திங்கள், 23 மார்ச், 2015

உலகில் மீண்டும் கம்யூனிசம் வருமா?
-------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
-------------------------------------------------------------------------------
முதலாளித்துவம் என்ற தத்துவம் நடைமுறைக்கு வந்து,
ஒரு நிலைபேறு உடைய சமூக அமைப்பாக வளர்வதற்குச்
சில நூற்றாண்டுகள் தேவைப் பட்டன. அது போலவே,
கம்யூனிசம் என்ற தத்துவம், நடைமுறைக்கு வந்து,
ஒரு சமூக அமைப்பாக ( SOCIAL SYSTEM) நிலைபேறு
அடைவதற்கு சில நூற்றாண்டுகள் பிடிக்கும் என்பது
சமூகத்தின் இயக்கம் பற்றிய அறிவியல்.    
*** 
1848இல் மார்க்சும் எங்கல்சும் இணைந்து கம்யூனிஸ்ட் 
அறிக்கையை எழுதினர். கம்யூனிசத்தின் அதிகாரபூர்வமான 
தொடக்கம் இதுவேயாகும். இன்று இந்த 2015இல், 
கம்யூனிசம் தொடங்கி 177 ஆண்டுகள் ஓடிவிட்டன.
சற்றேறக்குறைய இரண்டு நூற்றாண்டு எனலாம்.
ஸ்விட்ச்சைப் போட்டவுடன் விளக்கு எரிவது போல,
சமூக மாற்றம் நிகழ்ந்து விடாது. சமூகம் மிகவும் 
மெதுவாகத்தான் இயங்கும். 
***
மார்க்சியத்துக்குப் பின் பல தத்துவங்கள் வந்தன.
இவற்றில் சில மார்க்சியத்தை விமர்சித்தன.
மார்க்சியத்தின் போதாமையைச் சுட்டிக் காட்டின.
எனினும், எந்த ஒரு தத்துவமும் மார்க்சியத்தை 
அதன் அரியணையில் இருந்து அகற்றி விடவில்லை.
முதலாளித்துவமோ அல்லது ஏகாதிபத்தியமோ 
மார்க்சியத்தை ஒருநாளும் வெல்ல முடியாது என்பதை 
நடைமுறை அனுபவங்கள் தொடர்ந்து நிரூபித்து 
வருகின்றன 
***
இதனால் மார்க்சியம் ஒரு நிலைபேறு உடைய தத்துவம் 
என்பது பெறப்படுகிறது. இத்தத்துவம் தொடர்ந்து நடைமுறைப் 
படுத்தப் பட்டு, அனுபவங்கள் தொகுக்கப் பட்டு, திறனாய்வு 
செய்யப்பட்டு, குறைகள் களையப்பட்டு, காலம்தோறும் 
புதுப்பிக்கப்பட்டு, ஒரு சமூக அமைப்பாக (social system)
தன்னை நிலைநிறுத்திக் கொள்வது என்பது நடந்தே 
தீரும். இது ஆருடம் அன்று. அறிவியல் வழிப்பட்ட முடிவு.
***
எனினும் இது மறுநாளே நடந்து விடுவது அன்று. சமூக 
மாற்றம் தனக்குரிய காலத்தை எடுத்துக் கொள்ளும்.
ஒரு தத்துவமாக இருக்கும் மார்க்சிசம் ஒரு சமூக 
அமைப்பாகத் தன்னை நிறுவிக் கொள்ள, நிச்சயம் சில 
நூற்றாண்டுகள் பிடிக்கும். ஏற்கனவே ஒன்றேமுக்கால் 
நூற்றாண்டுகள் முடிந்து விட்டன. அடுத்து வரும் 
நூற்றாண்டுகளில் உலகில் மார்க்சிய சமூக அமைப்பு 
நிலைபெற்று விடும்.
***
மார்க்சியத்தில் ஆயிரம் குறைகள் இருக்கலாம்.ஆனால் 
INFINITY அளவு நிறைகள் உள்ளன. இதுதான் மார்க்சியத்தின் 
வெற்றியை உறுதி செய்கிறது.
-------------------------------------------------------------------------------------------------- 
வெளியீடு: மார்க்சிய சிந்தனைப் பயிலகம்.
******************************************************88888           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக