வெள்ளி, 20 மார்ச், 2015

பிளஸ் டூ கணிதத் தேர்வு: (18 மார்ச் 2015)
தவறான கேள்வி கேட்கப்படவில்லை!
தி இந்து ஏட்டின் பொய்ச்செய்தியால்
தேவையற்ற மன இறுக்கத்தில் மாணவர்கள்!  
-------------------------------------------------------------------------------
சற்றேறக்குறைய மூன்றரை லட்சம் மாணவர்கள் கணிதத் 
தேர்வு எழுதினர் (பிளஸ் டூ, மார்ச் 18, 2015). கேள்வித்தாள் 
இயல்பாக இருந்தது( very much normal ). பத்து மதிப்பெண் 
கேள்வியில் 58ஆவது கேள்வி சரியானதும் இயல்பானதுமான 
கேள்வி. ஆனால், இக்கேள்வி தவறானது என்றும் பாடத்திட்டத்துக்கு 
வெளியே உள்ள கேள்வி (wrong question, out of syllabus) என்றும் 
தி இந்து (19.03.2015,சென்னை, பக்கம்-6) பொய்ச்செய்தி வெளியிட்டு 
மாணவர்களை மன இறுக்கத்துக்கு ஆளாக்கி உள்ளது.
----------------------------------------------------------------------------------------------
இந்தக் கேள்வியை attempt செய்த அனைவருக்கும் 10 மதிப்பெண் 
கிடைக்கலாம் என்ற தவறான நம்பிக்கையை தி இந்து 
ஏற்படுத்துகிறது. இது முற்றிலும் தவறு. 58ஆவது கேள்வியில் 
plusக்குப் பதில் minus போட்டு எழுதிய மாணவர்களுக்கு 
மதிப்பெண் கிடைக்காது. மாணவர்களின் நலனுக்காக,
58ஆவது கேள்வியின் விடையை, நியூட்டன் அறிவியல் 
மன்றம்  இங்கு தருகிறது. (இணைப்பைப் பார்க்கவும்).
----------------------------------------------------------------------------------------------
பிளஸ் டூ மாணவர்களின் நலன் கருதி, இப்பதிவை 
பெற்றோர்களிடம் கொண்டு சென்றிட ஏதுவாக, அதிக 
அளவில் ஷேர் செய்யவும்.
-----நியூட்டன் அறிவியல் மன்றம்-------
Note: for SOLUTION, pls see the attached sheet.
****************************************************************     
         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக