெஸ் கருவி செய்தி அனுப்பவும்
செய்தியைப் பெறவும் ( transmission and reception) பயன்படும்
கருவி ஆகும்.
5) தற்போது நீட் தேர்வு நடைபெறும் ஒவ்வொரு
தேர்வு அறையிலும் செல்போன் ஜாமர் கருவிகள்
பொருத்தப் பட்டுள்ளன. (தகவல் ஆதாரம்:
மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை வெளியிட்ட
07.05.2018 2106 hours நேரத்தில பத்திரிகைக் குறிப்பு)
6) ஆனால் செல்போன் ஜாமர் கருவிகளால், ப்ளூ டூத்
மூலம் நடைபெறும் செய்திப் பரிமாற்றத்தைத்
தடுக்க இயலாது. எப்படி?
7) ப்ளூ டூத் கருவியானது குறுகிய தூரங்களில்
மட்டுமே செயல்படும். 3 அடி முதல் 300 அடி
வரையிலான தூரத்தில் மட்டுமே செயல்படும்.
இதைத் தாண்டிய தூரத்தில், உதாரணமாக 350 அடி
தூரத்தில் ப்ளூ டூத் கருவிகள் செயல்படாது.
8) தற்போது இந்தியாவில் பரவலான பயன்பாட்டில்
உள்ள செல்போன் ஜாமர் கருவிகள் இவ்வளவு
குறைந்த தூரத்தில் மட்டுமே செயல்படும்
ப்ளூ டூத் கருவிகளின் feequencyஐ ஜாம் செய்வதில்லை.
9) எல்லாவிதமான frequencyஐயும் ஜாம் செய்யக்கூடிய
ஜாமர் கருவிகள் அதிக விலை உள்ளவை. அவை
அதிஉயர் பாதுகாப்பு வளையத்தில் உள்ள
VIP பாதுகாப்புக்கு மட்டுமே பயன்படுபவை.
CBSE அவற்றை விலை கொடுத்து வாங்க வேண்டுமெனில்
பல கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்ய
வேண்டும். தற்போது CBSE பயன்படுத்தும் ஜாமர்கள்
நடுத்தர அளவிலான திறன் வாய்ந்தவை மட்டுமே.
இவற்றால் எல்லாவித FREQUENCYகளையும் ஜாம்
செய்ய இயலாது.
10) கேள்விகளை புகைப்படம் எடுக்க ஒரு hidden camera
(இது பேனா வடிவில் உள்ளது), செய்தி அனுப்பவும்
பெறவும் பயன்படும் ஒரு ப்ளூ டூத் கருவி, வெளியில்
இருந்து விடைகளைச் சொல்ல ஒரு நிபுணர் குழு,
இவற்றின் கூட்டு முயற்சியில் வெற்றிகரமாக
காப்பி அடித்தனர் AIPMT தேர்வில் சில மாணவர்கள்.
11) இந்த மோசடிகளைத் தடுக்கும் பொருட்டு, தற்போது
நீட் தேர்வில் ஆடைக் கட்டுப்பாடு, கூந்தல் கட்டுப்பாடு
போன்றவை நடைமுறைப் படுத்தப் படுகின்றன.
இவை ESSENTIAL EVILS ஆகும். இவை உச்சநீதிமன்ற
உத்தரவின் பேரில், CBSE செயல்படுத்தும்
விதிமுறைகள் ஆகும்.
12) இந்தக் கட்டுப்பாடுகள் தேவையற்றவை என்று
முன்வைக்கப்படும் வாதங்கள் காப்பி அடித்தலுக்கு
துணை போகும் வாதங்களே. இக்கட்டுப்பாடுகளை
அகற்றி விட்டால், காப்பி அடிப்பதை எப்படித்
தடுப்பது என்று மாற்று வழிமுறைகளைச்
சொல்ல வேண்டும். அப்படி எவரும் இதுவரை
சொல்லவில்லை.
13) ப்ளூ டூத் கருவியின் Master slave architecture பற்றியோ,
சிக்னல்களை அனுப்பப் பயன்படும் ஒரு குறிப்பிட்ட
வகையிலான frequency shift keying பற்றியோ, packet by packet
transmission பற்றியோ இக்கட்டுரையில் எழுதப்படவில்லை.
பொதுவான வாசகர்களுக்கு அவை தேவையற்றவை.
-------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
Master slave architectureக்கும் Server client architectureக்கும்
என்ன வேறுபாடு? அறிவியல் ஆர்வலர்கள் பதில் தருக.
*******************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக