வியாழன், 26 நவம்பர், 2020

மாநில அமைப்புக் கமிட்டித் தலைவர்களின் சீரழிவு 

தனிநபர் சார்ந்ததா? அமைப்பு சார்ந்ததா?

-------------------------------------------------------------------------

பி இளங்கோ சுப்பிரமணியன்

முன்னாள்  மாவட்டச் செயலாளர்

NFTE BSNL, சென்னை மாவட்டம்.

வெளியீடு: நியூட்டன் அறிவியல் மன்றம்.

-----------------------------------------------------------------------------      

முதலாளித்துவம் என்பது தனியுடைமைச் 

சமுதாய அமைப்பு. முதலாளித்துவத்தை 

வீழ்த்திய வெற்றிகரமான வரலாறுகள் மானுட 

சமூகத்தில் உண்டு. ஆனால் தனியுடைமை 

தனியுடைமைச் சிந்தனை ஆகியவற்றை 

எந்தப் புரட்சியும் சுலபமாக வீழ்த்தவில்லை.

வீழ்த்தவும் இயலவில்லை என்பது வரலாறு/


இதற்கான காரணங்கள் பலவற்றில் இதுவும் 

ஒன்று. தனியுடைமைச் சிந்தனை முதலாளியம் 

தோன்றியபோது கூடவே தோன்றியதல்ல. மாறாக 

அதற்கு முந்தியது. நிலவுடைமைச் சமூக 

அமைப்பிலும் சரி, அடிமையுடைமைச் சமூக 

அமைப்பிலும் சரி, உடைமைச் சிந்தனை 

வலுவாக வேரூன்றி இருந்தது. ஆக சமூக 

மாற்றங்களைக் கடந்தும், தனியுடைமைச் 

சிந்தனை நீடிக்கிறது. எனவே அதை வீழ்த்துவது 

எளிதல்ல..


சோவியத் ஒன்றியத்திலும் சீனத்திலும் 

முதலாளித்துவம் எப்படி மீட்டு எடுக்கப்பட்டது?

அங்கெல்லாம் தனியுடைமையை முற்றிலுமாக 

ஒழிக்க முடியவில்லை.சோஷலிச சிந்தனை 

என்பது உடைமைகளுக்கு எதிரான சிந்தனை.

அத்தகைய சிந்தனை சமூகத்தில் மேலோங்கவில்லை.

இதன் விளைவாக மிக எளிதில் முதலாளியம் 

மீட்டு எடுக்கப் பட்டு விட்டது. ஆம், எல்லாமே 

வெறும் matter of timeதான். 


லெனினும் ஸ்டாலினும் மாவோவும் இருந்து 

சோஷலிசத்தைச் செயல்படுத்திய நாடுகளிலேயே 

முதலாளியம் மீட்டு எடுக்கப்பட்டு விட்டது எனும்போது,

இந்தியா எம்மாத்திரம்? இங்கு வேரூன்றியும் 

விஸ்வரூபம் எடுத்தும் நிற்கும் உடைமை வர்க்கச் 

சிந்தனையை அதன் அடிப்படையிலான 

கட்டுமானங்களை யாராவது கை வைக்க

முடியுமா? 


தங்களுக்கென்று உடைமைகளைக் கொண்டிருக்கும் 

வர்க்கங்களை, தனி நபர்களை விட்டு விடுவோம்.

இழப்பதற்கு ஏதுமற்ற பாட்டாளி வர்க்கத்தை 

எடுத்துக் கொள்வோம். இவர்களிடம் உடைமை 

வர்க்கச் சிந்தனை இல்லாமல் இருக்கிறதா? 


கம்யூனிஸ்டுகளை, முழுநேரப் புரட்சியாளர்களை 

எடுத்துக் கொள்வோம். இவர்களிடம் தனியுடைமைச் 

சிந்தனை இருக்கிறதா இல்லையா என்று பார்ப்போம்.


பாட்டாளி வர்க்கத் தொழிற்சங்கம் புஜதொமு. இதன் 

ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவர் தோழர் சுப தங்கராசு.

அண்மையில் இவர் ரூ 100 கோடி BHEL ரியல் எஸ்டேட் 

ஊழலில் மாட்டினார். இவரின் ஊழல் பற்றிய செய்திகள் 

நக்கீரன்  பத்திரிகையிலும் வெளிவந்தது. எனினும் இவர் 

இன்னும் கைது செய்யப்படவில்லை. இவர் மீது FIR கூடப் 

போடப்படவில்லை.


தோழர் தங்கராசு இழப்பதற்கு ஏதுமற்ற பாட்டாளி 

வர்க்கத்தைச் சேர்ந்தவர். அவர் BHELல் பணி புரிந்தவர்.

 சமூகத்தின் பொருள் உற்பத்தியில் நேரடியாகப் பங்கேற்றவர். 

வர்க்க ரீதியாக மார்க்ஸ்  வரையறுத்த ஆலைப்பாட்டாளி 

(industrial proletariat) வர்க்கத்தைச் சேர்ந்தவர். சொத்துடைமைச் 

சிந்தனை அற்றது பாட்டாளி வர்க்கம். அதாவது சோஷலிச 

சிந்தனையைக் கொண்டிருப்பது பாட்டாளி வர்க்கம்.

அந்த அளவில் சமூகத்தின்  பிற வர்க்கங்களை விட 

முற்போக்கானது பாட்டாளி வர்க்கம்.


சோஷலிச சிந்தனையைக் கொண்டிருப்பதற்கு ஏதுவாக 

இவ்வளவு சாதகமானஅம்சங்கள் இருந்த போதிலும் 

தோழர் தங்கராசு ரூ 100 கோடி ரியல் எஸ்டேட் ஊழலைப் 

புரிந்துள்ளார் என்றால், அவரிடம் மேலோங்கி நிற்பது 

சோஷலிசச் சிந்தனையா? அல்லது புழுத்துப்போன 

தனியுடைமைச் சிந்தனையா?


BHELல் ஊழியர்கள் பணிஓய்வு பெறும்போது 25 லட்சம் 

முதல்  60 லட்சம் வரை பணம் பெறுகிறார்கள் (Terminal benefits).

இவர்களுக்கு ஒரு வீடு கட்டிக் கொடுக்கலாம் என்னும் 

சோஷலிசச் சிந்தனை தங்கராசுவை ஆக்கிரமித்தது.

கட்சித் தலைமையிடம் இது பற்றிப் பேசியபோது, 

தலைமை புளகாங்கிதம் அடைந்து தங்கராசு நடத்த 

இருக்கும் சோஷலிஸப் புரட்சிக்கு பச்சைக்கொடி காட்டியது.

இதில் பெரிதும் தமது உற்சாகத்தை வெளிப்படுத்தியவர் 

தோழர் மருதையன். ரியல் எஸ்டேட் புரட்சி என்பது

தங்கராசுவின் முடிவு என்றாலும், அவரின் முடிவுகள் 

அனைத்திலும் மருதையனின் ஒப்புதல் முத்திரையானது 

அழுத்தமாக விழுந்திருக்கும். 


ரியல் எஸ்டேட் பிசினஸ் என்பது ஒரு கம்யூனிஸ்ட் 

செய்யக் கூடிய வேலையா? இதில் எங்காவது 

சோஷலிசச் சிந்தனை உள்ளதா?. BHELல் வேலை 

பார்த்து ரிட்டயர்டு ஆனவன் தனக்குத் தேவையான

வீட்டை, தான் வாங்கிக் கொள்ள மாட்டானா? இதில் ஒரு 

புரட்சிகரக் கட்சி தலையிட்டு அவர்களுக்கு வீடு 

வாங்கிக் கொடுக்க வேண்டிய தேவை என்ன?  


தங்களின் உடல் பொருள் ஆவியை  அர்ப்பணித்தாவது 

BHEL ஊழியர்களுக்கு வீடு வாங்கிக் கொடுத்து விட 

வேண்டும் என்று தங்கராசுவும் மருதையனும்  

வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வீதியில் 

திரிய வேண்டிய தேவை என்ன? 


வீடு வாசல் இல்லாமல் பிளாட்பாரவாசிகளாக 

BHEL ஆசாமிகள் இருப்பதால் இந்தியப் புரட்சிக்கு ஏற்பட்டு 

விட்ட  பின்னடைவுதான் என்ன?


சொத்துக்களை எல்லாம் கட்சிக்கு எழுதி வைத்து விட்டு, 

கம்யூன்களில் தங்கி கட்சி  வேலை பார்த்த பல தோழர்கள் 

உலகெங்கும் உண்டு. அவர்களின் வரலாற்றை மக்களிடம் 

கொண்டு செல்வது சோஷலிசப் பணியா? 


ஐயோ, சொத்து இல்லாமல் இருக்கிறார்களே, இது தகுமா, 

இவர்களுக்குச் சொத்து வாங்கிக் கொடுத்து விட்டுத்தான் 

மறுவேலை பார்க்க வேண்டும் என்று மருதையனும் 

தங்கராசுவும் எடுத்த முடிவு சோஷலிசப் பணியா?


வர்க்க ரீதியாக தங்கராசு ஒரு ஆலைப் பாட்டாளி

(industrial proletariat). சமூகத்தின் பொருள் உற்பத்தியில் 

நேரடியாகப் பங்கேற்றவர். அது போலவே மருதையனும்

ஆலைப்பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர். 

தொலைதொடர்புத் துறையில் பணியாற்றி சமூகத்தின் 

பொருள் உற்பத்தியில் நேரடியாகப் பங்கேற்றவர். 


இவர்கள் இருவருமே பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் 

படையாக இருந்தவர்கள். Vanguard of the proletariat என்ற 

லெனினின் வர்ணனைக்குப் பொருத்தமானவர்கள். 

ஆலைப்பாட்டாளி வர்க்கம் சொத்துடைமைச் 

சிந்தனை கொண்டிருக்காது என்ற காரல் மார்க்சின்

கணிப்புக்கு உட்பட்டவர்கள்.


இப்படிப் பட்டவர்களே கடைசியில் சொத்துடைமை என்னும் 

மலக்குட்டையில் தொபுகடீர் என்று குதித்த பின்னர்,

தனியுடைமைச் சிந்தனையை வெற்றி கொள்வதும் 

வீழ்த்துவதும் எவ்வளவு பிரம்மப் பிரயத்தனத்தைக் 

கோரும் என்று நினைக்கிறபோது ஆயாசம் கப்புகிறது.


ரியல் எஸ்டேட் ஊழலை மட்டும் மனதில் கொண்டு 

இந்த முடிவுக்கு வந்திருப்பதாக யாரும் கருத வேண்டாம்.

கீழைக்காற்று பதிப்பகத்தை வன்முறையாகக் 

கைப்பற்றிய நிகழ்வு எதை உணர்த்துகிறது? பூர்ஷ்வா 

அமைப்புகளிடம் காணப்படும் ஒழுங்கும் கட்டுப்பாடும்கூட 

புரட்சிகர அமைப்புகளிடம் இல்லை என்பதை எப்படி 

நியாயப் படுத்துவது? 

(பார்க்க: கீழைக்காற்று வெளியீட்டகத்தை அபகரிக்கும் 

முகுந்தன் கும்பலின் அடாவடித் தனத்தை 

முறியடிப்போம், நவம்பர் 1, 20020, வினவு இணையதளம்).


கீழைக்காற்று இணையதளத்தில் ரூ 20 லட்சம் மதிப்புள்ள

புத்தகங்கள் இருப்பதாக அதன் நிர்வாகி எனப்படும் நிலவன் 

என்பவர் கூறுகிறார். கீழைக்காற்றுக்கு நான்தான் ஓனர் 

என்று முகுந்தன் கூறுகிறார். இது ஒரு civil dispute ஆகும்.

ஒரு civil disputeஐ தங்களுக்குள் இணக்கமாக, காதும் காதும் 

வைத்தாற்போல் தீர்த்துக்கொள்ள வக்கற்றவர்களாக 

மாநில அமைப்புக் கட்டியின் முட்டாள்கள் இருக்கிறார்கள் 

இது வெட்ட வெளிச்சமாகிறது.


இது மட்டுமல்ல, தோழர் முகுந்தன்  சார்பில் வந்தவர்கள் 

ரௌடித்தனத்தில் இறங்கி கீழைக்காற்று ஆட்களை 

அடித்து விரட்டி விட்டு, பதிப்பகத்தின் சாவியை அடாவடியாக 

எடுத்துக் கொண்டு பதிப்பகத்தைக் கைப்பற்றிக் கொண்டார்கள் 

என்று எழுதுகிறார் நிர்வாகி நிலவன்.


இதைப் படிக்கும் எவரும் இரு தரப்பினர் மீதும் (முகுந்தன் 

மற்றும் நிலவன்) காரித் துப்புவது தவிர்க்க இயலாதது.

ஆக உடைமை வர்க்கச் சிந்தனையை,

தனிச்சொத்துடைமை பற்றிய சிந்தனையை 

முழுநேர ஊழியர்களாக, முழுநேரப் புரட்சியாளர்களாக

இருந்த தோழர்களால் கூட வெல்ல முடியவில்லை 

என்பதையே முகுந்தன் விவகாரம் காட்டுகிறது.


கம்யூனிஸ்டுகள் தனியொரு பொருளினால் வார்க்கப் 

பட்டவர்கள் (The Communists are of a special mould) என்பார் 

ஸ்டாலின். மேற்கூறிய விவகாரங்களில் கம்யூனிஸ்டுகளாக 

இருந்த தங்கராசு, மருதையன், முகுந்தன் ஆகியோர் 

பூர்ஷ்வாக்களிடம் இருந்து வேறுபட்ட பண்பட்ட 

நடத்தையைக் கொண்டிருந்தார்களா? இல்லையே!

நாங்களும் அந்தச் சாக்கடைப் பன்றிகள்தான் என்று 

நிரூபித்தார்கள்! அவ்வளவுதான்!


தனி நபர்களின் சீர்கேடுதானே இது! அமைப்பும் 

இவர்களைப்   போன்றே சீரழிந்து விட்டதா என்று 

விவரம் அறியாதவர்கள் கேட்கலாம்..அமைப்பு என்பது 

isolated chamber அல்ல. சீர்கேடுகளுக்கு 

எதிராக அமைப்பை insulate செய்ய வழி எதுவும் இல்லை.


" Ideological corruption leads to political corruption;

political corruption leads to organisational corruption;

organisational corruption leads to individual' corruption".

என்பது ஒரு பழமொழி. இதன்படி சிறப்புப்  

பொருந்திய தனிநபர்களே சீரழிந்து போய்த் 

தெருவில் திரிகிறார்கள் என்றால், அதன் பொருள் 

அவர்களின் அமைப்பும், அரசியலும், தத்துவமும் 

சீரழிந்து விட்டது என்பதே.  


கண்டதைச் சொல்லுகிறேன்- உங்கள் 

கதையைச் சொல்லுகிறேன்-இதைக் 

காணவும் கண்டு நாணவும் உமக்குக் 

காரணம் உண்டென்றால்,

அவமானம் எனக்குண்டோ!

------------------ஜெயகாந்தன் ---------------------------    

************************************************

பின்குறிப்பு:: கடடைசி வரியில், தத்துவமும் சீரழிந்து 

விட்டது என்பதில் வரும் தத்துவம் என்பது மார்க்சியத் 

தத்துவத்தைக் குறிக்காது. தொடர்புடைய 

அமைப்புகளின் வேலைத்திட்டத்தையே 

(party programme) குறிக்கும்.

-------------------------------------------------------------------------------------- 

" Ideological corruption leads to political corruption;

political corruption leads to organisational corruption;

organisational corruption leads to individual' corruption".

என்பது ஒரு பழமொழி. இதன்படி சிறப்புப்  

பொருந்திய தனிநபர்கள் சீரழிந்து போய்த் 

தெருவில் திரிகிறார்கள் என்றால், அதன் பொருள் 

அவர்களின் அமைப்பும், அரசியலும், தத்துவமும் 

சீரழிந்து விட்டது என்பதே.  

----------------------------------------------------------------------

பின்குறிப்பு:: தத்துவமும் சீரழிந்த விட்டது என்பதில் 

வரும் தத்துவம் என்பது மார்க்சியத் தத்துவத்தைக் 

குறிக்காது. தொடர்புடைய அமைப்புகளின் 

வேலைத்திட்டத்தையே (party programme) குறிக்கும்.

****************************************************************** 





   


   







       

 

      

      

   

     


  

      




        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக