மூலவினையும் எதிர்வினையும்!
உழைப்பை அவமதித்தால் உழைப்பாளி கொந்தளிப்பான்!
-----------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------------
1) திரு பிரதீப் ஜானின் வானிலைக் கணிப்புகளை
நான் படிப்பதில்லை. தமிழ்நாட்டின் பிரபல நக்சலைட்
தலைவர் மருதையன் தமது "இடைவெளி" இணைய
தளத்தில் அதை வெளியிட்டார். அதனால் அதைப்
படிக்க நேர்ந்தது.
2) தமது வானிலைக் கணிப்புகளைப் பரப்புவதற்கு
நக்சலைட் தலைவர் மருதையனைப் பயன்படுத்தியது
எனக்கு வியப்பைத் தருகிறது.
3) திரு ஜானின் நிவர் புயல் பற்றிய கணிப்பைப் படித்த
எங்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அதில் பொய்யான
அருவருக்கத்தக்க அவதூறுகளை IMD மீது
(Indian Meteorological Dept) வீசி இருந்தார் ஜான். குறிப்பாக
சென்னை கல்லூரிச் சாலையில் இருக்கும் வானிலை ஆய்வு
மையத்தின் இயக்குனர் டாக்டர் பாலச்சந்திரன் M.Sc Ph.D
அவர்களும் அவரின் தலைமையில் ஒரு பெரிய குழுவும்
புயல் எங்கு கரையைக் கடக்கும் என்று தெளிவாகக்
கணித்து இருந்தது. (புதுச்சேரி-மரக்காணம்)
4) வானிலை அதிகாரிகளுக்கு சொந்த மூளை கிடையாது
என்ற தொனியில் அமெரிக்க ஆய்வு மையம் என்ன
சொன்னதோ அதையே டாக்டர் பாலச்சந்திரன் குழுவும்
கூறியதாக மிகவும் அருவருக்கத்தக்க அவதூறை எழுதி
IMD குழுவினரின் உழைப்பை அவமதித்தார் திரு ஜான்.
5) நாற்காலியில் உற்கார்ந்து வேலை செய்து கொண்டிருக்கும்
ஒருவனின் முகத்தில், சாணியை வீசியது போன்று பிரதீப்
ஜான் செயல்பட்டார். முதல் அடியை அவர் அடித்துவிட்டார்.
கத்தியை எடுத்து முதல் குத்தை அவர் குத்தி விட்டார்.
அதாவது மூலவினைக்குச் சொந்தக்காரராராக திரு
ஜான் ஆகி விட்டார்.
6) இனி எதிர்வினைகள் வரும் அல்லவா? IMDயில் வேலை
பார்ப்பவர்கள் என்ன சமணத் துறவிகளா? காற்றழுத்தத்
தாழ்வுமண்டலம் உருவானது முதல் புயல் கரையைக் கடக்கும்
வரை, பசி தூக்கத்தை மறந்து, வீட்டுக்குச் செல்லாமல்
அலுவலகத்திலேயே தங்கி உழைத்தவர்களை, அவர்களின்
உழைப்பை, ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு திரு
ஜான் இழிவு படுத்துவார் என்றால் அதை IMD ஊழியர்கள்
சகித்துக் கொண்டு இருப்பார்களா?
7) IMD என்பது நிறைய ஊழியர்களைக் கொண்ட ஒரு
பெருங்கூட்டம். ஒற்றைத் தனிநபரான ஜான், ஒரு பெருங்
கூட்டத்தைப் பகைப்பது அறிவுடைமை ஆகுமா? பக்குவம்
உடையோர் செய்யும் செயலா இது? புயல் சென்னையில்
கரையைக் கடக்கும் என்ற ஜானின் கணிப்பும், நிவர்
புயலானது கஜா புயலை விடக் கடுமையானது என்ற
அவரின் கணிப்பும் பொய்த்துப் போயின. ஆனால்
மக்களைப் பீதியில் ஆழ்த்தி விட்டன. பேரிடர் மேலாண்மைச்
சட்டங்கள் மக்களைப் பீதியில் ஆழ்த்தும் இத்தகைய
செய்திகள் மீது மிகவும் கடுமை காட்டுகின்றன.
8) உழைப்பை அவமதிப்பதை எந்த உழைப்பாளியும்
பொறுத்துக் கொள்ள மாட்டான். அவன் கோபத்தில்
கொந்தளிப்பான். அது இயல்பே. திரு ஜானின் தவறைச் சுட்டிக் காட்டியதற்காக எனக்கு இதுவரை எட்டு
கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. அமெரிக்கக்
கணிப்பைத்தான் டாக்டர் பாலகிருஷ்ணன் காப்பி
அடிக்கிறார் என்ற அவதூறுக்கு திரு ஜான் என்ன
பதில் சொல்கிறார்?
9) திரு ஜான் எனது எதிரி அல்ல. எனக்கும் அவருக்கும்
வயல் தகராறோ வாய்க்கால் தகராறோ கிடையாது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளைஞர் ஜானுக்கும்
அதே வகுப்பைச் சேர்ந்த வயதில் மூத்த எனக்கும் என்ன
பகைமை இருக்க முடியும்? என்னுடைய நெருக்கமான
உறவினர்களில் பலர் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர்களே.
10) IMDயைப் பகைத்துக் கொண்டு திரு ஜான் முன்னேற
இயலாது. மாறாக ஜானின் பங்களிப்பானது IMDயின்
பங்களிப்புக்கு complimentary ஆக இருக்க வேண்டும்;
contradictoryயாக இருக்கக் கூடாது.
இதையே திரு ஜானின் பரிசீலனைக்கு முன்வைக்கிறேன்.
*************************************************************
பின்குறிப்பு
1) இக்கட்டுரை ஆசிரியர் நுங்கம்பாக்கம் வானிலை
ஆய்வு மையத்தில் ஆறு ஆண்டுகள் பணியாற்றியவர்.
(IMD ஊழியராக அல்ல; மத்திய அரசு சார்பாக)
------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக