பேதைமையுள் எல்லாம் பேதைமை!
பி இளங்கோ சுப்பிரமணியன்
-------------------------------------------------------------------------------------------------
இன்னொரு தவறையும் செய்கிறார் திரு வே மதிமாறன் அவர்கள்.
இது பாரிய தவறு ஆகும். பெரியாரையும் பிரபாகரனையும்
எதிர் எதிரே நிறுத்தி விடுகிறார்.பெரியாரும் பிரபாகரனும் எதிரிகள் என்று கட்டமைக்க முயல்கிறார். இது பேதைமையுள் எல்லாம்
பேதைமை ஆகும்.திரைப்படங்களில் வரும் கதாநாயகன்,
வில்லன் போல, பெரியாரையும் பிரபாகரனையும் சித்தரிக்க
முயல்வது சிறுபிள்ளைத்தனம் மட்டுமின்றிப் பெரும்பிழையும்
ஆகும். "பெரியார் எங்களுக்கு, பிரபாகரன் உங்களுக்கு" என்று
பிரபாகரனை தமிழ்தேசியம் பேசுவோரிடம் தள்ளி விடுகிறார்.
இதை ஏற்பதற்கில்லை; பொறுப்பதற்கும் இல்லை.

இதுதான் பெரியாரியம் என்றோ, இதுதான் ஈழ தேசியம் என்றோ
அடித்துக் கூறுவதற்கு திரு வே மதிமாறன் அவர்கள் உரிமை
பெற்றவர் அல்லர்;அதற்கான அருகதையும் வாய்க்கப்
பெற்றவர் அல்லர். பெரியாரும் பிரபாகரனும் எட்டுக் கோடித்
தமிழ் மக்களின் பொதுச் சொத்துக்கள். எந்தத் தனிநபருக்கோ
அல்லது குழுவுக்கோ தனியுடைமை ஆனவர்கள் அல்லர்.
காரல் மார்க்ஸ் உலகம் முழுமைக்கும் சொந்தம் என்பது
போல, பெரியாரும் பிரபாகரனும் உலகம் முழுவதிலும் உள்ள
தமிழ் மக்களுக்குச் சொந்தமானவர்கள்.
-------------------------------------------------------------------------------------------
ஜெர்மனியின் லூத்விக் பயர்பாக் உலகம் முழுமைக்கும்
சொந்தமானவர். இது போலவே பெரியாரும். அர்ஜென்டைனாப்
புரட்சியாளர் சே குவேரா உலகம் முழுவதும் கொண்டாடப்
படுவது போல், பிரபாகரனும் உலகம் முழுவதும்
கொண்டாடப் படுவார்.

பெரியாரியத்துக்குத் தம்மிடம் பவர் ஆப் அட்டார்னி
(power of attorney) இருப்பதாகக் கருதிக் கொண்டு, பெரியாரை
விற்க எவருக்கும் உரிமை கிடையாது. அது போலவே
தமிழ் தேசியம் பேசுவோர் 'தங்களுக்கு மட்டுமே சொந்தம்'
என்று பிரபாகரனை உரிமை பாராட்டுவது மடமை.
------------------------------------------------------------------------------------------
(திரு மதிமாறனின் பதிவில் என் பின்னூட்டம்.)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக