சனி, 28 மார்ச், 2015

(9) வடகலை தென்கலை பற்றிக் கலைஞர் 
என்ன எழுதுவாரோ என்று கலங்கி நிற்கும் 
வேதபுரியும் சில மார்க்சியப் பூணூல்களும்!
------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி 
-----------------------------------------------------------------------
திராவிடத் திரிபுகள், மார்க்சியப் பூணூல்கள்,
மற்றும் வேதபுரி வித்தகர்கள் என்று யாவரும் 
கலங்கி நிற்கின்றனர் கலைஞரின் ராமானுஜ காவியம் 
பற்றி அறிந்ததும். போலி அடையாளங்களில் 
கோழைகளாக ஒளிந்து கொண்டு, சிலர் தங்களின் 
அறியாமையை அச்சத்துடன் வெளிப்படுத்துகின்றனர்.
**
வேதபுரியின் கோழைத்தனம் வேண்டியதுதான். இந்த 
அச்சம் இருக்க வேண்டியதுதான்.
"கோட்டை நாற்காலி இன்றுண்டு--நாளை 
கொண்டு போய் விடுவான் திராவிடக் காளை"
என்றார் பாவேந்தர். அஞ்சுதற்கு அஞ்சும் வேதபுரியினரின் 
அச்சம் நிலைப்பதாக.  
**
வள்ளலாரைப் பற்றி எழுதாமல், ராமானுஜரைப் 
பற்றி ஏன் எழுகிறார் கலைஞர் என்று பலர் தங்களின் 
அறியாமையை அரங்கேற்றி வருகின்றனர். கருப்பொருள் 
தேர்வு என்பது கலைஞனின் சுதந்திரம். சமூக அவசியம் 
அற்ற கருப்பொருளை ஒரு கலைஞன் தேர்வு செய்வான் 
ஆகில், அது காலத்தில் கரைந்து விடும். இலக்கியக் 
கோட்பாடுகளில் பிரதானமாக இரண்டு உண்டு. ஒன்று,
கலை கலைக்காகவே என்ற முதலாளித்துவக் கோட்பாடு.
மற்றது, கலை மக்களுக்காகவே என்ற மார்க்சியக் கோட்பாடு.
கலைஞரின் ராமானுஜர் 'கலை மக்களுக்காகவே"
என்ற கோட்பாட்டைச் சேர்ந்தது.
**
கலைஞர் வடகலை  தென்கலை பற்றியும் எழுதுவார்
என்று எதிர்பார்க்கப் படுகிறது. ராமானுஜர் காலத்தில் 
வடகலை தென்கலை என்ற பாகுபாடே கிடையாது.
ராமானுஜர்--வேதாந்த தேசிகர்--மணவாள மாமுனிகள் 
என்பதுதான் வைணவ ஆச்சார்யார்களின் வரிசை முறை.
இதில், மணவாள மாமுனிகள்  மறைந்து நூறு ஆண்டுகளுக்குப் 
பின்னரே வடகலை தென்கலை என்ற பிரிவுகள் 
வெளிப்பட்டன.
**
எனவே, வடகலை தென்கலை பிரிவுகள் பற்றி 
கலைஞர் எழுதத் தேவையே இல்லை. எனினும் 
அதை எழுதுவதன் மூலம், அறியாமை அகலும் 
என்பதால் கலைஞர் அதை எழுதிட வேண்டும் என்றே 
அறிவார்ந்த வாசகர்கள் விரும்புகின்றனர்.
**
-----------------------------------------------------------------------------------------------------
தொடரும் 
--------------------------------------------------------------------------------------
*************************************************88888888888888 
  
         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக