சனி, 31 மார்ச், 2018

Hegel and slavery part ii
----------------------------
G.W.F. Hegel maintains that ancient slavery plays a central role in the historical development of the concept of freedom. In particular, the experience of slavery teaches something essential to the attainment of true freedom: the capacity to abstract from one’s particular interests. Slaves, whom the master forces to put aside their own natural and private desires, are in a position to reach and to lead the rest of society to freedom. Of course, the realization of freedom demands an essential next step: a move from serving the interests of another (such as the master) to embracing the interests of a rational community of free individuals.

The claim that it is preferable to abolish slavery gradually rather than suddenly would clash with Hegel’s general account of slavery, as well as with his philosophy of history. Any such claim would amount to providing a kind of justification for slavery that Hegel explicitly repudiates and to taking an evaluative standpoint that he considers inappropriate for a philosopher contemplating past civilizations. Hegel’s project requires rejecting altogether the question whether Greco-Roman societies would be morally or ethically better without slavery. Hegel seeks to show that, despite its role in the advancement of freedom, slavery is utterly at odds with the demands of freedom, as fully realized throughout world history.


HEGEL AND SLAVERY 
Certainly one of the most famous chapters of the Phenomenology of Spirit is the one on “lordship and bondage” or master and slave (“Knechtschaft” in German is not necessarily slavery, but Hegel’s bondsman has no rights and no contract with his master). Marxists (not Marx himself) understood the reversal of the master-slave relation as one of the central messages of the book. In contrast, recent Hegel-scholars have argued that the chapter is not about social practices or historical processes at all. Some claim that the social phenomena are only illustrations of the logical categories developing “behind the scene”. For others the relation between master and slave is meant to signify a relation within self-consciousness itself, namely between pure reason and the “inferior” faculties. Indeed, the young Hegel criticized Kant’s moral philosophy as demanding an internal servitude of the sensual and emotional faculties under the “tyranny” of pure practical reason.
However, if one places the relevant passages in chapter IV of the Phenomenology within the context of Hegel’s numerous treatments of the subject from his early manuscripts up to the last Berlin lectures – frequently referring to the Phenomenology of 1807 – several points seem to me clear: First, Hegel does indeed treat social phenomena occurring within history and at the same time concepts and theories of classical authors in the history of political philosophy (Aristotle, Hobbes, Locke, Rousseau etc.). Second, the self-consciousness of the lord and the bondsman or slave are two ways of understanding freedom and recognition – and third, slavery belongs to a necessary stage of history before the formation of states. It has to be replaced by legal relations between equal “persons” (cf. Philosophy of Right, § 57).
The abolition of slavery is accomplished as a result of the progress of reason and the consciousness of freedom.
The abolition of slavery is accomplished as a result of the progress of reason and the consciousness of freedom. Hegel does not understand relations between capital and labour as lordship and bondage. However, he realizes the emergence of class struggles within market societies. Although necessary for the execution of individual life plans, market economies are bound to run into crises which might dissolve the loyalty of the poor to state and law. Hegel’s Philosophy of Right discusses these possibilities but offers no systematic solutions and refrains from any particular historical prognosis or prophecy. This to some extent contrasts with his view that the rational institutions of the modern state are in principle irrevocable and that the rational tendencies of history will in the end prevail.
His own interest, at least in the Phenomenology, does not seem to be historical in the first place. It lies mainly in the overcoming of the opposition between self-consciousness and nature, individual and general will. At this stage of the development nature is the natural side of the human being itself. The famous “struggle for recognition” is a process of the self’s “emancipation” from nature and reconciliation with it. It starts with one human being seeking recognition for its independence from fellow human beings and at the same time from its own natural inclinations. This includes mastering one’s interest in self-conservation. Risking one’s own life is, however, not natural for human beings and many prefer servitude compared with death. Thus in the history of political thinking slavery in two forms has been considered as justified:  either “natural” slavery between rational and “semi-rational” beings or slavery by submission in war. The latter holds not only in the relation between individuals but also between a conqueror and a whole nation, as in Hobbes’ (or Grotius’) justification for a tacit “contract” of submission. Regarding this question, however, Hegel sides with Rousseau and Kant: Both private slavery and political domination by submission are against reason. But this is only the result of historical experiences as reversals of the “shapes” of collective consciousness.
In the Phenomenology this experience starts with the failure on the side of the master to attain unforced recognition for his own claim to freedom from nature. Without it, there is no “real”, socially confirmed freedom. At the same time his freedom from nature is reversed into the dependence on his own desires for pleasure and on the natural forces of his slaves. The slave passes through the opposite reversal from dependence to freedom, but not yet all the way down. His fear is transformed by his labour for the needs of other human beings and the discipline and skills required. He realizes his faculty to master the natural resistance both of his own body and the natural resources by transforming instead of subjugating them. However, he equally lacks the recognition of his freedom from natural constraints. Thus the whole relation is bound to be overcome, both in history and in philosophical justification. It is “sublated” in the mutual recognition of citizens in a state of law. “Sublation” in Hegel’s sense, as is well known, has to be understood as abolition, but also as conservation of some true “moments” of the former stage in the higher one.
The sense in which the higher form of mutual legal recognition contains elements of the masters and the slaves consciousness may be specified in the following way: As regards the master, his understanding of freedom as being independent from all his natural inclinations, including the conservation of his life, has to be maintained. The true essence of human beings lies in their spiritual interests, namely in their autonomous and rational decisions and actions. These have to be recognized by every other human being. The defence of these rights is a higher value than life and must be “proved” by the risk of one’s life for the defence of the community. As to the slave, his working for a community (already in the Greek “oikos”) and his following of rules are the first forms of a common consciousness and general will. In addition, his faculty of transforming his plans into lasting objects and instruments of human culture is an important step to “objective spirit” and its reconciliation with nature.
The new “synthesis” of the true contents of the master’s and the slave’s experiences in a state of mutual respect for equal rights is reached in the Phenomenology only much later in the chapters on Spirit. However, in Hegel’s other writings on practical or “objective” spirit he makes clear that this is the true consequence of the experience of the struggle for recognition and the master-slave relation. Historically there are many ways to this overcoming of domination by force – and it seems that Hegel considers slave rebellions mostly as premature in the course of rational progress in history.
In this interpretation I draw a lot on later Hegel texts, especially from lectures on the second (“spirit”) part of the Encyclopedia. I do not see a contradiction or incoherence between these and the Phenomenology chapter. In general I consider as justified Hegel’s conception of overcoming all forms of “personal” or “private” domination based on physical force by a rule. It can be supported by different positions in modern philosophy of law (for instance Rawls, Pettit, Habermas etc.). However, there are some critical points regarding Hegel’s theory. Some of them I mentioned already in my last blog: Hegel’s theory of recognition ends with an asymmetrical relation between citizen and state. Risking one’s life for the state is not restricted to defensive acts of the state against aggressors. To secure the freedom of its citizens from their private interests and the loss of their “communitarian” values the state may even provoke wars periodically. This cannot be defended any more in times of modern warfare and regarding the supreme duty of the state to protect human rights
Another weakness is Hegel’s emphasis that the fight for domination and the subjection of individuals and groups is the necessary beginning of all human states and their transformation into more equal and rational institutions. As John Locke had already argued, different forms of the development of larger human associations are possible and have been reported in historical documents and narratives. The unforced consent of human beings regarding temporal leaders responsible for executing tasks is among them – as is the restraining of the power of fathers or chiefs of clans by an agreement or “trust”. If this has been possible in early stages of human culture, it can serve as model for later stages as well. Hegel’s conception entails the risk of too sharp a contrast between a developed state and the “pre-state” level. If for instance he regards slave rebellions in colonies of the West-Indies (Domingo, Haiti) as premature (as he does in some marginal to § 57 in the Philosophy of Right), he seems to imply that these are not yet true states. Given the discussions at the beginning of the 19th century on the abolition of slavery throughout the world – or at least the European dominated world – this seems to lag behind the progress which reason and the collective outrage regarding slavery hat already accomplished.
As stated regarding the Phenomenology as a whole, I think Hegel’s concept of “lordship and bondage” can inspire modern thinking – for instance in view of criticizing more subtle forms of enforced recognition or new forms of slavery (child labour, criminal forms of prostitution etc.). To effectively deal with these problems, however, new legal and political efforts beyond the state level are required.

புதன், 28 மார்ச், 2018

உயிர்த்தெழுதல் உடைந்த சங்கில் ஒசை உட்புகா கறந்தபால் மடி புகா
மரக்கிளையில் இருந்து உதிர்ந்த பூக்கள் மீண்டும் நுனி புகா
இறந்தவர் உயிர்ப்பதில்லை இது இயற்கை இயற்கையே.

சிவவாக்கியர்.

திங்கள், 26 மார்ச், 2018

CNAnnadurai
காந்தியின் புகழைப் பொறுக்காமல் “காந்தியார், ஒன்றும் கடவுள் அல்ல, மகானும் அல்ல, மகாத்மாவும் அல்ல. அவர் ஒரு காமாந்தக்காரர். சுசீலா நாயர்கள் சூழ வர, கோகில பென்கள் தோளிலே கை போட்டுக்கொண்டு நடந்து வரும் காந்தியை பார்த்தாயா, தம்பி” என்று பொருமினார்.
பேரறிஞர் என்று புகழப்படுகிற அண்ணாத்துரையின் தீர்க்க தரிசனத்துக்கு ஒரு உதாரணம் :
"வெள்ளையனே வெளியேறு” போராட்டம் நடந்த போது மகாத்மாகாந்தியைக் குறித்து அவர் சொன்னது:
“தம்பி, காந்தியாருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. இவரைக் குணப்படுத்த இங்கிலாந்து தேசத்து வைத்தியர்கள் தேவை. வெள்ளையர்கள் வெளியேறினால், விஞ்ஞானமும் வெளியேறிவிடும். கார் ஓடாது, பஸ் ஓடாது, ரயில் ஓடாது, தந்தி கூட இருக்காது, ஏரோப்ளேன் இருக்காது. ஆல மரத்தையும், அரச மரத்தையும் சுற்றிக் கும்பிட்டு, பருந்தைக் கண்டால் கன்னத்தில் போட்டுக் கொள்ளத்தான் முடியும். நம் மக்களால் குண்டூசி கூட செய்ய முடியாது”.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அண்ணாத்துரையின் பங்கு குறித்து சொன்னாய். உண்மையில் நடந்தது என்ன தெரியுமா?
திக, திமுக கட்சியினரின் வாய் ஜாலத்தினால் மக்கள் தூண்டப் பட்டு, இந்த போராட்டத்தில் முதலில் கல்லூரி மாணவர்களும், பிறகு பொதுமக்களும் பெரும் அளவில் கலந்து கொண்டார்கள். இவர்கள் வாய் வார்த்தையை நம்பி பலர் மொழிக்காக போர் என்றே முடிவு செய்து தீக்குளித்து தன் உயிரை மாய்த்துக் கொண்டார்கள். பொது சொத்துக்கள் தீக்கிரையாகின.
அண்ணாத்துரையும் பல தலைவர்களும் சிறை சென்றனர்.ஆனால், இறுதியில் நடந்தது என்ன தெரியுமா? போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே -
“இந்தப் போராட்டத்துக்கும் எங்களுக்கும் தொடர்பு கிடையாது. 1965 ஜனவரி 26ஆம் நாளை துக்கநாளாகக் கடைபிடித்ததோடு எங்கள் போராட்டம் முடிந்து விட்டது” என்று அண்ணாத்துரை அறிவித்து விட்டார்.
சிறை சென்ற பல தலைவர்கள் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து வெளி வந்தனர். “இந்தி திணிக்கப் படமாட்டாது” என்பதை மத்திய அரசின் அரசாணையாக வேண்டும் என்று போராடிக் கொண்டிருந்தவர்கள் வெறும் வாக்குறுதியை மட்டும் சாக்காக வைத்து போராட்டத்தை முடித்துக் கொண்டனர். பாவம், இவர்களை நம்பி தீக்குளித்தவர்கள் தான் முட்டாள்கள் ஆனார்கள்.
அடுத்து திராவிட நாடு கோரிக்கையும் இப்படியே முடிந்தது
வெற்றிடம் என்றால் என்ன?
அறிவியல் விளக்கம்!
=============================
நியூட்டன் அறிவியல் மன்றம்
============================
குவான்டம் இயற்பியல் வெற்றிடம் என்பதைப்
பின்வருமாறு வரையறுக்கிறது.

Vacuum is that region of space which has a low energy level.
மிகக் குறைவான ஆற்றல் மட்டத்தைக் கொண்டிருக்கும்
வெளியின் ஓர் இடமே வெற்றிடம் ஆகும்.

Vacuum is that region of space which is devoid of matter.
பருப்பொருள் இல்லாத, வெளியின் ஓர் இடமே
வெற்றிடம் ஆகும்.

இது செவ்வியல் வரையறை (classical definition) ஆகும்.
அதாவது நியூட்டனின் இயற்பியல் (Newtonian physics)
இவ்வாறு வரையறுத்தது.

குவான்டம் இயற்பியலின்  வரையறையே
மேம்பட்டது; முழுநிறைவானது(perfect), துல்லியம் நிறைந்தது.

அண்ட வெளியில் நிறைய இடங்கள் வெற்றிடங்களாக
உள்ளன. ஆழ்வெளிக்குச் செல்லச் செல்ல வெற்றிடங்கள்
அதிகரிக்கும்.

வெற்றிடங்கள் உடனடியாக நிரப்பப்பட்டு விடுவதில்லை.
வெற்றிடம் உருவான மறு கணமே அது நிரப்பப்பட்டு
விடுகிறது என்பது தவறு.

நீடித்த வெற்றிடங்கள் (sustained vacuum) அண்ட வெளியில்
நிறையவே இருக்கின்றன. ஆண்டுக்கணக்கில் அவை
நிரப்பப் படாமல் வெற்றிடங்களாகவே நீடிக்கின்றன.

காற்றழுத்தமானி (barometer) என்ற ஒரு கருவி உண்டு.
வளிமண்டலத்தின் காற்று அழுத்தத்தை அளவிடும்
கருவி இது. கடற்பயணம் மேற்கொள்வோர், மீனவர்கள்
ஆகியோரின் படகுகளில் காற்றழுத்தமானி இருக்கும்.

சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு, டாரிசெல்லி (Toricelli)
என்னும் இத்தாலிய விஞ்ஞானி காற்றழுத்தமானியைக்
கண்டு பிடித்தார். இவரின் கருவி இன்றும் பள்ளி
ஆய்வுக் கூடங்களில் தவறாமல் இருக்கும். 11,12 வகுப்புச்
சிறுவர்கள் டாரிசெல்லியின் காற்றழுத்தமானி
பற்றி அறிவார்கள்.

டாரிசெல்லி தன்னுடைய அழுத்தமானியில் ஒரு
வெற்றிடம் உருவாவதை உணர்ந்தார். அது ஒரு
மகத்தான சிறப்புக்குரிய அம்சம். இந்த வெற்றிடம்
ஒரு நீடித்த வெற்றிடம் (sustained vacuum) ஆகும். அதாவது
இந்த வெற்றிடம் உருவான உடன் நிரப்பப்பட்டு
விடுவதில்லை.

ஆர்வம் உள்ளவர்கள் barometer பற்றியும் டாரிசெல்லி
பற்றியும் physics text books படித்து மேலும் தெரிந்து கொள்க!
*******************************************************************      





    
நூல் மதிப்புரை
----------------------------------------------------------------------
நூல்: மார்க்சியப் பார்வையில் அத்வைதம்:
ஓர் எளிய அறிமுகம்.
நூலாசிரியர்: பி இளங்கோ சுப்பிரமணியன்
------------------------------------------------------------------------------
அத்வைதம் பற்றிப் பல நூல்கள் உள்ளன. ஆனால்
அத்வைதத்தை மார்க்சிய நோக்கில் நின்று
திறனாய்வு செய்யும் நூல் இதுவரை
தமிழிலும் இல்லை, ஆங்கிலத்திலும் இல்லை.
இக்குறையை இந்நூல் போக்கி விடுகிறது.
மார்க்சியப் பார்வையில் அமைந்த அத்வைதத்
திறனாய்வில் முதல் நூல் இதுவே!

கடினமான நீண்ட வாக்கியங்கள், திருகலான
மொழிநடை இவையே தத்துவ நூல்களின்
சாபக்கேடு. அதற்கு மாறாக இந்நூல் தெளிந்த
நீரோடை சலசலத்துச் செல்வது போன்ற
மொழிநடையைக் கொண்டுள்ளது.
நூலை வாசிக்கும் எளிய வாசகர் கூட நூலின் எந்த ஒரு
இடத்திலும் இடறவோ, மீண்டும் மீண்டும்
வாசிக்க வேண்டிய தேவையோ ஏற்படாத ஒரு நூல் இது.


யாரும் பார்க்காதபோது ஆகாசம் நீல நிறமாக
இருக்காது என்ற ஆதிசங்கரரின் புகழ்பெற்ற
முடிவு அறிவியல் ரீதியாகத் தவறானது என்று
இந்நூல் நிரூபித்துள்ளது. நீல நிறம் குறைந்த
அலைநீளம் உள்ளதால் அதிகமாகச்  சிதறும் என்னும்  
ஒளியியல் நிகழ்வின் காரணமாகவே ஆகாயம்
நீல நிறமாக இருக்கிறது என்றும் இதற்கும்
எவர் ஒருவர் ஆகாயத்தைப் பார்ப்பதற்கும்
எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும் இந்நூல்
கூறுகிறது. எனவே பொருளின் விதிகளாலேயே
இப்பிரபஞ்சம் இயங்குகிறதேயன்றி, சிந்தனையின்
விதிகளால் அல்ல என்று இந்நூல் தெளிவுறுத்துகிறது.

புறவுலகம் மாயை என்னும் அத்வைதக் கருத்தை
இந்நூல் எளிதாக முறியடித்து விடுகிறது. பூனை
கண்ணை மூடிக்கொண்டாள் பூலோகம் இருண்டு
போகுமா என்ற பழமொழி வெறும் பழமொழி மட்டுமல்ல.
அது மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையின்
அனுபவத்தில் கண்டுணர்ந்த அத்வைத எதிர்ப்பு
மகாவாக்கியம் என்று இந்நூல்  சரியாகவே சுட்டுகிறது.

உலகில் வேறு எந்தத் தத்துவஞானியும்  அளிக்காத
சிறப்பை சிந்தனைக்கு அளித்தார் ஆதிசங்கரர்.இதன்
மூலம் அத்வைதம் கருத்துமுதல்வாதத்தின் உச்சம்
என்ற புகழைப் பெற்றது என்று இந்நூல் குறிப்பிடுகிறது.

அத்வைதம் குறித்த நவீனப் பார்வையை இந்நூல்
முன்வைக்கிறது. பெர்க்லி பாதிரியார், ஓஷோ
ஆகியோரின் தத்துவங்களுடன் அத்வைதம் ஒப்பிடப்
படுகிறது. பின்நவீனத்துடன் அத்வைதம்
முரண்படுவதையும், அமெரிக்க நாவலாசிரியை
அயன் ராண்டின் தத்துவமான புறவயவாதம்
அத்வைதத்தை ஈவிரக்கமின்றி முறியடித்து
விடுவதையும் இந்நூல் விவரிக்கிறது. மேலும்
அத்வைதம் குறித்து வாசகர்கள் அறிய வேண்டிய
ஏராளமான  செய்திகளும் இந்நூலில்  தரப்பட்டுள்ளன.
இதன் மூலம் சிறிய நூலாக இருந்த போதிலும்
நெடிய வீச்சு கொண்டதாக இந்நூல் திகழ்கிறது.
**************************************************  
   


வெள்ளி, 23 மார்ச், 2018

பெரியாரை செருப்பால் அடிப்பது யார்?
ராமர் கோவில் கட்டும் திமுக தலைவர் கே என் நேரு!
ராமருக்கு என்ன மயிருக்கு இங்கு கோவில்?
--------------------------------------------------------------------------------------------
1) திமுக தலைவர் கே என் நேரு தம் சொந்த ஊரில்
பெருமாள் கோவில் கட்டி வருகிறார்.

2) இந்த பெருமாள் கோவிலில் ராமருக்கும் ஒரு சந்நிதி
அமைக்கப் படுகிறது. அதாவது இது ராமர் கோவிலும்
ஆகும்.

3) பெரியார் ராமர் சிலையை உடைத்தார். ஆனால்
பெரியார் வழி வந்த கட்சியான திமுகவின் முக்கியத்
தலைவர் கே என் நேரு ராமருக்கு கோவில் காட்டுகிறார்!

4) இது பெரியாரை செருப்பால் அடிப்பதற்குச் சமம்.

5) ராமருக்கு என்ன மயிருக்கோ கோவில் கட்ட வேண்டும்?

6) பணம் கொழுத்தால் ஆஸ்பத்திரி கட்டு. அல்லது
பள்ளிக்கூடம் கட்டு. என்ன மயிருக்கு ராமர் கோவில்?

7) கே என் நேரு அவர்களே, நீர் சாமியைக் கும்பிடுவதில்
ஆட்சேபணை இல்லை. கும்பிட்டுத் தொலையும்.
ஆனால் என்ன மயிருக்கு ராமர் கோவில் கட்ட
வேண்டும்?

8) ராமர் கோவில் கட்டுவது பெரியாரின் கொள்கைக்கு
எதிரானது. இது பெரியாரை அவமதிக்கும் செயல்.

9) பாஜகவில் உள்ள பொன்னாரும் தமிழிசையும் கூட
ராமர் கோவில் கட்ட நினைத்தது இல்லையே!
அவர்களை விட நீர் பெரிய ராமர் பக்தரா?

10) பெரியாரை செருப்பால் அடிக்கும் இந்த முயற்சியை
கே என் நேரு கைவிட வேண்டும்.
********************************************************************  

அபிராமி கோவிலில் ஆற்காட்டார்! புழுவினும்
இழிந்த ஈனத்தனம்! இதுதான் பெரியார் வழியா?
பெரியாரை அவமதிக்காதே!

கோவில், சர்ச், மசூதி எல்லாவற்றையும் நாங்கள்
மூடுவோம். சோவியத் ஒன்றியத்தில் அல்பேனியாவில்
இதுதான் நடந்தது. இது வரலாறு. ஆனால், இதை மக்களின்
சிந்தனையில் மாற்றம் ஏற்படுத்தி, மக்களே கோவில்களை
மூடும் அளவுக்கு மனமாற்றம் ஏற்படுத்துவோம்.

திமுக பேச்சாளர், கொள்கை பரப்பு துணைச் செயலாளர்
திண்டுக்கல் லியோனி அவர்கள் திருநள்ளாறு
சனீஸ்வரன் கோவிலில் குடும்பத்துடன் சுவாமி
தரிசனம் செய்து பெரியாரை அவமதித்தார்.

இருந்தன. அது முதலாளித்துவ சமூக அமைப்பில்
உள்ள ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி. நான் கூறுவது
சோவியத் ரஷ்யாவில் புரட்சிக்குப்பின் வந்த கம்யூனிச
சமுதாய அமைப்பு.
 

எதிர்ப்பவர்களை சைபீரியாவுக்கு அனுப்புவோம்.
போலிப்பயல்கள், ஆஷாடபூதிகள்.

தந்தை பெரியார் காலத்தில் அரசில் இந்து அறநிலையத்
துறை இருந்தது. அதை பெரியார் எதிர்க்கவில்லை.
கே என் நேரு செய்த தவறைக் கண்டிக்காமல் அதற்கு
சப்பைக்கட்டு கட்டுவது பயன் தராது. அது
அருவருக்கத் தக்கது..



கே என் நேரு கட்டி வரும் கோவிலில், பெரியார் சிலையை
வைக்கப் போகிறேன். எந்த வேசி மகன்  தடுப்பான்
என்று பார்க்கிறேன்.

சர்ச்சுகள் இருந்தன. வழிபாட்டு உரிமையும் போல்ஷ்விக்
ஆட்சியால் மக்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது. ஆனால்
சர்ச்சுகளுக்குச் செல்வோர் எண்ணிக்கை குறைந்து
கொண்டே வந்து இறுதியில் பல சர்ச்சுகள் மூடப்பட்டன.
இதுதான் போல்ஷ்விக் பாதை. சர்ச்சுகளை உடைப்பதல்ல.

எனது கருத்து நாத்திகம் பற்றியது மட்டுமே. மற்ற
எந்த விஷயத்திலும் நான் இவர்களை விமர்சிக்கவில்லை.
நாத்திக விவகாரத்தில் சமரசம் கிடையாது.

அறிஞர் அண்ணாவை இதில் இழுக்காதீர்கள். அவர்
நேர்மையான அறிவு பூர்வமான நாத்திகர். அவரின்
திருமணம் வைதீக முறையில் நடந்ததை வைத்து
அவர் ஆத்திகர் என்று முடிவுக்கு வருவது அறியாமை.
அது அக்காலச் சூழல். மேலும் அப்போது அண்ணாவுக்கு
வயது 22 மட்டுமே. அறிஞர் அண்ணா INTELECTUALLY
CONVINCED ATHIEST.  மற்றவர்கள் அப்படி அல்ல.
அவர்களை நார் நாராக் கிழித்துத் தொங்க
விடுங்கள். அது நியாயமே.  அடுத்து உதயநிதி
குறித்து ஆதாரம் தருக. ஆதாரம் இல்லாமல்
பேச இயலாது.அதை என்னால் அனுமதிக்க இயலாது.

இது அப்பட்டமான பொய்;இழிந்த பொய். அண்ணாவின் அமைச்சரவையில் 1967ல் மொத்தமே ஒன்பது பேர்தான்.
1. அண்ணா 2. நாவலர் 3. கலைஞர் 4. மதியழகன்
5.செ. மாதவன் 6.சாதிக் பாட்சா 7.சத்தியவாணி முத்து
8. ஏ கோவிந்தசாமி 9.எம் .முத்துசாமி
சபாநாயகர்: சி பா ஆதித்தனார்
துணை சபாநாயகர்: பெ சீனிவாசன்.

இதில் அனைவருமே நாத்திகர்கள் சாதிக் பாட்சா தவிர.
யார் எவரும் விபூதி குங்குமம் அணிந்து இல்லை.
இது போன்ற அப்பட்டமான இழிந்த பொய்களைச்
சொல்லி அறிஞர் அண்ணாவை அவமானப் படுத்த
வேண்டாம். நான் கூறியுள்ளது அனைத்தும் உண்மை
என்று சவால் விட்டுக் கூறுகிறேன்.

  


புதன், 21 மார்ச், 2018

FINAL CORRECTIONS ADVAIDHAM
===============================
1) பின்னட்டை மடிப்பு
மார்க்சியம் கூறுகிற அறம் என்று தொடங்கி
சமத்துவம் என்று முடியும் வாக்கியம் வரையிலான
பகுதியை ஒரு பத்தியாக அமைக்கவும்.

2) இரண்டாம் பத்தி பின்வருமாறு அமைய வேண்டும்.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமே  சமத்துவத்தைப் படைக்கும்
அறம். சுரண்டலை ஒழித்து விடுதலையைத் தரவல்ல
அறம். மார்க்சியத்தில் அறம் இல்லை என்பது நகைப்புக்கு
உரிய கூற்று.  

நூலில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள்
================================================
பக்கம் 30...... முதல் பத்தி அதாவது என்று திருத்தவும்.

பக்கம் 39..... உருவாக்கினார் என்பதை அடுத்து முற்றுப்புள்ளி
வைக்கவும்.

பக்கம் 44.... கடைசி வரி
அனால் என்பதை ஆனால்  என்று திருத்தவும்.

பக்கம் 47.... காகிதப்பூ மனக்காது என்பதை
மணக்காது என்று திருத்தவும்.

பக்கம் 53..... பத்தி 2.
துவாரகை என்பதை நீக்கி சிருங்கேரி என்று திருத்தவும்.

பக்கம் 72.... ஜோசப் ஸ்டாலின் என்ற தலைப்பில்
5ஆவது வரி
மார்சிய என்பதை மார்க்சிய என்று திருத்தவும்.

 ------------------------------------------------------------------
நான் தமிழக மார்க்ஸிய சிந்தனையாளர்களில் முக்கியமானவர்களாக எண்ணுபவர்களைப்பற்றி எப்போதுமே பேசி வந்திருக்கிறேன். எஸ்.என்.நாகராஜன், ஞானி முதலியவர்களைப்பற்றி நிறையவே எழுதியிருக்கிறேன்-ஏற்றும் மறுத்தும். அவர்கள் என்னுடைய சிந்தனையை வடிவமைத்தவர்களில் முக்கியமானவர்கள்.
ஆனால் எல்லா மார்க்ஸியர்களைப் பற்றியும் நான் எழுதமுடியாது. தமிழில் எழுதுபவர்களில் நான் கொஞ்சம்கூட உடன்பட மறுக்கும் மார்க்ஸியர்களே அதிகம். ஏன்? எந்தச்சிந்தனையானாலும் நம்முடைய ஆதார மனநிலை மதம் சார்ந்ததே. ஆழமான நம்பிக்கையாக, உறுதியான சுயதரப்பாக நாம் சிந்தனைகளை மாற்றிக்கொள்கிறோம். அதை எளிய வாய்ப்பாடுகளாக ஆக்கிக்கொண்டு ஓங்கிச்சொல்கிறோம். மாற்றுத்தரப்பைக் கண்டுபிடித்து அதை வசைபாடுகிறோம். தமிழகத்தில் சிந்தனைத்தள விவாதம் என்ற ஒன்று அனேகமாக இல்லை. இங்கே வசைபாடுபவர்களே பெரும்பாலும் சிந்தனையாளர்கள் என அறியப்படுகிறார்கள்.
எதையும் அதன் மிக எளிமைப்படுத்தப்பட்ட வடிவில் எடுத்துக்கொள்பவர்களே நம்மிடையே அதிகம். நம் சூழலில் மார்க்ஸியமே கூட சிக்கலற்ற ஒரு நவீன மதநம்பிக்கையாகவே வந்து புழங்கிக் கொண்டிருக்கிறது. படைப்பூக்கம் கொண்ட எதையும் இந்த எளிமையான வாய்ப்பாடுகளைக்கொண்டு நம் ’சிந்தனையாளர்கள்’ நிராகரித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதே வரலாறு. ஓரு படைப்பிலக்கியவாதி என்ற முறையில் ஒருபோதும் நான் அவர்களை ஏற்றுக்கொள்ளமுடியாது.
தமிழில் மார்க்ஸியம் வந்தபோது வர்க்கப்பார்வை, சோஷலிச யதார்த்தம் என்றெல்லாம் கலைச்சொற்கள் போடப்பட்டு தமிழின் சிறந்த படைப்பிலக்கியவாதிகள் நிராகரிக்கப்பட்டனர், வசைபாடப்பட்டனர், எள்ளி நகையாடப்பட்டனர். படைப்பூக்கமே இல்லாத வெற்று ஜோடனைகள் பேரிலக்கியங்களாக முன்வைக்கப்பட்டன. இன்று அவையெல்லாம் எங்கே என்றே தெரியவில்லை. தமிழில் மார்க்ஸியர்களால் முன்னுதாரண இலக்கியவாதியாகச் சுட்டிக்காட்டப்பட்டவர் ’செவ்வானம்’ போன்ற வறண்ட நாவல்களை எழுதிய செ.கணேசலிங்கன் என்று கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்.
அதன் பின் வந்த ஒவ்வொரு சிந்தனை அலையும் படைப்பிலக்கியத்தை நிராகரிக்கும் வெற்றுக் கோட்பாட்டாளர்களுக்குப் படைப்பியக்கம் மீது வசைகளையும் திரிபுகளையும் கொட்டவே பயன்பட்டுள்ளது. விளிம்புநிலை சிந்தனைக் கோட்பாடுகளைப் பேசியவர்கள் முன்னிறுத்திய எழுத்தாளர், பஞ்சமர் போன்ற துண்டுப் பிரசுர பிரச்சார எழுத்துக்களை எழுதிய கெ.டானியல். அதன் பின்னர் வந்த அமைப்பியலாளர்கள் தாங்கள் எழுதிய அசட்டு சோதனை முயற்சிகளையே முன்னிறுத்தினார்கள் – தமிழவனின் நாவல்கள் போல. வாழ்க்கைக்கும் கலைக்குமான உறவு ஒருபோதும் அவர்களுக்குப் பிடிகிடைத்ததில்லை.
ஆகவே என்னுடைய கருத்தில் இத்தகைய வெற்றுக் கோட்பாடுகளை ஒருவகை ஆபாச எழுத்துக்களாகவே கண்டுவருகிறேன். அவற்றில் பெரும்பகுதி சுயசிந்தனை இல்லாமல் வெறுமே மனப்பாடம் செய்து திருப்பிச் சொல்லும் ஆசாமிகளால் எழுதப்படுவது. அவர்களால் மேற்கோள் காட்ட மட்டுமே முடியும், ஒருவரி கூட சிந்திக்க முடியாது. அவர்களுக்கு எப்போதுமே உண்மையான இலக்கிய ஆக்கத்தை பயம். அந்த ஆக்கத்தின் உட்சிக்கலையும் நுட்பத்தையும் அவர்களின் கோட்பாடுகளைக்கொண்டு விளக்க முடியாது. ஏனென்றால் இலக்கியப்படைப்பு ஒவ்வொரு முறையும் அவற்றைப் புதியதாகவே அடைகிறது.
ஆகவே எப்போதும் ஒட்டுமொத்தமாக படைப்பூக்கத்தை நிராகரிக்கிறார்கள். ‘வர்க்கநலனுக்கான எழுத்து’ என்றோ ’அழகியலுக்குப்பதில் அரசியல்’ என்றோ ‘இனி இலக்கியம் இல்லை வாசிப்பு மட்டுமே உள்ளது’ என்றோ இவர்கள் சொல்லும்போது செய்ய நினைப்பது இலக்கியத்தை நிராகரிப்பதைத்தான். அதை நான் ஏற்கமுடியாது
எரிக் ஹாப்ஸ்பாமுக்கே வருகிறேன். ஹாப்ஸ்பாம் அசிங்கமான மார்க்ஸியம் என்ற ஒன்றைச் சொல்கிறார். அதற்கு ஏழு இயல்புகள் உண்டு என்கிறார்
1. வரலாறு மீதான எளிய பொருளியல் விளக்கம். மிக எளிமையான பொருளியல் விளக்கத்தை எல்லா வரலாற்று நிகழ்வுகளுக்கும் அளித்துக்கொண்டே இருப்பது, பண்பாட்டுக் காரணிகளை, தனிப்பட்ட ஆளுமையின் விளைவுகளை எல்லாம் முழுமையாக நிராகரிப்பது அசிங்கமான மார்க்ஸியம்.
பொருளியல் அடித்தளம்-மேல்கட்டுமானம் என்ற எளிமைப்படுத்தல்.சமூகத்தின் பொருளியல்சார்ந்த இயங்குமுறையை விளக்க உற்பத்திவிசைகளும் உற்பத்தி உறவுகளும் அடங்கிய பொருளியல் கட்டுமானத்தை அடித்தளமாகவும் பண்பாடு, அரசு போன்ற அனைத்தையும் மேற்கட்டுமானமாகவும் பார்க்கும் அணுகுமுறை உதவிகரமானதே. ஆனால் எல்லாவகையான அரசியல், பண்பாட்டு நிகழ்வுகளையும் விளக்க அதை ஒரு வாய்பாடு போல கையாள்வது இந்த மார்க்ஸியர்களின் வழக்கம்.
வர்க்க நலன், வர்க்கப்போராட்டம் என்ற விளக்கம். மார்க்ஸியத்தின் இறுதி இலக்கு வர்க்கப்போராட்டமே. ஆனால் மாற்றுத்தரப்புகள் அனைத்தையுமே வர்க்க எதிரிகளின் கருத்தாகக் காண்பது அசிங்கமான மார்க்ஸியம்.
வரலாற்று விதிகள், வரலாற்றுப் போக்கின் தவிர்க்க முடியாமை பற்றிய பேச்சு. வரலாற்றில் உள்ளுறைந்து சில விதிகள் உள்ளன என்றும் அவற்றை எந்த ஆற்றலும் மாற்ற முடியாது என்றும் நினைப்பது மார்க்ஸிய அடிப்படைவாதம்.
மார்க்ஸ் அவரது தனிப்பட்ட ஆர்வத்தால் கூறிய சாதாரண கருத்துக்களைக்கூட விதிகளாக எடுத்துக்கொள்ளுதல் . உதாரணமாக ஐரோப்பியப் பொருளியல் வளர்ச்சி பற்றிய அவரது சாதாரண ஊகங்கள். இந்தியாவைப் பொறுத்தவரை மார்க்ஸ் ஆசிய உற்பத்தி முறை பற்றி கூறிய முதிர்ச்சியில்லாத கருத்துக்களை கிட்டத்தட்ட மதநூல் வரிகளாகவே இங்குள்ளவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள்
மார்க்ஸை ஆதர்சமாகக் கொண்டு எழுந்த இயக்கங்களில் இருந்து பெறும் விதிகளையும் கருத்துக்களையும் மார்க்ஸியக் கருத்துக்களாக அவர்மேல் ஏற்றிக்கொள்ளுதல். லெனின் அல்லது ஸ்டாலினின் கூற்றுக்களைக்கூட நம்மவர்களில் பலர் மார்க்ஸின் சிந்தனைகளின் பகுதிகளாக, அவற்றில் இருந்து பிரிக்கவே முடியாதவையாகக் கருதுகிறார்கள்.
வரலாற்றெழுத்தின் எல்லைகளை வர்க்க நலன் சார்ந்ததாக விளக்குதல். வரலாற்றெழுத்து பல்வேறு கோணங்களில், பல்வேறு கருவிகளைக் கொண்டு நிகழ்த்தப்படலாம். எல்லா வரலாற்றெழுத்தும் எப்போதும் வர்க்கநலன்களுக்காக எழுதப்படும் ஜோடனைகள் அல்லது சதிகள் மட்டுமே என்ற எண்ணம் அடிப்படைவாத மார்க்ஸியர்களிடம் உண்டு. ஹாப்ஸ்பாம் அதை அசிங்கமான மார்க்ஸியம் என்கிறார்
யோசித்துப்பாருங்கள். நம்மிடையே மார்க்ஸியம் பேசுபவர்கள் எங்கே நிற்கிறார்கள் என்று. அசிங்கமான மார்க்ஸியர் என்று மட்டுமே அவர்களைப்பற்றிச் சொல்லமுடியும் இல்லையா? எரிக் ஹாப்ஸ்பாமை ஏற்றுக்கொள்வதனாலேயே அவர்களை நிராகரிக்கவேண்டியிருக்கிறதல்லவா?
நான் ஏற்கனவே பலமுறை சொல்லியிருக்கிறேன். நான் வரலாற்றாய்விலும் சமூகவியல் ஆய்விலும் மார்க்ஸிய முரணியக்கப் பொருள் முதல்வாத ஆய்வுமுறையை மிக நவீனமான மிகவும் பயனுள்ள ஒரு ஆய்வு முறைமையாக எண்ணுகிறேன். சமூகப்பரிணாமத்தின் , பண்பாட்டு வளர்ச்சியின் சித்திரத்தை அது உருவாக்குமளவுக்கு வேறெந்த சிந்தனைமுறையும் உருவாக்குவதில்லை. அக்காரணத்தாலேயே எரிக் ஹாப்ஸ்பாம் முதல் ஞானி வரையிலான மார்க்ஸியர்கள் எனக்கு முக்கியமானவர்கள்
ஆனால் அந்த ஆய்வுமுறையைக்கொண்டு வர்க்கப்போரை உடனடியாக உருவாக்கவேண்டும் என்று சொல்லமாட்டேன். மார்க்ஸிய அரசியல் செயல்திட்டத்தில் எனக்கு உடன்பாடில்லை. சமூகத்தை எளிதாக வர்க்கங்களாகப் பிரிக்கமுடியாதென்றும், சமூகத்தைக் கருத்தியல் அடிப்படையில் செயற்கையாக உடைத்து மறுகட்டுமானம் செய்யமுடியாதென்றும், அவ்வாறு செய்தால் அழிவை மட்டுமே உருவாக்கமுடியும் என்று உலக வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கிறது என்றும் நம்புகிறேன்.
சமூகத்தைப் புரிந்துகொள்ள மார்க்ஸிய முரணியக்கப் பொருள்முதல்வாதம் பெருமளவு உதவிகரமானது. ஆனால் அந்தப் புரிதல் முழுமையானதல்ல. ஆகவே அந்தப் புரிதலின் அடிப்படையில் சமூகத்தை உடைத்துவார்க்க முயல்வது சரியல்ல என்பதே என் எண்ணம். நான் தொடர்ச்சியான கருத்தியல் முரணியக்கம் மூலம் நிகழும் படிப்படியான சமூக மாற்றத்தை நம்புகிறேன். அதை வளர்சிதை மாற்றம் என்றோ பரிணாமம் என்றோதான் சொல்வேன். ஆகவே எனக்கு காந்தி இன்னும் ஏற்புடையவராக இருக்கிறார். மார்க்ஸிய ஆய்வுமுறைக்கும் காந்தியச் செயல்திட்டத்திற்கும் நடுவே ஓர் அர்த்தபூர்வமான இணைப்பு நிகழமுடியுமா என்றே நான் எப்போதும் பார்க்கிறேன்.
ஜெ

எரிக் ஹாப்ஸ்பாம் வரலாற்றின் மீது எஞ்சும் நம்பிக்கை 
00000000000000000000000000000000000000000000000000000000000
1996 காலகட்ட்த்தில் நான் விஷ்ணுபுரம் நாவலை எழுதி மீண்டு, அன்று இங்கே பேசப்பட்டு சற்றே ஓய்ந்துவிட்டிருந்த பின்நவீனத்துவச் சிந்தனைகளை மூலநூல்களைக் கொண்டு புரிந்துகொள்ள முயன்றபோது நித்ய சைதன்ய யதியின் மதிப்புமிக்க வழிகாட்டுதல் கிடைத்தது. பின்நவீனத்துவச் சிந்தனைகளை வாசிக்கையில் நேர் எதிரான இருவகை சிந்தனைகளை இருபக்கமும் நிறுத்திக்கொண்டு வாசிப்பதே சமநிலையை உருவாக்கும் என்று நித்யா சொன்னார். ஒன்று மார்க்ஸிய இலட்சியவாதம். இன்னொன்று நரம்பியல் தொகுப்புநோக்கு.அவர் எனக்குப் பரிந்துரைத்த நூல்களில் ஒருபக்கம் எரிக் ஹாப்ஸ்பாம்இருந்தார். மறுபக்கம் ஆலிவர் சாக்ஸ் இருந்தார்


பின்நவீனத்துவத்தைத் தர்க்கத்தின் கொண்டாட்டம் எனலாம்.நிறுவப்பட்ட எல்லாவற்றையும் இலக்கு இல்லாத, தர்க்கம் மட்டுமேயான தர்க்கம் மூலம் உடைக்கும் ஒரு வேகம் மட்டுமே அது. ஒரு கோணத்தில் அதை புதுமறுப்புவாதம் [neo nihilism] எனலாம்.
நித்யாவைப்பொறுத்தவரை ஒரு பெரும் இலட்சியவாதக் காலகட்டத்தின் முடிவுக்கும் இன்னொன்றின் பிறப்புக்கும் இடைப்பட்ட சிறிய, மிகமிகச் சிறிய, இடைவெளியில் நிகிலிசங்கள் உருவாகும். கிரேக்க இலட்சியவாதத்துக்கும் கிறித்தவ இலட்சியவாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டம்தான் ஐரோப்பிய சிந்தனையின் முதல் ஐயவாதத்தின், மறுப்புவாதத்தின் காலகட்டம். கிறித்தவ இலட்சியவாதம் சரிந்து இடதுசாரி இலட்சியவாதமும் நவீனஜனநாயக இலட்சியவாதமும் உருவாவதற்கு இடைப்பட்ட காலகட்டமே இவான் துர்கனேவின் ’தந்தையும் தனயர்களும்’ நாவல் சித்தரிக்கும் ருஷ்ய மறுப்புவாதத்தின் சூழல்.
இடதுசாரி இலட்சியவாதமும் நவீன தாராளவாத ஜனநாயக இலட்சியவாதமும் தோற்றுப்போய் விழுந்த இடைவெளியே பின்நவீனத்துவ நிகிலிசத்தின் பிறப்புக்கான பின்னணி . ஆனால் மானுடம் இலட்சியவாதமில்லாமல் இருக்க முடியாது என்று நித்ய சைதன்ய யதி அழுத்தமாக நம்பினார். மார்க்ஸிய இலட்சியவாதம் மீது அவருக்கிருந்த ஈடுபாடு கடைசி வரை நீங்கவும் இல்லை. சோவியத் ருஷ்யா உடைந்த நாட்களில் அவர் தன் நண்பர்களான இடதுசாரித் தலைவர்களுடன் கொண்ட நீண்ட கடிதப்பரிமாற்றங்கள் நூலாக வெளிவந்துள்ளன. அதில் அந்நம்பிக்கையைப் பேணிக்கொள்ள நித்யா முயல்வதைக் காணமுடிகிறது
1997ல் வெளிவந்த ’வரலாறைப்பற்றி’ என்ற நூலில் எரிக் ஹாப்ஸ்பாம் சென்ற தொண்ணூறுகளில் ஆற்றிய பல பல்கலைக்கழக உரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. மார்க்ஸிய வரலாற்றாய்வாளர்கள் பின்நவீனத்துவ சிந்தனைகளை எதிர்கொண்டு கடந்துசென்ற காலகட்டம் என தொண்ணூறுகளைச் சொல்லலாம். இந்நூல் முழுக்க அந்தக் கருத்துமோதலின் மார்க்ஸியத்தரப்பை நாம் காணமுடிகிறது. இன்று ஓர் இடைவெளிக்குப்பின் நான் கட்டுரைகள் நடுவே எழுதிவைத்த குறிப்புகளுடன் சேர்த்து இந்நூலை வாசிக்கும்போது ஒட்டுமொத்தமாக இந்நூலை வரலாற்றின் புறவயத்தன்மையை நிறுவுவதற்கான முயற்சி என்று சொல்லலாம் என்று தோன்றுகிறது.
வரலாறு என்ற அடிப்படை உருவகம் மீது ஆழமான தாக்குதல்களைத் தொடுத்தவர் என்று ஜெர்மானியச் சிந்தனையாளர் நீட்சேயை சொல்லலாம். வரலாறு என்பது நினைவில் உருவாக்கி நிறுத்தப்படும் வம்சாவளி வரலாறுமட்டும்தான் என்றார் நீட்சே. பிற எல்லா வரலாறுகளும் சமகாலத்தில் அதிகாரத்தை உருவாக்கி நிலைநாட்டும் நோக்கத்துடன் கட்டமைக்கப்படுபவை மட்டுமே. இன்றைய கருத்தியல்களுக்கு ஏற்ப நேற்றை உதவிகரமான தகவல்களின் அடிப்படையில் கட்டி எழுப்பக்கூடியவை. அத்தகவல்களைத் தேர்வுசெய்வது வரிசைப்படுத்துவது ஆகியவற்றில் வரலாற்றெழுத்தாளனின் நோக்கம் செயல்படுகிறது. ஆகவேதான் வரலாறு ஒடுக்குபவர்களுக்கும் ஒடுக்க்கப்படுபவர்களுக்கும் நடுவே, வென்றவர்களுக்கும் தோற்றவர்களுக்கும் நடுவே முழுமையாக வேறுபடுகிறது.
நீட்சே பின்நவீனத்துவகால சிந்தனையாளர்களில் ஆழமான பாதிப்பை உருவாக்கியவர். இன்றைய கருத்தியல்தேவைக்கு வரலாற்றைப் பின்னணியாக்குவதை வரலாற்றுவாதம் என ஒட்டுமொத்தமாகவே நிராகரிக்கும் பின்நவீனத்துவர்கள் வரலாறென்பது ஒட்டுமொத்தமாகவே ஒரு புனைவுதான் என்று கூறினார்கள். அந்தப் பெரும்புனைவுக்குள் இனமேன்மைகள், குலமேன்மைகள் ,தனித்துவம் கொண்ட பண்பாட்டுப் பாரம்பரியங்கள், தேசியங்கள் போன்ற பெரும்புனைவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் உண்மையில் மொழிக்குள் நிகழக்கூடிய சொல்லாடல்கள் மட்டுமே. பெருமொழிபுகள் என பின்நவீனத்துவம் இவற்றை ஒட்டுமொத்தமாக அடையாளப்படுத்தி இவையெல்லாமே அதிகாரத்தை அடைந்து ஆள்வதற்கான உத்திகள் மட்டுமே என தீர்மானிக்கிறது. எந்தப் பெருமொழிபும் உள்ளடக்கத்தில் ஆதிக்கத்தையே கொண்டிருக்கும் என்கிறது.
இந்த அணுகுமுறைக்கு எதிராகவே என்றும் இடதுசாரி வரலாற்றாய்வாளர்கள் நிலைகொண்டிருக்கிறார்கள். அவர்களைப்பொறுத்தவரை வரலாற்றின் புறவயத்தன்மை என்பது எப்போதும் சற்று மழுங்கலானதுதான், ஆனால் அதைவைத்துப் புறவயமான வரலாறு என்பதே கிடையாது என்று வாதிடுவது என்பது அபத்தமானது. இப்படி வாதிடுபவர்கள் தங்கள் வாதங்கள் மட்டும் புறவயமானவை என்று நம்புவதைக் காணலாம், அந்த வாதங்களும் அவற்றின் சொற்களன்களும் கூட அகவயமானவை என்றால் அறிவுத்தளத்தில் புறவயமாக என்னதான் இருக்கிறது என்கிறார்கள் மார்க்ஸியர்கள்.
வரலாற்றை ஒரு பெரும்புனைவாக எடுத்துக்கொண்டால்கூட அது புறவயமான பெருந்தர்க்கம் கொண்ட, கூட்டான பெரும்புனைவு. மொழிக்குள் உள்ள நிகழ்வாகவே எடுத்துக்கொண்டாலும் கூட,தன் எல்லைக்குள் அது புறவயமான விதிகளை, இயங்குமுறைகளைக் கொண்டுள்ளது. அதன் இயக்கவிதிகள் சமகாலத்தை அறிந்துகொள்ள உதவக்கூடியவை. ஆகவே வரலாற்றின் பெருமொழிபுத்தன்மையைக் கணக்கில்கொண்டு வரலாற்றை விவாதிக்கும் புதுவரலாற்றுவாதச் சிந்தனையாளர்கள் உருவாகி வந்து பின்நவீனத்துவம் வரலாற்றுக்கு அளித்த விவரணைகளை நிராகரித்தார்கள்
புதுவரலாற்றுவாதத்தை உருவாக்கிய ஆரம்பகட்டச் சிந்தனையாளர்களில் ஒருவர் என எரிக் ஹாப்ஸ்பாமைச் சொல்லலாம். இடதுசாரி வரலாற்றுக் கோட்பாட்டாளரான ஹாப்ஸ்பாமின் ’வரலாறு குறித்து’ என்றநூலின் முன்னுரையிலேயே இந்தத் திட்டவட்டமான நிராகரிப்பும் நிலைபாடும் வந்துவிடுகிறது. புறவய வரலாற்று உண்மை சாத்தியமே இல்லை என நம்பும் சமகால மோஸ்தரை நிராகரிக்கும் எரிக் ஹாப்ஸ்பாம் ’சுருக்கமாகச் சொன்னால் எது உள்ளது எது இல்லை என்ற திட்டவட்டமான வேறுபாடு இல்லாமல் வரலாறே இல்லை’ என்கிறார்.
இப்படிச் சொல்வதை positivism என்று ஒற்றைச் சொல்லில் பின்நவீனத்துவர் நிராகரிப்பதைச் சுட்டிக்காட்டும் எரிக் ஹாப்ஸ்பாம் ரோம சாம்ராஜ்யம் பூனிக் போர்களில் கார்தேஜை தோற்கடித்து அழித்தது என்பது ’உள்ள’ விஷயம், அதை எந்த வரலாற்றெழுத்தும் ’இல்லா’மலாக்காது என்கிறார். அதற்கான காரணங்களை விளக்குவதில் மட்டுமே அகவயத்தன்மை வரமுடியும். இன்றைய சார்புவாதிகள் [relativists] வரலாற்றை ஒரு வெறும் விவாதக்களனாகச் சித்தரிக்க முயல்கிறார்கள் என்று சொல்லும் எரிக் ஹாப்ஸ்பாம் ‘இன்றைய வரலாற்றெழுத்தில் சார்புவாதத்துக்கு உள்ள அதிகபட்ச இடம் என்பது ஒரு நீதிமன்றத்தில் உள்ள அளவுக்கே’ என்கிறார்
தன்னை ஒரு மார்க்ஸிய வரலாற்றாய்வாளர் என்று குறிப்பிட விழையும் எரிக் ஹாப்ஸ்பாம் மார்க்ஸியநோக்கு இல்லையேல் தனக்கு வரலாற்றை ஆராய்வதற்கான நோக்கம் இல்லாமலாகிவிட்டிருக்கும் என்கிறார். அது வரலாற்றை ஆராய்வதற்கான கருவிகளை அளிப்பது இரண்டாம் பட்சமே , ஏன் வரலாற்றை ஆராயவேண்டும், அதிலிருந்து எதைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற தெளிவே மார்க்ஸியம் அளிக்கும் முக்கியமான பங்களிப்பு. வரலாற்றாய்வில் ஒரு இலட்சியவாத அம்சத்தைச் சேர்த்தது மார்க்ஸியமே என்கிறார் ஹாப்ஸ்பாம்.
ஹாப்ஸ்பாம் மார்க்ஸிய வரலாற்றாய்வே மானுடவரலாற்றின் பரிணாமச்சித்திரத்தை அளிக்கக்கூடியது என நம்புகிறார். மார்க்ஸிய அரசியல் மட்டுமே நல்லது என்றோ, அல்லது போதுமானது என்றோ தான் நம்பவில்லை என்று சொல்லும் ஹாப்ஸ்பாம் ஆனால் மார்க்ஸிய வரலாற்றாய்வுமுறைமையே நவீன வரலாற்றாய்வில் ஒப்புநோக்க அதிக முழுமையும் ஒருங்கிணைவும் உள்ளது என இந்நூலில் மீண்டும் மீண்டும் வாதிடுகிறார்.
மார்க்ஸிய ஆதரவாளரல்லாத எர்னஸ்ட் கெல்னர் [ Ernest Gellner] கூறிய மேற்கோள் ஒன்றை ஒரு இடத்தில் ஹாப்ஸ்பாம் எடுத்துக்காட்டுகிறார். இன்றுவரை வரலாற்றாசிரியர்கள் மனிதனின் வரலாற்றுப் பரிணாமத்தை விளக்கக் கையாண்ட கருவிகளில் மார்க்ஸியமே முக்கியமானது, பிற அனைவரும் தங்கள் சொந்த ஐயங்களையும் மறுப்புகளையும் மட்டுமே முன்வைக்க முடிந்திருக்கிறதே ஒழிய ஒரு மாற்று வரலாற்று மொழிபை உருவாக்க முடிந்ததில்லை என்கிறார் கெல்லர்.
புதுவரலாற்றுவாதத்தின் அடிப்படைச்சிந்தனைகளைப் புரிந்துகொள்வதற்கு உதவக்கூடிய மூன்று முக்கியமான கட்டுரைகளை எரிம் ஹாபஸ்பாமின் இந்நூலில் காணலாம். மிக விரிவான விவாதத்துக்குரியவை அக்கட்டுரைகள். வரலாற்றெழுத்தாளர்கள் மார்க்ஸுக்கு எவ்வகையில் கடன்பட்டிருக்கிறார்கள் என்ற கட்டுரையில் எரிக் ஹாப்ஸ்பாம் மார்க்ஸியம் ஒன்றே வரலாற்றை ஒரு பரிணாமத்தொடர்ச்சியில் வைத்து பார்க்கிறது, தனிநிகழ்வுகளை ஒட்டுமொத்ததில் பொருத்துவதற்கான விரிவான சட்டகத்தை அளிக்கிறது என்கிறார்.
நூறு வருடத்தில் வரலாற்றெழுத்தில் மார்க்ஸியம் செலுத்திய செல்வாக்கு காரணமாகவே வரலாறு சமூகவியலுக்கு இத்தனை நெருக்கமானதாக ஆகியது, பண்பாட்டாய்வுக்கு அடித்தளமாக அமைந்தது என்று சொல்கிறார் எரிக் ஹாப்ஸ்பாம். இன்று எல்லா சமூக அறிவியல்துறைகளுமே ‘வரலாற்றுமயமாக்க’ப்பட்டிருப்பதற்கு மார்க்ஸ் காரணம். பாசிட்டிவிச நோக்கின் மிதமிஞ்சிய எளிமைப்படுத்தல்களை தாண்டி வரலாற்றை நடைமுறைநோக்கில் தொகுத்துப்பார்க்கும் ஆய்வுமுறைமைகளை அது அளித்திருக்கிறது.
சம்பிரதாய மார்க்ஸியர்களின் ஒற்றைப்படையான கோட்பாட்டு விசுவாசத்தை ‘அசிங்கமான மார்க்ஸியம்’ என நிராகரிக்கும் ஹாப்ஸ்பாம் எவ்வகையான எளிமைப்படுத்தல்களையும் ஏற்பதில்லை. வரலாற்றாய்வின் மூலம் வாழ்க்கை பற்றியோ சமூகம் பற்றியோ வாய்ப்பாடுகளை உருவாக்கிக்கொள்ளமுடியாதென்றே அவர் நினைக்கிறார். வர்க்கநலன், அடித்தளம்-மேற்கட்டுமானம் போன்றவற்றை எளிய உருவகங்களாகப் பயன்படுத்தி வரலாற்றை ஆராயும் முறையை அவர் ஏற்பதில்லை. ஆனால் மார்க்ஸிய அடிப்படைகளான முரணியக்கப் பொருள்முதல்வாதமும், உபரிக்கோட்பாடும் வரலாற்றை விளக்குவதற்கான, எல்லைக்குட்பட்ட, உபயோகமான கருவிகள் என நினைக்கிறார்.
நூறு வருட வரலாற்றெழுத்தில் மார்க்ஸின் செல்வாக்கை நான்கு அடிப்படைக் கருத்துக்களாக ‘மார்க்ஸும் வரலாறும்’ என்ற கட்டுரையில் தொகுத்தளிக்கிறார் எரிக் ஹாப்ஸ்பாம். ஒன்று, உலகமெங்கும் சோஷலிசத்தை ஏற்றுக்கொள்ளாத சமூகங்களில் இன்றும் மார்க்ஸியத்தை அடிப்படையாகக் கொண்டு வரலாற்றை ஆராயும்போக்கு வலுவாகவே உள்ளது. மார்க்ஸிய வரலாற்றாய்வாளர்கள் ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் வலியுறுத்திவந்த அடிப்படைக் கருதுகோள்கள் பல இன்று மையநீரோட்ட வரலாற்றின் அடிப்படைகளாகவே ஆகிவிட்டிருக்கின்றன. உதாரணமாக ஒரு வரலாற்றுக்காலகட்டத்தின் உற்பத்தி முறைகள் உபரிசேமிப்பு பற்றிய புரிதல் அந்த வரலாற்றுக்காலகட்டத்தை அறிவதற்கு எந்த அளவுக்கு முக்கியமானது என்பது.
[தமிழகத்தில் இருந்து உதாரணம் காட்டவேண்டுமென்றால் மார்க்ஸியரே அல்லாத கெ.கெ.பிள்ளை சோழர்காலகட்ட உற்பத்தி மற்றும் வரிவசூல் முறைகளைப்பற்றி ஆராய்ந்ததைச் சொல்லலாம். அவரது கருவிகள் மார்க்ஸியத்தால் உருவாக்கப்பட்டவையே. ஆனால் அவர் மார்க்ஸிய ஆய்வாளராக அல்ல, மையநீரோட்ட ஆய்வாளராகவே கருதப்படுகிறார். பர்ட்டன் ஸ்டெயின், நொபுரு கரஷிமா போன்ற சோழர்வரலாற்று ஆய்வாளர்களும் மார்க்ஸிய ஆய்வுமுறைகளை இயல்பாகவே பயன்படுத்துகிறார்கள்]
இரண்டு, மார்க்ஸிய வரலாற்றாய்வுமுறை கையாளப்படும் எல்லா நாடுகளிலும் மார்க்ஸ் ஒரு தொடக்கப்புள்ளியாக இருக்கிறாரே ஒழிய முடிவுப்புள்ளியாக அல்ல. அதாவது வர்க்கப்போர், புரட்சி, பொதுவுடைமைச் சமூகம் போன்ற இலக்குகளை வந்தடைவதற்காக அந்த ஆய்வுகள் நிகழ்த்தப்படவில்லை. முரணியக்கப் பொருள்முதல்வாத நோக்குடன் வரலாற்றைப் பார்ப்பதை மட்டுமே மார்க்ஸிடம் இருந்து இந்த வரலாற்றாய்வாளர்கள் எடுத்துக்கொள்கிறார்கள்
[இந்திய அளவில் உதாரணம் சொல்வதாக இருந்தால் டி.டி.கோசாம்பியை மார்க்ஸியவரலாற்றுநோக்குள்ள ஆய்வாளர் என்று சொல்லலாம். அவரது வழிவந்தவர்கள் என அடையாளப்படுத்தப்படும் ரொமிலா தாப்பர், இர்ஃபான் ஹபீப், ஆர்.எஸ்.சர்மா போன்ற வரலாற்றாசிரியர்கள் மார்க்சிய அரசியல் செயல்திட்டத்துக்குள் சென்றவர்களே அல்ல. அவர்கள் இந்தியாவின் வரலாற்றை ஒரு பெரும் சமூக-பொருளியல் பரிணாமமமாகப் பார்ப்பதற்கு மட்டுமே மார்க்ஸியத்தைக் கைக் கொள்கிறார்கள்]
மூன்றாவதாக, மார்க்ஸிய வரலாறு நோக்கு என்பது இன்று மிகுந்த பன்மைத்தன்மையுடன் உள்ளது. அது ஒரு கோட்பாட்டு வழிமுறையோ அரசியல்பார்வையோ ஆக இல்லை. ஒரு பெரிய விவாதப்பரப்பாகவே உள்ளது. உலகம் முழுக்க அப்படித்தான். வரலாற்றை விளக்குவதற்கு மார்க்ஸியம் ஒரு வழிமுறையை அளிக்கிறது என்பதை விட வரலாற்றைப்பற்றிய ஒரு விரிவான விவாதத்தை உருவாக்குகிறது என்று சொல்வதே சரியானதாக இருக்கும்
நான்காவதாக, இன்று மார்க்ஸிய நோக்கிலான வரலாற்றாய்வுகளைப் பிற வரலாற்றாய்வுகளில் இருந்து பிரித்துநோக்க முடியாது. இது இருமுனை கொண்டது என்கிறார் எரிக் ஹாப்ஸ்பாம். ஏனென்றால் நெடுங்காலமாக மார்க்ஸிய வரலாற்றாசிரியர்கள் பிற வரலாற்றாய்வுகளைத் தரவுகளுக்காக அன்றி பொருட்படுத்தியதில்லை. மார்க்ஸியர்களுக்கும் பிறருக்குமான கொள்கைமோதல்கள் நீடிக்கிறதென்றாலும் மார்க்ஸிய வரலாற்றெழுத்து இல்லாமல் ஒட்டுமொத்த வரலாற்றெழுத்து நிறைவடையாது என்ற நிலை இன்று உருவாகியிருக்கிறது.
[இந்திய அளவில் நோக்கினால் டி.டி.கோசாம்பியைத் தொடக்கப்புள்ளியாகக் கொண்ட இந்திய மார்க்ஸிய நோக்கிலான வரலாற்றெழுத்து நெடுநாட்களாகக் கல்வித்துறைக்கும் சம்பிரதாய வரலாற்றெழுத்துக்கும் வெளியேதான் நின்றுகொண்டிருந்தது. எண்பதுகளுக்குப்பின் அந்த நிலை மாறிவிட்டிருப்பதை சமீபகால ஆய்வேடுகளைப்பார்த்தால் அறியலாம். இன்று அதிகம் மேற்கோள்காட்டபடும் வரலாற்றாசிரியர்கள் பலரும் கோசாம்பியின் மரபைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதற்கு ஜவகர்லால் நேரு பல்கலை ஒரு முக்கியமான காரணமாகவும் உள்ளது]
முடிவாக எரிக் ஹாப்ஸ்பாம் ‘நம்மால் ஊகிக்கக்கூடிய வருங்காலத்திற்காக நாம் அரசியல் மற்றும் கருத்தியல் நோக்கில் தாக்குதல் தொடுப்பவர்களிடமிருந்து மார்க்ஸையும் மார்க்ஸியத்தையும் காத்துக்கொள்ள வேண்டிய இடத்தில் இருக்கிறோம். அதன் வழியாக நாம் உண்மையில் வரலாறு என்பதையே காத்துக்கொள்கிறோம், இந்த உலகம் இந்த இடத்தை நோக்கி எப்படி வளர்ந்து வந்து சேர்ந்தது என்பதைப் புரிந்துகொள்ள மனிதனால் முடியும் என்பதையும் இன்னும் மேலான எதிர்காலத்தை நோக்கிச் செல்ல மனிதனால் முடியும் என்பதையும் நிறுவிக்கொள்கிறோம்’ என்கிறார்.
இந்நூலில் எரிக் ஹாப்ஸ்பாமின் ஆர்வமூட்டும் உரைகள் அத்தியாயத் தொடர்ச்சியுடன் தொகுக்கப்பட்டுள்ளன. பல்வேறு கோணங்களில் வரலாற்றைப்பற்றிய வினாக்களை எழுப்பிக்கொண்டு முன்செல்லும் இந்நூல் வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு கேள்விகளுடன் அணுகப்படவேண்டிய ஒன்றாகும். ‘வரலாறு முன்னகர்ந்திருக்கிறதா?’ ‘சமூகவியல் வரலாறும் சமூகத்தின் வரலாறும்’ போன்று தலைப்புகள் ஒவ்வொன்றும் ஆர்வத்தை எழுப்பக்கூடியவை.
உதாரணமாக, வரலாற்றை நீங்கள் உள்ளே நின்று பார்க்கிறீர்களா இல்லை வெளியே நின்று பார்க்கிறீர்களா என்பது எப்போதுமே முக்கியமானது என ’வரலாற்றுக்கு உள்ளேயும் வெளியேயும்’ என்ற கட்டுரையில் ஹாப்ஸ்பாம் விவாதிக்கிறார். வரலாற்றுக்கு வெளியே நின்று விவாதிப்பதென்பது பெரும்பாலும் அன்னிய வரலாற்றை ஆராய்வதிலேயே சாத்தியம். ஐரோப்பா இந்தியாவை அப்படி ஆராயலாம். சோவியத் ருஷ்யாவை முதலாளித்துவ ஐரோப்பா அப்படி ஆராயலாம். அது புறவயத்தன்மையை அடையக்கூடும் என்பது ஒரு சாதகமான அம்சம் என்றால் அது அந்த வரலாறுமீதான அன்னியனின் தீர்ப்பளிப்பாக ஆகிவிடுமென்பது எதிர்மறையான அம்சம்.
சோவியத் ருஷ்யாவின் வரலாற்றில் ஸ்டாலின் ஆட்சிக்காலகட்டம் மிகமோசமான ஒடுக்குமுறைகளாலானது என்பதை ஹாப்ஸ்பாம் ஒத்துக்கொள்கிறார். ஆனால் 1930களில் அந்தக் கம்யூனிச ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த ஏழைமக்களில் கணிசமானவர்களுக்கு அது பொற்காலமாக இன்றும் நினைவில் நீடிக்கிறது என்பதும் உண்மை. சுதந்திரமான படைப்பூக்கத்தை இறுக்கமான நிர்வாகம் மூலம் தடைசெய்தது, நெகிழ்வின்மைகாரணமாகப் புதிய வணிகச்சூழல்களுடன் ஒத்துப்போக முடியாதது ஆகியவை அச்சமூகஅமைப்பை அழித்தன. என்றாலும் இச்சாதனைகளை நாம் மறுக்கமுடியாது. சுதந்திர ஐரோப்பிய சமூகத்தில் இருக்கும் அன்னியனுக்கு இருக்கும் அதே வரலாற்று மனப்பதிவல்ல ஸ்டாலினிய ருஷ்யாவில் வாழ்ந்த அடித்தள வர்க்க தொழிலாளிக்கு இருக்கக்கூடியது. வரலாற்றெழுத்தில் இந்த வேறுபாடு என்றும் முக்கியமானது
வரலாற்றின் சமகாலப் பயன் என்ன என்ற கேள்வியை இன்று மீண்டும் மீண்டும் வரலாற்றுக்கோட்பாட்டாளர்கள் சந்திக்க நேர்கிறது. ‘சமகால சமூகத்தைப்பற்றி வரலாறு என்ன சொல்ல முடியும்?’ என்ற கட்டுரையில் அந்த வினாவை ஹாப்ஸ்பாம் எழுப்பிக்கொள்கிறார். பொதுவாக, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரைக்கும் கூட வரலாறென்பது இன்று நாம் நடந்துகொள்வதற்கான நேற்றைய முன்னுதாரணங்களைச் சுட்டிக்காட்டக்கூடிய ஒன்றாகவே எண்ணப்பட்டது. முன்மரபுகளின் பெருந்தொகை.
முன்னோர்கள் என்ன செய்தார்கள் என்பதன் விவரிப்பே வரலாறு என இந்த நோக்கை தொகுக்கலாம். அதாவது வரலாற்றெழுத்து என்பது சென்ற காலத்தில் இருந்து இன்றும் செல்லுபடியாகக்கூடிய விழுமியங்களைக் கண்டெடுப்பதும் அதனடிப்படியில் இன்றைய நம் நடவடிக்கைகளைத் தீர்மானித்துக்கொள்வதுமாகும். நீதி,நிர்வாகம் போன்ற தளங்களில் இன்றும்கூட வரலாறு அவ்வாறுதான் புரிந்துகொள்ளப்படுகிறது.
இன்னொருவகையில் வரலாறு தேவையாகிறது, அரசியல் காரணங்களுக்காக. இன,மொழி,தேசிய அடையாளங்களை கட்டி எழுப்புவதற்காக. அவை அரசியல் செலாவணிகள். இந்த நோக்கில்தான் பழங்காலம் பொற்காலம் என்ற கற்பிதங்கள் உருவாக்கப்படுகின்றன. பெரும்பாலும் அரைகுறை வரலாற்றாய்வுகளால், அவற்றை பயன்படுத்திக்கொள்ளும் அரசியல்வாதிகளால் இவை உருவாக்கப்படுகின்றன. எரிக் ஹாப்ஸ்பாமைப் பொறுத்தவரை ஐரோப்பாவில் அந்த வகையான வரலாற்றுநோக்கு பெரிதும் வழக்கொழிந்துவிட்டது. இந்தியாவில் பிரபலமாக இருப்பது அது என நாம் அறிவோம்.
கடைசியாக, சமகாலக் கொள்கை வகுப்புக்கு வரலாறு தேவையாக ஆகிறது.அரசியல், பொருளியல் கொள்கை வகுப்பாளர்கள் ஒரு சமூகச்சூழலை புரிந்துகொள்ள அதன் வரலாற்றைப் பயன்படுத்துகிறார்கள். லெபனான் பற்றிப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ருஷ்ய நூல் ஒன்றின் மொழியாக்கத்தை வாசிக்கநேர்ந்த இஸ்ரேலிய ராணுவத்தளபதி ஒருவர் இந்நூலை முன்னரே வாசித்திருந்தால் ஏராளமான ராணுவப்பிழைகளைக் களைந்திருக்கலாம் என்று சொன்னதை எரிக் ஹாப்ஸ்பாம் சுட்டிக்காட்டுகிறார். ஒரு மக்கள்தொகையின் மனநிலைகள், ருசிகள் ,பழக்கவழக்கங்கள் மற்றும் அவர்களின் மனதில் உள்ள முன்னுதாரணங்கள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள வரலாற்றாய்வு உதவுகிறது.
ஹாப்ஸ்பாம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற அதிகவரலாறு இல்லாத, தொடர்ச்சியான சமூகக்கொந்தளிப்புகள் மூலம் மாற்றங்கள் நிகழ்ந்த, புதிய தேசங்களைப் பற்றிப் பேசும்போது இந்த வரலாற்று உருவகம் எவ்வகையில் பொருள்படுகிறது என்று இக்கட்டுரையில் ஆராய்கிறார். முக்கியமாக அமெரிக்காவை. அமெரிக்காவின் சமகால வரலாற்று நிகழ்வுகள் வரலாற்றுப்பரிணாமத்தைப்பற்றிய ஒரு சித்திரத்தை அளிக்கக்கூடியவை என்கிறார்
மார்க்ஸிய உபரிக் கோட்பாட்டை வரலாற்றை விளக்குவதற்கான முக்கியமான ஆய்வுக்கருவியாக எரிக் ஹாப்ஸ்வாம் நினைக்கிறார். சென்ற காலகட்டங்களில் உலகமக்கள்தொகையில் 90 சதவீதம்பேரும் உணவுற்பத்தியில் ஈடுபட்டிருந்தார்கள். இன்று வட அமெரிக்க நிலப்பகுதியில் வெறும் 3 சதவீத மக்கள் அந்நாட்டின் 97 சதவீதம் பேருக்கும் உணவை அளிக்கமுடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அடிப்படை உழைப்பில் இருந்து வெளியே வரும் மக்கள் மேற்கட்டுமானத்தை மேலும் மேலும் விரிவுபடுத்துகிறார்கள் என்பது ஒரு நடைமுறை உண்மையாகவே நம் கண்முன் உள்ளது என்கிறார்.
மார்க்ஸ் முன்னரே ஊகித்திருந்தும் கூட 1960கள் வரையிலும் இந்த அளவுக்கு உணவுற்பத்தியில் உழைப்புக்குறைவு நிகழும் என்பது கண்கூடாக நிகழ்ந்திருக்கவில்லை. அறுபதுகளுக்குப்பின்னர் மெல்லமெல்ல பிற உற்பத்தித்துறைகளிலும் உழைப்பாளர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டிருக்கிறது. மெல்லமெல்ல சேவைத்துறையில் மானுடப்பங்களிப்பு அதிகம் நிகழ்கிற நிலை வந்துள்ளது. இது எதைக்காட்டுகிறது என்றால், உபரி மூலம் மேலும் மேலும் மேல்கட்டுமானம் வலுப்பெறும் நிலையைத்தான்.
இவ்வாறு மேல்கட்டுமானம் வலுப்பெறும் நிலையில் இரு தளங்கள் செயலூக்கம்பெறுகின்றன. ஒன்று பணப்பரிமாற்ற வணிகம். இன்னொன்று பண்பாட்டு விவாதங்கள். இதை அமெரிக்க சமூகத்தில் காணமுடிகிறது. அமெரிக்காவே இவ்விரு தளங்களில்தான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று சொல்லமுடியும். அறிவையும் பணத்தையும் அது வியாபாரப்பொருளாக ஆக்கிவிட்டிருக்கிறது இன்று. ஆக இங்கே வரலாற்றாய்வு என்பது சமகால அமெரிக்காவைப் பற்றிய ஆய்வாக உருக்கொள்கிறது.
எரிக் ஹாப்ஸ்பாம் மிக வலுவான நிலையில் நின்று பின்நவீனத்துவ சிந்தனைகளின் ஐயவாதத்தை, வெற்றுத்தர்க்கத்தை எதிர்கொள்கிறார். அவரது சாராம்சம் மார்க்ஸியத்தைச் சார்ந்த இலட்சியவாதமே. எந்தச் சிந்தனையும் மனித மேம்பாட்டுக்கான சிறந்த விழுமியங்களை உருவாக்கக்கூடியதாகவும், மேலான எதிர்காலத்துக்கான கனவைக்கொண்டதாகவும் இருந்தாகவேண்டும். பின்நவீனத்துவ சிந்தனைகள் அவ்வகையான சாரம் அற்றவை, பயனற்றவை என்கிறார் எரிக் ஹாப்ஸ்பாம்.
ஓர் ஆசிரியரின் ஒட்டுமொத்தப் பார்வையைக் கச்சிதமான ஒரு சொற்றொடரில் கண்டுகொண்டு அதை நினைவில் மீட்டிக்கொள்வது என் வழக்கம். ’வரலாற்றாசிரியர்கள் தவிர்க்கக்கூடாத கேள்வி என்பது குகைமனிதனில் இருந்து விண்வெளிப்பயணி எப்படி உருவானான் என்பது. அல்லது கொடுவாள் பல்லுள்ள புலியை அஞ்சிய நிலையில் இருந்து அணுகுண்டை அஞ்சும் நிலை எப்படி வந்தது என்பது’ என்ற ஹாப்ஸ்பாமின் வரி என்னை நெடுநேரம் சிந்தனைகளை மீட்டிக்கொள்ளச் செய்தது.
இந்தவரியில் ஹாப்ஸ்பாமின் அணுகுமுறை துல்லியமாக உள்ளது. ஒன்று, அவர் ஒரு மார்க்ஸியர். ஆகவேதான் அந்த முதல் வரி. ஆனால் அவர் ஒரு சம்பிரதாய மார்க்ஸியர் அல்ல. அவருக்கு மானுட விழுமியங்களைப்பற்றிய கவலை எப்போதுமுண்டு. அதுவே அவரது அடிப்படையான நோக்கு. ஆகவே அந்த இரண்டாவது வரி.
[On History. Eric Hobsbawm. ABACUS London
மேலும் திருத்தம்: பின்னட்டை மடிப்பு
==================================
முதல் 7 வரிகள் ஒரு பத்தியாக அமைய வேண்டும்.

அடுத்த வாக்கியத்தை பின்வருமாறு திருத்தி அமைக்கவும்.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமே சமத்துவத்தைப்
படைக்கும் அறம். 



செவ்வாய், 20 மார்ச், 2018

Wrapper correction
----------------------------
திருத்தம்-1: முன்னட்டை மடிப்பு:
7ஆவது வரி
மார்க்சியம் கற்பதில் என்று உள்ளது.
கற்பிப்பதில் என்று திருத்தவும்.


திருத்தம்-2: முன்னட்டை மடிப்பு
2ஆவது பத்தியில்,
"நியூட்டன் அறிவியல் மன்றம் என்னும் அமைப்பைத்
தோற்றுவித்து" என்பதை நீக்கி விடவும்.

நீக்கப்பட்ட பின்னால், பின்வருமாறு 2ஆவது பத்தி அமையுமாறு
திருத்தவும்..

இவர் அறிவியல் எழுத்தாளரும் ஆவார். பரந்து பட்ட
மக்களிடம் அறிவியலைப் பரப்பி வருகிறார். 

திருத்தம்-3: பின்னட்டை:
2 ஆவது வரி
அதன் பாதாளத்தில் என்பதில்
அதள என்று திருத்தவும்.
அதள பாதாளத்தில் என்று திருத்தப்பட்ட பின் அமையும்.

திருத்தம்-4 பின்னட்டை இரண்டாவது பத்தி
கணமும் முரண்பட்டது என்பதில்
முரண்படுகிறது என்று திருத்தவும்.

வேறு திருத்தம் இல்லை.  லோகோ OK.


தோழர் பிரதீப்,
பின்வரும் திருத்தங்களை மேற்கொள்ளவும்.
===========================================
பக்கம்-2:  வெளியீடு என்று insert பண்ணவும்.
வெளியீடு: நியூட்டன் அறிவியல் மன்றம் என்று வருதல் வேண்டும்/

பக்-2: தொலைபேசி எண்ணை 96772 19512 என்று மாற்றவும்.

பக்-5: கடைசி வரியான "சிறந்த முறையில் இந்த நூலைப்
பதிப்பித்த புதுமைப் பதிப்பகத்துக்கு நன்றி என்ற வரியை
நீக்கவும்.

பக்-5: நாள்: 18.03.2018 என்று மாற்றவும்.

பக்-35: எலக்ட்ரான் என்பது என்று தொடங்கும் பத்தியில்
3வது வரியில் 
 ஆரம் என்று வரும் இடத்தில் மீட்டர் என்று இன்ஸெர்ட் பண்ணவும்.

பக்-53: 2வது பத்தி, துவாரகை மடத்தின் என்பதை
சிருங்கேரி மடத்தின் என்று மாற்றவும்.

பக்-57: முதல் வரி ஓஹோ என்பதை ஓஷோ என்று திருத்தவும்.

பக்-58 பிற்சேர்க்கை என்பதை அடுத்து பின்வரும் வாக்கியத்தை
சேர்க்கவும்:
(அறமற்ற அத்வைதம் தன் குறையை மறைக்க
மார்க்சியத்தின் அறமில்லை என்று கூறும்
குற்றச்சாட்டுக்கு மறுப்பு)

பக்-60: ஈன்றாள் பசி காண்பான் என்ற குறளை
குறள் வடிவில் எழுதவும்.
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை

பக்-63 கடைசி வரியில் கடைசி வார்த்தை  மற்றும் பக்-64:
சரியான formல்  பின்வருமாறு எழுதவும்:

ஏற்ற காலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே  பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
என்கிறாள் ஆண்டாள்.
   
பக்-64 "கர்த்தர் என் மேய்ப்பராக இருக்கிறார்:
அவர் புல்லுள்ள இடங்களில் என்னை மேய்த்து
அமர்ந்த தண்ணீரண்டை இளைப்பாறச் செய்கிறார்"

என்று மூன்று தடித்த வரிகளில் எழுதவும்.

பக்-70: சிறு குறிப்புகள்
நூலின் குறிப்பிட்டோர் பற்றி என்ற வரியை நீக்கவும்.

பக்-73: கடைசி வரியில் (பக்கம்-54)  என்று சேர்க்கவும்.
-------------------------------------------------------------------------------------------


   

சனி, 17 மார்ச், 2018

பின்நவீனத்துவம் முழுத்தொகுப்பு!
---------------------------------------------------------------
(6) பின்நவீனத்துவம் ஓர் எளிய அறிமுகம்!
-----------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
---------------------------------------------------------------------------  
டாக்டர் ராமதாஸ் பின்நவீனத்துவச் செயல்பாட்டாளர்!!!
---------------------------------------------------------------------------------------
பின்நவீனத்துவம் இரண்டாம் உலகப் போருக்குப்பின் 
தோன்றிய தத்துவம். எனினும், காலத்தால் முற்பட்ட 
நீட்ஷே என்னும் தத்துவஞானியின் கோட்பாடுகளின் 
சாயலையும் இதில் காணலாம். பிரதானமாக 
மார்க்சிய எதிர்ப்பு என்பது பின்நவீனத்துவத்தின் தத்துவ 
அடையாளமாக இருக்கிறது.
**
பொருளாதாரம் என்பது அடிக்கட்டுமானம் என்றும்  
அரசியல், பண்பாடு, இலக்கியம் ஆகிய பலவும் 
பொருளாதாரம் என்ற அடித்தளத்தின் மீது கட்டப் 
பட்ட மேல்கட்டுமானம்தான் என்றும் போதிக்கிறது மார்க்சியம்.
பின்நவீனத்துவ அறிஞர் மிஷேல் ஃபூக்கோ
இதை மறுக்கிறார். சகலத்துக்கும் அடித்தளம் "அதிகாரம்"
தான் என்கிறார். ஆதிகாலத்தில் இருந்தே மனிதன்
அதிகாரத்தைப் பெறுவது என்ற ஏக சிந்தையுடன் 
இருந்து வந்தான், இருக்கிறான் என்கிறார்.
அதிகாரத்தைக் களைய வேண்டும் என்கிறார்.
**
இக்கட்டுரை ஓர் எளிய அறிமுகம் மட்டுமே தருகிற 
கட்டுரை ஆதலால், பின்நவீனத்துவம் பற்றிய 
திறனாய்வுக்கு இங்கு இடமில்லை. அதைத் தனியாகப் 
பார்க்கலாம்.
**
ஃபூக்கோ, பார்த், அல்தூசர் என்றெல்லாம் ஒவ்வொரு 
அறிஞரின் கோட்பாடுகளைக்கூறி விளக்க முற்படுவது 
சலிப்புத் தரலாம். ஏனெனில், இடதுசாரி முகாமைத் தவிர 
வேறு இயக்கங்களின் அணிகள் இது குறித்து அறிய 
ஆர்வம் காட்டுவதில்லை. எனவே, கோட்பாட்டு
விளக்கங்களைத் தள்ளி வைத்து விட்டு, நடைமுறை 
வாயிலாக, பின்நவீனத்துவம் பற்றிப் பார்ப்போம்.
**
பின்நவீனத்துவம் பெற்றெடுத்த பிள்ளைதான் பாட்டாளி 
மக்கள் கட்சி என்று சொன்னால் வாசகர்கள் அதிர்ச்சி 
அடையலாம். ஆனால் அதுதான் உண்மை.            
பாமக ஒரு சாதிக் கட்சி, FEUDAL PARTY, அதைப்போய் 
எப்படி POST MODERN கட்சி என்று கூறலாம் என்று வாசகர்கள் 
கோபிக்கலாம்.
**
டாக்டர் ராமதாஸ் அல்தூசரையும் ஃ பூக்கோவையும் 
படித்து விட்டுத்தான் கட்சி ஆரம்பித்தாரா என்று வாசகர்கள் 
கேட்கலாம். அவர் அவற்றைப் படிக்கவில்லை என்பது 
உண்மையே. அதேபோல், திமுக, அதிமுக கட்சிகள் எல்லாம் 
பின்நவீனத்துவத்தை எதிர்க்கும் கட்சிகளா என்றும்  
கேள்விகள் பிறக்கலாம். இதற்கெல்லாம் தெளிவான 
விடை காண, தமிழக அரசியல் அரங்கில் 
பின்நவீனத்துவத்தின் செயல்பாடுகள் என்னென்ன என்று 
அறிந்து கொள்வது முக்கியம்.
**
திமுக, அதிமுக, தேமுதிக, மதிமுக ஆகிய கட்சிகளுக்கும் 
பின்நவீனத்துவம் என்ற தத்துவத்துக்கும் ஸ்நானப் பிராப்தி 
கிடையாது. இருந்து இருந்தால், அண்ணாயிசம் என்பதற்குக் 
கோட்பாட்டு விளக்கம் அளித்த எம்.ஜி.ஆர், கேப்பிடலிசம்,
கம்யூனிசம், போஸ்ட்மாடர்னிசம் ஆகிய தத்துவங்களில் 
இருந்து கொஞ்சம் கொஞ்சம் எடுத்து அண்ணாயிசத்தை 
உருவாக்கினேன் என்று சொல்லி இருப்பார். எம்.ஜி.ஆருக்கு
கட்சி நடத்தச் சொல்லிக் கொடுத்த வலது கம்யூனிஸ்ட்
தலைவர் கல்யாண சுந்தரத்துக்கே பின்நவீனத்துவம் 
என்றால் என்ன என்று தெரியாது.
**
திராவிட இயக்கத் தலைவர்களில் பின்நவீனத்துவம் 
பற்றி அறிந்து வைத்து இருப்பவர் கனிமொழி அவர்கள் 
மட்டுமே.
----------------------------------------------------------------------------------
தொடரும் 

வெள்ளி, 16 மார்ச், 2018

தேசிய அறிவியல் நாள் 2018
அறிவியல் ஒளி 11ஆம் ஆண்டுச்
சிறப்பு மலர் வெளியீடு நிகழ்வுகள்!
---------------------------------------------------------------
நாள்: மார்ச் 2018
இடம்: கிண்டி பிர்லா கோளரங்கம்
---------------------------------------------------------------
மெட்ரிக் பள்ளி இயக்குனர் முனைவர் கண்ணப்பன்
அவர்களிடம் இருந்து நினைவப்பரிசு பெறுதல்!
புகைப்படம் (இடமிருந்து வலம்)

சௌந்திரராஜப் பெருமாள் (துணை இயக்குனர்,கோளரங்கம்)
முனைவர் த வி வெங்கடேஸ்வரன் (விஞ்ஞானி)
பி இளங்கோ (நியூட்டன் அறிவியல் மன்றம்)
முனைவர் கண்ணப்பன் (மெட்ரிக் பள்ளி இயக்குனர்)
முனைவர் ஐயம்பெருமாள் (இயக்குனர்  கோளரங்கம்)
---------------------------------------------------------------------------------------    
மூவா முதலா உலகம் ஒரு மூன்றும் ஏத்தத்
தாவாத இன்பம் தலை ஆயது தன்னின் எய்தி
ஓவாது நின்ற குணத்து ஒள் நிதிச் செல்வன் என்ப
தேவாதி தேவன் அவன் சேவடி சேர்தும் அன்றே.
சீவக சிந்தாமணி 

தேவாதி தேவன் - வானவர்கட்கு முதலான வானவன் என்பான் ; மூவா முதலா உலகம் ஒரு மூன்றும் ஏத்த- முடிவும் தோற்றமும் இல்லாத மூன்றுலகமும் போற்ற; தாவாத இன்பம் தலையாயது - கெடாத இன்பம் தனக்கு ஒப்பற்றதனை; தன்னின் எய்தி ஓவாதுநின்ற - தன்னாற் பெறுவதனால் தன்னைவிட்டு நீங்காது நின்ற; குணத்து ஒள்நிதிச் செல்வன் என்ப - பண்புகளை உடையவனாகிய சிறந்த நிதியை உடைய செல்வன் என்று பெரியோர் கூறுவர்; (ஆகையால்) அவன் சேஅடி சேர்தும் - (யாமும் இவ்விலக்கியம் இனிது முடிய) அவன் செவ்விய திருவடிகளை வணங்குவோம்.
(விளக்கம்) ஒண்ணிதிச் செல்வன் - வீடாகிய விளங்கிய நிதியை உடைய செல்வன். குணம் : எண் குணங்கள். அவை : தாவாத இன்பம் என்பதனாற் பெறப்பட்ட வரம்பிலா இன்பம் நீங்கலாக உள்ள வரம்பிலா அறிவு, வரம்பிலா ஆற்றல், வரம்பிலாக்காட்சி, பெயரின்மை, மரபின்மை, ஆயுவின்மை, அழியா இயல்பு என்பனவாம்.
   இஃது அருகசரணம் சித்தசரணம் சாதுசரணம் தன்மசரணம் என்னும் நான்கனுட் சித்தசரணம்.
   சித்த சரணம் - சித்தனை வணங்கும் வணக்கம். சித்தன் : காதி அகாதி என்னும் இருவகைக் கருமங்களையும் வென்று, அக்கினி யிந்திரனால் உடம்பைத் துறந்து, பரிநிர்வாணம் பெற்று மூவுலகத்து உச்சியில் இருப்பவன்.

வியாழன், 15 மார்ச், 2018

”ஒன்று அறிவதுவே உற்ற அறிவதுவே
இரண்டு அறிவதுவே அதனோடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கு அறிதுவே அவற்றொடு கண்ணே
ஐந்து அறிதுவே அவற்றொடு செவியே
ஆறு அறிதுவே அவற்றொடு மனனே
நேரிதில் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே”
என்று உலகம் தோன்றியதும் தோன்றிய ஓரறிவு உயிரிலிருந்து ஆறறிவு உயிர் வரையிலான வேறுபாட்டினை/ பரிணாமத்தை நுணுக்கமாகச் செதுக்கி வச்சுட்டுப் போன தொல்காப்பியனைப் படிச்சுட்டோமா?
-------------------------------------
“செஞ்ஞாயிற்றுச் செலவும்
அஞ்ஞாயிற்று பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்”
என்று சூரியனையும் அதைச் சுற்றி இருக்கும் கோள்கள் மற்றும் இயக்கத்தைப் பற்றிச் சொன்ன புறநானூற்றுப் புலவன் உறையூர் முதுகண்ணன் சாத்தனாரைப் படித்தாகி விட்டதா?
------------------------------------
“மீன்றேர்கொட்பிற் பனிக்கய மூழ்கிச்
சிரல் பெயர்ந் தன்ன நெடுவெள் ளுசி
நெடுவசி பரந்த உடுவாழ் மார்பின்
அம்புசே ருடம்பினர் சேர்ந்தோ ரல்லது
தும்பை சூடாது மலைந்த மாட்சி”
என்று வெட்டுக்காயங்களை வெள்ளி ஊசியால் எப்படி தைத்தார்கள் என்று பதிற்றுப் பத்தில் விளக்கிச் சொன்ன பரணரைப் படிச்சுட்டோமா?
----------------------------------
”விரி கதிர் மதியமொடு வியல் விசும்புபுணர்ப்ப
எரி சடை எழில் வேழம் தலையெனக் கீழ் இருந்து
தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்
உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர
-
-
-
புரை கெழு சையம் பொழி மழை தாழ
நெரிதரூஉம் வையைப் புனல்”
என்று எந்தெந்த கோள் எங்கெங்கே இருக்கும் போது என்னென்ன நிகழ்ந்து வைகையில் வெள்ளம் வந்தது என்று பரிபாடிய நல்லந்துவனரைத்தான் தெரிஞ்சு வச்சிருக்கோமா என்றெல்லாம் கேள்வி

புதன், 14 மார்ச், 2018

ஸ்டீபன் ஹாக்கிங் மறைவு!
அஞ்சலி செலுத்துவோம்!
-----------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------
நியூட்டன் ஐன்ஸ்டீனுக்குப் பிறகு, தாம் வாழ்ந்த காலத்தில்
உலகெங்கும் உள்ள மானுடத்தின் பேரன்பைப் பெற்றவர்
ஸ்டீபன் ஹாக்கிங்! 76  வயதில் மறைந்த இங்கிலாந்தின்
ஹாக்கிங் மானுடத்தை அறிவியலின் சிகரத்தில் உயர்த்தி வைத்தவர்.

பிரபஞ்சம் அநாதியானது என்று இந்து புத்த சமண
மதங்கள் கருதின. (அநாதி= ஆதியற்றது). யூத, கிறிஸ்துவ
இஸ்லாமிய மதங்களில் பிரபஞ்சம் என்பதே கிடையாது.
அவை வானமும் பூமியும் மட்டுமே என்று சுருக்கிக்
கொண்டவை.

பிரபஞ்சம் ஆதியும் அந்தமும் அற்றது  என்பதை
பெருவெடிப்புக் கொள்கை (big bang theory) ஏற்றுக்
கொள்ளவில்லை. மூவா முதலா உலகம் என்று
சமண இலக்கியமான சீவக சிந்தாமணி கூறுவதை
நவீன அறிவியல் ஏற்பதில்லை. "ஆதியும் அந்தமும் இல்லா
அருட்பெருஞ்சோதி" என்று சைவ சித்தாந்தம்
கூறுவதையும் அறிவியல் ஏற்கவில்லை. மாறாக
பிரபஞ்சத்திற்கு ஒரு தொடக்கம் உண்டு என்பதே
நவீன இயற்பியலின் கொள்கையாகும்.ஸ்டீபன் ஹாக்கிங்
இதையே வலியுறுத்தி வந்தார்.

பிரபஞ்சத்திற்கு மட்டுமல்ல, காலத்திற்கும் (time)
ஒரு தொடக்கம் உண்டு என்பதே ஹாக்கிங்கின்
கருத்தாகும். 13.8 பில்லியன் ஆண்டுக்கு முன்பு இந்தப்
பிரபஞ்சம் ஒரு பெருவெடிப்பை  அடுத்துத் தோன்றியது
என்பதே அறிவியல் ஏற்றுக்கொண்ட கருத்தாகும்.
பிரபஞ்சம் தொடக்கமற்றது என்றும்
எப்போதும் உள்ளது என்றும் எடுத்துக் கொண்டால்
என்ன ஆகும்? இந்தக் கோட்பாடு வெப்ப இயக்கவியலின்
இரண்டாவது விதியை மீறும் (will violate the second law of
thermodynamics).

ஏனெனில் இவ்விதிப்படி, எந்தவொரு மூடிய அமைப்பிலும்
ஒழுங்கின்மையானது அதிகரித்துக் கொண்டே போகும்.
(entropy will increase with time).எனவே தொடக்கமேயற்ற
எப்போதும் உள்ள  பிரபஞ்சத்தில் தற்போது
ஒழுங்கின்மையானது உச்சத்திற்குப் போயிருக்க வேண்டும்.

ஒழுங்கின்மை உச்சத்திற்குப்  போவது என்றால் என்ன?
பகலில் சூரிய வெளிச்சம் இருப்பது போல இரவிலும்
இருக்க வேண்டும். அதாவது சூரியனின் மேற்பரப்பில்
உள்ள 5000 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இரவிலும்
இருக்க வேண்டும். எந்தவொரு பொருளும் ஒரே
வெப்பநிலையில் இருக்க வேண்டும். இமயமலைக்கும்
எரிமலைக்கும் வேறுபாடு இல்லாமல் இருக்க வேண்டும்.
அதாவது சூடு குளிர்ச்சி என்ற சொற்களுக்கெல்லாம்
அர்த்தமே இல்லாமல் போக வேண்டும். இப்படி
நிகழ்வதுதான் ஒழுங்கின்மை அதிகரிப்பு என்பது.

ஆனால் நமது பிரபஞ்சம் அப்படி இல்லை என்பதை
நாம் அறிவோம். எனவே பிரபஞ்சம் அநாதியானது
என்று எடுத்துக் கொண்டால், பூமியில் எந்த
உயிரினமும் வாழ முடியாது என்பதை நாம்
உணர வேண்டும்.  இதன் மூலம் மதங்கள் கூறுவது
தவறு என்றும் ஹாக்கிங் கூறுவதே சரியானது
என்றும் நம்மால் அறிய முடிகிறது.

பெருவெடிப்பின்போது ஆதி ஒருமை (singularity)
இருந்தது என்ற கருத்தில் ஒரு சிக்கல் உள்ளது.
ஏனெனில் அத்தகைய ஆதி ஒருமை நிலையில்
இயற்பியலின் எந்த விதிகளும் செல்லாமல்
போய்விடும். இதைத்தவிர்க்க கற்பனை நேரம்
(imaginary time) என்ற கருத்தாக்கத்தை ஹாக்கிங்
முன்வைத்தார்.

கற்பனை நேரம் என்று இருக்கும் பட்சத்தில்,
பெருவெடிப்பை இயல்பான விரிவாகக் (expansion)
கொண்டு செல்ல முடியும். இயற்பியலின் விதிகள்
எந்தச் சூழலிலும் செல்லுபடியாகும் என்று
நிரூபிக்க முடியும். எனவே ஹாக்கிங் கற்பனை
நேரம் என்ற கோட்பாட்டைச் செழுமைப் படுத்தினார்.
ரோகர் பென்ரோஸ் என்பவருடன் இணைந்து
கற்பனை நேரம் குறித்து பல்வேறு தேற்றங்களை
வெளியிட்டார்.

இயற்பியலில் அனைத்துக்குமான கொள்கை ஒன்றை
(Theory of everything) உருவாக்க தம் வாழ்நாள் முழுவதும்
ஐன்ஸ்டின் பாடுபட்டார். ஐன்ஸ்டின் போன்றே,
அனைத்துக்குமான கொள்கை ஒன்றை உருவாக்க
காலமெல்லாம் பாடுபட்டார் ஹாக்கிங். என்றாலும்
அம்முயற்சியில் அவர் வெற்றி பெறவில்லை.

எதிர்கால அறிவியலாளர்கள் ஐன்ஸ்டின், ஹாக்கிங்
இருவரும் விட்டுச்சென்ற பணியை நிறைவேற்றுவார்கள்
என்று அறிவியல் உலகம் நம்புகிறது.

மகத்தான அறிவியலாளர் ஸ்டீபான் ஹாக்கிங்
மறைவுக்கு சிரம் தாழ்த்தி நியூட்டன் அறிவியல்
மன்றம் அஞ்சலி செலுத்துகிறது!
**********************************************************
ஸ்டீபன் ஹாக்கிங் உலகப்புகழ் பெற்றவர். எனவே
அவரின் மறைவைத் தொடர்ந்து உலகெங்கும்
அவருக்கான அஞ்சலிக் குறிப்புகள் வெளியாகிக்
கொண்டிருக்கின்றன.

சமூக வலைத்தளங்களில் அநேகமாக ஒவ்வொருவரும்
ஹாக்கிங்கிற்கு புகழாஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழ் ஊடகங்களிலும் ஊடக அன்பர்கள் தாங்கள்
புரிந்து கொண்ட அளவில் ஹாக்கிங் பற்றி இணையத்தில்
கிடைப்பதையெல்லாம் கூறி ஹாக்கிங்கிற்கு அஞ்சலி
செலுத்தி வருகின்றனர்.

ஆனால் எவரும் ஹாக்கிங்கின் மெய்யான பங்களிப்பு
எது என்பது பற்றிக் கூறவில்லை. அதை அவர்கள்
அறிந்திருக்கவில்லை. What exactly was his contribution was not
made known to the public.

இயற்பியலின் விதிகள் செல்லு படி ஆகாமல் போகும்
ஆதி ஒருமை (singularity) நிலை என்னும் முட்டுச் சந்தில்
இருந்து இயற்பியலை விடுவித்ததே ஹாக்கிங்கின்
சிறப்பு. இதற்கு அவரின் கற்பனைக் காலம் என்ற
கோட்பாடு பெரிதும் பயன்பட்டது. இதை எமது
கட்டுரை மட்டுமே தெளிவு  படுத்துகிறது.  க்கு

சஸ்கிண்ட் ஒரு இழைக்கொள்கையாளர் (string theorist).
இழைக்கொள்கையின் தூண்களில் ஒருவர்.
கருந்துளையானது ஆவியாகும்போது, அதிலுள்ள
தகவல் திரட்டு அனைத்தும் அழிந்து விடும் என்பது
ஹாக்கிங் தெரிவித்த கருத்து. 30  ஆண்டுகள் கழித்து
அப்படி அல்ல என்று கூறி, தன்னுடைய கொள்கையை
சஸ்கிண்ட். முன்வத்தார். (ஹாக்கிங் இழைக் கொள்கையாளர் அல்ல)
இந்த மகா பிரபஞ்சம் ஆதியில் ஒரேயொரு சிறு புள்ளியிலிருந்து தோன்றி பின்பு கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்துப் பின்பு ஒருகட்டத்தில் பெரும் வெடிப்பாக நிகழ்ந்தது என்பது உண்மையா? விளங்கிக்கொள்ள முடியவில்லையே!!? விளக்க முடியுமா?
- சு.புருஷோத்தமன் -
✍️ ஆமாம். உண்மைதான். அந்தக் கொஞ்சம் கொஞ்சமாய் என்பது பெரிய நேர இடைவெளி அல்ல. ஒருசில நொடிகளுக்கு உள்ளேதான். அந்த ஒருசில நொடிகளில் ‘பிக்பாங்’ எனப் பெரிதாக விரிந்தது. அது வெடிப்பல்ல, விரிவுதான்.
13.8 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் எதுவுமே இருந்திருக்கவில்லை. பொருள், சக்தி, காலம், இடம் என்று எதுவும் உருவாகியிருக்காத ஒரு நிலை. இன்றுள்ள மனிதனால் கற்பனை செய்த முடியாத நிலை. ஈர்ப்புவிசை, மின்காந்த விசை, திட அணுவிசை, திடமற்ற அணுவிசை ஆகிய நான்கு அடிப்படை விசைகளும் ஒன்றுசேர்ந்து, ஒரு விசேசமான விசையாகச் சிறு புள்ளியொன்றில் சீறியெழக் காத்திருந்தன. ஒரு குறித்த கணத்தில், மாப்பெரும் விரிவாய் விரிந்தன. முதல் செக்கனிலேயே ஒட்டுமொத்தப் பிரபஞ்சத்தின் வரைபடமும் அங்கு வரையப்பட்டுவிட்டது. பிரபஞ்ச வரலாற்றிலேயே முதன்மையானதும், மிகப்பெரியதுமான மிஸ்டரி இதுதான்.
பிரபஞ்சம் தோன்ற இருந்த அந்தக் கணத்தின், முதலாவது பிளாங்க் செக்கன் (Planck Second) நேரத்தில், நான்கு விசைகளில் ஒன்றான ஈர்ப்புவிசை அவற்றிலிருந்து தனியாகப் பிரிந்தது. பின்னர், திடமற்ற அணுவிசையும், திட அணுவிசையும், மின்காந்த விசையும் பிரிந்தன. அதன்மூலம் தோன்றிய சக்தி (Energy) அளவில்லாமல் பெருக ஆரம்பித்தது. இது ஒவ்வொரு பிளாங்க் செக்கன்களாகத் தொடர்ந்து, முதலாவது செக்கன்வரை நடைபெற்றது. அணுத்துகள்களின் சிதைவினால் அணுகுண்டொன்று அளவில்லா ஆற்றலை எப்படி வெளியிடுகிறதோ, அதன் நேர்மாற்றுச் செயலாக அதிகளவு ஆற்றல், அளவில்லா அணுத்துகள்களை உருவாக்கத் தொடங்கியது.
பிரபஞ்சத்திலுள்ள எல்லாப் பொருட்களுக்கான அணுக்களின் அடிப்படைத் துகள்கள் அனைத்தும் அந்த ஒரு செக்கனுக்குள்ளேயே உருவாகிவிட்டன. ஆனால், அங்கேயிருந்த பெருவெப்பத்தின் காரணமாக அவை அணுக்களாக உருவாகி விடவில்லை. அணுக்களற்ற, அணுத்துகள்களால் மட்டும் நிறைந்து கலந்திருந்த அந்தக் கலவையைக் ‘குவார்க் சூப்’ (Quark soup) என்பார்கள்.
இந்தக் குவார்க் சூப் நிலையிலிருந்தே பெருவிரிவு நிகழ்ந்தது. விரிவின் காரணத்தினால் மெல்ல மெல்ல வெப்பம் குறைய ஆரம்பித்ததால், அணுக்கள் தோன்றும் சூழ்நிலை உருவாகியது. தொடர்ச்சியாய்ப் படிப்படியாக நட்சத்திரங்களும் பிற விண்வெளிப் பொருட்களும் உருவாகின. இப்போதுகூட, பிக்பாங்கின் ஆரம்பக் கணத்தின் சற்றுப் பின்னரான குழந்தைப் பிரபஞ்சத்தை (Baby Universe) தொலைநோக்கிகள் முலம் நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.
பிக்பாங் கணத்தில் ‘துகள்கள்’ (Matter) மட்டும் தோன்றவில்லை. அவற்றுடன் ர்ந்து ‘எதிர்த்துகள்களும்’ (Anti matter) தோன்றின. இந்தத் துகள்களும், எதிர்த்துகள்களும் ஒரே இடத்தில் ஒன்றாக இருக்க முடியாதவை. ஒன்றையொன்று அழித்து, இல்லாமையை உருவாக்குபவைகள். ஒன்றுடன் ஒன்று சேரும்போது பெருத்த வெடிப்புடன் இல்லாமல் போகின்றவை. ஆரம்பத்தில் எத்தனை துகள்கள் தோன்றினவோ, அதேயளவு எதிர்த்துகள்களும் தோன்றின. அவை ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி, ஒன்றையொன்று அழித்தன. 96 சதவீதமான துகள்கள் இதனால் அழிக்க்கப்பட்டன. ஆச்சரியகரமாக, நான்கு சதவீதத் துகள்கள் எஞ்சியிருந்தன. உண்மையில் துகள்கள், எதிர்த்துகள்கள் இரண்டுமே இல்லாமல் அழிந்து போயிருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால், பிரபஞ்சம் என்ற ஒன்றே இருந்திருக்காது. அல்லது வேறு வகையினதாக இருந்திருக்கும். எப்படி நூறு சதவீத எதிர்த்துகள்களும் அழிந்து போயின, நான்கு சதவீதம் துகள்கள் எஞ்சின என்ற மர்மம் இன்னும் விளக்க முடியாமலே இருக்கின்றது. கடவுள் நம்பிக்கையாளர்கள் சொல்வார்கள் பிக்பாங் மூலம் பிரபஞ்சத்தைக் கடவுள் தோற்றுவித்தார் என்று. ஆனால், உண்மை அதுவல்ல. அப்படியொன்று இருந்தால், எதிர்த்துகள்களால் அழிக்கப்படாமல் நான்கு சதவீதத் துகள்களைக் காப்பாற்றியதுதான் கடவுளின் பணியாக இருந்திருக்க வேண்டும்.
எஞ்சிய நான்கு சதவீத துகள்களே, இன்றிருக்கும் பேரண்டத்தின் நட்சத்திரங்கள், காலக்ஸிகள், குவார்க்குகள், கருந்துளைகள், குவேசார்கள் என்று உருப்பெற்றிருக்கின்றன. எதிர்த்துகள்களில் நான்கு சதவீதமும் அழிந்துவிடாமல், இப்போதும் எங்காவது இருக்கலாம் என்று விஞ்ஞானிகளில் சிலர் நம்புகிறார்கள். அவற்றைத் தேடிக்கொண்டும் இருக்கிறார்கள்.
*பிளாங்க் செக்கன் என்பது தசமப் புள்ளிக்குப் பின்னர் 43 பூச்சியங்களுக்குப் பின்னர் வரும் 1 என்னும் மிகமிகமிகச் சிறிய நேரமாகும்.