குளிர்ந்த நீரில் முகம் கழுவுதலா,
முறைப்பெண்ணின் முத்தமா?
---------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------
இன்றும் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் தூக்கம்
முடிந்து எழுந்து விட்டேன். குழாயில் நன்கு குளிர்ந்த
நீர் வந்து கொண்டு இருந்ததது. குளிர்ந்த நீரில்
முகம் கழுவினேன். இது மிகவும் சுகானுபவமாக
இருந்தது. முறைப்பெண் நம்மை முத்தமிடுவது
போன்றது இது!
பின்னர் பொண்டாட்டியை எழுப்பாமல் நானே காப்பி
போட்டுக் குடித்தேன். மீண்டும் குளிர்ந்த நீரில்
முகம் கழுவினேன்.
இந்த நீரின் வெப்பநிலை என்னவாக இருக்கும்?
இயற்பியல் மாணவர்கள் பதில் சொல்ல வேண்டும்.
20 டிகிரி செல்ஸியஸ் முதல் 30 டிகிரி செல்ஸியஸ்
வரையிலான நீரின் ஸ்பரிசம் எப்படி இருக்கும்?
இதைத் தொட்டு உணர்ந்தும் புலன்களால் அறிந்தும்
வைத்திருப்பவனே இயற்பியல் மாணவன்!
சிறிது நேரம் கழிந்ததும் மீண்டும் மூன்றாம் முறையாக
குளிர்ந்த நீரில் முகம் கழுவலாம் என்ற எண்ணம்
எழுந்தது. எனினும் அதை நான் செயலாக்கவில்லை.
ஏன்? ஒருவேளை Law of diminishing marginal utility என்ற
கோட்பாடு அப்ளையாகி விடுமோ என்ற பயம்தான்!
அது என்ன? Law of diminishing marginal utility என்றால்
என்ன? கணித இயற்பியல் மாணவர்களுக்கு இது
தெரியாதுதான்! அதில் குறையில்லை. ஏனெனில் கணித
இயற்பியல் மாணவர்களின் sharpest brainல் diminishing
utility போன்ற குப்பைகளைக் கொட்டுவது .சரியாகாது.
12ஆம் வகுப்பு பொருளியல் புத்தகத்தில்
(Elements of Economics) diminishing utility பற்றிய
பாடம் உள்ளது. ஓரளவு பொது அறிவு வேண்டுமென
நினைக்கும் கணித இயற்பியல் மாணவர்கள் மேற்கூறிய
புத்தகத்தைப் படித்து வைப்பது நல்லது.
மற்றப்படி, கணித இயற்பியல் மாணவர்கள் diminishing utility
பற்றியெல்லாம் அறிந்து வைத்திருக்க வேண்டிய
தேவையே இல்லை. ஏனெனில் பொருளாதாரம் என்பது
ஒரு அறிவுத்துறை அல்ல. அது ஒரு குப்பைக் கிடங்கு!
அது இயற்கையானதும் அல்ல. மனிதர்கள் செயற்கையாக
உருவாக்கிக் கொண்ட ஒரு முறைகேடான
ஒழுங்குதான் அது. எனவேதான் அந்த செயற்கையான
ஒழுங்கை, வன்முறை மூலம் அடித்து நொறுக்க வேண்டும்
என்று காரல் மார்க்ஸ் கூறினார்.
பொருளாதார அறிஞர்கள் என்று இந்த உலகில் யாருமே
கிடையாது. இருப்பவர்கள் அனைவருமே பொருளாதார
முட்டாள்கள்தான். அமர்த்தியா சென் எந்த அளவு
பொருளாதார மேதையோ, அந்த அளவுக்கு பொருளாதார
மேதையாக இருந்தவர் செத்துப்போன சரவண பவன்
ராஜகோபால். பெருந் தற்குறியான இவர் உலகெங்கும்
சொத்து வாங்கிக் குவித்துள்ளார்.
இன்னொரு பெருந்தற்குறியான ராஜாத்தி அம்மாளும்
மன்மோகன்சிங் போன்ற ஒரு பொருளாதார நிபுணரே.
அவரும் உலகெங்கும் சொத்து வாங்கிக் குவித்துள்ளார்.
IQ 120ஐ நெருங்கும் பொருளாதார நிபுணர் ப சிதம்பரம்
உலகெங்கும் சொத்து வாங்கிக் குவித்து விட்டு, திஹார்
சிறையில் கம்பி எண்ணினார். ஆனால் எந்தச் சிறையிலும்
கம்பி எண்ணாமல், உலகெங்கும் சொத்துக் குவித்துள்ளாரே
ராஜாத்தி அம்மாள்! பல்வேறு தீவுகளையே விலைக்கு
வாங்கிப் போட்டுள்ளாரே!
இப்போது சொல்லுங்கள்! ப சிதம்பரமா? அந்த
concubineஆ? யார் உண்மையான பொருளாதார மேதை?
A concubine is a concubine and such a person cannot be identified
otherwise This is the law of the land!
----------------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
EPW எனப்படும் Economic and Political Weekly பத்திரிகையை
கணித இயற்பியல் மாணவர்கள் வாங்கவோ படிக்கவோ
வேண்டாம். அது வெறும் குப்பை!
அதற்குப் பதிலாக ஒவ்வொருவரும் சயன்ஸ் ரிப்போர்ட்டர்
(Science Reporter) ஆங்கில மாத ஏட்டை வாங்கிப் படிக்க
வேண்டும். இதன் விலை ரூ 30 மட்டுமே. CSIR நிறுவனம்
வெளியிடும் பத்திரிக்கை இது.
விலை உயர்ந்த மிகவும் பளபளப்பான காகிதத்தில்
ஏராளமான வண்ணப் படங்களுடன் அச்சிடப்படும்
சயன்ஸ் ரிப்போர்ட்டர் இதழின் அடக்க விலை உண்மையில்
ரூ 300 இருக்கும். அதை அரசு வெறும் ரூ 30க்குத் தருகிறது.
இதெல்லாம் பட்நாகர் மகாத்மியம். சாந்தி ஸ்வரூப்
பட்நாகர் பற்றி அறிந்திடுக.
அத்தோடு தமிழ் மாத இதழான அறிவியல் ஒளி ஏட்டுக்குச்
சந்தா செலுத்தி, அதை வாங்கிப் படியுங்கள்.
**********************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக