செவ்வாய், 17 நவம்பர், 2020

 முன்னாள் ஆவணப்பட நடிகையும் எழுத்தாளருமான 

சூசன்னா அருந்ததி ராய் எழுதிய ஒரு புத்தகம்   

நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலையில் 

பாடமாக இருந்தது. "Walking with the comrades" என்ற 

பெயரிலான அந்தப் புத்தகம் எம் ஏ ஆங்கில 

இலக்கியத்தில் பாடம். அருந்ததி ராய் என்றாலே அவர் 

ஆங்கிலத்தில்தான் எழுதுவார் என்பது விஷயம் 

அறிந்தோருக்குத் தெரியும். மிகச் சிறிதளவு தமது 

தாய்மொழியான மலையாளத்தில் எழுதியும் உள்ளார்.


தற்போது சூசன்னாவின் "Walking with the comrades" 

என்ற புத்தகத்தை பாடப்பகுதியில் இருந்து நீக்கி 

உத்தரவு பிறப்பித்துள்ளார் பல்கலையின் துணைவேந்தர்.

ஆர் எஸ் எஸ்சின் மாணவர் அமைப்பான "அகில  பாரத

வித்யார்த்தி பரிஷத்" (ABVP) இதற்காகப் 

போராடியதாகவும் புத்தகத்தை நீக்க அழுத்தம் 

தந்ததாகவும் கூறப்படுகிறது.


சூசன்னா அருந்ததி ராயின் புத்தகம் பாடப் பகுதியில் 

இருந்து நீக்கப்பட்டதை நியூட்டன் அறிவியல் மன்றம் 

ஆதரிக்கவில்லை. அது முட்டாள்தனமான நடவடிக்கை 

என்ரூ நாங்கள் கருதுகிறோம். 


பல்கலையில் பாடமாக வைக்கப்பட்ட ஒரு புத்தகத்தின் 

ஆயுள் மூன்று ஆண்டுகள்தான். அதன் பின்பு சிலபஸ் 

மாறி விடும். 2020ல் சேக்ஸ்பியரின் மாக்பெத் பாடமாக 

வைக்கப்பட்டால், அது யுகயுகாந்திரத்துக்கும் பாடமாக 

இறுக்கப் போவதில்லை. 2024ல் Merchant of Veniceஐ 

பாடமாக வைத்து விடுவார்கள்.


இவ்வாறு நீர்க்குமிழித் தன்மை வாய்ந்த 

ஒரு விஷயத்தில் கருத்துச் செலுத்துவது

அறிவுடைமை ஆகாது. சூசன்னாவின் 

புத்தகம் நீக்கப் பட்டதற்கு யார் காரணமோ,

அவர்கள் தங்களின் செயல் பேதைமையுள் 

எல்லாம் பேதைமை என்று உணர வேண்டும்.


ஒரு தவறான புத்தகம் பாடமாக வைக்கப்படுமானால்,

அது  பாடமாக வைக்கப் படுவதற்கு முன்பே,

அதாவது பாட அறிவிப்பு வந்த உடனேயே எதிர்க்க 

வேண்டும். மாறாக பாடமாக வைக்கப்பட்டு

 "fait accompli" என்ற நிலை ஏற்பட்ட பிறகு 

எதிர்க்க முற்படுதல் உரிய பயனைத் தராது.


கெமிஸ்ட்ரி படித்தவர்கள் Nascent Hydrogen பற்றி 

அறிவார்கள். Nascent Hydrogen என்றால் அப்போதுதான் 

புதிதாகப் பிறந்த ஹைட்ரஜன் என்று பொருள்.

அதாவது இது molecular hydrogen அல்ல. இரண்டும் 

வேறு  வேறு பண்புகள் கொண்டவை. 

Molecular hydrogenன் chemical symbol அல்லது formula 

H2 ஆகும். ஆனால் Nascent Hydrogenன் formula

H மட்டுமே. 


ஒரு தவறான புத்தகத்தை எதிர்ப்பது என்றால்,

அது Nascent Hydrogen நிலையில் இருக்கும்போதே 

எதிர்க்க வேண்டும். அது molecular hydrogen நிலையை 

அடையும் முன்பே எதிர்த்து முறியடிப்பது சிறந்தது.


சூசன்னாஅருந்ததி ராயின் புத்தகத்தை நீக்கியதால் 

என்ன பயன் விளைந்து விட்டது? சூசன்னாவை பெரும் 

புரட்சியாளராகச் சித்தரிக்கும் முயற்சி நடக்கிறது.

அவருடைய புத்தகத்தைப் படித்து எத்தனை பேர் 

மாவோயிஸ்ட் ஆகி விடுவான்? ஒரு பயலும் 

ஆக மாட்டான் என்பதுதானே நிதர்சனம்!


மாவோயிஸ்ட் ஆவது என்பது அதிகபட்ச 

அர்ப்பணிப்பையும் தியாகத்தையும் கோருவது.

நுகர்வுக் கலாச்சாரத்தில் ஊறித் திளைத்த 

இன்றைய தலைமுறையின் மாணவர்களோ 

இளைஞர்களோ மாவோயிஸ்ட் ஆவது கடினம்.

தங்களது குட்டி முதலாளித்துவ வாழ்க்கையின் 

சுகங்களை இழக்க அவர்கள் ஒருபோதும்  

சம்மதிக்க மாட்டார்கள்.


அருந்ததி ராயின் புத்தகத்தைப் படித்து விட்டு 

ஒருவன் மாவோயிஸ்ட் ஆகிறான் என்றால்,

அவன் சரோஜாதேவி புக்கையும் படித்து விட்டு

மாவோயிஸ்ட் ஆவான். சரோஜாதேவி புக்கைத் 

தடை செய்ய இயலுமா?


சாராம்சத்தில் சூசன்னா அருந்ததி ராய் யார்?

அவர் ஒரு இடதுசாரியோ மார்க்சிஸ்டோ 

அல்லது மாவோயிஸ்டா மாவோயிஸ்ட் 

அபிமானியோ அல்லர். அவர் ஒரு லிபரல் 

பூர்ஷ்வா. மேலும் அவர் ஒரு பின்நவீனத்துவர்.


ஏகாதிபத்தியத்திடம் நிதி உதவி பெற்று ஒரு 

அரசுசாரா நிறுவனத்தை (NGO) அவர் நடத்தி 

வருகிறார். அவருக்கு நிதி வழங்கும் 

ஏகாதிபத்தியமே அவரின் எஜமானர் ஆகும்.


எனவே ஒரு லிபரல் பூர்ஷ்வா ஆகிய அருந்ததி 

ராயை மாவோயிஸ்டாகவோ அல்லது 

மாவோயிஸ்டுகளின் அபிமானியோ சித்தரிப்பது

முட்டாள்தனம் ஆகும். எனவே அவரின் புத்தகம் 

பல்கலைக் கழகப் பாடப்பகுதியில் இருந்து 

நீக்கப் பட்டதில் கண்ணீர் சிந்த எதுவும் இல்லை.


திருமணம், குடும்பம் ஆகியவற்றைக்  கடுமையாக 

எதிர்க்கும் அருந்ததி ராய் திருமணமோ குடும்பமோ

இல்லாமல் வாழ்ந்து வருகிறார். முதலில் ஒருவரோடு 

சில ஆண்டுகள் வாழ்ந்த பிறகு, அவருக்கு உடல்

நலிவுற்ற நிலையில் அவரை விரட்டி விட்டு,

வேறு ஒருவருடன் வாழத் தொடங்கினார்.பின்னர் 

அவரையும் விட்டு விலகினார். 


