திங்கள், 23 மார்ச், 2015

போற்றுதலுக்குரிய மாபெரும் புரட்சியாளர் பகத்சிங்
என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எனினும், எவ்வளவு
சிறப்புக்கு உரியவராக ஒருவர் இருப்பினும், தனிநபர்களால்
வரலாற்றைப் படைக்க இயலாது. மக்களே வரலாற்றைப்
படிக்கிறார்கள்; மக்களே வரலாற்றின் நாயகர்கள் என்கிறது
மார்க்சியம். இது மார்க்சிய அரிச்சுவடி. அப்படியாயின்,
வரலாற்றில் தனிமனிதனுக்குப் பங்கே இல்லையா என்ற கேள்வி
எழுகிறது. பங்கு இருக்கிறது; அது வரம்புக்கு உட்பட்டது.
லெனினை விட மூத்த மார்க்சியவாதியான பிளகாநெவ்
என்ற அறிஞர் "வரலாற்றில் தனிநபர் வகிக்கும் பாத்திரம்"
என்ற நூலில் தனிநபரின் பாத்திரம் குறித்து விளக்கி
உள்ளார். எனவே, பிளகாநெவ் கூறியவாறு, புரட்சியாளன்
பகத்சிங்கைத் தூக்கிப் பிடிப்போம்.மக்களின் பங்கேற்பை
உறுதி செய்வோம்.     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக