வெள்ளி, 11 மே, 2018

CBSE என்பது CBI அல்ல!
செல்போன் ஜாமர்கள், ப்ளூ டூத் பற்றிய
கேள்விகளுக்குப் பதில்!
---------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------
1) வீட்டில் எலித்தொல்லை இருந்தால் எலிப்பொறி
வைக்கிறோம். குறுகிய இடைவெளியுடன் கூடிய
மெல்லிய இரும்புக் கம்பிகளால் ஆன கூண்டுதான்
எலிப்பொறி. இதில் மாட்டிக்கொண்ட எலி தப்பித்து
வெளியே செல்ல முடியாது.

2) ஆனால் இந்த எலிப்பொறிக்குள் நுழைந்த கொசு
எளிதாக வெளியேறும். அதாவது எலிப்பொறியை
வைத்துக் கொண்டு கொசுவைப் பிடிக்க முடியாது.

3) இது போலத்தான், செல்போன் ஜாமர்களை வைத்துக்
கொண்டு ப்ளூ டூத் (Blue Tooth) frequencyஐ தடுக்க முடியாது.
இது எப்படி என்பதை எமது முந்தைய கட்டுரையில்
தெளிவு படுத்தி உள்ளோம்.

4) ப்ளூ டூத் கருவிகள் interference என்னும் குறுக்கீட்டு
விளைவுக்கு இலக்காகக் கூடியவை என்று ஒருவர்
பின்னூட்டத்தில் தெரிவித்து இருந்தார். இது ப்ளூ டூத்
கண்டுபிடிக்கப்பட்ட புதிதில் போன மில்லேனியத்தின்
பழமையான கருத்து.

5) R&D எனப்படும் Research and Development மூலமாக
எலக்ட்ரானிக்ஸ் துறையில் ஒவ்வொரு நாளும்
மாற்றமும் வளர்ச்சியும் நடந்து கொண்டு .
இருக்கின்றன. எனவே நமது அறிவைத் தொடர்ந்து
புதுப்பித்துக் கொண்டே இருந்தால்தான்
(constant updating of knowledge) எலக்ட்ரானிக்ஸ் துறையில்
நிகழும் மாற்றங்களை உள்வாங்கிக் கொள்ள
முடியும். புத்தகத்தில் என்றோ படித்ததை
இன்றைக்கும் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது.

6) 2.4 GHz (2.4 கிகா ஹெர்ட்ஸ்) என்னும் bandஐ ப்ளூ டூத்
பயன்படுத்துகிறது. இதில் குறிப்பாக, 2.4835 GHz என்னும்
frequencyயில் ப்ளூ டூத் வேலை செய்கிறது. இதே
2.4 GHz bandஐ  பல்வேறு வயர்லெஸ் கருவிகளும்
பயன்படுத்துகின்றன. இதனால் ஏற்படும்
குறுக்கீட்டு விளைவை (interference) தடுக்க, பல்வேறு
யுக்திகளைக் கையாள்கிறது ப்ளூ டூத்.

7) மொத்த bandஐயும் 80 சானல்களாகப் பிரித்து,
வினாடிக்கு ஆயிரக் கணக்கான முறை சானல்களை
மாற்றுகிறது ப்ளூ டூத். இதன் மூலம் interference
தடுக்கப் படுகிறது. நவீன ப்ளூ டூத் கருவிகளில்
Adaptive Frequency Hopping என்னும் யுக்தி செயல்படுகிறது.
இவற்றால் எல்லாம் interference தடுக்கப் படுகிறது.

8) எல்லாவிதமான frequencyகளையும் தடுக்க வல்ல
ஆற்றல் வாய்ந்த ஜாமர் கருவிகள் (jammers) இந்தியாவில்
உள்ளன. அவை பிரதமர் மற்றும் அதி உயர்
பாதுகாப்பு வளையத்தில் உள்ள VVIPகளின்
பாதுகாப்பில் மட்டுமே பயன்படுகின்றன.

9) CBI, IB போன்ற உளவு அமைப்புகளின் உயர்
அதிகாரிகள் அவர்களின் அலுவலகங்கள்
ஆகியவற்றிலும் ராணுவத்திலும்  மட்டுமே
இவை பயன்படுகின்றன. இவை விலை
அதிகமானவை.

10)  ராணுவமும் உளவு நிறுவனங்களும்
பயன்படுத்தும் விலை உயர்ந்த ஜாமர் கருவிகளை
CBSE வாங்க வேண்டும் என்ற அபத்தமான
ஆலோசனையை சிலர் முன்வைக்கின்றனர்.
அப்படி வாங்குவதன் மூலம் மாணவர்களுக்கான
கட்டுப்பாடுகளைத் தளர்த்தலாமே என்பது
அவர்களின் வாதம். இது ஏற்கத் தக்கதல்ல.
ஏனெனில் CBSE என்பது CBI அல்ல.

11) "கட்டுப்பாடுகள் வேண்டாம்; மாணவர்களை
சோதனையிடாமல் அனுமதியுங்கள். தேர்வின்போது
காப்பி அடித்தால் பிடியுங்கள்" என்பது வேறு சிலரின்
ஆலோசனை!

12) கற்பழிப்பு நடைபெறாமல் தடுப்பது சிறந்ததா
அல்லது கற்பழிக்கப் பட்ட பிறகு குற்றவாளியைப்
பிடித்துச் சிறையில் அடைப்பது சிறந்ததா?

13) Prevention is better than cure என்பதுதான் உலகம்
ஏற்றுக் கொண்டுள்ள கொள்கை! எனவே காப்பி
அடிக்க விடாமல் தடுப்பதுதான் சிறந்த வழியே
தவிர, காப்பி  அடித்த பிறகு பிடித்து போலீசில்
ஒப்படைப்பதல்ல.

14)  நீட் தேர்வில் காப்பி அடிப்பது என்பது தனியொரு
மாணவனால் மட்டும் செய்யக் கூடிய செயல் அல்ல.
அது பலரின் கூட்டு முயற்சி. நன்கு திட்டமிடப்பட்ட
திறமை மிக்க ஆனால் நேர்மையற்ற சிலர் சேர்ந்து
செய்யும் செயல். (concerted action).

15) அ) நீட் தேர்வின் கேள்விகளுக்கு சரியான பதில்
தெரிந்த திறமை மிக்க பேராசிரியர்கள்
ஆ) விலையுயர்ந்த நவீன கருவிகள் (மறைந்திருக்கும்
காமிரா,  ப்ளூ டூத், மைக்ரோ  ரிஸீவர்கள் இன்ன பிற)
இ) இவற்றைத் தலைமை ஏற்று நடத்தம்
தொழில்நுட்ப அறிவு மிக்கவர்கள்
ஈ) பணக்கார மாணவர்களை ஆசை காட்டி
இழுத்து வலையில் சிக்க வைக்கும் புரோக்கர்கள்
ஆகிய பலரின் கூட்டு முயற்சி இல்லாமல்
நீட் தேர்வில் காப்பி அடிக்க முடியாது.

16) இவளவு வலிமை வாய்ந்த ஏமாற்றுக் கும்பலை
முறியடிக்கவே மாணவர்களுக்குச் சில
கட்டுப்பாடுகளை CBSE விதிக்கிறது. கைவசமுள்ள
குறைந்த திறனுடைய கருவிகள் மற்றும்
கட்டுப்பாடுகள் இவற்றின் வாயிலாக நீட் தேர்வில்
காப்பி அடித்தல் முறியடிக்கப் பட்டுள்ளது.

17) இந்தப் பொருளில் இது மூன்றாவது மற்றும்
இறுதிக் கட்டுரை. எமது கட்டுரையின்
கருத்துக்களுக்கு எதிராக எவர் ஒருவராலும்
காத்திரமான ஒரு மறுப்பைக் கூடச் சொல்ல
இயலவில்லை. மாறாக, வசவுகளையும்
அநாகரிகமான வார்த்தைகளையுமே
அவர்களால் சொல்ல முடிந்துள்ளது.

18) சிந்தனைக் குள்ளர்கள் அறிவியலுக்கு எதிராகத்
தொடர்ந்து தாக்குதல் தொடுத்துக் கொண்டே
இருக்கிறார்கள். என்றாலும் ஒருபோதும் அவர்கள்
வெற்றி அடைவதில்லை.

உயர்ந்து நிற்கும் உருக்குப் போன்ற பாறை மீது
சதா அலைகள் வந்து மோதிக் கொண்டே
என்றாலும் அலைகள்தான் சிதறுகின்றனவே
தவிர பாறை சிதறுவதில்லை.
**********************************************************     
                     
        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக