செவ்வாய், 31 மார்ச், 2015

கேப்டன் செய்திகள் டி.வி.யில் விவாதம்!
நியூட்டன் அறிவியல் மன்றம் பங்கேற்பு!
--------------------------------------------------------------
31.03.2015 இரவு 9 மணி 
கேப்டன் நியூஸ் டிவி.
-------------------------------------
பொருள்:
---------------
எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் தமிழக சட்ட மன்றம்-
பிற மாநில சட்ட மன்ற நிகழ்வுகள் ஓர் ஒப்பீடு!
-------------------------------------------------------------------------
பங்கேற்பு: நியூட்டன் அறிவியல் மன்றம் 
-------------------------------------------------------------------
விரும்புவோர் காணலாம்!
********************************************************88888  
கலைஞர் செய்திகள் டி.வி.யில் 
அலைக்கற்றை (SPECTRUM) குறித்த நிகழ்ச்சி!
--------------------------------------------------------------------------
நாள்: திங்கள் 31.03.2015 இரவு 8 மணி.
பொருள்:
--------------
அலைக்கறையை அதிகத் தொகைக்கு ஏலம் எடுத்த 
நிறுவனங்கள், மொபைல் சேவைக் கட்டணத்தை 
உயர்த்தப்  போவதைக் கண்டித்து,
நியூட்டன் அறிவியல் மன்றம் 
தன் கருத்தைச் சொல்லி உள்ளது.
 -----------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
***************************************************88888
வீரமணி-பாண்டே வினாடி வினா நிகழ்ச்சி!
நிகர விளைவு என்ன?
---------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி 
------------------------------------------------------------------------------
எண்பத்தி இரண்டு வயதும் தளர்ந்த உடல்நிலையும் கொண்ட 
ஆசிரியர் அவர்கள், வினாடிவினாப் போட்டி மாதிரி 
பாண்டே கேள்வி கேட்கும்போது, ஐந்து  வினாடிகளுக்குள் பதில் 
அளிக்க முடியுமா?
**
ஒரு கேள்விக்குப் பதில் சொல்வதற்குள் அடுத்த கேள்வி,
அதை உள்வாங்கும் முன்னர் அடுத்த கேள்வி என்று 
அஸ்திரங்களால் வரிசை கட்டும் பாண்டே, நிதானத்துடன் 
கேள்வி கேட்டுப் பதில்களைப் பெற்று இருக்க வேண்டும்.
அந்த பதில்களில் பழுது இருப்பின், ஆசிரியரை அம்பலப் 
படுத்தலாம்.
**
ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லாமல் செய்து விட்டார் பாண்டே.
திறந்த மனதுடன் கூடிய ஒரு நேர்மையான உரையாடல் 
இன்று தமிழ்ச் சூழலில் சாத்தியமில்லை என்பதை 
இந்நிகழ்வு புலப்படுத்துகிறது.
**
கேள்விகளால் துளைத்து உண்மையை வெளிக் கொணர்வது 
ஒரு ANCHORஇன் கடமை. அதே நேரத்தில், நிகழ்ச்சியைக் 
காணும் நேயர்களுக்கும் நேர்காணல் வழங்கும் தலைவருக்கும் 
இடையில் ஒரு நடுவராகவும் இருக்க வேண்டியதும்  
ANCHORஇன் கடமை. ஆனால் அன்றைய நிகழ்வில் ஒரு 
எள்முனையேனும் நடுவராக இருக்கவில்லை திரு பாண்டே.
**
எனவே ஓர் ஊடகவியலாளர், ANCHOR என்ற முறையில் 
பாண்டே தோல்வி அடைகிறார். பாண்டே நடத்திய 
வினாடி வினா நிகழ்ச்சி ஒரு பாரபட்சமான விளையாட்டு,
அதாவது, IT IS A GAME AT ODDS!
**
GAME AT ODDS என்பது சதுரங்கத்தில் வருவது. எனவே அதைத்  
தவிர்த்து விட்டுச் சொல்கிறேன். கிரிக்கட் விளையாட்டில்,
ஒரு அணியில் பதினோரு பேரும், இன்னொரு அணியில் 
பத்து பேரும் என்று வைத்துக் கொண்டு விளையாடினால்,
அது GAME AT ODDS எனப்படும்.இப்படிப் புரிந்து கொள்ளுங்கள்.  
அழுகுணி ஆட்டம் என்று புரிந்து கொள்ளுங்களேன்.
**
கூட்டிக் கழித்துப் பார்த்தால், இதன் நிகர விளைவு (net effect)
ஆசிரியரின் மீது பரிவை ஏற்படுத்தி இருக்கிறது.
Yes, everybody's sympathy lies with Aaasiriyar K Veeramani.
**************************************************************888     
     

done (6) பின்நவீனத்துவம் ஓர் எளிய அறிமுகம்!
-----------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
---------------------------------------------------------------------------  
டாக்டர் ராமதாஸ் பின்நவீனத்துவச் செயல்பாட்டாளர்!!!
---------------------------------------------------------------------------------------
பின்நவீனத்துவம் இரண்டாம் உலகப் போருக்குப்பின் 
தோன்றிய தத்துவம். எனினும், காலத்தால் முற்பட்ட 
நீட்ஷே என்னும் தத்துவஞானியின் கோட்பாடுகளின் 
சாயலையும் இதில் காணலாம். பிரதானமாக 
மார்க்சிய எதிர்ப்பு என்பது பின்நவீனத்துவத்தின் தத்துவ 
அடையாளமாக இருக்கிறது.
**
பொருளாதாரம் என்பது அடிக்கட்டுமானம் என்றும்  
அரசியல், பண்பாடு, இலக்கியம் ஆகிய பலவும் 
பொருளாதாரம் என்ற அடித்தளத்தின் மீது கட்டப் 
பட்ட மேல்கட்டுமானம்தான் என்றும் போதிக்கிறது மார்க்சியம்.
பின்நவீனத்துவ அறிஞர் மிஷேல் ஃபூக்கோ
இதை மறுக்கிறார். சகலத்துக்கும் அடித்தளம் "அதிகாரம்"
தான் என்கிறார். ஆதிகாலத்தில் இருந்தே மனிதன்
அதிகாரத்தைப் பெறுவது என்ற ஏக சிந்தையுடன் 
இருந்து வந்தான், இருக்கிறான் என்கிறார்.
அதிகாரத்தைக் களைய வேண்டும் என்கிறார்.
**
இக்கட்டுரை ஓர் எளிய அறிமுகம் மட்டுமே தருகிற 
கட்டுரை ஆதலால், பின்நவீனத்துவம் பற்றிய 
திறனாய்வுக்கு இங்கு இடமில்லை. அதைத் தனியாகப் 
பார்க்கலாம்.
**
ஃபூக்கோ, பார்த், அல்தூசர் என்றெல்லாம் ஒவ்வொரு 
அறிஞரின் கோட்பாடுகளைக்கூறி விளக்க முற்படுவது 
சலிப்புத் தரலாம். ஏனெனில், இடதுசாரி முகாமைத் தவிர 
வேறு இயக்கங்களின் அணிகள் இது குறித்து அறிய 
ஆர்வம் காட்டுவதில்லை. எனவே, கோட்பாட்டு
விளக்கங்களைத் தள்ளி வைத்து விட்டு, நடைமுறை 
வாயிலாக, பின்நவீனத்துவம் பற்றிப் பார்ப்போம்.
**
பின்நவீனத்துவம் பெற்றெடுத்த பிள்ளைதான் பாட்டாளி 
மக்கள் கட்சி என்று சொன்னால் வாசகர்கள் அதிர்ச்சி 
அடையலாம். ஆனால் அதுதான் உண்மை.            
பாமக ஒரு சாதிக் கட்சி, FEUDAL PARTY, அதைப்போய் 
எப்படி POST MODERN கட்சி என்று கூறலாம் என்று வாசகர்கள் 
கோபிக்கலாம்.
**
டாக்டர் ராமதாஸ் அல்தூசரையும் ஃ பூக்கோவையும் 
படித்து விட்டுத்தான் கட்சி ஆரம்பித்தாரா என்று வாசகர்கள் 
கேட்கலாம். அவர் அவற்றைப் படிக்கவில்லை என்பது 
உண்மையே. அதேபோல், திமுக, அதிமுக கட்சிகள் எல்லாம் 
பின்நவீனத்துவத்தை எதிர்க்கும் கட்சிகளா என்றும்  
கேள்விகள் பிறக்கலாம். இதற்கெல்லாம் தெளிவான 
விடை காண, தமிழக அரசியல் அரங்கில் 
பின்நவீனத்துவத்தின் செயல்பாடுகள் என்னென்ன என்று 
அறிந்து கொள்வது முக்கியம்.
**
திமுக, அதிமுக, தேமுதிக, மதிமுக ஆகிய கட்சிகளுக்கும் 
பின்நவீனத்துவம் என்ற தத்துவத்துக்கும் ஸ்நானப் பிராப்தி 
கிடையாது. இருந்து இருந்தால், அண்ணாயிசம் என்பதற்குக் 
கோட்பாட்டு விளக்கம் அளித்த எம்.ஜி.ஆர், கேப்பிடலிசம்,
கம்யூனிசம், போஸ்ட்மாடர்னிசம் ஆகிய தத்துவங்களில் 
இருந்து கொஞ்சம் கொஞ்சம் எடுத்து அண்ணாயிசத்தை 
உருவாக்கினேன் என்று சொல்லி இருப்பார். எம்.ஜி.ஆருக்கு
கட்சி நடத்தச் சொல்லிக் கொடுத்த வலது கம்யூனிஸ்ட்
தலைவர் கல்யாண சுந்தரத்துக்கே பின்நவீனத்துவம் 
என்றால் என்ன என்று தெரியாது.
**
திராவிட இயக்கத் தலைவர்களில் பின்நவீனத்துவம் 
பற்றி அறிந்து வைத்து இருப்பவர் கனிமொழி அவர்கள் 
மட்டுமே.
----------------------------------------------------------------------------------
தொடரும் 
********************************************************************88          ஸார்த்தர்
அல்தூசர்
ஃபூக்கோ
காஃப்கா
காமு
வருவதும் போவதுமாய் இருக்கிறார்கள்.

உதட்டுக் கங்குகளின் புகை
30 X 20 அரங்கை மூழ்கடிக்கிறது.

பிரகடனங்களின் ஓசை
100 டெசிபெல்லை எட்டுகிறது.

மேல் தாவணி துறந்த
அரிவை தெரிவைகளின்
மயிர் சிரைத்த
அல்குல்கள் வளர்கின்றன
கதையாடலின் உச்சத்தில்.

ஜட்டி அணிந்த மற்றும் அணிந்திராத
எக்ஸிஸ்டென்ஷியலிஸ்டுகள்
வழித்தெறிந்த சுக்கிலம்
குறுந்தொலைவில் நடந்து செல்லும்
ஒரு சர்ரியலிச ஓவியனின்
தூரிகையை நனைக்கிறது.

ரூபம் கொண்ட கூரை முகில்களின்
அட்சதை உதிர்ப்பில்
குறிப்பான் - குறிப்பீடு
லிங்கமும் காயடிப்பும்
ஆசிரியனுக்குக் கருமாதி
இன்ன பிற.

விவாதத்தைத் தொடங்கி வைத்த கடவுள்
அமர்வு முடியுமுன்னே
இறந்து விடுகிறார்.

தரைச் சிதறலில்
பிளந்த மயிர்கள்
சொல் மீது வழுக்கி விழுந்த அர்த்தங்கள்
மற்றும்
எல்லையின்மையின் எல்லையின்மைகள்
சுப மங்களம்.
-----------------------------------------------------------------------------------------------
*************************************************************888
திரு ஈஸ்வரன் அவர்களுக்கு,
இந்தப் பதிவில் தாங்கள் என்னையும் இணைத்து
இருக்கலாம் (tag). ஏனெனில், இது என்னுடைய கட்டுரைக்குத்
தாங்கள் தெரிவிக்கும் மறுப்பு. சரி, போகட்டும், ஒன்றும்
கேடில்லை. பதிவின் தலைப்பில் இன்னார் எழுதிய
கட்டுரைக்கு மறுப்பு என்று எழுதி இருந்தாலும்கூட,
அது என் கவனத்தை ஈர்த்திருக்கும். சரி, போகட்டும்.
இதிலும் கேடில்லை. தங்களின் மறுப்புக்கு எனது
எதிர்வினையை எழுதிப் பதிவு செய்கிறேன். நன்றி!
....அன்புடன்....பி இளங்கோ சுப்பிரமணியன்...... 
  
(4) பின்நவீனத்துவம் ஓர் எளிய அறிமுகம்!
----------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம் 
------------------------------------------------------------------------
இலக்கு உள்ள மார்க்சியமும் 
இலக்கு எதுவும் இல்லாத பின்நவீனத்துவமும்!
------------------------------------------------------------------------------
பின்நவீனத்துவம் மார்க்சியத்துடன் சமர் புரிந்தது. 
எனினும் அது மார்க்சியத்தை வெற்றி கண்டுவிடவில்லை;
வென்று விடவும் முடியாது.
ஏனெனில், அமைப்பு, அமைப்பாக்கம் ஆகிய கருத்தாக்கங்கள் 
பின்நவீனத்துவத்தில் இல்லை.
**"அமைப்பு கூடாது" , "மக்களை அமைப்பாக்கக் கூடாது"
என்பன பின்நவீனத்துவத்தின் அடிப்படைகள்.
மேலும் பின்நவீனத்துவம் மார்க்சியத்தை அகற்றிவிட்டு 
(REPLACE ) தான் அவ்விடத்தில் அமர வந்த தத்துவம் அல்ல. 
உலகை மாற்றி அமைப்பதுதான் தனது இலக்கு என்று 
மார்க்சியம் பிரகடனம் செய்கிறது. ஆனால், 
பின்நவீனத்துவத்துக்கு அப்படி எந்த இலக்கும் கிடையாது.
**
பின்நவீனத்துவம் மக்களைத் திரட்டி 
அமைப்பாக்கி இருக்குமேயானால் ,
கம்யூனிஸ்ட் கட்சிகளைப் போன்று, உலகெங்கும் 
பின்நவீனத்துவக் கட்சிகள் தோன்றி இருக்கும்.
ஆனால் அமைப்பே கூடாது என்ற கோட்பாடு காரணமாக 
பின்நவீனத்துவம் வேறு எந்தத் தத்துவத்தின் இருப்புக்கும்
அச்சுறுத்தலாக இல்லை.
**
கடந்த 50, 60 ஆண்டுகளாக, தத்துவ அரங்கில், 
இருத்தலியல் (EXISTENTIALSIM )முதலாக 
பின்நவீனத்துவம் ஈறாக கணக்கின்றி வந்த தத்துவங்கள் 
யாவும் மார்க்சியத்தை அகற்றி விடவில்லை.
********************************************************88888888

   
(3) பின் நவீனத்துவம் ஓர் எளிய அறிமுகம்!
-------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
------------------------------------------------------------------------------
DIFFERENTIATION AND INTEGRATION!
--------------------------------------------------------------------------
பின்நவீனத்துவம் தமிழ்ச் சூழலில் முதன் முதலில் 
இலக்கியத்தில்தான் அறிமுகம் ஆனது. அது நிறையச் 
"சொல்லாடல்"களைத் தமிழில் இறக்கியது. அதுவரை 
இருந்த "சொல்லாட்சி"போய் "சொல்லாடல்" வந்தது.
பேரரசியல்-நுண்ணரசியல், மையம்-விளிம்பு, என்று 
நிறையக் கருத்தாக்கங்களும் அவற்றைக் குறிக்கும் 
புதிய சொற்களும், மன்னிக்கவும், சொல்லாடல்களும் 
தமிழில் இறங்கின. இவற்றை எல்லாம் விவரிப்பது 
எளிய அறிமுகம் என்பதைத் தாண்டியது.
**
பேரரசியல்-நுண்ணரசியல் பற்றிமட்டும் பார்ப்போம்.
முதலாளிய வர்க்கம் ஆள்கிறது. தொழிலாளி, விவசாயி 
ஆகிய வர்க்கங்களைத் திரட்டி, மார்க்சியம் முதலாளிகளை 
எதிர்க்கிறது. இங்கு மார்க்சியம் செய்வது வர்க்க அரசியல்.
அதாவது இது பேரரசியல்.
**
பின்நவீனத்துவம் நுண்ணரசியல் மட்டுமே செய்யும்.
பேரரசியல் செய்யாது. ஒரு எளிய உதாரணம் பார்ப்போம்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளில் எண்பது சதவீதம் 
பேர் பிற்பட்ட வகுப்பினரே (உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 
இடஒதுக்கீடு கிடையாது என்ற போதிலும்) என்று அண்மையில் 
நீதியரசர் சந்துரு அவர்கள் ஒரு கட்டுரை எழுதி இருந்தார்.
இருப்பினும், உயர்நீதிமன்ற நீதிபதி பதவிகளில் இடஒதுக்கீடு 
வேண்டும் என்று சில வழக்கறிஞர் அமைப்புகள் போராட்டம் 
நடத்தின.
**
இதில்  நியாயம் இல்லையே என்ற விமர்சனங்கள் 
எழுந்தபோது, வழக்கறிஞர் அமைப்புகள் பின்வருமாறு 
விளக்கம் அளித்தனர்; "இதுவரை நீதிபதி பதவி கிடைக்கப் பெறாத சாதியினருக்காக நாங்கள் போராடுகிறோம்" என்றனர். 
(WE FIGHT FOR THE CASTES WHO ARE UNREPRESENTED SO FAR). 
அதாவது, பொற்கொல்லர் சமூகத்தில் இருந்து இதுவரை 
ஒருவர்கூட உயர்நீதிமன்ற நீதிபதி ஆகவில்லை என்றால், 
அச் சமூகத்துக்கு இடம் கேட்பது. 
இதுதான் fighting for the unrepresented என்பது.
**
மேற்கூறிய வழக்கறிஞர்களின் போராட்டம், நுண்ணரசியல் 
செயல்பாட்டுக்கு சரியான உதாரணம் ஆகும். (இக்கட்டுரை 
நீதிபதி பதவிகளில் இடஒதுக்கீடு பற்றியது அல்ல.)
**
ஆக, மார்க்சியம் பேரரசியல் செய்யும்.
பின்நவீனத்துவம் நுண்ணரசியல் செய்யும்.
கால்குலஸ் மொழியில் கூறுவதானால்,
மார்க்சியம் INTEGRATE செய்யும்.
பின்நவீனத்துவம் DIFFERENTIATE செய்யும்.
MARXISM IS A PHILOSOPHY OF INTEGRATION!
POST MODERNISM IS A PHILOSOPHY OF DIFFERENTIATION!!
------------------------------------------------------------------------------------------------
தொடரும் 
*************************************************************8                        

திங்கள், 30 மார்ச், 2015

மார்க்சிய ரெட்டியார்களும் ரெட்டியார் மார்க்சிசமும்!
--------------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
------------------------------------------------------------------------------------------
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) அகில இந்திய 
மாநாடு அண்மையில் பாண்டிச்சேரியில் இனிதே நடந்து 
முடிவுற்றது. எனினும் தமிழ்நாட்டில் இந்த மாநாடு 
எந்த அசைவையோ அதிர்வையோ தாக்கத்தையோ 
ஏற்படுத்தவில்லை. மக்களின் கவனத்தை ஈர்க்கவில்லை.
**
மாநாட்டில் திரு சுதாகர் ரெட்டி அவர்கள் மீண்டும் 
பொதுச்செயலாளராகத் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார்.
அவருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!
**
கம்யூனிசம் (அல்லது மார்க்சிசம்) சாதிக்கு எதிரானது 
என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் CPI கட்சி 
அப்படி நினைக்கவில்லை போலும்! கட்சியின் பொதுச் 
செயலாளர் சுதாகர் ரெட்டி அவர்கள், தம் பெயரில் 
உள்ள "ரெட்டி" என்ற சாதிப்பெயரைத் துறக்கவில்லையே!
**
தமிழ்நாட்டில் எல்லோரும் சாதியைத் தங்கள் பெயரோடு  
சேர்த்துக் கொண்டுதான் இருந்தார்கள். இது அக்காலத்தில் 
இயல்பானதாக இருந்தது. 1925இல் சுயமரியாதை 
இயக்கத்தைத் தொடங்கினார் பெரியார். செங்கல்பட்டு 
மாநாட்டில் தம் பெயரோடு ஒட்டிக் கொண்டு இருந்த 
நாயக்கர் பட்டத்தைத் துறந்தார்.
**
மறைந்த தோழர் சுந்தரையா மார்க்சிஸ்ட் கட்சியின் 
பொதுச் செயலாளராக இருந்தவர். தெலுங்கானா 
விவசாயிகளின் ஆயுதப் போராட்டத்தை வழி 
நடத்தியவர். இவரது ஒரிஜினல் பெயர் "சுந்தர ராம ரெட்டி".
ரெட்டி என்ற சாதிப் பட்டத்தைத் துறந்து, சுந்தரய்யா 
என்று பெயரை மாற்றிக் கொண்டவர்.
**
தந்தை பெரியார், சுந்தரய்யா போல, பெருவாரியான 
தலைவர்கள் தங்கள் பெயரோடு ஒட்டி இருந்த சாதியை 
நீக்கி இருக்கிறார்கள். தமிழ்நாட்டுக் கம்யூனிஸ்ட்களில்
இன்னொரு உதாரணம் தோழர் ஏ.எஸ்.கே. தமது 
ஐயங்கார் பட்டத்தைத் துறந்தவர்.
**
CPI பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டியார் அவர்கள் 
தமது சாதிப் பட்டத்தைத் துறக்கவில்லையே!  ஏன்?
ஒருவேளை சாதி நல்லது என்கிறாரோ ரெட்டியார்வாள்!
**
சுதாகர் ரெட்டியார் மார்க்சைப் பின்பற்றுகிறாரா அல்லது 
ஜி கருப்பய்யா மூப்பனாரைப் பின்பற்றுகிறாரா? 
இவர் மார்க்சிய ரெட்டியாரா அல்லது இவர் போதிப்பது 
ரெட்டியார் மார்க்சிசமா?
**
சொல்லுங்கள் CPI விசுவாசிகளே! சாதியப் பித்தர்களே!
***************************************************************     
      
தொலைக்காட்சியில்  விவாதம்!  சானல்-7 டி.வி.
---------------------------------------------------------------------------
நாள்: 30.03.2015 திங்கள் இரவு 7 to 8.
பொருள்:
--------------
காஷ்மீர் பெருவெள்ளமும் 
அறிவியல்ரீதியான  வானிலை முன்னறிவிப்புகளும்!
பங்கேற்பு:
----------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------
விரும்புவோர் காணலாம்!
......அன்புடன்.....
நியூட்டன் அறிவியல் மன்றம்.......
**********************************************************888
(2) பின் நவீனத்துவம்: ஓர் எளிய அறிமுகம்!
-------------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம் 
------------------------------------------------------------------------------------ 
"இருத்தலியல்" (existentialism ) என்ற புதியதொரு தத்துவத்தை
பிரஞ்சு தத்துவஞானி ஜீன் பால் சார்த்தர் ( JEAN PAUL SARTRE )
முன்வைத்தார். 1950களில் இத்தத்துவம் பெரும் புகழுடன் 
விளங்கியது.(ஜீன் பால் சார்த்தர் இறுதிவரை மார்க்சியராகவே 
இருந்தார். அவர் பின்நவீனத்துவர் அல்லர் என்பது கருதத் தக்கது.)

பெர்டினண்ட் சசூர் (FERDINAND SAUSSURE ) என்ற அறிஞர் 
"அமைப்பியல்" என்ற தத்துவத்தை முன்மொழிந்தார்.
ழாக் டெரிடா (JACQUES DERRIDA ) என்ற அறிஞர் "கட்டுடைத்தல்"
என்ற கோட்பாட்டை முன்மொழிந்தார்.
தொடர்ச்சியாகவும் வரிசையாகவும் பல கோட்பாடுகள் 
முன்மொழியப் பட்டன.
**
மிஷல் பூக்கோ ( MICHAEL FOUCALT ) 
ரொலான் பார்த் (ROLAND BARTHES )
ழாக் லக்கான் (JACQUES LACAN )
பெலிக்ஸ் கட்டாரி (FELIX  GUATTARI )
ஜீன் போத்ரியார் ( JEAN BAUDRILLARD )
உள்ளிட்ட பலப்பல அறிஞர்கள் புதிய புதிய கோட்பாடுகளை 
முன்மொழிந்தனர். மேற்கூறிய அனைத்துக் கோட்பாடுகளின் 
திரட்சி பின்நவீனத்துவம் என வழங்கப்படுகிறது.
(உதாரணத்துக்காக ஒரு சில அறிஞர்கள் மட்டுமே  
குறிப்பிடப் பட்டுள்ளனர்.)
**
பின் நவீனத்துவம் மார்க்சியத்தைத் திறனாய்வு செய்தது;
மார்க்சியத்தின் போதாமை என்று சிலவற்றைக் கூறியது,
இந்திய-தமிழகச் சூழலில் பின்நவீனத்துவம் செல்வாக்குப்  
பெற்றதைத் தொடர்ந்து, தலித்தியமும் பெண்ணியமும்
தனித்துவம் மிக்க கோட்பாடுகளாக பின்நவீனத்துவத்தால்  
அறிமுகப் படுத்தப் பட்டன: பெருத்த கவனிப்பைப் பெற்றன.
பெண்ணியம் தலித்தியம் சார்ந்த சிக்கல்களுக்கு
மார்க்சியம் என்ற ஒருங்கிணைந்த தத்துவத்தில் 
தீர்வு இல்லை என்ற கண்டுபிடிப்புகளும் கண்டனங்களும் 
எழுந்தன.  பேரரசியல் என்பதோடு, நுண்ணரசியல் என்பதும் 
தத்துவ-அரசியல் அரங்கில் தலையெடுத்தது. 
----------------------------------------------------------------------------------------
தொடரும் 
--------------------------------------------------------------------------------------

அமெரிக்காவில் கம்யூனிசம் நிலவுகிறது என்று சொன்ன 
ஜெயகாந்தனின் பிணத்தின் மீது காரித்துப்புவோம்!!
---------------------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி 
--------------------------------------------------------------------------------------
ஜெயகாந்தன் கதைகள் என்ற புத்தம் புதிய புத்தகம் 
என் கரங்களில் தவழ்கிறது. "ஆனந்த விகடனில்  
வெளிவந்த அதே வடிவத்தில்" என்பது இப்புத்தகத்தின் 
தனிச்சிறப்பு.
(விகடன் பிரசுரம், விலை ரூ.350, இரண்டாம் பதிப்பு,
செப்டம்பர் 2014, பக்கங்கள்:368).
**
இந்நூலுக்கு ஜெயகாந்தன் அணிந்துரை வழங்கி உள்ளார்.
அவரின் கையெழுத்திட்ட தேதியிட்ட (02.11.2013) அணிந்துரை.
அச்சு அமைப்பும் நூலாக்க நேர்த்தியும் வெகு அருமை. ரூ 350 
என்பது தகுந்த விலைதான்!
**
அணிந்துரையில் ஜெயகாந்தன் கூறுகிறார்: (ஆதாரம்-1)
-------------------------------------------------------------------------------------
"நண்பர்கள் சாவியும் மணியனும் அறிமுகம் செய்து 
வைத்ததில், மறக்க முடியாத அனுபவம் காஞ்சிப் 
பெரியவாளையும், இளையவர் ஜெயேந்திர ஸ்வாமிகளையும்
அறிமுகம் செய்து கொண்டதாகும்."
ஆஹா, எப்பேர்ப்பட்ட புரட்சிகர அனுபவம் ஜெயகாந்தனுக்கு!
எவ்வளவு கேவலமான பார்ப்பன அடிவருடி!
**
ஜெயகாந்தன் மேலும் கூறுகிறார்: (ஆதாரம்-2)
------------------------------------------------------------------------
"மீண்டும் அதை (சுவாமிகளைச் சந்தித்ததை) நினைத்துப் 
பார்க்கிறபோது, ஒரு தெய்வீக உணர்ச்சி ஏற்படுகிறது".
கொலைகார ஜெயேந்திரனை நினைத்துப் பார்க்கிறபோது 
இவருக்கு தெய்வீக உணர்ச்சி ஏற்படுகிறதாம்!
**
இது ஏதோ 1960, 1970களில் எழுதியது என்று நினைக்க வேண்டாம்.
2013இல் எழுதிய அணிந்துரையில் 
இதைக் கூறுகிறார். அதாவது, ஜெயேந்திரன் மீது கொலை 
வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது!
**   
இதே நூலில் விகடனுக்கு ஜெயகாந்தன் அளித்த பேட்டியும் 
வெளியாகி உள்ளது.(பக்கம்-367). இதோ படியுங்கள்.(ஆதாரம்-3)
--------------------------------------------------------------------------------------------------
கேள்வி: தாங்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் பங்கு 
                  கொண்டு இருக்கிறீர்களா?
ஜெயகாந்தன் பதில்: நான் ஒரு கம்யூனிஸ்ட்.
**
மேற்கூறிய மூன்றும் ஜெயகாந்தனின் ஒப்புதல் 
வாக்குமூலங்கள். மூன்று ஆதாரங்கள். பார்ப்பன 
சங்கராச்சாரிகளின் அடிவருடியான இவர் ஒரு 
கம்யூனிஸ்ட்டாம்! இவரைத்தான் கலை இலக்கியப் 
பெருமன்றம் எனப்படும் CPI கட்சியின் இலக்கிய 
அமைப்பில் தலையில் தூக்கி வைத்துக் 
கொண்டாடினார்கள்.
**
பெரியார் அண்ணா ஆகியோரின் செயல்பாடுகளால் 
மதிப்பு இழந்து போன பார்ப்பனீயத்தைத் தூக்கி 
நிறுத்த ஒரு எழுத்தாளர் தேவைப் பட்டார் விகடனுக்கு.
அவர் ஒரு சூத்திரர் ஆக இருக்க வேண்டிய அவசியம் 
விகடனுக்கு இருந்தது. விகடனுக்கு அப்படிக் 
கிடைத்த கூலி ஆள்தான் ஜெயகாந்தன்.
**
ஜெயகாந்தன் ஒரு கம்யூனிஸ்ட் அல்ல. கம்யூனிச சமுதாய 
அமைப்பு அமெரிக்காவில் நிலவுகிறது என்று எழுதிய 
ஜெயகாந்தன் எப்படி கம்யூனிஸ்ட் ஆவார்? 
போலிக் கம்யூனிஸ்ட்டாக இழிந்து 
போன கட்சிகள் கம்யூனிசத்தின் பெயரால் 
பார்ப்பனீயத்தைத் தூக்கி நிறுத்தின. கம்யூனிசத்தின் 
பெயரால், ஜெயகாந்தன்  வளர்த்தது ஆர்.எஸ்.எஸ் 
தத்துவத்தையே! இதை ஆதாரத்துடன் இங்கு 
நிரூபித்துள்ளேன்.
**
பூணூலையா எதிர்க்கிறாய் என்று வெறியோடு கூச்சல் 
போட்டுக் கொண்டு பலரையும் கடித்துக் குதறிய 
வெறிநாயாக இருந்த ஜெயகாந்தன் ஒரு நாய் போல 
இன்று செத்துப் போனான்! 
ஒரு நாய் புழுத்துச் செத்தது என்பதற்கு மேல் 
ஜெயகாந்தனுடைய சாவில் எதுவுவே இல்லை! 
*********************************************************88           
   
  

ஞாயிறு, 29 மார்ச், 2015

(1) பின் நவீனத்துவம் (POST MODERNISM)
மிக எளிய ஓர் அறிமுகம்.
------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
--------------------------------------------------------------------
மார்க்சியம் என்பது நவீனத் தத்துவம் ஆகும்.
மார்க்சியத்துக்குப் பின்னர் வந்த தத்துவம் என்பதால்,
அது பின்நவீனத்துவம் எனப் படுகிறது. இது தனி ஒருவரின்
படைப்பு அல்ல. பல்வேறு காலங்களில்  பல்வேறு அறிஞர்கள்
மொழிந்த கருத்துக்களின் தொகுப்பு.
**
பின்நவீனத்துவத்தின் அடிப்படையான கோட்பாடுகளில்
ஒன்று, அமைப்பு கூடாது என்பது. எனவே எக்காரணம் கொண்டும்
பின்நவீனத்துவம் மக்களை அமைப்பாக்காது. நன்கு
அமைப்பாக்கப் பட்ட தத்துவமான மார்க்சியத்தை, ஒருநாளும்
பின்நவீனத்துவத்தால் வெல்ல முடியாது. பின்நவீனத்துவம்
மார்க்சியத்தை அகற்ற வந்த தத்துவம் அல்ல. அது 
மார்க்சியத்தின் மீதான வெறும் விமர்சனம் மட்டுமே.
** 
தமிழ்நாட்டில் பின்நவீனத்துவத்தை அறிமுகப் படுத்தி,
பெருமளவில் பரப்பியவர்கள் எழுத்தாளர்களே, அரசியல்வாதிகள் 
அல்லர். பேராசிரியர் அ. மார்க்ஸ் அவர்களே தமிழகத்தில் 
பின்நவீனத்துவத்தின் பிதாமகர். எழுத்தாளர்கள் ரவிக்குமார் 
(தற்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யில் இருப்பவர்)
ராஜ் கௌதமன் போன்றோர் அ மார்க்சுடன் இணைந்து.
பின்நவீனத்துவத்தைப்  பரப்பினார்கள்.
**
பின் நவீனத்துவம் பற்றித் தெரிந்து கொள்வது, சமூக மற்றும் 
அரசியல் இயக்கங்களில் வேலை செய்வோருக்கு 
அவசியம் ஆகும்.     
------------------------------------------------------------------------------
 ******************************************************88888888   
வேதங்களின் புகழ் பாடுவதில் 
ஆர்.எஸ்.எஸ் கோல்வால்கரை மிஞ்சிய 
மார்க்சிஸ்ட் தலைவர் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட்!
பல்லக்குத் தூக்கிகளுக்கு ஒரு கண்டனம்!
-----------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
--​​​​​​​​​​​-------------------------------------------------------------------------------
பிராமணன் சூத்திரன் என்று சாதிப் பிரிவுகளை ஏற்படுத்தி,
பெரும்பான்மை உழைக்கும் மக்களை அடிமைப்படுத்தி,
பெண்களை விலங்கு நிலைக்குத் தள்ளி, இந்திய சமூகத்தை 
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஒடுக்கி வரும் அரசியல் 
மனுதர்ம அரசியல். இந்த அரசியலுக்குத் தத்துவார்த்த 
நியாயத்தை வழங்குபவை நால் வகை வேதங்கள், ரிக் யஜுர் 
சாம அதர்வண வேதங்கள். 
**
இந்த வேதங்களைப் போற்றிப் புகழ்ந்து, நூல்கள் எழுதிய 
பெரும் அறிஞர்களில் இரண்டு பேர் முக்கியமானவர்கள்.
ஒருவர் ஆர்.எஸ்.எஸ்.  தத்துவஞானியான குருஜி கோல்வால்கர்.
இன்னொருவர் மார்க்சியத் தத்துவ அறிஞரான ஈ.எம்.எஸ். 
நம்பூதிரிபாட். இருவரும் மாபெரும் அறிஞர்கள் என்பதில் 
ஐயமில்லை. ஆனால் இந்த இரு அறிஞர்களும் கோடானு 
கோடி உழைக்கும் மக்களை அடிமைப் படுத்தும் மனுதர்மம் 
என்னும்  கொடிய அடக்குமுறைச் சமூக அமைப்பை உருவாக்கிய 
வேதங்களைப் புகழ்ந்து நூல் எழுதியவர்கள்.
** 

மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த
ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாட் அவர்கள் "வேதங்களின் நாடு"
(THE COUNTRY OF VEDAS) என்ற நூலை எழுதி உள்ளார்.
கேரள சாஸ்திர சாஹித்ய பரிஷத் என்ற அமைப்பு
அந்த நூலை வெளியிட்டது முதல் பதிப்பு 1981 ஆக
இருக்கலாம். பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்
பட்டு பல பதிப்புகள் வெளிவந்த இந்த நூலை,
அட்டையைக் கழற்றி விட்டுப் படித்தால்,
கோல்வால்கர் எழுதியதா என்ற எண்ணம் தோன்றும்.
அந்த அளவுக்கு ரிக் யஜுர் சாம அதர்வண வேதங்களின்
மகிமையை எழுதி இருப்பார். 
**
கோல்வால்கரே நாணும் அளவுக்கு வேதங்களைப் புகழ்ந்து 
தள்ளி இருப்பார் ஈ.எம்.எஸ். அவர்கள். இதை அவர் 
மார்க்சிய முகாமில் இருந்து கொண்டு செய்வதால்,
புரட்சிகர இயக்கங்களுக்கு அதிகமான சேதாரத்தை 
விளைவிக்கிறார். எனவே ஈ.எம்.எஸ் அவர்களை 
போலி மார்க்சிஸ்ட் என்கிறோம். வேறு எப்படிச் சொல்வது?
**
இதை நாம் சொன்னதுமே, அலறித் துடித்துக் கொண்டு 
கூச்சல் இடுகிறான் பார்ப்பன அடிவருடி. அதுவும் போலிக் 
கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள பார்ப்பன அடிவருடி, ராஜனை 
மிஞ்சிய ராஜ விசுவாசத்துடன். ஒரிஜினல் பாப்பானே சும்மா 
இருக்கும்போது, இந்த அடிவருடி தாண்டிக் குதிக்கிறான்.
**
கால காலமாக பார்ப்பனீ யத்துக்குப் பல்லக்குத் தூக்கித் 
தூக்கி, தோள்கள் காய்ப்பேறிப் போய்,  ஒரு காலத்தில் 
சிறிதளவு இருந்த புரட்சிகர உணர்வெல்லாம் காய்ந்து 
சுண்டிப்போய், கிழடு தட்டிக் கிடக்கும் இந்தப் பார்ப்பன 
அடிவருடிகள் கூப்பாடு போடுகிறார்கள். 
**
நம்பூதிரியை விமர்சித்தால், நீங்கள் மார்க்சிய மூல ஆசான்களை 
விமர்சிக்கிறீர்கள் என்று நேர்மையற்ற முறையில் வெறிக் 
கூச்சல் போடும் இவர்களை நினைத்துப் பரிதாபப் 
படுவோம். வேறு என்ன செய்வது?
********************************************************************   
பின்குறிப்பு: பல்லக்குத் தூக்கிகள் "வேதங்களின் நாடு"
என்ற நூலைப் படித்தது கூடக் கிடையாது. இனிமேலாவது 
படிக்கட்டும்.
*******************************************************************8     
  
தங்கள் கமெண்ட்டின்  கடைசி வாக்கியம்  பார்ப்பனீயத்துக்கே
உரிய  நேர்மையற்ற தன்மையுடன் எழுதப் பட்டுள்ளது. நீண்ட 
காலமாக நீடித்த பார்ப்பனீய அடிவருடித்தனத்தின் காரணமாக 
இந்த நேர்மையற்ற தன்மை தங்களிடம் பதிந்து விட்டது 
என்பதைப் புரிந்து கொள்கிறேன். மார்க்சிய மூல ஆசான்களை 
நான் இழிவு படுத்துவதாக, தொடர்ந்து நீங்கள் கூறும் 
இழிவான பொய் மிகுந்த அருவருப்பைத் தருகிறது.
**
போலிக்  கம்யூனிஸ்ட்களை விமர்சிப்பது என்பது மார்க்சிய 
ஆசான்களை இழிவு படுத்துவது ஆகாது என்று தெரிந்த பின்னும்,
தாங்கள் அபாண்டமாக என் மீது குற்றம் சாட்டுவது சிறிதும் 
பொறுத்துக் கொள்ள முடியாது.
**
மார்க்சிய மூல ஆசான்களை எப்படி மதிப்பது என்று தாங்கள் 
எனக்குக் கற்றுக் கொடுக்க முன்வருவது சரிதானா என்று 
உங்கள் மனச் சாட்சியைக் கேளுங்கள்.
**
வெறி பிடித்த பார்ப்பனீய அடிவருடிக்கே உரிய வன்மத்துடன்,
பித்துப் பிடித்த நிலையில், போதையேறிப் போய், என்ன 
பேசுகிறோம் என்ற உணர்வு இழந்த நிலையில், தாங்கள் 
எழுத நேர்ந்தது குறித்து மிகவும் வருந்துகிறேன்.
**
ஜெயலலிதாவைப் பிரதமர் ஆக்குவேன் என்று சொல்வதுதான் 
மார்க்சியமா? தா பாண்டியனும் நல்லகண்ணுவும் மார்க்சிஸ்ட்களா?
இப்படிச் சொல்வதன் மூலம் இவர்கள் மார்க்சியத்தை 
அவமதிக்க வில்லையா?
**
மேற்படி வாசகங்களைக் கண்டித்து உங்களால் 
ஒரு வரி எழுத முடியுமா? எழுதி இருந்தால் 
காட்டுங்கள். come on , show it to me . நீங்கள் காட்டினால் 
உங்களை ஆதரிக்கத் தயார்.
**
போலிக் கம்யூனிஸ்ட்களுக்கு பேசுவதற்கு உரிமையே கிடையாது.
இதை முதலில் உணரவும்.
   

போலிக் கம்யூனிஸ்ட்கள் மற்றும் 
பார்ப்பன அடிவருடிகள் கவனத்துக்கு! 
-----------------------------------------------------------
1) பாஜக தலைவர் திரு கல்யாண ராமன் அவர்களின் 
முகநூல் பதிவை இங்கு பகிர்ந்துள்ளேன்.
2) திரு கல்யாண ராமன் தொலைக்காட்சி விவாதங்கள் 
மூலம் நன்கு அறிமுகம் ஆனவர். வயோதிகர் அல்ல; இளைஞர்.
3) பாஜகவின் சராசரித் தொண்டர் அல்லர் இவர்.ஒரு தலைவர்.
இவரது பதிவின் வாசகங்களைப் படியுங்கள். சங்கப் 
பரிவாரங்களின் வன்மம் விளங்கும்.
**
4) திரு கல்யாணராமன் மீது கோபம் கொள்ளத் தேவையில்லை.
அவருடைய வேலையை அவர் சரியாகச் செய்கிறார். 
5) புரட்சி, மார்க்சியம்,லெனினியம் பேசும் போலிக் 
கம்யூநிஸ்ட்களே, இது குறித்து உங்கள் நிலை என்ன?
**
6) தமிழகத்தில் காலூன்றத் திட்டமிட்ட பாஜகவுக்குப் 
பெரும் தடையாக இருப்பது எது? மார்க்சியமா 
அல்லது பெரியாரியமா?
7) லெனினியத்தை விட, பூணூலியமே உயர்ந்தது என்று 
'நிரூபித்த' சோம்நாத் சட்டர்ஜியின் வாரிசுகளே, 
உங்கள் பதில் என்ன?
**
8) வேதங்களைப் புகழ்வதில் கோல்வால்கரை மிஞ்சிய 
ஈ.எம்.எஸ். நம்பூதிரியின் விசுவாசிகளே, பதில் என்ன?
9) ஜெயலலிதாவைப் பிரதமர் ஆக்குவேன் என்ற 
தா.பாண்டியன்-நல்லகண்ணு விசுவாசிகளே, உங்கள் 
பதில் என்ன?
10)போங்கள் , கல்யாண ராமனின் காலில் விழுந்து 
பாஜகவில் உறுப்பினர் ஆகுங்கள். நீங்கள் இருக்க 
வேண்டிய இடம் அதுதான்!
*************************************************************8      
போலி கம்யூனிசம் என்ற சொல்லாட்சி இந்தியாவில் 
மட்டுமல்ல உலகில் எங்குமே கிடையாது.
ஆனால் போலிக் கம்யூனிஸ்ட்கள் என்ற சொல்லாட்சி 
தமிழ் இடதுசாரி உலகில் நீண்ட காலமாகவே இருக்கிறது.
வலது திருத்தல்வாதிகள் தமிழ் இடதுசாரி உலகில் 
போலிக்கம்யூனிஸ்ட்கள் என்று  அழைக்கப் 
படுகிறார்கள். 
**
போலிக் கம்யூனிசம் என்ற ஒன்று கிடையாது.
ஆனால் மேற்கூறிய போலிக் கம்யூனிஸ்ட்கள் 
இருக்கிறார்களே! அவர்களை எதிர்கொண்டு ஆக வேண்டுமே!
திரிபுவாதி, திருத்தல்வாதி, REVISIONIST என்ற சொற்கள் 
மார்க்சியம் பயின்றவர்களுக்கே புரியும். எல்லோரும் 
புரிந்து கொள்வதற்கு வசதியாக, போலிக் கம்யூனிஸ்ட்கள் 
என்ற சொல்லாட்சி பயன்படுகிறது.
** 
போலிக் கம்யூனிஸ்ட்கள் என்ற சொல்லாட்சி தவறானது 
என்பதற்கான எவ்வித JUSTIFICATION ஐயும் தாங்கள் 
முன்வைக்கவில்லை.  

'மார்க்சிய' நண்பர்கள் கவனத்திற்கு,
---------------------------------------------------------------
கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கியத்
துறையிலும் கடுமையாக உழைத்து வருகிறேன்.
பலவீனப் படுத்தப்பட்ட பார்ப்பனீயம் ஓரிரு ஆண்டுகளாக
மீண்டும் மேலோங்குவதை இலக்கியத் தளத்தில்
காண்கிறேன். (இந்தக் கணிப்பு தவறானது என்றால்,
சரியான கணிப்பு எது என்பதை தெரியப் படுத்தவும்)
**
சமூக வலைத்தளங்கள், காட்சி ஊடகங்கள், அச்சு
ஊடகங்கள், பொது அரங்குகள் என்று சாத்தியமான
அனைத்து வழிகளிலும் பார்ப்பனீயம் மீண்டும்
தலைதூக்குவதை, அதன் மூர்க்கத்தை நாளும் காண்கிறேன்.
கிணற்றுத் தவளைகளாய் இருந்து கொண்டு, சுற்றி உள்ள
சமூகத்தைக் கூர்ந்து  நோக்காமல் இருப்போரால்
பார்ப்பனீயத்  திட்டங்களை, அவற்றின் பேராபத்தை
உணர்ந்து கொள்ள இயலாது.
**
இலக்கியத் துறையில் எவ்விதப் பரிச்சயமும் அற்றவர்கள்
பார்ப்பனீய ஆபத்தைக் குறைத்து மதிப்பிடுவது இயற்கையே.
எனவே, பார்ப்பனீயத்தை இலக்கியக்  களத்தில் சந்திக்க
நேரும்போது, பார்ப்பனீய எதிர்ப்புப் பாரம்பரியமும்,
பார்ப்பனீய எதிர்ப்பை அடிப்படையாகவும் கொண்டுள்ள
அனைத்து சக்திகளுடன் ஓர் ஐக்கிய முன்னணி கட்டுவது
இன்றைய காலக் கட்டத்தின் இயல்பான தேவை ஆகிறது.
**
ஆன்மிகவாதிகளான ராமானுஜர் போன்றோர் மனுதர்ம
எதிர்ப்பில் முன்னணியில் இருந்தவர்கள் என்பது வரலாறு
(அவர்களின் மனுதர்ம எதிர்ப்பு முழுமையற்றது என்ற
போதிலும்). எனவே ராமானுஜரை மக்களுக்கு அறிமுகப்
படுத்தும் பணிகளை, குறிப்பாக, அவரின் மனுதர்ம எதிர்ப்புப்
பணிகளைப் பரப்புரை செய்வதற்கு முன்வந்துள்ள
கலைஞரின் பணிகளை வரவேற்பது, பார்ப்பன
எதிர்ப்பாளர்களின் கடமை. இது தெளிவு; மயக்கம் அல்ல.
**
இதைச் செய்யும்போது, தங்களைப் போன்றவர்கள்
மார்க்சியத்தின் பெயரால், பார்ப்பனீயத்துக்கு ஆதரவாக
கத்தியை வீசுகிறீர்கள். பேரப்  பிள்ளைகளுக்குப் பூணூல்
போட்ட சோம்நாத் சட்டர்ஜியைக் கண்டித்தால், தாங்கள்
சட்டர்ஜிக்கு ஆதரவாக வருகிறீர்கள். இது பார்ப்பன
அடிவருடித் தனம் அல்லாமல் வேறு என்ன?
**
கலைஞரா சட்டர்ஜியா என்றால், நான் கலைஞரைத்
தான் ஆதரிக்க முடியும். இது மயக்கம் அல்ல, தெளிவு.
----------------------------------------------------------------------------------------            

சனி, 28 மார்ச், 2015

ஈஸ்வரன் அவர்களுக்கு,
நீங்கள் கூறுவது அனைத்தும் உங்களின் அகநிலைக்
கருத்து (SUBJECTIVE THINKING). இது கலைஞர் எழுதும்
ராமானுஜர் என்னும் இலக்கியப் படைப்புப் பற்றிய கட்டுரை.
இது திமுகவின் அரசியல் பற்றிய விமர்சனக் கட்டுரை அல்ல.
மார்க்சின் மூலதனம் நூல் அரசியல் படைப்பு. சேக்ஸ்பியரின்
மாக்பெத் ஒரு இலக்கியப் படைப்பு. மூலதனத்தை அளக்கும்
அளவுகோல் வேறு; மாக்பெத்தை அளக்கும் அளவுகோல் வேறு.
**
கலைஞரின் இலக்கியப் பணியை அங்கீகரிக்க மறுக்கும்
பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் ஜெயமோகனின் கருத்தையே
நீங்களும் வழிமொழிகிறீர்கள். ராமானுஜர் பற்றி கலைஞர்
எழுதுவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? அதில் ஏதாவது
கலைஞர் தவறு செய்தால், வாருங்கள் கலைஞரைக் கைது
செய்து சிறையில் அடைப்போம். அப்போதாவது உங்கள்
வன்மம் அடங்குமா என்று பார்ப்போம்.
***
மீண்டும் கேட்கிறேன், ராமானுஜரைப் பற்றிக் கலைஞர்
எழுதுவதில் உங்களுக்கு எங்கே வலிக்கிறது என்று
தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
----------------------------------------------------------------------
     
எந்த மாபெரும் ஆளுமையையும் இக்கட்டுரை
காயப் படுத்தவில்லை. போலிக் கம்யூனிஸ்ட்களாக
இருக்கிற பூணூலிஸ்ட்களை அம்பலப் படுத்தும்போது.
அவர்களுக்குக் கேடயமாக வந்து நிற்பது என்ன நியாயம்?
கட்டுரையின் மையப் பொருளை விட்டு விலகி,
திசை திருப்பும் வாதத்தை வைப்பது என்ன நியாயம்?
**
ராமானுஜரைப் பற்றிக் கலைஞர் எழுதுகிறார்
என்றதுமே, மறைக்கப் பட்ட உண்மைகள் வெளிவந்து
விடுமே என்று அலறுகிறது பார்ப்பனீயம். ராமானுஜர்
பற்றிய உண்மைகள் வந்து விட்டால், தாழ்த்தப்பட்ட
மக்கள் துளுத்து விடுவார்கள் என்று அஞ்சுகிறது பார்ப்பனீயம்.
**
 இப்பொருள் குறித்து இதுவரை எழுதப்பட்ட ஒன்பது
கட்டுரைகளையும் படித்துப் பார்க்கவும். மனுதர்மத்தை
உறுதியுடன் எதிர்த்து நின்ற ராமானுஜரைப் பற்றி,
ஏதாவது கருத்து இருந்தால் தெரிவியுங்கள். அதை
விட்டு, கிடைக்கிற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்,
பார்ப்பனீயத்துக்கு ஆதரவாக வாளைச் சுழற்றுவது
என்ன நியாயம்?
------------     
தமிழ் இலக்கிய உலகில், கலைஞர் குறிப்பிடத்தக்க
ஒரு முற்போக்கு இலக்கியவாதி. ஒரு சிறந்த
முற்போக்கு இலக்கியவாதியாக அவர் தமிழ்
வாசக உலகில் அங்கீகாரம் பெற்று இருக்கிறார்.
எனவே அவரின் படைப்புகளின் வாசகன் நான்.
முற்போக்கு இலக்கியவாதி என்ற புகழுக்கு
உரியவர் அவர். காழ்ப்பு உணர்ச்சியாலும்
வன்மத்தாலும் அவரை அங்கீகரிக்க மறுக்கும்
பார்ப்பனர்களும் பார்ப்பன அடிவருடிகளும்
இந்த உண்மையை ஏற்க மாட்டார்கள்.  
இக்கட்டுரை மார்க்சியம் பற்றிய கட்டுரையோ
அல்லது அரசியல் பற்றிய கட்டுரையோ அல்ல.
இது ஒரு இலக்கியப் படைப்பு சார்ந்த இலக்கியக்
கட்டுரை. ராமானுஜர் என்ற பன்னிரண்டாம் நூற்றாண்டைச்
சேர்ந்த ஒரு சாதி எதிர்ப்புப் போராளி குறித்த கலைஞரின்
இலக்கியப் படைப்பு குறித்த கட்டுரை. கலைஞரின் அல்லது
திமுகவின் அரசியல் இக்கட்டுரையின் பாடுபொருள் அல்ல.
மிகுந்த காழ்ப்புணர்ச்சியோடும், பார்ப்பன வன்மத்தோடும்
கலைஞரின் ராமானுஜர் பற்றி, பார்ப்பனர்களும்
பார்ப்பன அடிவருடிகளும் எதிர்மறைச் சிந்தனைகளை
விதைக்கிறார்கள். அதற்கு எதிராகவே இக்கட்டுரை.
இப்பொருளில் பத்துக் கட்டுரைகள் எழுதத் திட்டம்.
இதுவரை ஒன்பது கட்டுரைகள் வெளிவந்து விட்டன.
இலக்கியப் புலமையும் ஆர்வமும் உள்ள வாசகர்களை
மனதில் கொண்டு இக்கட்டுரைகள் எழுதப் படுகின்றன.
எனவே, கலைஞரின் அரசியலைப் புகழ்வது என்ற
பேச்சுக்கே இடமில்லை.  
இதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை.
மார்க்சியப் பூணூலிஸ்ட் என்றோ கம்யூனிசப்
பூணூலிஸ்ட் என்றோ அவர்களை அழைப்பதில்
எவ்வித ஆட்சேபமும் இல்லை. இங்கு நாமகரணம்
அல்ல பிரச்சினை. மார்க்சிய-லெனினியத்தை
வழிகாட்டும் தத்துவமாக வைத்துக் கொண்டு,
அதைப் பின்பற்றாமல், பார்ப்பனீயத்தை நடைமுறைப்
படுத்துபவர்களை பூணூலிஸ்ட்கள் என்று அம்பலப்
படுத்துவதில் என்ன தவறு?
**
போலி மார்க்சிச்ட்களை அம்பலப் படுத்தினால்,
'ஐயோ, மார்க்சியத்தை விமர்சிக்கிறான்"என்று
அலறுவதில் எவ்வித நேர்மையும் இல்லை.
**
பார்ப்பனீயத்துக்கு ஆதரவாக எத்தனை பேர்,
யார் யாரெல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு
வருகிறார்கள் என்பது இப்போது எல்லோருக்கும்
தெளிவாகத் தெரிகிறது. அதற்கு நன்றி.    
மார்க்சிஸ்ட் தலைமையில் இருக்கும் பார்ப்பனர்கள்
லெனினியப் பூணூலிஸ்ட்களே! இதோ நிரூபணம்!
-----------------------------------------------------------------------------------
மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த
ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாட் அவர்கள் "வேதங்களின் நாடு"
(THE COUNTRY OF VEDAS) என்ற நூலை எழுதி உள்ளார்.
கேரள சாஸ்திர சாஹித்ய பரிஷத் என்ற அமைப்பு
அந்த நூலை வெளியிட்டது முதல் பதிப்பு 1981 ஆக
இருக்கலாம். பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்
பட்டு பல பதிப்புகள் வெளிவந்த இந்த நூலை,
அட்டையைக் கழற்றி விட்டுப் படித்தால்,
கோல்வால்கர் எழுதியதா என்ற எண்ணம் தோன்றும்.
அந்த அளவுக்கு ரிக் யஜுர் சாம அதர்வண வேதங்களின்
மகிமையை எழுதி இருப்பார்.
**
நம்பூதிரிபாட், சோம்நாத் சட்டர்ஜி ஆகிய பெருந்
தலைவர்களைப் பாருங்கள். இவர்கள் பொலிட்பீரோ
மெம்பர்கள். தமிழ்நாட்டு பி ராமமூர்த்தியைப் பற்றி
எழுதி மாளாது.
**
எனவே, லெனினியப் பூணூலிஸ்ட்கள் என்று சொல்வதில்
என்ன தவறு?
-----------------------------------------------------------------------      
மார்க்சிஸ்ட் தலைமையில் இருக்கும் பார்ப்பனர்கள்
லெனினியப் பூணூலிஸ்ட்களே! இதோ நிரூபணம்!
-----------------------------------------------------------------------------------
மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த
ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாட் அவர்கள் "வேதங்களின் நாடு"
(THE COUNTRY OF VEDAS) என்ற நூலை எழுதி உள்ளார்.
கேரள சாஸ்திர சாஹித்ய பரிஷத் என்ற அமைப்பு
அந்த நூலை வெளியிட்டது முதல் பதிப்பு 1981 ஆக
இருக்கலாம். பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்
பட்டு பல பதிப்புகள் வெளிவந்த இந்த நூலை,
அட்டையைக் கழற்றி விட்டுப் படித்தால்,
கோல்வால்கர் எழுதியதா என்ற எண்ணம் தோன்றும்.
அந்த அளவுக்கு ரிக் யஜுர் சாம அதர்வண வேதங்களின்
மகிமையை எழுதி இருப்பார்.
**
நம்பூதிரிபாட், சோம்நாத் சட்டர்ஜி ஆகிய பெருந்
தலைவர்களைப் பாருங்கள். இவர்கள் பொலிட்பீரோ
மெம்பர்கள். தமிழ்நாட்டு பி ராமமூர்த்தியைப் பற்றி
எழுதி மாளாது.
**
எனவே, லெனினியப் பூணூலிஸ்ட்கள் என்று சொல்வதில்
என்ன தவறு?
-----------------------------------------------------------------------        
பேரப்  பிள்ளைகளுக்குப் பூணூல் போட்ட
சோம்நாத் சட்டர்ஜியை லெனினியப் பூணூலிஸ்ட்
என்று சொல்வதில் என்ன தவறு?
மேற்கு வங்கப் பத்திரிகைகளில் matrimonial எனப்படும்
மணமகள் தேவை விளம்பரங்களில், மார்க்சிஸ்ட்
பிராமணருக்கு (MARXIST  BRAHMIN ) பெண் தேவை
என்று இன்றும் விளம்பரங்கள் வந்து கொண்டு இருக்கின்றன.
இதையெல்லாம் பார்க்காமல், கண்ணை மூடிக் கொண்டு
போலி மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்களுக்குப் பரிந்து
கொண்டு வருவது என்ன நியாயம்?   
(10) போர்வாளும் பூவிதழும்!
---------------------------------------------------------------------------------
கலைஞரின் ராமானுஜர் பற்றிய பத்தாவது கட்டுரை
--------------------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி
---------------------------------------------------------------------------------------
பரத நாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் அவர்கள்
தம் குழுவினருடன் ஒரு நாட்டிய நிகழ்ச்சியை நடத்தினார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, 2010இல், மியூசிக் அகாடமியில்
அதைப் பார்த்து மகிழ்ந்தேன். அற்புதமான நாட்டிய விருந்து.
"போர்வாளும் பூவிதழும்"என்பது அந்நாட்டிய நிகழ்ச்சியின்
பெயர். அதை எழுதியவர் கலைஞர்.
**
மேற்கண்ட பத்தியின் கடைசி வாக்கியத்தை வாசிப்பதற்கு
முன்பு வரை மனதின் சமநிலையை (MENTAL BALANCE)
பராமரித்து வந்த வன்மம் மிகுந்த பார்ப்பனர்களும்
பார்ப்பன அடிவருடிகளும், கடைசி வாக்கியத்தைப்
படித்த பின்னர், சமநிலை இழப்பதை மானசீகக்
காட்சியாகக் காண்கிறேன்.
**
நாட்டிய நிகழ்ச்சிகளைப் புரிந்து சுவைக்க, சிறிது
அக்கலையில் பயிற்சி வேண்டும். இல்லாவிடில்
சில முத்திரைகளின் பொருள் புரியாது. நாட்டியம்
மட்டுமின்றி, நாட்டார் கலைகளையும் புரிந்து சுவைக்க
அவ்வக் கலைகளில் பரிச்சயம் தேவை.
**
போர்வாளும் பூவிதழும் என்ற கவித்துவமான தலைப்பும்,
அதில் பொதிந்துள்ள முரண்தொடையும், நாட்டியத்துக்கான
சாஹித்தியமும் நிறைவாக இருந்தன. முத்தமிழறிஞர்
என்ற அடைமொழி கலைஞருக்கு எவ்வளவு கச்சிதமாகப்
பொருந்துகிறது என்று எண்ணி மகிழ்ந்தேன்.
**
கல்கி இதழுக்கு அளித்த நேர்காணலில், "ராமானுஜரைப்
பற்றி உங்களிடம் பத்து, பதினைந்து புத்தகங்கள்
இருக்கிறதாமே"  என்று செய்தியாளர் கேட்கிறார்.
(பார்க்க: கல்கி, ஏப்ரல் 5, 2015, பக்கம்-8). ஆமோதித்த கலைஞர்
தம்மிடம் உள்ள புத்தகங்களைப் பட்டியல் இடுகிறார்.
1) ஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கை வரலாறு, கா.ஸ்ரீ.ஸ்ரீ 
2) ராமானுஜ காவியம், கவிஞர் வாலி, வானதி பதிப்பகம் 
3) ஸ்ரீராமானுஜர், டி.என்.சுகி சுப்பிரமணியன் 
4) மதப் புரட்சி செய்த மகான் ராமானுஜர், சாண்டில்யன் 
5) ஸ்ரீராமானுஜர், பி.ஸ்ரீ 
6) ராமானுச வைபவம், ஆர்.வீ.ஸ்வாமி 
7) ஸ்ரீராமானுஜர் வாழ்வில் அற்புத நிகழ்ச்சிகள், கங்கா ராமமூர்த்தி 
8) உய்விக்க வந்த உடையவர், குளித்தலை கிருஷ்ணசாமி 
9) ஸ்ரீராமானுஜர் வாழ்வும் தோண்டும், ஜெகாதா 
**
இவ்வளவும் இதற்கு மேலும் படித்த பிறகுதான் கலைஞர் 
ராமானுஜ காவியம் எழுத முற்படுகிறார். ஆனால், எதையும் 
படிக்காமல், எதையும் தெரிந்து கொள்ளாமல், கலைஞரை 
வன்மத்தோடு வசை பாடுகிற பார்ப்பன அடிவருடிகளான 
சோற்றால் அடித்த சூத்திரப் பிண்டங்களை யாரும்  திருப்பி 
வசை பாட வேண்டாம். பார்ப்பானாவது (ஐயங்கார்கள்)
எத்திராஜர் பஜனைப் பாடல்கள் என்ற ராமானுஜர் புகழ் 
பாடும் பாடல்கள் மூலம் ராமானுஜரைப் பற்றி அறிந்து 
இருப்பான். (எத்திராஜர் என்பது ராமானுஜரின் பெயர்.
இப்பெயரைச் சூட்டியவர் ராமானுஜரின் ஆசான் 
திருக்கச்சி நம்பி). அடிவருடிச் சூத்திரன் எதைப் 
படித்திருக்கப் போகிறான்? 
**
HATE THE SIN, BUT NOT THE SINNER என்கிறது பைபிள்.
பாவத்தை வெறு, பாவியை வெறுக்காதே என்பது இதன்
பொருள்.எனவே அறியாமையால் பார்ப்பன அடிவருடித் 
தனம் செய்யும் சூத்திரப் பாவிகளை வெறுக்க வேண்டாம்.
அவர்களின் பாவத்தை, அதாவது, அறியாமையைப் 
போக்குவோம். போக்குவது எப்படி?
**
முன்பத்தியில்  கலைஞர் பட்டியலிட்ட புத்தகங்களை 
நாமும் படிப்போம். அடிவருடிகளையும் படிக்க 
வைப்போம். மதப் புரட்சி செய்த மகான் ராமானுஜர் என்ற 
சாண்டில்யனின் நூல் அற்புதமானது. எனது சிறு வயதில் 
அதைப் படித்துள்ளேன். அதைப் பரிந்து உரைக்கின்றேன்.
படித்து விட்டு விமர்சனம் செய்யட்டும் இந்தப் 
பார்ப்பன அடிவருடிகள்.
---------------------------------------------------------------------------------------------------
தொடரும் 
******************************************************************88         
         
(9) வடகலை தென்கலை பற்றிக் கலைஞர் 
என்ன எழுதுவாரோ என்று கலங்கி நிற்கும் 
வேதபுரியும் சில மார்க்சியப் பூணூல்களும்!
------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி 
-----------------------------------------------------------------------
திராவிடத் திரிபுகள், மார்க்சியப் பூணூல்கள்,
மற்றும் வேதபுரி வித்தகர்கள் என்று யாவரும் 
கலங்கி நிற்கின்றனர் கலைஞரின் ராமானுஜ காவியம் 
பற்றி அறிந்ததும். போலி அடையாளங்களில் 
கோழைகளாக ஒளிந்து கொண்டு, சிலர் தங்களின் 
அறியாமையை அச்சத்துடன் வெளிப்படுத்துகின்றனர்.
**
வேதபுரியின் கோழைத்தனம் வேண்டியதுதான். இந்த 
அச்சம் இருக்க வேண்டியதுதான்.
"கோட்டை நாற்காலி இன்றுண்டு--நாளை 
கொண்டு போய் விடுவான் திராவிடக் காளை"
என்றார் பாவேந்தர். அஞ்சுதற்கு அஞ்சும் வேதபுரியினரின் 
அச்சம் நிலைப்பதாக.  
**
வள்ளலாரைப் பற்றி எழுதாமல், ராமானுஜரைப் 
பற்றி ஏன் எழுகிறார் கலைஞர் என்று பலர் தங்களின் 
அறியாமையை அரங்கேற்றி வருகின்றனர். கருப்பொருள் 
தேர்வு என்பது கலைஞனின் சுதந்திரம். சமூக அவசியம் 
அற்ற கருப்பொருளை ஒரு கலைஞன் தேர்வு செய்வான் 
ஆகில், அது காலத்தில் கரைந்து விடும். இலக்கியக் 
கோட்பாடுகளில் பிரதானமாக இரண்டு உண்டு. ஒன்று,
கலை கலைக்காகவே என்ற முதலாளித்துவக் கோட்பாடு.
மற்றது, கலை மக்களுக்காகவே என்ற மார்க்சியக் கோட்பாடு.
கலைஞரின் ராமானுஜர் 'கலை மக்களுக்காகவே"
என்ற கோட்பாட்டைச் சேர்ந்தது.
**
கலைஞர் வடகலை  தென்கலை பற்றியும் எழுதுவார்
என்று எதிர்பார்க்கப் படுகிறது. ராமானுஜர் காலத்தில் 
வடகலை தென்கலை என்ற பாகுபாடே கிடையாது.
ராமானுஜர்--வேதாந்த தேசிகர்--மணவாள மாமுனிகள் 
என்பதுதான் வைணவ ஆச்சார்யார்களின் வரிசை முறை.
இதில், மணவாள மாமுனிகள்  மறைந்து நூறு ஆண்டுகளுக்குப் 
பின்னரே வடகலை தென்கலை என்ற பிரிவுகள் 
வெளிப்பட்டன.
**
எனவே, வடகலை தென்கலை பிரிவுகள் பற்றி 
கலைஞர் எழுதத் தேவையே இல்லை. எனினும் 
அதை எழுதுவதன் மூலம், அறியாமை அகலும் 
என்பதால் கலைஞர் அதை எழுதிட வேண்டும் என்றே 
அறிவார்ந்த வாசகர்கள் விரும்புகின்றனர்.
**
-----------------------------------------------------------------------------------------------------
தொடரும் 
--------------------------------------------------------------------------------------
*************************************************88888888888888 
  
         
(5) வெகு விமரிசையாக பேரப் பிள்ளைகளுக்குப்
பூணூல் போட்ட மார்க்சிஸ்ட் புரட்சியாளர்
சோம்நாத் சட்டர்ஜியைப் போற்றுவோம்!
ராமானுஜ காவியம் எழுதும் கலைஞரைத் தூற்றுவோம்!
-----------------------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி
-----------------------------------------------------------------------------------------------
ஓம்:  பூர்: புவ: ஸுவ: தத் ஸவிதுர்
வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்.
------காயத்ரி மந்திரம்--------------
**
கடல் சூழ்ந்த இப்பரத கண்டமே சங்கமித்த சுபமங்கள
வைபவம் அன்றோ அஃது! பிரகாஷ் காரத் தம்பதியர்,
எச்சூரி குடும்பத்தார், துணைக் கண்டத்தின் இன்ன பிற
மார்க்சிஸ்ட் புரட்சியாளர்கள், பாஜக-ஆர்.எஸ்.எஸ்
பிரமுகர்கள் என்று பரத கண்டத்தின் பிராமண
சிரேஷ்டர்கள் அனைவரும் ஒன்று கலந்த புரட்சிகர
நிகழ்வன்றோ அஃது! வளர்ப்பு மகன் திருமணத்தை
ஆன்மிகத் தரத்தில் தோற்கடித்த அந்த விசேஷித்த
வைபவத்தில்தான் சோம்நாத் சட்டர்ஜியின் பேரப்
பிள்ளைகளுக்குப் பூணூல் அணிவிக்கப் பட்டது.
**
பேரப்பிள்ளைகளுக்கு எவ்விதக் குற்ற உணர்வும் இன்றி,
பூணூல் அணிவித்து, மனுதர்மத்தை நிலைநாட்டிய
மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ தலைவர் சோம்நாத்
சட்டர்ஜியைப் போற்றுவோம்! ஸ்ரீரங்கம் பிராமணர்களின்
கொட்டத்தை அடக்கிய ராமானுஜரின் வரலாற்றை
எழுதும் கலைஞரைத் தூற்றுவோம்!
**
சமூகநீதிக் காவலர்கள் என்று போற்றப்படும் முலாயம்
சிங் யாதவ்வோ அல்லது லல்லு பிரசாத் யாதவ்வோ,
யாதவ சாதியை விடுத்து வேறு சாதியில் பெண்
எடுப்பார்களா? மாட்டார்கள். அவர்கள் தீவிரமான
சாதி அபிமானிகள். அவர்களைப் போற்றுவோம்!
சாதி ஒழிப்பில் ஊன்றி நிற்கும் கலைஞரைத் தூற்றுவோம்!
**
ராஜாஜி, காமராசர் முதல், ராமதாஸ்-வைகோ-விஜயகாந்த்
வரை அனைவரும் சுயசாதி அரசியல் செய்தவர்கள்;
செய்து வருபவர்கள். ஆனால் சுயசாதி அரசியல் செய்வதைக்
கனவிலும் நினைக்காத கலைஞரைத் தூற்றுவோம்.
**
ஜிந்தாபாத்! ஜிந்தாபாத்!!
பூணூல் புரட்சி ஜிந்தாபாத்!!
மார்க்சிய லெனினிய பூணூலியம் ஜிந்தாபாத்!
--------------------------------------------------------------------------------
தொடரும்
************************************                
   
மாற்றான் தோட்டத்து மல்லிகை 
கலைஞரின் ராமானுஜ காவியம் குறித்து
முகநூல் வாசகர்களுக்காக பதினைந்து குறுங் கட்டுரைகள்
எழுதி உள்ளேன். அவை பயன்படும் என்று நம்புகிறேன்.
பாரதியைத் தாக்குவது பாரதிதாசனைத் 
தாக்குவதற்குச் சமம்!
---------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
-----------------------------------------------------------------------------
"பெரியாரிஸ்ட்" என்று அறியப்படும் திரு வே மதிமாறன் அவர்கள் 

பாரதியாரை இழிவு செய்தல் வேண்டும் என்னும் நோக்கில் 
ஒரு குறும்பதிவை எழுதி உள்ளார். (பார்க்க: 22.03.2015, 10.13 a.m)
அப்பதிவு அவரையே மிகவும் இழிவு செய்கிறது; பாரதியாரை அன்று.
அப்பதிவினைக்  கீழே காண்க!
-------------------------------------------------------------------------------------------    
திரு மதிமாறனின் பதிவு:

------------------------------------
"ஜாதிகள் இல்லையடி பாப்பா குல
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாபம் - பாரதியார்.
அதான் ‘ஜாதிகள் இல்லை’ ன்னு சொல்லியாச்சியில்ல... அப்புறம் இல்லாததில்.. குல தாழ்ச்சி உயர்ச்சி எப்படி சொல்ல முடியும்?
-------------------------------------------------------------------------------
ஊக்கமது கைவிடேல் என்று அவ்வையார் கூறியதற்கு,
ஊக்கத்தைத் தருகின்ற மது அருந்துதலைக் கைவிடாதீர்கள்
என்று பொருள் கொள்கிறவன் பிறழ்ந்த மனநிலை உடையவன்.
அது போன்றதே திரு மதிமாறனின் பதிவும். ஆழம் எதுவும்
இன்றி, மிகுந்த சிறுபிள்ளைத் தனத்துடன் எழுதப்பட்ட இப்பதிவு,
கோமாளித்தனமான (clownish) பதிவாகவே உணரப்படும்.
***
பாரதியார் ஒரு கலகக்காரர். தம் காலச் சமூகத்தை எதிர்த்தும்,
அச்சமூகத்தை அடிமைப் படுத்தி ஆண்ட பிரிட்டிஷ்
ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் பெருங்கலகம் விளைத்தவர்
பாரதியார். தமது சொந்த சாதியினரால் பிரஷ்டம் செய்யப்
பட்டவர். அவரின் இறுதி ஊர்வலத்தில் அவரது சாதியினர்
பங்கேற்கவில்லை.
**
பாரதியாரிடம் பல போதாமைகள் இருக்கலாம். அவற்றில்
பல அவரின் காலம் சார்ந்தவை. 1882இல் பிறந்து 1921இல்
மறைந்த பாரதியார் 39 ஆண்டுகளே வாழ்ந்தார்.   
இன்றைக்கு  நூறு ஆண்டுகளுக்கு முன்பு, 1921இல், 
தமிழ்ச் சமூகம் எவ்வளவு இழிவானதாக,
அறியாமை-மூடநம்பிக்கை-வறுமை-கல்வியின்மை 
நிறைந்ததாக இருந்திருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கும் 
போதுதான், பாரதியாரின் கலகம் எவ்வளவு ஆற்றல் 
வாய்ந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
***
தந்தை பெரியார் 1925இல் சுயமரியாதை இயக்கத்தைத் 
தோற்றுவிக்கிறார். அதற்கு நாலு ஆண்டுகளுக்கு முன்பே 
பாரதியார் இறந்து விடுகிறார். பாரதியாரின் புரட்சிக் 
கருத்துக்கள் பெரியாரின் சுயமரியாதை இயக்கச் 
செயல்பாடுகளுக்கு நிகரானவை.
***
சுயமரியாதை இயக்கத்துக்காக குடியரசு என்ற பத்திரிகையைத் 
தொடங்குகிறார் தந்தை பெரியார்.  குடியரசு இதழ் 
02.05.1925 முதல் வெளிவரத் தொடங்குகிறது. அந்த இதழில் 
இந்தப் பத்திரிகை வெற்றிகரமாக நடக்க,
"இறைவன் திருவடிகளை இறைஞ்சுகிறோம்" என்று 
தந்தை பெரியார் எழுதினார்.
அதிர்ச்சியாக இருந்தாலும் இதுதான் உண்மை. மேலும்,
குடியரசு பத்திரிகை திறப்பு விழாவை நடத்தி வைக்க 
இந்து மதச் சாமியார் ஒருவரைத்தான் அழைத்து, விழாவை 
நடத்தினார் பெரியார்.
***
இதனால் எல்லாம் பெரியார் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர் 
என்று கூறி விட முடியுமா? ஒரு நாத்திகரைக் கூப்பிட்டு 
திறப்பு விழா நடத்தக் கூடாதா என்று வரலாறு தெரியாத 
ஒரு விடலை கேட்கலாம்.இந்த நிகழ்வுகள் நடந்த 
காலம் 1925. அன்று ஒரு நாத்திகர் கூடக் கிடையாது 
தமிழ்நாட்டில். நாத்திகர்தான் திறந்து வைக்க வேண்டும் 
என்றால், ஜவஹர்லால் நேருவைத்தான் போய்க் 
கூப்பிட வேண்டும். அது சாத்தியமற்றது.
***
இவற்றை எல்லாம் பெரியாரின் குறைகளாகச் சுட்டிக் 
காட்டுபவன் மூடன். அந்தக் காலக் கட்டத்தின் சமூக 
நிர்ப்பந்தங்கள் குறித்து எவ்வித அறிவும் அற்றவனே 
பெரியாரைக் குறை கூற முடியும். அது போலவே 
பாரதியாரின் குறைகளாகச் சொல்லப் படுபவை 
பாரதியாரின் குறைகள் அல்ல. அவை அக்காலத்தின் 
சமூக நிர்ப்பந்தங்கள்.
***
பாரதியார் மீது  தாக்குதல் நிகழ்ந்த போதெல்லாம்,
கேடயமாக இருந்து அவரைக் காத்தவர் பாவேந்தர் 
பாரதிதாசன். பாரதியார் மீது தாக்குதல் தொடுப்பவன் 
பாவேந்தர் மீதும் தாக்குதல் தொடுக்கிறான் என்பது 
தான் உண்மை.
-------------------------------------------------------------------------------------
****************************************************    
     
(7) ராமானுஜரின் சீடர்களின் கண்களைப் பிடுங்கி 
எறிந்த குலோத்துங்க சோழன்!
ஹொய்சள நாட்டுக்குத் தப்பி ஓடிய ராமானுஜர்!
கலைஞரின் கைவண்ணத்தில் காணுவோம்!
---------------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி 
---------------------------------------------------------------------------------
தமிழ் பிராமணக் குடும்பத்தில், திருப்பெரும்புதூரில் 
கி.பி 1017இல், கேசவ சோமயாஜி-காந்திமதி தம்பதியருக்கு 
மகனாகப் பிறந்தவர் ராமானுஜர். யாதவப் பிரகாசர் என்ற 
அத்வைதியிடம் வேதம் பயில்கிறார். குருவை விஞ்சிய 
சீடனாக இருந்த ராமானுஜரை யாதவப் பிரகாசர் 
விரும்பவில்லை. எனவே திருக்கோஷ்டியூர் நம்பி 
என்ற சூத்திரரிடம் வேதம் பயின்றார். அந்தக் காலத்தில் 
சூத்திரர்களும் தீண்டத் தகாதவர்களாகவே நடத்தப் 
பட்டனர்.
**
திருவரங்கம் மடத் தலைவராக ராமானுஜர் இருந்தபோதும்,
அங்கேயே தங்கி விடவில்லை. நாடு முழுவதும் 
சுற்றுப் பயணம் செய்து தமது விஷிஷ்டாத்வைத 
தத்துவத்தைப் பரப்புகிறார். காசி, காஷ்மீர், பத்ரிநாத் 
உள்ளிட்ட பல்வேறு திருத்தலங்களுக்குச் செல்கிறார்.
திரும்பும் வழியிலும் பல்வேறு இடங்களில் தங்கி 
தம் கொள்கையைப் பரப்புகிறார். திருப்பதியில் 
தங்குகிறார். தென்னிந்தியத் திருத்தலங்களைத் 
தரிசிக்கிறார். இறுதியில் திருவரங்கம் வந்து நிலைக்கிறார்.
அப்போது அவருக்கு வயது எழுபது.
**        
ஓரிடத்தில் முடங்கி விடாமல் நாடு முழுவதும் சுற்றித் 
தம் கொள்கைகளைப் பரப்பிய ராமானுஜரை, தம் மதத்துக்கு 
ஆள் பிடிக்கவே தாழ்த்தப் பட்டோரைச் சீடர்களாக 
ஏற்றுக் கொண்டார் என்று பேசுவது, வரலாறே அறியாத 
மடமை அல்லவா!
**
திருவரங்கம் வந்து நிலையாக இருக்கலாம் 
என்று எண்ணிய எண்ணம் ராமானுஜருக்கு 
ஈடேறேவில்லை. அப்போதைய சோழ மன்னன் 
இரண்டாம்  குலோத்துங்கன் தீவிர சைவன். (சில வரலாற்று 
ஆசிரியர்கள் முதலாம் குலோத்துங்கன் என்று 
கூறுகின்றனர்.). 
அவன் ராமானுஜரை சைவத்தைத் தழுவுமாறு பணித்தான்.     
அதை ஏற்காத ராமானுஜர், மன்னனுக்கு வைணவத்தின் 
மகிமையை எடுத்துக் கூறும் பொருட்டுத் தமது இரண்டு 
சீடர்களைத் தூது அனுப்பினார். சீடர்களைப் பேசவே 
அனுமதிக்காத மன்னன், அவர்களின் கண்களைப் 
பிடுங்கி எறிந்து நாட்டை விட்டு விரட்டினான்.
ராமானுஜரையும் சிறை செய்ய ஆணையிட்டான்.
**
இச்செய்தி கிடைக்கப் பெற்றதும் ராமானுஜர் தம் முதிர்ந்த 
வயதில் சோழ நாட்டை விட்டுத் தப்பி ஓடி, மைசூருக்கு 
அருகில் உள்ள ஒரு மலைப் பகுதிக்குச் சென்றார். அது 
ஹொய்சள மன்னன் பத்தி தேவன் ஆண்ட நாடு. அம்மன்னன் 
ராமானுஜரை ஆதரிக்கிறான். ராமானுஜரின் போதனையால் 
அவன் வைணவத்தை ஏற்கிறான்.
----------------------------------------------------------------------------------------
தொடரும் 
***********************************************************