திங்கள், 14 மே, 2018

VIP என்றால் வளையும் சட்டம்!
அன்று அழகிரி மகன் துரை தயாநிதி வளைத்தார்!
இன்று எஸ் வி சேகர் வளைக்கிறார்!
--------------------------------------------------------------------------------------
2012ல் தமிழ்நாட்டை உலுக்கிய கிரானைட் குவாரி
வழக்கை பலரும் மறந்தே விட்டார்கள். இந்த வழக்கில்
மு க அழகிரி மகன் துரை தயாநிதி மீது வழக்குப்
பதிவு செய்யப் பட்டு (257  அரசுக்கு நஷ்டம் என வழக்கு)
போலீசார் அவரைத் தேடிவந்தார்கள்.

துரை தயாநிதி உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில்
முன்ஜாமீன் தாக்கல் செய்தார். அவரின் முன்ஜாமீனை
உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இது நடந்த தேதி
செப்டம்பர் 25, 2012.

முன்ஜாமீன் நிராகரிக்கப் பட்டாலும் துரை தயாநிதி
சரண் அடையவில்லை. செப்டம்பர். அக்டோபர்,
நவம்பர் டிசம்பர் என்று நான்கு மாத காலம்
தலைமறைவாக இருந்தார்.

வேறு வழி இல்லாமல், நான்கு மாதம் போலீசுக்கு டிமிக்கி
கொடுத்த பிறகு, மேலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில்
டிசம்பர் 14 அன்று சரண் அடைந்தார்.

முன்ஜாமீன் மறுக்கப்பட்ட தேதி= 25 செப்டம்பர் 2012
சரண் அடைந்த தேதி = 14 டிசம்பர் 2012
போலீசுக்கு டிமிக்கி கொடுத்த காலம் = சுமார் 4 மாதம்.

துரை தயாநிதி சரண் அடையும்போது ஒரு பெரும்
வழக்கறிஞர் பட்டாளமும் கட்சித் தொண்டர்களும்
அஞ்சா நெஞ்சனுமே கோர்ட்டுக்கு வந்து இருந்தார்கள்.

தற்போது, துரை தயாநிதியின் சாதனையை முறியடிக்க
முயற்சி செய்து வருகிறார் எஸ் வி சேகர்.

கயவர்கள் துறை தயாநிதி, எஸ் வி சேகர் இருவருக்கும்
அன்று SHOOT AT SIGHT ஆர்டர் வாங்கி இருந்தால்
இப்படி ஆட்டம் போடுவார்களா?

வல்லான் வகுத்ததே வாய்க்கால்!
------------------------------------------------------------------------
ஆதாரங்களை இந்த லிங்க்கில் படியுங்கள்:  கோடி ரூபாய்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக