அதிகாரிகள் சோதிக்கும்போது தேர்வு அறையில்
இல்லாத செல்போன் போன்ற எலக்ட்ரானிக் கருவிகள்
பின்னர் அந்த அறையில் வந்தது எப்படி?
ப்ளூ டூத் பற்றி மேலும் விவரங்கள்!
--------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------------------
பல கோடி ரூபாய் முறையற்ற வழியில் ஆதாயம்
தரும் திட்டமே AIPMT தேர்வில் காப்பி அடிக்கும்
ப்ராஜக்ட். 2015ல் நாடு முழுதும் பல்வேறு இடங்களில்
இந்த காப்பி அடித்தல் நடைபெற்றது.
ப்ளூ டூத்தையும் சிம் கார்டையும் தங்களின் சட்டையில்
மறைத்து வைத்துத் தைத்து இருந்தார்கள் மாணவர்கள்
என்று எழுதியது இந்துஸ்தான் டைம்ஸ் ஏடு.
(பார்க்க:ஜூன் 17, 2015)
Students appearing for AIPMT exam had Bluetooth devices and SIM cards stitched into
கொடுத்தனர் என்று உண்மைகளை அம்பலப்
படுத்தின ஏடுகள்.
அதிர்ந்து போனது உச்சநீதி மன்றம். 2015 AIPMT தேர்வை
ரத்து செய்தது உச்சநீதி மன்றம்.
AIPMT தேர்வில் மட்டுமல்ல, அலிகார் முஸ்லீம்
பல்கலைக் கழகம் நடத்திய MBBS படிப்பிற்கான
நுழைவுத் தேர்விலும் முறைகேடுகள் பற்றிய
புகார் வந்ததைத் தொடர்ந்து, விசாரணைக் கமிஷன்
அமைத்தது அலிகார் முஸ்லீம் பல்கலை.
சர்வ சாதாரணமாக ரூ 20 லட்சம் செலவிடக் கூடிய
கொழுத்த பணக்கார மாணவர்களும் அவர்களின்
பெற்றோர்களும், நவீன தொழில்நுட்ப உத்திகளை
பயன்படுத்தி ஏழை மாணவர்களின் மருத்துவ இடங்களை
அபகரித்துக் கொண்டு இருந்தனர். இதற்கு
உச்சநீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்தது.
புதிய தலைமுறை டிவியின் அதிபர் பாரிவேந்தர் என்ற
பச்சமுத்து ஏன் சிறையில் அடைக்கப் பட்டார் என்று
வாசகர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.
ரூ 75 கோடியை நீதிமன்றத்தில் செலுத்திய பிறகுதான்
அவருக்கு ஜாமீன் கிடைத்தது என்பதையும்
நினைத்துப் பார்க்க வேண்டும்.
யார் இந்த மதன்? அவன் ஏன் தலைமறைவு ஆனான்?
போலீஸ் அவனை எப்படிப் பிடித்தது? பச்சமுத்துவின்
வசூல் ஏஜண்டுதானே மதன்!
SRM பல்கலையின் மருத்துவ இடங்களுக்குப் பெற்ற
தொகைதானே ரூ 75 கோடி. பணம் கொடுத்தவர்களின்
பிள்ளைகளில் ஒருவன் கூட நீட் தேர்வில் பாஸ்
பண்ணவில்லை. எனவே பணம் கொடுத்த பெற்றோர்கள்
பணத்தைத் திருப்பிக் கேட்டதும், பச்சமுத்து கொடுக்க
மறுத்ததும், அதன் விளைவாகவே பச்சமுத்து கம்பி
எண்ணியதும் உண்மையா இல்லையா?
இந்தக் கயவர்களுக்கு வக்காலத்து வாங்கும்
இழிந்த கும்பல்தானே மாணவர்களுக்கான
கட்டுப்பாடுகளை ஊதிப் பெருக்கி, சுயநிதிக்
கல்விக் கொள்ளையன் பச்சமுத்துவுக்கு எடுபிடி
வேலை செய்கிறது!
இரண்டு கருவிகளுக்கு இடையில் தொடர்பு ஏற்படுத்தி
ஒன்றில் இருந்து மற்றொன்றுக்கு செய்தி அனுப்பும்
கருவியே ப்ளூ டூத். இதை ஒவ்வொரு கட்டுரையிலும்
சொல்லி இருக்கிறோம். வேறு கருவிகளைப்
பயன்படுத்தாமல், வெறுமனே ப்ளூ டூத்தை மட்டும்
வைத்துக் கொண்டு காப்பி அடிப்பதாகப் புரிந்து
கொண்டால், அத்தகைய மூளை வளர்ச்சி
குன்றியவர்களை யாராலும் குணப்படுத்த இயலாது.
3G, 4G என்று மொபைல் போனில் தலைமுறை
வளர்ச்சி இருப்பதை நாம் அறிவோம். அது போலவே
ப்ளூ டூத் கருவியிலும் தலைமுறை வளர்ச்சி உள்ளது.
ப்ளூ டூத்தில் தலைமுறை என்ற சொல்லைப்
பயன்படுத்துவது இல்லை. அதற்குப் பதிலாக
VERSION என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம்.
தற்போது ப்ளூ டூத்தின் லேட்டஸ்ட் வெர்சன் 5.0 ஆகும்.
இது முந்தைய வெர்சன்களான 4.0, 4.1, 4.2 ஆகியவற்றை
விட பன்மடங்கு திறன் வாய்ந்தது. இக்கட்டுரையுடன்
உள்ள படத்தில் வெர்சன் 5.0ன் சிறப்புகள் கொடுக்கப்
பட்டுள்ளன. 400 அடி ரேஞ்சு என்பதெல்லாம் இந்த
வெர்சன் 5.0ல் சர்வ சாதாரணம்.
இந்த நேரத்தில் ப்ளூ டூத்-ஐ கண்டுபிடித்த நெதர்லாந்து
மின்பொறியாளர் ஜாப் ஹார்ட்சன் (Jaap Haartsen) அவர்களை
நன்றியுடன் நினைவு கூர வேண்டியது நம் கடமையாகும்.
காப்பி அடித்தல் என்பது இன்றைய காலக்கட்டத்தில்
நம்ப முடியாத அளவுக்கு நவீன மயம் ஆகி விட்டது.
விடைகளை பொடி எழுத்தில் துண்டுக் காகிதத்தில்
எழுதி சட்டைப் பையில் மறைத்து வைத்துக்கொண்டு
பிட் அடிப்பதெல்லாம் மலையேறி விட்டது.
ஒரு திறமை வாய்ந்த கிரிமினல் கும்பல், நவீனக்
கருவிகளைக் கொண்டு, பலரோடு கூட்டுச் சேர்ந்து
நடத்தும் ஒரு CONCERTED ACTIONதான் இன்றைய
காப்பி அடித்தல். இது பலகோடி ரூபாய் ப்ராஜக்ட்.
காப்பி அடிக்கும் கிரிமினல்கள் தங்களுக்கு வசதியான
ஊர்களில், வசதியான சென்டர்களைத் தேர்ந்து
எடுப்பார்கள். மாணவர்கள் அந்த சென்டரையே
தெரிவு செய்ய வேண்டும். தேர்வு அறைகளை
CBSE அதிகாரிகள் பரிசோதிக்கும்போது அங்கு
எந்த எலக்ட்ரானிக் கருவியும் இருக்காது.
பரிசோதனை முடித்து அதிகாரிகள் வெளியேறிய
பின்னர் செல்போன் உட்பட தேவையான எல்லா
எலக்ட்ரானிக் கருவிகளும் டெஸ்கில் மறைத்து
வைக்கப் படும். இதற்கு உதவி செய்யும் பியூன்கள்
அட்டெண்டர்கள், பிற ஊழியர்களுக்கு உரிய
ஊதியத்தை கிரிமினல் கும்பல் வழங்கி விடும்.
இவையெல்லாம் நடந்த நிகழ்வுகள். செய்தித்தாள்
குறிப்பாக ஆங்கிலச் செய்தித்தாள் படிப்பவர்கள்
இந்த உண்மையை அறிவார்கள்.
இவ்வாறு காப்பி அடிக்கும் கும்பலை நேரடியாகவோ
மறைமுகவோ ஆதரிப்பது கொடிய கிரிமினல்
குற்றமாகும்.
=======================================================
கட்டுரைத் தொடர் முற்றும்.
**********************************************************
இல்லாத செல்போன் போன்ற எலக்ட்ரானிக் கருவிகள்
பின்னர் அந்த அறையில் வந்தது எப்படி?
ப்ளூ டூத் பற்றி மேலும் விவரங்கள்!
--------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------------------
பல கோடி ரூபாய் முறையற்ற வழியில் ஆதாயம்
தரும் திட்டமே AIPMT தேர்வில் காப்பி அடிக்கும்
ப்ராஜக்ட். 2015ல் நாடு முழுதும் பல்வேறு இடங்களில்
இந்த காப்பி அடித்தல் நடைபெற்றது.
ப்ளூ டூத்தையும் சிம் கார்டையும் தங்களின் சட்டையில்
மறைத்து வைத்துத் தைத்து இருந்தார்கள் மாணவர்கள்
என்று எழுதியது இந்துஸ்தான் டைம்ஸ் ஏடு.
(பார்க்க:ஜூன் 17, 2015)
Students appearing for AIPMT exam had Bluetooth devices and SIM cards stitched into
their shirts. They sat in the exams while someone else, in a distant corner of the country,
recited answers to the candidates who paid as much as Rs 15-20 lakh each.
இந்த முறைகேட்டுக்கு ஒவ்வொரு மாணவரும்
ரூ 15 லட்சம் முதல் ரூ 20 லட்சம் வரை பணம்கொடுத்தனர் என்று உண்மைகளை அம்பலப்
படுத்தின ஏடுகள்.
தேசிய அளவில் நடைபெற்ற தேர்வுகளில் இது
12ஆவது முறைகேடு என்று தெரிய வந்ததும்அதிர்ந்து போனது உச்சநீதி மன்றம். 2015 AIPMT தேர்வை
ரத்து செய்தது உச்சநீதி மன்றம்.
The Supreme Court on Monday cancelled this year's All India Pre Medical and
savvy students. This was the 12th such national level exam which was marred by
allegations of cheating and paper leak in as many months.
(பார்க்க: Hindusthan Times ஆங்கில ஏடு ஜூன் 17, 2015.)
பல்கலைக் கழகம் நடத்திய MBBS படிப்பிற்கான
நுழைவுத் தேர்விலும் முறைகேடுகள் பற்றிய
புகார் வந்ததைத் தொடர்ந்து, விசாரணைக் கமிஷன்
அமைத்தது அலிகார் முஸ்லீம் பல்கலை.
சர்வ சாதாரணமாக ரூ 20 லட்சம் செலவிடக் கூடிய
கொழுத்த பணக்கார மாணவர்களும் அவர்களின்
பெற்றோர்களும், நவீன தொழில்நுட்ப உத்திகளை
பயன்படுத்தி ஏழை மாணவர்களின் மருத்துவ இடங்களை
அபகரித்துக் கொண்டு இருந்தனர். இதற்கு
உச்சநீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்தது.
புதிய தலைமுறை டிவியின் அதிபர் பாரிவேந்தர் என்ற
பச்சமுத்து ஏன் சிறையில் அடைக்கப் பட்டார் என்று
வாசகர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.
ரூ 75 கோடியை நீதிமன்றத்தில் செலுத்திய பிறகுதான்
அவருக்கு ஜாமீன் கிடைத்தது என்பதையும்
நினைத்துப் பார்க்க வேண்டும்.
யார் இந்த மதன்? அவன் ஏன் தலைமறைவு ஆனான்?
போலீஸ் அவனை எப்படிப் பிடித்தது? பச்சமுத்துவின்
வசூல் ஏஜண்டுதானே மதன்!
SRM பல்கலையின் மருத்துவ இடங்களுக்குப் பெற்ற
தொகைதானே ரூ 75 கோடி. பணம் கொடுத்தவர்களின்
பிள்ளைகளில் ஒருவன் கூட நீட் தேர்வில் பாஸ்
பண்ணவில்லை. எனவே பணம் கொடுத்த பெற்றோர்கள்
பணத்தைத் திருப்பிக் கேட்டதும், பச்சமுத்து கொடுக்க
மறுத்ததும், அதன் விளைவாகவே பச்சமுத்து கம்பி
எண்ணியதும் உண்மையா இல்லையா?
இந்தக் கயவர்களுக்கு வக்காலத்து வாங்கும்
இழிந்த கும்பல்தானே மாணவர்களுக்கான
கட்டுப்பாடுகளை ஊதிப் பெருக்கி, சுயநிதிக்
கல்விக் கொள்ளையன் பச்சமுத்துவுக்கு எடுபிடி
வேலை செய்கிறது!
இரண்டு கருவிகளுக்கு இடையில் தொடர்பு ஏற்படுத்தி
ஒன்றில் இருந்து மற்றொன்றுக்கு செய்தி அனுப்பும்
கருவியே ப்ளூ டூத். இதை ஒவ்வொரு கட்டுரையிலும்
சொல்லி இருக்கிறோம். வேறு கருவிகளைப்
பயன்படுத்தாமல், வெறுமனே ப்ளூ டூத்தை மட்டும்
வைத்துக் கொண்டு காப்பி அடிப்பதாகப் புரிந்து
கொண்டால், அத்தகைய மூளை வளர்ச்சி
குன்றியவர்களை யாராலும் குணப்படுத்த இயலாது.
3G, 4G என்று மொபைல் போனில் தலைமுறை
வளர்ச்சி இருப்பதை நாம் அறிவோம். அது போலவே
ப்ளூ டூத் கருவியிலும் தலைமுறை வளர்ச்சி உள்ளது.
ப்ளூ டூத்தில் தலைமுறை என்ற சொல்லைப்
பயன்படுத்துவது இல்லை. அதற்குப் பதிலாக
VERSION என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம்.
தற்போது ப்ளூ டூத்தின் லேட்டஸ்ட் வெர்சன் 5.0 ஆகும்.
இது முந்தைய வெர்சன்களான 4.0, 4.1, 4.2 ஆகியவற்றை
விட பன்மடங்கு திறன் வாய்ந்தது. இக்கட்டுரையுடன்
உள்ள படத்தில் வெர்சன் 5.0ன் சிறப்புகள் கொடுக்கப்
பட்டுள்ளன. 400 அடி ரேஞ்சு என்பதெல்லாம் இந்த
வெர்சன் 5.0ல் சர்வ சாதாரணம்.
இந்த நேரத்தில் ப்ளூ டூத்-ஐ கண்டுபிடித்த நெதர்லாந்து
மின்பொறியாளர் ஜாப் ஹார்ட்சன் (Jaap Haartsen) அவர்களை
நன்றியுடன் நினைவு கூர வேண்டியது நம் கடமையாகும்.
காப்பி அடித்தல் என்பது இன்றைய காலக்கட்டத்தில்
நம்ப முடியாத அளவுக்கு நவீன மயம் ஆகி விட்டது.
விடைகளை பொடி எழுத்தில் துண்டுக் காகிதத்தில்
எழுதி சட்டைப் பையில் மறைத்து வைத்துக்கொண்டு
பிட் அடிப்பதெல்லாம் மலையேறி விட்டது.
ஒரு திறமை வாய்ந்த கிரிமினல் கும்பல், நவீனக்
கருவிகளைக் கொண்டு, பலரோடு கூட்டுச் சேர்ந்து
நடத்தும் ஒரு CONCERTED ACTIONதான் இன்றைய
காப்பி அடித்தல். இது பலகோடி ரூபாய் ப்ராஜக்ட்.
காப்பி அடிக்கும் கிரிமினல்கள் தங்களுக்கு வசதியான
ஊர்களில், வசதியான சென்டர்களைத் தேர்ந்து
எடுப்பார்கள். மாணவர்கள் அந்த சென்டரையே
தெரிவு செய்ய வேண்டும். தேர்வு அறைகளை
CBSE அதிகாரிகள் பரிசோதிக்கும்போது அங்கு
எந்த எலக்ட்ரானிக் கருவியும் இருக்காது.
பரிசோதனை முடித்து அதிகாரிகள் வெளியேறிய
பின்னர் செல்போன் உட்பட தேவையான எல்லா
எலக்ட்ரானிக் கருவிகளும் டெஸ்கில் மறைத்து
வைக்கப் படும். இதற்கு உதவி செய்யும் பியூன்கள்
அட்டெண்டர்கள், பிற ஊழியர்களுக்கு உரிய
ஊதியத்தை கிரிமினல் கும்பல் வழங்கி விடும்.
இவையெல்லாம் நடந்த நிகழ்வுகள். செய்தித்தாள்
குறிப்பாக ஆங்கிலச் செய்தித்தாள் படிப்பவர்கள்
இந்த உண்மையை அறிவார்கள்.
இவ்வாறு காப்பி அடிக்கும் கும்பலை நேரடியாகவோ
மறைமுகவோ ஆதரிப்பது கொடிய கிரிமினல்
குற்றமாகும்.
=======================================================
கட்டுரைத் தொடர் முற்றும்.
**********************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக