திங்கள், 30 நவம்பர், 2020

மூலவினையும் எதிர்வினையும்!

உழைப்பை அவமதித்தால் உழைப்பாளி கொந்தளிப்பான்!

-----------------------------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

---------------------------------------------------------------------------------

 1) திரு பிரதீப் ஜானின் வானிலைக் கணிப்புகளை 

நான் படிப்பதில்லை. தமிழ்நாட்டின் பிரபல நக்சலைட்

தலைவர் மருதையன் தமது "இடைவெளி" இணைய 

தளத்தில் அதை  வெளியிட்டார். அதனால் அதைப்  

படிக்க நேர்ந்தது.  


2) தமது வானிலைக் கணிப்புகளைப் பரப்புவதற்கு 

நக்சலைட் தலைவர் மருதையனைப் பயன்படுத்தியது  

எனக்கு வியப்பைத் தருகிறது.


3) திரு ஜானின் நிவர் புயல் பற்றிய கணிப்பைப் படித்த 

எங்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அதில் பொய்யான 

அருவருக்கத்தக்க அவதூறுகளை IMD மீது  

(Indian Meteorological Dept) வீசி இருந்தார் ஜான். குறிப்பாக 

சென்னை கல்லூரிச் சாலையில் இருக்கும் வானிலை ஆய்வு  

மையத்தின் இயக்குனர் டாக்டர் பாலச்சந்திரன் M.Sc Ph.D 

அவர்களும் அவரின் தலைமையில் ஒரு பெரிய குழுவும் 

புயல்  எங்கு கரையைக் கடக்கும் என்று தெளிவாகக் 

கணித்து இருந்தது. (புதுச்சேரி-மரக்காணம்) 


4) வானிலை அதிகாரிகளுக்கு சொந்த மூளை கிடையாது 

என்ற தொனியில் அமெரிக்க ஆய்வு மையம் என்ன

சொன்னதோ அதையே டாக்டர் பாலச்சந்திரன் குழுவும் 

கூறியதாக மிகவும் அருவருக்கத்தக்க  அவதூறை எழுதி 

IMD குழுவினரின் உழைப்பை அவமதித்தார் திரு ஜான்.


5) நாற்காலியில் உற்கார்ந்து வேலை செய்து கொண்டிருக்கும் 

ஒருவனின் முகத்தில், சாணியை வீசியது போன்று பிரதீப் 

ஜான் செயல்பட்டார். முதல் அடியை அவர் அடித்துவிட்டார்.

கத்தியை எடுத்து முதல் குத்தை அவர் குத்தி விட்டார்.

அதாவது மூலவினைக்குச் சொந்தக்காரராராக திரு 

ஜான் ஆகி விட்டார்.


6) இனி எதிர்வினைகள் வரும் அல்லவா? IMDயில் வேலை 

பார்ப்பவர்கள் என்ன சமணத்  துறவிகளா? காற்றழுத்தத் 

தாழ்வுமண்டலம் உருவானது முதல் புயல் கரையைக் கடக்கும் 

வரை, பசி தூக்கத்தை மறந்து, வீட்டுக்குச் செல்லாமல் 

அலுவலகத்திலேயே  தங்கி உழைத்தவர்களை, அவர்களின் 

உழைப்பை, ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு திரு 

ஜான் இழிவு படுத்துவார் என்றால் அதை IMD ஊழியர்கள் 

சகித்துக் கொண்டு இருப்பார்களா?


7) IMD என்பது நிறைய ஊழியர்களைக் கொண்ட ஒரு 

பெருங்கூட்டம். ஒற்றைத் தனிநபரான  ஜான், ஒரு பெருங் 

கூட்டத்தைப் பகைப்பது அறிவுடைமை ஆகுமா? பக்குவம் 

உடையோர் செய்யும் செயலா இது? புயல் சென்னையில் 

கரையைக் கடக்கும் என்ற ஜானின் கணிப்பும், நிவர் 

புயலானது கஜா புயலை விடக் கடுமையானது என்ற  

அவரின் கணிப்பும் பொய்த்துப் போயின. ஆனால் 

மக்களைப் பீதியில் ஆழ்த்தி விட்டன. பேரிடர் மேலாண்மைச் 

சட்டங்கள் மக்களைப் பீதியில் ஆழ்த்தும் இத்தகைய 

செய்திகள் மீது மிகவும் கடுமை காட்டுகின்றன.

    

8) உழைப்பை அவமதிப்பதை எந்த உழைப்பாளியும் 

பொறுத்துக் கொள்ள மாட்டான். அவன் கோபத்தில் 

கொந்தளிப்பான். அது இயல்பே. திரு ஜானின் தவறைச் சுட்டிக் காட்டியதற்காக எனக்கு இதுவரை எட்டு 

கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. அமெரிக்கக் 

கணிப்பைத்தான் டாக்டர் பாலகிருஷ்ணன் காப்பி 

அடிக்கிறார் என்ற அவதூறுக்கு திரு ஜான் என்ன 

பதில் சொல்கிறார்?


9) திரு ஜான் எனது எதிரி அல்ல. எனக்கும் அவருக்கும் 

வயல் தகராறோ வாய்க்கால் தகராறோ கிடையாது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளைஞர் ஜானுக்கும் 

அதே வகுப்பைச் சேர்ந்த வயதில் மூத்த எனக்கும் என்ன 

பகைமை இருக்க முடியும்? என்னுடைய நெருக்கமான 

உறவினர்களில் பலர் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர்களே. 


10) IMDயைப் பகைத்துக் கொண்டு திரு ஜான் முன்னேற 

இயலாது. மாறாக ஜானின் பங்களிப்பானது IMDயின் 

பங்களிப்புக்கு complimentary ஆக இருக்க வேண்டும்; 

contradictoryயாக இருக்கக் கூடாது.

இதையே திரு ஜானின் பரிசீலனைக்கு முன்வைக்கிறேன்.

*************************************************************         

பின்குறிப்பு 

1) இக்கட்டுரை ஆசிரியர் நுங்கம்பாக்கம் வானிலை 

ஆய்வு மையத்தில் ஆறு ஆண்டுகள் பணியாற்றியவர்.

(IMD ஊழியராக அல்ல; மத்திய அரசு சார்பாக)

------------------------------------------------------------------------------------


   

 

சனி, 28 நவம்பர், 2020

போலி வெதர்மேன் பிரதீப் ஜானையும்

இவரை ஆதரிக்கும் மகஇக மருதையனையும் 

எடப்பாடி அரசே குண்டர் சட்டத்தில் கைது செய்!

-------------------------------------------------------------------------- 

நியூட்டன் அறிவியல் மன்றம் 

--------------------------------------------------------------------------  

தமிழ்நாட்டில் தடுக்கி விழுந்தால் வெதர்மேன்கள் 

மீதுதான் விழ வேண்டும். அந்த அளவுக்கு இங்கு 

தனியார் வானிலைக் கணிப்பாளர்கள் என்னும்

பெயரில் நிறையப் போலிகள் திரிகின்றனர்.


வானிலையைக் கணிப்பது IMD எனப்படும் 

Indian Meteorological Departmentன் வேலை.

அதற்கென்றே உருவாக்கப்பட்டது அது.

மத்திய அரசின் Earth Science துறையின் கீழ் 

வருகிறது அது.


தமிழ்நாடு முழுவதும் IMDக்கு நிறைய 

கூர்நோக்கு நிலையங்கள் (observatories) உள்ளன.

பெரும் பொருட்செலவில் கருவிகள் வாங்கப்பட்டு 

இயக்கப் படுகின்றன. தமிழகமெங்கும் இருந்து 

IMDக்கு தரவுகள் கிடைக்கின்றன.


வானிலை முன்னறிவிப்புக்கு பெரும் 

பொருட்செலவிலான அகக்கட்டுமானம் 

(infrastructure) வேண்டும்.இதெல்லாம் 

அரசால் மட்டுமே சாத்தியம். எந்த ஒரு 

தனிநபராலும் தேவையான infrastructureல் 

ஒரு சதவீதம் கூட சொந்தமாக வைத்துக்       

கொள்ள இயலாது.


போதிய கல்வித் தகுதியுடன் உரிய பயிற்சி பெற்று 

வானிலை முன்கணிப்பில் சிறப்பான தேர்ச்சி 

உடையவர்களே வானிலையைக் கணிக்கின்றனர்.


சென்னை கல்லூரிச் சாலையில் உள்ள Regional 

Meteorological Centre தமிழகம் உள்ளிட்ட தென் 

பிராந்தியப் பகுதிகளுக்கான வானிலை 

முன்னறிவிப்பு மையம் ஆகும்.


தற்போது வானிலை முன்னறிவிப்பு இயக்குனராக 

டாக்டர் பாலச்சந்திரன் M.Sc Ph.D அவர்கள் 

பணியாற்றி வருகிறார். 

இதற்கு முன்பு இயக்குனராக இருந்த 

டாக்டர் ரமணன் M.Sc Ph.D 

அவர்களையும் தமிழ்நாடு நன்கறியும்.


வானிலை ஆய்வு மையத்தில், வானிலைக் 

கணிப்புப் பகுதியில், அப்சர்வர் (observer) 

என்பதே தொடக்கநிலை கேடர் ஆகும். இந்த 

வேலைக்கு வருவதற்கு ஒருவர் B.Sc Physics

படித்திருக்க வேண்டும். பெரும்பாலும் 

M.Sc Physics படித்தவர்களுக்கே  இந்த வேலை

கிடைக்கிறது.


தொடர்ந்து Scientific Asst, Scientific Officer, 

Asst Meteorologist, Meteorologist என்று 

அடுத்தடுத்த கேடர்கள் உள்ளன. இதில் 

எந்தப் பதவிக்குப் போக வேண்டும் 

என்றாலும் Physics படித்திருக்க வேண்டும்.


தற்போது தனியார் வெதர்மேன்களின் 

(வானிலைக் கணிப்பாளர்களின்) கல்வித் 

தகுதியை முதலில் பார்க்கலாம்.


தனியார் வெதர்மேன்களின் சராசரிக் 

கல்வித் தகுதி SSLC Fail என்பதாக இருக்கிறது.

PUC பெயிலாகிப் போனவர்களும் கணிசமாக 

இருக்கிறார்கள். ஒன்றிரண்டு பேர் தமிழ்ப் 

பண்டிட் கோர்ஸ் படித்தவர்கள். சிலர்  

B.Com படித்து discontinue பண்ணியவர்கள்.

   


1960களில் தமிழ்நாட்டில் இப்படி ஒரு 

நிலைமை இருந்தது. SSLC பாஸ் 

பண்ணியவன் கல்லூரியில் சேருவான். 

பெயிலாப் போனவன் MBBS என்று போர்டு 

போட்டுக் கொண்டு போலி டாக்டர் 

ஆகி விடுவான்.


60 ஆண்டுகள் கழித்து, இதே நிலைமை 

மீண்டும் வந்து விட்டது. இந்த முறை போலி 

டாக்டருக்குப் பதில், போலி வானிலை 

ஆய்வாளர்.


போலி வானிலை ஆய்வாளர்களுக்கு 

காட்சி ஊடகங்களில் பெருத்த வரவேற்பு.

இனம் இனத்தோடு சேரும் என்பதைப் போல,

ஊடகங்களில் இருக்கும் மூதேவி யார்? 

அவன் SSLC பெயிலாகிப் 

போன மூதேவிதானே! அவனுக்கு தன்னைப் 

போலவே SSLC பெயிலான மூதேவி  

மீது அபிமானம். இந்தத் தற்குறிகள் 

ஊடகங்களின் வாயிலாகத் தங்களின் 

அறியாமையை வெளிப்படுத்துவார்கள்.


இந்தியா ஒரு அறிவியல் தற்குறி தேசம்.

(scientifically illiterate nation). இங்கு தற்குறிகளே 

கோலோச்சுவார்கள்.


டாக்டர் கே வி பாலசுப்பிரமணியன் M.Sc Ph.D 

வானிலை விஞ்ஞானியாகப் பணியாற்றி 

ஒய்வு பெற்றவர் அவர் முகநூலில் வானிலை 

முன்கணிப்புகளை எழுதி வருகிறார்.அவரை 

எந்த டிவியாவது கூப்பிட்டு வானிலை 

விவாதங்களில்பங்கேற்க வைத்ததா?

கிடையாது.இயற்பியலில் PhD என்றவுடனே 

ஊடகத் தற்குறிக்கு குஷ்டரோகம் வந்து 

விடுமே!. 


போலி வானிலை ஆய்வாளர்களை ஊடகங்கள் 

புரமோட் பண்ணுவது இயல்பே. ஆனால் 

எதிர்பாராதவிதமாக தோழர் மருதையன் 

போலி வெதர்மேன்களை ஆதரித்தும் 

அவர்களை புரமோட் செய்தும் ஆச்சரியத்தை 

ஏற்படுத்துகிறார்.


தோழர் மருதையன் முன்னாள் நக்சல்பாரி 

ஆவார். மகஇக என்னும் அமைப்பில் 

உலகம் அழியும்வரை தலைமைப் பொறுப்பில் 

இருந்தவர் அவர். தற்போது கட்சியை விட்டு

விலகி இருந்தாலும், கட்சியின் மீது 

அவரின் பிடி தளரவில்லை. கட்சியின் de facto

தலைமையாக அவர்தான் இருந்து வருகிறார்.


இவர் தமிழ்நாடு வெதர்மேன் என்னும் போலி 

வானிலைக் கணிப்பாளரை நோபல் பரிசுக்குத் 

தகுதியானவர் என்ற லெவலில் புகழ்ந்து 

பாமரத்தனமான கட்டுரை ஒன்றை எழுதி 

இருக்கிறார். (பார்க்க: இடைவெளி இணையதளம்,

நிவர் புயல்; நமக்கு இவனோடும் சண்டை, 

இயற்கையோடும் சண்டை, தேதி நவம்பர் 25, 2020).


ஆளுமை குன்றியவர்களே மேற்படி கட்டுரையை 

எழுத முடியும். இக்கட்டுரையானது சகல 

பிம்பத் திரைகளையும் கிழித்து 

மருதையனின் ஆளுமையை நிர்வாணப் 

படுத்தி விடுகிறது.


இவரையா மகத்தான ஆளுமை என்றும் 

பெரிய மார்க்சிய அறிஞர் என்றும் 

நினைத்தோம் என்று இக்கட்டுரையைப் 

படிப்பவர்களை வெட்கமுறச் செய்து 

விடுகிறார் மருதையன்.   


இந்தியக் குடிமக்கள் அனைவருமே 

அறிவியலைக் கற்று, அறிவியல் மனப்பான்மையுடன் 

திகழ வேண்டும் என்கிறது இந்திய அரசமைப்புச் 

சட்டத்தின் பிரிவு 51 (A) h. இதற்காகவே நியூட்டன் அறிவியல் 

மன்றம் பாடுபட்டு வருகிறது. எனவே வானிலை 

குறித்த அறிவியலை அனைவரும் கற்பதை நாம் 

வரவேற்கவே செய்கிறோம்.


ஆனால் எதையும் கற்காமல், மழைக்காலக் காளான்கள்

போல. வானிலைக் கணிப்பாளர் என்று போலிகள் 

பலரும் தோன்றுவது அறிவியலுக்கு எதிரானது.


தனியார் வெதர்மேன்கள் IMDக்கு (Indian Meteorological Dept)  

எதிராகச் செயல்படுவதும் IMD மீது அவதூறு பரப்புவதும் 

கயமைத் தனமாகும் தண்டனைக்கு உரிய குற்றமாகும்.


தமிஸ்நாடு வெதர்மேன் என்ற பெயரில் இணையதளத்தில் 

இயங்கும் பிரதீப் ஜான் என்பவர் முற்றிலும் தீய 

நோக்கத்துடன் (with malafide intention) வானிலை இயக்குனர் 

டாக்டர் பாலச்சந்திரன் M.Sc Ph.D மீது அவதூறு மொழிகிறார்.


நிவர் புயல் எங்கு கரையைக் கடக்கும் என்று IMDயின்சார்பாக

Regional Meteorological Centre, Chennaiயின் வானிலை இயக்குனர் 

கணித்துள்ளார். அதன்படி, புதுச்சேரி-மரக்காணம் இடையே 

புயல் கரையைக் கடக்கும் என்று IMD சென்னை கணித்துள்ளது

இதோ மருதையன் எழுதுகிறார்:

ஆனால் பிரதீப் ஜான் (தமிழ்நாடு வெதர்மேன்) கருத்து மாறுபட்டு கீழ்க்கண்டவாறு கூறுகிறார். https://www.facebook.com/tamilnaduweatherman

“அமெரிக்க, ஜெர்மன், பிரிட்டிஷ் வானிலை ஆய்வு மையங்கள் மகாபலிபுரத்துக்கு அருகே கடக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றன. அமெரிக்க, கனடிய ஆய்வு மையங்கள் காரைக்கால் – பரங்கிப்பேட்டைக்கு அருகே கடக்க கூடும் என்று கூறுகின்றன. நாம்தான் அமெரிக்கா என்ன சொன்னாலும் கேட்போமே, அதனால் இந்திய வானிலை ஆய்வு மையம், டெல்டாவில் கரையைக் கடக்கும் என்று கணிக்கிறது.”

புதுச்சேரி-மரக்காணம் இடையே கரையைக் 

கடக்கும் என்ற டாக்டர் பாலச்சந்திரனின் கணிப்பு 

அவரும் அவரது குழுவினரும் அறிவியல் ரீதியாக 

வந்தடைந்த முடிவு.  ஆனால் புழுவினும் இழிந்த 

பிரதீப் ஜான், அமெரிக்கா சொன்னதால்தான் 

IMD சென்னை அப்படிக் கணிக்கிறது என்று அவதூறு 

சொல்கிறான்.


இவனையெல்லாம் மலத்தைக் கரைத்து ஊற்றி 

அடிக்க வேண்டாமா?  புழுவினும் இழிந்த பிரதீப் 

ஜானுக்கு அமெரிக்க சிஐஏ உளவு நிறுவனத்துடன் 

தொடர்பு இருக்க நிறையவே வாய்ப்பு உண்டு. 

ஆனால் டாக்டர் பாலச்சந்திரனும் அவரின் குழுவுக்கும் 

அமெரிக்காவின் கணிப்புக்கும் என்ன சம்பபந்தம்?

அவர்கள் தங்களின் சொந்த மூளையில் கண்டுபிடித்ததை 

அமெரிக்கா கூறியது என்று சொன்ன இந்தத் 

தேவடியாப் பயல் பிரதீப் ஜானை என்ன செய்யலாம்?


இதை எடுத்துப் போடுகிறானே, இந்த சவுண்டிப் பயல் 

மருதையன்? இவனை எதனால் அடிப்பது?


பிரதீப் ஜானின் அத்தனை கணிப்புகளும் தவறாகப் 

போய்விட்டன? இப்போது மருதையன்  எங்கே போய் 

ஒளிந்து கொண்டான்?

 1) எனவே சிறிய மாற்றங்கள் ஏற்பட்டால் கூட 

புயல் சென்னையில்  கரையைக் கடக்கும் 

அபாயம் உண்டு என்றும் எச்சரிக்கிறார்.  

2) நிவர் புயல் கஜா புயலை விட கடுமையானதாக 

இருக்கவே வாய்ப்புள்ளது என்பது அவரது கணிப்பு..   

  

இந்தக் கணிப்பு ஏதாவது உண்மை ஆனதா? ஒரு மயிரும் 

இல்லை!


புயல் சென்னையில் கரையைக் கடக்கும் என்று 

பிரதீப் ஜான் சொல்வது மிகுந்த கயமைத்தனம் அல்லவா?

சென்னைவாழ் 50 லட்சம் மக்களையும் பதற்றத்தின் 

விளிம்பில் தள்ளுவது மட்டும்தானே இதன் 

நோக்கம்? 


சவுண்டி மருதையன் மேலும் கூறுகிறார்:

 "(அரசின்) ஒற்றை கணிப்பினைப் பற்றி நிற்பதைவிட, 

மாற்று கணிப்புகளையும் சாத்தியங்களையும் 

கணக்கில் கொண்டு சிந்திப்பதே அறிவியல் 

பூர்வமானது.'' தனியார்மயத்தை ஆதரிக்கும் 

அனைவரும் சொல்லும் வாக்கியம்தானே இது!


அரசின் கணிப்பு மட்டும் போதாது: தனியாரின் கணிப்பும்

வேண்டும் என்று கூறும் மருதையன் அதுதான் அறிவியல் 

என்றும் சொல்கிறார்.


மருதையனின் கல்வித் தகுதி என்ன? MSc, PhD 

படித்திருக்கிறாரா? இல்லையே! வெறும் SSLCதானே! 

தன்னைத் தானே பெரிய அறிஞராகக் 

கருதிக் கொண்டு மருதையன் உளறுவதை இன்றைய 

சமூகம் ஏற்கத் தயாராக இல்லை.


இறுதியாக தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள்!

போலி வெதர்மேன்களைக் கட்டுப் படுத்த வேண்டும்.

பிரதீப் ஜானையும் மருதையனையும் குண்டர் 

சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

************************************************************    வியாழன், 26 நவம்பர், 2020

மாநில அமைப்புக் கமிட்டித் தலைவர்களின் சீரழிவு 

தனிநபர் சார்ந்ததா? அமைப்பு சார்ந்ததா?

-------------------------------------------------------------------------

பி இளங்கோ சுப்பிரமணியன்

முன்னாள்  மாவட்டச் செயலாளர்

NFTE BSNL, சென்னை மாவட்டம்.

வெளியீடு: நியூட்டன் அறிவியல் மன்றம்.

-----------------------------------------------------------------------------      

முதலாளித்துவம் என்பது தனியுடைமைச் 

சமுதாய அமைப்பு. முதலாளித்துவத்தை 

வீழ்த்திய வெற்றிகரமான வரலாறுகள் மானுட 

சமூகத்தில் உண்டு. ஆனால் தனியுடைமை 

தனியுடைமைச் சிந்தனை ஆகியவற்றை 

எந்தப் புரட்சியும் சுலபமாக வீழ்த்தவில்லை.

வீழ்த்தவும் இயலவில்லை என்பது வரலாறு/


இதற்கான காரணங்கள் பலவற்றில் இதுவும் 

ஒன்று. தனியுடைமைச் சிந்தனை முதலாளியம் 

தோன்றியபோது கூடவே தோன்றியதல்ல. மாறாக 

அதற்கு முந்தியது. நிலவுடைமைச் சமூக 

அமைப்பிலும் சரி, அடிமையுடைமைச் சமூக 

அமைப்பிலும் சரி, உடைமைச் சிந்தனை 

வலுவாக வேரூன்றி இருந்தது. ஆக சமூக 

மாற்றங்களைக் கடந்தும், தனியுடைமைச் 

சிந்தனை நீடிக்கிறது. எனவே அதை வீழ்த்துவது 

எளிதல்ல..


சோவியத் ஒன்றியத்திலும் சீனத்திலும் 

முதலாளித்துவம் எப்படி மீட்டு எடுக்கப்பட்டது?

அங்கெல்லாம் தனியுடைமையை முற்றிலுமாக 

ஒழிக்க முடியவில்லை.சோஷலிச சிந்தனை 

என்பது உடைமைகளுக்கு எதிரான சிந்தனை.

அத்தகைய சிந்தனை சமூகத்தில் மேலோங்கவில்லை.

இதன் விளைவாக மிக எளிதில் முதலாளியம் 

மீட்டு எடுக்கப் பட்டு விட்டது. ஆம், எல்லாமே 

வெறும் matter of timeதான். 


லெனினும் ஸ்டாலினும் மாவோவும் இருந்து 

சோஷலிசத்தைச் செயல்படுத்திய நாடுகளிலேயே 

முதலாளியம் மீட்டு எடுக்கப்பட்டு விட்டது எனும்போது,

இந்தியா எம்மாத்திரம்? இங்கு வேரூன்றியும் 

விஸ்வரூபம் எடுத்தும் நிற்கும் உடைமை வர்க்கச் 

சிந்தனையை அதன் அடிப்படையிலான 

கட்டுமானங்களை யாராவது கை வைக்க

முடியுமா? 


தங்களுக்கென்று உடைமைகளைக் கொண்டிருக்கும் 

வர்க்கங்களை, தனி நபர்களை விட்டு விடுவோம்.

இழப்பதற்கு ஏதுமற்ற பாட்டாளி வர்க்கத்தை 

எடுத்துக் கொள்வோம். இவர்களிடம் உடைமை 

வர்க்கச் சிந்தனை இல்லாமல் இருக்கிறதா? 


கம்யூனிஸ்டுகளை, முழுநேரப் புரட்சியாளர்களை 

எடுத்துக் கொள்வோம். இவர்களிடம் தனியுடைமைச் 

சிந்தனை இருக்கிறதா இல்லையா என்று பார்ப்போம்.


பாட்டாளி வர்க்கத் தொழிற்சங்கம் புஜதொமு. இதன் 

ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவர் தோழர் சுப தங்கராசு.

அண்மையில் இவர் ரூ 100 கோடி BHEL ரியல் எஸ்டேட் 

ஊழலில் மாட்டினார். இவரின் ஊழல் பற்றிய செய்திகள் 

நக்கீரன்  பத்திரிகையிலும் வெளிவந்தது. எனினும் இவர் 

இன்னும் கைது செய்யப்படவில்லை. இவர் மீது FIR கூடப் 

போடப்படவில்லை.


தோழர் தங்கராசு இழப்பதற்கு ஏதுமற்ற பாட்டாளி 

வர்க்கத்தைச் சேர்ந்தவர். அவர் BHELல் பணி புரிந்தவர்.

 சமூகத்தின் பொருள் உற்பத்தியில் நேரடியாகப் பங்கேற்றவர். 

வர்க்க ரீதியாக மார்க்ஸ்  வரையறுத்த ஆலைப்பாட்டாளி 

(industrial proletariat) வர்க்கத்தைச் சேர்ந்தவர். சொத்துடைமைச் 

சிந்தனை அற்றது பாட்டாளி வர்க்கம். அதாவது சோஷலிச 

சிந்தனையைக் கொண்டிருப்பது பாட்டாளி வர்க்கம்.

அந்த அளவில் சமூகத்தின்  பிற வர்க்கங்களை விட 

முற்போக்கானது பாட்டாளி வர்க்கம்.


சோஷலிச சிந்தனையைக் கொண்டிருப்பதற்கு ஏதுவாக 

இவ்வளவு சாதகமானஅம்சங்கள் இருந்த போதிலும் 

தோழர் தங்கராசு ரூ 100 கோடி ரியல் எஸ்டேட் ஊழலைப் 

புரிந்துள்ளார் என்றால், அவரிடம் மேலோங்கி நிற்பது 

சோஷலிசச் சிந்தனையா? அல்லது புழுத்துப்போன 

தனியுடைமைச் சிந்தனையா?


BHELல் ஊழியர்கள் பணிஓய்வு பெறும்போது 25 லட்சம் 

முதல்  60 லட்சம் வரை பணம் பெறுகிறார்கள் (Terminal benefits).

இவர்களுக்கு ஒரு வீடு கட்டிக் கொடுக்கலாம் என்னும் 

சோஷலிசச் சிந்தனை தங்கராசுவை ஆக்கிரமித்தது.

கட்சித் தலைமையிடம் இது பற்றிப் பேசியபோது, 

தலைமை புளகாங்கிதம் அடைந்து தங்கராசு நடத்த 

இருக்கும் சோஷலிஸப் புரட்சிக்கு பச்சைக்கொடி காட்டியது.

இதில் பெரிதும் தமது உற்சாகத்தை வெளிப்படுத்தியவர் 

தோழர் மருதையன். ரியல் எஸ்டேட் புரட்சி என்பது

தங்கராசுவின் முடிவு என்றாலும், அவரின் முடிவுகள் 

அனைத்திலும் மருதையனின் ஒப்புதல் முத்திரையானது 

அழுத்தமாக விழுந்திருக்கும். 


ரியல் எஸ்டேட் பிசினஸ் என்பது ஒரு கம்யூனிஸ்ட் 

செய்யக் கூடிய வேலையா? இதில் எங்காவது 

சோஷலிசச் சிந்தனை உள்ளதா?. BHELல் வேலை 

பார்த்து ரிட்டயர்டு ஆனவன் தனக்குத் தேவையான

வீட்டை, தான் வாங்கிக் கொள்ள மாட்டானா? இதில் ஒரு 

புரட்சிகரக் கட்சி தலையிட்டு அவர்களுக்கு வீடு 

வாங்கிக் கொடுக்க வேண்டிய தேவை என்ன?  


தங்களின் உடல் பொருள் ஆவியை  அர்ப்பணித்தாவது 

BHEL ஊழியர்களுக்கு வீடு வாங்கிக் கொடுத்து விட 

வேண்டும் என்று தங்கராசுவும் மருதையனும்  

வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வீதியில் 

திரிய வேண்டிய தேவை என்ன? 


வீடு வாசல் இல்லாமல் பிளாட்பாரவாசிகளாக 

BHEL ஆசாமிகள் இருப்பதால் இந்தியப் புரட்சிக்கு ஏற்பட்டு 

விட்ட  பின்னடைவுதான் என்ன?


சொத்துக்களை எல்லாம் கட்சிக்கு எழுதி வைத்து விட்டு, 

கம்யூன்களில் தங்கி கட்சி  வேலை பார்த்த பல தோழர்கள் 

உலகெங்கும் உண்டு. அவர்களின் வரலாற்றை மக்களிடம் 

கொண்டு செல்வது சோஷலிசப் பணியா? 


ஐயோ, சொத்து இல்லாமல் இருக்கிறார்களே, இது தகுமா, 

இவர்களுக்குச் சொத்து வாங்கிக் கொடுத்து விட்டுத்தான் 

மறுவேலை பார்க்க வேண்டும் என்று மருதையனும் 

தங்கராசுவும் எடுத்த முடிவு சோஷலிசப் பணியா?


வர்க்க ரீதியாக தங்கராசு ஒரு ஆலைப் பாட்டாளி

(industrial proletariat). சமூகத்தின் பொருள் உற்பத்தியில் 

நேரடியாகப் பங்கேற்றவர். அது போலவே மருதையனும்

ஆலைப்பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர். 

தொலைதொடர்புத் துறையில் பணியாற்றி சமூகத்தின் 

பொருள் உற்பத்தியில் நேரடியாகப் பங்கேற்றவர். 


இவர்கள் இருவருமே பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் 

படையாக இருந்தவர்கள். Vanguard of the proletariat என்ற 

லெனினின் வர்ணனைக்குப் பொருத்தமானவர்கள். 

ஆலைப்பாட்டாளி வர்க்கம் சொத்துடைமைச் 

சிந்தனை கொண்டிருக்காது என்ற காரல் மார்க்சின்

கணிப்புக்கு உட்பட்டவர்கள்.


இப்படிப் பட்டவர்களே கடைசியில் சொத்துடைமை என்னும் 

மலக்குட்டையில் தொபுகடீர் என்று குதித்த பின்னர்,

தனியுடைமைச் சிந்தனையை வெற்றி கொள்வதும் 

வீழ்த்துவதும் எவ்வளவு பிரம்மப் பிரயத்தனத்தைக் 

கோரும் என்று நினைக்கிறபோது ஆயாசம் கப்புகிறது.


ரியல் எஸ்டேட் ஊழலை மட்டும் மனதில் கொண்டு 

இந்த முடிவுக்கு வந்திருப்பதாக யாரும் கருத வேண்டாம்.

கீழைக்காற்று பதிப்பகத்தை வன்முறையாகக் 

கைப்பற்றிய நிகழ்வு எதை உணர்த்துகிறது? பூர்ஷ்வா 

அமைப்புகளிடம் காணப்படும் ஒழுங்கும் கட்டுப்பாடும்கூட 

புரட்சிகர அமைப்புகளிடம் இல்லை என்பதை எப்படி 

நியாயப் படுத்துவது? 

(பார்க்க: கீழைக்காற்று வெளியீட்டகத்தை அபகரிக்கும் 

முகுந்தன் கும்பலின் அடாவடித் தனத்தை 

முறியடிப்போம், நவம்பர் 1, 20020, வினவு இணையதளம்).


கீழைக்காற்று இணையதளத்தில் ரூ 20 லட்சம் மதிப்புள்ள

புத்தகங்கள் இருப்பதாக அதன் நிர்வாகி எனப்படும் நிலவன் 

என்பவர் கூறுகிறார். கீழைக்காற்றுக்கு நான்தான் ஓனர் 

என்று முகுந்தன் கூறுகிறார். இது ஒரு civil dispute ஆகும்.

ஒரு civil disputeஐ தங்களுக்குள் இணக்கமாக, காதும் காதும் 

வைத்தாற்போல் தீர்த்துக்கொள்ள வக்கற்றவர்களாக 

மாநில அமைப்புக் கட்டியின் முட்டாள்கள் இருக்கிறார்கள் 

இது வெட்ட வெளிச்சமாகிறது.


இது மட்டுமல்ல, தோழர் முகுந்தன்  சார்பில் வந்தவர்கள் 

ரௌடித்தனத்தில் இறங்கி கீழைக்காற்று ஆட்களை 

அடித்து விரட்டி விட்டு, பதிப்பகத்தின் சாவியை அடாவடியாக 

எடுத்துக் கொண்டு பதிப்பகத்தைக் கைப்பற்றிக் கொண்டார்கள் 

என்று எழுதுகிறார் நிர்வாகி நிலவன்.


இதைப் படிக்கும் எவரும் இரு தரப்பினர் மீதும் (முகுந்தன் 

மற்றும் நிலவன்) காரித் துப்புவது தவிர்க்க இயலாதது.

ஆக உடைமை வர்க்கச் சிந்தனையை,

தனிச்சொத்துடைமை பற்றிய சிந்தனையை 

முழுநேர ஊழியர்களாக, முழுநேரப் புரட்சியாளர்களாக

இருந்த தோழர்களால் கூட வெல்ல முடியவில்லை 

என்பதையே முகுந்தன் விவகாரம் காட்டுகிறது.


கம்யூனிஸ்டுகள் தனியொரு பொருளினால் வார்க்கப் 

பட்டவர்கள் (The Communists are of a special mould) என்பார் 

ஸ்டாலின். மேற்கூறிய விவகாரங்களில் கம்யூனிஸ்டுகளாக 

இருந்த தங்கராசு, மருதையன், முகுந்தன் ஆகியோர் 

பூர்ஷ்வாக்களிடம் இருந்து வேறுபட்ட பண்பட்ட 

நடத்தையைக் கொண்டிருந்தார்களா? இல்லையே!

நாங்களும் அந்தச் சாக்கடைப் பன்றிகள்தான் என்று 

நிரூபித்தார்கள்! அவ்வளவுதான்!


தனி நபர்களின் சீர்கேடுதானே இது! அமைப்பும் 

இவர்களைப்   போன்றே சீரழிந்து விட்டதா என்று 

விவரம் அறியாதவர்கள் கேட்கலாம்..அமைப்பு என்பது 

isolated chamber அல்ல. சீர்கேடுகளுக்கு 

எதிராக அமைப்பை insulate செய்ய வழி எதுவும் இல்லை.


" Ideological corruption leads to political corruption;

political corruption leads to organisational corruption;

organisational corruption leads to individual' corruption".

என்பது ஒரு பழமொழி. இதன்படி சிறப்புப்  

பொருந்திய தனிநபர்களே சீரழிந்து போய்த் 

தெருவில் திரிகிறார்கள் என்றால், அதன் பொருள் 

அவர்களின் அமைப்பும், அரசியலும், தத்துவமும் 

சீரழிந்து விட்டது என்பதே.  


கண்டதைச் சொல்லுகிறேன்- உங்கள் 

கதையைச் சொல்லுகிறேன்-இதைக் 

காணவும் கண்டு நாணவும் உமக்குக் 

காரணம் உண்டென்றால்,

அவமானம் எனக்குண்டோ!

------------------ஜெயகாந்தன் ---------------------------    

************************************************

பின்குறிப்பு:: கடடைசி வரியில், தத்துவமும் சீரழிந்து 

விட்டது என்பதில் வரும் தத்துவம் என்பது மார்க்சியத் 

தத்துவத்தைக் குறிக்காது. தொடர்புடைய 

அமைப்புகளின் வேலைத்திட்டத்தையே 

(party programme) குறிக்கும்.

-------------------------------------------------------------------------------------- 

" Ideological corruption leads to political corruption;

political corruption leads to organisational corruption;

organisational corruption leads to individual' corruption".

என்பது ஒரு பழமொழி. இதன்படி சிறப்புப்  

பொருந்திய தனிநபர்கள் சீரழிந்து போய்த் 

தெருவில் திரிகிறார்கள் என்றால், அதன் பொருள் 

அவர்களின் அமைப்பும், அரசியலும், தத்துவமும் 

சீரழிந்து விட்டது என்பதே.  

----------------------------------------------------------------------

பின்குறிப்பு:: தத்துவமும் சீரழிந்த விட்டது என்பதில் 

வரும் தத்துவம் என்பது மார்க்சியத் தத்துவத்தைக் 

குறிக்காது. தொடர்புடைய அமைப்புகளின் 

வேலைத்திட்டத்தையே (party programme) குறிக்கும்.

****************************************************************** 

   


          

 

      

      

   

     


  

      
        

புதன், 25 நவம்பர், 2020

ஆலன் டூரிங்: மானுடத்தின் பெருமிதம்!

------------------------------------------------------------------

பி இளங்கோ சுப்பிரமணியன் 

நியூட்டன் அறிவியல் மன்றம்.

------------------------------------------------------------------- 

எல்லாம் இன்ப மயம் என்று கர்நாடக இசையின்

தமிழ்ப்பாடல் ஒன்று உண்டு. முன்பு எம் எல் வசந்தகுமாரியும் 

இன்று நித்யஸ்ரீ மகாதேவனும் பாடிச் சிறப்பித்த அப்பாடல் 

யூடியூபில் உள்ளது. அதை இதுவரை 30 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.


அது போல, எல்லாம் கணினி மயம் என்று நாம் வாழும் உலகம்

ஆகி விட்டது. இதெல்லாம் என்றோ நிகழ்ந்து முடிந்து விட்டது.

இதன் வளர்ச்சிப் போக்கில், இன்று செயற்கை நுண்ணறிவு 

(Artificial Intelligence) குதிரைப் பாய்ச்சலில் உலகை ஆக்கிரமித்து 

வருகிறது. அணு ஆயுதங்களின் பராமரிப்பு முதல் 

ஸ்மார்ட் போனில் இளம்பெண் செல்பி எடுப்பது வரை 

செயற்கை நுண்ணறிவே மனிதனுக்குக் கைகொடுக்கிறது.      


பங்குச் சந்தை நடவடிக்கைகளிலும்கூட செயற்கை 

நுண்ணறிவு பெரும்பங்கு வகிக்கிறது. எந்த நிறுவனத்தின்

பங்குகளை வாங்கலாம் அல்லது விற்கலாம் என்று முடிவு 

எடுப்பதில்கூட இது செல்வாக்குச் செலுத்துகிறது.

எனினும் செயற்கை நுண்ணறிவின் முன்கணிப்புகள் (predictions) 

இன்னும் போதிய நம்பகத் தன்மையை அடையவில்லை.


எடுத்த எடுப்பிலேயே செயற்கை நுண்ணறிவு பெருவெற்றி 

அடைந்தது சதுரங்க விளையாட்டில்தான். உலக சதுரங்க 

சாம்பியனுடன் செயற்கை நுண்ணறிவு படைத்த 

கணினிகள் மோதின.


அப்போதைய உலக சாம்பியன் காஸ்பரோவ் 

(Garry Kasparov பிறப்பு: 1963) உடன் IBM நிறுவனத்தின் 

மீக்கணினி டீப் ப்ளூ (Deep Blue) விளையாடியது.

1996-1997 ஆண்டுகளில் இந்த ஆட்டங்கள் நடைபெற்றன.


1984 முதல் 2005 வரை 15 ஆண்டுகள் (மொத்தம் 

255 மாதங்கள்) சதுரங்கத்தில் உலக சாம்பியனாக 

இருந்தவர் காஸ்பரோவ். இவரின் உச்ச அளவிலான ஈலோ 

மதிப்பீடு (Elo rating) 2851ஆகும். இது ஜூலை 1999ல் 

அவர் பெற்றது. ஆர்பட் ஈலோ (Arpad Elo 1903-1992) என்னும் 

ஹங்கேரிய-அமெரிக்க இயற்பியல் பேராசிரியர் உருவாக்கிய 

சதுரங்க வீரர்களின் தரவரிசையே ஈலோ மதிப்பீடு  ஆகும்).      


பெப்ரவரி 1996ல் பிலடெல்பியாவில் டீப் ப்ளூவுடன் நடைபெற்ற 

முதல் ஆட்டத்தில் மொத்த உலகையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி 

காஸ்பரோவ் தோல்வி அடைந்தார்; டீப் ப்ளூ வெற்றி பெற்றது.

கறுப்புக் காய்களுடன் விளையாடிய காஸ்பரோவ் 

37ஆவது நகர்த்தலில் தமது தோல்வியை ஒப்புக் 

கொண்டு விலகினார் (resigned).


எனினும் சுதாரித்துக் கொண்ட காஸ்பரோவ், அடுத்தடுத்த 

ஆட்டங்களில் கவனத்துடன் விளையாடி, கணினியைத் 

தோற்கடித்தார். மொத்தம் நடைபெற்ற ஆறு ஆட்டங்களில்  

நான்கு புள்ளிகளை காஸ்பரோவ் பெற்றார். இரண்டு புள்ளிகளை 

மட்டுமே பெற்று டீப் ப்ளூ தோல்வி அடைந்தது.         


தொடர்ந்து 1997ல் நியூயார்க்கில் இப்போட்டியின் 

மறு பந்தயம் (rematch) நடைபெற்றது. மறுபந்தயத்துக்கு 

காஸ்பரோவ் ஒப்புக் கொண்டார். இம்முறை 

டீப் ப்ளூ வென்று விட்டது. மொத்தம் நடைபெற்ற 

ஆறு ஆட்டங்களில், 3.5 புள்ளிகள் பெற்று டீப் ப்ளூ 

வென்றது. 2.5 புள்ளிகள் மட்டுமே பெற்ற 

காஸ்பரோவ் தோல்வி அடைந்தார். 1997 பந்தயத்தை 

விவரித்து இரண்டு ஆவணப் படங்கள் வெளிவந்தன.

1. The Man versus the machine (இயக்கம்: பிராங்க் மார்ஷல்).

2. Game over: Kasparov and the machine (இயக்கம்: விக்ரம் ஜெயந்தி)     

    

பங்குச் சந்தையும் சதுரங்கமும் மட்டுமின்றி, செயற்கை

நுண்ணறிவு இன்னும் பல்வேறு துறைகளையும் 

ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. ஸ்மார்ட் போன் 

(SMART mobile phone) வைத்திருக்கும் எவர் ஒருவரும் 

இதைத் தமது அன்றாட வாழ்க்கையின் அனுபவத்தில்

இருந்து உணரலாம். 

 

சாம்சங்கின் காலக்சி (Galaxy), 

ஹுவேய் நிறுவனத்தின் மேட் எக்ஸ் (Huawei's Mate X)

கூகிள் நிறுவனத்தின் பிக்சல் (Pixel phones)

ஆப்பிள் ஐ போன்கள் (Apple i phones)

ஆகிய ஸ்மார்ட் தொலைபேசிகள் தற்போது 

2020ல் 35 சதம் வரையிலான செயற்கை நுண்ணறிவைக் 

கொண்டிருக்கின்றன என்று மொபைல் சந்தையின் 

ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடந்த காலத்தில் செயற்கை 

நுண்ணறிவு மொபைல்களில் 3 சதம் அளவுக்கு மட்டுமே இருந்தது.


ஆக எங்கு நோக்கினும் செயற்கை நுண்ணறிவு என்பது 

மனிதனை ஆளுகை செய்து வருகிறது என்பதும் 

வரும் நாட்களில் அவற்றின் ஆளுகை கிடுக்கிப்பிடியாக 

மனிதர்கள் மீது இருக்கும் என்பதும் உள்ளங்கை 

நெல்லிக்கனி.

  

இன்று இந்த அளவு வளர்ச்சி அடைந்துள்ள செயற்கை 

நுண்ணறிவு யாருடைய கொடை? இதையெல்லாம் 

கண்டு பிடித்தது யார்? இந்தக் கேள்விக்கு உலகம் 

முழுவதும் உள்ள இளைஞர்களும் மாணவர்களும்

ஒரே குரலில் ஆலன் டூரிங் என்று பதிலளிப்பர்.


ஆலன் டூரிங் (Alan Turing 1912-1954) ஒரு பிரிட்டிஷ் கணித 

மேதை. கணிப்பொறியின் தந்தை என்றும். செயற்கை  நுண்ணறிவின் 

தந்தை என்றும் இன்றைய தலைமுறை இவரை அழைக்கிறது.. 

பலவேறு தலைமுறை வளர்ச்சியைக் கணினிகள் கண்டு 

விட்டன என்றபோதிலும், இன்றைக்கும் ஒவ்வொரு கணினியும் 

ஆலன் டூரிங் உருவாக்கிய விதிகளுக்குக் கட்டுப்பட்டே 

வேலை செய்கிறது. .

 

முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் கணிப்பொறியின் 

தந்தை யார் என்ற கேள்விக்கு சார்லஸ் பாபேஜ் (Charles Babbage 1791-1871) 

என்று பதிலளித்தனர், இப்பதில் தவறானதா? பரிசீலிப்போம்.

சார்லஸ் பாபேஜ் இங்கிலாந்து நாட்டின் கணித மேதை ஆவார்.

இன்றைய கணினியை அல்ல, பெரிதும் இயந்திரத் தன்மை 

வாய்ந்த ஒரு கணிப்பொறியையே சார்லஸ் பாபேஜ் 

உருவாக்கி இருந்தார். கணிப்பொறி உருவாக்கத்திலும், அது குறித்த 

மானுட சிந்தனையிலும்  நிச்சயம் சார்லஸ் பாபேஜ் 

முன்னோடி ஆவார். எனவே கணினிகளின் முன்னோடி 

(pioneer of computer) என்ற பட்டமே அவருக்குச் சாலப் பொருந்தும்.


அதே நேரத்தில் பெரும் கணித மேதையான ஆலன் டூரிங் 

மிகச் சரியாகவே கணினியின் தந்தை என்றும் செயற்கை 

நுண்ணறிவின் தந்தை என்றும் போற்றப் படுகிறார். 

தமது  கணித அறிவு முழுவதையும் தமது தாய்நாட்டின் நலனுக்கே 

ஆலன் டூரிங் செலவிட்டார். எனினும்  அதற்குரிய அங்கீகாரத்தை 

அவருக்கு இங்கிலாந்து அரசு வழங்கவில்லை. 


இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனி உள்ளிட்ட 

பாசிச நாடுகளின் சங்கேத மொழியில் அமைந்த ரகசியத் திட்டங்களை 

அம்பலப்படுத்தும் பணியில், அரசின் உத்தரவின் பேரில் அவர் 

தம்மை முழுமையாக  ஈடுபடுத்திக் கொண்டார்.


போரில் ஜெர்மனி வெகு தாராளமாகப் பயன்படுத்திய 

எனிக்மா எந்திரத்தின் (Enigma machine, an encryption device) 

சங்கேத முறையில் எழுதப்பட்ட செய்திகளை உடனுக்குடன்

வெளிப்படுத்தி தாய்நாட்டு ராணுவத்திற்கு வழங்கினார்

ஆலன் டூரிங். இது இங்கிலாந்தின் தலைமையிலான நேச நாடுகள் 

(Allies) பல்வேறு ராணுவ நடவடிக்கைகளில் வெற்றி பெறுவகற்குப் 

பேருதவியாய்  அமைந்தது. 


இரண்டாம் உலகப்போரின் மிக நீண்ட ராணுவ நடவடிக்கையான 

அட்லான்டிக் போரில் (Battle of Atlantic 1939-1945)

நேச நாடுகள் வெற்றி பெறுவதற்கு, பாசிச ஜெர்மனியின்  

சங்கேதச் செய்திகளை ஆலன் டூரிங் உடனுக்குடன் அம்பலப் 

படுத்தித் தந்ததுதான் காரணம் என்று கருதப்பட்டது. 

இதன் விளைவாக  அவரின் ஒவ்வொரு அசைவும் எதிரிகளுக்குத் தெரியாவண்ணம் ரகசியமாக வைக்கப்பட்டது. வெளியுலகத்திற்கு 

அவரின் பங்களிப்பும் அதன் மகத்துவமும் தெரியாமலே இருந்தன.


டூரிங் எந்திரம் (Turing machine) 1936ல் ஆலன் டூரிங்கால் 

கண்டுபிடிக்கப் பட்டது. இது ஒரு அனுமான அடிப்படையிலான 

எந்திரம் (hypothetical machine). உண்மையில் இது கணக்கீடு 

சார்ந்த ஒரு கணித முன்மாதிரிச் சித்திரம் (mathematical model)

ஆகும். இதன் விதிகளுக்கு உட்பட்டே உலகின் அனைத்துக் 

கணினிகளும் இயங்குகின்றன.


அடுத்து "டூரிங் சோதனை"யை (Turing test) 1950ல் உருவாக்கினார் 

ஆலன் டூரிங். இது செயற்கை நுண்ணறிவுத் துறையில் 

(Artificial Intelligence) பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. ஆக கணினிக்கு 

டூரிங் எந்திரமும், செயற்கை நுண்ணறிவுக்கு டூரிங் சோதனையும் 

என்று ஆலன் டூரிங் அறிமுகப் படுத்திய இவ்விரண்டும் இன்றைக்கும் 

பொருந்துவதாய் காலத்தை வென்று நிற்கின்றன. செயற்கை 

நுண்ணறிவுடன் கூடிய கணினிகளின் பிசாசுத் தனமான 

வளர்ச்சிக்கும், எதிர்காலத்தில் இவை மனிதனுக்குக் கட்டுப் படாமல் 

போய்விடுமோ என்ற அச்சத்தின் தோற்றுவாய்க்கும் ஆலன் 

டூரிங் காரணமாகி இருக்கிறார். 1954ல் அவர் மறைந்து, 

60 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் கணினிகளின் மீது அவரின்  

கோட்பாடுகள் சக்தி மிக்க செல்வாக்குச் செலுத்துகின்றன.        


டூரிங் சோதனையை (Turing test) 1950ல் அறிமுகப் படுத்தியபோது

அதற்கு "பொய் முலாம் ஆட்டம்" (The imitation game) என்று பெயர் 

சூட்டினார் டூரிங். ஒரு கணினியானது மனிதனைப் போல 

நடந்து கொள்கிறதா என்று கண்டறிவதுதான் இச்சோதனையின் 

நோக்கம்.


பொய் முலாம் ஆட்டத்தில், அதாவது டூரிங் சோதனையில் 

மூன்று பேர் மட்டுமே பங்கேற்கலாம்.

அ) மனிதனைப் போல நடந்து கொள்ள வேண்டிய ஒரு கணினி,

ஆ) ஒரு மனிதன், 

இ) இவ்விருவரின் நடத்தையை மதிப்பீடு செய்யும் ஒரு மதிப்பீட்டாளர்.  

கணினியானது மனிதனைப் போல் சிந்திக்கிறதா, 

மனிதனைப் போல் நடந்து கொள்கிறதா 

என்பதை அறிவதே இந்த ஆட்டத்தின் நோக்கம்.  


நல்வாய்ப்பாக ஆலன் டூரிங்கின் வாழ்க்கை ஆவணப் படுத்தப் 

பட்டுள்ளது. 2014ல் The Imitation Game என்ற பெயரில் ஓர் ஆங்கிலப் படம்

வெளியானது. 1954ல் இறந்தவரின் வாழ்க்கை பற்றி 2014ல்தான் 

அறிந்து கொள்ள முடிந்தது. மார்ட்டன் டில்டம் (Morten Tyldum) இயக்கிய 

இப்படம் இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனியின் 

சங்கேதக் குறியீட்டுச் செய்திகளை ஆலன் டூரிங் தமது 

குழுவினருடன் எப்படி உடைத்துநொறுக்கினார் என்பதை 

தத்ரூபமாகக் காட்டும் படம். படம் பார்க்கிற அனைவரையும் 

இருக்கை நுனிக்குக் கொண்டு செல்லும் அளவு கிளர்ச்சியூட்டும் 

(thrilling) படம் இது.   


ஐரோப்பிய மற்றும் அமெரிக்கச் சமூகமானது எந்த ஒரு 

முக்கியமான சமூக நிகழ்வையும் திரைப்படமாக எடுத்து விடுகின்ற 

வழக்கத்தைக் கொண்டது. இதன் மூலம் எதிர்காலத் தலைமுறைக்கு   

வரலாறு போய்ச் சேருகிறது. The Imitation Game திரைப்படம் இரண்டாம் 

உலகப்போரின் வெளித்தெரியாத உண்மைகளை வெளிச்சம் 

போட்டுக் காட்டுகிறது. 


பெருஞ்சாதனைகளைப் புரிந்த நிறைவுடன் பெயரும் 

புகழும் பெற்றிருந்த போதிலும் ஆலன் டூரிங் அற்பாயுளில் 

இறந்து போனார். 1954ல் தமது 41ஆம் வயதில் தற்கொலை 

செய்து கொண்டு இறந்து போனார் அவர். எந்தத் தாய்நாட்டுக்கு

விசுவாசத்துடன் உழைத்தாரோ, அந்த இங்கிலாந்து அவரிடம் 

முரட்டுத்தனமாக நடந்து கொண்டது.


அவர் ஓரினச் சேர்க்கையாளாராக இருந்தார் என்பதை 

இங்கிலாந்து அரசு மன்னிக்கத் தயாராக இல்லை. அப்போது 

நடப்பில் இருந்த சட்டங்களின்படி, ஓரினச் சேர்க்கை 

இங்கிலாந்தில் கிரிமினல் குற்றமாகவே கருதப் பட்டது.

எனவே ஆலன் டூரிங்கிற்கு ரசாயன ஆண்மை நீக்கம் 

(chemical castration) செய்யப்பட்டது. இதனால் மனமுடைந்த 

ஆலன் டூரிங் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார்.


ஒருவரின் பாலியல் நாட்டம் (sexual orientation) உயிரியல் ரீதியானதா

அல்லது உளவியல் ரீதியானதா என்ற கேள்வி இங்கு எழுகிறது.

உளவியல் ரீதியானது என்றால், அது அவருடைய விருப்பத்தைப் 

பொறுத்தது. அதாவது அவர் விரும்பினால் தமது பாலியல் 

நாட்டத்தை மாற்றிக் கொள்ள இயலும். அதாவது தன்பாலின 

நாட்டம் கொண்ட ஒருவர் எதிர்பாலின நாட்டத்திற்கு மாறிக் 

கொள்ளலாம். ஆனால் துரதிருஷ்ட வசமாக, எவர் ஒருவரின் 

பாலியல் நாட்டமும் உளவியல் சார்ந்தது அல்ல. மனிதர்களைப் 

பொறுத்தமட்டில் அனைவரின் பாலியல் நாட்டமும் (sexual orientation) 

உயிரியல் ரீதியானது என்று தற்போதைய மருத்துவ அறிவியல் 

முடிவு செய்துள்ளது.    


ஆக ஒருவரின் பாலியல் நாட்டம் உயிரியல் ரீதியானது

(biological)  என்பதால், அதை அவரால் மாற்றிக் கொள்ள

இயலாது. உயிரியல் ரீதியாக அவரின் பாலியல் நாட்டம் 

என்னவோ அதுவே அவர் சாகும் வரைக்கும் இருக்கும்.

இதன்படி ஒருவருக்கு தன்பாலின நாட்டம் இருக்குமென்றால்,  

அதை மாற்ற இயலாது. அது அவரின் குற்றமும் ஆகாது.


கருப்பாக இருப்பதும் சிவப்பாக இருப்பதும் ஒருவரின் 

விருப்பத்தைப் பொறுத்தது அல்ல. அது உயிரியல் ரீதியானது.

அது போல,  பாலியல் நாட்டமும் உயிரியல் ரீதியானது 

என்பதால், தன்பாலின நாட்டம் உடையவராக ஒருவர் இருப்பது 

கிரிமினல் குற்றம் ஆகாது. 


இங்கிலாந்து அரசு இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் 

பெரும் வல்லரசாக இருந்தபோதும், அறிவியலுக்கு எதிரான 

பிற்போக்குக் கருத்துக்களின் பிடியில் சிக்கி இருந்தது.

இதன் விளைவாகவே ஆலன் டூரிங் அநியாயமாகப் 

படுகொலை செய்யப் பட்டார். பின்னாளில் தனது குற்றத்தை 

இங்கிலாந்து அரசு உணர்ந்து திருத்திக் கொண்டது.


2009 செப்டம்பரில் இங்கிலாந்துப் பிரதமர் கார்டன் பிரௌன், 

பிரிட்டிஷ் அரசின் சார்பாக ஆலன் டூரிங்கிற்கு இழைக்கப்பட்ட

அநீதிக்கு பகிரங்க மன்னிப்புக் கோரினார். மனிதத் தன்மையற்ற 

முறையில் பிரிட்டிஷ் அரசு நடந்து கொண்டதாக வருந்தினார்.


பிரிட்டிஷ் அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கோரி 

ஒரு மாபெரும் மக்கள் இயக்கம் இங்கிலாந்தில் நடைபெற்றது.

இதைத் தொடக்கி வைத்தவர் மென்பொறியாளர் ஜான் கிரஹாம் 

கம்மிங் (John Graham Cumming) என்பவர். மான்செஸ்டர் தொகுதியின் 

எம்.பியான ஜான் லீச் (John Leech), உயிரியல் பேராசிரியரும் 

உலகப்புகழ் பெற்ற நாத்திகருமான ரிச்சர்ட் டாக்கின்ஸ் 

(Richard Dawkins)  ஆகியோர் ஆலன் டூரிங் ஆதரவு இயக்கத்தை 

மாபெரும் மக்கள் இயக்கமாக்கி வெற்றி கண்டனர்.


இதைத் தொடர்ந்து ஓரினச் சேர்க்கைக்காக சிறையில் 

இருப்போரை மன்னித்து விடுதலை செய்யும் ஒரு சட்டத்தை 

பிரிட்டிஷ் அரசு இயற்றியது. இச்சட்டம் ஆலன் டூரிங் 

சட்டம் (Alan Turing Law) என்று மக்களால் அழைக்கப் பட்டது.    

இவ்வாறாக ஒரு மாபெரும் கணிதமேதையின் வாழ்க்கை 

வரம்பு மீறிய சோகத்தில் மூழ்கிக் கிடந்தது நமது நெஞ்சைப் 

பிழியும் சோகம்! (முற்றும்)

*************************************************************** 


    

  

     

    


   

 


   


   

     

 

   

        

 

 

   

    

 

  


 

    


   

செவ்வாய், 24 நவம்பர், 2020

 நவீனத்துவம் என்றால் புதுமை உருவாவது அல்ல. அதை நவீனத்தன்மை என்றுதான் சொல்கிறார்கள். அது எப்போதுமே நடப்பது. நவீனத்துவம் என்றால் கிட்டத்தட்ட இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவான ஒரு பொதுப் போக்கு. அதை சில சமூக இயல்புகளை வைத்தும் சிந்தனைப் போக்குகளை வைத்தும் அடையாளப் படுத்துகிறார்கள்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொழில் நுட்ப அறிவியல் வளர்ச்சி அடைந்தது. எல்லாவற்றையும் தர்க்கம் சார்ந்த அறிவியல் ஆராய்ச்சி மூலம் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அறிவியல் உருவாக்கிய தொழிற் புரட்சி மூலம் உலகம் முழுக்க போகவும் தொடர்பு கொள்ளவும் வசதி ஏற்பட்டது. ஆகவே எல்லா சிந்தனைகளையும்  உலகப் பொதுவாக உருவாக்கும் போக்கு உருவாகியது. இந்த இரு விஷயங்களும்தான் நவீனத்துவத்தின் அடிப்படை. அதாவது 1.அறிவியலை மையமாக்கிய நோக்கு. 2 உலகளாவிய நோக்கு

நவீனத்துவம் உருவாக்கிய அமைப்புகள் 1. தொழிற்சாலை 2 பள்ளி 3 பொதுப்போக்குவரத்து 4 பொதுச் செய்தித் தொடர்பு 5 பொது ஊடகம். இவை மூலம் நவீனத்துவம் சமூகத்தை உறுதியான மையம் கொண்ட அமைப்பாக ஆக்குகிறது. இவ்வாறு மையம் கொண்ட அமைப்பு உருவாகும்போது அதற்கு எதிரான, தேவையில்லாத அமைப்புகள் ஒடுக்கப்  படுகின்றன, நிராகரிக்கப் படுகின்றன.

இதன் விளைவாக சிந்தனைகளிலும், சமூக அமைப்புகளிலும், பண்பாட்டிலும் ஏராளமான போக்குகள் உலகமெங்கும் உருவாகி வந்தன. அவற்றை பொதுவாக நவீனத்துவப் போக்கு என்பது வழக்கம்.

இந்த நவீனத்துவம் மீது ஆழமான அவநம்பிக்கை இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் உருவாகி வந்தது. நவீனத்துவத்தின் குறைபாடுகளும், போதாமைகளும் கண்டடையப் பட்டன. உறுதியான அமைப்புகள் மீது சந்தேகம் உருவாகியது. திட்டவட்டமான மையம் கொண்ட அமைப்புகள் நிராகரிக்கப் பட்டன. விளிம்புகள் மற்றும் புறக்கணிக்கப் பட்டவை மீது கவனம் விழுந்தது. அவையனைத்துக்கும் இடமுள்ள ஒரு சமூகக் கட்டுமானம், ஒரு சிந்தனைமுறை தேவை என்ற எண்ணம் எழுந்தது.

இவ்வாறு நவீனத்துவம் பின்னுக்குத் தள்ளப் பட்டது. அதன் பின் வந்த எல்லா சிந்தனைகளையும் ஒட்டுமொத்தமாக பின் நவீனத்துவம் என்கிறார்கள். பின் நவீனத்துவத்திற்குள் பலவகையான போக்குகள் உள்ளன. ஆனால் மையங்களையும், ஒட்டு மொத்த பெரும் அமைப்புகளையும் நிராகரிக்கும் போக்கு மட்டும் பொதுவாக இருக்கும்.

பின் நவீனத்துவம் ஒரு குறிப்பிட்ட சிந்தனை முறையோ அல்லது இலக்கிய வகையோ அல்ல. அது ஒரு பொதுப் போக்கு. இன்றைய உலகத்தின் இயல்பு ஒட்டு மொத்தமாக பின்நவீனத்துவ அம்சம் கொண்டது என்று சொல்கிறார்கள். உதாரணமாக ஒரு சமூகத்தில் ஆண்மை மைய விழுமியமாக போற்றப் பட்டது என்றால் அங்கே திரு நங்கைகள் ஒடுக்கப் படுவார்கள் இல்லையா? பின்நவீனத்துவ சமூகம் அப்படி மைய விழுமியங்களை ரொம்பவும் சார்ந்திருக்காது. இருபாலினத்தவருக்கும் அதே இடத்தை அளிக்கும். தமிழ்ச் சமூகம் கூட இன்று இந்த இடம் நோக்கி வந்து விட்டிருக்கிறது அல்லவா?

அதாவது மிகச் சிறந்தது, சரியானது என ஒன்றை கண்டு பிடித்து அதை நிரூபித்து அதை மட்டும் வைத்துக் கொண்டு பிறவற்றை நிராகரிக்கும் போக்குதான் நவீனத்துவம். அப்படிச் செய்தால் பெரும்பாலானவர்கள் ஒடுக்கப் படுவார்கள் என உணர்வதே பின்நவீனத்துவம். இது ஒற்றைத் தன்மைக்கு எதிராக பன்மையை முன்வைக்கிறது. எல்லாவற்றுக்கும் அவற்றுக்கான இடம் அளிக்கப்பட வேண்டும் என்கிறது. அப்படி மையப் படுத்தும் சிந்தனைகளை பிரித்து ஆராய்ச்சி செய்கிறது. ஒருமை கொண்ட வடிவங்களை பிரித்துப் பரப்பிப் பார்க்கிறது.


  

 பொருள்முதல்வாதம்: நிகழ்வுகளும் பொருளும்.

-------------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

-----------------------------------------------------------------------------

பொருள்முதல்வாதத்தில் பொருளைப் போன்றே

நிகழ்வுகளும் முக்கியம்.


1) மழை பெய்கிறது. இது ஒரு நிகழ்வு.


2) விளக்கு வெளிச்சத்தைப் பாய்ச்சியதுமே 

பொருளின் நிழல் விழுகிறது. நிழல் விழுவது 

ஒரு optical phenomenon. இது ஒரு நிகழ்வு.


3) சூரிய சந்திர கிரகணங்கள் ஏற்படுகின்றன.

இவை நிகழ்வுகள்.  .  


4) ஒரு இடத்தில் ஒரு காந்தத்தை வைக்கிறோம்.

காந்தத்தைச் சுற்றிலும் உள்ள இடத்தில் 

காந்தத்தின் இருப்பு உணரப் படுகிறது.

இவ்வாறு காந்தத்தின் இருப்பு உணரப்படும் 

இடம் காந்தப் புலம் (magnetic field) ஆகும்.

இது ஒரு நிகழ்வு ஆகும்.


5) அது போல மின்சார chargeஐ ஒரு இடத்தில் 

வைத்தால், அந்த chargeஐச் சுற்றி ஒரு 

மின்புலம் உண்டாகிறது. இப்புலம் ஒரு 

நிகழ்வாகும்.


6) இது போல ஈர்ப்புப் புலமும் (gravitational field)

ஒரு நிகழ்வே.


மேற்கூறிய அனைத்து நிகழ்வுகளும் பொருள் 

என்ற வகைமையில் வரும். These are all matter.

இந்நிகழ்வுகள் கருத்தாகாது.


1526ல் நடைபெற்ற முதலாவது பானிபட் போரும்

1757ல் நடைபெற்ற பிளாசிப் போரும், முதல் 

இரண்டாம் உலகப் போர்களும் கார்கில் போரும் 

நிகழ்வுகளே.


மாங்கொட்டையை வீசிய இடத்தில் மாஞ்செடி 

முளைப்பதும், உயிரினங்கள் உயிரோடு 

இருப்பதும் நிகழ்வுகளே.இந்நிகழ்வுகள் 

அனைத்தும் பொருளே; கருத்து அல்ல.

-------------------------------------------------------------

பின்குறிப்பு:

இந்தப் பிரபஞ்சத்தில் இதுவரை கணக்கற்ற 

அறிவியல் பரிசோதனைகள் நிகழ்ந்துள்ளன.

அவற்றுள் மிகவும் பிரசித்தி பெற்றது 

Double slit experiment என்னும் இரட்டைத் துளைப்

பரிசோதனை. இது ஒரு நிகழ்வு. எனவே இது 

பொருள் ஆகும்.


இயற்பியலில் சிந்தனைப் பரிசோதனைகளும் 

(thought experiments) உண்டு. இதுவரையிலான 

சிந்தனைப் பரிசோதனைகளில் புகழ் பெற்றது 

குவான்டம் தியரியில் வரும் ஷ்ராடிங்கரின்

பூனைப் பரிசோதனை ஆகும்.

(Schrodinger's  cat experiment).


ஆக இரண்டு மாபெரும் பரிசோதனைகளைப் 

பார்த்தோம். ஒன்று: பௌதிக ரீதியாக 

நடைபெறும் physical experiment. இன்னொன்று 

கற்பனையில் நடைபெறும் சிந்தனைப் 

பரிசோதனை (thought experiment). இப்போது 

நமது கேள்வி. இவ்விரண்டு பரிசோதனைகளில் 

எது பொருள்? எது கருத்து? அல்லது இரண்டுமே 

பொருள்தானா?


(சிந்தனைப் பரிசோதனை என்பது இயற்பியலின் 

எந்த விதியையும் மீறாமல் நடக்கும் பரிசோதனை 

ஆகும். விதி மீறல் அனுமதிக்கப் படாது).       

 

பின்குறிப்பு-2:

குவான்டம் தியரியை நன்கறிந்தவர்கள் மட்டும் 

கேள்விக்கு விடையளிக்கவும். 


பின்குறிப்பு-3:

இந்தக் குறுங்கட்டுரை பதிப்புரிமைக்கு 

உட்பட்டது.

*******************************************************    
      

    

 

 

“The passion for playing chess is one of the most unaccountable in the world. It slaps the theory of natural selection in the face. It is the most absorbing of occupations. The least satisfying of desires. A nameless excrescence upon life. It annihilates a man. You have, let us say, a promising politician, a rising artist that you wish to destroy. Dagger or bomb are archaic and unreliable - but teach him, inoculate him with chess.”

H G WELLS

திங்கள், 23 நவம்பர், 2020

 உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா?

தெரிந்தால் இந்தப் படத்தைப் பாருங்கள்!

----------------------------------------------

The Queen's Gambit 

-----------------------------

நடப்பாண்டில் 2020 வெளியான படம் இது.

இது ஹாலிவுட் படம்தான்! ஆங்கிலப் படம்தான்!


உண்மையில் இது முறையான திரைப்படம் அல்ல.

பல எபிசோடுகளின் தொகுப்பே இது.

இதை ஒரு மினி சீரிஸ் என்று சொல்கிறார்கள்.


The Queen's Gambit என்பது சதுரங்க விளையாட்டில் 

பயன்படும் ஒரு technical term.


The Queen's Gambit என்றால் என்ன 

என்று தெரியாது. இந்த வார்த்தையை 

இப்போதுதான் முதன் முதலாகக் கேள்விப் 

படுகிறேன் என்பவர்கள் அருள்கூர்ந்து 

வேறு வேலை இருந்தால் பார்க்கவும்.


இந்தப் பதிவு உங்களுக்கானது அல்ல.

இது chess playersக்கு மட்டுமான பதிவு.

One who plays a game is a player

ஆனால் இங்கு player என்ற சொல்  

ஒரு robust playerஐ மட்டுமே குறிக்கும்.


எனவே மற்றவர்கள் அருள்கூர்ந்து எனக்கு 

நேர விரையம் ஏற்படுத்தாமல், வேறு 

பதிவுகளைப் படிக்கச் செல்லவும்.


Gambit என்றால் பலி கொடுப்பது என்று 

பொருள். Queen's gambit என்றால் 

ஒரு QUEEN SIDE PAWNஐ பலி கொடுப்பது.


The Queen's gambit என்ற நாவல்தான் 

படமாக ஆக்கப் பட்டுள்ளது.


நமது நண்பரும் வாசகருமான ஸ்ரீநிவாசன் 

(முகநூலில் Srini Vasan) இப்படம் பற்றி 

என் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

பார்க்குமாறு பரிந்துரைக்கவும் செய்துள்ளார்.


இன்னும் பார்க்கவில்லை. இந்த வார 

முடிவுக்குள் பார்த்து விடலாம் என்று நினைக்கிறேன்.நீங்களும் 

பார்க்கலாம்.

**********************************************  


இதில் 

1) Queen's gambit accepted 

2) Queen's gambit declined 

என்று இரண்டு variations உண்டு.

Gambit accepted என்பதே standard variation.

Gambit declined என்பது unorthodox variation.   


   

 .   


 


.

ஞாயிறு, 22 நவம்பர், 2020

 பதிவு : தோழர் தியாகு

தோழர் இளங்கோ பிச்சாண்டி அவர்களின் விரிவான பின்னூட்டங்கள் கண்டேன். சாதி குறித்துப் பல்கலைக் கழகக் கருத்தரங்கில் கேட்கப்பட்ட ஒரு வினாவிலிருந்து இந்த விவாதம் தொடங்கிற்று: “சாதி பொருள்முதல்வாதமா? கருத்துமுதல்வாதமா?” (பொருள்முதல்வாதம் (materialism) என்பதைப் பொருண்மியம் என்றும், கருத்துமுதல்வாதம் (idealism) என்பதைக் கருத்தியம் என்றும் சொல்கிறேன்.)
இதிலிருந்து கிளைத்த ஒரு கேள்வி: சாதி பொருளா? கருத்தா?
இரண்டும்தான் என்பது என் விடை. சாதி கருத்தாகுமே தவிர பொருளாகாது என்பது தோழர் இளங்கோவின் பார்வை.
தோழர் குமரேசனுக்கு எழுதிய விடையில் தோழர் இளங்கோ சொல்கிறார்: “சாதி என்பது ஒரு கருத்தியல் கட்டுமானம். அதாவது
சமூகக் கட்டுமானம் (social structure). சாதிக்கு எவ்விதமான
பௌதிக இருப்பும் கிடையாது (No physical existence).”
கருத்தியல் கட்டுமானம், அதாவது சமூகக் கட்டுமானம் (social structure) என்றால் என்ன பொருள்? இரண்டும் ஒருபொருள் குறித்த இரு தொடர்களா? இரண்டுக்கும் வேறு வேறு பொருள் உண்டு. சமூகக் கட்டுமானம் என்றால் பொருளியல் அடித்தளம் நீங்கலான சமூகக் கட்டுமானமா? சாதியானது அடித்தளத்திலும் மேற்கட்டுமானத்திலும் இயங்குகிறது என்பதுதான் என் பார்வை. இல்லை, அது கருத்தியல் கட்டுமானம் மட்டும்தான் என்றால், தோழர் இளங்கோ அது சமூகக் கட்டுமானம் (social structure) என்று சொல்வது தன்முரண்பாடு அல்லவா?
சாதி ஒரு சமூகக் கட்டுமானம் என்று இளங்கோ சொல்வது சரி. சமூகக் கட்டுமானம் என்பது பொருளியல் அடித்தளம், கருத்தியல் மேற்கட்டுமானம் ஆகிய இரு பொதுவான அடுக்குகளைக் கொண்டது என்பதைத் தோழர் இளங்கோ மறுக்க மாட்டார். ஆகவே தோழர் இளங்கோ குமரேசனை மறுக்கும் போது வலியுறுத்தும் பார்வை என் பார்வையே ஆகும்.
ஆனால் தோழர் இளங்கோ பூதியல் (இயற்பியல் physics) கற்றுத் தேர்ச்சி கொண்டவர் என்பதுதான் அவரது பார்வையைச் சிக்கலாக்கி விடுகிறது போலும். அவர் கட்டுமானம் என்றாலே பூதியல் (பௌதிக) கட்டுமானம் என்றுதான் புரிந்து கொள்கிறார். பூதியல் கட்டுமானத்துக்கும் குமுக (சமூக) கட்டுமானத்துக்கும் இடையிலான வேறுபாட்டைக் காணத் தவறி விடுகிறார்
அவர் சொல்கிறார்: ”சென்னை அண்ணாசாலையில் 14 மாடி எல் ஐ சி கட்டிடம் உள்ளது. இது ஒரு பௌதிகக் கட்டுமானம். இதற்கு ஒரு பௌதிக இருப்பு (physical existence) உண்டு, இதைப் போன்றதல்ல சாதி என்னும் கட்டுமானம். அது மனித சிந்தனையில் மட்டுமே இருக்கும் ஒன்று.”
எல்ஐசி கட்டடம் போன்ற பௌதிகக் கட்டுமானம் என்று சாதியமைப்பை நாம் கருதவில்லை; யாரும் கருதவில்லை. குமுக (சமூக) கட்டுமானத்தைத் தெளிவின் பொருட்டு பூதியல் (பௌதிக) கட்டுமானத்தோடு ஒப்பிடலாம். சாதிக் கட்டமைப்பை ஒரு கோபுரம் அல்லது பிரமிடுடன் ஒப்பிடுவது உண்டு என்பதாலேயே இரண்டும் ஒன்றாகாது. பிரமிடு ஒரு பூதியல் (பௌதிக) கட்டுமானம், சாதியமைப்பு ஒரு குமுக (சமூக) கட்டுமானம். இது சமூகக் கட்டுமானம் என்று தோழர் இளங்கோ ஏற்றுக் கொள்வதால், அது சிந்தனையில் எதிரடித்து சிந்தனைக் கட்டுமானமாகவும் மாறுகிறது என்பது உண்மைதான்.
சாதியமைப்பு சமூகக் கட்டுமானம் என்று ஓரிடத்தில் சொல்கிறார், பிறகு அது சிந்தனைக் கட்டுமானம் என்றும் சொல்கிறார். புறவய சமூகக் கட்டுமானத்தின் அகவய மறிவினைதான் (reflex) சிந்தனைக் கட்டுமானம் என்பதை ஏற்றுக் கொள்வதில் தோழர் இளங்கோவுக்கு இடர்ப்பாடு ஒன்றுமிராது என நம்புகிறேன்.
சாதி ஒரு பௌதிகக் கட்டுமானம் என்றும் அதற்கு பௌதிக இருப்பு இருப்பதாகவும் யாராவது வாதிட்டால் தோழர் இளங்கோ தரும் விளக்கம் பொருத்தமானதே. அவரே அது ஒரு சமூகக் கட்டுமானம் என்று ஏற்றுக் கொண்ட பின் அவர் எல்ஐசி கட்டிடத்தில் ஏறி காற்றோடு கத்திச் சண்டை போடத் தேவை இல்லை.
குமரேசனுக்கு மறுப்புச் சொல்லும் போது தோழர் இளங்கோ சாதிக் கட்டுமானம் குறித்து மூன்று செய்திகள் சொல்கிறார்:
1) சாதி ஒரு கருத்தியல் கட்டுமானம்;
2) சாதி ஒரு சமூகக் கட்டுமானம்;
3) சாதி ஒரு பௌதிகக் கட்டுமானம் அன்று,
இந்த மூன்றுமே சரி. சாதி கருத்தியல் கட்டுமானமாக இருப்பதற்கும் சமூகக் கட்டுமானமாக இருப்பதற்குமான இயங்கியல் இடையுறவை இளங்கோவால் கண்டறிய முடியுமானால் சாதிப் புதிரை விடுவிப்பது எளிதாகி விடும்.
பருப்பொருளின் அழியாமை விதியை சாதிக்குப் பொருத்தி, சாதி பொருள் என்றால் ஒழிக்க முடியாதா என்று இளங்கோ கேட்பது நகைப்புக்கிடமானது. பருப்பொருளுக்குத்தான் அழிவில்லையே தவிர அதன் வடிவங்களுக்கு அழிவுண்டு என்பது கூட தோழர் இளங்கோவின் அறிவியலுக்குத் தெரியாதா?
சாதியைக் கடவுளோடு ஒப்பிடும் தோழர் இளங்கோ கடவுள் இல்லை, எனவே சாதியும் இல்லை என்ற முடிவுக்கு வருகிறார். கடவுள் ஒருபோதும் சமூகக் கட்டுமானமாக இருந்ததில்லை, ஆனால் சாதி சமூகக் கட்டுமானமாக இருப்பதை அவரே ஏற்றுக் கொள்கிறார். கோட்பாடு ஒருபுறமிருக்க, சாதி இருக்கிறதா இல்லையா? என்பதை வாழ்க்கையின் பட்டறிவு அன்றாடம் குருதியும் நெருப்புமாக நமக்கு உணர்த்திக் கொண்டிருப்பது உண்மையல்லவா?
சாதி இருக்கிறதா? இல்லையா? என்ற வினாவை சாதி வேண்டுமா? கூடாதா? என்ற வினாவுடன் குழப்பிக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
”சாதி பொருளாகவும் கருத்தாகவும் இருக்கிறது
என்ற அண்ணன் தியாகுவின் கருத்துக்கு மறுப்பு!” என்ற தலைப்பில் தோழர் இளங்கோ எழுதியுள்ள பின்னூட்டம் ’பொருள்’ என்றால் என்ன? என்பதிலேயே அவருக்குத் தெளிவில்லை என்பதைக் காட்டுகிறது.
’மார்க்சியம் அனா ஆவன்னா’ என்ற குறுநூலில் பொருள் என்றால் என்ன என்பது குறித்து நான் எழுதியிருப்பதை எடுத்துக்காட்ட விரும்புகிறேன்:
“பொருள் (அதாவது பருப்பொருள்) என்றால் என்ன? நம்மைச் சுற்றியிருப்பவை நமது ஐம்புலன்கள் வழியாகவே (கண், காது, மூக்கு, வாய், தோல்) நமக்குத் தெரிய வருகின்றன…. எல்லாப் பொருட்களும் நம் மனத்துக்கு வெளியே உள்ளன.
அதாவது அவை நமது கருத்தைச் சார்ந்திருக்கவில்லை. இதைத்தான் புறவயமாய் இருத்தல் என்கிறோம். ஆக, பொருள் என்பது (1) ஐம்புலன்கள் வழியாக அறியப்படுவது; (2) புறவயமாய் இருப்பது."
இதுதான் பொருள் என்பதற்கான மெய்யியல் இலக்கணம். இது நாம் வழக்கமாகப் புரிந்து கொள்ளும் உருண்டு திரண்ட பொருட்களுக்கு மட்டும் பொருந்துவதன்று. கையில் பிடிபடாத நிகழ்வுகள் அல்லது புலப்பாடுகளுக்கும் (phenomena) பொருந்தக் கூடியதாகும். மெய்யியல் (philosophy) நோக்கில் பொருட்களும் பருப்பொருளே; நிகழ்வுகளும் பருப்பொருளே. சூரியனும் பருப்பொருளே. சூரிய உதயமும் பருப்பொருளே. தோழர் இளங்கோவும் பருப்பொருளே, நியூட்டன் அறிவியல் மன்றமும் பருப்பொருளே.
வழக்கமான பொருள் என்பதிலிருந்து மெய்யியல் பொருளை வேறுபடுத்திக் காட்டவே பருப்பொருள் என்கிறோம். தோழர் இளங்கோ பூதியல் (இயற்பியல் அல்லது physics) எல்லைக்குள்ளேயே நிற்கிறார். அதைத் தாண்டி மெய்யியல் பரப்புக்குள் வர மறுக்கிறார். அதனால்தான் சாதியை அவரால் பருப்பொருளாக ஏற்க முடியவில்லை. சாதிக்குள்ள பொருண்மிய இருப்பும் அதன் கருத்தியல் இருப்பும் இணைந்துதான் உங்களையும் என்னையும் இந்தப் பாடு படுத்துகின்றன.
சாதிக்கு இயற்கையில் நியாயமில்லை என்றால், மனிதனை மனிதன் சுரண்டுவதற்கும் கூட நியாயமில்லைதான். சாதி மனித வாழ்வுக்குத் தேவையற்றது என்றால் சுரண்டலும் தேவையற்றதே. ஆனால் மெய்ந்நடப்பு என்பது வேறு. இளங்கோ சொல்வது வெறும் பகுத்தறிவுவாத அணுகுமுறையே தவிர, இயங்கியல் பொருண்மியம் அல்லது வரலாற்றுப் பொருண்மியம் சார்ந்த அணுகுமுறை அன்று.
சாதி என்பது என்ன?
“இந்திய சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட உற்பத்திமுறை நிலவிய காலக் கட்டத்தில், கட்டி எழுப்பப்பட்ட ஒரு கருத்தியல் கட்டுமானம்தான் சாதி” என்கிறார் இளங்கோ.
இவ்வாறு சாதிக்கும் பொருளாக்க (உற்பத்தி) முறைக்குமான தொடர்பை மெதுவாகத் தீண்டுகிறார். பொருளாக்கத்தில் உடைமைப் பிரிவினைக்கும் உழைப்புப் பிரிவினைக்கும் சாதியமைப்பு அடிப்படை ஆயிற்றா? இல்லையா? ஆனது உண்மை என்றால், சாதிக்குச் சமூகப் பொருளியல் கட்டமைப்பில் இடமுண்டு என்று பொருள்.
விவாதிப்போம்.
பின்குறிப்பு: தோழர் இளங்கோவன் என்னிடம் அன்பு கொண்டு சொல்லியிருக்கும் வார்த்தைகளுக்கு நன்றி! எந்த விவாதத்திலும் தலைப்புக்கு அப்பால் பேசும் வழக்கம் எனக்கில்லை என்பதால் ’தமிழ்த் தலிபானிசம்’ பற்றியெல்லாம் நான் எதுவும் சொல்லப் போவதில்லை. ஆனாலும் ஒன்று: சாதியமைப்பை விளங்கிக் கொள்ள நியூட்டனின் அறிவியல் போதாது. மார்க்சின் மெய்யியலும் வேண்டும். அதற்குத் தமிழ்நாட்டில் தமிழும் வேண்டும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
இராமச்சந்திர மூர்த்தி.பா, Sudha Thiagu and 29 others
41 Comments
14 Shares
Share
ON

 பொருள் பற்றிய பத்தாம்பசலித் தனமான

வரையறை இனிமேலும் செல்லுபடி ஆகாது!
அண்ணன் தியாகு அவர்களின் விளக்கத்தை
முன்வைத்துச் சில கருத்துக்கள்!
------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------
சாதி என்பது ஒரு கருத்தியல் கட்டுமானம் என்ற
கருத்தை முன்வைத்து அதை நிரூபித்தும் உள்ளேன்.
எனினும் இந்த வரையறை மட்டுமே சாதியை
முழுமையாக வர்ணிக்கப் போதுமானதல்ல.
தேவையான மற்றும் போதுமான (necessary and sufficient)
நிபந்தனைகள் நிறைவு செய்யப்பட வேண்டும் என்று
அறிவியல் கோருகிறது. எனவே சாதி ஒரு சமூகக்
கட்டுமானம் என்ற வரையறையையும்
முன்வைத்துள்ளேன்.
சாதி ஒரு கருத்தியல் கட்டுமானம் என்பதற்கும்
சாதி ஒரு சமூகக் கட்டுமானம் என்பதற்கும் இடையில்
எவ்வித சுய முரண்பாடும் இல்லை. சாதி ஒரு சமூகக்
கட்டுமானம் என்பதை மறுப்பது சாதியின் இருப்பையே
மறுப்பதாகி விடும்.
இவ்விரண்டு வரையறைகளும் போதுமானவை அல்ல
என்று அறிவியல் கூறுவதால், சாதிக்கு எவ்விதமான
பௌதிக இருப்போ பௌதிக அடித்தளமோ கிடையாது
என்ற முக்கியமான வரையறையையும் முன்வைத்துள்ளேன்.
ஆக சாதி என்பது பொருளல்ல வெறும் கருத்தே என்பது
இவற்றில் இருந்து பெறப்படுகிறது. எனினும் அண்ணன்
தியாகு அவர்கள் இதில் உடன்பட மறுக்கிறார். சாதி
என்பது பொருளும் ஆகும் என்கிறார்.
சாதி குறித்த கருத்தொற்றுமை ஏற்படாமல் தடுக்கும்
இந்தச் சிக்கலுக்குக் காரணம் என்ன? பொருள் பற்றிய
வரையறையில், புரிதலில் நாங்கள் இருவரும்
முரண்படுவதுதான் ஒரே காரணம்.
ஐம்புலன்களால் அறியத் தக்கதும் மனித சிந்தனைக்கு
வெளியில் சுயேச்சையாக இருப்பதுமே பொருள் என்று
கூறும் அண்ணன் தியாகு அவர்கள், அந்த வரையறையில்
கறாராக நிற்காமல், சிந்தனையையும் பொருளின் கணக்கில்
எழுதி விடுகிறார்.
வடிவமுடைய பொருட்கள் மட்டுமல்ல, நிகழ்வுகளும்
புலப்பாடுகளும் (events and phenomena) கூட பொருட்கள்தாம்
என்று கூறுவதன் மூலம் பொருள் என்பதன் வரம்பை
வெகுவாக விஸ்தரித்து விடுகிறார். இதிலுள்ள ஆபத்து
என்னவென்றால், உருவமற்ற இறைவன் ஏக இறைவன்
போன்ற ஆசாமிகளும் கூட பொருளின் கணக்கில்
நுழைந்து விடுவார்கள்.
எனினும், அண்ணன் தியாகு அவர்கள் முன்வைக்கும்
பொருள் பற்றிய தளர்வானதும் நெகிழ்ச்சியானதுமான
வரையறைக்கு அவரைக் குற்றம் சொல்ல இயலாது.
19ஆம் நூற்றாண்டின் பொருள்முதல்வாதத்தைத்
தாண்டிச் செல்லாத ஆகப் பெருமான்மையினரான
மார்க்சியர்களின் புரிதலையே அண்ணன் தியாகு
அவர்களும் கொண்டிருக்கிறார். நதியின் பிழையன்று
நறும்புனல் இன்மை!
மார்க்சும் எங்கல்சும் 19ஆம் நூற்றாண்டில் பிறந்து
வாழ்ந்து மறைந்தவர்கள். மார்க்ஸ் 1818ல் பிறந்து
1883ல் மறைந்தார்; எங்கல்ஸ் 1820ல் பிறந்து 1895ல்
மறைந்தார். தங்களின் தத்துவத்துக்கு இயங்கியல்
பொருள்முதல்வாதம் என்று மார்க்சோ எங்கல்சோ
பெயரிடவில்லை. மார்க்ஸ் எங்கல்சின் மறைவுக்குப்
பின்னரே, இயங்கியல் பொருள்முதல்வாதம் என்ற
பெயர் ரஷ்ய மார்க்சிய அறிஞர் பிளாக்கானவ்
அவர்களால் சூட்டப் பட்டது.
மார்க்சும் எங்கல்சும் உலகிற்குக் கொடையளித்த
பொருள்முதல்வாதம் 19ஆம் நூற்ராண்டில்
ஐரோப்பாவில் நிலவிய பொருள்முதல்வாதம்.
நியூட்டனின் இயற்பியலை சாத்தியமான அளவுக்கு
உள்வாங்கிக் கொண்ட பொருள்முதல்வாதமாக
மார்க்ஸ் எங்கல்சின் பொருள்முதல்வாதம் இருந்தது.
எனினும் பொருள் என்றால் என்ன என்று தலைசிறந்த
பொருள்முதல்வாதிகளான மார்க்சோ எங்கல்சோ வரையறுக்கவில்லை. இது அவர்களின் குறையன்று.
அவ்வாறு வரையறுப்பதற்கான தேவை அவர்களின்
காலத்தில் எழவில்லை.
மார்க்ஸ் எங்கல்ஸ் காலத்தில் பொருள் பற்றிய
அரிஸ்டாட்டிலின் வரையறையை அக்கால அறிவியல்
உலகம் ஏற்றுக் கொண்டிருந்தது. நான்கு மூலக்
கொள்கையே (Four elements theory) அரிஸ்டாட்டிலின்
பொருள் பற்றிய கொள்கை. அதே காலத்தில்,
இந்தியாவிலும் பிற கீழ்த்திசை நாடுகளிலும்
பஞ்சபூதக் கொள்கை நிலவியது. பொருள் என்பது
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து
பூதங்களின் சேர்க்கையே என்பதுதான்
பஞ்சபூதக் கொள்கை. நாம் கூறிய பஞ்ச பூதங்களில்
ஆகாயத்தை மட்டும் நீக்கி விட்டு, மீதி நான்கு
பூதங்களின் சேர்க்கையே பொருள் என்றார்
அரிஸ்டாட்டில்.
அரிஸ்டாட்டிலின் வரையறையைத்தான் நியூட்டனும்
கலிலியோவும் ஏற்றுக் கொண்டிருந்தனர். அதையே
மார்க்சும் எங்கல்சும் ஏற்றுக் கொண்டிருந்தனர்.
எனவே பொருள் என்பது குறித்து வரையறுக்க
வேண்டிய தேவை எழவில்லை மார்க்சுக்கும்
எங்கல்சுக்கும்.
ஆனால், லெனின் காலத்தில் பொருள் என்றால் என்ன
என்று வரையறுக்க வேண்டிய நிர்ப்பந்தம் லெனினுக்கு
இருந்தது. பொருள் என்றால் என்ன என்ற கேள்வியை
கருத்துமுதல்வாதிகள் எழுப்பியபடியே இருந்தார்கள்.
இதற்கு பதிலளிக்கவே "பொருள் என்பது மனத்தைச்
சாராத சுயேச்சையான ஒரு புறநிலை யதார்த்தம்"
என்ற தமது புகழ் பெற்ற வரையறையை லெனின்
அளித்தார். இதன் மூலம் மார்க்ஸ் எங்கல்ஸ்
காலத்திய 19ஆம் நூற்றாண்டின்
பொருள்முதல்வாதத்தை லெனின் புதுப்பித்தார்.
மார்க்ஸ் எங்கல்சுக்கு முன்பே பொருள்முதல்வாதம்
இருந்தது. அவர்களின் மறைவுக்குப் பின்னரும்
பொருள்முதல்வாதம் நீடித்து நிற்கிறது. மார்க்சிய
மூல ஆசான்களுக்குப் பின்னர், பொருள்முதல்வாதத்தை
மறைந்த விஞ்ஞானி ஸ்டீபான் ஹாக்கிங்
வளர்த்தெடுத்தார்.
பொருள் பற்றிய மனிதகுலத்தின் அறிவு மார்க்ஸ்
எங்கல்சின் 19ஆம் நூற்ராண்டுக்குப் பின்னர்
அசுரத்தனமாக வளர்ந்துள்ளது. Atomic physics, Nuclear physics,
Particle physics ஆகிய துறைகள் மார்க்சின் காலத்தில்
இயற்பியலில் கிடையாது. 1897ல்தான் ஜே ஜே தாம்சன்
எலக்ட்ரானைக் கண்டுபிடித்தார். 1917ல்தான்
ருதர்போர்டு புரோட்டானைக் கண்டுபிடித்தார்.
ஜேம்ஸ் சாட்விக் நியூட்ரானைக் கண்டுபிடித்தது
1932ல்.
இந்த அறிவியல் வளர்ச்சிகள் யாவும் மார்க்ஸ்
எங்கல்ஸ் காலத்திற்குப் பிந்தியவை. அறிவியலின்
இந்த வளர்ச்சியை உள்வாங்கியதே நவீன
பொருள்முதல்வாதம். அது ஸ்டீபன் ஹாக்கிங்கின்
பொருள்முதல்வாதம். இதுவே நியூட்டன் அறிவியல்
மன்றத்தின் பொருள்முதல்வாதம். இதுவே,
இது மட்டுமே போர்க்குணமிக்க பொருள்முதல்வாதம்.
எனவே நவீன அறிவியல் கூறும் பருப்பொருளின்
வரையறைப்படி, சாதி என்பது பொருளே அல்ல.
பௌதிக இருப்போ பௌதிக அடித்தளமோ அற்ற
எதுவும் பொருளே அல்ல. சிந்தனையோ சிந்தனையின்
விளைபொருளோ ஒருபோதும் பொருள் ஆகாது.
எனவே சாதி என்பது பொருளல்ல.
19ஆம் நூற்றாண்டுப் பொருள்முதல்வாதப் பழமைச்
சிறையில் இருந்து மார்க்சியர்களை விடுவிப்போம்.
********************************************************* xxxx
வேல்முருகன் சுப்பிரமணியன், Manohar P and 15 others

Share
ON THIS DAY
2 years ago
மாமன் மகளடியோ மச்சினியோ நானறியேன்
காமன் கணையெனக்குக் கனலாக வேகுதடி
மாமன் மகளாகி மச்சினியும் நீயானால்
காமன் கணைகளெல்லாம் - என் கண்ணம்மா!
கண்விழிக்க வேகாவோ! …
See More
Share
ON THIS DAY
2 years ago
பதிவு : தோழர் தியாகு
தோழர் இளங்கோ பிச்சாண்டி அவர்களின் விரிவான பின்னூட்டங்கள் கண்டேன். சாதி குறித்துப் பல்கலைக் கழகக் கருத்தரங்கில் கேட்கப்பட்ட ஒரு வினாவிலிருந்து இந்த விவாதம் தொடங்கிற்று: “சாதி பொருள்முதல்வாதமா? கருத்துமுதல்வாதமா?” (பொருள்முதல்வாதம் (materialism) என்பதைப் பொருண்மியம் என்றும், கருத்துமுதல்வாதம் (idealism) என்பதைக் கருத்தியம் என்றும் சொல்கிறேன்.)
இதிலிருந்து கிளைத்த ஒரு கேள்வி: சாதி பொருளா? கருத்தா? …
See More
இராமச்சந்திர மூர்த்தி.பா, Sudha Thiagu and 29 others
41 Comments
14 Shares
Share
ON THIS DAY
2 years ago
World chess game 9 is drawn
after 56 moves. Carlsen and Caruana both at 4.5 points. All the 9 games were drawn. 3 games remaining
Hari Lakshmanan, Mukilan Sk and 2 others
4 Shares
Share
ON THIS DAY
3 years ago
Image may contain: 2 people, people smiling
Vetri Vidiyal Srinivasan, Sethu Ramalingam and 25 others
28 Comments
1 Share
Share
ON THIS DAY
3 years ago
iNotgtSvecmmberipa o22eno,soahnlrS umge201d7h 
Shared with Your friends and Manohar's friends
Friends
ஹெச் ராஜா மு க அழகிரி ரகசிய சந்திப்பு!திமுகவில் சேர்க்காவிட்டால் பாஜகவில் சேர அழகிரி திட்டம்!தமிழிசை விலக அழகிரி தலைவர் ஆகிறார்!
இராமச்சந்திர மூர்த்தி.பா, Vetri Vidiyal Srinivasan and 74 others
28 Comments
1 Share
Share
ON THIS DAY
4 years ago

Ilango Pichandy
 is with 
NA Mohan
 and 2 others.

இடைத்தேர்தல் முடிவுகள்!
தமிழ்நாட்டில் மூன்றிலும் அதிமுக வெற்றி!
வின் டி.வி.யில் விவாதம்!
--------------------------------------------------------------------------------
நாள்: இன்று 22.11.2016 செவ்வாய் இரவு 8.30 மணி to 9.30 மணி.…
See More
No photo description available.
Manohar P, NA Mohan and 14 others
1 Comment
2 Shares
Share
ON THIS DAY
4 years ago
No photo description available.
தமிழக இடைத்தேர்தல் முடிவுகள் !
Manohar P, Selva Nayagam and 11 others
1 Comment
Share
ON THIS DAY
5 years ago
காமராசரைப் பற்றி பக்தவத்சலம் கூறுகிறார்
தமது சுயசரிதையில்!
1940-1969 காங்கிரஸ் பிளவு வரை காமராஜிடம் மனப்பூர்வமான விசுவாசத்துடன் செயல்பட்டு வந்தேன்.
ஆனால், ஒத்துழைப்பு, ஆதரவு, விசுவாசம் இவையனைத்தும் துரதிர்ஷ்டவசமாக காம…
See More
You're All Caught Up
Check back tomorrow to see more of your memories!பொருள் பற்றிய பத்தாம்பசலித் தனமான
வரையறை இனிமேலும் செல்லுபடி ஆகாது!
அண்ணன் தியாகு அவர்களின் விளக்கத்தை
முன்வைத்துச் சில கருத்துக்கள்!
------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------
சாதி என்பது ஒரு கருத்தியல் கட்டுமானம் என்ற
கருத்தை முன்வைத்து அதை நிரூபித்தும் உள்ளேன்.
எனினும் இந்த வரையறை மட்டுமே சாதியை
முழுமையாக வர்ணிக்கப் போதுமானதல்ல.
தேவையான மற்றும் போதுமான (necessary and sufficient)
நிபந்தனைகள் நிறைவு செய்யப்பட வேண்டும் என்று
அறிவியல் கோருகிறது. எனவே சாதி ஒரு சமூகக்
கட்டுமானம் என்ற வரையறையையும்
முன்வைத்துள்ளேன்.
சாதி ஒரு கருத்தியல் கட்டுமானம் என்பதற்கும்
சாதி ஒரு சமூகக் கட்டுமானம் என்பதற்கும் இடையில்
எவ்வித சுய முரண்பாடும் இல்லை. சாதி ஒரு சமூகக்
கட்டுமானம் என்பதை மறுப்பது சாதியின் இருப்பையே
மறுப்பதாகி விடும்.
இவ்விரண்டு வரையறைகளும் போதுமானவை அல்ல
என்று அறிவியல் கூறுவதால், சாதிக்கு எவ்விதமான
பௌதிக இருப்போ பௌதிக அடித்தளமோ கிடையாது
என்ற முக்கியமான வரையறையையும் முன்வைத்துள்ளேன்.
ஆக சாதி என்பது பொருளல்ல வெறும் கருத்தே என்பது
இவற்றில் இருந்து பெறப்படுகிறது. எனினும் அண்ணன்
தியாகு அவர்கள் இதில் உடன்பட மறுக்கிறார். சாதி
என்பது பொருளும் ஆகும் என்கிறார்.
சாதி குறித்த கருத்தொற்றுமை ஏற்படாமல் தடுக்கும்
இந்தச் சிக்கலுக்குக் காரணம் என்ன? பொருள் பற்றிய
வரையறையில், புரிதலில் நாங்கள் இருவரும்
முரண்படுவதுதான் ஒரே காரணம்.
ஐம்புலன்களால் அறியத் தக்கதும் மனித சிந்தனைக்கு
வெளியில் சுயேச்சையாக இருப்பதுமே பொருள் என்று
கூறும் அண்ணன் தியாகு அவர்கள், அந்த வரையறையில்
கறாராக நிற்காமல், சிந்தனையையும் பொருளின் கணக்கில்
எழுதி விடுகிறார்.
வடிவமுடைய பொருட்கள் மட்டுமல்ல, நிகழ்வுகளும்
புலப்பாடுகளும் (events and phenomena) கூட பொருட்கள்தாம்
என்று கூறுவதன் மூலம் பொருள் என்பதன் வரம்பை
வெகுவாக விஸ்தரித்து விடுகிறார். இதிலுள்ள ஆபத்து
என்னவென்றால், உருவமற்ற இறைவன் ஏக இறைவன்
போன்ற ஆசாமிகளும் கூட பொருளின் கணக்கில்
நுழைந்து விடுவார்கள்.
எனினும், அண்ணன் தியாகு அவர்கள் முன்வைக்கும்
பொருள் பற்றிய தளர்வானதும் நெகிழ்ச்சியானதுமான
வரையறைக்கு அவரைக் குற்றம் சொல்ல இயலாது.
19ஆம் நூற்றாண்டின் பொருள்முதல்வாதத்தைத்
தாண்டிச் செல்லாத ஆகப் பெருமான்மையினரான
மார்க்சியர்களின் புரிதலையே அண்ணன் தியாகு
அவர்களும் கொண்டிருக்கிறார். நதியின் பிழையன்று
நறும்புனல் இன்மை!
மார்க்சும் எங்கல்சும் 19ஆம் நூற்றாண்டில் பிறந்து
வாழ்ந்து மறைந்தவர்கள். மார்க்ஸ் 1818ல் பிறந்து
1883ல் மறைந்தார்; எங்கல்ஸ் 1820ல் பிறந்து 1895ல்
மறைந்தார். தங்களின் தத்துவத்துக்கு இயங்கியல்
பொருள்முதல்வாதம் என்று மார்க்சோ எங்கல்சோ
பெயரிடவில்லை. மார்க்ஸ் எங்கல்சின் மறைவுக்குப்
பின்னரே, இயங்கியல் பொருள்முதல்வாதம் என்ற
பெயர் ரஷ்ய மார்க்சிய அறிஞர் பிளாக்கானவ்
அவர்களால் சூட்டப் பட்டது.
மார்க்சும் எங்கல்சும் உலகிற்குக் கொடையளித்த
பொருள்முதல்வாதம் 19ஆம் நூற்ராண்டில்
ஐரோப்பாவில் நிலவிய பொருள்முதல்வாதம்.
நியூட்டனின் இயற்பியலை சாத்தியமான அளவுக்கு
உள்வாங்கிக் கொண்ட பொருள்முதல்வாதமாக
மார்க்ஸ் எங்கல்சின் பொருள்முதல்வாதம் இருந்தது.
எனினும் பொருள் என்றால் என்ன என்று தலைசிறந்த
பொருள்முதல்வாதிகளான மார்க்சோ எங்கல்சோ வரையறுக்கவில்லை. இது அவர்களின் குறையன்று.
அவ்வாறு வரையறுப்பதற்கான தேவை அவர்களின்
காலத்தில் எழவில்லை.
மார்க்ஸ் எங்கல்ஸ் காலத்தில் பொருள் பற்றிய
அரிஸ்டாட்டிலின் வரையறையை அக்கால அறிவியல்
உலகம் ஏற்றுக் கொண்டிருந்தது. நான்கு மூலக்
கொள்கையே (Four elements theory) அரிஸ்டாட்டிலின்
பொருள் பற்றிய கொள்கை. அதே காலத்தில்,
இந்தியாவிலும் பிற கீழ்த்திசை நாடுகளிலும்
பஞ்சபூதக் கொள்கை நிலவியது. பொருள் என்பது
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து
பூதங்களின் சேர்க்கையே என்பதுதான்
பஞ்சபூதக் கொள்கை. நாம் கூறிய பஞ்ச பூதங்களில்
ஆகாயத்தை மட்டும் நீக்கி விட்டு, மீதி நான்கு
பூதங்களின் சேர்க்கையே பொருள் என்றார்
அரிஸ்டாட்டில்.
அரிஸ்டாட்டிலின் வரையறையைத்தான் நியூட்டனும்
கலிலியோவும் ஏற்றுக் கொண்டிருந்தனர். அதையே
மார்க்சும் எங்கல்சும் ஏற்றுக் கொண்டிருந்தனர்.
எனவே பொருள் என்பது குறித்து வரையறுக்க
வேண்டிய தேவை எழவில்லை மார்க்சுக்கும்
எங்கல்சுக்கும்.
ஆனால், லெனின் காலத்தில் பொருள் என்றால் என்ன
என்று வரையறுக்க வேண்டிய நிர்ப்பந்தம் லெனினுக்கு
இருந்தது. பொருள் என்றால் என்ன என்ற கேள்வியை
கருத்துமுதல்வாதிகள் எழுப்பியபடியே இருந்தார்கள்.
இதற்கு பதிலளிக்கவே "பொருள் என்பது மனத்தைச்
சாராத சுயேச்சையான ஒரு புறநிலை யதார்த்தம்"
என்ற தமது புகழ் பெற்ற வரையறையை லெனின்
அளித்தார். இதன் மூலம் மார்க்ஸ் எங்கல்ஸ்
காலத்திய 19ஆம் நூற்றாண்டின்
பொருள்முதல்வாதத்தை லெனின் புதுப்பித்தார்.
மார்க்ஸ் எங்கல்சுக்கு முன்பே பொருள்முதல்வாதம்
இருந்தது. அவர்களின் மறைவுக்குப் பின்னரும்
பொருள்முதல்வாதம் நீடித்து நிற்கிறது. மார்க்சிய
மூல ஆசான்களுக்குப் பின்னர், பொருள்முதல்வாதத்தை
மறைந்த விஞ்ஞானி ஸ்டீபான் ஹாக்கிங்
வளர்த்தெடுத்தார்.
பொருள் பற்றிய மனிதகுலத்தின் அறிவு மார்க்ஸ்
எங்கல்சின் 19ஆம் நூற்ராண்டுக்குப் பின்னர்
அசுரத்தனமாக வளர்ந்துள்ளது. Atomic physics, Nuclear physics,
Particle physics ஆகிய துறைகள் மார்க்சின் காலத்தில்
இயற்பியலில் கிடையாது. 1897ல்தான் ஜே ஜே தாம்சன்
எலக்ட்ரானைக் கண்டுபிடித்தார். 1917ல்தான்
ருதர்போர்டு புரோட்டானைக் கண்டுபிடித்தார்.
ஜேம்ஸ் சாட்விக் நியூட்ரானைக் கண்டுபிடித்தது
1932ல்.
இந்த அறிவியல் வளர்ச்சிகள் யாவும் மார்க்ஸ்
எங்கல்ஸ் காலத்திற்குப் பிந்தியவை. அறிவியலின்
இந்த வளர்ச்சியை உள்வாங்கியதே நவீன
பொருள்முதல்வாதம். அது ஸ்டீபன் ஹாக்கிங்கின்
பொருள்முதல்வாதம். இதுவே நியூட்டன் அறிவியல்
மன்றத்தின் பொருள்முதல்வாதம். இதுவே,
இது மட்டுமே போர்க்குணமிக்க பொருள்முதல்வாதம்.
எனவே நவீன அறிவியல் கூறும் பருப்பொருளின்
வரையறைப்படி, சாதி என்பது பொருளே அல்ல.
பௌதிக இருப்போ பௌதிக அடித்தளமோ அற்ற
எதுவும் பொருளே அல்ல. சிந்தனையோ சிந்தனையின்
விளைபொருளோ ஒருபோதும் பொருள் ஆகாது.
எனவே சாதி என்பது பொருளல்ல.
19ஆம் நூற்றாண்டுப் பொருள்முதல்வாதப் பழமைச்
சிறையில் இருந்து மார்க்சியர்களை விடுவிப்போம்.
*********************************************************
வேல்முருகன் சுப்பிரமணியன், Manohar P and 15 others
5 Comments
4 Shares
Share
ON THIS DAY
2 years ago
மாமன் மகளடியோ மச்சினியோ நானறியேன்
காமன் கணையெனக்குக் கனலாக வேகுதடி
மாமன் மகளாகி மச்சினியும் நீயானால்
காமன் கணைகளெல்லாம் - என் கண்ணம்மா!
கண்விழிக்க வேகாவோ! …
See More
Share
ON THIS DAY
2 years ago
பதிவு : தோழர் தியாகு
தோழர் இளங்கோ பிச்சாண்டி அவர்களின் விரிவான பின்னூட்டங்கள் கண்டேன். சாதி குறித்துப் பல்கலைக் கழகக் கருத்தரங்கில் கேட்கப்பட்ட ஒரு வினாவிலிருந்து இந்த விவாதம் தொடங்கிற்று: “சாதி பொருள்முதல்வாதமா? கருத்துமுதல்வாதமா?” (பொருள்முதல்வாதம் (materialism) என்பதைப் பொருண்மியம் என்றும், கருத்துமுதல்வாதம் (idealism) என்பதைக் கருத்தியம் என்றும் சொல்கிறேன்.)
இதிலிருந்து கிளைத்த ஒரு கேள்வி: சாதி பொருளா? கருத்தா? …
See More
இராமச்சந்திர மூர்த்தி.பா, Sudha Thiagu and 29 others
41 Comments
14 Shares
Share
ON THIS DAY
2 years ago
World chess game 9 is drawn
after 56 moves. Carlsen and Caruana both at 4.5 points. All the 9 games were drawn. 3 games remaining
Hari Lakshmanan, Mukilan Sk and 2 others
4 Shares
Share
ON THIS DAY
3 years ago