அருந்ததி ராயின் அகராதியில் கணவர் (husband)

என்ற சொல்லுக்கு இடம் கிடையாது. அதற்குப் 

பதிலாக பாலியல் பங்காளி (sexual partner) .          

இடம் பெறுகிறார். இவ்வாறு மாபெரும் 

கலாச்சாரச் சீரழிவின் ஐக்கானாக (icon) 

அருந்ததி ராய் இருந்து வருகிறார்.

========================================

ஒரு தவறான புத்தகம் பாடமாக வைக்கப்படுமானால்,

அது  பாடமாக வைக்கப் படுவதற்கு முன்பே,

அதாவது பாட அறிவிப்பு வந்த உடனேயே எதிர்க்க 

வேண்டும். மாறாக பாடமாக வைக்கப்பட்டு

 "fait accompli" என்ற நிலை ஏற்பட்ட பிறகு 

எதிர்க்க முற்படுதல் உரிய பயனைத் தராது.


கெமிஸ்ட்ரி படித்தவர்கள் Nascent Hydrogen பற்றி 

அறிவார்கள். Nascent Hydrogen என்றால் அப்போதுதான் 

புதிதாகப் பிறந்த ஹைட்ரஜன் என்று பொருள்.

அதாவது இது molecular hydrogen அல்ல. இரண்டும் 

வேறு  வேறு பண்புகள் கொண்டவை. 

Molecular hydrogenன் chemical symbol அல்லது formula 

H2 ஆகும். ஆனால் Nascent Hydrogenன் formula

H மட்டுமே. 


ஒரு தவறான புத்தகத்தை எதிர்ப்பது என்றால்,

அது Nascent Hydrogen நிலையில் இருக்கும்போதே 

எதிர்க்க வேண்டும். அது molecular hydrogen நிலையை 

அடையும் முன்பே எதிர்த்து முறியடிப்பது சிறந்தது.


சூசன்னாஅருந்ததி ராயின் புத்தகத்தை நீக்கியதால் 

என்ன பயன் விளைந்து விட்டது? சூசன்னாவை பெரும் 

புரட்சியாளராகச் சித்தரிக்கும் முயற்சி நடக்கிறது.

அவருடைய புத்தகத்தைப் படித்து எத்தனை பேர் 

மாவோயிஸ்ட் ஆகி விடுவான்? ஒரு பயலும் 

ஆக மாட்டான் என்பதுதானே நிதர்சனம்!


மாவோயிஸ்ட் ஆவது என்பது அதிகபட்ச 

அர்ப்பணிப்பையும் தியாகத்தையும் கோருவது.

நுகர்வுக் கலாச்சாரத்தில் ஊறித் திளைத்த 

இன்றைய தலைமுறையின் மாணவர்களோ 

இளைஞர்களோ மாவோயிஸ்ட் ஆவது கடினம்.

தங்களது குட்டி முதலாளித்துவ வாழ்க்கையின் 

சுகங்களை இழக்க அவர்கள் ஒருபோதும்  

சம்மதிக்க மாட்டார்கள்.


அருந்ததி ராயின் புத்தகத்தைப் படித்து விட்டு 

ஒருவன் மாவோயிஸ்ட் ஆகிறான் என்றால்,

அவன் சரோஜாதேவி புக்கையும் படித்து விட்டு

மாவோயிஸ்ட் ஆவான். சரோஜாதேவி புக்கைத் 

தடை செய்ய இயலுமா?


சாராம்சத்தில் சூசன்னா அருந்ததி ராய் யார்?

அவர் ஒரு இடதுசாரியோ மார்க்சிஸ்டோ 

அல்லது மாவோயிஸ்டா மாவோயிஸ்ட் 

அபிமானியோ அல்லர். அவர் ஒரு லிபரல் 

பூர்ஷ்வா. மேலும் அவர் ஒரு பின்நவீனத்துவர்.


ஏகாதிபத்தியத்திடம் நிதி உதவி பெற்று ஒரு 

அரசுசாரா நிறுவனத்தை (NGO) அவர் நடத்தி 

வருகிறார். அவருக்கு நிதி வழங்கும் 

ஏகாதிபத்தியமே அவரின் எஜமானர் ஆகும்.


எனவே ஒரு லிபரல் பூர்ஷ்வா ஆகிய அருந்ததி 

ராயை மாவோயிஸ்டாகவோ அல்லது 

மாவோயிஸ்டுகளின் அபிமானியோ சித்தரிப்பது

முட்டாள்தனம் ஆகும். எனவே அவரின் புத்தகம் 

பல்கலைக் கழகப் பாடப்பகுதியில் இருந்து 

நீக்கப் பட்டதில் கண்ணீர் சிந்த எதுவும் இல்லை.


திருமணம், குடும்பம் ஆகியவற்றைக்  கடுமையாக 

எதிர்க்கும் அருந்ததி ராய் திருமணமோ குடும்பமோ

இல்லாமல் வாழ்ந்து வருகிறார். முதலில் ஒருவரோடு 

சில ஆண்டுகள் வாழ்ந்த பிறகு, அவருக்கு உடல்

நலிவுற்ற நிலையில் அவரை விரட்டி விட்டு,

வேறு ஒருவருடன் வாழத் தொடங்கினார்.பின்னர் 

அவரையும் விட்டு விலகினார். 


அருந்ததி ராயின் அகராதியில் கணவர் (husband)

என்ற சொல்லுக்கு இடம் கிடையாது. அதற்குப் 

பதிலாக பாலியல் பங்காளி (sexual partner) .          

இடம் பெறுகிறார். இவ்வாறு மாபெரும் 

கலாச்சாரச் சீரழிவின் ஐக்கானாக (icon) 

அருந்ததி ராய் இருந்து வருகிறார்.


அருந்ததி ராயை அல்ல, அனுராதா கண்டியையே 

நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அனுராதா கண்டி 

(Anuradha Ghandy 1954-2008) ஒரு மகத்தான போராளி.

மெய்யான மாவோயிஸ்ட். மார்க்சிய லெனினிய 

சிந்தனையாளர். மாவோயிஸ்டுகளின் கொள்கை 

வகுப்பதில் முக்கிய பங்காற்றியவர். பழங்குடிகள், 

ஆதிவாசிகள் இடையே களப்பணி ஆற்றியவர் 

மும்பையின் பிரசித்தி பெற்ற எல்பின்ஸ்டன் 

கல்லூரியில் படித்தவர்.1983ல் சக நக்சல்பாரியான 

கோபட் கண்டியைத் திருமணம் செய்து கொண்டார்.   


ஜார்க்கண்டின் வனப் பகுதிகளில் பழங்குடியினருக்கு 

கற்பித்தபோது மலேரியா காய்ச்சல் இவரைத் 

தாக்கியது. காலம் கடந்து மும்பையில் சிகிச்சை 

பெற்றார். சிகிச்சை பலநிமிரி உயர் துறந்தார். 

நீண்ட காலம் வாழ்ந்திருக்க வேண்டியவர் தமது 

54ஆம் வயதில் இறந்து போனார்.


இவர் சில புத்தங்களை எழுதி உள்ளார். அவற்றுள் 

ஒன்று SCRIPTING THE CHANGE என்பது. ஆங்கிலத்தில் 

எழுதப்பட்ட புத்தகம் இது.இந்தப் புத்தகத்தின் 

வெளியீட்டு விழாவுக்கு நான் சென்றேன் என்று 

ஞாபகம். இப்புத்தகம் தமிழில் மொழிபெயர்க்கப் 

பட்டுள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை.

மொழிபெயர்க்கப் படவில்லையென்றால், 

உரியவர்கள் விரும்பினால், நான் தமிழில் 

மொழிபெயர்த்துத் தர முன்வருகிறேன்.


நியாயமாக அனுராதா கண்டியின் இந்தப் 

புத்தகம் பல்கலைகளில் பாடமாக வைக்கப் 

பட வேண்டும். இதற்குக் குரல் கொடுக்க 

எத்தனை பேர் தயாராக இருப்பார்கள்?

இந்தியப் பல்கலைக் கழகங்களில், எம் ஏ 

சமூகவியல் (sociology), எம் ஏ  அரசியல் அறிவியல் 

(political science), எம் ஏ ஆங்கில இலக்கியம் 

ஆகிய படிப்புகளில் அனுராதா கண்டி எழுதிய 

SCRIPTING THE CHANGE என்ற புத்தகம் பாடமாக 

வைக்கப்பட வேண்டும்.


மாணவர்கள் எல்லாவற்றையும் படிக்க வேண்டும்.

கண்டது கற்கப் பண்டிதன் ஆவான் என்பது 

பழமொழி. மாணவர்கள் அனைத்தையும் கற்க 

பல்கலைகள் வழிவகை செய்ய வேண்டும். பிரசித்தி 

பெற்ற நூல்களைப் பாடமாக வைப்பதன் மூலமே, 

அவற்றை மாணவர்கள் கற்க இயலும்.

 

Animal farm  என்று ஒரு நாவல். தமிழில் விலங்குப் பண்ணை 

என்ற பெயரில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. 

ஜார்ஜ் ஆர்வெல் எழுதியது. கம்யூனிசத்தைக் கேலி 

செய்யும் நாவல். எனினும் இது சென்னைப் 

பல்கலையில் பாடமாக இருந்தது.


இது மட்டுமல்ல; அலெக்ஸ்சாண்டர் சோல்செனிட்சன் 

எழுதிய குலக் ஆர்ச்சிபிலகோ என்ற நூல் 

(ஆர்ச்சிபிலகோ = தீவுகளின் கூட்டம்)

அவரின் கேன்சர் வார்டு என்ற நூல் ஆகியவையும் 

பாடமாக வைக்கப் பட வேண்டும். டான் பிரவுன் 

எழுதிய டாவின்சி கோட் (The Davinci code) நாவலும் 

பாடமாக வைக்கப்பட வேண்டும்.


அந்தப் புத்தகம் கூடாது, இந்தப் புத்தகம் கூடாது 

என்பதெல்லாம் பத்தாம் பசலித்தனம். ஒரு 

பல்கலைக் கழகத்துக்கு ஆகாது.


புத்தக வாசிப்பில் நடிகர் கமல்ஹாசனைப் 

பாராட்டியே ஆக வேண்டும். அகல் விரிவான 

வாசிப்புக்குச் (comprehensive reading) சொந்தக்காரர் 

அவர். அண்மையில் ஒரு டிவி நிகழ்ச்சியில் 

ஒரு புத்தகத்தை அவர் பரிந்துரைத்துக் 

கொண்டிருந்தார்.

     

லெபனான் எழுத்தாளர் மைக்கேல் நைமா 

எழுதிய புத்தகம் அது. The book of Mirdad என்பது 

அப்புத்தகத்தின் பெயர். "மீர்தாதின் புத்தகம்" என்று 

தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு அப்புத்தகம் 

கடைகளில் கிடைக்கிறது. இந்தப் புத்தகத்தை 

1980களிலேயே அவர் படித்து விட்டார் என்பது தெரிகிறது.


நரம்பியல் நிபுணர் விளையனூர் ராமச்சந்திரன் 

எழுதிய The phantoms in the brain என்ற அறிவியல் புத்தகத்தைப் 

படித்து விட்டு, அதை விவாதிப்பதற்கு ஆள் கிடைக்காமல் 

கமல் தத்வத்ததி ஜெயமோகன் சொல்லி உள்ளார். 

--------------------------------------------



  

  

      

   


  


 

 





     


   

           


    

   












  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக