திங்கள், 26 மார்ச், 2018

CNAnnadurai
காந்தியின் புகழைப் பொறுக்காமல் “காந்தியார், ஒன்றும் கடவுள் அல்ல, மகானும் அல்ல, மகாத்மாவும் அல்ல. அவர் ஒரு காமாந்தக்காரர். சுசீலா நாயர்கள் சூழ வர, கோகில பென்கள் தோளிலே கை போட்டுக்கொண்டு நடந்து வரும் காந்தியை பார்த்தாயா, தம்பி” என்று பொருமினார்.
பேரறிஞர் என்று புகழப்படுகிற அண்ணாத்துரையின் தீர்க்க தரிசனத்துக்கு ஒரு உதாரணம் :
"வெள்ளையனே வெளியேறு” போராட்டம் நடந்த போது மகாத்மாகாந்தியைக் குறித்து அவர் சொன்னது:
“தம்பி, காந்தியாருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. இவரைக் குணப்படுத்த இங்கிலாந்து தேசத்து வைத்தியர்கள் தேவை. வெள்ளையர்கள் வெளியேறினால், விஞ்ஞானமும் வெளியேறிவிடும். கார் ஓடாது, பஸ் ஓடாது, ரயில் ஓடாது, தந்தி கூட இருக்காது, ஏரோப்ளேன் இருக்காது. ஆல மரத்தையும், அரச மரத்தையும் சுற்றிக் கும்பிட்டு, பருந்தைக் கண்டால் கன்னத்தில் போட்டுக் கொள்ளத்தான் முடியும். நம் மக்களால் குண்டூசி கூட செய்ய முடியாது”.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அண்ணாத்துரையின் பங்கு குறித்து சொன்னாய். உண்மையில் நடந்தது என்ன தெரியுமா?
திக, திமுக கட்சியினரின் வாய் ஜாலத்தினால் மக்கள் தூண்டப் பட்டு, இந்த போராட்டத்தில் முதலில் கல்லூரி மாணவர்களும், பிறகு பொதுமக்களும் பெரும் அளவில் கலந்து கொண்டார்கள். இவர்கள் வாய் வார்த்தையை நம்பி பலர் மொழிக்காக போர் என்றே முடிவு செய்து தீக்குளித்து தன் உயிரை மாய்த்துக் கொண்டார்கள். பொது சொத்துக்கள் தீக்கிரையாகின.
அண்ணாத்துரையும் பல தலைவர்களும் சிறை சென்றனர்.ஆனால், இறுதியில் நடந்தது என்ன தெரியுமா? போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே -
“இந்தப் போராட்டத்துக்கும் எங்களுக்கும் தொடர்பு கிடையாது. 1965 ஜனவரி 26ஆம் நாளை துக்கநாளாகக் கடைபிடித்ததோடு எங்கள் போராட்டம் முடிந்து விட்டது” என்று அண்ணாத்துரை அறிவித்து விட்டார்.
சிறை சென்ற பல தலைவர்கள் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து வெளி வந்தனர். “இந்தி திணிக்கப் படமாட்டாது” என்பதை மத்திய அரசின் அரசாணையாக வேண்டும் என்று போராடிக் கொண்டிருந்தவர்கள் வெறும் வாக்குறுதியை மட்டும் சாக்காக வைத்து போராட்டத்தை முடித்துக் கொண்டனர். பாவம், இவர்களை நம்பி தீக்குளித்தவர்கள் தான் முட்டாள்கள் ஆனார்கள்.
அடுத்து திராவிட நாடு கோரிக்கையும் இப்படியே முடிந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக