வியாழன், 24 மே, 2018

முரட்டு பக்தரும் ஸ்டெர்லைட்டும்!
கயமையோ கயமை!!
----------------------------------------------------------
1) ராட்சஸத் தனமாக தாமிரம் உற்பத்தி செய்யும்
ஆலை ஸ்டெர்லைட். மிகப் பிரம்மாண்டமான
உற்பத்தி ஸ்டெர்லைட்டில் நடக்கிறது.
2) எனவே ஸ்டெர்லைட்டுக்கான தண்ணீர்த் தேவையும்
மிக அதிகம்.
3) ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தத் தேவையைப்
பூர்த்தி செய்யும் அளவுக்கு தண்ணீர் வசதி கிடையாது.
4) 2011இல் தென் மாவட்டங்களின் வறட்சி நிலவிய காலம்.
மழை இல்லை. நீர்நிலைகள் வறண்டு கிடந்தன.போதிய
தண்ணீர் கிடைக்காமல் ஸ்டெர்லைட்டில் உற்பத்தி
பாதிக்கப் படும் சூழல் நிலவியது.
5) எனவே  இன்னும் ஆழமாகத் தோண்டி, அதிக ஆழத்தில்
இருந்து நிலத்தடி நீரை எடுக்க அனுமதிக்க வேண்டும்
என்று கலெக்டர், தாசில்தார் ஆகிய அதிகாரிகளிடம்
கோரிக்கை வைத்தது ஸ்டெர்லைட் நிர்வாகம். கூடவே
அதிகாரிகளை கரன்சி மழையில் குளிப்பாட்டியது
என்பதை  தேவையில்லை.
6) அதிக ஆழம் தோண்டி நிலத்தடி நீரை எடுத்துக்
பயன்படுத்த அனுமதி அளித்து உத்தரவு
பிறப்பித்தனர் அதிகாரிகள். இந்த உத்தரவால்
ஸ்டெர்லைட்டின் தண்ணீர்ப் பிரச்சினை தீர்ந்தது.
500 அடி, 1000 அடி ஆழம் தோண்டி  நிலத்தடி நீர்
எடுக்கப்பட்டு தினமும் 300 லாரி லோடு என்ற அளவுக்கு
தண்ணீர் ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும்
ஸ்டெர்லைட்டுக்குச் சென்றது. இந்த உத்தரவால்
ஸ்டெர்லைட்டின் தண்ணீர்ப் பிரச்சினை தீர்ந்தது

7) ஆனால் வேறு ஒரு இடத்தில் பிரச்சினை ஆரம்பித்து
விட்டது. ஓட்டப்பிடாரம், கயத்தாறு, கருங்குளம்,
விளாத்திகுளம் ஆகிய ஊர்களில் முற்றிலுமாக
நீர் வற்றி விட்டது. குழாய்களில், பம்புகளில்
நீர் வரவில்லை. வந்த நீரும் மாசு படிந்ததாக
சேறும் சகதியும் நிரம்பியதாக இருந்தது.

8) எனவே மக்கள் கொந்தளித்தனர். மேற்கூறிய ஊர்கள்
ஓட்டப்பிடாரம் தொகுதிக்குள் வருகின்றன. அந்த ஊரின்
சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கிருஷ்ணசாமி.
அவரிடம் மக்கள் முறையிட்டனர். அவர் அப்போதைய
அமைச்சர்கள், முதல்வர்  ஜெயலலிதா ஆகியோரிடம்
பேசி, அதிக ஆழம் தோண்ட அனுமதிக்கும் கலெக்டரின்
உத்தரவை ரத்து செய்ய வைத்தார். இதனால் மக்களின்
பிரச்சினை தீர்ந்தது.

9) அதே நேரத்தில் ஸ்டெர்லைட்டுக்கு பிரச்சினை
 ஆரம்பித்து விட்டது. ஆலையின் தண்ணீர்த் தேவை
 பூர்த்தி அடையாமல் உற்பத்தி பாதிக்கப் பட்டது.

10) ஸ்டெர்லைட் என்ன செய்தது? கடவுளிடம்
முறையிட்டதா? இல்லை. ஏனெனில் கடவுள் இல்லை
என்பது ஸ்டெர்லைட்டுக்கு நன்கு .தெரியும். எனவே
முரட்டு பக்தரிடம் முறையிட்டது.

11) முரட்டு பக்தருக்கு இது மாதிரி விஷயமெல்லாம்
ஜுஜுபி. உடனடியாக புரட்சி வேடம் பூண்ட முரட்டு
பக்தர், ஒரு வேலைநிறுத்தத்தை ஆரம்பித்தார்.

12) தண்ணீர் லாரி போனார்கள் மற்றும் ஓட்டுனர்களை
அழைத்தார். ஆழ்துளைக் கிணறு மூலம் அதிக
ஆழம் தோண்ட கலெக்டர் அனுமதிக்கவில்லை.
இதனால் உங்களின் வாழ்வாதாரம் பறிபோய் விடும்.
நீங்கள் வேலை இழந்து தெருவில் நிற்க நேரிடும்.
ஆகவே கலெக்டரின் இந்த முடிவை எதிர்த்து
நீங்கள் வேலைநிறுத்தம் செய்ய வேண்டும் என்று
கட்டளை இட்டார்.

13) வாழ்வாதாரத்தைப் பறிக்கும் கலெக்டர் என்று
பதாகைகள் வைக்கப் பட்டன. லாரி ஓனர்களும்
ஓட்டுநர்களும் வேலைநிறுத்தம் செய்தனர்.
தூத்துக்குடி நகரம் பாதிப்பு அடைந்தது. எனவே
கலெக்டர் மீண்டும் ஆழ்துளைக் கிணறு மூலம்
அதிக ஆழம் தோண்டி நிலத்தடி நீர் எடுக்க
அனுமதித்து உத்தரவு பிறப்பித்தார்.

14) ஆக, ஸ்டெர்லைட்டின் பிரச்சினையை தன்
சம்பந்தப் பிரச்சினையாகக் கருதி முரட்டு
பக்தர் தீர்த்து வைத்தார். இதன் மூலம் முரட்டு
பக்தர் போராளி  என்ற பிம்பத்தையும் அடைந்தார்.

15) நுனிப்புல் மேயும்  குட்டி முதலாளித்துவ மூடர்கள்
முரட்டு பக்தரின் வேலைநிறுத்தப் போராட்டத்தை
புரட்சிகரச் செயல்பாடாகக் கருதுவது இயற்கை.
இதனால்தான் எல்லாவற்றையும் சந்தேகி என்கிறார்
காரல் மார்க்ஸ்.
***********************************************************      
 
        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக