புதன், 11 நவம்பர், 2020

பிஞ்சிலே பழுத்து வெம்பிப்போன தேஜஸ்வி யாதவை 

நித்திஷ் குமாருக்கு மாற்றாக மக்கள் கருதவில்லை!

(பீகார் தேர்தல் முடிவுகள் குறித்த அறிவியல் பகுப்பாய்வு) 

----------------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

--------------------------------------------------------------------------

லாலு ராப்ரி த்தம்பதியினருக்கு மொத்தம் 9 குழந்தைகள்.

இவர்களில் 9ஆவது மகனும் கடைக்குட்டியுமானவரே 

தேஜஸ்வி யாதவ்.


பாட்னாவில் இருந்தால் படிக்க மாட்டார் என்று கருதிய

லாலு டில்லியில் ஒரு சிறந்த பள்ளியில் தேஜஸ்வியைச் 

சேர்த்தார். பள்ளியில் படிக்கும்போதே கிரிக்கெட்டில் 

ஈடுபாடு கொண்டிருந்தார் தேஜஸ்வி. பள்ளியின் கிரிக்கெட் 

டீம்களில் சேர்க்கப் பட்டார். 9ஆம் வகுப்பு தேறி 10ஆம்

வகுப்பில் சேர்ந்தபோது, கிரிக்கெட் மீதான ஆர்வத்தால் 

படிப்பைக் கைவிட்டார். ஆக இவரின் படிப்பு என்பது 

ஒன்பதாம் வகுப்போடு நின்று போனது.


எனினும் கிரிக்கெட்டிலும் இவர் பெரிதாக ஒன்றும் 

சோபிக்கவில்லை. நிறையவே கிரிக்கெட் விளையாடியும் 

இவர் எடுத்த அதிகபட்ச ரன்கள் 19 மட்டுமே. ஆக ஒரு 

கட்டத்தில் கிரிக்கெட் அவரைக் கைவிட்டது. இந்நிலையில் 

இடையில் நிறுத்திய படிப்பை அவர் தொடர்ந்திருக்க 

வேண்டும். அதை அவர் செய்ய விரும்பவில்லை.

9ஆம் வகுப்பு வரை படித்ததே பெரிய சாதனை என்று 

மனநிறைவு கொண்டார் அவர். கைவிட்ட படிப்பை 

ஆவர் தொடர வேண்டும் என்று அவரின் தந்தை 

லாலுவும் அவரை .வற்புறுத்தவில்லை.


படித்து என்ன மயிரைப் பிடுங்கப் போகிறான்? ஊழல் 

புரியவும் பொதுச்சொத்தைக் கொள்ளையடிக்கவும் 

9ஆம் வகுப்பு வரை படித்திருந்தால் போதுமே என்று  

புழுவினும் இழிந்த லாலுவும் திருப்தி அடைந்திருக்கக் 

கூடும். 


நித்திஷ் குமாரின் அமைச்சரவையில் அமைச்சராகவும்  

துணை முதல்வராகவும் இருந்தபோது தேஜஸ்விக்கு 

வயது வெறும் 26தான். பெயருக்குத்தான் தேஜஸ்வி

அமைச்சர் மற்றும் துணை முதல்வர். இவரின் துறை 

சார்ந்த கோப்புகள் அனைத்தையும் பார்த்தவர், பரிசீலித்து 

முடிவு எடுத்தவர் யாரென்றால் அது லாலுதான். 

ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கி, ஊழல் புரிந்து 

தண்டனை பெற்ற காரணத்தால் MLA, MP பதவிகளை 

வகிக்க இயலாமல் தகுதிநீக்கம் (DISQUALIFY) செய்யப்பட்ட

லாலு கோப்புகளைப் பார்ப்பதையும் முடிவெடுப்பதையும் 

பீகாரை மறைமுகமாக ஆளுவதையும் ஏற்க முடியாத 

நித்திஷ்குமார் RJDயுடனான கூட்டணியை முறித்துக் 

கொண்டு பாஜகவுடன் சேர்ந்தார். 


முன்னதாக அரசு நிர்வாகத்தில் லாலுவின் முறையற்ற 

தலையீடு குறித்து சோனியாவிடமும் ராகுலிடமும் 

புகார் செய்திருந்தார் நித்திஷ்குமார். அவர்கள் இவரின் 

புகாரைக் காதில் வாங்கிக்  கொள்ளவே இல்லை.     

மாறாக லாலுவை ஆதரித்தனர். என்ன காரணம்?


மோடி எதிர்ப்பு முகாமில் தங்களுடன் நித்திஷ் குமார் 

இருப்பதையே சோனியா விரும்பவில்லை. அறிவாளியும் 

ஆளுமை மிக்கவருமான நித்திஷ் குமார் எதிர்காலத்தில் 

மோடிக்கு எதிராக பிரதமர் வேட்பாளர் ஆகிவிடக் கூடும் 

என்றும் இது ராகுலின் எதிர்காலத்தைப் பாழாக்கி விடும் 

என்றும் அஞ்சிய சோனியாவும் ராகுலும், நித்திஷ்குமார் 

எதிர் முகாமுக்குப் போவதையே விரும்பினர். அவரை 

எதிர் முகாமுக்குத் துரத்தும் வேலைகளை மேற்கொண்டனர்.


எதிர்பார்த்தபடியே, நித்திஷ் குமார் மோடி ஆதரவு 

முகாமில் சரண் அடைந்தார். லாலுவுடனான கூட்டணியை 

முறித்துக் கொண்டு, பாஜகவுடன் கூட்டணி வைத்து 

முதல்வர் பதவியில் தொடர்ந்தார். இது நடந்தது 

ஜூலை 2017ல். தற்போது மூன்றாண்டுகள் கழித்து 

நித்திஷ்குமாரின் முடிவு சரிதான் என்று பீஹார் 

மக்கள் தீர்ப்பு அளித்துள்ளனர்.


எக்சிட் போல்கள் உண்மையைப் பிரதிபலிக்காமல்

இருந்ததன் காரணம் என்னவெனில், அவை வேண்டுமென்றே

அரசியல் உள்நோக்கத்துடன் தயாரிக்கப் பட்டவை 

என்பதுதான். உரியவர்களிடம் இருந்து ( வேறு யார்?

சோனியாவின் மானேஜர் அகமது பட்டேலிடம் இருந்துதான்)

உரிய பணத்தைப் பெற்றுக் கொண்டு, ஒரு நீர்க்குமிழித் 

தன்மையுடன் எக்சிட் போல்கள் லாலுவின் ஊதாரி 

மகனின் வெற்றியை செயற்கையாக உருவாக்கின.


பிஞ்சிலே பழுத்து வெம்பிப்போன லாலுவின் மகன் 

தேஜஸ்வியை முதல்வர் பதவிக்குத் தகுதியானவர் 

என்றோ நித்திஷ் குமாருக்கு மாற்று என்றோ 

பீஹார் மக்கள் கருதவில்லை. எனவேதான் Anti incumbency 

இருந்த போதிலும், மக்கள் மீண்டும் நித்திஷ் குமாருக்கே 

வாய்ப்பு அளித்துள்ளனர்.


கடந்த பல பத்தாண்டுகளாக நீடித்து வரும் லாலுவின்

வாரிசு அரசியலும் குடும்ப ஆதிக்கமும் பீஹாரிகள் 

நடுவில் பெருத்த அருவருப்பையும் வெறுப்பையும் 

சம்பாதித்துத் தந்துள்ளன. 50 ஆண்டுகளுக்கு முன்பு 

1970களில், வாரிசு அரசியலுக்குப் பெரும் எதிர்ப்பு 

இருந்ததில்லை. காரணம் அன்று நிலவிய நிலப்பிரபுத்துவ 

சிந்தனைகள். இன்று பொருளாதாரம் மற்றும் பண்பாட்டுத் 

தளங்களில் முதலாளித்துவக் கூறுகள் மேலோங்கி 

நிற்கின்றன. நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளுக்கு இன்று 

மக்களிடம் மரியாதை கிடையாது.


மாறிவிட்ட இந்தச் சூழ்நிலையிலும், இந்த மாற்றங்களைப் 

பற்றி எந்த அறிவும் இல்லாத லாலு பிரசாத், மீண்டும் மீண்டும் 

தனது குடும்ப அரசியலை, வாரிசு அரசியலை பீஹாரிகள் 

மீது திணித்து வருகிறார். வாரிசு அரசியல் என்பது 

நவீன வருணாசிரமம் என்ற புரிதலுக்கு வந்து விட்ட 

மக்கள் அதை மூர்க்கத்துடன் முறியடித்து வருகிறார்கள்.

நாடெங்கும் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் 

இளவரசர்களை அரண்மனைக்கு வெளியே அனுப்பிக் 

கொண்டுதான் இருக்கிறார்கள் மக்கள். உபி இளவரசர் 

அகிலேஷ், பீகார் இளவரசர் தேஜஸ்வி, ஆனந்த பவன் 

இளவரசர் ராகுல் என்று மக்கள் சொகுசு வாழ்க்கைச் 

சோம்பேறிகளைத் தடியால் அடித்து விரட்டிக் கொண்டுதான் 

இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் உதயநிதி போன்ற 

கூத்தாடி வாரிசுகளும் இதே அவலத்தைச் சந்தித்துத் 

தீர்வார்கள். எனினும் இந்தியா போன்ற 

பெரிய நாட்டில் இதற்கு ஒன்றிரண்டு விதிவிலக்குகள் 

உண்டுதான். 


லாலுவின் RJD கட்சிக்கு நல்லதொரு எதிர்காலம்

வேண்டுமெனில், அக்கட்சியின் தலைமை, லாலுவின் 

குடும்பத்திற்கு வெளியே இருந்து வர வேண்டும்.

      

தேஜஸ்வி பேசுகிற கூட்டங்களில் லட்சக் கணக்கில்(??) 

மக்கள் கூடினர் என்றும் அதனால் தேஜஸ்விக்கு 

பெரும் வெற்றி காத்திருக்கிறது என்றும் ஊடகத் 

தற்குறிகள் உயர்வு நவிற்சியாக எழுதினர். இதெல்லாம் 

நிலப்பிரபுத்துவ கால மூடத்தனம். கூட்டம் கூடுவது ஆதரவின் 

அடையாளம் என்ற முட்டாள்தனமான தியரி இன்று 

செல்லுபடி ஆகாது. நிலப்பிரபுத்துவ காலச் சிந்தனையில் 

இருந்து பீகாரின் ஊடக முட்டாள்கள் விடுபடவில்லை 

என்பதன் அடையாளம்தான் இது.  


இந்தியாவில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மாநிலங்கள் 

மூன்று. 1. உபி  2. பீஹார் 3. மேற்கு வங்கம். பீகாரில் 

கணிசமான இஸ்லாமிய மக்களின் வாக்குகளைப் 

பெற்றதாலேயே பாஜக கூட்டணி இந்த வெற்றியை 

அடைய முடிந்தது. இஸ்லாமியப் பெரும்பான்மை மிகுந்த 

குறைந்தது 30 தொகுதிகளில் பாஜக வெற்றி அடைந்துள்ளது.

இதன் பொருள் இஸ்லாமியர்களின் ஆதரவு இல்லாமல் 

பாஜகவால் பீகாரை ஆள முடியாது என்பதே.


ஹைதராபாத்தின் ஒவைசி பீஹாருக்கு வந்து போட்டி 

இட்டதும், அங்கு இஸ்லாமியர்களின் வாக்குகளைப்  

பிரித்ததும் பாஜகவின் வெற்றிக்கு ஒரே காரணம் என்று 

சில ஊடகத் தற்குறிகள் தங்களின் அறியாமையை 

வெளிப்படுத்துகின்றனர். ஒவைசி வாக்குகளைப் 

பிரித்தது நிச்சயமாக ஓரு காரணமே. ஆனால் அது 

மட்டுமே காரணம் அல்ல. முத்தலாக் போன்ற பிற்போக்கு 

நடைமுறைகளை மோடி அரசு ஒழித்துக் கட்டியதால்

இஸ்லாமியப்பெண்களின் ஆதரவு பாஜகவுக்குக் 

கிடைத்தது என்ற ஒளிவீசும் உண்மையை அரசியல்  

நோக்கர்களால் புறந்தள்ள முடியாது.


அது போலவே, தலித்துகள், சிறுபான்மை முஸ்லிம்கள்,

பிற்பட்ட வகுப்பினர் ஆகியோரைக் கொண்ட வாக்கு 

வங்கி லாலு பிரசாத் காலத்தில் RJDக்கு இருந்தது. இந்த 

வாக்கு வங்கியில் பாஜகவால் சேதாரத்தை ஏற்படுத்த 

முடியாமல் இருந்தது. 2014க்குப் பின்னர் நிலைமை 

அப்படி இருக்கவில்லை; பெரும் மாற்றம் அடைந்தது.

இதற்குக் காரணம் அமித்ஷா மேற்கொண்ட புதிய 

சாதியச் சமன்பாடுகளே.


லாலு ஆட்சி என்றாலே அது யாதவர்களின் ஆதிக்கம் என்பது  

நன்கு நிறுவப்பட்ட ஒன்றாகி விட்டது. நில அபகரிப்பையோ 

வேறு அநியாயத்தையோ செய்யும் ஒரு யாதவர் மீது 

எந்தப் போலீஸ் நிலையத்திலும் ஒரு FIR போட முடியாது.

லாலுவின் ஆட்சி என்றாலே (RJD ஆட்சி) இந்த அராஜகமான 

நிலைமை (lawlessness) மாநிலமெங்கும் வியாபித்து இருக்கும். 

லாலு ஆட்சி என்றாலே, யாதவர் சமூகமானது பிற சமூகத்தினர் 

மீது (இதர பிற்பட்டோர் சமூகம், தலித்துகள் உட்பட) செலுத்தும் 

வன்முறையான ஆதிக்கம் என்றுதான் பொருள். 


எனவேதான் யாதவர் அல்லாத பிற பிற்பட்ட சாதியினர் 

குறிப்பாக நித்திஷ் குமாரின் குர்மி உள்ளிட்ட பிற 

சாதியினர் லாலுவை ஆதரிப்பதில்லை. யாதவர் அல்லாத 

பிற்பட்டோரிடம் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதுதான் 

அமித்ஷா செய்த நன்மை. லாலுவின் யாதவர் சாதி 

ஆதிக்கத்தை ஏற்க மறுத்து, தலித்துகளின் மீதான 

யாதவர்களின் தாக்குதலை முறியடித்து அவர்களைப் 

பாதுகாக்கும் பொருட்டே  மாயாவதி போன்றோர் 

பாஜகவை ஆதரிக்கின்றனர். மாயாவதிக்கு பீகாரில் 

வேறு வழி இல்லை. இந்த உண்மையைக் காண மறுத்து,

மாயாவதி பாஜகவிடம் விலை போய் விட்டார் என்று 

பேசுவது குடிகாரப் பயல்களின் உளறலே ஆகும். 


ராகுல்காந்தி அமேதியில் ஏன் தோற்றார் என்பதற்கும் 

இரண்டாம் முறையாக 2019இலும் காங்கிரஸ்  

54 இடங்களைப் பெறாமல் அங்கீகரிக்கப்பட்ட 

எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை இழந்து நிற்பதற்கும்   

என்ன காரணம் என்று சிந்தித்துப் பாருங்கள்.


காங்கிரஸ் பேசுகிற மதச்சார்பின்மை போலியானது 

என்று இன்று நன்கு அம்பலப்பட்டு விட்டது. 

மதச்சார்பின்மைக்கு காங்கிரஸ் மட்டுமே ஒரே 

அத்தாரிட்டி என்ற நிலையெல்லாம் மாறி 

பொய்யாய்ப் பழங்கதையாய் கனவாய்   

மெல்லப் போனதுவே என்பது போல் போய்விட்டது.


பாஜகவை மதவாதக் கட்சி என்று விடாமல் சொல்லிக் 

கொண்டிருப்பதிலும் பொருள் இல்லை என்பதைத் 

தேர்தல் முடிவுகள் உணர்த்திக் கொண்டே இருக்கின்றன.

உபி, பீஹார் முடிவுகளைப் பரிசீலிக்கவும். சுருங்கக் 

கூறின், தேர்தல் அரசியலில் ஈடுபடும் கட்சிகளை மதவாதக் 

கட்சி, மதச்சார்பற்ற கட்சி என்று பிரிப்பது அர்த்தமற்றது 

என்று தேர்தல் முடிவுகளின்போது, மக்கள் அளிக்கும் 

தீர்ப்பாகும். அவர் மதவாதி. இவர் மதவாதி என்று நாம் 

முத்திரை குத்திக் கொண்டே போகலாம். அதை மக்கள் 

ஒருபோதும் ஏற்பதில்லை.


அதாவது தேர்தலில் நிற்கும் கடசிகள் பேசும் மதவாதம் 

என்பதும் மதச்சார்பின்மை என்பதும் ஒன்றுக்கொன்று 

முரண்பட்டவை அல்ல என்று மக்கள் தெளிந்து விட்டனர்.

மக்கள் ஏற்காத ஒன்றை இன்னும் எத்தனை காலம்தான் 

இந்தத் தற்குறிக் கட்சிகள் கட்டிக்கொண்டு  அழும் என்று 

பார்ப்போம். வேறு ஒரு strategyயை காங்கிரஸ் 

உண்டாக்காமல் அதற்கு விமோசனம் இல்லை. 


தேர்தல் அரசியலின் ஒவ்வொரு அம்சத்திலும் 

பாஜகவானது காங்கிரசையும் பிற மாநிலக் 

கட்சிகளையும் வீழ்த்தி விட்டது. இதன் விளைவாகத்தான் 

அநேகமாக தான் சந்திக்கும் எல்லாத் தேர்தல்களிலும்

அது வெற்றி பெருகிறது. ஜனாதிபதி தேர்தல் முதல் 

பீஹார் தேர்தல் வரை. இந்த உண்மையை நான் எடுத்துச் 

சொன்னால் மோடி எதிர்ப்பாளர்களின் மரமண்டையில்

அது ஒரு நாளும் ஏறாது.


மாறாக, பாஜக வெற்றி பெறும்போதெல்லாம், அவ்வெற்றி

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் (EVM) மோசடி 

செய்து பெற்ற வெற்றி என்றே மோடி எதிர்ப்பாளர்கள் 

பெருங்கூச்சலிடுவைத்து வாடிக்கை. உலகிலேயே 

மிகவும் பாதுகாப்பான தேர்தல் முறையையும் வாக்குப்  

பதிவு எந்திரங்களை கொண்டது இந்தியாவே. இந்திய 

EVMகளில் யார் எவராலும் எத்தகைய மோசடியும் செய்ய 

இயலாது.

                 

NDTVயின் பிரணாய் ராய் கூறுகிறார்: " அமெரிக்க 

எந்திரங்களை விட, இந்தியாவின் EVMகள் மிகவும் 

பாதுகாப்பானவை" என்று. மோடியின் அதிதீவிர 

எதிர்ப்பாளரான அவர் தாம் எழுதிய புத்தகத்தில் 

இதைப் பதிவு செய்துள்ளார். இது குறித்து முன்னரே 

எழுதி உள்ளேன்.


இன்று, வெளிநாட்டில் படித்தவரும் IQ அதிகம் 

கொண்டவருமான  கார்த்திக் சிதம்பரம் கூறுகிறார் 

EVMகள் மீது பழிபோடக் கூடாது என்று. ஆனால் மோடி 

எதிர்ப்பாளர்களின் ஆட்டு மூளைக்குள் பிரணாய் 

ராயும் கார்த்தி சிதம்பரமும் கூறும் உண்மைகள் 

ஒருபோதும் நுழையாது. 


அறிவியலுக்கு எதிரான மோடி எதிர்ப்பாளர்களின்

கருத்தை, அதாவது EVMகளில் மோசடி செய்துதான் 

பாஜக ஜெயிக்கிறது என்கிற அடிமுட்டாள்தனத்தை 

ஆர் எஸ் எஸ் வரவேற்கிறது. மோடி எதிர்ப்பாளர்களின்  

இந்த முட்டாள்தனம் உண்மையை அறிய விடாமல் 

அவர்களைத் தடுக்கும் என்பதால் ஆர் எஸ் எஸ் 

இதை வரவேற்கிறது.

*****************************************************  

வைப் பெற்றுத்தான்  கிற த்தால் 

என்ற உண்மை புலப்படுகிறது.  இதுவே    த்து தனக்கு ஆதாயம் தரும் என்பதால் 

        

    மருதுபாண்டியன் இரா   முன்பு போல   று 



        தற்போது 31 வயதாகியும் இன்னமும் திருமணம் ஆகவில்லை.



75 சட்ட மன்ற உறுப்பினர்களுடன் (பாஜகவுக்கு 74)

தனிப்பெருங் கட்சியாக இருக்கும் RJDயின் 75 பேரையும்

அடுத்து வரும் ஐந்தாண்டுகளுக்கு தேஜஸ்வி யாதலால் 

தக்க வைக்க முடியுமா? முடியாது என்பது உள்ளங்கை 

நெல்லிக்கனி. அதற்கான தலைமைப் பண்பு அவரிடம் 

கிடையாது என்பது ஒருபுறம். தேர்ந்தெடுக்கப்பட்ட 

75 பேரும் மகாத்மா காந்தியோ அல்லது கெளதம

புத்தரோ அல்ல. ஆசாபாசங்கள் நிரம்பியவர்கள்.

வலிமையான பாஜகவுக்கு தேவை ஏற்பட்டால்

தேஜஸ்வியின் காட்ச்சியை மிகச் சுலபத்தில் 

உடைத்து விடுவார்கள்; தேவை ஏற்பட்டால் மட்டுமே.

     


பின்குறிப்பு:

இனி ஒருபோதும் ஒரு யாதவால் பீஹார் முதல்வராக 

ஆக முடியாது. இத்தனை ஆண்டுகளில் யாதவர்களுக்கு 

எதிரான ஐக்கிய முன்னணி அங்கு உருவாகி வேர் 

கொண்டு விட்டது. சூழ்நிலைகள் ஒரு யாதவ் முதல்வரைக் 

கோரினால், அப்போது பாஜகவின் யாதவ்களில் ஒருவர் 

முதல்வர் ஆவாரே தவிர, ஈரேழு பதினாலு லோகம் 

அழிந்தாலும் லாலு குடும்பத்தின் யாதவ்களால்

பீகாரின் முதல்வராக முடியாது.

      




   

 


  

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக