திங்கள், 23 மார்ச், 2015

மோடியின் கடைக்கண் பார்வைக்கு ஏங்கும் அருந்ததி ராய்!
---------------------------------------------------------------------------------------------------
அருந்ததி ராய் அம்மையார் மற்றுமொரு மார்க்கண்டேய கட்ஜுவாக 
மாறி வருகிறார். பெருந்தொழில் மயத்தை மிகவும் கடுமையாக 
எதிர்த்தவர் மகாத்மா காந்தி. காந்தியப் பொருளாதாரத்தில் 
தொழில்மயம் ( INDUSTRIALISATION) என்பதற்கு இடமில்லை.
காந்தியின் கொள்கைகள் பற்றிக் கேள்வியுற்ற மாவோ, 
காந்தியை வெகுவாகப் பாராட்டி உள்ளார். இதுதான் உண்மை.
அருந்ததி ராய் அம்மையாரின் கூற்று உண்மைக்கு எதிரானது.
பெரும் பூர்ஷ்வா வர்க்கத்தைச் சேர்ந்த இந்த அம்மையார்தான் 
உண்மையில் கார்ப்பொரேட் ஏஜன்ட் ஆவார்.
---
சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக "அதிர்ச்சி மதிப்பு"
(SHOCK VALUE) உடைய விஷயங்களைக் கூறுவது 
இவரைப் போன்ற, பின்நவீனத்துவத்தின் செல்வாக்கிற்கு 
உட்பட்ட லிபரல்களின் வாடிக்கை. மகாத்மா காந்தியை 
இழிவு செய்வதன் மூலம், மோடி அரசிடம் நற்பெயர் 
பெறலாம். Yes, she wants to be in the good books of Modi.
***************************************************************         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக