இத்தனை காலத்தில் முதன் முதலாக ஒரு
ஸ்மார்ட் போனை நேற்றுத்தான் வாங்கினேன்.
இதுவரை என்னிடம் ஒரு ஸ்மார்ட் போன் கிடையாது.
பலரும் இதை நம்ப மறுத்தாலும், ஒளிவீசும் உண்மை
இதுதான்.
என்னிடம் மேலோங்கி இருந்த நுகர்வு மறுப்புச் சிந்தனையே
இதற்குக் காரணம். இது எங்கள் ஊரில் இருந்து,
வீரவநல்லூரில் இருந்து பெற்றது. அம்மக்களின் ஆதர்சம்
மகாத்மா காந்தியும் அவரின் எளிமையும். ஊரில் அத்தனை
பெருமை மகாத்மா காந்தியாகவே வாழ்ந்தார்கள். அப்படிப்பட்ட
ஊரில் பிறந்த ஒருவன் நுகர்வியத்தை ஏற்க மறுப்பது
இயல்பே.
தற்போது, என்னுடைய அறிவியல் தேவைகளை நிறைவு
செய்திட, ஒரு ஸ்மார்ட் போன் வாங்க முடிவு செய்தேன்.
அமேசானில் ஆர்டர் செய்து வாங்கியும் விட்டேன்.
நல்லதொரு ஸ்மார்ட் போனை வாங்குவதற்காக, இந்தியச்
சந்தையில் கிடைக்கும் ஸ்மார்ட் போன்களை பரிசீலித்தேன்.
மொத்த ஸ்மார்ட் போன்களில் 95 சதம் சீனப் பொருட்களாக
இருந்தது கண்டு அதிர்ந்தேன். இதில் என்னை விட அதிகம்
தெரிந்த என் நண்பர் ஜெய்சங்கரிடம் விசாரித்தேன். அவர்
BSNLல் கம்பியூட்டர் பிரிவில் தொடர்ந்து வேலை செய்து
வருபவர். நான் சொன்னதை 100 சதமும் ஆமோதித்தார்.
சீனப் பொருட்களை நான் ஏற்பதில்லை. கறாரான பிராண்டு
நேம் உடைய பொருளே என்னுடைய தேவை. எனவே
சாம்சங்கை தேர்ந்தெடுத்தேன். சாம்சங் என்பது தென்
கொரியாவின் தயாரிப்பு. சந்தைப் பொருளாதாரத்தைச்
செயல்படுத்தும் முதலாளித்துவ நாடே தென் கொரியா.
சர்வதேசத் சந்தையில் தனது மின்னணு உற்பத்திப்
பொருட்களின் விற்பனையானது அவற்றின் தரம்
சார்ந்தே அமையும் என்ற அடிப்படையியேயே
தென்கொரியாவின் வர்த்தகக் கொள்கை
அமைந்திருப்பதாக தென்கொரியா கூறுகிறது.
ஆக, ஐரோப்பியப் பொருட்களின் தரத்துக்கு நிகராக,
தென்கொரியாவின் பொருட்கள் இருந்தாலும்
COMPETITIVE PRICEல் அவை விற்கப் படுகின்றன.
இதனால் நோக்கியா, மோட்டோரோலா கருவிகளைப்
பின்னுக்குத் தள்ளி விட்டு, சந்தையில் நீடிக்க சாம்சங்கால்
முடிகிறது.
சரி, ஸ்மார்ட் போனின் ஸ்பெக்கிற்கு வருவோம்.
ஆண்ட்ராய்ட் OS 10.0 என்கிறது ஸ்பெக். ஆக ஆண்ட்ராய்ட்
OSன் வெர்ஷன் 10 என்று அறிந்து கொள்ள முடிகிறது.
அடுத்து மெகா பிக்சல்! மெகா பிக்சல் என்பதெல்லாம்
மெகா பித்தலாட்டம் என்பதை நான் அறிவேன். அந்த
HONEY TRAPஐ பலமுறை அம்பலப் படுத்தி உள்ளேன்.
மெகா பிக்சல் பற்றிப் பேச அருகதை உடைய ஒரே
நிறுவனம் ஆப்பிள் ஐ போன் நிறுவனம் மட்டுமே.
அவர்கள் மட்டுமே எத்தனை மெகா பிக்சல் என்று
சொன்னார்களோ, அத்தனை மெகா பிக்சலைத்
தருபவர்கள். இந்த இடத்தில் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸை
நினைவு கூர வேண்டியுள்ளது.
பிற நிறுவனங்களில் 48 மெகா பிக்சல் என்றால், அவர்களால்
ஒருபோதும் 48 மெகா பிக்சல் தர இயலாது. 6 மெகா பிக்சலும்
48 மெகா பிக்சலும் இரண்டுமே ஒன்றுதான். எனவே மெகா
பிக்சல் என்று பணத்தைச் சிதற விட வேண்டாம் என்று
வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
6 MP = 48 MP.
மூன்று அல்லது ஐந்து காமிராக்கள் இருந்தால் போதும்.
மூன்றே போதும். ஒரு FRONT CAMERA அவசியம்.
செய்து இருக்கிறார்கள். இதில் ஏதேனும் ஒன்றை நீங்கள்
வாங்கலாம் என்று பரிந்துரை செய்கிறேன்.
M-21 என்பது ரூ 12500ல் தொடங்குகிறது.
M-31 என்பது ரூ 16500 ஆகிறது.
கடையில் போய் கத்தரிக்காய் வாழைக்காய் வாங்குவது
போல, ஸ்மார்ட் போனை வாங்க வேண்டாம். உரிய
தொழில்நுட்ப அறிவுடன், பல்வேறு productsஐ பரிசீலித்து
நல்லதொரு ஸ்மார்ட் போனை வாங்கவும். பண நஷ்டம்
அடைய வேண்டாம். தொழில்நுட்பப் பின்னணி
இல்லாதவர்கள், technical knowledge உள்ள நண்பர்களின்
உதவியை நாடவும்.
----------------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
ஸ்மார்ட் போன் என்பது பலராலும் வாங்கப்படுவது.
இது குறித்த வழிகாட்டுதல் பலருக்கும் தேவைப்படுகிற
ஒன்று. எனவே முக்கியத்துவம் வாய்ந்த இப்பொருள்
குறித்து தமிழில் (கவனிக்கவும்: தமிழில்) ஏதேனும் கட்டுரை
வந்துள்ளதா? அல்லது இதுதான் தமிழில் எழுதப்பட்ட
முதல் கட்டுரையா?
************************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக